வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 27, 2014

வாக்குறுதிகள்



பொதுவாக வாக்குறுதிகளூக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்ட காலம் இது.
ஒரு ஜெண்டில் மேன் வாழ்க்கையின் அடையாளம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது – அது சிறிய விசயமானாலும். சிரமமாக இருந்தாலும்  
நீங்களும் நானும் பக்குவப்பட வேண்டிய விசயம் இது.
இரண்டு பண்புகள் உண்மையான முஃனின் அடையாளங்களாகும். இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை
1.   வாக்குறுதியை நிறைவேற்றுதல்
2.   உண்மையான வாக்குறுதி வழங்குதல்  
வாக்குறுதியை நிறைவேற்றுவது ஈமானின் அடையாளம்.
ஏனெனில் அல்லாஹ்வின் மீது வைக்கிற நம்பிக்கை ஒரு மனிதரை நம்பிக்கையாளராக மட்டுமல்ல நம்பிக்கைக்குரியவராக ஆக்க வேண்டும் என்பதே இஸ்லாமின் எதிர்பார்ப்பாகும்.
நம்பிக்கைக்குரியவரே உண்மையான நம்பிக்கையாளராக இருக்க முடியும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا خَطَبَنَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَ لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ- احمد 11935
வாக்குறுதியை நிறைவேற்றுவது மன உறுதியின் வெளிப்பாடாகும். மன உறுதி யற்றவர்களால் வாக்குறுதியை நிறவேற்ற முடியாது.
வாக்குறுதியை நிறைவேற்றுவது நாகரீகத்தின் அடிப்படை இயல்பாகும். வாக்குறுதியை நிறவேற்றாவிட்டால் நாகரீகம் குறைந்தவர் என்று பொருள்.
வக்குறுதியை நிறைவேற்றுபவன் என்ற வார்த்தையில் அல்லாஹ் தன்னைப் புகழுகிறான்.
والله سبحانه قد مدح نفسه في القرآن بهذه الفضيلة الشريفة، يقول الله تعالي:
"وعد الله لا يخلف الله وعده" (الرعد 6)
"وعد الله لا يخلف الله الميعاد" (الزمر 20)
உயர்ந்த மனிதர்கள வாக்குறுதியை நிறைவேற்றுதில் மிகவும் அக்கறை செலுத்துவார்கள். கற்பனைக்கு அப்பாலும்..
قال القرطبي رحمه الله: "صدق الوعد محمود وهو من خلق النبيين والمرسلين، وضده وهو الخلف مذموم ، وذلك من أخلاق الفاسقين والمنافقين
திருக்குர் ஆன் இஸ்மாயீல் அலை அவர்களை பாராட்டுகிறது,
வாக்குருதியை நிறைவேற்றுவதில் முன்னோடி இஸ்மாயீல் அலை
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولاً نَبِيّاً} [مريم: 54]، أي كان عليه السلام لا يعد وعداً إلاّ وفى به، ولو كان شاقاً،
தந்தைக்கு கொடுத்த மிக்ச்சிரமாமான வாக்குறுதியை உண்ம்மயாகவே அவர் நிறைவேற்றினார்
ஈமானின் ஆதார அம்சமாக இருப்பதால் நபிமார்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அதிக பட்ச ஈடுபாடுயைவர்களாக இருந்தார்கள்.
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்பது பெருமானாரின் அடிப்படை போதனைகளில் ஒன்றாக இருந்த்து.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ فَزَعَمْتَ أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ وَأَدَاءِ الْأَمَانَةِ قَالَ وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ
ஒரு வாக்கிற்காக மூன்று நாள் காத்திருந்தார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ يَا فَتًى لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ - أَبُودَاوُد4344  
பெருமானாரின் வாக்குறுதியை பெருமானாருக்குப் பின்னால் தோழர்கள் நிறைவேற்றினார்கள்
ولتعظيم أمر الوفاء بالوعد في نفوس أصحابه قال أبو بكر رضي الله عنه لما توفي النبي صلى الله عليه وسلم: من كان له عند رسول الله صلى الله عليه وسلم عدَةٌ أو دَيْن فليأتني أنجز له، فجاءه جابر بن عبد الله، فقال: إن رسول الله صلى الله عليه وسلم كان قال: "لو جاء مال البحرين أعطيتك هكذا وهكذا وهكذا"، يعني: ملء كفيه، فلما جاء مال البحرين أمر الصديق جابراً، فغرف بيديه من المال، ثم أمره بِعَدّه، فإذا هو خمسمائة درهم، فأعطاه مثليها معها)
பெருமானாரின் வாக்குறுதி நிறைவேற்றப் பட்ட ஒரு அதிசய வரலாறு –
சுராகா பின் மாலிக் கிற்கு பெருமானாரின் வாக்கு!
لما هاجر النبي صلى الله عليه وسلم هو و صاحبه أبو بكر في قصة الهجرة المشهورة و تبعتهم قريش بفرسانها ، أدكهم سراقة بن مالك المدلجي و كاد يمسك بهم ، فلما رآه سيدنا أبي بكر قال أُتينا يا رسول الله فقال : له النبي صلى الله عليه وسلم لا تحزن إن الله معنا فدعا النبي صلى الله عليه وسلم على سراقة فساخت يدا فرسه في الرمل فقال سراقة : إني أراكما قد دعوتما علي، فادعوا لي، فالله لكما أن أرد عنكما الطلب، فدعا له النبي صلى الله عليه وفي رواية أن النبي صلى عليه وسلم قال لسراقة كيف بك إذا لبست سواري كسرى وتاجه.
فلما فتحت فارس و المدائن و غنم المسلمون كنوز كسرى أتى أصحاب رسول الله بها بين يدي عمر بن الخطاب ، فأمر عمر بأن يأتوا له بسراقة و قد كان وقتها شيخاً كبيراً قد جاوز الثماني من العمر ، و كان قد مضى على وعد رسول الله له أكثر من خمسة عشر سنة فألبسه سواري كسرى و تاجه و كان رجلاً أزب أي كثير شعر الساعدين فقال له أرفع يديك وقل الحمد لله الذي سلبهما كسرى بن هرمز وألبسهما سراقة الأعرابي، وقد روى ذلك عنه بن أخيه عبد الرحمن بن مالك بن جعشم وروى عنه بن عباس وجابر وسعيد بن المسيب وطاوس .
வாக்குறுதியை நிறைவேற்றிய காபிரை பாராட்டிய பெருமானார்
பெருமானாருடைய மருமகன் அபுல் ஆஸ் பத்ரு யுத்ததில் முஸ்லிம்களிடம் கைதியாக இருந்தார். அவரை விடுதலை செய்ய பெருமானாரின் மகள் ஜைனப் ரலி) அவர்கள் தன்னுடைய நகைகளை ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்கள். அந்த நகைகள் கதீஜா அம்மையாருக்கு உரியவை. அதைப் பார்த்து நெகிழ்ந்த பெருமானார் (ஸல்) அதை திருப்பி கொடுத்துவிடலாமா என சஹாபாக்களை கேட்டார்கள். சஹாபாக்கள் சம்மதிக்கவே . அபுல் ஆஸிடம் பெருமானார் “ உங்களை விடுதலை செய்கிறேன். அதற்கு பதிலாக என்னுடைய மகள் ஜைன்பை திருப்பி அனுப்பி விடுகிறீர்களா! உங்களுடன் ஜைது பின் ஹாரிதா (ரலி) அனுப்பி வைக்கிறேன், அவர் மக்காவிற்கு வெளியே நிற்பார். அவரிடம் ஜைனபை ஒப்படைத்து விட வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். அபுல் ஆஸ் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அப்படியே செய்தார். அவர் அப்போது காபிராக இருந்த போதும் பெருமானார் (ஸல்) பாராட்டினார்கள்.
قال المسور بن مخرمة: أثنى النبي على أبي العاص خيراً، وقال: حدّثني فصدقني، ووعدني فوفى لي، وقد وعد النبي أن يرجع إلى مكة بعد وقعة بدر فيبعث إليه ابنته، فوفى بوعده، وفارقها مع شدة حبه لها.
உஸ்மான் பின் தல்ஹாவு (ரலி) க்கு கஃபாவின் சாவையை தருவதாக சொன்ன வாக்கை பெரும்னார் (ஸல்) நிறைவேற்றினார்கள். அவர் ஒரு காலத்தில் செய்த அவமரியாதையை பொருட்படுத்தவில்லை. இன்றும் அந்தக் குடும்பத்திடம்தான் சாவி இருக்கிறது

