வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 27, 2013

ஆலிம்களின் தொடர்பு


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ

திருக்குர் ஆனின் ஒரு முக்கிய வழிகாட்டுதல் இது.
(وَأُوْلِي الْأَمْرِ) என்பதற்கு அறிஞர்கள் என்று أهل الفقه والدين  என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.)
அதனடிப்படையில் அல்லாஹ்வுக்கு ரசூலுக்கு அறிஞர்களுக்கு கட்டுப்படுவது அவசியம்.

இந்தக்கட்டுப்பாட்டை எந்த வரிசை முறையில் ஆரம்பிப்பது?
ரசூலுக்கு கட்டுப்படுவதுதான் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவது. இதில் முதன்மைப் படுத்தப் பட வேண்டியது ரசூலுக்கு கட்டுப்படுவதே!

ஒரு சஹாபி தொழுது கொண்டிருந்தார், அவரை பெருமானார் அழைத்தார்கள். அவர் தடுமாறினார். அல்லாஹ்வை தொழுவதா? பெருமானாரின் அழைப்பை ஏற்பதா?

முதலில் அல்லாஹ் தானே என்று  ஒரு வழியாக முடிவு செய்து தொழுதுவிட்டு பிற்கு பெருமானாரிடம் வந்தார். அவரை பெருமானார் கண்டித்தார்கள்,

عن أبي سعيد بن المعلى رضي الله عنه قال: كنت أصلي فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه حتى صليت قال: فأتيته فقال "ما منعك أن تأتيني؟" قال قلت: يا رسول الله إني كنت أصلي قال: ألم يقل الله تعالى: "يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم" ثم قال "لأعلمنك أعظم سورة في القرآن قبل أن تخرج من المسجد" قال: فأخذ بيدي فلما أراد أن يخرج من المسجد قلت: يا رسول الله إنك قلت لأعلمنك أعظم سورة في القرآن قال "نعم "الحمد لله رب العالمين" هي السبع المثاني والقرآن العظيم الذي أوتيته" وهكذا رواه البخاري

அல்லாஹ்வை பற்றிச் சொல்லித்தந்தவர் பெருமானார் தானே அதனால் பெருமானாரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவதன் வழியாகவே அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முடியும்.

அது போல தகுதிவாய்ந்த ஆலிம்களுக்கு கட்டுப்படுவதன் மூலம் தான் அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்பட முடியும்.

என்வே நாம் மார்க்கத்தில் விளக்கம் பெற தேவையான ஒரு ஆலிமை தேடிக் கொள்ள வேண்டியது நம்மில் ஒவ்வொருவரது கடமையாகும்.

·         அரபுக்கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடை பெற்று வருகின்றன.
·         நூற்றுக்கணக்கான புதிய ஆலிம்கள் சமுதாயத்திற்கு கிடைக்கிறார்கள்.
·         இவர்களை உச்சி முகர்ந்து நல் வாழ்த்துக்கள் கூறி வரவேற்க வேண்டியது சமுதாயத்தின் கடமை.
·         காரணம் அவர்கள் மார்க்கத்தின் சேவகர்கள்.
·         மார்க்கத்தின் மீது உங்களுக்கு இருக்கிற மரியாதையின் பொருட்டு நீங்கள் அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கான் மரியாதையை தெரிவியுங்கள். அவர்களுக்கான சரியான வாய்ப்புக்களை ஏற்படுத்துங்கள்.
·         சமுதாயம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ அப்படி அவர்கள் பயன்படுவார்கள்.
·         ஒரு மனிதர் பேனாவை முதுகு சொறிவதற்கு மட்டுமே பயன்படுத்தினால் அவருக்கு அது தார் குச்சியின் வேலையை மட்டுமே செய்யும்.

இன்றைய கால கட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் உயர் கல்வி படிப்பவர்களுக்கும் உதவித்தொகைகளும் பரிசுகளும் தாரளமாக வழங்கப் படுகின்றன. வரவேற்கப்பட வேண்டிய செய்திதான். அதே நேரத்தில் தீனின் சேவர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஆலிமின் தொடர்பில் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். தீனைப் பின்பற்றி வாழ்வதற்கு இது உதவிகரமானது. ஊக்கம் தரக்கூடியது




ياأيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين     التوبة /119

  "وكونوا مع الصادقين" أي مع الذين خرجوا مع النبي صلى الله عليه وسلم لا مع المنافقين. أي كونوا على مذهب الصادقين وسبيلهم.. وقيل: هم الذين استوت ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل, وصاحبها يقال له الصديق كأبي بكر وعمر وعثمان ومن دونهم على منازلهم وأزمانهم.

