வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 31, 2013

இஸ்லாத்தின் அடையாளம் வன்முறை அல்ல.


இஸ்லாம் எப்படி அறிமுகமானது?  எவ்வாறூ பின்பற்றப்பட்ட்து?

சமாதானம் மற்றும் அமைதி வழியில் மட்டுமே இஸ்லாமிய பிரச்சாரம் நடை பெற்றது. இன்னும் குறிப்பாக சொல்வதானால் இஸ்லாமி வலியுறுத்திய உயர்ந்த  பண்பாட்டு கூறுகளே இஸ்லாமின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

மக்காவின் மக்கள் பெருமானாரை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நேரத்தில் மதீனாவிலிருந்து வந்து பலர் இஸ்லாமை தழுவினர். அவர்கள் எந்த அடிப்படையில் இஸ்லாமை தழுவினர் என்பதை வரலாறு சொல்கிறது.

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنِّي مِنْ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَلَا نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ وَلَا نَنْتَهِبَ وَلَا نَعْصِيَ  بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ   - البخاري 6873

முஹம்மது நல்லதை சொல்கிறார் என்றே மக்கள் அவரை பின்பற்றினர். சண்டைக்கு அழைக்கவில்லை. சச்சரவு செய்ய நினைக்கவில்லை. யார் வம்புக்கும் போவதில்லை என்பதே பெருமானாரை மக்கள் நம்புவதற்கு முதல் காரணமாக இருந்தது.

அபீஸீனியாவில் அடைக்கலம் பெற்றிருந்த முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டுவதற்காக மக்காவிலிருந்து திட்டமிட்டு வந்த மக்கவின் தலைவர் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ வும் அம்ருப் பின் ஆஸூம் நஜ்ஜாஸீ மன்ன்னிடம் இவர்கள் எங்களது மார்க்கத்திலும் இல்லை. உங்களது மார்க்கத்திலும் இல்லை. புதுமையாக ஒன்றை சொல்கின்றனர். இவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றனர். அப்போது அவர்களிடம் விசாரிக்காமல் ஒப்படைக்க முடியாது என்று கூறிய நஜ்ஜாஷி முஸ்லிம்களிடம் உங்களுடை தீன் என்ன என்று கேட்ட போது ஜாபர் பின் அபீதாலிப் தீனுக்கு அற்புதமான விளக்கம் சொன்னார். இஸ்லாமிற்கு சொல்லப்பட்ட விளக்கங்களில் இதை விட உன்னதமான சொற்கள் வேறு இல்லை.

قال  النجاشي : «ما هذا الدين الذي أنتم عليه؟ فارقتم دين قومكم ولم تدخلوا في يهودية، ولا نصرانية»،[21][22] فكان الذي كلمه جعفر بن أبي طالب، فقال له:
أيها الملك، كنا قوماً أهل جاهلية، نعبد الأصنام، ونأكل الميتة، ونأتي الفواحش، ونقطع الأرحام، ونسيء الجوار، ويأكل القوي منا الضعيف، فكنا على ذلك، حتى بعث الله إلينا رسولاً منا، نعرف نسبه وصدقه وأمانته وعفافه، فدعانا إلى الله لنوحده ونعبده، ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دونه من الحجارة والأوثان، وأمرنا بصدق الحديث، وأداء الأمانة، وصلة الرحم، وحسن الجوار، والكف عن المحارم والدماء، ونهانا عن الفواحش، وقول الزور، وأكل مال اليتيم، وقذف المحصنات، وأمرنا أن نعبد الله وحده، لا نشرك به شيئاً، وأمرنا بالصلاة والزكاة والصيام، فصدقناه وآمنَّا به، واتبعناه على ما جاء به من الله، فعبدنا الله وحده، فلم نشركْ به شيئاً، وحرمنا ما حرم علينا، وأحللنا ما أحل لنا، فعدا علينا قومنا، فعذبونا، وفتنونا عن ديننا، ليردونا إلى عبادة الأوثان من عبادة الله تعالى، وأن نستحل ما كنا نستحل من الخبائث، فلما قهرونا وظلمونا وضيقوا علينا، وحالوا بيننا وبين ديننا، خرجنا إلى بلادك، واخترناك على من سواك، ورغبنا في جوارك، ورجونا أن لا نظلم عندك أيها الملك
فقال له النجاشي: «هل معك مما جاء به عن الله من شيء؟»، فقال له جعفر بن أبي طالب: «نعم»، فقال له النجاشي: «فاقرأه علي»، فقرأ عليه صدراً من سورة مريم: Ra bracket.png كهيعص Aya-1.png ذِكْرُ رَحْمَةِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا Aya-2.png إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا Aya-3.png La bracket.png، إلى الآيات: Ra bracket.png وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا Aya-16.png فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا Aya-17.png قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا Aya-18.png قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا Aya-19.png La bracket.png.[24]
قالت: فبكى والله النجاشي حتى اخضلت لحيته، وبكت أساقفته حتى أخضلوا مصاحفهم حين سمعوا ما تلا عليهم، ثم قال النجاشي: «إن هذا والذي جاء به عيسى ليخرج من مشكاة واحدة، انطلقا، فلا والله لا أسلمهم إليكما، ولا يكادون

