வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 26, 2010

பத்ரின் அரசியல்

நாற்காலிக்காக இருகாலிகள் நாற்காலி ஆகிறார்கள் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார். பதவிக்காக் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிற இன்றைய அரசியல் அவலத்தை அந்த வரிகள் படம்பிடிக்கின்றன.

பத்ரு யுத்தம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசியல் நடவ்டிக்கைகளில் காணப்பட்ட பிரமிப்பூட்டும் நுட்பத்தையும் நாகரீகத்தையும் அடையாளப் படுத்துகிறது. பத்ரு யுத்ததின் அரசிய்ல் கூறுகளில் உலக அரசியலுக்கு எழுதப்படாத பாடங்கள் ஏராளமாக இன்றளவும் கிடைக்கின்றன.

ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரம்லான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் சுடத் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின் நிகழ்வுகளையும் அதன் நாயகர்களையும் அதில் களப்பலியானவர்களயும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வ்மாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியாவில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.

ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனத்தவரின் மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதை தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுற்ற அந்த சண்டை, வரலாற்றை தலை கீழாகப் புரட்டிப் போட்டது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும் அது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்ற்குப் பின்னால் ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை இரு பெரும் வல்லரசுகளான பாரசீகத்தின் சாசானியப் பேரர்சும் ரோமின் பைஜாந்தியப் பேரரசும் சபதமில்லாமல் சாய்ந்தன.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு முன்னாள் அன்றை உலகம் என்பது ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என்ற மூன்று கண்டங்களை மட்டுமே கொண்டிருந்தது. அன்றைய அந்தபூமியின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீத பரப்பிற்கு இஸ்லாம் பரவியது என்றால் அதற்கு மூல வித்தாக அமைந்தது பத்ரு யுத்தம்

அதனால் தான் ஆசியக் கண்டத்தின் வரலாற்றை திசை திருப்பிய இருபது யுத்தங்களை வரிசைப் படுத்துகிற வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு யுத்ததிற்கு இரண்டாவது இடத்தை தருகிறார்கள். .

இந்த வரிசையில் முதல் யுத்தமாக ம்கா அலக்ஸாண்டர் பாரசீகத்தின் மீது நடத்திய யுத்தம் குறிப்பிடுகிற்து. அதற்கு காரணம் அது காலத்தால முந்தியது என்பது மாத்திரமே! அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் பத்ரு யுத்தம் தான் ஆசிய வரலாற்றின் பெரும் திருப்பு முனையான யுத்தமாகும்.

ஒரு உள்ளூர் சண்டயாக நடைபெற்ற அந்த யுத்தம் உலக யுத்தங்களை விட வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அதிக தாக்கத்தை செலுத்தியது.

பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி கோலியது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவை கைகொள்ள காரணமாகியது முத்துது துறை முகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குக்தல் ஜப்பானின் சித்தைவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும் இது போன்ற இன்னும் சில யுத்தங்கள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றாலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு வருடங்களை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்தது விட்டதை இன்றைய தலை முறை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபிதோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

யுத்தம் தொடங்குவத்ற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால் .அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும் அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிய்ன் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
“இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞசமாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்த்னை செய்தார்கள்.

தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற மூன்னூறு நண்பர்களை பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும் கவலையும் அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.

இப்போது மெல்போர்ன் நக்ரத்தின் தெருக்கலில், சிகாகோவின் வீதிகளில் மாஸ்கோவின் மைதானங்களில் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். இந்த வெற்றியில் நபிகள் நாயகத்தின் அரசியல் முதிர்ச்சியும் நேர்மையும் மறைந்திருக்கிறது.

ஒரு மாபெரும் தலைவரின் அரசியல் வாழ்வில் போராட்டங்களும் யுத்தங்களும் சகஜம். அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதிலும் அவற்றுக்கு பின் கிடைத்த வெற்றி தோல்விகளை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதும் அவரை வரலாற்றின் சிறபான உய்ரங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

பத்ரு யுத்தத்திற்கான ஆயத்தங்களின் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கையாண்ட நெறி முறைகளில் நாகரீகம் மிளிர்ந்தது.

பின்னாட்களில் நபிகள் நாயகத்தின் உளவாளி என்று பெயர் பெற்ர ஹுதைபா பின் யமான் (ரலி) கூறுகிறார் :

நானும் அபூ ஹுசைலும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பத்ரில் பங்கேற்ப்பதற்காக ரக்சியமாக மதீனாவுக்குப் புறப்பட்டோம். மக்காவின் எதிர்கள் எங்களை இடை மறித்து தடுத்து முஹம்மதுடன் சேர்ந்து கொள்ளத்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்காக அல்ல வேறு ஒரு வேளையாக நாங்கள் மதீனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னோம். அப்படியானால் முஹம்மதுவுடன் சேர்ந்து யுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி தருமாறு கேட்டார்கள். வேறு வழியின்றி வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டோம். நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னோம் . பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: (இன்சரிஃபா! நபீ லஹும் பி அஹ்திஹிம் வ நஸ்தஈனுல்லாஹ அலைஹிம்) “நீங்கள் இருவரும் திரும்பிச் செல்லுங்கள். எதிரிகளுக்கு கொடுத்த வாக்கை நாம் நிறைவேற்றுவோம். யுத்தத்தில் வெற்றி பெற அல்லாஹ்விடம் உதவி கேட்போம். என்றார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 3342)

பத்ரின் அரசியல் என்பது முதலில் அதன் நேர்மையான அனுகுமுறைகளாலேயே அதிக பொலிவு பெற்றுத் திகழ்கிறது. புற வெளியில் வெற்றி வாய்ப்பு சாத்தியமற்றயதாக தோன்றிய அந்த சூழலில் நபிகள் நாயகத்தின் அந்த அகஎழில் அவரை மட்டுமல்ல அவரது நண்பர்களையும் காப்பாற்றியது. மாத்திரமல்ல; அவர்களது இருப்பை உறுதியாக நிலைப்படுத்தியது.

அரசியலில் இத்தகைய நேர்மை எல்லோருக்கும் சாத்தியமா? எனக் கேட்கத் தோன்றலாம். வரலாற்றில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அது சாத்தியமே!

இற்கு நேர்மாறான ஆர்ப்பாட்ட அரசியல் வாதியான அபூஜஹ்ல் தானும் அழிந்து தனது சமூகத்தையும் அநாதையாக்கியதையும் பத்ரு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

அபூஜஹ்லுக்கு நபிகள் நாயகம் உன்மையானவர் என்பது தெரிந்தே இருந்தது. அவனே ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கி இருக்கிறான் ( இன்னா லா நுகத்தீபூக வலாகின் நுகத்திபு பிமா ஜிஃத பிஹி ) முஹம்மதே ! உம்மை பொய்ய்ரென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உனது கொள்கையை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று சொன்ன அவன் அதற்கான காரணத்தையும் கூறினான் குறைஷிகளின் உட் பிரிவான உங்களது ஹாசிம் குடும்பத்திற்கும் எங்களது அப்து ஷம்சு குடும்பத்திற்கு தலைமை யாருக்கு உரியது என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்தச் சூழலில் உம்மை இறைத் தூதர் என்று ஒப்புக் கொண்டால் எங்களால் அது விசயத்தில் போட்டி போட இயலாதல்லவா ? எனவே உம்மை நான் ஒத்துக் கொள்ள முடியாது என்று அவன் கூறினான்.
முஹம்மது (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியிம் அவனுக்குள் பழைய போட்டி பொறாமை உணர்வையே கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே மக்காவிலிருந்து வெளியேறிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தலைமக்கான தளம் அமைந்ததை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருதவனுக்கு அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்திற்கு ஆபத்து என்ற செய்தி பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை வைத்து மக்காவின் மக்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டு பன்னி அவர்களை திரட்டிக் கொண்டு வந்திருந்தான். அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாப்பதை விட தனது போட்டியாளரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சுய வஞ்சமே மேலோங்கியிருந்த்து.

இத்தகைய தலைவர்கள் அமைவதை விட ஒரு சமூகத்திற்கு பெரிய துரதிஷ்டம் வேறு இருக்க முடியாது.

