வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 12, 2014

பராஅத் 2014



பராஅத் என்றால் நீங்குதல் - விலகுதல் என்று பொருள்.

இன்றைய தினம் மக்களில் பலருக்கு உயிர் ரிஜ்க் நீங்கி விடுதல் குறித்து அறிக்கை தயாரிக்கப்படுவதால் இன்றைய இரவுக்கு  பராஅத்தின் இரவு என்று சொல்லப்படுகிறது.

அரபு வழக்கத்தில் ஷஃபான் நடு இரவு என்று சொல்லப்படுகிறது. ஹதீஸ்களிலும் இந்த வார்த்தை தான் காணப்படுகிறது.

இந்த இரவின் சிறப்பு என்ன? அதற்கான காரணம் யாது?  இந்த இரவில் என்ன செய்ய வேண்டும் என்பவை இந்த ஐந்து ஹதீஸ்களில் சொல்லப்படுகிறது.

1.    وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث .  

2.    وعن عائشة عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما هذه الليل ؟ يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم . فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى . ثلاثا . قلت ولا أنت يا رسول الله ؟ فوضع يده على هامته فقال ولا أنا إلا أن يتغمدني الله برحمته . يقولها ثلاث مرات . رواه البيهقي في الدعوات الكبير .

3  وعن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن . رواه ابن ماجه .  
4.    ورواه أحمد عن عبد الله بن عمرو بن العاص وفي روايته إلا اثنين مشاحن وقاتل نفس .  

5.    وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا حتى يطلع الفجر . رواه ابن ماجه .  


பராஅத் இரவு பற்றிய இந்த 5 ஹதீஸ்களும் மிஷ்காத்தில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.

இந்த 5 ஹதீஸ்களுமே லயீப் வகையை சார்ந்த்தாகும்.

லயீபான ஹதீஸ் என்றால் அது தள்ளப்பட வேண்டியது என்று பொருளல்ல.

ஹதீஸ் கலை பற்றிய போதிய ஆராய்ச்சியறிவு இல்லாத சிலர் இத்தகைய ஹதீஸ்களைப் பற்றிய அலர்ஜியை மக்களிடம் ஏற்படுத்திவிட்டனர்.

ஹதீஸ்களில் மவ்ளூஃ என்றொரு வகை ஹதீஸ் இருக்கிறது. அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அது தான் தள்ளப்பட வேண்டியதாகும்.

லயீபான் ஹதீஸ் என்றால் அறிவிப்பாளரின் தரம் குறைவானது என்பதே பிரதான பொருளாகும்

ஒரு அறிவிப்பாளர் இளைமையாக இருக்கும் போது ஹதீஸின் அறிவிப்பில் ஒரு மாதிரி தகவலை தெரிவித்த பிறகு அவரே முதுமைப் பருவத்தில் அந்த அறிவிப்பை சற்று மாற்றிக் கூறீவிடுவாரெனில் அவருடை மனனத்திறன் குறைந்து விட்ட்து என்று கருதி அந்த ஹதீஸை லயீபானது என்று சொல்லி விடுவார்கள்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஒரே பெயருடைய இருவரை ஒப்பாய்வு செய்கிற போது மற்றவரை விட இவர் பலம் குறைந்தவர் என்று சொல்வார்கள். இதனால் இரண்டாமவர் அறிவிக்கிற ஹதீஸ் லயீபானது என்று சொல்லப்படும்.

ஒரு உதாரணத்திற்கு முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. 2597

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
திருக்குர் ஆனுக்கு அடுத்த நூல்களில் இரண்டாம் தரத்தில் இருக்கிற ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கிற இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள உமர் பின் ஹம்ஸா வை பலகீனமானவர் என்று கூறப்படுகிறது.
காரணம் இன்னொரு உமர் பின் ஜைதை உயர்ந்தவர் என்று காட்டுவதற்காக!
في إسناده: عمر بن حمزة العمري وهو ضعيف. قال الذهبي في الميزان بعد أن ساق له هذا الحديث: هذا مما استُنكر لعمر .
وتعقب ابن القطان عبد الحق الإشبيلي في "بيان الوهم والإيهام"
وعمر بن حمزة ضعفه ابن معين، وقال: إنه أضعف من عمر بن محمد بن زيد، وهذا تفضيل لعمر بن محمد بن زيد عليه فإنه ثقة -أعني عمر بن محمد-، فهو في الحقيقة تفضيل أحد ثقتين على الآخر