காதிஸிய்யா போர்க்களத்தில் பாரசீக படைத்தளபதி ருஸ்துமிடம் முஸ்லிம் படைவீர்ர் பேசிய வீரம் தழும்பும் சொற்களில் நன்மைக்கு அழைக்கும் தொனியே மிகைத்திருந்த்து.

. فقال رستم: إئذنوا له، فأقبل  وهو ربعي بن عامر فقالوا له: ما جاء بكم؟ فقال: الله ابتعثنا لنخرج من شاء من عبادة العباد إلى عبادة الله، ومن ضِيق الدنيا إلى سعَتَها، ومن جَوْر الأديان إلى عدل الإِسلام، فأرسلنا بدينه إلى خلقه لندعوهم إليه؛ فمن قبل ذلك قبلنا منه ورجعنا عنه، ومن أبى قاتلناه أبداً حتى نفضيَ إلى موعود الله، قالوا: وما موعودُ الله؟ قال: الجنة لمن مات على قتال من أبى، والظفر لمن بقي

இஸ்லாம் பண்பாட்டின் வழியே பரப்பப் பட்டது. முஸ்லிமுக்கு அடையாளமாகவும் பண்பாட்டுக் கூறே சொல்லப்பட்டது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَسَمَ بَيْنَكُمْ أَخْلَاقَكُمْ كَمَا قَسَمَ بَيْنَكُمْ أَرْزَاقَكُمْ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُعْطِي الدُّنْيَا مَنْ يُحِبُّ وَمَنْ لَا يُحِبُّ وَلَا يُعْطِي الدِّينَ إِلَّا لِمَنْ أَحَبَّ فَمَنْ أَعْطَاهُ اللَّهُ الدِّينَ فَقَدْ أَحَبَّهُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُسْلِمُ عَبْدٌ حَتَّى يَسْلَمَ قَلْبُهُ وَلِسَانُهُ وَلَا يُؤْمِنُ حَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ قَالُوا وَمَا بَوَائِقُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ غَشْمُهُ وَظُلْمُهُ وَلَا يَكْسِبُ عَبْدٌ مَالًا مِنْ حَرَامٍ فَيُنْفِقَ مِنْهُ فَيُبَارَكَ لَهُ فِيهِ وَلَا يَتَصَدَّقُ بِهِ فَيُقْبَلَ مِنْهُ وَلَا يَتْرُكُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ إِنَّ الْخَبِيثَ لَا يَمْحُو الْخَبِيث  - احمد 3490

முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம்களோடு சண்டைக்கு வராத முஸ்லிமல்லாதவர்களின் மரியாதையும் பாதுகாப்பும்.   