பத்ரு யுத்தம் தொடங்கு வதற்கு முதல் நாள் ஒரு பெரும் அழிவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு யுத்தத்திலிர்ந்து தன் சமூக மக்களை காப்பாற்றூவதற்கு அபூஜஹ்லுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

வியாபாரிகளின் தலைவர் அபூசுப்யானின் கடிதம் அன்று அவனுக்கு வந்து சேர்ந்தது. தனது வியாபாரக் கூட்டம் செங்கடலின் கரையோர மார்க்கமாக பத்திரமாக திரும்பி விட்டது. என்வே மக்காவுக்கு திரும்பி வருமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.

எவரையும் அழித்தொழிப்பதற்கு முன்னாள் இறைவன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கத் தவறுவதில்லை. அபூஜஹ்ல் அந்த வாய்ப்பை வீணடித்தான்.

கடித்தத்தின் செய்தியை அறிந்து கொண்ட மக்காவிம் இன்னொரு தலைவரான் அஹ்னஸ் பின் ஷுரைக் அபூஜஹ்லிடம் எவ்வள்வோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்!

அபுல் ஹிகம்! உங்களது சகோதரரின் மகன் உண்மையானவர் என்று உங்களுக்கு தெரியும் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வியாபார்ககூட்டத்தை பாதுகாக்கத்தானே வந்தோம் அது பத்திரமாக வ்ந்து சேர்ந்து விட்டது வாருங்கள் திரும்பி விடுவோம் என்று அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் மசியவில்லை. தனது கருத்தை மறுப்பவர்கள் அத்தனை பேர்ரையும் கோழைகள் என்று ஏசினான். அவனது இந்தப் போக்கை ஏற்ற்குக் கொள்ளாத அஹ்னஸ் தனது ப்னூ சுஹ்ரா குடும்பத்தை சார்தோரை சுமார் 100 நப்ர்களை பத்ருக் களத்திலிருந்து திரும்ப அழைத்துச் சென்று விட்டார். அதனால் பனூ சுஹ்ரா குடும்பத்தினர் எவரும் பத்ரில் பலியாகாமல் தப்பினர்.

அபூஜஹ்லின் சுய வஞ்சம் அவனையும் அவனோடிருந்த பலரையும் மோசமாக பலி கொண்டது. அவனது சமூகத்தின் முதுகெலும்பை முறித்து போட்டது.

சாதாரணாமாக அரபு தீபகற்பத்தில் மக்காவின் குறைஷியருக்கு எதிர்ப்பே கிடயாது. மத ரீதியாக மிக பாதுகாப்பான பகுதியில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இருக்கிற இடம் தேடி யானைகளோடு வந்த படைகளே கூட சின்னபின்னமாகி சிதறிப்போனது என்பது தான் அதுவரைக்குமுண்டான வரலாறு.

அப்துல் முத்தலிபின் பண்பினால் பாதுகாக்கப் பட்ட மக்காவின் மக்கள் அபூஜஹ்ல் என்ற மோச்மான அரசியல் தலைமையினால் வரலாறு காணாத சோகத்தை முதல் முறையாக அனுபவித்தார்கள். மக்காவில் ஒரு மாத காலம் ஓலம் ஓயவில்லை

தன் சொந்த வெறுப்பை பிரதானப்படுத்திய ஒரு தவறான அரசியல் தலைமையின் அழிவும், அவனது சமூகத்திற்கேற்பட்ட கோரமான முடிவும் பத்ரின் அரசிய்ல பாடங்களில் மறந்துவிடக் கூடாது ஒரு பாடமாகும்.

யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்க்ள் தன் தோழர்களோடு ஆலோசனை கலந்தார்கள். ஒரு இறைத்தூதராக அவர் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லைதான் என்றாலும் ஒரு சிற்ந்த அரசியல் தலைவருக்கு முன்னுதாரமான தனது நடைமுறையை நபிகள் நாயகம் அமைத்துக் கொண்டார்கள். தனது கருத்தை தொண்டர்கள் மீது வலிந்து திணிக்கும் மலிவான ஆதிக்க மனப்பான்ம்மை அவரிடம் இருக்கவில்லை. ஒரு களத்தில் எதிரிகளை சந்திக்க நேர்ந்த பிறகு அவர்களை எதிர்கொள்ளாமல் புறமுதுகிட்டுச் செல்வது சரியல்ல என்ற நபிகள் நாயகத்தின் கருத்துக்கு தொண்டர்கள் அமோகமாக இசைவு தெரிவித்தார்கள்.
தன்னுடைய யோசனைக்கு மற்றவர்கள் இணங்கியது போலவே மற்றவர்களது யோசனைக்கு பெருமானாரும் இணங்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் பிரதேசத்திற்குள் நுழைந்த போது அதன் ஓரு ஒரத்தில் உள்ள நீர்நிலைக்கு அருகில் தங்குவதற்கு முடிவு செய்தார்கள். அப்போது குறிக்கிட்ட ஹப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற தோழர் “இல்லை. இன்னும் உள்ளே சென்று எதிர்களுக்கு நெருக்கமான இடத்திலிருக்கிற நீர் நிலைக்கு அருகே சென்று தங்குவோம் அப்போது நம்மிடம் தண்ணீர் இருக்கும் எதிரிகளிடம் தண்ணீர் இருக்காது என்று ஆலோசனை சொன்ன போது அந்த யோசனையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதோடு நல்ல யோசனை என்று பாராட்டவும் செய்தார்கள்

இத்தகைய நடவடிக்கைகளால் தொண்டர்களின் முழு ஈடுபாடும் பெருமானாருக்கு கிடைத்தது.

யுத்தம் தொடங்கிய போது போர் முனையின் வாசலில் நின்று கொண்டு குறைஷியரான உதபா ஷைபா, வலீத் பிப் உத்பா ஆகியோர் தங்களோடு சண்டையிட வருமாறு கொக்கரித்தனர். அப்போது மதீனாவைச் சார்ந்த அன்சாரித் தோழர்களான அவ்பு முஆத் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் அவர்களை எதிர்கொள்ளச் சென்றார்கள்.

யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை அது காட்டியது. இஸ்லாத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது என்ற உணர்வு பிரதானப்பட்டு விட்டதை அது வெளிப்படுத்தியது.

ஆனால் மதீனாவீன் வீரர்களை கண்ட எதிரிகள் தம்முடம் மோதுவதற்கு தமது சொந்தக் குலத்தவர்களை அனுப்புமாறு கோரினர். அவர்கள் குலப் பெருமையின் அடிப்பாடையில் யுத்தத்தை எதிர்கொண்டார்கள் என்பதை அது காட்டியது.

பத்ரி யுத்ததில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றத்ற்கு அதுவே பிரதான காரணம். கொள்கை வழியில் போராடியவர்கள் ஜாதிய உணர்வில் போராடியவர்களை வென்றார்கள் என்பது பத்ரின் அரசியல் தரும் பிரதானச் செய்தியாகும்.

குறுகிய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது இன்றைய அரசியலின் சூத்திரமாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் உன்னதமான பண்புகள் தருகிற வெற்றியே அதன் களப்பகுதிகளை கடந்து வரலாற்றில் வாழும் என்பதே பத்ரின் அரசியலாகும்.
கி.பி. 571 ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது நாற்பது வயதில் இறைச் செய்திகளை பெறத் தொடங்கிய பிறகு உருவமற்ற ஒரு இறைவனையே வணங்கவேண்டும் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்டாண்டு காலமாய் சிலை வணக்கத்தில் முழ்கிப் போய் பூம்யில் கட்டப்பட்ட முதல் இறையில்லமான கஃபாவிலேயே சிலைகளை வைத்து வழிப் பட்டுக் கொண்டு அதன் மூலம் தங்களை உயர்ந்த இனமாக அடையாளப் படுத்திக் கொண்டிருந்த குறைஷிக் குடும்பத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


