வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 27, 2012

முஸ்லிம் பயனுள்ள மனிதர்


முஸ்லிம் ஒரு பயனுள்ள மனிதர்.
அந்தப் பயன் எந்த அளவு உயர்வானது என்பதற்கு பெருமானார் சொன்ன உதாரணம். பேரீத்த மரம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ فَحَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ هِيَ النَّخْلَةُ

வெள்ளிரிப் பிஞ்சுமுத்தினால் பயனில்லை
பாவக்காய்- பழுத்தால் நல்லதில்லை
மாம்பழம் பழம்காய்ந்து போனால் உதவாது.

பேரீத்த மரம்  எல்லா நிலையிலும் வகையிலும் பயன்.
பிஞ்சு, காய், பழம் மரம் மட்டை

بركة المسلم عامة في جميع الأحوال , ونفعه مستمر له ولغيره حتى بعد موته
وشبه النخلة بالمسلم في كثرة خيرها , ودوام ظلها , وطيب ثمرها , ووجوده على الدوام , فإنه من حين يطلع ثمرها لا يزال يؤكل منه حتى ييبس , وبعد أن ييبس يتخذ منه منافع كثيرة , ومن خشبها وورقها وأغصانها , فيستعمل جذوعا وحطبا وعصيا ومخاصر وحصرا وحبالا وأواني وغير ذلك , ثم آخر شيء منها نواها , وينتفع به علفا للإبل

பேரீத்தம் பழத்தின் கொட்டை ஒட்டகைகளுக்கு உணவாக பயன்படுகிறது.

முஸ்லிம் அந்த அளவு பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

அதனாலாயே எந்த சிறு நல்லகாரியத்தையும் அலட்சியமாக விட்டு விடக்கூடாது என்று சமுதாயத்திற்கு பழக்கப் படுத்தினார்கள்.

عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحْقِرَنَّ أَحَدُكُمْ شَيْئًا مِنْ الْمَعْرُوفِ وَإِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ أَخَاهُ بِوَجْهٍ طَلِيقٍ وَإِنْ اشْتَرَيْتَ لَحْمًا أَوْ طَبَخْتَ قِدْرًا فَأَكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ -  ترمذي 1756 

சாலையில் கிடக்கும் சிறு இடையூறை அகற்றுவது ஈமானின் ஒரு அம்சமாக சொல்லப்பட்டது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ-  مسلم- 51  

இந்த நபி மொழியின் தாக்கம் அலாதியானது. முஸ்லிம் சமுதாயத்தைப் பக்குவப்படுத்தியதிலும் நாகரீகப்படுத்தியதிலும் மிகப் பெரிய பங்கு வகித்தது.

சாலையில் வாழைப்பழத்தோல் ஒன்று கிடக்கிறது என்றால் அதைப் பார்த்துக்கொண்டே நகர்ந்து விட ஒரு முஸ்லிமை அவருடைய மனசாட்சி விடாது.

இதில் இன்னொரு முக்கிய அம்சம்.
முஸ்லிம் வாழைப்பழத்தோலை சாலையில் போட மாட்டார்.

எவ்வளவு உன்னதமான தனி மனிதக் கோட்பாட்டை பெருமானார் பழக்கப் படுத்தினார்கள்.

முந்தைய முஸ்லிம்கள் நன்மைகான வழிகளை தேடித்தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள்.  சிரியாவைச் சார்ந்த தாபிஃ ஹஸ்ஸான் பின் அதிய்யாவைப் பாருங்கள்.  

عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعُونَ خَصْلَةً أَعْلَاهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلَامِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِمَاطَةِ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَنَحْوِهِ فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً

இப்படித்தேடித்தேடி நனமை செய்த்துதான் முஸ்லிம்களின் வரலாறு.

சிலுவை யுத்தங்களின் போது முஸ்லிம் நாடுகளை ஆக்ரமித்து அக்கிரமம் செய்த கிருத்துவர்களிடம் சுல்தான சலாஹுத்தீன் அய்யூபி நடந்து கொண்ட விதம். தமது சொந்தக்கார கிருத்துவர்களை விட இந்த முஸ்லிமே மேல் என்று கிருத்துவ உலகம் திரும்பி வந்த்து.