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا-        البخاري6914 

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ  من آذي ذميا فقد آذاني


அநீதி இழைக்கப்பட்ட திம்மிகளுக்காக வாதாடும் வக்கீலாக மறுமையில் என்னைக் காண்பீர்கள் என்றார் பெருமானார்

அதனால் முஸ்லிம்கள் எந்த பகுதியை வென்ற போதும் அன்பு சமாதானம் பொறுமை மூலமே மக்களை அணுகினர்.

ويقول المؤرخ الإنجليزي السير توماس أرنولد في كتابه "الدعوة إلى الإسلام": " لقد عامل المسلمون الظافرون العرب المسيحيين بتسامح عظيم منذ القرن الأول للهجرة ، واستمر هذا التسامح في القرون المتعاقبة ، ونستطيع أن نحكم بحق أن القبائل المسيحية التي اعتنقت الإسلام قد اعتنقته عن اختيار وإرادة حرة ، وإن العرب المسيحيين الذين يعيشون في وقتنا هذا بين جماعات المسلمين لشاهد على هذا التسامح ".

முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுவதை திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ  المائدة 8

அதனால் வன்முறையோ தீவிரவாதமோ முஸ்லிம்களுக்கு ஒரு போதும் தெரியாது. உலகின் மொத்த வரலாறும் இதற்கு சாட்சி.

தற்கொலை தாக்குதல் – அப்பாவிகளை கொல்லுதல் – நம்பிக்கைகும் மோசம் செய்தல் – ஆக்ரமித்தல் – கட்டிடங்களை உடைத்தல் எதுவும் இஸ்லாமின் வழிமுறை இல்லை.

؛ فقد جاء في وصيّة الرسول صلى الله عليه وسلم لجيش مؤتة: "ولا تَقْطَعَنَّ شَجَرَةٍ وَلا تَعْقِرَنَّ نَخْلا ولا تَهْدِمُوا بَيْتًا

இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்த்து. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளுமேயாகும்.

யூதர்கள் - மேற்கத்திய சக்திகளின் எல்லை மீறிய அக்கிரமங்கள் காரணமாகவே முஸ்லிம்கள் அவர்களுடைய வழிமுறைகளை கையாண்டு அவர்களுக்கு பதிலளிக்க நேர்ந்த்து.

முஸ்லிம்களின் வன்முறை போக்கிற்கு காரணத்தை சுட்டிக்காட்ட வேண்டுமெனில அமெரிக்காவையோ மேற்குலகத்தையோ தான் சுட்டிக்காட்ட வேண்டும். இது இஸ்லாமின் சுன்னத்தோ நபியின் சுன்னத்தோ அல்ல. அமெரிக்காவினுடையதும் மேற்குலக நாடுகளுடை சுன்னத்தாகும்.

உலகின் எந்தப் பகுதிய்லும் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று கேள்விப்பட்டால் அதில் எதிர்ப்பாளர்களின் பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தேடிப்பார்த்தால் முஸ்லிம்களின் குற்றம் எந்த வகை சார்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எதிர்கள் கொடுக்கும் வன்மமான நீதியற்ற நிர்பந்தமே முஸ்லிம்களை வன்ம்மான நடைமுறைகளை கையாளுமாறு 20 ம் நூற்றாண்டிலும் 21 ம் நூற்றாண்டிலும் முஸ்லிம்களை தூண்டியுள்ளது.

ஆப்கானிய தாலிபான்கள். பாலஸ்தீன புரட்சியாளர்கள். இராக்கிய மக்கள் என யாரையும் குறை சொல்வதற்கு முன் அவர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளை பற்றியும் பேசுகிறவர்களே நியாயவான்களாக நீதி பேசுபவர்களாக இருக்க முடியும்.

தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கி இருக்கும் திரைப்படம் ஒரு பக்கமாக அமெரிக்கர்களை நல்லவர்களாகவும் தாலிபான்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறது.

இந்த திரைப்படம் அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறையின் ஏற்பாட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது.

திரு கமல்ஹாசன 2011 ம் ஆண்டு இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்டை அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளார். (தந்தி தொலைக்காட்சியில் மணியன்)

இப்படம் தயாரிப்பதற்கான உதவிகள் கருவிகள் துணைச் சாதன்ங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

கமல் ஹாசன் திரையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிறந்த நடிகரே! இந்தப் பட்த்தினால் தான் தான் திவாலாகப் போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

திரு கமல் ஹாசன் இப்படத்தை தயாரிப்பதற்கு முன்னரே பெரும் நஷ்ட்த்தில் தான் இருந்தார்.  இவரிடம் பேசினால் எங்கே கடன் கேட்டு விடுவாரோ என்று அஞ்சியே திரைப்பட்த்துறையை சார்ந்த அவருடை சகாக்கள் அவரிடமிருந்து விலகி இருந்தனர்.  

முஸ்லிம்களை இழிவு படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு உதவி செய்தால அதில் கிடைக்கிற இலாபத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

இந்தப் படத்தை டி டி எச்சில் வெளியிடுவதற்கு அவர் பெரு முயற்சி செய்ததும்
அவருடை சதித் திட்டமே!  

தாலிபான்கள் தொழுது விட்டு குர் ஆன் வசன்ங்களின் பின்னணியில் குற்றம் புரிவதாக காட்டுகிற கமல் ஹாசன் அதை தடுக்கிற முஸ்லிமாக வருகிற அவர் தொழுவது போல ஓரிடத்திலாவது காட்டினாரா?  அமெரிக்க இராணுவ வீர்ர்கள் சர்ச்சில் பிரார்த்தனை செய்து விட்டு பைபிளை கையில் வைத்துக் கொண்டு தினசரி பைபிள் படித்து விட்டுத்தான் அப்பாவி மக்கள் மீது உலகின் மிக மோசமான ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். அதை எல்லாம் கமல் காட்டினாரா?  உலக் அரங்கில் போராடுகிற முஸ்லிம்களின் ஒரு பிரிவினரை மட்டுமே மதத்தோடு தொடர்பு படுத்தி விட்டு இந்திய முஸ்லிம்களை நான் குறை சொல்ல வில்லை என்று பேசுவது ஏமாற்றும் நடிப்பின் உச்சமாகும்.

கமல் ஹாசனின் திரைப்பட்த்தை முஸ்லிம்கள் எதிர்க்க காரணம் அவர் சம்பாதிப்பதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கியதே ஆகும்.

இது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை உண்ராமல் இருந்து விட்டால் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்!

அதனால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த திரப்பட்த்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தை ஆளும் அரசு முஸ்லிம்களின் இந்த உணர்வை புரிந்து பட்த்திற்கு தடை விதித்திருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை முஸ்லிம்களின் உள்ளத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றியிருக்கிறது. இந்த நாட்டில் நமது கருத்தையும் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியை கொடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க முஸ்லிம்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் முஸ்லிம் சமூகத்தில் அரசியல் புரோக்கராக இருக்கிற கோனிகா பஷீர் என்பவரும் காங்கிரஸ் எம்பி ஹாரூனும் தேவையற்று இந்த விச்யத்தில் தலையிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளனர், ஒரு தலைமையின் கீழ் அணி திரண்டு முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையில் கீழறுப்பு வேலை செய்கிற இத்தகையவர்களை அடையாளம் கண்டு சமுதாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். இவர்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். வேதனையிலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் அசிங்கமான பிறவிகள் இவர்கள்.

முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சி இருக்கிறதா? அது முஸ்லிம்களுக்கு தேவையா என்ற கேள்வியும் இந்தக் கட்டத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி வழக்கப் படி முஸ்லிம்களை கழுத்தறுக்கிற வேலையை இப்போதும் செய்திருக்கிறது. முஸ்லிம்களை புண்படுத்துகிற ஒரு திரைப்படத்தை அந்த ஆட்சியின் பொறுப்பில் இருக்கிற மத்திய சென்சார் போர்டு பொறுப்பில்லாமல் அனுமதித்திருக்கிற போது அதை கவனிக்காமல் பட்த்திற்கு மாநில அரசு தடை விதித் திருப்பதை மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி குறை கூறுகிறார்.

குற்றப்பத்ரிகை என்ற திரைப்பட்த்தை வெளியிட அனுமதி மறுத்த சென்சார் போர்டை கையில் வைத்திருந்தவர்கள் இந்தப் பட்த்திற்கு அனுமதி கொடுத்த்திற்கு வெட்கப்படாமல், அதை ஆதரித்துப் பேசுவது கேடுகெட்ட அரசியலாகும்.

இந்தப் படம் குறித்து தீர்ப்பு என்ன வாக வந்தாலும் முஸ்லிம்கள் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போல முஸ்லிம்களை மட்டுமே ஒரு தரப்பாக குற்றம் சாட்டுகிற வகையில் திரைப்படங்கள் வெளிவராத வகையில் திரைப்பட தணிக்கை வாரியம் திருத்தி அமைக்கப்படுவதற்கு போராட வேண்டும். தான் செத்து இந்திய அரசியலை சாகடித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியை இதற்காக உளுக்க வேண்டும்.

இப்போதைக்கு, கடந்த காலங்களில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக அவமதிக்கும் திரைப்படங்களை தயாரித்தவர்களையும் அதில் இடம் பெறும் நியாயமற்ற காட்சிகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக தயாரித்து தமிழகத்திலுள்ள சினிமா கலைஞர்களிடம் கொடுத்து தொடர்ந்து இவ்வாறு நீங்கள் செயல்படுவது நியாயமா? இவ்வாறு செயல்படுப்வர்களுக்கு துணை போவது சரியா என்று கேட்க வேண்டும்.

இறுதியாக கண்டிப்பாக ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு விசயம் ஒரு திரைப்படம் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப் படுத்துகிற என்பதற்காக இந்த தகவலகளை நாம் பரிமாறிக் கொண்டோம்.

ஆபாசங்கள் நிறைந்த திரைப்படம் பார்ப்பதும் அதை பரப்புவதும் மார்க்கம் தடை செய்திருக்கிற விசயம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


  

Thursday, January 24, 2013

விசுவரூபம் ஒரு விளக்கம்


விசுவரூபம் ஒரு விளக்கம்
 திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது.

எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன,

இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது.

கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.

அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது.  பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது.

கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும்பாதிக்கப்படுவார்கள்

ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இலட்சியத்த்லைவரும் அவரது நம்பிக்கைகுரிய சமுதாயமும்



وَمَنْ يُطِعْ اللَّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقًا  -  النساء 69
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين
: "ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسولُهُ أَحَبَّ إليه مما سِوَاهما، ويُحِبَّ المرء لا يُحِبُّهُ إلا لله، وأن يَكْرَهَ أن يعود في الكفر، بعد أن أنقذه الله منه، كما يكره أن يُقْذَفَ في النار"،

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் தலைவர். வழிகாட்டி,

இந்த உலகில் வேறெந்த ஒரு சமூகத்திற்கும் அதன் தலைவருக்கும் இருக்கிற நெருக்கத்தையும் தொடர்பையும் விட முஸ்லிம்களுக்கும் முஹம்மது நபி ஸல்) அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமும் தொடர்பும் ஆழமானது.

