வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 12, 2014

பராஅத் இரவு



இன்றைய ஜும் ஆவில் பராஅத் இரவின் ஆதாரத்தன்மை -யை விவரிக்கலாம்.
இப்படி ஒன்று இட்டுக் கட்டிச் சொல்லப்பட்டதைப் போல புறக்கணிக்கும் போக்கு மார்க்கத்தை நிராகரிக்கும் சுயநலப் போக்கு என எச்சரிக்கலாம்

பராஅத் இரவு குறீத்த முந்தைய தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம். நாளை இரவுக்கான பதிவையும் நாளைய ஜும் ஆவிற்கான புதிய பதிவையும் இன்ஷா அல்லாஹ நாளை காலை 7 மணிக்குள் காணலாம்.

பராஅத் இரவு

பராஅத் தொடர்பாக கீழே உள்ள முன்று இணைப்புக்களை பார்த்துக் கொள்ளலவும் .


பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றன, அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ் அரி, (ரலி) போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பரா அத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان  என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படிப்பட்ட ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித் அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ் களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சி செய்யலாம்.

பரா அத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும். 

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக சவூதியின் இமாம்கள் தொழுகையில் துஆ செய்கிறார்களே!  பரா அத்தை பித் அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா? 

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

பரா அத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்லஇதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்

பரா அத் பற்றிய நபி மொழிகள்:

ابن ماجة  

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144 


عن علي بن أبي طالب قال قال رسول الله   صلى الله عليه وسلم     إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر 

عن عائشة قالت   فقدت النبي   صلى الله عليه وسلم   ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن   الله تعالى   ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب    

  عن أبي موسى الأشعري عن رسول الله   صلى الله عليه وسلم   قال   إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن       

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر



சுன்னத்தும் பித்அத்தும்
பரா அத் - அல்லாஹ் மட்டுமே
நீண்ட ஆயுள் எப்படி வேண்டும் ?
அல்லாஹ்வோடு நாம்

ஆபியத்திற்கான வழி –

நண்பரொருவர் என்னுடை பழைய உரை ஒன்றை கேட்டு விட்டு பராத் அன்று பேச ஆபியத்திற்கான வழி என்ற தலைப்பின் குறிப்பு தேவை என்றார். நானும் தேடித்தேடிப்பார்த்தென் வெள்ளி மேடையி கிடைக்க வில்லை. அது என்னுடை ஆடியோ உரையில் இருந்திருக்கிறது. ஒரு வழியாக தேடி அதன் நோட்ஸை எடுத்தேன் .
இன்னும் விரிவுபடுத்தவும் செம்மை படுத்தவும் நேரம் இல்லை அதை அப்ப்டியே தருகிறேன்.