حَدَّثَنَا شَيْبَةُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي طَلْحَةَ ، قَالَ : دَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِفْتَاحَ إِلَى عُثْمَانَ ، وَقَالَ : " خُذُوهَا يَا بَنِي أَبِي طَلْحَةَ خَالِدَةٌ تَالِدَةٌ لَا يَأْخُذُهَا مِنْكُمْ إِلَّا ظَالِمٌ " ، فَبَنُو أَبِي طَلْحَةَ الَّذِينَ يَلُونَ سِدَانَةَ الْكَعْبَةِ دُونَ بَنِي عَبْدِ الدَّارِ .
வாக்குறுதியை நிலைநாட்டுவதில் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு அற்புதமான காட்சி
في عهد عمر بن الخطاب – رضي الله عنه -  جاء ثلاثة أشخاص ممسكين بشاب، وقالوا يا أمير المؤمنين نريد منك أن تقتص لنا من هذا الرجل فقد قتل والدنا.
قال عمر بن الخطاب: لماذا قتلته؟
قال الرجل : إني راعى ابل وماعز.. وأحد جمالي أكل شجره من أرض أبوهم فضربه أبوهم بحجر فمات فأمسكت نفس الحجر وضربت أبوهم به فمات
قال عمر بن الخطاب : إذا سأقيم عليك الحد
قال الرجل : أمهلني ثلاثة أيام، فقد مات أبي وترك لي كنزاً أنا وأخي الصغير، فإذا قتلتني ضاع الكنز وضاع أخي من بعدي
فقال عمر بن الخطاب: ومن يضمنك؟!
فنظر الرجل في وجوه الناس فقال هذا الرجل
فقال عمر بن الخطاب : يا أبا ذر هل تضمن هذا الرجل؟!
فقال أبو ذر : نعم يا أمير المؤمنين
فقال عمر بن الخطاب : إنك لا تعرفه وأن هرب أقمت عليك الحد؟!
فقال أبو ذر أنا أضمنه يا أمير المؤمنين

ورحل الرجل ومر اليوم الأول والثاني والثالث وكل الناس كانت قلقله على أبو ذر حتى لا يقام عليه الحد وقبل صلاة المغرب بقليل جاء الرجل وهو يلهث وقد أشتد عليه التعب والإرهاق ووقف بين يدي أمير المؤمنين عمر بن الخطاب
قال الرجل : لقد سلمت الكنز وأخي لأخواله، وأنا تحت يدك لتقيم علي الحد!
فاستغرب عمر بن الخطاب وقال : ما الذي أرجعك كان ممكن أن تهرب ؟!
فقال الرجل : خشيت أن يقال لقد ذهب الوفاء بالعهد من الناس؟!
فسأل عمر بن الخطاب أبو ذر لماذا ضمنته؟!
فقال أبو ذر : خشيت أن يقال لقد ذهب الخير من الناس؟!
فتأثر أولاد القتيل
فقالوا لقد عفونا عنه
فقال عمر بن الخطاب : لماذا ؟!
فقالوا نخشى أن يقال لقد ذهب العفو من الناس؟!

