வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 25, 2010

ஹாஜிகளை வரவேற்போம் அனுபவங்களை செவியேற்போம்


وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ  لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ(28) الحج
قال سمعت أبا هريرة رضي اللهم عنهم قال سمعت النبي صلى اللهم عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه *

ஹஜ் பாதுகாப்பாக  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சிறு விபத்தும் இல்லை. அல்ஹம்து லில்லாஹ் .
ஹஜ்ஜின் பாதுகாப்பு ஆச்சரியமானது 40 லட்சம் பேருக்கு ஒரிரு ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு. அவர்களிடம் தடி இருக்காது. தடி இருந்தாலும் அடி இருக்காது. கெட்டவார்த்தை பேசாத போலீஸ். ஹாஜி ஹாஜி என்ற ஒருவார்த்தையில் கட்டுப்பாடு.
ஹஜ்ஜின் பாதுகாப்புக்கு முதன்மையான காரணம் = ஹாஜிகளின் சுயக்கட்டுப்பாடு.
அதற்கு காரணம் : அல்லாஹ் ரசூலுடைய வழிகாட்டுதல்களே.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் சண்டை ச்ச்சரவு எழக்கூடாது : எங்க ஊர் தண்ணி தான்ம்பா தண்ணீ என்று  ஒரு பேச்சு தொடருமானால் அதுவே ஒரு கலவரத்திற்கு காரணமாக்க் கூடும்.
இத்தைகைய பேச்சுக்கு ஹஜ்ஜில் இடமில்லை
فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ
பிறருக்கு தொல்லைதர ஹஜ்ஜில் இடமில்லை
ஹஜ்ர்ருல் அஸ்வதை முத்தமிட நீங்கள் ஆசைப்பட வேண்டாம் என உமர் (ரலி)க்கு பெருமாமானார்  கூறினார். காரணம் நீங்கள் திடகாந்திரமான உடலுடையவர் நீங்கள முண்டியடித்துச் சென்றால் மற்றவர்களுக்கு அது இடையூறாகும் என்றார் பெருமானார்.
அடுத்த காரணம் பெரும் பொருட்செலவில் திட்டமிட்ட ஏற்பாடுகள்
இந்த ஆண்டு 25 பேருக்கும் குறைவானவர்களை ஏற்றிச் செல்லும் வாகங்களை ஹரம் எல்லக்குள் அனுமதிக்கவில்லை.
புதிய அறிமுகம் இரயில் சேவை
ஓரிரு நாட்கள் மட்டுமே பயன்படுகிற ரயில் சேவைக்கு எப்படி டிக்கட் வழங்கப் போகிறார்கள். கூட்ட்த்தை கட்டுப்படுத்தப் போகிறார்கள். மக்கள் நெரிசலில் சிக்கமாட்டார்களா ? என்ற பயம் எழுந்த்து.
அற்புதமான ஏற்பாடு. இரயில் சேவை சுற்று வட்டாரத்திலிருந்து வருகிற அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே டிக்கட் . அதுவும் முஅல்லிமிடமே வாங்க வேண்டும். 3 நாளைக்கு சுமார் 200 ரியால்.
இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக!
ஹாஜிகளை வரவேற்றல்
ஹாஜிகள் திரும்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களைச் சந்தியுங்கள் சலாம் சொல்லுங்கள் முஸாபஹா செய்யுங்கள்.
عن عبد الله بن عمر قال قال رسول الله صلى اللهم عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور له
عن ابن عباس رضي اللهم عنهمما قال لما قدم النبي صلى اللهم عليه وسلم مكة استقبلته أغيلمة بني عبدالمطلب فحمل واحدا بين يديه وآخر خلفه *
عن حبيب بن أبي ثابت قال خرجت مع ابن عمر نتلقى الحاج فنسلم عليهم قبل أن يتدنسوا *
ஜம் ஜம் தண்ணீரை கிடைத்த வரை பருகுங்கள்
ஜம்ஜமின் சிறப்பு
عن جابر بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ماء زمزم لما شرب له
عند ابن عباس جالسا فجاءه رجل فقال من أين جئت قال من زمزم قال فشربت منها كما ينبغي قال وكيف قال إذا شربت منها فاستقبل القبلة واذكر اسم الله وتنفس ثلاثا وتضلع منها فإذا فرغت فاحمد الله عز وجل فإن رسول الله صلى الله عليه وسلم قال إن آية ما بيننا وبين المنافقين إنهم لا يتضلعون من زمزم
عن ابن عباس قال سقيت النبي صلى الله عليه وسلم من زمزم فشرب قائما فذكرت ذلك لعكرمة فحلف بالله ما فعل
நின்றபடி தலையை திறந்துதான் குடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
ஹஜ்ஜின் அணுபவ்ங்களை கேளுங்கள் :
கேட்க்க் கேட்க அலுக்காதவை நமக்கும் ஆசை வரும்
முன்னோர்களின் ஹஜ் அனுப்வங்கள்
1000 வருட்த்திற்கு முன்  1045 ல் நாஸர் குஸ்ரோ : ஹரம் ஷரீபின் மேற்கு வாசலில் மட்டுமே மரங்கள். சபா மர்வாவுக்கி இடையே  நிறைய படிகள். குடியிருப்போர் 2000 வெளிநாட்டினர் 500