ஒரு முறை  عاصم بن ثابت رضي الله عنه அவர்களின் தலைமையில் எதிரிகளை பற்றி செய்தி அறிந்துவருவதற்காக 10 நபர்களை பெருமானார் அனுப்பி வைத்தார்கள். இது பற்றி அறிந்து கொண்ட    بني لحيـان  குலத்தினர் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான ஒரு போராட்டத்திற்குப் பிறகு அப்போது 2 பேர் மட்டும் கைதிகளாக சிக்கினர். அவர்களை மக்காவின் காபிர்களுக்கு விற்று விட்டனர். அந்த இருவரில் ஒருவர் زيد بن دثنة

மக்காவின் தலைவர் அபூசுப்யான் அவரை கட்டி வைத்து கொல்வதற்கு முன் அவரிடம் கேட்டார். உன்னுடைய இடத்தில் முஹம்மது இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு வார்த்தை சொல் உன்னை விட்டு விடுகிறேன் என்றார்.
فيقول أبو سفيان له أترضى أن يكون محمد مكانك لأضرب عنقه قال لا والله لا أرضى أن تصيبه شوكة في مكان وأنا في مكاني فقال أبو سفيان ما رأيت أحد يعظمه أصحابه كما يعظم أصحاب محمد محمد،

இது போல பல நூறு வரலாறுகள் உண்டு. இன்னும் ஒரு வரலாறு
உங்களைப் பார்க்காமல் இங்கே இருக்க முடியவில்லையே. நாளை சொர்க்கத்திலே நீங்கள் சொர்க்கத்தின் உயர்ந்த இட்த்தில் இருப்பீர்களே நாங்கள் என்ன செய்வோம் என்று க்லங்கினார்கள் நபித்தோழர்கள்

عن عائشة قالت جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله: إنك لأحب إلي من نفسي وأحب إلي من أهلي وأحب إلي من ولدي وإنى لأكون في البيت فأذكرك فما أصبر حتى آتيك فأنظر إليك وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين وإن دخلت الجنة خشيت أن لا أراك فلم يرد عليه النبي صلى حتى نزلت عليه ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا  

இந்த பரிசுத்தமான அன்பிற்கு காரணம். மனித சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைக்காகவும் அவர்களுடைய நல்வாழ்வுக்காகவும் ஈடு இணையற்ற வகையில் பங்காற்றியவர் பெருமானார்.

அவரது ஒரே இலட்சியம் மக்களை நரகிலிருந்தும் தீயபழக்க வழக்கங்களிலிருந்தும் பாதுகாத்து விட வேண்டும் என்பதே!

தனது பெறுமையை நிலை நிறுத்திக் கொள்வதோ, அதிகாரத்தை பெற்றுக் கொள்வதோ பெருமானாரின் நோக்கமாக ஒரு போதும் இருக்க வில்லை.

எத்தகைய கடுமையான எதிரியும் திருந்தினால் போதும் என்றே  பெருமானார் (ஸல்) நினைத்தார்கள். அதற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்கவும் செய்தார்கள். அவசரப்படவோ ஆத்திரப்படவோ இல்லை. இது முஹம்மது (ஸல்) அவர்களின் தனிப்பெரும் குண்மாகும். خلق عظيم  க்கு உதாரணமாகும்.

பனீ முஸ்தலக் யுத்தகளத்தில் வெற்றி பெற்று பெருமானார் திரும்பிய போது அதில் ஆத்திரமுற்ற வஞ்சகர்களின் தலைவன் மிக கேவலமான வார்த்தையில் பெருமானாரை ஏசினான். பெருமானாரையும் அவருடைய தோழ்ர்களையும் வெளியேற்றிவிடப்போவதாகவும் பேசினான். தோழர்கள் கடும் கோபமுற்றனர். வரிசையாக ஒவ்வொருவராக வந்து அவரைக் கொல்ல அனுமதி கேட்டனர்.  பெருமானார் அனுமதிக்க வில்லை. அவருடை மகன் நல்ல முஸ்லிமாக இருந்தார். அவர் வந்து வித்தியாசமாக ஒரு கோரிக்கை வைத்தார். நீங்கள் உத்தரவிட்டால் நான் என் தந்தையின் தலையை கொண்டு வருகிறேன். لو ششت لأتيت برأسهஎன்றார். ஆனால் வேறு யாருக்கும் அந்த அனுமதியை தரவேண்டாம் என்று கோரினார். பெருமானார் அனுமதித்தார்கள்.

