வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, April 27, 2011

o1 ஒழியட்டும் மனித வழிபாடு!

முஸ்லிம்களின் மீதான தார்மீக கடமைகளில் ஒன்று. உலகில் ஷிர்க்கை ஒழிக்கப் பாடுபடுவது.
மது, வட்டி, ஆபாசத்திற்கு எதிராக போராடுவது போல
இணை வைத்தல் என்பது இறைவனுக்கு செய்கிற அநீதியாகும்
திருக்குரானில் சொல்லப் படுகிற ظلم   என்ற சொல்லுக்கு شرك என்பதே பிரதான பொருளாகும்.
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمْ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ ( الأنعام 82

عن عبد الله قال لما نزلت هذه الآية "الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم" شق ذلك على الناس فقالوا يا رسول الله أينا لم يظلم نفسه؟ قال إنه ليس الذي تعنون ألم تسمعوا ما قال العبد الصالح "يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم" إنما هو الشرك.

நம்முடைய் வீட்டுக்கு,  நம்முடைய காருக்கு இன்னொருருவன் உரிமை கொண்டாடினால் எப்படி கோப்ப்படுவோம்? எப்படி அதை மீட்க முயற்சி செய்வோம்? அல்லாஹ்வுடைய உரிமையில் கைவைப்பதை கண்டும் காணாமல் இருந்து விடுவதா?       

சாயிபாபவின் மரனம் – அதற்கு தர்ப்பட்ட் முக்கியத்துவம்  இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களது கடமையை நினவூட்டுக்கிறது. அவர்களுக்கு எவ்வளவு கடினமான பணி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

சாயிபாபாவின் மரணம் உணர்த்தும் உண்மை

மனிதன் கடவுளாக முடியாது.
எனக்கு மரணமில்லை என்றூம் 94 வயதில் மரணம் என்றும் கூறிய பாபா 85 வயதில் இறந்து போனார்.
சாயிபாவை இழந்து உண்மையிலேயே வாடும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம், இன்னொரு உண்மையையும் யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சாயிபாபாவைப் பற்றி அவரது தகிடுதித்தங்களைப் பற்றி அவரது அவரிடம் ம்குவிந்து கிடக்கிற செல்வத்தைப் பற்றி அவரது ஆசிரமத்தை மூடியிருக்கிற மர்மங்களைப் பற்றி பக்கம் பக்கமாய் வீடுயோ ஆதாரங்களோடு எழுதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தந்திரக்கார்ர் என்றும் ஒரு காலத்தில் பத்ரிக்களி ஏசின.

வரின் 30 ஆண்டு காலச் சர்ச்சைகள் குறித்தான உண்மைகளைப் பிபிசி தொகுத்து வெளியிட்டது. இவர் மீது பல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களும். சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றங்கள் வரைச் சூழ்ந்துள்ளன..

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது.

பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு விலகிக்கொண்டது.

அமெரிக்கத் தூதரகம்  அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால் தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும்

சூன் 6,1993 அன்று சாய் பக்தர்களும் ஆசிரமவாசிகளுமான நான்கு இளைஞர்கள் புட்டபர்த்தியில் உள்ள சத்தியசாயி பாபாவின் இல்லத்தினுள் கத்திகளுடன் நுழைந்து கொலை செய்ய முயன்றனர். சத்திய சாயிபாபா தப்பி குரல் எழுப்பினார். தொடர்ந்த எழுந்த கலவரத்தில் அவரது இரு பணியாளர்கள், சமையற்காரரும் ஓட்டுநரும், கொலையுண்டனர். அத்துமீறிய நால்வரும் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து சாயிபாபா இந்தியக் காவல்துறையால் விசாரிக்கப்படவில்லை

அன்று ஏசிய பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று அவரை பெரிய புனித மனிதராக காட்டிக்கொண்டிருக்கின்றன. காரணம். அவரது சேவைகள்.

Medicare -  என்ற அவரது நிறுவனம் பல நாடுகளில், பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது

Aquacare எனும் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுதீககரீக்கப்பட்ட குடிநீரை சத்திய சாயி மத்திய அறக்கட்டளை வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாதது. ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல கூடிநீர் கிடைத்த்து .

சென்னை மக்களின் தாகத்தை தீர்கக கிருஷ்ணா கால்வ்வாயை சீர் செய்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கியது.

மக்கள் பணி செய்வது சிறந்த கடவுள் பணி  என்பதில்  சந்தேகம் இல்லை.