800 வருட்த்திற்கு முன் ( 1183) – இப்னு சுபைர் : சிலுவைப் போர் வீர ர்கள் ஹாஜிகலின் கப்பலுக்கு தீவைத்து ஹாஜிகளை கொலை செய்திருந்தனர். ஜித்தா நிறைய  சத்திரங்கள் இருந்தன .
ஜபலுரஹ்மத் - பெரிய பாறைகளை உடைய்தாக இருந்த்து. அத்ற்கிடையே  உம்மு சல்மா (ரலி)வின் அடக்கஸ்தலம்..
இராக்கிய அமீரின் கூடாரத்திலிருந்து நான்கு ஒட்டகைகள் கிஸ்வாவைச் சுமந்து வந்தன.
500 வருட்த்திற்கு முன் - 1503 : ‘ வர்தமா”  -மக்கா  அழகிய நகரம் 6000 குடும்பத்தினர். மக்காவில் இறக்குமதி செய்யப் பட்ட பொருள்கலின் வியாபாரம் ஜோர்..
மினாவில் 30,000 ஆயிரம் ஆடுகள் அறுக்கப்பட்டன. அதே அளவில் ஏழைகள் இதற்காகவே இறைச்சியை பெருவதற்காகவே வருகின்றனர்.
போத்துகீஸீயர் 7 ஹஜ்பயணிகளின் கப்பலை தீயிட்டு கடலில் மூழ்கடித்திருந்தனர்.
400 வருட்த்திற்கு முன் - 1685 யூசுப் பிட்ஸ்  ஹஜ்ஜ்ஜுக்கு 4 குழுக்கள்தான் சென்றனர்; மொரோக்கோ கெய்ரோ சிர்யா இந்தியா.
6 வாரத்திற்கு ஒரு முறை கஃபா திறப்பு.
ஒரு நாள் ஆண்கள் மறுநாள் பெண்கள்,
எனக்கு 2 முறை.
200 வருட்த்திற்கு முன் - 1814 புக்கார்த்
கெய்ரோவிலிருந்து ஜித்தா வர 4 மாதம் .
மக்காவில்  25 ஆயிரம் மக்கள்.
அரபாவில்70, 000 பேர்.
ஹஜ்ஜின் அனுபங்கள நம்மையும் தூண்டும். ஈமானை வலுப்படுதுபவை.
ஹாஜிகளுக்கு ஒரு வார்த்தை
ஹாஜி என்ற வார்த்தை பெருமைக்குரியது தான் - தற்பெருமைக்குரியது அல்ல.
ஒரு உன்னதமான வணக்கத்தை அற்ப பெயருக்கு ஆசைப்பட்டு பாழாக்கி விடவேண்டாம். 
ஹாஜி என்ற வார்த்தைக்கு ஒரு  க்டமையை நிறைவேற்றிவிட்டோம் என்று மட்டுமே அர்த்தம். 
ஹஜ் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கடமை என்பதால் ஹஜ்ஜுக்கு ம்ட்டும் இந்த "பட்டம்"
ஒரு சரியான ஹாஜியின் உண்மையான கவலை ஹஜ்ஜுக்குப் பிறகு அவர் நடந்து கொள்ளும் நடை முறையில் ஹஜ் அங்கீகரிக்கப் பட்டதற்கான அடையாளம் இருக்க வேண்டும் 
அல்லாஹ் ஹஜ்ஜை அங்கீகரிக்க வேண்டுமே என்ற கவலை இருக்க வேண்டும். 

Thursday, November 18, 2010

உலக நாகரீகத்தின் தந்தை


وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

குர்பானிக்கு மட்டுமல்ல ஹஜ்ஜின் ஒவ்வொரு அமலுக்கும் இபுறாகீம் (அலை) நபியும்  அவருடைய குடும்பத்தினருமே காரணகர்த்தாக்கள்.