வாக்குறுதி வழங்குவதில் எச்சரிக்கை அவசியம்
وفي هذا دليل على شيئين: دقته وشدة التزامه، بالإضافة إلى عقله  وحسن تقديره، فلا يعد بما قد يعجز عن الوفاء به فيحوجه إلى الاعتذار
ولهذا لما قال لأبيه: (ستجدني إن شاء الله من الصابرين)
ஆனால் வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்றுவதில் அதிகப்பட்ட முனைப்புக் காட்ட வேண்டும்.
கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற கவலை எப்போதும் இருப்பது ஈமானிய அடையாளமாகும்.
அம்ரு பின் ஆஸ் ரலி  யின் கவலை
لما حضرت عبد الله بن عمرو بن العاص الوفاة قال إنه قد كان خطب إلي إبنتي رجل من قريش وقد كان مني غليه شبيه بالوعد فوالله لا ألقى الله بثلث النفاق اشهدوا أنى قد زوجتها إياه.
மேன்மக்கள் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்து விடுவார்கள் எனில் அது பற்றி  கவலைகொள்ளத்தொடங்கி விடுவார்கள்

கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகுமே என்பதற்காக ஏழ்மையிலிருந்து பாதுகாப்பு கேட்டார்கள் பெருமானார் (ஸல்)

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ فِي صَلَاتِهِ مِنْ الْمَغْرَمِ وَالْمَأْثَمِ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ مَا أَكْثَرَ مَا تَعَوَّذُ مِنْ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ
அபூ அம்ருல் அலா விடம் ஒரு மனிதர் உதவி கேட்டார். அவர் தருவதாக வாக்களித்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சிரமத்தால் அதை நிறைவேற்றுவது சிரமமானது. அந்த மனிதர் அபூஅம்ரை சந்திது “ அபூ அம்ரு சொன்ன வாக்கை நிறைவேற்றுங்கள் என்றார். தன்னுடைய சூழ்நிலையை புரிய வைக்க அபூ அம்ரு சொன்னார். நம்மில் அதிக கவலையுடையவர் யார்? அவர் சொன்னார் நான் தான். அபூ அம்ரு சொன்னார் இல்லை. உனக்கு நான் வாக்களித்தவுடன் நீ வாக்குறுதியின் சந்தோஷமா தோடு திரும்பிச் சென்று விட்டாய். நான் அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையோடு திரும்பினேன், நீ இரவு நிம்மதியாக தூங்கினாய். நானோ சிந்தனையிலும் கவலையிலும் கழித்தேன். நேரம் வந்து விட்டது. நீயோ பகிரங்கமாக வருகிறாய் நான் தயங்கி உன்னைச் சந்திக்கிறேன்,

وكان بعض السادات يغتم إذا وعد حتى يفي فعن معاذ بن العلا قال سال رجل أبا عمرو بن العلا بن العلا حاجة فوعده بها ثم إن الحاجة تعذرت على أبي عمرو فلقيه الرجل بعد ذلك فقال له أبو عمرو وعدتني وعدا تنجزه فقال أبو عمرو فمن أولى بالغم قال أنا قال لا بل أنا قال الرجل وكيف ذلك أصلحك الله قال لأني وعدتك وعدا فإبت بفرح الوعد وإبت أنا بهم الإنجاز فبت ليلتك فرحا مسروا، وبت ليلتي مفكرا مهموما ثم عاق القدر عن بلوغ الإرادة فلقيتني مدلا، ولقيتك محتشما، أخرجه الخرائطي.
நிறைவேற்று சிந்தனையுடன் வாக்களித்து விட்டு நிறைவேற்றுவது இயலாமல் போனால் பாதகமில்லை