ஆனால் இந்தச் சாமியார்கள் மக்கள் மக்கள் பணி செய்வதன் பின்னணியை  கவனிக்க வேண்டும்.

தந்திரமாக மக்களை ஏமாற்றுவது, அதன் மூலம் முறைகேடாக திரளும் பண்ம். சட்ட மீறல்கள். கொலை கற்பழிப்புக்கள் என ஒவ்வொரு சாமியாருக்குப் பின்னாலும் பல குற்றச் சாட்டுக்கள் உண்டு.

சாமியார்களிடம் சக்தி இருக்கிறதோ இல்லையே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் சட்ட்த்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் ஆசிரம்ங்களை காவல் துறையும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அணுகாமல் இருப்பதற்கான கேடயமாகவே இந்தச் சாமியார்கள் மக்கள் சேவை என்ற ஆயுத்த்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஐ ஏ எஸ படித்த அதிகாரிகள் ,நீதிபதிகள் உடந்தையாக இருந்து திட்டம் வகுந்த்துக் கொடுக்கின்றனர்.

சாயிபாபா உட்பட இன்று வளர்ந்து வந்திருக்கிற மாதா அமிர்தானந்த மாயி மேல்மருவத்தூர் அம்மா பால் தினகரன் போன்ற பலரும் இந்த திட்ட்த்தின் படியே சமூக சேவர்களாக வலம் வருகின்றனர்.

இந்த்ச சாமியார்கள் அரசாங்கத்தையும் மக்க்ளையும் ஏமாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களிடம் ஏமாந்து போகிற கோடிக்கணகான மக்க்ளை குறித்து தான் அதிகம் கவலைப் பட வேண்டியிருக்கிறது. அவர்கள் அப்பாவிகள். கல்மிஷமற்றவர்கள். அவர்களை மீட்டெடுப்பதும் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதும் உண்மையான ஆன்மீக வாதிகளின் கடமையாகும்.   

சாயிபாபா மரணமடைந்துள்ள இந்த நேரம்தான் அவரின் கோடானு கோடி பக்தர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமான நேரம் .

சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அத்தனை நோய்களும் நிகழ்வுகளும் பாபாவை தொந் திரவு பண்ணின.

அவ்ருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்து. தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive Care Unit)வைத்து தீவிரமாக சிகிச்சை  அளிக்கப் பட்ட்து.   இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் மருத்துவர்கள் அறிக்கைகளைக் கொடுத்தனர். பக்தர்களும்  மருத் துவமனையின் வெளியில் கூடி காப்பாற்றுங்கள்! சாயிபாபாவைக் காப்பாற்றுங் கள்! என்று ஆர்ப்பாட்டம்  செய்தனர். வெளி நாட்டு மருத்துவ நிபுணர் களை ஏன் அழைக்கவில்லை என்று குமுறினர்

சாயிபாபாவின்   ஆசி  தீராத நோய்களை யெல்லாம் தீர்த்து வைக்கும் வெளிநாடுகளில் உள்ள நோயாளிகளைக்கூட, நேரில் பார்த்து ஆசீர்வாதம் செய்யாமலேயே குணப் படுத்தும் தெய்வீகத் தன்மை அவருக்கு  என்று பத்ரிகைகள் எல்லாம் ஏற்றிப் போற்றியதுண்டே - அவை எல்லாம் உண்மைதானா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.

மற்றவர்களுக்கு ஏற்படும் புற்று நோயைக்கூட தன் பார்வையால் குணப்படுத்துவ தாகக் கூறும் பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா? செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாமா? என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு  ஏற்பட்ட குடலிறக்க நோய்க்குக் கோவாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சண்டே இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியனார் .சில வருடங்களுக்கு முன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. சாயிபாபாவை சிலர் கொலை செய்ய முயன்ற போது அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக் கொண் துண்டு.

அவர் சில வித்தை களைக் (Magic) கற்று வைத்துக் கொண்டு, அவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கியவர் என்பதை மட்டுமே நிஜம். அவர் கடவுள் அல்ல. இதை பக்தர்கள் சிந்தித்து உணரவேண்டும்   

கடவுள் யார் என்று யோசிப்பதற்குரிய சில வழிகளை திருக்குர் ஆன் கூறுகிறது.

·         படைத்தன்
·         உல்கம் இருக்கும் வரை அதை முழுவதுமாக நிர்வகிப்பன்
·         மனிதனுக்குண்டான குறைகளுக்கு அப்பாற்பட்டவன்.


إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
உலகை படைத்து அதன் அனுவிலும் அனுவான நடைமுறைகளில் தனது நிர்வாகத்தை செலுத்துபுவனே ரப்பு என்று இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.

ரப்பு என்ற படைத்து நிர்வகிப்பவன் என்று பொருள் . கடவுளின் இலக்கணம் அது.

அதனால் தான் திருக்குர் ஆனும் முஸ்லிம்களும் அதை அதிகமாக பயன்படுத்து கிறார்கள்.

கடவுள் மனிதனுக்குரிய குறைகளிலிருந்து அப்பாற்பட்டவன் என்பதை ஆயத்துல் குர்ஸீ விளக்குகிறது.
لا يأخذه سنة ولا نوم

குறி சொல்பவர்களை கடவுளாக்கிவிடும் இய்ல்பு பாமரத்தனமானது. படித்தவர்கள் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் எஸ் கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமானது.  திருக்குர் ஆன் அடிக்கடி சுட்டிக் காட்டும் செய்தி

وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن

தங்களது சமய நம்பிக்கையை விளையாட்டக கருத்தும் மக்களை குர் ஆன் பல் இட்த்திலும் கண்டிக்கிறது.
الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمْ الْحَيَاةُ الدُّنْيَا

ஒரு தனிமனிதன் இறைவனை எப்படி தேடுவது என்பதற்கு நபி இபுறாகிம்ம் ஒரு உதாரணம். இபுறாகீம் நபி தியாகத்திற்க்கு மட்டுமே முன்னுதாரனம் அல்ல.

தூய தெளிந்த சிந்தனைக்கும்சரியான க்டவுளைத் தேடும் உண்மையான் ஆன்மீகத்திற்கும் அவர் ஒரு முன்னோடி

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ(76)فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنْ الْقَوْمِ الضَّالِّينَ(77)فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَاقَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ(78)إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ(79)وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِي فِي اللَّهِ وَقَدْ هَدَانِي وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ(80)وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(81)الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمْ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ(82)وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ(83)

ஆச்சரியமான மனித ஆற்றலைப் பார்க்கும் மக்கள் அது இறைவனின் அருள் என்று நினைக்க் வேண்டுமே தவிர அந்த மனிதனை இறைவன் என்று கருதக் கூடாது. ஆனால் இந்த விபத்து வேதம் கொடுக்கப் பட்ட மக்களிலேயே கூட நிகழ்ந்திருக்கிறது.

யூதர்கள்  உஸைரையும் கிருத்துவர்கள் ஈஸாவை இறவனின் மக்ன் என்றும் பேசினர்.

அதிக மன்ன சக்தியும் அறிவாற்றலையும் கொண்ட ஒரு மனிதனை இரண்டு இதயம் கொண்ட்வர் என்று சிலர் போற்றினர்.அதை கூட குர் ஆன் மறுத்துரைத்த்து.
مَا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ

தனி மனிதர்களின் ஆற்றலுக்காக அவர்களை அதிகப் படியாக புகழ்வது இந்த தீய எல்லையில் கொண்டு வந்து விடுகிறது.

சாயிபாபாவின் மரணம் முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்க! அதே நேரம் அவர்க்ளது கடமையைப் பற்றிய நினைவூட்டலுமாகும்.

முஸ்லிம்கள் தனிமனித வழிபாட்டுக்கு ஆளாக கூடாது. அதை மற்ற்வர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி ஷிர்க்கை அகற்ற பாடுபட வேண்டும்.

Thursday, April 21, 2011

பொய் வெளிச்சத்தில் புனித வெள்ளி


புனித வெள்ளி : திருக்குர்ஆனின் பிரகடணம் ஈஸா மரிக்கவும்மில்லை மறுபடி உயிர்த்தெழவுமில்லை

وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا(156)وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا(157)بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا(158)

இன்றைய நாளை புனித வெள்ளி என்று கிருத்துவர்கள் அனுஷ்டிக்கிறார்கள். அரசு விடுமுறை

ஈஸா (அலை) பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள மற்றுமெரு அறிய வாய்ப்பு இது  

புனித வெள்ளியன்று  ஏசுசிலுவையில் அறையப் பட்டார். மூன்று நாட் கழித்து ஈஸ்டர் சண்டே அன்று உயிர்தெழுந்தார். என்று கிருத்துவர்கள் கூறுகிறர்கள்.

ஒவ்வொரு புனித வெள்ள்யின் போதும் இஸ்லாமின் பிரகடணம் உலகிற்கு சொல்லப் பட வேண்டும்.  

