வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Sunday, November 06, 2011

குர்பானி போதுமா?

  அறுத்துப் பலியிடுவது மட்டுமா இபுறாகீம் நபியின் சுன்னத்து  ?

ஒவ்வொரு ஹஜ்ஜுப்   பெருநாளின் போது நினைவு படுத்தப்பட வேண்டிய முக்கிய செய்தி.
இபுறாஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட்த் தயாரானார்கள். அதற்கு இஸமாயீல் (அலை) அவர்களும் ஒத்துழைத்தார்கள்

நான்காயிரம் வருட்த்திற்கு முந்தைய வரலாற்றை இன்றைக்கு கேட்கிற போதும் சிலிர்ப்பூ ஏற்படுகிறது..
قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرْ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ) [الصافات: 102
أورد أصحاب التفاسير أن إسماعيل -عليه السلام- قال لأبيه وهو يضجعه: "يا أبتي: اشدد رباطي، حتى لا أضطرب فينقص أجري، واكفف عني ثيابك حتى لا ينتضح عليها شيء من دمي، فتراه أمي فتحزن، واستحدّ شفرتك، وأسرع مر السكين على حلقي، ليكون أهون عليّ، فإن الموت شديد، وإذا أتيت أمي فأقرئها السلام مني، وإذا أردت أن ترد قميصي على أمي فافعل، فعسى أن يكون أسلى لها عني".
فبكى إبراهيم وأخذ يقبل ولده، ثم قال له: "يا بني: نِعم العون أنت على أمر ربي".
அகழ்வாராய்ச்சியாளா  சா சாலஸ் மார்டன் என்பவான் கருத்துப்படி கி.மு.2160 ல் அவா பிறந்தார்.தென் இராக்கில் உள்ள உர் (Ur) என்பது அவரது சொந்த ஊர்.  ஒரு மனிதன் இறைவனுக்கு எந்த வகையிலெல்ம் கடடுப்பட முடியுமோ அந்த வகையிலெல்லாம் ஹஜ்ரத் இபுறாகீம் அலை கடடுப்படடார்.

இறைவன் மனித குலத்துக்கு எத்தைனையோ கடமைகளை தந்திருக்கிறான். கடடளைகளை சொல்லியிருக்கிறான்.  அந்த கடடளைகளிலெல்லாம் மிக மிக கனமானதும் கடினமானதும்  ஹஜ்ரத் இபுறாகீம் அலை அவாகளுக்குச் சொன்ன இந்த கடடளையாகும்.  ஆயினும் இபுறாகீம் அலை அவாகளது பக்திக்கு முன்னால் சோதனை சோர்ந்து போனதே தவர அன்னாரது உறுதி குலையவில்லை.  

ஏக இறைவனை வணங்கியதற்காகவும் வணங்கச்சொன்னதற்காகவும் அக்கிரமக்காரகள் தணடனைவழங்கியபோது அந்த தணடனையை ஏற்று நெருப்புக்குழிக்குள் விழத் தயாரானார்கள். ஒரு கடடத்தில் மனைவியையும் பிள்ளயையும் பிரிந்தார். மற்றொரு சூழ்நிலையில்  தனது இறை நம்பிக்கைகாக சொந்த நாடடையும் துறந்தார். உச்சகட்டமாக இறை கடடளை நிறைவேற்றுவதற்காக வரமாக வேணடிப்பெற்ற மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்.

தனது உடலை  நெருப்புக்கு தாரைவார்க்க துணிந்தததைவிட மகனை அறுப்பதற்கு அவர் தயாரானது ஆச்சரியமானது.

இபுறாகீம் நபிக்கு ஏன் இந்தச் சோதனை ?: பிள்ளையை பலி கேட்கும் அளவு அல்லாஹ் கடுமையனவனா?


خلة தை உறுதிப்படுத்த

அல்லாஹ் இபுறாகீம் (அலை) அவர்களை தனது ஆதம ணபனாரக خليل   தேர்வு செய்திருக்கிறான்.

நண்பனை தவிர தன்னுடைய உள்ளத்தில் வேறுயாருக்கும் இடமளிக்காதவருக்கே خليل என்று  சொல்லப்படும்.

இபுறாகீம் தனக்கு குழந்தை வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது அவருடைய உள்ள்ளத்தில் குழந்தைப் பாசம் பெரிதாக இடம் பிடித்த விட்ட்தோ என்ற தோற்றம் எழுகிறது.

அவருடைய உள்ளம் எப்படிப்பட்ட்து என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். அதை மக்களுக்கு நிரூபிப்பதற்காக- பிள்ளையை அறுக்கும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். இபுறாகீம் (அலை) மகனை அறுக்கத்  துணிந்த்தார். இதன் மூலம் இறைவனுக்கு அடிபணிவதே தன்னுடை வாழ்வின் நோக்கம் என்பதை அவர் வெளிப்படுத்தினார். خلة  உறுதிப்பட்ட்து.