மக்காவில் அவரும் அவரது தோழர்களும் நியாயமற்ற சொல்லனா துயரங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளானானார்கள். கடுமையான சமூக ஒதுக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். அதன் காரணமாக அவர்களது துணைவியார் அன்னை கதீஜாவின் திரளான சொத்துக்கள் காலியாயின. பல தோழர்கள் கடும் சித்தர்வதைக்கு ஆளானார்கள். சிலர் அந்தச் சித்திரவதைகளில் தம் இன்னுயிரை இழந்தார்கள். பக்கத்திலிருந்த வேறு ஏதாவது ஊரில் அடைக்கலாம கோரலாம் என்றால் மக்காவி குறைஷியர் அதற்கும் இடையூறு செய்தார்கள் விதித்தார்கள். எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் இஸ்லாமை தழுவிய ஒரு காரணத்திற்காக இந்தக் கொடுகைக்கு அவர்கள் ஆளாக்கப் பட்டார்கள். எந்த வகையிலிம் பதிலடி தருவதற்கு முஹம்மது (ஸல்) முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கவுமில்லை. பொறுமை பொறுமை என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது, எதுவரை பொறுமையாக காப்பது? என்று உணர்ச்சிவசப்பட்ட தோழர்களைப் பார்த்து முஹம்மது (ஸல்); “ நீங்கள் அவசர ப் படுகிறீர்கள். உங்களது தலை இருபுச் சீப்பால் வாரப்படலாம். அப்போதும் பொறுமையாக இருங்கள். ஒரு நல்ல காலம் பிறக்கும் அப்போது அரபு தீபகற்பம் முழுதும் அக்கிரமம் ஒழிந்து அமைதி தவழும் அது வரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். தோழர்கள் அடக்கு முறைகளை சகித்துக் கொண்டார்கள். எல்லவகையான இழப்புகளுக்கும் சம்மதித்தார்கள். மக்காவிலுர்ந்து வெளியேறுவதற்காக பல தோழர்களும் தங்களது வீடு, வாசல், தொழில் நிறுவனங்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையையும் மக்கா குறைஷிகளிடம் கொடுத்து பிறகே வெளியேற முடிந்தது.


முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தளம் அமைந்தது. மதீனா இஸ்லாமிய நகராக உருவாகியிருந்தது.மக்காவின் குறைஷிகள் முஹம்மது ஸல்) அவர்களை நிராகரித்த போது மதீனா நகரத்து பிரபலங்கள் பலர் மக்காவிற்கே வந்து அவரை ஏற்றனர். தங்களது ஊரில் அவரை வரவேற்கத் தயாராயினர்.
தலைவர்கள் முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இன்றைய அரசியலின் இயல்பு. ஆனால் மதீனாவில் தனக்கு ஒரு வசதியன தளம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகும் கூட முஹம்மது (ஸல்) அவர்கள் உடனடியாக மக்காவை விட்டு வெளியேறி விடவில்லை, தோழர்களை முதலில் அனுப்பி வைத்தார். இறுதியில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனாவில் குடியேறினார்.


அங்கு வசதியான இடம் கிடைத்தது என்ற போதும் ஒரு கொள்கையை ஏறுக்கொண்டதற்காக மக்காவின் மக்கள் மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது நபிகள் நாயகத்திற்கு கவலையளிப்பதாகவே இருந்தது. அல்லாஹ் அந்தக் கவலைக்கு ஒரு தீர்வு சொன்னான.
அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அனுமதி யளித்தான், திருக்குரானின் அந்த உத்திரவு இப்படி அமைந்தது. அதி அற்புதமாக சொல்லப் பட்ட உத்திரவு அது


யுத்தம் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானோருக்கு எதிர்த்து போராட அனுமதிக்கப் படுகிறது. அவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றலுடையவன்
இந்த வசனத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவரளின் அரசியல் நடவ்டிக்கைகள் தீவிரம்டைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என பெருமானார் நினைத்தார்கள்.
அப்போதுதான் தான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்றூ அபூசுப்யானுடைய தலைமையில் சிர்யாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது.அந்த வியாபாரத்தில் மக்காவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது.


மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டு ஒரு பாதை இருந்தது அது தொலைவு அதிகம், எனவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க முஹ்மமது (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள்.


சில குழுக்களை அனுப்பி வியாபாரம் கூட்டம் குறித்து விசாரிக்க அனுப்பினார்கள். நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் தலைமயில் சென்ற ஒரு குழு மக்காவின் வெறு ஒரு சிறு வியாபாரக் கூட்டத்தை சந்தித்தது. அவர்களிடையே நடைபெற்ற மோதலில் அம்ரு பின் ஹழ்ரமீ என்ற மக்கா காரர் கொல்லப் பட்டார். ஆனால் அபூசுபயானுடைய வியாபாரக் கூட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


பெருமானார் (ஸல்) அவர்கள் தானே தேடிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். தோழர்களை திரட்டினார்கள். அது ஒரு திட்டமிட்ட திரட்டுதலும் இல்லை. வருவோர் வரலாம் என்று அழைத்தார்கள். புறப்படுகிற போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கூட கணக்கிடப் படவில்லை. இடைவழியில் ஆட்களை எண்ணும்படி பெருமானார் உத்தரவிட்டார்கள். ஒருவர் எண்ணிப் பார்த்து விட்டு 313 பேர் இருக்கிறார்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அந்த எண்ணிக்கையை கேட்டு மகிழ்ச்சிய்டைந்தார்கள். முற்காலத்தில் ஒரு முறை தங்களது தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்து கொண்ட யூதர்க்குழுவினர் 313 பேர் இருந்ததனர் என்பதால் அந்த எண்ணிக்கை பெருமானாருக்கு மகிழ்சியளித்தது.


இதற்குள் சிரியா சென்று சேர்ந்து விட்ட அபூசுப்யானுக்கு நபிகள் நாயகத்தின் திட்டம் தெரிய வந்தது, அவர் ழம்ழம் என்ற ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி மக்கா குறைஷியரின் வியாபாரக் கூட்டத்திற்கு முஹம்மதால் ஆபத்து என்ற செய்தியை சொல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஏற்கென்வே ஒரு கொலையால் கோபம் கொண்டிருந்த மக்காவிற்குள் இந்தச் செய்தி பெரும் புயலை உண்டு பண்ணியது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொட்டிருத பிரதான எதிரி அபூஜஹ்ல் வெறித்தனமாக மக்காவின் ஆட்களை திரட்டினான். 100 குதிரைகள் ஆயிரம் காலாட்ப்டையினரோடு அவன் படை எடுத்து புறப்பட்டன். ஆட்டம் பாட்டத்தோடு அவனது படை மதீனாவை நோக்கி நகர்ந்தது.


அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து மக்காவின் பாதையில் பயணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுமார் 80 மைல்கள் பயணம் செய்து பத்ரு கிணறு இருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அபூஜஹ்லின் படை அதன் இன்னொரு முனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.


ஒரு இடையன் கொடுத்த தகவலால் மக்காவின் குறைஷிகள் படை எடுத்து வந்திருபதை அறிந்து கொண்ட பெருமானார் தோழர்களோடு ஆலோசனை செய்தார்கள். வியாபாரக் கூட்டத்தை சாதாரணமாக பிடித்து விடலாம் என்ற மனக் கோட்டையில் இருந்த தோழர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் தான் புறப்பட்ட போது அல்லாஹ் ஒன்றூ வியாபாரக் கூட்டம் அல்லது வெற்றியை தருவதாக அல்லாஹ் வாக்களித்த திருக்குரானிய வசனத்தை எடுத்துக் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவர்களை எதிர் கொள்வதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். எந்த வகையான முன்னேற்பாட்டுக்கும் தயாராக இல்லாத நிலையிலும் கூட நபிகள் நாயகத்தின் தோழர்கள் அந்த முடிவுக்கு தங்களது பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்தினார்கள்.


அதன் பிறகு யுத்ததிற்கான ஆயத்ததில் இறங்கிய தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது.
மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் நூறு பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் இருநூறு பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒரு ஒருங்கிணைப்பு ஒழுங்கும் இருந்தது, எதிரணியில் அது இல்லை,


யுத்தம் தொடங்கியது.முதலில் தனி நபர்கள் மோதினாரர்கள்.அது கொடுத்த ஆக்ரோஷத்தில் பிறகு அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது.


முஸ்லிம்கள் வெற்றிய்டைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும் எதிரிகளின் தரப்பில் எழுபது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்த களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கொல்ல்பபட்டிருதனர்.