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلَمْ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ
வாக்களித்த பிறகு சக்தியிருந்தும் நிறைவேற்றாவிட்டால்- அல்லது வாக்களித்த்தை பொருட்படுத்தாவிட்டால்- அல்லது முயற்சி செய்யாவிட்டால் - அல்லது பொய்யாக வாக்களித்த்தல் அது வஞ்சகமாகும்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ- البخاري 33
அலி (ரலி) சொன்னார்கள் வாக்கும் ஒரு கடனே!
عن علي  :العدة دين ، ويل لمن وعد ثم أخلف ، ويل لمن وعد ثم أخلف ، ويل لم وعد ثم أخلف.-ابن عساكر
كان المثنى بن حارثة الشيباني يقول: لأن أموت عطشاً، أحب إلي من أخلف موعداً.
.பதுறு யுத்த்தின் சமயத்தில் நிர்பந்த நிலையில் காபிர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு இரண்டு முஸ்லிம்களுக்கு பெருமானார் (ஸல்) உத்தரவிட்டார்கள்.
حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ قَالَ مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ قَالَ فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ قَالُوا إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا فَقُلْنَا مَا نُرِيدُهُ مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ وَلَا نُقَاتِلُ مَعَهُ فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ فَقَالَ انْصَرِفَا نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ وَنَسْتَعِينُ اللَّهَ عَلَيْهِمْ-  -   مسلم 3342
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் உண்மையான் – நிறைவேற்றுகிற எண்ணம் கொண்ட – வாக்குறுதிகளை வழங்குவதாகும்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது மோசடியாகும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ قَالَتْ أُعْطِيهِ تَمْرًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ- ابوداوود 4339
பொய்யாக வாக்களிப்பவன் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்தவனை பாதுகாப்பற்ற இடத்தில் தள்ளிவிட்டவனைப் போன்றவன் ஆவான்
عَنْ حُذَيْفَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ شَرَطَ لِأَخِيهِ شَرْطًا لَا يُرِيدُ أَنْ يَفِيَ لَهُ بِهِ فَهُوَ كَالْمُدْلِي جَارَهُ إِلَى غَيْرِ مَنَعَةٍ
المدلي جاره.
المراد بالجار هنا المستجير أي فيوصل من استجار به إلى غير قوة فيوقعه في الخوف والخطر والهلكة ، وكذلك من شرط شرطا لاخيه ومن نيته أنه لا يفي
இன்றைய சூழலில் வாக்குறுதி மீறுவதும் பொய்யாக வாக்களிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இன்றைய அரசியல் வாக்குறுதி என்பதே மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக மாறீவிட்டது.
அரசியல் வாதிகள் எந்த அவலட்சணத்திற்கும் தயங்குவதில்லை.
ஈரான் முன்னாள் மன்னர் ஷா வுக்கு அடைக்கலம் தருவதாக வாக்களித்த பிரிட்டன் ஈரானின் புதிய அரசாங்கத்திடமிருந்து மிரட்டல் வந்ததும் பின் வாங்கியது.  கிரேட் பிரிட்டன் கொடுத்த வாக்குறுதியை மீறீவிட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபித்துக் கொண்டார்கள். அப்போதைய பிரதமர் தாட்சர் சொன்னார். இங்கிலாந்தின் நன்மைக்காக கொடுத்த வாக்கை மீறவேண்டியதாயிற்று.
ஷா விசயத்தில் என்றல்ல இது மாதிரி வேறூ எந்தப் பிரச்சினையிலும் அரசியல் நன்மைக்காக என்ற பதிலில் எந்த வாக்குறுதியையும் கவனிக்க வேண்டியதில்லை என்பதையே ஒரு தத்துவமாக அரசியல் வாதிகள் வகுத்துக் கொண்டு விட்டார்கள்.
உடுமலைப் பகுதியில் தக்காளி சாஸ் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கடந்த தேர்தலின் போது வாக்குறுதி வழங்கப்பட்டது. ஜெயித்துச் சென்றவர்கள் சென்று விட்டார்கள். விவசாயிகளோ நொந்து போயிருக்கின்றனர்.
கடந்த மாதம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்திருந்ததால், ஒரு கிலோ 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ தக்காளி மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அவலம் நீடிக்கிறது.
விலை கிடைக்காததால், தக்காளியை பலர் பறிக்காமலேயே அப்படியே செடியிலேயே விட்டு விட்டனர். சிலர் மாடுகளுக்கு உணவாக தக்காளியை கொடுத்தும்; சிலர் குப்பைகளில் வீசுவதும் தொடர்கதையாகியுள்ளது. ஒரு தொழிற்சாலை இருந்தால் அந்த மக்களின் உழைப்புக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.
மக்களது வாழ்வு இது போன்ற எத்தைகைய நெருக்கடிகளுக்கு ஆளானாலும் வாக்க்றுதி கொடுத்து ஓட்டுக் கேட்டுப் போனவர்கள் போனது தான்
இதோ இப்போது  அரசியல் வாதிகள் வாக்குறுதிகளோடு நம்முடைய வீட்டு வாசல்களில் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவர்களுடைய வாக்குறுதிகள் எதையும் நாம் கவனித்தில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. குடிகாரன் பேச்சைப் போல அது தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடக் கூடியவை, வெற்றி பெற்ற வேட்பாளரைப் போல என்பது நமக்குத் தெரியும். இந்த வாக்குறுதிகள் எதிலும் நமக்கு நம்பிக்கை இல்லை.
இத்தக்கய சூழ்நிலை ஒரு சமூகத்தின் மிக மோசமான பண்பாட்டுச் சூழ்நிலையின் அடையாளமாகும்
வாக்குறுதிகள் இவ்வாறு அர்த்தமற்றதாக ஆகிவருவது மக்களின் மனதில் வாக்குறுதியை பற்றிய அச்சத்தையும் கவலையையும் வெகுவாக குறைந்து .விட்ட்து.
அரசியலில் தொடங்கிய இந்த இழிவான நிலை சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவி தனிமனிதர்களும் வாக்குறுதியை கவனிக்காவிட்டால் பிரச்சினையில்லை என்ற நிலை படருவது மனித வரலாற்றை அவலட்சணப்படுத்தி விடக்கூடும்.
இத்தகைய இந்த தீய பழக்கத்திற்கு சர்வசாதாரணமாக நாம் ஆட்பட்டிருந்தால் அது நமது ஈமானுக்கும், நமது மனித தன்மைக்கும் எதிரானது என்பதை உணர்ந்து நாம் நடந்து கொள்வோம்.
அரசியல் வாதிகள் வீடு தேடி – வீதியோடு வருகிற போது ஐயா நீங்கள் கொடுக்கிற வாக்குறுதி இது, ஆனால் எங்களுடைய தேவை இது. என்று நம்முடைய பகுதியுடைய சமூகத்துடைய நிஜமான தேவைகளையும் குறைகளையும் முன் வைப்போம். செய்வீர்களா என்று கேட்போம்.
ஒரு எம் பி வேட்பாளரிடம் ஐயா! நம்முடைய மாவட்டத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு கலக்டெர் கமிஷனர் யாரும் அனுமதி தறுவதே இல்லை. தடை போடுவதற்குத்தான் முன்னே நிற்கிறார்கள். எங்களுக்குரிய உரிமைய நிலை நாட்டிக் கொள்ள நீங்கள் உதவுவீர்களா என்ற ஒரு கேள்வியையாவது கேட்டுப் பார்ப்போம்.
முஸ்லிம்கள் நம்முடைய சமய பிரச்சினைகளை மட்டும் முன் வைக்காமல் சமூக தேசிய பிரச்சினைகளை முன் வைத்து கோரிக்கை வைத்து வாக்குறுதிகளை கேட்டோமானால் அரசியல்வாதிகளின் கண்துடைப்பு வாக்குறுதிகளின் போக்கு கொஞ்சமாவது மாறக் கூடும்.
அரசியல் வாதிகளூம் ஏமாற்றுப் பேர்வழிகளும் திருந்தினால் திருந்தட்டும், அதற்கு முன்னதகாக நாம் நம்து தனிப்பட்ட வாழ்வில் கவனமாக வாக்குறுதிகளை வழங்குவோம். அதை நிறைவேற்ற முடிந்தவரை முயற்சிப்போம்.
அல்லாஹ் நமது குணத்தை சீர் படுத்தி தந்தருள்வானாக!