பாலஸ்தீனிலிருந்து  பத்திரமாக வெளியே கிருத்துவர்களுக்கு அனுமதியளித்தார்.
கிருத்துவர்கள் தமது தோல்வியை ஒப்புக் கொண்டதின் அடையாளமாக வெறும் 10 திர்ஹம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என உத்தரவிட்ட அவர். அவர்களில் பல்லாயிரம் பேருக்கான பணத்தை தானே கட்டினார். தன்னைச் சார்ந்தவர்களைக் கட்டச் சொன்னார்.
நடக்க இயலாதவர்களுக்கு கழுதைகளை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டார்.

பாலஸ்தீனிலிருந்து கிளம்பிய கிருத்துவர்களுக்கு திரிபோலியிலிருந்த கிருத்துவர்கள் அடைக்கலம் தரவில்லை. கோட்டைக் கதவுகளை மூடிக் கொண்டார்கள். பசியோடும் பட்டினியோடும் குழந்தைகளோடும் பெண்களோடும் வந்தவர்களை கேட்டைக்கு வெளியே பரிதவிக்க விட்டார்கள்.
பலர் இறந்து போனார்கள். மீதமிருந்தவர்கள் சுல்தான் சலாஹுத்தீனிடமே செல்வோம் என்று திரும்பி வந்தார்கள். அவர்களுக்கென்றே ஒரு உரை தயார் செய்து கொடுத்தார் அய்யூபி.

இது முஸ்லிம் சமுதாயத்தை முஹம்மது நபி பக்குவப்படுத்திய விதம்,

கிருத்துவ ஐரோப்பிய உலகம் இன்று வரை ஏன் இப்போதும் கூட நெகிழ்ச்சியாக நினைவு கூறுகிற செய்தி இது.  

இப்படித்தான் முஸ்லிம் சமுதாயம் பக்குவப்படுத்தப் பட்டிருந்த்து. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்கள் தங்களது உன்னதமான இயல்புகளால் உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் பலவீனங்களில் ஒரு முக்கிய அம்சம்.

மனித சமூகத்திற்கு நன்மையாக அமைகிற காரியங்களை பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்கிற இயல்பு குறைந்து விட்டது. ஏன் இல்லாமலே போய்விட்ட்து என்று கூட சொல்ல்லாம்.

அன்னதானம் செய்கிற முஸ்லிம்களைக் காணோம். நேர்மையாக நடந்து கொள்கிற முஸ்லிம்களை காணோம். இரக்கப்படுகிற, இனிமையாகப் பேசுகிற, உபகாரம் செய்கிற, உண்மையாக வாழ்கிற முஸ்லிம்களை காணோம்.  

ஒரு சில நல்ல காரியங்களைச் செய்தாலும் அதில் தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கம் அல்லது அமைப்புக்கு பெயர் தேடித்தருவதற்காக செய்கிறார்கள்.

பிரதிபலனை எதிர்பாராமல் எல்லோருக்கும் பொதுவான நல்ல காரியங்களில் உழைக்க முஸ்லிம்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.

فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين(25)


اجر ما سقيت لنا    என்ற வார்த்தையை மூஸா (அலை) விருமவில்லை என்று தப்ஸீர்கள் காட்டுகின்றன. ஏதாவது வேலை கிடைக்கும் என்று தான் அந்தப் பெண் மணீக்குப் பின்னால் சென்றார்கள்.

அந்த இயல்புதான் நிராதவராக இருந்த அவருக்கு அப்போதும் அதற்குப் பின்னரும் பெரும் வெற்றியை தந்தது.

அல்லாஹ் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்வதற்குரிய ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்.

நமக்கு மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கிறோமே தவிர நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதில்லை.

பள்ளி வாசலுக்கு சென்று  நான் பேன் போடக்கூடாதா? என்று சண்டை போடுகிற நாம், மின்சாரத்திற்கு எவ்வளவு கொடுத்திருப்போம் என்று யோசிப்பதில்லை.

அப்துல்லாபின் ஜைத் வழியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு பாங்கு கிடைத்த்து. அந்த நன்மைக்கு கிடைத்து பலன் என்ன தெரியுமா யார் பாங்கு சொன்னாலும் அப்துல்லாபின் ஜைத் இகாமத் சொல்லலாம்.