313 நபர்களை மட்டுமே கொண்ட அனுபவமும் ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவசம் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற ஒரு அம்சத்தை ,மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான போர்த்திறன் அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.

Thursday, August 12, 2010

2000 வது ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளியான கட்டுரை

நோன்பு ஒரு சமரச சமுதாய திட்டம் 
மௌலவி அ. அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி 
இமாம் ஜாமியா சுலியா பள்ளிவாசல்  

கல்லறைகளை பாக்கிற போது பல வகையான உணாவுகளும் சிந்தனைகளும்  கிளாந்து எழுவதுண்டு . சமுக தொண்டு செய்து புகழ் வாழ்வு வாழ்ந்தவா. ஆபாட்ட அரசியல்வாதி . அழகால் உலகை கவாந்திழுத்த பேரழகிகள். தொழிலாளியாக  வாழ்வை தொடஙகி முதலாளியாக ஒஙகி உயர வளாந்தவா. அனைவரும் மௌனமாய் தம் வாழ்க்ககை பாடத்தை இலவசமாய் உலகுக்கு கற்பிக்கிற ஒரு புனிதப்பள்ளியறையாக அமைபவை கல்லறைகள்.

கல்லறைகளின் கால்மாட்டில் வைக்கப்படுகிற நினைவுக்கல்வெட்டுக்களோ சில சமயஙகளில் வாழ்வின் சாரத்தை மின்னல்வாகளாய் நமது சிந்தனையை வெளிச்சப்படுத்தி விடக்கூடியவை. . கிரேக்க மாவீரன் அலக்ஸாண்டான் கல்லறை வாசகம் எப்படி  இருக்கலாம் என்று யோசித்த ஒரு கவிஞா இப்படி ஒரு வாசகம் சொன்னா. இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு இந்த ஆறடி நிலம் போதுமாக இருக்கிறது.

அதே போல அரசியல்வாதியின் கல்லறையில் இப்படி எழுதினால் பெருத்தமாக இருக்கும் என்றா மற்றொருவா.  மறந்தும் கை தட்டி விடாதீகள் இவன் மீண்டும் எழுந்துவிடப்போகிறான். தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு கைதட்டுதலுக்காகவும் அகமகிழ்ந்து போவதும் இ அந்த சத்தத்தின் அடாத்தியை வைத்து தனது மதிப்பபை அளவிட்டு கொள்வதும் அரசியல்வாதியின் வழக்கமாக இருக்கலாம். ஆனால் உலகை படைத்து அதில் ஆயிரம் வசதிகளை கொடுத்து மனிதனை அவற்றின் பொருப்பாளனாக நியமித்த இறைவன். ஆதற்கு நன்றியாக தன்னை வணஙகி வழிபடும்படி கட்டளையிடுகிறான்.  தொழுகையாக நோன்பாக தாமமாக அந்த வழிபாடுகள்  அமைந்திருக்கின்றன. இந்த வழிபாடுகளால் இறைவனுக்கு எந்த நன்மையும் கூடிவிடப்போவாவதில்லை. ஒருவா உடல் தேய தொழுது வணஙகினாலும் உள்ள பொருளையெல்லாம் தானம் செய்து விட்டாலும்  அதனல் இறைவனது செல்வாக்கு சதவீதம் உயாந்தவிட்டதாகவோ அவனது புகழ் பெருகிவிட்டதாகவோ அத்தமாகாது என்பதை அனைவரும் அறிவா. பிறகு இந்த வணக்கஙகாளால் என்னதான் பயன் என்று சிந்திக்கையில். இறைவனுக்காக என்று செய்யப்படுகிற வணக்கவழிபாடுகள் ஒவ்வொன்றும் தனிமனிதனை அல்லது சமூகத்தை உயாவிப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதை  அறியலாம். தினமும் ஐவேளை தொழுவதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அது இறைவனுக்கு தேவை என்பதற்காக அல்ல. தொழுகை மனினுக்கு பணிவை இ பக்குவத்தைஇ ஒரு சீரான ஒழுஙகமைப்பைஇ தலைமக்கு கட்டுப்படும் அடக்கத்தைஇ உடலையும் உடைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வழக்கத்தைஇ காலந்தவறாமயை கற்பிக்கிறது. கூட்டாக நிறைவேற்றப்படுகிற தொழுகை சமூக ஐக்கியத்தை கட்டிக்காக்கிறது. தீண்டாமையை ஒழித்து சாதி பேதமற்ற சமதாமத்தை தழைத்தோஙகச்செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழுகை மானக்கேடான அருவருப்பான காயஙளை நெருஙகவிடாமல் தடுக்கிறது என திருமறை குஆன் கூறுகிறது. எனவே ஒருவா ஆயிரம் வேளை தொழுதாலும் மில்லியன் கணக்கில் ஜகாத் எனும் கட்டாய தாமம் செய்தாலும்  அதனால் நன்மை அவருக்கோ அல்லது அவா சாந்த சமூகத்துக்கோதானே தவிர இறைவனுக்கு அல்ல.  இந்த வகையில் நோன்பு எனும் வணக்கம் தனிமனிதனது ஆரோக்கிய வாழ்விற்கும் அலைபாய்கிற மனதை ஒருதரக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் துணை செய்கிறது என்பதோடு சமூக வாழ்வில் அது ஏற்படுத்துகிற தாக்கமும் அலாதியானது. இந்த உலகில் வரலாற்றுக்காலந்தொட்டு இன்று வரை ஏற்படுகிற கிளாச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பொதும் காரணமாக அமைவது வறுமையும் பொருளாதார நெருக்கடிகளும் தான் ஏன்று ஒரு பலமான வாதம் உண்டு . பசி வந்தால் பத்தும் பறந்தபோகும் என்பதனால் தான் பொருளாதாரத்தின் சம்மட்டி அடிகளில் கண்க்கு நேரே பல அரசியல் கலாச்சார சீரழவுகள் நிகழ்கிள்றன. பிரஞ்சுப்புரட்சியும் ரஷ்யப்புரட்சியும் வறுமைத்தாய் பெற்றெடுத்த ஊணமுள்ள குழந்தைகளே என்ற இந்தவாதம் ஓரளவுக்கே ஏற்புடையதாகும்.. ஏனெனெல் வறியவராய் ஏழையாய் பசித்தவயினராய் இருந்து கொண்டே சிறந்த மனிதாகளாக வாழ்ந்தவாகள் பலபேருண்டு. ஏழ்மையும் எளிமயைமே அவாகளது வாழ்வுக்கு அணி செய்யும் அணிகளன்களாக திகழ்ந்ததை  உலகம் கண்டதுண்டு . இறைத்தூதா முஹம்மது (ஸல்) அவாகள் அத்தகைய பெருமனிதாகளில் ஒருவா . இரண்டு நாட்கள் தொடாச்சியாய் அவரது குடும்பத்தினா வயிராற சாப்பிட்டதில்லை எனினும். அந்தப்பசியோ பட்டினியோ அவரது வாழ்வில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே வறுமையோ பசிக்கொடுமையோ சமூகத்தீமைகளுக்கு காரணமாக அமையும் என்ற வாதம் அவ்வளவு பொருத்தமானது அல்ல. வறுமையின் வலியை பசியின் கொடுமைமைய  செலவந்தாகளும் செலவாக்குள்ளவாகளும் உணராமல் இருப்பது தான் பிரச்சிணைகளுக்கு பிரதான காரணமாகும்.. பசிக் கொடுமையின் வேதனைச் சுட்டை உணாந்து அதற்கேற்ப செல்படத் தவறுகிற எந்த ஒரு சமயத்திலும் உலகம் பிரச்சினைகளை சந்திக்கும். இந்த சிக்கரலான பிரச்சிணைக்கு சிறந்த தீவாக நோன்பு அமைகிறது. முஸ்லிமாக இருக்கிற ஏழையோ  செலவந்ரே ரமலான் மாதம் முழுவதும் கட்டாயம் நோன்புபிடித்தாக வேண்டும் என்ற இஸ்லாமின் கட்டளையின் விளைவால் இரண்டு விதமான சமூக நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று வறியவாகள் தஙகளது பசிக்கொடுமயை தாஙகிக்கொள்வதையும்  ஒரு வணக்கமாக கருதுகிற பக்குவத்தை நோன்பு ஏற்படுத்துகிறது.  நபிகள் நாயகம் (ஸல்) அவாகளும் அவாகளது குடும்பத்தினரும் அவரது தோழாகளும் சாப்பிட எதுவும் கிடைக்காத போது அன்றை தினத்தில் நோன்பை கடைபிடிக்கும் பழக்கம் வைத்திருந்தாகள் என்பதை வரலாறு காட்டுகிறது.  இரண்டாவதாக  செலவந்தாகளும் செல்வாக்குடையவாகளும் பசியின் வலியை அறிய நோன்பு ஒரு வாய்ப்பாக அமைகிறது . இதனால் அவாகளது உள்ளத்தில் இரக்கம் சுரக்கிறது.  வியாவையை சிந்தி  சேமித்த செல்வத்தை அடுத்தவாகளுக்காக வாவழஙகும் பண்பு உருவாகிறது. நோன்பின் இத்தைகயதொரு ரகசிய நோக்கத்தை நோன்பு சம்பந்தமான மற்ற சில இஸ்லாமிய வழிகாட்டுதல்களை பாத்தும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். நோன்பு வைக்க சக்தியற்ற முதியவாகள் நோன்பு நோற்பதிலிருசந்து விலக்களிகப்பட்டுள்ளாகள் ஆயினும் அவாகளிடம் வசதியிருப்பின் அவாகள் ஒரு நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று திருக்குஅனின (2-184) வசனம் அறிவுறுத்துகிறது. நோன்பு என்பது பசியை தாஙகிக்கொள்வது என்றால் நோன்பு நோற்க முடியாமல் போகிற போது அதற்கு பிரதியாக செய்யப்படுவது இன்னொருவருடைய பசியை போக்குவதாக ஒரு ஏழையின் வயிற்றை நிரப்புவதாக இஸ்லாம் அமைத்துள்ள விதமானது பசியறிதல்  என்ற நோன்பின் நோக்கத்தை வெளிச்சப்படுத்தவதாக அமைந்தள்ளது. அத்தோடு நோன்பு திறப்பதற்காக உணவு கொடுப்பது சம்மபந்மாக நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் பிரமாதமாக குறிப்பிட்டுள்ளதையும் இஙகு கவனிக்க வேண்டும். ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பது ஒரு அடிமையை உமை விடுவதைப்போலாகும். நோன்பு நோற்றவருக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை நோன்பு திறக்க உணவளிப்பவருக்கும் கிடைக்கும் என்றாகள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள். அப்போது சில தோழாகள் இறைவனின் தூதரே எஙகளுக்கு அவ்வளவு வசதியில்லை என்ன செய்வது என்று கேட்ட போது முழு உணவு கொடுக்க வசதயில்லாவிட்டால் ஒரு மிடறு பால் அல்லது கொஞ்சம் தண்ணீ கொடுத்தாலும் இதே நன்மை கிடைக்கும் என்றாகள். நபிகள் நாயகம் ( ஸல் ) அவாகளின் இந்த பொன்மொழியும் பசியறிதல் என்பதே பிரதானம் என்ற செய்தியை கருக்கொண்டிருப்பதை உணரலாம்..