தேவை எனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


ஆபியத்திற்கான வழி
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
ஒரு ஆலிமின் கேள்விதுஆ அரபியில் தான் ஒத வேண்டுமா?
துஆ யே மஸ்னூன்களை அப்படியே ஓத வேண்டும்
காரணம பல இஸ்லாமிய சொற்களின் முழு பொருளையும் மொழி பெயர்ப்பது முடியாது.
அதற்கு ஒரு உதாரணம் ஆபியத்
ஆபியத்தின் மொழி பயர்ப்பு சிர்மம்-
ஆபியத் என்றாம்
·         நிவாரணம்
·         அமைதி
·         அமைதி
·         அமைதிக்கான காரணம்
·         அமைதி இழப்பை தடுப்பது
·         உடல் நலம்
·         சண்டை இன்மை
·         தொழில்வளம்-
·         பாதுகாப்பு
இத்தனையையும் குறிக்கும்
அதனால் தான் தினமும்  காலையில் குனூத்தில் ஹிதாயடத்திற்கு அடுத்தபடி  அல்லாஹ்விடம் கேட்கிறோம்.
 ஹிதாயத்ஆபியத்தவ்லியத்பரகத்ஹிபாலத்
سلوا الله العافية
துஆக்களில் சிற்ந்த்து.
 قام أبو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه وسلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية thir
عن العباس بن عبد المطلب قال قلت يا رسول الله علمني شيئا أسأله الله عز وجل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والآخرة   thir
عن أنس بن مالك أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الدعاء أفضل قال سل ربك العافية والمعافاة في الدنيا والآخرة ثم أتاه في اليوم الثاني فقال يا رسول الله أي الدعاء أفضل فقال له مثل ذلك ثم أتاه في اليوم الثالث فقال له مثل ذلك قال فإذا أعطيت العافية في الدنيا وأعطيتها في الآخرة فقد أفلحت thir
அல்லாஹ்வுக்கு பிரியமானது
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية thir
சப்ருக்கு பதில் ஆபியத்
عن معاذ بن جبل قال سمع النبي صلى الله عليه وسلم رجلا وهو يقول اللهم إني أسألك الصبر فقال سألت الله البلاء فسله العافية
 فإنها أوسع وكل احد لا يقدر أن يصبر على البلاء , ومحل هذا إنما هو قبل وقوع البلاء وأما بعده فلا منع من سؤال الصبر بل مستحب لقوله : { ربنا أفرغ علينا صبرا }
பாங்குக்கும் இக்காமத்திற்கும் இடையில்
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الأذان والإقامة قالوا فماذا نقول يا رسول الله قال سلوا الله العافية في الدنيا والآخرة
நோயாளி
عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم عاد رجلا قد جهد حتى صار مثل الفرخ فقال له أما كنت تدعو أما كنت تسأل ربك العافية thir
மவ்தானவர்களுக்கான பிரார்த்தனயிலும்
سمعت رسول الله صلى الله عليه وسلم يصلي على ميت  وهو يقول اللهم اغفر له وارحمه وعافه thir
ஆபியத்திற்கு விளக்கம்
வீடு உணவு நல்ல மனைவி
ஆபியத்தின் அடையாளம் மூன்று
·         அரசர்களிடம் சிக்காமல் இருப்பது
·         மருத்துவர்களிடம் செல்லாமல் இருப்பது
·         அடுத்தவர்களிடம் தேவையாகமல் இருப்பது.
ஆபியத்தான வாழ்க்கைக்கு வழி
·         தொடர் திக்ருகள் தஸ்பீஹ்கள்
லாயிலாஅக் இல்ல்லாஹ் சிறந்த திக்ரு
இதன் சிறப்பம்சங்கள்  
·         12 எழுத்துக்கள் – 12 மாதங்களில் அல்லாஹ்வை நினைத்தல்
·         12+12 எழுத்துக்கள் 24 மணி நேரம்
·         7 வார்த்தைகள்கண் காது நாக்கு கை கால் இனஉறுப்பு வயிறு ஆகியவற்றின் பாவம்
சிறப்பம்சம் மிக்க மொழி பெயர்பு
வணக்கத்திற்குரியவன்
தமிழைப் போல இன்னொரு மொழியில் இவ்வளவு சிறப்பாக மொழிபெயர்க்கப்பட வில்லை.
ஆங்கிலத்தி  NO ONE IS GOD EXEPT ALLAH  
தொடர் திர்க்ரு தஸ்பீஹ் களின் நண்மை
·         இறை நெருக்கம்
·         மந்திருத்துப் பார்த்தலின் தேவையிருக்காது.

6 comments:

  1. alhamdhu lillah thangalin sevai thodara allah thangaluku pariboorana aafiyathai thandharulvaanaha! aameen

    ReplyDelete
  2. جزاك الله خير الجزاء

    ReplyDelete
  3. جزاك الله خير الجزاء

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் ஹஜ்ரத்

    ReplyDelete
  5. محمد نوفل رفاعي الباقوي9:41 PM

    ما شاء الله

    ReplyDelete
  6. Anonymous12:06 PM

    அருமையான விளக்கம்
    நன்றி இமாம் அவர்களே

    ReplyDelete