பயனுற வாழ்வதற்கான பலன் இது,

நான் ஒரு பயனுள்ள முஸ்லிம் என்று வாழ உறுதியேற்போம்.


Thursday, September 20, 2012

ஒரு முக்கிய அறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டும் நோக்கில் மற்றொரு காட்டூன் பிராண்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

பிராண்ஸ் அரசிற்கு முறைப்படியான எத்ர்ப்பை இஸ்லாமி நாடுகள் கூட்டமிப்ப்ன் தலைவர் தெரிவித்துள்ளார்.


இத்தகைய கயவர்கள் தங்கள்து அடையாளட்த்தை வெளிப்படுத்துகிறார்க்ள் என்பதே இதன் பொருளாகும். அவர்கள் அதற்குரிய தக்க தண்டனையை பெறுவார்கள்.

நமது நபி (ஸல்) அவர்களை பின் பற்றுவதில் நாம் இன்னும் அக்கறையோடும் கவனத்தோடும் நடந்து கொள்வோம் என்பதே இந்த இழி பிறவிகளுக்கு நாம் தெரிவிக்கும் சரியான பதிலாகும்.


அதே நேரத்தில்  பெருமானாரை வெளிப்ப்படையாக பழித்துக் கூறும் எவரையும் முஸ்ல்ம் சமூகம் விட்டு வைக்காது . உங்களது கருத்தை உங்களது வழியில் தெரிவித்தீர்கள் எனில் எங்களது கருத்தை எங்க்ளது வழியில் தெரிவிப்போம் என்பதே முஹம்ம்து (ஸல்) அவர்கள் விசயத்தில் உலக முஸ்லிம்களின் முடிவாகும்.

முஹம்மது நபியை அவமத்திக்கும் செய்லை கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் ஏற்க முடியாது.     அதற்கான பின் விளைவு மோசமானதாகத்தான் இருகும். அது தாகத்தைபோல இயல்பான உணர்வின் வெளிப்பாடு என்று மேற்குலகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

மனித நல்லிணக்கத்த குலைக்கும் வகையில் செயல்படும் இத்தகைய சக்திகளுக்கு எதுவும் நேர்ந்தால்  குய்யோ முற்யோ என்று மேற்கத்திய உலகம் புலம்பக்கூடாது.. 

பெருமானாரை அவமதிக்கும் சக்திகளை நேரடியாக அணுக முடியாத சூழ்நிலைய்ல் வாழும் முஸ்லிம்கள் தங்க்ள்து பகுதியின் அமைதிக்கு பிரச்சினை எழாதவாறு கணடனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தால் போதுமானது.

பெருமானார்ன் புகழை எந்தச் சக்தியாலும் ஒரு போதும் குறைப்படுத்த முடியாது.



ஹஜ் பயணிகள் கவனிக்கவும் 2



இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது.
முதல்  விமானம் பாகிஸ்தனிலிருந்து 329 பயணிகளுடன் மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான் நிலைய்த்தில் புதன்கிழமை தரையிரங்கியது.
இந்த ஆண்டு 65 ஆஆயிரம் இந்திய ஹாஜிகளுக்கு அஜீஜிய்யாவில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஹஜ் கமிட்டி முலம் பயணம் செய்யவுள்ள 125000 ஹாஜிகளுக்காக 479 கட்டிடங்க தயார் படுட்தப்பட்டுள்ளதாகவும்       மற்ற அனைத்து ஏற்பாடுகௌம் திருப்தி அளிக்கும் வித்த்தில் உள்ளதாகவ்ம் இந்திய ஹஜ் கமிடியின் தலைவி முஹ்ஸீனா கித்வாய் அறிவித்துள்ளார்
சாமாண்ய ஹாஜிகள் தங்குவதற்கான புதிய பகுதியா உருவாக்கப் பட்டிருக்கிற அஜீஜியா விலிருந்து  ஹாஜிகளை அழைத்துச் செல்வதற்காக அதிகப்படியான பஸ்கள் இயக்கப்க்கப்பட  வுள்ளத்தகவும் 70 நிற்த்தங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக்வும் அதிகாரிகள் தெரிவித்தனர்ர்.
.இந்த ஆண்டு ஹாஜிகளுக்கு பெட்சீட்டுகள் தலையணை உரைகள் பக்கெட்டுகள் மக்குகள் பாத்ரூம் கழுவும் பிரஸ்க்ள் வழங்க புதிய ஏஜென்ஸியை நியமித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
அதே போல இந்த ஆண்டு பயணம் புறப்படுவதற்கு முன்னதாக ஹாஜிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப் பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறையடியார்கள் சுமர் 40 லட்சம் பேர் ஓரிட்த்தில் ஒரே மாதிரி ஆடையில் ஒரே கோஷத்தோடு ஒரே உணர்வோடு ஒன்று கூடும் பக்திப் பெருவிழா ஹஜ்.