Thursday, March 20, 2014

நீரின்றி அமையா உலகு


وَاللَّهُ أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَسْمَعُونَ
وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ 

கோடை காலம் ஆரம்பிக்கும் போதே ண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து ள்ளநிலையில் நாளை மார்ச் 22 ம் தேதி உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1992-ம் ஆண்டு ஐ.நா. சபை சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாம் சர்வ சாதரணமாக பயனப்டுத்துகிற தண்ணீரை குறித்து இந்த தண்ணீர் தினத்தில் நாம் யோசித்துப் பார்க்கவும் கடைபிடிக்கவுமான சிலவழிமுறைகளை இன்றைய ஜும்
ஆவில் பார்க்க இருக்கிறோம்.

  தண்ணீர் அல்லாஹ்வின் பெரும் படைப்பு
والله خلق كل دابة من ماء
وعن أبي هريرة قال: قلت يا رسول الله إني رايتك طابت نفسي وقرت عيني، فأنبئني عن كل شيء، قال صلى الله عليه وسلم: " كل شيء خلق من ماء

நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனிலிருந்து பார்த்த போது பூமி நீல நிறமாக தெரிந்துள்ளது. காரணம் பூமியை நீர் சூழ்ந்திருக்கிறது.
• Neil Armstrong saw the Earth from the Moon, it appeared blue! because water covers more than 2/3 Earth

பூமி தண்ணீருக்கு வெளியே தண்ணீரால் படைக்கப்பட்ட்து என பைபிள் கூறுகிறது,
• "The earth was formed out of water and by water" bible

கடல் பூமியின்  ஒரு அங்கமாய் இருந்தாலும் பூமி என்னவோ கடலில் மிதப்பது போலத்தான் இருக்கிறது. .
நீராருங்கடலுடுத்த நில மடந்தை  என்று தமிழ்த்தாய வாழ்த்து தொடங்குகிறது.

ப்டைப்பின்ங்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது.
·         مادة أساسية للحياة
·         நீரின்றி அமையா உலகு
·         பூமியில் உயிரின்ங்கள் வாழ்வதே தண்ணீரை அடிப்படையாக கொண்டுதான்.
·         விவசாயம், தொழில், உயிரினங்கள் பெருக்கம அனைத்துக்கும் தண்ணீரே ஆதாரம். நீரின்றி எந்த வளர்ச்சியும் இல்லை.

·         மனித உடலில் 60 லிருந்து 75 வரை தண்ணீர் தான் இருக்கிறது,
·         இரத்த்தில் 82 சதவீதம் தண்னீர் தான்
·         மூளையின் 70 சதவீதமும் நுரையீரலின் 90 சதவீதமும் தண்ணீரால் உருவானவையே!
• 60% - 75% of the adult human body is water - 82% of blood is water; 70% of the brain and 90% of the lungs are made up of water

·         தண்ணீர் தான் பூமியின் தட்ப வெட்பத்தை ஒரு சமன்பாட்டில் வைத்திருக்கிறது,
·         மனித உடலின் வெப்பத்தையும் தண்ணீர் தான் சமன்படுத்துகிறது,

தண்ணீர். மனிதனுக்கு அடுத்த மிக அற்புதமான படைப்பு , மென்மையானது அதே நேரத்தில் வலிமையானது

தண்ணீரின் படைப்பு அற்புதம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு சுவையான செய்தி

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ – ترمذي 3291
ஆறுகளும் அருவிகளும் குளங்களும் ஏரிகளும் மனிதர்களுக்கு நன்மையானவை மட்டுமல்ல. அளவிலா ஆனந்தத்தையும் நிம்மதியையும் தருபவை
மனிதனுக்கும் தண்ணீருக்கும் இருக்கிற நெருக்கத்தின் காரண்மாக திருக்குர் ஆனில் சொர்க்கத்தை சொல்லும் போதல்லாம் நீர் சூழ்ந்த என்று அல்லாஹ கூறுகிறான்.
جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
சில இடங்களில் பால் மதுவை விட முதன்மைப்படுத்தி நீர் பேசப்படுகிறது,
مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين

நல்ல் தண்ணீர் உப்புத்தண்ணீர் இரண்டும் அல்லாஹ்வின் பேர்ருளே!

தண்ணீர் பூமியைச் சூந்திருந்தாலும் மொத்த தண்ணீரில் அதில் இரண்டரை சதவீத 2.5 தண்ணீர்தான் குடிப்பதற்கு ஏற்றது. இந்த இரண்டரை சதவீத்த்தில் தான் உலகிலுள்ள நதிகள அனைத்தும் அடங்கும்.