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள்

கிருத்துவர்கள் ஏசு என்று சொல்கிற மனிதரைத்தான் நாம் ஈஸா நபி என்று சொல்கிறோம்.

கிருத்து

ஏசு என்ற சொல்லோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கிருத்து என்ற சொல் மஸீஹ் என்ற வார்த்தையின் இலத்தீன மொழி பெய்ர்ப்பாகும். மஸீஹ் என்ற் வார்த்தையை கிருத்துவர்கள் மோசியா (Messiah) என்கின்றனர். அவர்களது அகராதிப்படி அதற்குயூதர்கள் தாங்கள் எதிர்பார்த்த வருங்கால அரசர் என்பது பொருளாகும். மோசியா என்பது எபிரேயச் சொல்லாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 500 வருடங்களுக்கு ஜெரூஸலத்தில் பிறந்த முன்னதாக வந்த இறைத்தூதரான அவ்ர் யூதர்களுக்கு நபியாக அனுப்ப்ப் பட்டார்.

அன்றைய காலகட்ட்த்தில் ரோமானிய அரசாட்சியின் கீழ் வாழ்ந்த ஜெரூசலமின் யூதர்கள். ஒரு நபியை ஒப்புக் கொண்டு இறைவனுக்கு கட்டுப்படுகிற மனோ நிலையில் இருக்க வில்லை. ஒரு கட்ட்த்தில் நபி என்று வருகிறவர்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.  அந்தச் சூழ்நிலையில் ஈஸா அலை தன்னை நபி என்று பிரகடணம் செய்து அதிசயங்கள் பல செய்து காட்டிய போது அவரை கொல்வதற்கு பல வகையிலும் முயன்றார்கள். அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் ஈஸா வை பாதுகாத்து வந்த்தால் அவர்களது திட்டம் எதுவும் பலிக்க வில்லை.

கடைசியில் யூதர்கள் அவரை தேசதுரோகி என்றும் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார் என்றும் ரோமானியர்களிடம் காட்டிக் கொடுத்து அவருக்கு மரண தணடனை கிடைக்க தங்களது சக்தி முழுவதையும் பிரயோகித்தனர்.

தன்னைச் சுற்றி பின்னப் படுகிற சதி வலைகளைப் பற்றி அறிந்த ஈஸா அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினார், எந்த நிலையிலும் அவர் பாதுகாகப் படுவார், எதிரிகள் அவரை நெருங்க முடியாது என அல்லாஹ் வாக்களித்தான். கைது செய்யப் பட்ட அவர் சிலுவையில் அடித்து மரண தண்டனை வழங்கப் படுவதற்கு முன்பாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான். ஈஸா யார் என்பதை உறுதியாக அறிந்திராத அன்னியர்களா ரோமப் படையின் வீர்ர்கள் ஈஸாவை காட்டிக் கொடுத்த மற்றொருவனை பிடித்துச் சென்று கழுவிலேற்றி சிலுவையில் அறைந்து கொன்றனர். அவன் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர் என்று புலம்பிய படியே இறந்து போனான்.

ஈஸா அலை உலக இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வருவார்.

عن أَبي  هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ   - بخاري 2476  

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلَابِيِّ قَالَ   ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ فَقَالَ ثُمَّ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ  - ابوداوود 5233

இறுதி வேதமான குர் ஆனின் போதனைகளை போதிப்பார். தஜ்ஜாலை கொலை செய்வார். அவரது மரணத்திற்குப்பின் முஹம்மது (ஸ்ல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கிற அதே மதீனாவின் மக்பராவில் ஆயிஷா (ரலி)  வீட்டில் நல்லடக்கம் செய்யப் படுவார் என்பது ந்ம்முடைய அழுத்தமான நம்பிக்கையாகும்

இதை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும். இதை நம்ப மறுத்தால் அல்லது இதற்கு மாற்றமாக நம்பினால் அது ஈமானை பாதிக்கும்.

என்வே தான் புனித வெள்ளி யன்று முஸ்லிம்கள் தங்களது ஈமானிய் அடிப்ப்ட்டையை நினைவு படுத்திக் கொள்ள க்டமைப் பட்டிருக்கிறார்கள்.

புனித வெள்ளியின் கருத்தை திருக்குர் ஆன் அழுத்தமாக மறுக்கிறது.

ஈஸா மரிக்கவில்லை. சிலுவையில் அறையப் படவில்லை. மீண்டும் உயிர்த்தெழவும் இல்லை.