இன்னும் ஒரு விச்யத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பாளர்கள் மூன்று தரத்தில் இருக்கிறார்கள்.
·         அனைவராலும் பலமானவர் என்று ஏற்கப்பட்டவர்
·         அனைவராலும் பலவீனமானவர் என்று கூறப்பட்டவர்
·         பலவீனமானவர் பலமானவர் என்று இருவிதமாக விமர்சிக்கப்படுபவர்- கருத்து வேறுபாட்டுக்கு ஆளானவர்.

ஏராளமான அறிவிப்பாளர்கள் இந்த மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஹதீஸ்களை ஒரு தரப்பின் கருத்தை வைத்து ஒதுக்கி விட்டோம் என்றால் பெருமானாரின் பல செய்திகள் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும், அதனால் தான் இமாம் அஹ்மது இமாம் நஸஈ போன்ற சில இமாம்கள் தங்களுடைய ஸஹீஹ் தொகுப்புக்களில் அத்தகையோருடைய ஹதீஸ்களுக்கும் இடமளித்தனர்.

الأول: متفق على جلالتهم وإتقانهم، أو على توثيقهم جمهور
الثاني: قسم متفق على ضعفهم، أو على تضعيفهم جمهور أئمة هذا الشأن
القسم الثالث: وهم الرواة المختلف فيهم،
ومما ينبغي أن يعلم في هذا الشأن أنه لا يصلح أن يطرح حديث الراوي أو يتوقف فيه، للاختلاف فيه، أو لإطلاق الكلام فيه، وإلا للزم تضعيف آلاف الأحاديث وردّها.
ولذا فقد ذهب عدد من المحدثين كأحمد في مسنده، والنسائي في سننه وغيرهما إلى أنه لا يترك حديث الرجل حتى يجمع الجميع على تركه .  



மார்க்க சட்ட வல்லுனர்களின் கருத்து என்ன வென்றால் ஹதீஸ்களின் தரம் பற்றிய பேச்சில் ஹதீஸ்கலை குறித்த ஆழமான அறிவில்லாதவர்கள் ஈடுபடக் கூடாது.

فهذه قواعد مهمة في التصحيح والتضعيف يجب على من يتصدر للفنتيا أو الحكم على الأحاديث صحة وتضعيفا أن يعيها ويعرفها تمام المعرفة

இதை நீங்களும் நானும் புரிந்து கொள்வது சிரமமல்ல.

எந்த் ஒரு துறையிலும் போதிய விவரமில்லாமல் கருத்துச் சொல்வது அல்லது பரப்புவது நல்லது அல்ல- நாகரீகம் அல்ல- நியாயமல்ல - என்று அனைவரும் ஒத்துக்கொள்வர்,

ஆணால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏறபட்ட துரதிஷ்டம் ஹதீஸ் பற்றி ஆணா ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் ஸஹீஹ் லயீப் என்று பேசுவது தான். இதில் பெரும் கொடுமை இத்தகையோர் தர்கத்தில் ஈடுபடுவதாகும்

எத்தனை ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருக்கிறதோ அவை முழுவதுமாக ஆராயப்பட்டு தரம் பிரிக்கப் பட்டு எது எது எந்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டு, எது எதன் படி அமல் செய்யலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப் பட்டு விட்டது

மார்க்கத்தில் புரட்சி என்ற பெயரில் தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு சிலர் வேணுமென்றே அடிப்படை தெரியாத மக்களிடம் ஹதீஸ்களின் தரம் பற்றி பேசி குழப்பத்தை ஏறபடுத்தினர். மக்களிலும் பலர் எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் – இது விசயத்தில் தங்களது ஆற்றலைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் – மார்க்கம் விச்யத்தில் தமது மனோ இச்சைப் படி பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஹதீஸ்களின் தரம் பற்றி அல்லது நம்முடைய நடைமுறைகளுக்கு ஸ்ஹீஹான ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா என்பது பற்றி கேள்வி கேட்கிற சகோதரர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். உண்மையில் உங்களது நெஞசைத் தொட்டுச் சொல்லுங்கள் ஒரு வாத்த்திற்காகவே தவிர இது பற்றி கொஞ்சமாக நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்த்துண்டா?