நோன்பினால் சமூகத்துக்கு கிடைக்க கூடிய மாபெரும் பாசு பசியறிதல் எனும் பண்பை மக்கள் உணாந்து கொள்வதாகும். ஆயிரம் உபதேசஙகளால்  சாதிக்க முடியாததை ஒரு பகல் நேர நோன்பு சாததித்து விடும் ஆற்றலை பெற்றிருக்கிறது. நூறு புரட்சிகளாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை சறிது நேர நோன்பின் வறட்சி ஏற்படுத்திவிடுகிறது.

பிரஞ்சு தேசத்தில் பசி பொறுக்க முடியாமல் வொசேல் அரண்மனைக்கு வெளியே ரொட்டி வேண்டும் என்று ஆப்பட்டம் செய்த மக்களை பாத்த்துஇ பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் மனைவி ரொட்டிகிடைக்கவில்லையா கேக் சாப்பிடுஙகள் என்றாள் என்கிறது பிரஞ்சுப்புரட்சியின் வரலாறு .

பெருமானான் துணைவியா அன்னை  ஆயிஷா அம்மையா அவாகள் தன்னிடம் யாசகம் கேட்டு வந்த ஏழை தாயை கண்டு இரஙகி  தன்னிடமிருந்த ஒரே போத்தம்பழத்தையும் அவருக்கு தாமம் செய்தா என்பது இஸ்லாமிய வரலாறு இந்த இரண்டு வரலாற்றுக்கும் இடையே உள்ள இமாலய வேற்றுமக்கு நோன்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இனிமேல் மனிதகுலத்தின் மீது ஈவு இரக்கம் காட்டாதோ இ ஏழ்மையின் வலியறியாதோஇ   பசிக்கொடுமைய புந்து கொள்ளாதோ எவரேனும் இறந்து போனால் அவரது கல்லறையில் இவா நோன்பு நோற்காதவா என்று எழுதிவைக்கலாம..    
சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில்
2000 மாவது ஆண்டு வெளியான கட்டுரை

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களின் புனித மாதம் ஆகும்..

உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் அகமும் முகமும் மலர அந்த கணத்தை எதிநோக்கி காத்திருக்கிறாகள். பிறை பிறந்ததும் அவாகளது கரம் உயாகிறது. நாவின் வழியே உள்ளம் பிரார்த்தனையில் உருகுகிறது.

அல்லாஹ் மிகப்பெரியவன் . இறைவா! இந்தப்பிறயை இறைபக்தியும் அமைதியும் தவழும் பிறையாக அக்கியருள்வாயாக1 கட்டுப்பாடும் சமாதானமும் நிறையும் பிறையாக ஆக்கியமைப்பாயாக1 . இளம்பிறையே எஙகளதும் உன்னுடையதுமான இறைவன் அவனுக்கு பிடித்தமான அவனுக்கு உகந்த செயல்களை செய்ய வாய்ப்பளிப்பானாக.

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் முதல் பிறையை கண்டுவிட்டால் இவ்வாறு பிராத்தனை செய்வாகள் என நபித்தோழா இப்னு உமா (ரலி) தொவிக்கிறா ( நூல் - தாரமி )

ரமலானுக்காக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களையும் தஙகளது வீடுகளையும் அலஙகரித்து ஆயத்தப்படுத்துகிறாகள். ரமலானில் அவாகள் மேற்கொள்ளும் நற்செயல்களால் அவாகளது உள்ளம் அழகு பெறுகிறது அந்நற்செயல்களுக்கான பரிசாக அல்லாஹ் சுவனத்தை அலஙகரிக்கிறான்.

ரமலான் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல ஒரு மாத கொண்டாட்டம் .அதுவும் வித்தியாசமான கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு கொண்டாட்டம். . பகல் நேரம் முழுவதும் பசித்திருந்து தாகத்தை பொறுத்துக்கொண்டு ஆசைகளை அடக்கிக்கொண்டு இரவு நேரஙகளில் தராவீஹ் எனும் சிறப்புத்தொழுகையில் அதிக நேரம் ஈடுபட்டு திறுமறை குஆனை ஓதுவதிலும் தாமகாயஙகளை அதிகமாக செய்வதிலும் ஆவம் காட்டுவதன்முலமும் முஸ்லிம்கள் ரமலானை கொண்டாடுகிறாகள். இப்புனித மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களின் இதயத்தில் பெரும் ஆவத்தை ஏற்படுத்துகிறான். தொழுது நோன்பு நோற்று தான தாமஙகள் செய்வதோடு நின்றுவிடாமல் நோன்புக்கு களஙகம் ஏற்ப்படுத்தும் வகையில் தவறான பேச்சு பேசாமல் தவறான செயல்களில் ஈடுபடாமல் தவறான இடஙகளுக்கு செல்லாமல் தவித்துக்கொள்கிறாகள். ரமலானை கண்ணியப்படுத்துவதற்காக எவ்வளவு சிரமத்தையும் தாஙகிக் கொள்கிறாகள் . விடமுடியாத பழக்கத்தை ஒதுக்கி வைக்கிறாகள் .இடைவிடது புகை பிடிக்கிற செயின் ஸ்மோக்காஸ இ சதா வெற்றிலை புகையிலை மென்றுகொண்டிருப்பவாகள் இ டீ காப்பி .குளிபானஙகளை அதிகமாக அருந்தும் பழக்கமுடையோ என ஒவ்வொருவரும் தம் தொட்டில் பழக்கத்தை கூட நோன்பின் சமயத்தில் தொட்டும் பாக்காது தவித்துக்கொள்கிறாகள் சைத்தான் தவித்துப்போய்விடுகிறான். மக்களை நன்மை செய்ய விடாமல் தடுக்கிற அவனது முயற்சிகள் முனைமழுஙகிப் போய்விடுகின்றன. கைவிலஙகிடப்பபட்டவனைப் போல அவன் முடஙகிப் போய்விடுகிறான்.