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا(158)
ஈஸாவுக்கு அச்சுறுத்தல் அதிகமான போது அல்லாஹ் ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

மற்ற இறைத்தூதர்களை பூமியின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு குடியேற்றிய அல்லாஹ் ஈஸா பூமியிலிருந்து வானுலகிற்கு ஹிஜ்ரத் செய்ய வைத்தான்.

அவரை காப்பாற்றுவதாக அவருக்கு கொடுத்த வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றினான்.
إِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنْ الَّذِينَ كَفَرُوا

مُتَوَفِّيكَ என்றால் உனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று பொருள்.
தனது இறைவன் தன்னை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான. ஆகவே கவலைப் பட வேண்டாம் என்று ஈஸா தன்னுடைய தோழர்களிடம் கூறீய செய்தி பைபிளில் உள்ளது.

ஈஸா அலை அறிந்து கொள்ள உதவும் ஒரே ஆதரப்பூர்வமான நூல் குர் ஆன் மட்டுமே!

ஈஸாவின் வாழ்வை மூடியிருந்த பல புதிர்களை விடுவித்த ஒரே வேதம் திருக்குர் ஆன் மட்டுமே!

திருக்குர் ஆன் தான் ஈஸாவின் தாயாரை புனிதவதி என்று சான்றளித்த்து.
وَأُمُّهُ صِدِّيقَةٌ
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنْ الْقَانِتِينَ
ஈஸாவின் பிறப்பு ரக்சியத்தைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொன்ன ஒரே வேதம் குர் ஆன் மட்டுமே!

குர்ஆனில் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் பெயர் 5 இடத்தில் ஈஸாவின் பெயர் 25 இடத்தில் சொல்லப் பட்டுள்ளது

ஆயிஷா கதீஜாவின் (ரலி)  பெயரில் ஒரு அத்தியாயம் இல்லை ஆனால் மர்யம் பெயரில் ஒரு அத்தியாயம், ஈஸாவின் குடும்ப வரலாறு ஆலி இமரான் என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.  

ஈஸா (அலை) அவர்க்ளைப் பற்றி கிருத்துவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருக்குர் ஆன் அவரைப் பற்றியும் அவரது தாயாரப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

திருக்குர் ஆனை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஈஸா நபியின் வரலாற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஈஸா பற்றி கிருத்துவரான மைக்கேல் ஹார்டின் கருத்து
  • ·         ஏசுவின் வாழ்க்கை குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை ஐயத்திற்கிடமாக உள்ளன.
·         அவருடைய இயற் பெயர் கூட என்னவென்று தெரியவில்லை.
·         அவர் பிறந்த ஆண்டு கூட உறுதியாகத் தெரியவில்லை.
·         கீ.மு ஆறாம் நூற்றாண்டில் அவர் பிறந்திருக்கலாம் என்றுதான் கூறுகின்றனர்.
·         அவர் இறந்த ஆண்டு அவருடைய சீடர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது கூட இன்று நிச்சயமாகத் தெரியவில்லை.
The hundred – micheal H.Hart l   

வெளிப்படையாக கேள்விப்பட்ட்தை வைத்து மாத்திரமே ஈஸா கொல்லப் பட்ட்தாக கிருத்துவர்கள் நம்புகிறார்கள், 

இறைவன் காப்பாற்றுவதாக தனக்கு வாக்களித்திருக்கிறான் என்று அவர் சொன்னதை கிருத்துவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.  

சிலுவையி அறைய்ப் பட்டவன்ஏலி லாம சபக்தானி என் இறைனே என்னை ஏன் கைவிட்டீர் என்று புலம்பியதாக கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நபி இப்படி கூறுவாரா என்று கிருத்துவர்கள் சிந்தித்தும் பார்க்கவில்லை.  

பெரும்பாலான சர்ச்சுகளில் இயேசுவின் உருவச்சிலைக்கு மேல் இந்த வாசகம் எழுதப் பட்டுள்ளது.

கிருத்துவர்கள் இந்த வார்த்தையின் மூலம் ஏசுவை கேவலப்படுத்தவே செய்கிறார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய் உணமைய அறியாமல், பவுல் அடிகள் என்பவர்  சொன்ன செய்திகளையே உணமை என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலே திருக்குர் ஆன் அவர்களை சத்திய வழிய தவற விட்டோர் الضالين  என்று கூறுகிறது.

அல்லாஹ் எல்லாவகையான வழி கேட்டிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!