غزوة بني المصطفلق،
 فقال (ابن سلول المنافق) : قد ثاورنا في بلادنا، والله ما مثلنا وجلابيب قريش هذه إلا كما قال القائل : سمن كلبك يأكلك، والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل-. أتي (عبد الله بن عبد الله بن أبي سلول) الصحابي الجليل، إلى الرسول (صلوات الله وسلامه عليه) فقال : يا رسول الله، إنه بلغني أنك تريد قتل (عبد الله بن أبي) فيما بلغك عنه، فإن كنت فاعلا فمرني به، فأنا أحمل إليك رأسه، () فوالله لقد علمت الخزرج ما كان لها من رجل أبر بوالده مني، إني أخشى أن تأمر به غيري فيقتله فللا تدعني نفسي أنظر إلى قاتل عبد الله بن أبي يمسي في الناس فأقتله، فأقتل مؤمنا بكافر فأدخل النار، فقال رسول الله صلوات الله عليه وسلامه (بل نرفق به ونحسن صحبته ما بقي معنا)
  
மிக ஆச்சரியமான இந்த நிகழ்வுக்கு பின்னால் உள்ள காரணம். ஒருவேளை இவரும் திருந்தி விட வாய்ப்பு வரக்கூடுமல்லவா என்பது தான்.

மக்கா வெற்றியின் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கிய பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு பெண்கள் ஆறு ஆண்களுக்கு மட்டும் மன்னிப்பு கிடையாது என்று அறிவித்தார். அவர்களில் ஒருவர் இகிரிமா பின் அபீஜஹ்ல்
அவருடை மனைவி உம்மு ஹக்கீம் இஸ்லாமை தழுவி தன் கணவருக்கும் அடைக்கலம் வேண்டும் என்று கேட்ட போது பெருமானார் சம்மதித்தார்.
மக்காவிலிருந்து தப்பி ஓடி கப்பலில் ஏறி கடலை கடந்து சென்று கொண்டிருந்த தன்னுடைய கணவரை உம்மு ஹக்கீம் அம்மையார் தனியாக வாடகைக்கு ஒரு படகை வைத்துக் கொண்டு போய் நடுக்கடலில் அவருடை படகோடு மோதவிட்டு அவரை அழைத்துக் கொண்டு வந்தார். இகிரிமா சிறந்த முஸ்லிமானார்.

யாரையும் விட்டு விட்த்தயாராக இல்லாத பெருமானாரின் எதிர்பார்ப்பு வீணாக வில்லை. இகிரிமா பிற்காலத்தில் தீனுக்காக அற்புதமாக பங்காற்றினார்.