உலகின் மிகப்பெரிய மக்கள் திரட்சி என்று ஊடகங்கள் குறிப்பிடுகிற மக்கள் கூட்ட்த்தில் இணைந்து கொள்ள முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் எங்கும் இருந்து கூட்டம் கூட்டமாக ஹாஜிகள் கிளம்பி வருகின்றனர். 

அல்லாஹ்வின் கிருபையால இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்ட்து.

ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.

عن أَبي هُرَيْرَةَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ -  النسائي

அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.

ஹாஜீகளை வழியனுப்புவோம். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்

استودع الله دينك وامانتك وآخر عملك وزودك الله التقوي ويسرلك الخير حيث كنت

அவர்களிடம் நமக்காக துஆ செய்யுமாறு கேட்போம்.
பெருமானார் (ஸல்) உம்ரா செய்ய அனுமதி கேட்ட உமர் ரலியிடம் துஆ செய்ய கோரினார்கள்.


ஹஜ்ஜுக்கு புற்ப்படுகிறவர் கவனிக்க் வேண்டிய அம்சம்.
நிய்யத் முக்கியம்
எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் எனற எண்ணத்தி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்
.
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم: ‏يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة وأوسطهم للتجارة وقراؤهم للرياء والسمعة وفقراؤهم للمسألة

பெரும் பணம் செலவழித்து உடல் சிரமங்களை தாங்கி நிறைவேற்றும் ஒரு வணக்கம் அற்ப நோக்கங்களல் பயனற்றதாகி விடக் கூடாது.


நான் அல்லாஹ்விற்காக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.

ஹஜ்ஜுக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இரவு நேரத்தில் தனிமையில் அல்லது தஹஜ்ஜது தொழுது விட்டு உட்கார்ந்து கொண்டு நான் ஏன் ஹஜ்ஜுக்குப் போகிறேன்எனற் கேள்வியை தமக்குள் கேட்டுக் கொள்ள் வேண்டும்


ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.

1.       மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்
2.       நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல்
3.   நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.

ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.

ஹாஜி கவனம் செலுத்த வேண்டிய இரண்டாவது விசயம்  தவ்பா
ஹாஜி அன்று பிறந்த பாலகனாகவே நீடிக்க வேண்டுமெனில் எனில் முன்னதாக ஒரு முடிவுக்கு வர இது வரை செய்து வந்த தவறுகளை இனிமேல் செய்ய மாட்டேன். என்று உறுதியேறக வேண்டும்.

அதனால் ஹஜ் பயணத்திற்கு முந்தைய தவ்பா என்பது முக்கியமானது.
தவ்பா இப்படி அமைவ்வது பொருத்தமானது. .

اللهم إني اتوب إليك لا ارجع إليها أبدا اللهم مغفرتك اوسع من ذنبي ورحمتك ارجي عندي من عملي

·         பெற்றோர்களிடம் தெரிவிப்பதும் அவர்களை கவனிக்க தக்க ஆட்க்ளை ஏற்படுத்துவதும் முக்கியம்.
கடன் உள்ளிட்ட மற்ற பொறுப்புக்களை மற்றவர்களிடம் தெரிவித்து ஒப்படைத்து வேண்டும்.


கடந்த வருடத்தலைப்பு 
 ஹஜ் பயணிகள் கவனிக்கவும்