உறுதியாகச் சொல்கிறோம். நீங்கள் ஹதீஸ்கலைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் எனில் லயீபான ஹதீஸ்கள என்று முகம் சுளிக்கமாட்டீர்கள்,

லயீபான ஹதீஸ் என்றால் ஸஹீஹான ஹதீஸுக்கு எதிராக தாக்குப் பிடிக்காது என்பது மட்டுமே உண்மையான பொருளாகும். அதாவது ஸஹீஹான ஒரு ஹதீஸ் ஒரு செய்தியை சொல்லுகிற போது அதற்கு எதிரான கருத்தை லயீபான ஹதீஸ் சொல்லுமானால் லயீபான ஹதீஸை ஏற்க முடியாது என்பதே சட்டமாகும்.

இது கூட இமாம்களின் இஜ்திஹாதில் தலையீடு செய்யாது. ஏனெனில் இமாம்களின் கால கட்ட்த்திற்கு பின்பு தான் அறிவிப்பாளர்களில் பிரச்சினையும் ஆய்வும் வெளிப்படத் தொடங்கியது.

உதாரணத்திற்கு இமாம் அபூஹனீபா ஹிஜ்ரி 80 ல் பிறந்து 150 ல் வபாத்தானார்.
முதன் முதலாக ஸஹீஹ் திரட்டை வழங்கிய இமாம் புஹாரி - தனது பணியை ஹிஜ்ரி  217 ல் துவக்கினார்.    

சுமார் 70 வருடங்களுக்குப் பிறகு நடக்கிற சர்ச்சை அதற்கு முந்தைய காலகட்ட்த்தவரின் ஆய்வை பாதிக்காது என்பது வெள்ளிடை மலை போல தெளிவாகிற விசயமல்லவா? 

உண்மையில் ஹதீஸ் லயீப் என்று சொல்லி சமூகத்தை ஹைஜாக் செய்கிறவர்கள். அவர்களுக்கு சான்றாக காட்டுகிற ஹதீஸ்களை துழாவிப் பார்த்தார்களானால் அதிலும் கூட லயீப் என்று ஒருவரால் கூட  விமர்ச்சிக்கப் படாதவர்களை பார்க்க இயலாது. 

சில நேரத்தில் ஒரு துறையில் லயீபானவராக கருதப் படுகிறவர் இன்னொரு துறையில் பலமானவராக கருதப்படுவார். 


قد يحتج بالراوي في جانب من جوانب العلم دون الآخر كالاحتجاج به في المغازي أو القراءات ونحوها دون الحديث.
قال ابن معين في زياد بن عبدالله البكائي:
"لا بأس به في المغازي، وأما في غيره فلا".
وقال صالح جزرة:
"هو على ضعفه أثبتهم في المغازي" .
 


 இன்றைய சமூகத்தில் பலரும் மவ்ளூஐயும் லயீபையும் ஒரே தரத்தில் வைத்துப் பேசுகிறார்கள். அது நபி மொழிகளுக்கு செய்கிற மாபெரும் அநீதியாகும்.

பெருமானார் விசயத்தில் அவர்கள் சொல்லாத்தை இட்டுக் கட்டிச் சொல்வது எவ்வளவு பெரிய குற்றமோ அதே போன்றதொரு குற்றம் தான் அவர்களது ஹதீஸை மறுப்பதுமாகும்.

லயீபான் ஹதீஸ் மறுக்கப்படக் கூடியதல்ல. லயீப் என்ற வார்த்தையாடலில் சமூகத்தை விமர்சிக்கிற எந்த ஒரு பேச்சும் இத்தகைய தண்டனைக்குரியதே!

உண்மையில் முஸ்லிம் உம்மத்தின் வரலாறு ஸஹீஹையும் லயீபையும் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாகும்.