போர்க்களத்தில்  தனக்கு தண்ணீர் தேவை என்ற போதும் அடுத்தவருக்கு தண்ணீர் கொடுக்க சொன்ன நபித்தோழர் யார் தெரியுமா இகிரிமா தான்.
ي يوم اليرموك أقبل عكرمة على القتال إقبال الظامئ على الماء البارد في اليوم القائظ شديد الحر، ولما اشتد الكرب على المسلمين في أحد المواقف نزل من على جواده وكسر غمد سيفه وأوغل في صفوف الروم فبادر إليه خالد بن الوليد وقال لا تفعل يا عكرمة فإن قتلك سيكون شديداً على المسلمين فقال إليك عني يا خالد فلقد كان لك مع رسول الله سابقة أما أنا وأبي فقد كنا من أشد الناس على رسول الله فدعني أكفر عما سلف مني ثم قال لقد قاتلت رسول الله في مواطن كثيرة وأفر من الروم اليوم إن هذا لن يكون أبداً.
ثم نادى في المسلمين من يبايع على الموت؟ فبايعه عمه الحارث بن هشام بن المغيرة وضرار بن الأزور في أربعمائة من المسلمين، فقاتلوا دون فسطاط خالد (أي مكان قيادة الجيش) أشد القتال وذادوا عنه أكرم الذود حتى أثخنوا جميعاً جراحاً، وأوتي خالد بعكرمة جريحاً فوضع رأسه على فخذه فجعل يمسح على وجهه ويقطر الماء في حلقه، ولقد أصيب عكرمة والحارث فدعا الحارث بماء ليشربه فلما قدم له نظر إليه عكرمة فقال ادفعوه إليه فلما قربوه منه نظر إليه عباس وكان قد أصيب معهم فقال ادفعوه إليه فلما دنوا من عباس وجدوه قد قضى نحبه.
   
மிகச் சிறந்த தூய இலட்சியத்தோடும் அக்கறையோடும் பெருமானார் (ஸல்) உருவாக்கிய முதல் முஸ்லிம் சமுதாயம் பெருமானாருடைய எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைகும் ஏற்பவே நடந்து கொண்ட்து. இந்தப் பெருமை வரலாற்றில் வேறெந்த தலைவருக்கும் கிடைத்த்தில்லை.

ஹுதைபிய்யா ஒப்பந்த்த்தின் போது உம்ரா செய்ய வந்த முஸ்லிம்கள் மக்காவிற்கு வெளியே தடுத்து நிறுத்தப் பட்டிருந்தனர். மக்காவின் தலைவர்களோடு பேச்சு நட்த்த உஸ்மான் (ரலி) அனுப்பப்பட்டார்.
அவர் சென்று சில நாட்கள் ஆன போது நபித்தோழர்கள் “ உஸ்மான் தவாபு செய்திருப்பார் “ என்று பேசிக் கொண்டனர். பெருமானார் “ நாம் தடுக்கப் பட்டிருக்கிற நிலையில் அவர் தவாபு செய்ய மாட்டார் என்றார்கள் அப்படியே நடந்த்து.

أن المسلمين قالوا وهم بالحديبية قبل رجوع عثمان من مكة: خلص عثمان من بيننا إلى البيت فطاف به، فقال رسول الله صلى الله عيه وسلم: ""ما أظنه طاف بالبيت ونحن محصورون"" قالوا: وما يمنعه يا رسول الله وقد خلص، قال: ""ذلك ظني به أن لا يطوف بالكعبة حتى يطوف معنا"" فرجع عثمان، فقال المسلمون: أشتفيت يا أبا عبد الله من الطواف بالبيت؟ فقال عثمان: بئس ما ظننتم بي، فو الذي نفسي بيده لو مكثت بها مقيمًا سنة ورسول الله صلى الله عليه وسلم مقيم بالحديبية ما طفت بها حتى يطوف بها رسول الله صلى الله عليه وسلم، ولقد دعتني قريش إلى الطواف بالبيت فأبيت، قال المسلمون: رسول الله صلى الله عليه وسلم كان أعلمنا بالله وأحسننا ظنًا"".
أخرجه ابن أبي شيبة في "المصنف" (14/442/443) برقم (18699) والبيهقي في "دلائل النبوة"

இன்றைய முஸ்லிம் உம்மத்தின் கடமை
நமது நல்வாழ்விற்காவே வாழந்து எல்லா வித்த்திலும் வழிகாட்டி மறைந்த பெருமானார் (ஸ்ல) அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள ஒவ்வொரு வகையிலும் நாம் முயல வேண்டும்.
நாளை மறுமையில் சொர்க்கத்தில் அவர்களோடு வசிக்க நமக்கு அது துணை செய்யும். அல்லாஹ் கிருபை செய்வானாக!