மனிதன் எந்த அளவு இறைவனுக்கு கட்டுப்பட கடமைப்பட்டிருக்கிறான் என்பதை நினைவூட்ட

தேவைப்படுகிற விதத்த்தில்  எத்தைகைய அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும்  மனித சழூகம்  தயாராக இருக்க வேணடும் எனறு அறிவுறுத்துவதும் இறைவனது நோக்கம் 

எனவேதான் நபி இபுறாகீம் அலை இவாகள் மகனை அறுக்க முற்படடு தனது உறுதியை வெளிப்படுத்திய போது இறைவன் பிள்ளை அறுகக்கவிடாமல் அதற்கு பதிலாக ஒரு ஆடடை வழங்கி அதை அறுக்கும்படி பணித்தான் . இபுறாகீம் அலை அவாகள் இறைவன் வழங்கிய அடடை குர்பானி கொடுத்தார்கள். எனினும் ஆடடை அறுத்த சமயத்திலும் பிள்ளையை அறுக்க துணிந்த சமயத்திலும் அவரது உணாவு வேறு மாதிரி இருந்திருக்க முடியாது.

இபுறாகீம் நபியின் குணத்தை பெறுவதற்காகத்தான குர்பானியை பெருமானார் வலியுறுத்தினார்கள்

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ   - إبن ماجة 3118
இபுறாகீம் நபியின் சுன்னத்து என்ன?

·         தெளிவான அறிவு -  மந்தை தனமாக செல்லாமல் சுயமாக யோசித்தார்.
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ(76)فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنْ الْقَوْمِ الضَّالِّينَ(77)فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَاقَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ(78)

உறுதியான முடிவு

وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِي فِي اللَّهِ وَقَدْ هَدَانِي وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ(80)وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(81)

அல்லாஹ்வுக்கு இணை வைக்க நீங்கள் பயப்படாத போது; உங்களால் செய்யப் பட்ட சிலைகளை நான் அஞ்சுவேனா?

இன்றைய காலகட்ட்த்தில், போலிச் சாமியார்களை அடையாளம் கண்ட பிறகும் கூட மக்கள் –( படித்தவர்கள், உயர் பதவியில் இருந்தவர்கள்) – அவர்களை விட்டுவருவதில்லை.

அப்படியானால் இபுறாகீம் நபியின் உறுதி எத்தகையது?

அசைக்க முடியாத நம்பிக்கை
ஒரு உறுதியான முடிவுக்கு வந்த பிறகு அவர் அதில் அலாதியான பற்றையும் பிடிப்பையும் வெளிப்படுத்தினார்.
நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்தை எதிர்கொண்டார்.

உதவி வேண்டுமா என ஜிப்ரயீல் (அலை)  கேட்ட போது: எனது இறைவன் எனக்கு உதவுவான் என்றார்.

நெருப்புக் குண்டத்தில் விழுவதற்கு முன் காற்றில் அவர்கள் உடல் தொங்கிக் கொண்டிருந்த        போது ஜிப்ரயீல் (அல) அவர்கள் சென்று, இப்ராஹீமே, ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க, உங்களிடமிருந்து அந்த உதவி வருவதாக இருந்தால் வேண்டாம் என்று இப்ராஹீம் (அலை) கூறினார். எனக்கு உத்தரவு கொடுத்தால் நான் மழையைக் கொண்டு வருவேனே என்று மழைக்கான வானவர் அங்கலாய்த்தாகவும், ஆனால் அதற்குள் அல்லாஹ்வின் கட்டளை முந்திக் கொண்டது என்றும் இப்னு அப்பா() , ஸயீத் இப்னு ஜரீரும் கூறுகின்றனர். (கஸ்ஸுல் அன்பியா – இப்னு கதீர்)  .  

இபுறாகீம் (அலை) கவனில் கட்டப் பட்டு நெருப்பில் எறியப் பட்ட போது அவர் ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் அல்லாஹ் எனக்கு போதுமானவன். பொறுப்பேற்றுக் கொள்ளச் சிறந்தவன் அவனே! என்று உச்சாடணம் செய்து கொண்டிருந்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். (புகாரி 4563)

عَنْ ابْنِ عَبَّاسٍ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ أُلْقِيَ فِي النَّارِ

அர்ப்பணிப்பு – தியாகம்
அசைக்க முடியாத நம்பிக்கையின்  வெளிப்பாடாக சகல விதமான இறைக்கட்டளைகளுக்கும் நபி இபுறாகீம் கட்டுப்பட்டார்.

அவருக்கு பல்வேறு விதமான சோதனைகளை கொடுத்த்தாகவும் அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றதாகவும் குர் ஆன் கூறுகிறது.

وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

وفي الموطأ وغيره عن يحيى ابن سعيد أنه سمع سعيد بن المسيب يقول: إبراهيم عليه السلام أول من اختتن وأول من ضاف الضيف وأول من قلم أظفاره وأول من قص الشارب وأول من شاب فلما رأى الشيب قال: يا رب ما هذا؟ قال وقار قال: يا رب زدني وقارا

இந்த நாகரீகங்களை அவர் முதன் முதலாக நடை முறைப் படுத்திய போது அது ஒரு கடும் சோதனையாக இருந்த்துஅதனால் தான்இக்கடமைகளை  கொண்டு இறைவன் இபுறாகீமை சோதித்த போது அவர் அவற்றை நிறைவேற்றினார்என்று குர் ஆன் கூறுகிறது.

அவரது  அர்ப்பணிப்பின் உச்சம் தான் மகனை அறுக்கத் அவர் துணிந்த்து.

குர்பானி என்பது காசு பணத்தை செலவளித்து  ஆடடை அறுப்பது மடடுமல்ல. இபுறாகீம் அலை அவாகளது உணர்வை – நடைமுறைகளை சுன்னத்துகளை –நினைவில் கொள்வதோடு அத்தகைய அர்ப்பணிப்புகளுக்கு குறைந்த படச அளவிலாவது நாம் தயாராக வேண்டும்.

ஒரு சமூகத்தில் எந்த அளவு தியாக உணாவு மேலேங்கி இருக்கிறதோ அந்த அளவே அதனுடைய நாகாகம் முதிர்ச்சியடைகிறது.

நீச்சல் தெரியாத ஒருவர் கிணற்றில் விழுந்துவிட்டார். ஆந்த வழியாக வநத ஒருவர் உடனடியாக நீரில் குதித்து அவரை காப்பாற்றினார். வருக் நன்றி சொன்ன மனிதர் அத்தாடு நிற்காமல்  உங்களுக்கு பரிசாக ஒரு 50 காசு தரலாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் பாருங்கள் என்னிடம் ஒரு ரூபாய் நாணயம்தான் இருக்கிறது. என்றார். மற்றவர் அவரை மீணடும் கிணற்றிலேயே தள்ளிவிட்டு இன்னும் ஒரு முறை காப்பாற்றுகிறேன் ஒரு ரூபாயாக கொடுத்து விடுங்கள் என்றாராம் .

தியாக உணர்வு குறைகிற போது மனித சமூகம் தனது உயரிய மதிப்புகளை இழந்து விட நேரிடும்.

ஓரு சமூக அமைப்பில் ஒன்றினைந்து வாழ்கிற போது சில சமயஙகளில் நமது விருப்பங்களை விட அடுத்தவாகளின் விருப்பத்திற்கும் நமது தேவைகளை விட அடுத்தவாகளின் தேவைக்கும் நாம் முன்னுரிமை தர வேணடியது வரும்.

ந்த சமயங்களில் நாம் தியாக உணாவை கைகொள்ள தவறினால் நமது மானுட உணாவு கேலிக்குரியதாகி விடும்

தியாக உணாவுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளும் ஒரு பாசறையாக ஹஜ்ரத் இபுறாகீம் அலை அவாகளது வரலாறு இருக்கிறது. 

வல்ல இறைவன் மனிதாகளது எந்த அர்ப்பணிப்புக்கும் உரிய மாயாதையை கொடுக்காமல் இருப்பதில்லை.நபி இபுறாகீம் அலை அவாகளின் தன்னிகரற்ற தியாகச்செயல்களுக்கு பாசாக அவரது ஒவ்வொரு அசைவையும் காலம் தோறும் மனித சமூகம் கடைபிடிக்க வேணடிய கடமைகளாக அல்லாஹ் ஆக்கியமைமைத்தான்.

அவை ஹஜ்ஜின் நடைமுறைகளாக இன்று பரிணாம்ம் பெற்றிருக்கின்றன்.

இறைவனுக்காக செய்யப்ப்டுகிற எந்த ஒரு தியாகமும் உயர்ந்த மரியாதையை பெற்றுட்தரும் என்பதற்கான நிதர்சணமான சாட்சிகள் அவை. 

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்


3 comments:

  1. Jackson Abdullah......3:14 AM

    Alhamthulillah......

    Zasakallahirunm........

    ReplyDelete
  2. Anonymous6:28 AM

    .அஸ்ஸலாமு அலைக்கும்
    மவுலானா! உருக்கமான உரை!عيدكم مبارك
    عيد مبارك

    ReplyDelete
  3. We appriciate your fantastic thoughts illuminating the discourses of Allah and the merciful sayings of Rasoolallah SAWS regarding the asymmetrical sacrifice of Abul Ambiya Hadrath Ibrahim ASWS and his cute family, I have utilized your article and barrowed your thoughts and presented them with your views in my Eidul Adha Sermon today at VOC Park Eidgah - Erode. Thanks a lot for you and pray for your good efforts to be accepted by Allahu SWT. Amin. Eid Mubartak to you and your beloved family. Kazi Kifayathullah Baqavi.

    ReplyDelete