·         கஃபாவை கட்டியது –
·         ஹஜ்ஜுக்கு அழைப்பு –  
·         தல்பியா இபுறாகீம் (அலை) யின் அழைப்புக்கான பதிலே 
·         ஸஃயு-
·         சைத்தானை கல்லெறிதல் –

அவரது சிறப்புக்களில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் மனித நாகரீகத்தின் தலைமகன்.

பூமியில் மனிதன் தோன்றி சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹஜ்ரத் இபுறாகீம் (அலை) அவர்களே  பல நாகரீகப் பண்புகள் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று இஸ்லாமிய மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன.

பகரா அத்தியாயத்தின் 124 வசனத்தின் விரிவுரையில் முபஸ்ஸிர்கள் பலரும் இந்தக் கருத்தை கூறுகின்றனர். (குர்துபி = இபுனுகதீர்)

·         தண்ணிரை பயன்படுத்தி சுத்தம் செய்த முதலாமவர்
·         முதன்முதலாக பல் விளக்கியவர்
·         மீசையை கத்தரித்தவர்
·         கத்னா செய்தவர்
·         நகம் வெட்டிக் கொண்டவர்
·         மேடை மீதேறிப் பேசியவர்
·         சுர்வால் அணிந்தவர் (மானத்தை மறைக்கச் சிறந்த்து)
·         விருந்தாளிகளை உபசரித்தவர்,
(இந்த நாகரீகங்களைப் பற்றி இஸ்லாமின் சட்டங்களை சுருக்கமாக விளக்கலாம்.)
قال القرطبي: وفي الموطأ وغيره عن يحيى ابن سعيد أنه سمع سعيد بن المسيب يقول: إبراهيم عليه السلام أول من اختتن وأول من ضاف الضيف وأول من قلم أظفاره وأول من قص الشارب وأول من شاب فلما رأى الشيب قال: يا رب ما هذا؟ قال وقار قال: يا رب زدني وقارا وذكر ابن أبي شيبة عن سعد بن إبراهيم عن أبيه قال أول من خطب على المنابر إبراهيم عليه السلام قال غيره وأول من برد البريد وأول من ضرب بالسيف وأول من استاك وأول من استنجى بالماء وأول من لبس السراويل

இந்த நாகரீகங்களை அவர் முதன் முதலாக நடை முறைப் படுத்திய போது அது ஒரு கடும் சோதனையாக இருந்த்துஅதனால் தான்இக்கடமைகளை  கொண்டு இறைவன் இபுறாகீமை சோதித்த போது அவர் அவற்றை நிறைவேற்றினார்என்று குர் ஆன் கூறுகிறது.


இபுறாகீம் நபி அறிமுகப் படுத்திய நாகரீகங்களில் மிக முக்கியமானது சிறப்பானது பக்தி நாகரீகம்

பக்தியைஇறைவனுக்கு அடிபணிதலை- மிகச்சரியாகவும் முறையாக செயல்படுத்தி அறிமுகப் படுத்தினார்

பக்தி இன்று எவ்வளவு கேலிப் பொருளாக இருக்கிறது?

அனைத்திலும் தலை தூக்கியாடும் அநாகரீகம் இப்போது பக்தியை கூட விட்டுவைக்கவில்லை

பலே திருடன் ஒருவன்  ஒரு நாள் மாட்டினான்.
விசாரணயில் அவனது திருட்டுத்தன்ங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தனநீதிபதியே மிரண்டு போனார். இத்த்னை நாளாய் தப்பித்து வந்த நீ இப்போது எப்படி மாட்டினாய்என்று கேட்டார்.
ஒவ்வொரு தடவையும் 10 சதவீத்தை கடவுளுக்கு கொடுத்து விடுவேன். இந்த முறை தொகை அதிகமாக் இருந்த்தால் 5 சதவீதம் மட்டுமே உண்டியலில் போட்டேன். அதுதான் கடவுள் காட்டிக் கொடுத்து விட்டார் என்றன் திருடம்

அடுத்தவன் பொருளை திருடும் போது, அடுத்தவனுக்கு மன வேதனை கொடுத்த போது, குற்றத்திற்கு கடவுளை துணையாக்கிய போது, இறைபக்தி வரவில்லை. மாட்டிக் கொண்ட போது இறை பக்தி வருகிறதென்றால் து போலித்தனமான பக்தி.