உலகின் 97.5 சதவீத தண்னீர் கடலில் இருக்கிறது. அது அனைத்தும் உப்பாக இருக்கிறது,

கடல் தண்ணீர் உப்பாக இருப்பது அல்லாஹ்வின் பேர்ருளே!
·         நல்ல தண்ணீர் சீக்கிரம் கெட்டுவிடக்கூடியது, உப்புத் தண்ணீர் கெடாது.
·         உலகிலுள்ள கழிவுகள் எல்லாம் கடலில் கலக்கின்றன, கடலில் கொட்டப்படுகிறது, உலகின் பல நாட்டு குப்பைகள் தனமும் பசிபிக் பெருங்கடலில் பிரம்மாண்டமான கப்பல்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
·         இத்தகைய சூழலில் கடல் முழுக்க நல்ல தண்ணீராக இருந்தால் கடல் நாற்றமெடுத்து விடும், பிறகு பூமியில் மனிதர்கள் வாழ்வது இயலாமலாகி விடும்.
(தப்ஸீர் மஆரிபுல் குர் ஆன்

அல்ஹம்துலில்லாஹ்
நாம் அல்லாஹ்வுக்கு மிக அதிகம் நன்றி சொல்லக் கடமைப் பட்டவர்கள்
உலக அளவில் 884 மில்லியன் மக்களுக்கு ல்ல குடி நீர் கிடைப்பதில்லை.
ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் என்கிறார் ஐநாவுக்கான ஜெர்மன் தூதர், விட்டிங்.   

உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

எய்ட்ஸ், மலேரியா, அம்மையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்போர்  எண்ணிக்கை அதிகம் என ஐநாவின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது,

காசு கொடுத்தால் தான் த்ண்ணீர் குடிக்க முடியும என்ற நிலை உலகின் பல நாடுகளில் இருக்கிறது.

அரபு நாட்டில் அரை லிட்டர் தண்ணீர் அதே ஒரு திர்ஹமாகிறது. அதே காசுக்கு இரண்டரை லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது..,
;,

நம்முடைய நாட்டில் மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்

 
இப்போது வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால் அவைநீர்நிரம்பி ல்ல, ப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை.

ஆனாலும் உலகின் வேறு சில பகுதிகளோடு ஒப்பிடுகிற போது நாம் போதிய அளவு நீர்வளம் பெற்று இருக்கிறோம். அல்ஹம்துலில்லஹ்

நம்முடைய மாநிலத்தின் பல பகுதிகளில் கிணற்று நீர் கூட குடிக்கும் தரத்தில் இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் கிணறுகளில் உப்புத்தன்மை அதிகம். கிணற்று நீரிலிருந்து உப்பு தயாரிக்கிறார்க்ள். 

நல்ல தண்ணீர் ஓரளவு தாரளமாக கிடைக்கிற அற்புதமான நிலப்பரப்பில் அல்லாஹ நம்மை வாழச் செய்திருக்கிறான். அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்

தண்ணீர் விசயத்தில் நாம் உணர்ந்து கொள்ள் வேண்டிய இன்னொரு விச்யம்.

இன்றைய இந்த விஞ்ஞான யுகத்திலும் அல்லாஹ்வை நமப் நிர்பந்தம் செய்கிற விசயங்களில் தண்ணீர் பிரதானமானது.
அல்லாஹ் கொடுத்தால் தான் மழை. மனிதனது எந்த முயற்சிக்கும் இதில் வெற்றிக்கு இடமில்லை.
திருக்குர் ஆண் கேட்கிறது.

أَأَنْتُمْ أَنزَلْتُمُوهُ مِنْ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ

وَاللَّهُ أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَسْمَعُونَ
அல்லாஹ்வே தேவையான அளவு தண்ணீர் தருகிறான். மக்கள் பயப்பட்த்தேவையில்லை.

கோடைக்காலம் வருகிற போது குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளும் பத்ரிகைகளும் மக்களை அச்சுறுத்துவது வாடிக்கை.
இன்னும் பத்து நாளைக்குத்தான் தண்ணீர் இருக்கிறது, என்பார்கள். அல்லாஹ் அருள் பொழிது அடுத்த ஆண்டு வரை தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று சொல்லும் அளவுக்கு மழை பொழியும்,
ஐநா சொல்கிறது. போதுமான தண்ணீர் இருக்கிறது, அதை அடைவதும் மோசமான நிர்வாக அமைப்பும் ஊழலுமே தடையாக இருக்கின்றன.
A 2006 United Nations report stated that "there is enough water for everyone", but that access to it is hampered by mismanagement and corruption.

மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்துவைப்பது போன்ற நடவடிக்கைகள் உலகின் பல நாடுகளிலும் பல் விதமாக இருக்கிறது.  இது போன்ற மூட நம்பிக்கள் மனித மரியாதைக்கு பொறுத்தமற்றவை.

நாம் செய்ய வேண்டியது அல்லாஹ்விடம் மழை வேண்டி கையேந்துவதே!

இஸ்லாம் தண்ணீர் வேண்டிச் செய்ய வேண்டிய இரண்டு காரியங்களை கற்றுத் தந்திருக்கிறது, ஒன்று மழைத் தொழுகை இரண்டாவது பிரார்த்தனை.
சில பெண்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் மழை இல்லாமல் இருப்பதைப் பற்றி அழுதவாறு முறையிட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! பாதுகாப்பான, நல்ல, செழிப்பான, பயனுள்ள, துன்புறுத்தாத மழையையை தாமதமின்றி உடனே தருவாயாக என பிரார்த்தித்தார்கள்.


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوَاكِي فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ السَّمَاءُ

மழைக்கான பிரார்த்தனைகளை நல்லவர்களிடம் சொல்லி அல்லது நல்லவர்களை முன்னிறுத்தி கேட்பது சுன்னத்தாகும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ  - البخاري 1010
இந்த நம்பிக்கை பொது வாக எல்லா சமூகத்திலும் இருக்கிறது.
நல்லார் ஒருவர் உள்ளாரேல்
எல்லோர்க்கும் பெர்ய்யும் மழை. -குறல்

இஸ்லாம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவை மட்டுமல்ல, மனிதனுக்கும் இய்றகை சக்திகளுக்கும் இடையே உள்ள உறைவைய்ம் சீராக வைத்திருக்க வலியுறுத்துகிறது.

தண்ணீர் கிடைக்கும் போது அதை பொறுப்புணர்வுடன் செலவழிக்க இஸ்லாம்  கட்டளையிடுகிறது.