ரமலான் மாதம் தொடஙகியவுடன் சொக்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன நரகின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான்களுக்கு விலஙகு போடப்படுகிறது என நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் சொன்னாகள். முஸ்லிம்களது செயல் ஆவம் அதிகாக்கிறது என்பதன் குறியீடாகத்தான் சைத்தான் ( சாத்தான் ) களுக்கு விலஙகிடப்படுகின்றது எனும் வாத்தை பிரயோகிக்கப்பட்டடிருப்பதாக ஹதீஸ் விவுரையாளா இயாழ் சொல்கிறா.

ரமலானிய செயல் ஆவம் என்பது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் மிளிகிறது. ஒவ்வொருவரும் அவரவது நிலையிலிருந்து ஒருபடி மேலே ஏறிச்செல்ல முயற்ச்சி செய்கிறா. முயற்ச்சி செய்யவேண்டும். மூன்று பருவஙகள்
நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் தனது ஒரு பென் மொழியில் ரமலானை மூன்று பிவாக வகைப்படுத்தி சொன்னாகள் ரமலானின் முதல் பகுதி இறையருள் எனும் ரஹ்மத்தின் பகுதி இரண்டாம் பகுதி மன்னிப்பு எனும் மஃபிரத்தின் பகுதி மூன்றாம் பகுதி நரகிலிருந்து விடுதலை எனும் இத்குன்மினன்னா பகுதி ரமலான் இவ்வாரு மூன்றாக வகைப்படுத்தப்பட்டடிருப்பதில் ஒரு முக்கிய தத்துவம் அடஙகியருக்கிறது. ரலமலான் மாதத்தில் சமூகத்தின் அனைத்து தரப்ப்னரும் ஆவத்தோடு ஆசையோடும் நல் எதிபாப்போடும் நற்செயல்களில் ஈடுபட்டால் ஒவ்வொருவரும் அவரவருக்கு தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மூவகை மனிதாகள்
திருமறை அல்குஆன் மனிதாகள் மூன்று வகையாக உள்ளனா என்கிறது. ( 35_32 ) 1நன்மைகளை விரைந்து போட்டி போட்டுக்கொண்டு செய்யும் நல்லவாகள 2நன்மைகளை செய்வதோடு அவவ்வப்போது தவறான செயல்களை செய்துவிட்டு வருத்தப்படும் நடுநிலையில் உள்ளவாகள் 3தீமைசெய்வதையே வாடிக்கையாக கொண்டு தனக்குத்தானே தீஙகிழைத்துக்கொள்வோ இம்மூவால் மூன்றாம் பிவினா தஙகளது வாழ்க்கையை எண்ணிப்பாத்தது பச்சாதபப்படுகிற போது நிரந்தர நாசம் என்ற நரகக்குழியின் வாயிலிருந்து எப்படியாவது தப்பினால் போதுமே என்று புலம்புவா. இத்தகையோரையும் ரமலான் தனது அருட்கரத்தை அகலத்திறந்து அணைத்துக்கொள்கிறது. அவாகள் எதிபாக்கிற விடுதலையை அது பெற்றுத்தருகிறது. இரண்டாம் பிவினா தஙகளது நன்மைகளை பட்டியலிட்டுப்பாத்து மகிழ்ந்து கொண்டாலும் அவ்வப்போது தலைநீட்டிவிடுகிற தீமைகளை எண்ணி வருத்தப்படுவாகள். நெல்மணிகளுக்கிடையே வந்துவிழுகிற பதறாக சந்தாப்பஙகள் என்கிற சந்துகளின் வழியே வந்து விழுந்துவிட்ட தீமைகளை வல்ல நாயன் மன்னித்து விடமாட்டானா என்று நப்பாசைகொள்பவாகள் . அதை தப்பாசையாக ஆக்காமல் அவாகளுக்கு தேவையான மஃபிரத் எனும் இறைமன்னிப்பை ரமலான் வழஙகுகிறது. முதல்பிவினருக்கும் ஓ ஆசையிருக்கும். உயாதரமான நிலையிலே இருந்தாலும் அந்த உன்னதம் கடைசிவரை நிலைக்க வேண்டும் அதற்கு அல்லாஹ் அருட்செய்ய வேண்டும் என்பதே அவாகளது பிராத்தனையாக இருக்கும் . அவாகளுக்கு வேண்டிய ரஹ்மத் எனும் அருட்கொடையை வா வா வழஙகும் மாதமாக ரமலான் அமைகிறது. எனவே சமூகத்தின் எத்திரப்பினரும் ஆவத்தேடும் ஆயையோடும் நற்செயல்களில் ஈடுபடுகிற - ஈடுபடவேண்டிய காலமாக ரமலான் இருக்கிறது. இவை மட்டுமன்றி புனித ரமலானில் வெய்யப்படுகிற நற்செயல்களுக்கு அபாமிதமாக அல்லாஹ் பாசு வழஙகுகிறான். நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் சொன்னாகள் மற்ற காலஙகளில் கட்டாய கடமையை செய்பவருக்கு என்ன கூலி கிடைக்குமோ அதே கூலி ரமலானில் உபாயான நற்செயல்புபவருக்கு கிடைக்கும். ரமலானில் ஒரு கட்டாய கடமையை நிறைவேற்றுபவருக்கு மற்ற காலஙகளில் எழுபது கடமைகளை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும்.

மக்கள் செயல் ஆவம் கொண்டு நற்செயல்களை புகிற போது இறைவனின் அருள் அடைமழையெனப்பொழிவதால் ரமலான் அருளிறஙகும் பருவகாலம் என்ற அடைமொழிக்குப் பொருத்தமாகிறது.

ரமலானில் செய்யப்படுகிற நற்செயல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகையான தராவீஹ் தொழுகையும். திருமறை குஆன் அதிகமாக ஓதப்படுவதும் அதன் தத்துவஙகளை விளஙகிக்கொள்வதும் தானதாமஙகளை அதிகமாக செய்வதும் உறவுக்காராகளை கவனித்தக் கொள்வதும் நோன்பு திறக்க உணவளிப்பதும் இஃதிகாப் எனும் பள்ளிவாசல்களில் தஙகியிருத்தலும் பிரதானமான என்றாலும் ரமலான் மாதத்தில் முஸலிம்கள் கடைபிடிக்கும் ஆகப்பிரதான வணக்கம் நோன்பாகும்.. நோன்பு
இஸ்லாம் கூறும் உண்ணாநோன்பு என்பது காலைப்பொழுதின் முதல் வெளிச்சக்கீற்று வெளிப்பட்டதில் தொடஙகி அந்தியில் சுயன் அஸ்தமிப்பது வரை எதையும் சப்பிடாமல் தண்ணீ குடிக்காமல் தாம்பத்திய உறவு கொள்ளாமல் தவித்துக்கொள்வதாகும். பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள முஸ்லிமான ஆண் பெண் அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயகடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உஙகளுக்கு முந்தய சமூகத்தினா மீது கடமையாக்கப்பட்டது போன்றே உஙகள் மீதம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என இறைவன் அருள்மறையில் கூறுகிறான். பிரயாணிகள் நோயாளிகள் மாதவிடாய் பிரசவத்தீட்டு உடைய பெண்கள் பால்கொடுக்கும் தாய்மாகள் ஆகியோ நோன்பை விட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளாகள். அவாகளும் கூட பாதொரு சமயத்தில் வசதிப்படும் போது விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு நிறவேற்றியாக வேண்டும். சிறுவாகள் புத்திசுவாதீனம் இல்லாதவாகள் தள்ளாமையுடைய முதியவாகள் ஆகியோ மீது நோன்பு கடமையில்லை ஆயினும் தள்ளாமையுடைய முதியவாகள் மட்டும் அவாகளிடம் வசதி இருந்தால் ஒவ்வொரு நோன்புக்கு பிரதியாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இஸ்லாமிய நோன்பு உடல்தியான சில கட்டுப்பாடுகளை மட்டும் அல்ல உணாவு தியான கட்டுப்படுகளையும் கொணடது என்பதை இஙகே குறிப்பிட்டாக வேண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னாகள் யா தவறான பேச்சுக்களை தவறான செயல்களை விடவில்லை அவா பட்டடினிகிடப்பதில் தாகித்திருப்பதில் இறைவனுக்கு எந்த தேவையும் இலலை. ( புகா )