இபுறாகீம் (அலை) மனைவி மகன் பிறந்த நாடு அரசன் என அனைவரையும் விட அல்லாஹ் பெரியவன் என்பதை தன்வாழ்வில் நடை முறைப்படுத்திக் காட்டி வணக்கவியலின் மிக உயர்ந்த நாகரீகத்தை அறிமுகப்படுத்தினார்.

இறை பக்தி என்பது இறைவனுக்கு அவனுடைய கட்டளைகள் அனைத்திலும் எல்லாநேரத்திலும் முழுமையாக கட்டுப்படுவது என்பதை புலப்படுத்தினார்.

நமது இறைபக்தியை சஜ்தாவோடு நிறுத்திக் கொள்கிற நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய மிக முக்கியமான செய்தி இது.

நம்மிடையே உள்ள பக்தியாளர்கள் கூட சோதனை வருகிற போது, அல்லது அதிக மகிழ்ச்சியின் போது, அல்லது திருமணம் போன்ற விழாக்களின் போது இறைவனுக்கு அடிபடினிதலை மார்க்கத்திற்கு கட்டுப்படுதலை சற்று தள்ளி வைத்து விடுகிறார்கள்.

பக்தியில் உலக நாகரீகத்தின் தந்தையான இபுறாகீம (அலை) கற்றுக் கொடுத்த உயர்ந்த நாகரீகத்தை பழகினால் நாமும் புகழ் பூத்த வாழ்வை பெற முடியும்.

Tuesday, November 16, 2010

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்


ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான்.

இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி ஹஜ்ஜுப் பெருநாள்  செய்து கொண்டிருக்கிறது.

அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.
ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.
ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.
குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.
கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.
ஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.
தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.
அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.
அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.
குடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.
கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.
இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.
இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.
இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.
இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd! eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;> ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf! ,d;Dk;> gpd; tUk; kf;fspy; vdf;F eP ew;ngaiu vw;gLj;Jthahf! (26:84>) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.
ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?
ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.
இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.
ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.
ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.
நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.
எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)
பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.
ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.
மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.
மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.
இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.
உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.
ஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை - நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)
ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.
ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!
இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)
ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.
ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.

Monday, November 15, 2010

Thursday, November 11, 2010

குர்பானியின் தத்துவம் உணரப்பட வேண்டும்


لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

·         ஹஜ்ஜுப் பெருநாளுக்காக முஸ்லிம் சமுதாயம் தயாராகிவருகிறது.
·         பெருநாட்கள் வருகிற போது நாம் நம்மை மாத்திரமே யோசிக்கிறோம்
·         நம்மை அணுகி அல்லது சாந்திருப்ப்பவர்களை யோசிக்கனும். உதவனும் 
·         உமர் (ரலி) க்கு பெருமானாரின் உதவி

أن عبدالله بن عمر قال أخذ عمر جبة من إستبرق تباع في السوق فأخذها فأتى بها رسول الله صلى اللهم عليه وسلم فقال يا رسول الله ابتع هذه تجمل بها للعيد والوفود فقال له رسول الله صلى اللهم عليه وسلم إنما هذه لباس من لا خلاق له فلبث عمر ما شاء الله أن يلبث ثم أرسل إليه رسول الله صلى اللهم عليه وسلم بجبة ديباج فأقبل بها عمر فأتى بها رسول الله صلى اللهم عليه وسلم فقال يا رسول الله إنك قلت إنما هذه لباس من لا خلاق له وأرسلت إلي بهذه الجبة فقال له رسول الله صلى اللهم عليه وسلم تبيعها أو تصيب بها حاجتك *

பெருநாளுக்கு முந்திய பத்து நாட்களுமே சிறந்தவை
·         அல்லாஹ் சத்தியம் செய்ய தேர்ந்தெடுத்தவைகளில் ஒன்று
·         والفجر وليال عشر
·         عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ – الترمذي
·         عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ  - الترمذي

முஸ்லிமுடைய வாழ்கை அமல்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்
அதற்காக எல்லாவேலைகளையும் விட்டுவிட வேண்டும் என்று இஸ்லாம் சொல்ல வில்லை- அது தான் இஸ்லாத்தின் சிறப்பு