ஸஹீஹை சுன்னத்தாகவும் வலியுறுத்தப் பட்டதாகும் கருதுகிற முஸ்லிம்களின் வரலாறு லயீபை கட்டாயப்படுத்தப் பட்ட அம்சமாக கருதாமல் அமல் செய்வதற்கான தூண்டுதலாகவே எடுத்துக் கொண்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் ஒரு காரியத்தை தலைமுறை தலைமுறையாக மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முறைப்படி செய்து வருவார்களானால் அதுவே ஹதிஸை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சாட்சியாகும்.

இவ்வாறு மார்க்கத்தைப் புரிவது வதுதான் சரியான மார்க்கத்தின் கடைபிடிப்பதற்கான வழியாகும்.

அந்த வகையில் பராஅத் இரவிற்கான செய்தியை கூறும் ஹதீஸ்கள் லயீபானதாக இருந்தாலும் . அந்த இரவின் சிறப்பை வலியுறுத்தும் செய்தி பல தரப்பில் வந்திருப்பதால் அது ஸஹீஹின் தரம் பெற்றதாக கருதப் படுகிறது.

மட்டுமல்ல லயீபான் ஹதீஸ் அமல் செய்வதற்கு ஏற்றதே
لكن يعمل بالحديث الضعيف في فضائل الأعمال باتفاق العلماء ،
இந்த இரவை மகிமைப் படுத்தும் பழக்கம் சஹாபாக்கள் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை வரலாறு காட்டு கிறது.

மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது. ஹழ்ரத் உமர பின் கத்தாப் ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்

وعن كثير من السلف ، كعمر بن الخطاب ، وابن مسعود وغيرهما ، أنهم كانوا يدعون بهذا الدعاء : اللهم إن كنت كتبتنا أشقياء فامحه واكتبنا سعداء ، وإن كنت كتبتنا سعداء فأثبتنا ، فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب


(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).

இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)
عن ابن مسعود رضي الله عنه أنه كان يدعو بهذا الدعاء أيضا

முல்லா அலி காரி ரஹ் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ் விரிவுரையில் இவ்வாறு கருத்துக்களை பதிவு செய்கிறார்

وعن عائشة رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " هل تدرين ما هذه الليلة ؟ " يعني ليلة النصف من شعبان ، قالت : ما فيها يا رسول الله ؟ فقال : " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة ، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة ، وفيها ترفع أعمالهم ، وفيها تنزل أرزاقهم " ، فقالت : يا رسول الله ! ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال : " ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا . قلت : ولا أنت يا رسول الله ؟ ! فوضع يده على هامته ، فقال : " ولا أنا ، إلا أن يتغمدني الله منه برحمته " يقولها ثلاث مرات . رواه البيهقي في " الدعوات الكبير " .

இந்த இரவின் முக்கியத்தை சமுதாயத்திற்கு உணர்ந்த்துவதற்காக பெருமானார் கேள்வியெழுப்பி பதில் கூறியுள்ளார்கள். துஆ வாலும் வணக்கங்கங்களாலும் சிந்தனையாலும் திக்ராலும் இந்த இரவை உயிர்ப்பிக்க வேண்டும் – இப்னு ஹஜர் (ரஹ்)

قال ابن حجر

: نبه - عليه الصلاة والسلام - بهذا الاستفهام التقريري على عظم خطر هذه الليلة وما يقع فيها ، ليحمل ذلك الأمة بأبلغ وجه ، وآكده على إحيائها بالعبادة والدعاء والفكر والذكر ،

இந்த இரவில் என்ன நடக்கிறது?

லவ்ஹுல் மஹ்பூழில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விதிப்படியான தகவல்களில் அந்த வருட்த்திற்குண்டானதை பிரதி எடுக்கப்படுகிறது அது லைலத்துல் கத்ர் இரவில் மலக்குகளில் தரப்படுகிறது என ஹதீஸ் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

இறப்பு பிறப்பு வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.