ஓளூவை குளிப்பதை சுன்னத்தாக்கியசிலசந்தர்பங்களில் கடமையாக்கிய இஸ்லாம் அதிலும் விரயம் கூடாது என எச்சரித்துள்து,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதமான அறிவுரை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ : مَا هَذَا السَّرَفُ يَا سَعْدُ ؟ قَالَ : أَفِي الْوُضُوءِ سَرَفٌ ؟ قَالَ : نَعَمْ ، وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ) .- روى الإمام أحمد (6768) وابن ماجة(419)


தண்ணீரின் ஒவ்வொரு மிடருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَاعَةٍ لَا يَخْرُجُ فِيهَا وَلَا يَلْقَاهُ فِيهَا أَحَدٌ فَأَتَاهُ أَبُو بَكْرٍ فَقَالَ مَا جَاءَ بِكَ يَا أَبَا بَكْرٍ فَقَالَ خَرَجْتُ أَلْقَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْظُرُ فِي وَجْهِهِ وَالتَّسْلِيمَ عَلَيْهِ فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ عُمَرُ فَقَالَ مَا جَاءَ بِكَ يَا عُمَرُ قَالَ الْجُوعُ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا قَدْ وَجَدْتُ بَعْضَ ذَلِكَ فَانْطَلَقُوا إِلَى مَنْزِلِ أَبِي الْهَيْثَمِ بْنِ التَّيْهَانِ الْأَنْصَارِيِّ وَكَانَ رَجُلًا كَثِيرَ النَّخْلِ وَالشَّاءِ وَلَمْ يَكُنْ لَهُ خَدَمٌ فَلَمْ يَجِدُوهُ فَقَالُوا لِامْرَأَتِهِ أَيْنَ صَاحِبُكِ فَقَالَتْ انْطَلَقَ يَسْتَعْذِبُ لَنَا الْمَاءَ فَلَمْ يَلْبَثُوا أَنْ جَاءَ أَبُو الْهَيْثَمِ بِقِرْبَةٍ يَزْعَبُهَا فَوَضَعَهَا ثُمَّ جَاءَ يَلْتَزِمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُفَدِّيهِ بِأَبِيهِ وَأُمِّهِ ثُمَّ انْطَلَقَ بِهِمْ إِلَى حَدِيقَتِهِ فَبَسَطَ لَهُمْ بِسَاطًا ثُمَّ انْطَلَقَ إِلَى نَخْلَةٍ فَجَاءَ بِقِنْوٍ فَوَضَعَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفَلَا تَنَقَّيْتَ لَنَا مِنْ رُطَبِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَدْتُ أَنْ تَخْتَارُوا أَوْ قَالَ تَخَيَّرُوا مِنْ رُطَبِهِ وَبُسْرِهِ فَأَكَلُوا وَشَرِبُوا مِنْ ذَلِكَ الْمَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مِنْ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ ظِلٌّ بَارِدٌ وَرُطَبٌ طَيِّبٌ وَمَاءٌ بَارِدٌ ترمذي 2292
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةَ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنْ النَّعِيمِ قَالَ الزُّبَيْرُ يَا رَسُولَ اللَّهِ فَأَيُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ وَإِنَّمَا هُمَا الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ - ترمذي 3279
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ - ترمذي 3381
சிக்கனம் தேவை
தண்ணீர் சிக்கணத்தை வலியுறுத்தி சமீபத்தில் ஒரு கண்காட்சியில் சமீபத்தில் ஒருவர் ஒரு பக்கெட் தண்ணீரில் குளித்துக் காட்டினார். அதை எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள்.

பெருமானாரைப் பாருங்கள்.
وقد توضأ رسول الله صلى الله عليه وسلم بمد ، وتطهر بصاع وهو أربعة أمداد بمده
روت أم المؤمنين عائشة أنه صلى الله عليه وسلم كان يغتسل بقدر الصاع ويتوضأ بقدر المد

வீண் செய்யக்கூடாது.
தண்ணீர் மலிவாக கிடைக்கிறது என்பதால் உதாரித்தனமாக செலவ்ழிக்க்றோம்.
அரை வாளித் தண்ணீர் கிடைக்காமல் போனால் உடல் சுத்தம் எவ்வளவு சிக்கலாகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .
நல்ல தண்ணீர் சேர்ந்தார் போல் 4 நாள் கிடைக்காமல் போனால் என்ன பாடு என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்/
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ

தண்ணிர் குழாயை சரியாக மூடாமல் தண்ணீர் சொட்டுமானால் ஒரு நாள் முழுவதும் சொட்டுகிற தண்ணீரால் 6 லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

மாசு படுத்தக் கூடாது- தண்ணீர் மாசுபடாமல் பாதுக்க பெருமானார் (ஸல்)  உத்தரவிட்டார்கள்
ஹதீஸ் நூல்களில் ஒரு அத்தியாயம் இப்படி இருக்கிறது,
بَاب الْأَمْرِ بِتَغْطِيَةِ الْإِنَاءِ وَإِيكَاءِ السِّقَاءِ وَإِغْلَاقِ الْأَبْوَابِ وَذِكْرِ اسْمِ اللَّهِ عَلَيْهَا وَإِطْفَاءِ السِّرَاجِ وَالنَّارِ عِنْدَ النَّوْمِ وَكَفِّ الصِّبْيَانِ وَالْمَوَاشِي بَعْدَ الْمَغْرِبِ  (صحيح مسلم )
அதில் பெருமானார் இப்படி அறிவுறுத்து கிறார்கள்


عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ مسلم4099
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.

உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ إِلَّا نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ – مسلم

பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَسْقَى فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَلَا نَسْقِيكَ نَبِيذًا فَقَالَ بَلَى قَالَ فَخَرَجَ الرَّجُلُ يَسْعَى فَجَاءَ بِقَدَحٍ فِيهِ نَبِيذٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَّا خَمَّرْتَهُ وَلَوْ تَعْرُضُ عَلَيْهِ عُودًا قَالَ فَشَرِبَ

ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! குடிப்பதற்குப் பழச் சாறு தரட்டுமா?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி' என்றார்கள்.
உடனே அந்த மனிதர் விரைந்து சென்று ஒரு கோப்பையில் பழச் சாறு கொண்டு வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டு விட்டு, பிறகு அதை அருந்தினார்கள்.

பாதுகாக்கப்படாத உணவு குடிநீர் நோய் உண்டாக காரணமாகும் என்ற பெருமானாரின் எச்சரிக்கை மிக முக்கியமாக கவனிக்கத் தக்கதாகும்.
இன்றைக்கு உலகில் பரவுகிற பெருநோய்கள் பலதும் தண்ணீரினால் பரவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறது.
காலரா, வயிற்றுப் போக்கு மலேரியா சிக்கன் குணியா போன்ற நோய்கள் மாசடைந்த தண்ணீரினால் உருவாகின்றன.
பெரும்பாலான் நோய்கள் பாதுகாப்பற்ற தண்ணீரினால் பரவுகின்றன
தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்கும் பெருமானாரின் அறிவுரை இந்த நூற்றாண்டின் மிக முக்கிய தேவையாக மாறியிருக்கிறது.

அது மட்டுமல்ல தண்ணீரை மாசுபடுத்து காரியங்களை பெருமானார் கண்டித்துள்ளார்கள்.

பாத்திரத்தினுள் மூச்சு விடுவது வெறுக்கத் தக்கது . பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கது என்பது பெருமானாரின் வழி முறை

عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ   

عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ

عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ- البخاري
தண்ணீரை மாசுபடுத்துகிற காரியம் மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரும் கேடாகும். சாயப் பட்டரைகள் தோல் தொழிற்சாலைகள் இராசயம் ஆலைகள் அனல் மின் நிலையங்கள் போன்ற பல தொழிற்சாலைகள் மனிதர்களுக்கு கிடைத்த மகத்தானா அருளை மாசுபடுத்தி வருகின்றன. அதனால் அடுத்த தலைமுறையின் வாழ்வு கேள்விக்குரியதாகி வருவது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

நாம் நம்மால் முடிந்த வரை தண்ணீரை மாசுபடுத்தும் காரியங்களை விட்டு விலகி நிற்க வேண்டும்.
மாசுபட்ட தண்ணீர்திறந்து கிடக்கும் சாக்கடை ஆகியவற்றிலிருந்து பரவும் நோய்கள் குறித்து விழிப்படைய வேண்டும்.

தண்ணீர் விச்யத்தில் நமது அடுத்த கடமை.   நீர்வழிகளை அடைத்து விடக்கூடாது. நீரை தராமல் தடுக்க கூடாது

நீராதங்களான் ஆறு குளம் குட்டைகளை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல. அதில் நம்மில் ஒவ்வொரு தனி நபருக்கும் பொறுப்பு இருக்கிறது.

நிலத்தடிநீரைப் பாதுகாக்க வேண்டிய விஷயத்திலும் நமது பங்கை  நாம் மறந்து விடக் கூடாது.
இந்தக் குட்டையில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நிற்பதால் யாருகு என்ன பயன் நினைத்து பிளாட் போட்டு விடுகிறார்கள். இந்தக் குட்டையில் தேங்கி நிற்கும் நீர் தான் சில கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற நிலத்தடி நீருக்கு – நாம் போர் போட்டு உறிஞ்சுவதற்கான ஆதாரம் என்பதை மறந்து விடுகிறோம்.
இரு நூறு குடியிருப்புக்களை உருவாக்குவதற்காக இரு குட்டை மூடப்படுமானால் இரண்டு இலட்சம் பேருக்கான நீராதம் பாதிப்படைகிறது. நிரந்தரமாக.
  
த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்ததா ம‌னித சமூக‌ம்? ‌நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

தண்ணீர் முழு மனித குலத்திற்கும் சொந்தமானது, ஒரு சாரார் தமது அத்தியாவசியத் தேவைக்கு தண்ணீர் தேடும் உரிமையை யாரும் மறுக்க கூடாது,

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ
சிரம்மின்றி கிடைக்கிற உபரியான தண்ணீரை விற்பதை பெருமானார் (ஸல்) தடை செய்தார்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ

மேட்டில வசிக்கிறவன் தன் கணுக்கால் வரை மட்டுமே தண்ணீரை தடுத்து வைத்துக் கொள்ள அனுமதியுண்டு, மிஞ்சியதை வழிந்தோடி கீழே இருப்பவர்களுக்கு செல்ல விட்டு விட வேண்டும்

أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ

தண்ணீர் விசயத்தில் இஸ்லாத்தின் இன்னொரு வழிகாட்டுதல்  தண்ணீர் தர்ம்ம்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُؤْمِنٍ أَطْعَمَ مُؤْمِنًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُؤْمِنٍ سَقَى مُؤْمِنًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ وَأَيُّمَا مُؤْمِنٍ كَسَا مُؤْمِنًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ

عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ النساءي
أَهْلُ الْجَنَّةِ فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ يَا فُلَانُ أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً قَالَ فَيَشْفَعُ لَهُ - إبن ماجة
قَالَ نَعَمْ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ حَرَّى أَجْرٌ

இனி மூன்றாம் உலக் யுத்தம் ஒன்றும் வரும் என்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என்று ஐநா அச்சுறுத்து கிறது.

அல்லாஹ் அத்தைகைய நிலையிலிருந்து உலகை காப்பானாக! தாராளமான மழை வளத்தை தந்தருள்வானாக! அதை பாதுகாப்பாக செலவழிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்து வழ்ங்கும் பக்குவத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!