إيمانا وإحتسابا -  குறைந்த அமல்களை செய்தாலும்

இது அல்லாஹ் சிற்றப்பித்து சொன்ன நாள் என்ற  நம்பிக்கையோடும் إينان இதில் நற்செயல் புரிந்தால் நன்மைகள் நிறையக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும்  إحتساب முடிந்த வரை அமல்களில் கவனம் செலுத்தி இந்நாட்களை மதித்து இதன் நம்ன்மைகளை பேறலாம்
·         ஜமாத்தாக தொழுவது
·         சுன்னத்களை பேணுவது
·         திலாவத் திக்ரு தஸ்பீஹ்களில் அதிகமாக ஈடுபடுவது
·         وروى الإمام أحمد عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد)،
·         அரபா நோன்பு
·         عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال: (يكفر السنة الماضية والسنة القابلة)- رواه مسلم
·         அரபா நாள் என்பது  ஊர்க்கணக்கின் படி துல்ஹஜ் மாத்த்தின் 9 நாளாகும்- ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் அல்ல.
·         ஜப்பானில் பாதி பகல் கடந்த பிறகு தான் மக்காவில் அரபா நாள் ஆரம்மாகிறது. அரபா முடிகிற போதுதான் அமெரிக்காவின் சில ஊர்கள் விடியவே செய்யும்.
·         முஸ்லிம்கள் சலனப்படத்தேவையில்லை. அரபா நாள் என்பதன் பொருள் துல்ஹஜ் 9 ம் நாள் என்பதாகும்   
·         நம் ஊரில் அரபா நாள் 16 செவ்வாய்க்கிழமையாகும்
·         அன்று நோன்பு வைப்பது சுன்னதாகும்
·         குர்பானி கொடுப்பவர்கள் மட்டும்தான் நோன்பு வைக்கவேண்டும் என்று கருதுவது சரியல்ல.
·         அய்யாமுத்தஷ்ரீக்
·        عن عقبة بن عامر قال قال رسول الله صلى اللهم عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب

·         தக்பீர் அய்யாமுத்தஷ்ரீக் பிறை 9 ன்பஜ்ரு முதல் 13 ன் அஸர்வரை ஜமாத்தாக தனியாக ஆண்கள் பெண்கள் அதாவாக கழாவாக தொழும் அனைவரும் பர்ளு தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டு,
·        الشافعية قالوا: التكبير سنة بعد الصلاة المفروضة، سواء صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة وصلاة الجنازة، وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق-

·         (ஹனபி மத்ஹபில் யார் மீது வாஜிபு என்பதில் சிறுது வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி வேறு தடை எதுவும் இல்லை.- இதை தனியாக விவரிக்க வேண்டியதில்லை. )

·         முடி நகம் வெட்ட் தடை-

·         عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ -  نسائي
·         இது ஒரு மனிதனை அல்லாஹ்வுடை அடியாராக் அடையாளப் படுத்துகிறது. பேஷன் உலகில் வாழ்கிற பலருக்கும் இது சிரம்ம என்றாலும்.

மிக முக்கியமான் மற்றொரு வணக்கம் குர்பானி

குர்பானியின்  சிறப்பு

عن عائشة أن رسول الله صلى اللهم عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا-  ترمذي

ويروى عن رسول الله صلى اللهم عليه وسلم أنه قال في الأضحية لصاحبها بكل شعرة حسنة ويروى بقرونها *

குர்பானி பிராணி
عن حجية قال سأل رجل عليا رضي اللهم عنهم عن البقرة فقال عن سبعة فقال مكسورة القرن فقال لا يضرك قال العرجاء قال إذا بلغت المنسك فاذبح أمرنا رسول الله صلى اللهم عليه وسلم أن نستشرف العين والأذن – احمد

குர்பானியின் முறை
عن جندب قال صلى النبي صلى اللهم عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح باسم الله – بخاري

عن جابر بن عبد الله الأنصاري أن رسول الله صلى اللهم عليه وسلم ذبح يوم العيد كبشين ثم قال حين وجههما إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك عن محمد وأمته – احمد

மிக மிக முக்கிய்மாக கவனிக்கபட வேண்டிய குர்பானியின் தத்துவம்
குர்பானி என்பது ஒரு பிராணியை விலைக்கு வாங்கி அறுத்து பங்கிடுவது மாத்திரமல்ல
இது இபுறாகீம் நபியின் வழி முறை
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ إبن ماجة
·         ஒருமனிதனர் தன்னை முற்றிலுமாக அல்லாஹ்வுக்குரியவராகிக் கொண்ட்தன் அடையாளம் குர்பானி.
·         இத்த்த்துவத்தை சமுதாயம் என்றும் மனதில் நிறுத்த வேண்டும்.
·         பெருமை அலட்சியம் ஆகியவற்றை இது விசயத்தில் முற்றிலுமாக ஒதுக்கி விட வேண்டும்
·         ஒரு ரசீது பெற்றுக்கொள்வது மாத்திரமே குர்பானியாக மாறிவிடக்கூடாது