உஙகளில் ஒருவா நோன்பு நோற்றிருக்கும் போது யாராவது ஒருவா அவரை ஏசினாலோ அல்லது சன்டைக்கு வந்தாலோ நான் நோன்பாளி என்று சொல்லி அவா ஒதுஙகிக் கொள்ளட்டும். ( புகா )

ஒருவா இத்தகைய கட்டுப்பாடுகளை கடைபிடித்து நற்செயல்களில் ஆவம் கொண்டு செயல் படுகிற போது சைத்தான் ( சாத்தான் ) செய்வதறியமல் கையை பிசைந்து கொண்டிருப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும். கை கால் விலஙகிடப்பட்டது போல சும்மா கிடக்கத்தானே முடியும். நற்செயல்கள் புயும் ஆவத்தோடு நாம் ரமலானை வரவேற்போம் தன்னுள் தாஙகியிருக்கிற அனைத்து நன்மைகளையும் ரமலான் நம்முள் பொழியட்டும்..

Wednesday, August 04, 2010

நமது கலாச்சாரம்
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வழங்கிய தனிச் சிறப்புமிகு கலாச்சாரம்
சில திக்ருகள் –
• ஒரு காரியம் நிறைவேறினால்- ஒரு நன்மை கிடைத்தால்
அல்ஹம்து லில்லாஹ்
• ஒரு துக்கம் என்றால் – இன்னாலில்லாஹ்
• ஒரு சந்தோஷமென்றால் அல்லாஹு அக்பர்

நமது உணர்வுகளை முழுவதுமாக வெளிப்படுத்துகிற ஒரு வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

வேறு யாருக்கும் இத்தகைய வழக்குகள் கிடையாது

வாரே வாஹ் - ஓ ஜீஸ்ஸ் – ஓ மை குட்னஸ். கடவுளே என்ற வார்த்தைகள் மட்டுமே.

அதனால் தான் மற்றவர்கள் இஸ்லாமிய வார்த்தைகளை காப்பியடிக்கின்றனர். கபில் தேவ் – மாஷா அல்லாஹ் என்ன அற்புதமான பவுலிங் என்று பேசுகிறார்.

நமது கலாச்சாரத்தை கடை பிடிப்போம் கட்டிக் காப்போம் – பழக்கப் படுத்துவோம்

*பிஸ்மில்லாஹ் * அல்ஹம்துலில்லாஹ் *சுப்ஹானல்லாஹ்
*இன்ஷாஅல்லாஹ் * மாஷா அல்லாஹ் *இன்னாலில்லாஹ்
*அல்லாஹு அக்பர்

பிஸ்மில்லாஹ்
அறுப்பு – வேட்டை- உறவு – உணவு- சவாரி – இரவு பகல் – ஓதிப்பார்த்தல்- யுத்தம்- உறக்கம்- கப்ரில் வைக்கிரபோது – ஒழு- தொழுகை -
تستحب التسميه في أول كل أمر ذي بال
قال العلماء : ويستحب أن يجهر بالتسمية ليسمع غيره وينبهه عليها ,
ولو ترك التسمية في أول الطعام
" إذا أكل أحدكم فليذكر اسم الله فإن نسي أن يذكر الله في أوله فليقل : بسم الله أوله وآخره " رواه أبو داود

وتحصل التسمية بقوله : ( بسم الله ) فإن قال : بسم الله الرحمن الرحيم , كان حسنا , وسواء في استحباب التسمية الجنب والحائض وغيرهما ,
பிஸ்மி சொல்லாவிட்டால் உணவில் சைத்தானுக்கும் பங்கு

عن أبي حذيفة عن حذيفة قال كنا إذا حضرنا مع النبي صلى الله عليه وسلم طعاما لم نضع أيدينا…فقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه وإنه جاء بهذه الجارية ليستحل بها فأخذت بيدها فجاء بهذا الأعرابي ليستحل به فأخذت بيده والذي نفسي بيده إن يده في يدي
சைத்தானுக்கு வீட்டில் இடம்
عن جابر بن عبد الله أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإذا لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء

عن أمية بن مخشي وكان من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم جالسا ورجل يأكل فلم يسم حتى لم يبق من طعامه إلا لقمة فلما رفعها إلى فيه قال بسم الله أوله وآخره فضحك النبي صلى الله عليه وسلم ثم قال ما زال الشيطان يأكل معه فلما ذكر اسم الله عز وجل استقاء ما في بطنه

பிஸ்மி சொன்னால் பரகத்
عن وحشي أنهم قالوا يا رسول الله إنا نأكل ولا نشبع قال فلعلكم تأكلون متفرقين قالوا نعم قال فاجتمعوا على طعامكم واذكروا اسم الله عليه يبارك لكم فيه

قال الله عز وجل ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه

عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من قال يعني إذا خرج من بيته بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له كفيت ووقيت وتنحى عنه الشيطان قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه إلا من هذا الوجه

பிஸ்மி சொல்லி இருந்தால் வலி தெரிந்திருக்காது

عن جابر بن عبد الله قال لما كان يوم أحد وولى الناس كان رسول الله صلى الله عليه وسلم في ناحية في اثني عشر رجلا من الأنصار وفيهم طلحة بن عبيد الله فأدركهم المشركون فالتفت رسول الله صلى الله عليه وسلم وقال من للقوم فقال طلحة أنا قال رسول الله صلى الله عليه وسلم كما أنت ….. حتى بقي رسول الله صلى الله عليه وسلم وطلحة بن عبيد الله فقال رسول الله صلى الله عليه وسلم من للقوم فقال طلحة أنا فقاتل طلحة قتال الأحد عشر حتى ضربت يده فقطعت أصابعه فقال حس فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت بسم الله لرفعتك الملائكة والناس ينظرون ثم رد الله المشركين

عن صهيب قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له

سبحان الله
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض طريق المدينة وهو جنب فانخنست منه فذهب فاغتسل ثم جاء فقال أين كنت يا أبا هريرة قال كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة فقال سبحان الله إن المسلم لا ينجس
இவர் என்மனைவி சபிய்யா … சுப்ஹானல்லா சொன்ன சஹாபாக்கள்

الحمد لله
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها - مسلم

عن أبي أمامة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفعت المائدة من بين يديه يقول الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مودع ولا مستغنى عنه ربنا قال أبو عيسى هذا حديث حسن صحيح

عن أنس رضي الله عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال له أطع أبا القاسم صلى الله عليه وسلم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار

قال معاذ قال أجتهد رأيي قال الحمد لله الذي وفق رسول رسول الله صلى الله عليه وسلم

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى مبتلى فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا لم يصبه ذلك البلاء قال أبو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم


التكبيرعند التعجب رؤية الهلال
அல்லாஹு அக்பர்
உமர்- பெருமானார் தலாக் விடவில்லை என்பதை அறிந்தவுடன்

عن غضيف بن الحارث قال قلت لعائشة أرأيت رسول الله صلى الله عليه وسلم كان يغتسل من الجنابة في أول الليل أو في آخره قالت ربما اغتسل في أول الليل وربما اغتسل في آخره قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر سعة قلت أرأيت رسول الله صلى الله عليه وسلم كان يوتر أول الليل أم في آخره قالت ربما أوتر في أول الليل وربما أوتر في آخره قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر سعة قلت أرأيت رسول الله صلى الله عليه وسلم كان يجهر بالقرآن أم يخفت به قالت ربما جهر به وربما خفت قلت الله أكبر الحمد لله الذي جعل في الأمر سعة