 சகவாசம் விளைவை ஏற்படுத்தக் கூடியது. விலங்குகளின் சகவாசம் கூட
·         வேகமாக நடக்கிற ஒருவருடன் நடந்தேன்வேகமாக நடக்க முடிந்தது
·         சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? சுறுசுறுபானவர்களுடன் இருங்கள்
·         அறிவாளியாக இருக்க வேண்டுமா அறிவாளிகளுடன் பழகுங்கள்
·         பக்தியாக வாழ பக்தியுள்ளவர்களுடன் பழகுங்கள்

நல்ல தொடர்புக்கு நமக்கு ஒரு ஆள் தேவைதான்!
ஆய்வுத் தேர்வு எழுதுபவர்கள் ( Mphil Phd போலஎவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும்   கைடு அவசியம். அது போல மக்களுக்கு ஒரு மார்க்க ஆலோசகரின் துணை அவசியமே!  

تفصيل لكل شيء  என்று பாராட்டப்பட்ட வேதம் தவ்ராத். அத்தகைய வேதம் கொடுக்கப் பட்ட மக்களுக்கு மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப் பட்டது,

·         تبيانا لكل شيء   பாராட்டப்பட்ட வேதம் குர்ஆன். அத்தகைய வேதம் கொடுக்கப் பட்ட சமுதாயத்திற்கு முஹம்மது (ஸல்) பின்பற்றுமாறு சொல்லப் பட்டது.
·         சஹாபாக்களுக்கு குர்ஆன் அருளப் பட்டது- அதே நேரத்தில் அவர்களைப் பரிசுத்தப் படுத்தும் பணியை பெருமானார் செய்வார் என்று சொல்லப் பட்டது.  ويزكيهم  
வேதம் மட்டுமே போதாது. வேத்த்தை செயல் படுத்திக் காட்ட ஒரு வழி காட்டி அவசியம்.
பரீட்சை எழுதிய மாணவன் எல்லாம் சரியாக எழுதிய்ருப்பதாகத்தான் சொல்லுவாநன் திருத்துபவருக்குத்தான் உண்மை தெரியும்
ஒரு வழிகாட்டி தான சரியான திருத்தத்தை நமக்கு கற்றுத்தர முடியும். 

سفيان الثوري  மிஅகப் பெரிய அறிஞர். நான்கு மதஹபுகளின் இமாம்களுக்கு நிகரான கருத்துச் செல்வாக்கு மிக்கவர்.

وقال علي بن الحسن بن شقيق عن عبد الله قال: ما أعلم على الأرض أعلم من سفيان. وقال بشر الحافي: كان الثوري عندنا إمام الناس. وعنه قال: سفيان في زمانه كأبي بكر وعمر في زمانهما
அவர் சொல்கிறார்.   அபுஹாஷிம் அஸ்ஸூபி இல்லை என்றால் முகஸ்துதியின் மெல்லிய இழைகளை என்னால்  அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது.


ஆலிம்களுடன் தொடர்பு என்பது அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது மட்டுமல்ல. அவர்களிடமிருந்து علم  ஐ தேடிக் கொள்வதாகும். அவர்களைப் பயன்படுத்தி தீனை தெரிந்து கொள்வதற்கு கூடுமானவரை முயற்சிப்பதாகும்.

தென்னாட்டுப் பேரொளி வேலூர் அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்கள் அவர்களைப் பார்ப்பதற்கு செல்கிறவர்கள் சும்மா பார்த்து விட்டு திரும்பினால் கடிந்து கொள்வார். நான் என்ன பொருட்காட்சியா? பார்த்து விட்டு திரும்புவதற்கு என்று கேட்பார். ஆலிம்களைச் சந்திக்கிற போது அவர்களிடமிருந்து மார்க்க விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்.

இன்றுள்ள சூழ்நிலையில் ஆலிம்களை மிகுந்த இரக்கத்தோடும் மக்கள் அனுக வேண்டும்.
அவர்களுடை பொருளாதார நிலையில் ஒரு தினசரி பேப்பர் வாங்குவது கூட சிரம்மானது.