قال الطيبي : هو من قوله تعالى : ( فيها يفرق كل أمر حكيم ) من أرزاق العباد وآجالهم ، وجميع أمورهم إلى الأخرى القابلة

 ( وفيها ترفع أعمالهم ) ، أي : تكتب الأعمال الصالحة التي ترفع في هذه السنة يوما فيوما
: يعني كتابة ثانية بعد الكتابة في اللوح المحفوظ


 وفيها تنزل أرزاقهم ) ، أي : أسباب أرزاقهم أو تقديرها ، وهو يشمل حسيها ومعنويها .
قال ابن حجر : يحتمل أن المراد تنزيل علم مقاديرها للموكلين بها ، أو أسبابها كالمطر بأن ينزل إلى سماء الدنيا ، أو من سماء الدنيا إلى السحاب الذي بينها وبين الأرض ،

 يفرق فيها كل أمر حكيم ஆய்த்திற்கான விளக்கத்தில் தீர்வு. அது லைலத்துல் கத்ர் தான். எனினும் பராஅத் இரவிலும் பங்கீடு நடைபெறுவதாக ஹதீஸ்கள் சொல்கின்றன (மிர்காத்)

أن الليلة التي يفرق فيها كل أمر حكيم في الآية هي ليلة القدر لا ليلة النصف من شعبان ، ولا نزاع في أن ليلة نصف شعبان يقع فيها فرق ، كما صرح به الحديث ، وإنما النزاع في أنها المرادة من الآية ، والصواب أنها ليست مرادة منها ، وحينئذ يستفاد من الحديث والآية وقوع ذلك الفرق في كل من الليلتين إعلاما بمزيد شرفهما اهـ .


நிர்ணயங்கள் நடைபெறுகின்ற இந்த கருணை மிக்க அல்லாஹ் மக்களின் கோரிக்கையின் பால் அருட்கண் கொண்டு பார்க்கிறான். எல்லோருக்கும் மன்னிக்க தயாராகிறான்.
إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي
وعن أبي موسى الأشعري رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن " . رواه ابن ماجه
1308 –
 وعن علي رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا كانت ليلة النصف من شعبان ، فقوموا ليلها ، وصوموا يومها ، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ، فيقول : ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا ؟ حتى يطلع الفجر " . رواه ابن ماجه

அதனால் நாம் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின்

கருணை வெளிப்படுகிற இரவில் அவனிடம் கையேந்துவோம். துஆ செய்வோம்

இன்று மஃரிபுக்கு நாம் ஒதுகிற யாசீன்கள் நமக்காக!

திக்ரி தஸ்பீஹ் நபில் தொழுகைகளில் ஈடுபடுவோம்.

பெருமானார் (ஸல்) அல்லாஹ்வின் அருளிரங்கும் நாளில் தன்னுடைய உள்ளம் கவர்ந்த சஹாபாக்களுக்காக பிரார்த்திக்க ஜன்னத்துல் பகீஃற்கு சென்றார்கள், நாமும் அப்படிச் செல்வோம்.

அத்தோடு  நம்முடைய உண்மையான வீடு இதுதான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம். ஜியாரத்தின் நோக்கத்தை பெருமானார் (ஸல்) நமக்கு அப்படி சொல்லிக் கொடுத்தார்கள்.  

இது கிருத்துவர்கள் செய்வது போல கல்லறைத்திருநாள் அல்ல, கப்ருகளை சரிப்படுத்தி அலங்கரிக்கத் தேவையில்லை.

பரா அத் ஹல்வா, பராஅத் சுற்றுலா, பரா அத் அலங்காரம் எதுவும் பரா அத் வணக்கத்தின் அம்சங்கள் அல்ல.

பராஅத்தின் பாக்கியத்தை இழப்போர்
·         இறை மறுப்பாளர்கள் இணை வைப்பவர்கள்
·         பகை கொண்டிருப்பவர்கள்
·         தற்கொலை செய்தவர்கள்
·         தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
·         குடிகாரர்கள்
இத்தகைய பட்டியலில் இல்லாமல் அல்லாஹ் நம்மை பாதுகாத்து அருள்வானாக!





3 comments:

  1. Jazakallah...Halrath. niraivana seydhihalai thantullerhal.ungaludaiya thannalamatra indha sevaikku Allah nirappamana kooli valanguvanaha .aameen.

    ReplyDelete
  2. SAHEEH-Conform, selected.
    LAYEEF -waiting list.
    MOULOO-rejected.


    SAHEEH - fresh brinjals in market.
    LAYEEF.-non fresh brinjals......
    MOULOO -bad brinjals.....

    ReplyDelete