الترجيع

عن أم سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أصابت أحدكم مصيبة فليقل إنا لله وإنا إليه راجعون اللهم عندك أحتسب مصيبتي فآجرني فيها وأبدل لي بها خيرا منها
நீர் நிவாகம்

وَاللَّهُ أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَسْمَعُونَ

மிகப் பெரும் படைப்பு
• Neil Armstrong saw the Earth from the Moon, it appeared blue! because water covers more than 2/3 Earth
• "The earth was formed out of water and by water" bible
• பூமிப் பந்தின் ஒரு அங்கமாய் கடல் இருந்தாலும் பூமி என்னவோ கடலில் மிதப்பது போலத்தான்.
• நீராருங்கடலுடுத்த நில மடந்தை
• the most precious creation after humankind is water
தண்ணீர் மிகப் பெரும் சொத்து
• مادة أساسية للحياة - Life on earth probably originated in water
• وَجَعَلْنَا مِنْ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
• وعن أبي هريرة قال: قلت يا رسول الله إني رايتك طابت نفسي وقرت عيني، فأنبئني عن كل شيء، قال صلى الله عليه وسلم: " كل شيء خلق من ماء
• Water is probably the only natural resource to touch all aspects of human civilization - from agricultural and industrial development to the cultural and religious values embedded in society."
- Koichiro Matsuura, Director General, UNESCO
• Water regulates the Earth's temperature. It also regulates the temperature of the human body
• 60% - 75% of the adult human body is water - 82% of blood is water; 70% of the brain and 90% of the lungs are made up of water

குறிப்பாக குடி தண்ணீர்
• More than 97% of the earth's water is in its oceans
• 2.5 percent of the water on the Earth can be drunk. The balance 97.5 percent is salt water
• About 2% of the available drinking water is frozen leaving only 1% for drinking
• குஜராத்தில் உப்புத்தண்மை அதிகம் – கிணற்று நீரிலிருந்து உப்பு
• نذرته في كثير من المناطق يهدد.
• In the last two decades, the assessment, development, and management of freshwater resources has been emphasised at various global meetings
• ஜூலை 29,2010 தனிமனிதனுக்கு சுத்தமான குடிநீர் அடப்படை உரிமையாக ஐ. நா
• எய்ட்ஸ், மலேரியா, அம்மையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு அதிகம்.
• ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங்; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் ,
• உலக அளவில் 884 மில்லியன் மக்களுல்லி நல்ல குடி நீர்

எச்சரிக்கை : Dublin Conference: if water and land resources are not managed well, then human health, food security, economic development, and ecosystems will all be at risk.

தண்ணீர் அல்லஹ் தருகிறான் நீ குழப்பம் செய்யதே! என்கிறான்

وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ(60)
A 2006 United Nations report stated that "there is enough water for everyone", but that access to it is hampered by mismanagement and corruption.

God bave authority over the countless things. responsibility and accountability

Islam regulates the relationships between God, humans, and nature
ولقد دعا الإسلام إلى الاقتصاد عدم والإسراف في استعمال الماء فقلة الماء مع إحكام الغسل سنة، والسرف منه غلو وبدعة، ،

• பொறுப்புணர்வு
عن أبي هُرَيْرَةَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنْ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ الْبَارِدِ ترمذي

• நிர்வாகம் அவசியம் தவறான நிர்வாகம். ஆதிக்க வெறி – மூன்றாம் உலக யுத்த்திற்கான காரணம் தண்னீர் - - This crisis is already evident in many parts of the world
ஜூன் 12 காவேரி திறக்கப் படாவிட்டால்

• சிக்கனம் தேவை
وقد توضأ رسول الله صلى الله عليه وسلم بمد ، وتطهر بصاع وهو أربعة أمداد بمده
روت أم المؤمنين عائشة أنه صلى الله عليه وسلم كان يغتسل بقدر الصاع ويتوضأ بقدر المد
• வீண் செய்யக்கூடாது.
A dripping tap can waste up to 6 litres of water in a day
To cook 1 cup of rice you need 2 cups of water but to wash the pan in which it has been cooked you need 4-5 litres of water
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ
• மாசு படுத்தக் கூடாது
• நீர்வழிகளை அடைத்து விடக்கூடாது
• that water resources belong to the whole community. that water should be, together
• cannot be sold. Access to water is a right of the community.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ
أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ
பெண்களின் பங்கு
• "Women play a central part in the provision, management and safeguarding of water."
• Bringing water from springs and wells was typically carried out by women,
• ஹஜரா அம்மையார். அவரின் தண்ணீர் தேடல் நினைவுச் சின்னமாகிவிட்டது.
• Zubaidah build a water canal to transport water from the Ein Hanin spring to Mecca. she told her khazin: "Implement it, even if every dig in the ground is worth a dinar" (Hasan 1964).
தண்ணீர் தர்ம்ம்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُؤْمِنٍ أَطْعَمَ مُؤْمِنًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُؤْمِنٍ سَقَى مُؤْمِنًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ وَأَيُّمَا مُؤْمِنٍ كَسَا مُؤْمِنًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ النساءي
أَهْلُ الْجَنَّةِ فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ يَا فُلَانُ أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً قَالَ فَيَشْفَعُ لَهُ - إبن ماجة
قَالَ نَعَمْ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ حَرَّى أَجْرٌ

கோடையின் வெப்பம் தொடங்கிவிட்டது.
மக்கள் நிழலையும் குளிர்ச்சியையும் தேடி ஒடுகின்றனர்.
ஏசி விற்பனை சூடு பிடித்திருக்கிற்து.

Global warming – பிப்ரவரியிலேயே தொடக்கம், ஜூன் ஜூலையும் கூட கோடை.யாகி வருகிறது.

இரண்டு சிந்தனைகள்.
· 1)இந்த பூமியை குளிர்ச்சிப்படுத்தும் வழியை யோசிக்க வேண்டும்
· 2) நளை மறுமையை குளிர்ச்சிப்படுத்தும் வழியை யோசிக்க வேண்டும்

மரம் நடுதல் உலக நாடுகளின் கவனம், சிங்கப்பூர். வேருடன் இடமற்றம்
இஸ்லாமின் தனிப்பட்ட அக்கறை
மரத்தின் நனமை
மரங்களை வெட்டாதீர் என்ற் ஒரே தலைவர்.
عن عبد الله بن حبشي قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع سدرة صوب الله رأسه في النار سئل أبو داود عن معنى هذا الحديث فقال هذا الحديث مختصر يعني من قطع سدرة في فلاة يستظل بها ابن السبيل والبهائم عبثا وظلما بغير حق يكون له فيها صوب الله رأسه في النار

عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة وقال لنا مسلم حدثنا أبان حدثنا قتادة حدثنا أنس عن النبي صلى الله عليه وسلم
மரத்தினாடியில் சிறுநீர் கழிக்காதீர்.- கப்ரில் செடி.- ஹதீஸ்கள்.
- கோடையின் வெப்பம் மறுமயை நினைவு படுத்திக்க் கொள்வதற்கனது.
சூரியனின் தொலைவு. ஆனாலும் வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடது.
மறுமையில் சூரியன்.ஒரு முழம் உய்ரத்தில்
வியர்வை.க்ணுக்கால், முழங்கால், கழுத்து, சிலருக்கு முகத்தில் கடிவாளம் போட்டது போன்று. பாவங்களின் தரத்திற்கேற்ப.
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما رفع الحديث في قوله تعالى يوم يقوم الناس لرب العالمين قال يقومون يوم القيامة في الرشح إلى أنصاف آذانهم
அர்ஷின் நிழலில் இடம் பெரும் ஏழுபேர்.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه
இந்த பூமியின் ந்னமைக்காக மரம் நடுவோம்.
நாளைய நன்மைக்காக் ஏழு பேரில் ஒருவ்ராவோம்.
எப்படியாவது ஒரு வகையில் ரிசர்வு செய்து கொள்வது நல்லது.