நாட்டு நடப்புகளை இயல்பாக ஆலிம்களிடம் எடுத்துச் பேசினால மார்க்கத்தின் கருத்தை அவர்கள் சொல்வதற்கான சூழல் தாமாக ஏற்படும்.
உங்களுக்கு வாய்ப்பு இருக்குமெனில் நீங்கள் ஒரு பள்ளி வாசலின் பொறுப்பாளராக இருப்பீர்கள் எனில் தயவு கூர்ந்து உங்களது ஆலிம் அறிவு ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதற்கு உதவுங்கள்.

ஒரு ஆலிமுடன் தொடர்பு வைத்துக் கொள்ள இல்மீ அடிப்படையில் முயற்சிக்கும் போது பெரும்பாலும் அந்த தொடர்பு நன்மையாகவே இருக்கும்

நீங்கள் தேர்ந்த்டுக்கும் ஆலிம் விளம்பரத்திற்காக வேலை செய்பவரா? குழப்பத்தை உண்டு பண்ணுகிறவரா? என்பதை நீங்கள் கவனிக்க தவறக்கூடாது.

ஒரு சீடன் கனவு கண்டான், அதை க்ருவிடம் சொன்னான். குருவே உங்களது கையில் தேனும்  எனது கையில் அசிங்கமும் இருப்பது போல கனவு கண்டேன் என்று சொல்லி முடிக்க வில்ல. அதற்குள் குரு மிகவும் மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டு  சொன்னார். அதிலென்ன ஆச்சரியம். நீங்கள் உலகத்தை வைத்திருக்கிறீர்கள். நாங்கள் ஆன்மீகத்தை வைத்திருக்கிறோம்.

சீடன் சொன்னான். குருவே ! நான் கனவை சொல்லி முடிக்க வில்லை. உங்கள் கையில் இருப்பதை நாங்கள் சப்புகிறோம். எங்கள் கையில் இருப்பதை நீங்கள் சப்பிக் கொண்டிருந்தீர்கள். அதில் தான் நான் அதிர்ச்சி அடைந்தேன்.  

எனவே தேர்வு செய்து ஆலிம்களுடம் தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள்.
ஆலிம்களின் தொடர்பு நம் வாழ்வை தீன் மயப்படுத்தும்.

عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ وَمَا نَحْنُ لَوْلَا كَلِمَاتُ الْعُلَمَاءِ

ஒரு நல்ல முஸ்லிமுக்கு ஆலிமின் தொடர்பு எப்போதும் தேவைப்படும்.
நாளை மறுமையில் கூட.

சொர்க்க வாசிகள் இறைவா எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தந்து விட்டாய் என்று மகிழ்ச்சி பொங்க கூறுவார்கள். அப்போது அல்லாஹ் உங்களது ஆலிம்களிடம் சென்று இனி உங்களுக்கு என்ன தேவை என்று கேளுங்கள். என்பான் மக்கள் ஆலிம்களிடம் சென்று இனி நமக்கு என்ன தேவை என்று கேட்பார்கள். அல்லாஹ்வின் லிகா என்ற சந்திப்பு தேவை என்று ஆலிம்கள் சொல்லிக் கொடுப்பார்கள். பிறகு சொர்க்க வாசிகளுக்கு அல்லாஹ்வின் லிகா கிடைக்கும்.   

Sunday, June 23, 2013

பராஅத் இரவு

பராஅத் தொடர்பாக கீழே உள்ள முன்று இணைப்புக்களை பார்த்துக் கொள்ளலவும் .


பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றன, அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ் அரி, (ரலி) போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பரா அத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان  என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படிப்பட்ட ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித் அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ் களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சி செய்யலாம்.

பரா அத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும். 

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக சவூதியின் இமாம்கள் தொழுகையில் துஆ செய்கிறார்களே!  பரா அத்தை பித் அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா? 

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

பரா அத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்லஇதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்

பரா அத் பற்றிய நபி மொழிகள்:

ابن ماجة  

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144 


عن علي بن أبي طالب قال قال رسول الله   صلى الله عليه وسلم     إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر 

عن عائشة قالت   فقدت النبي   صلى الله عليه وسلم   ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن   الله تعالى   ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب    

  عن أبي موسى الأشعري عن رسول الله   صلى الله عليه وسلم   قال   إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن       

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر



சுன்னத்தும் பித்அத்தும்
பரா அத் - அல்லாஹ் மட்டுமே
நீண்ட ஆயுள் எப்படி வேண்டும் ?