வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 29, 2014

நுகர்வு மோகத்திற்கு தீர்வு உள்ளப் பரிசுத்தமே!



நம்மிடையே நுகர்வு கலாச்சாரம் பெருகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம் வீடுகளிலும்.

நுகர்வு கலாச்சாரம் என்றால் தேவையில்லாமல் பொருட்களை வாங்குவது அல்லது பெறுமைக்காக வாங்குவது. அல்லது மாற்றிக் கொண்டிருப்பது. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் பணத்தை அநியாயத்திற்கு செலவு செய்வது.

பெரியவர்கள் குடும்பத்தலைவிகள் மாணவர்கள் சிறுவர்கள் குழந்தைகள் என எல்லாமட்ட்த்திலும் இந்த நுகர்வு கலாச்சாரம் பரவிவருகிறது,

ஒவ்வொரு முறை கடைவீதிக்கு செல்கிற போதும் ஏதாவது புதிய பொருள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. 

வீடு பெறுக்குகிற துடைப்பம் 10 ரூபாயில் கிடைத்தது. அதை பல மாதங்களுக்கு கட்டாந்தரையில் பயன்படுத்தினார்கள். இப்போது ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் துடைப்பம் விற்கிறது. மாதத்திற்கு ஒன்று தேவைப்படுகிறது. மக்களின் வாங்கும் மோகத்தை அறிந்த கம்பெனிகள் அரை மாத்த்திற்க்குள் வலுவிழந்து விடுகிறவாறு அதை தயார் செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஆண்டுக்கணக்கில் கார் வைத்திருந்தார்கள். இப்போது ஆண்டுக்கு ஒரு கார் மாற்றுகிறார்கள். இரு சக்கர வாகனமும் இப்படித்தான்,

இன்றைய நடுத்தர சமூகம் கூட மாத்திற்கு ஒரு செல் போனை மாற்றிக் கொண்டிருக்கிறது. தவனை முறையில் போன் வாங்க விளம்பரங்கள் தூண்டுகின்றன.

சில பெரிய வீடுகளில் வாங்கிய பொருட்களை எதற்கு வாங்கினோம் என்று தெரியாமலே அட்டை பிரிக்கப் படாமலே குப்பை கூடைகளுக்குப் போடுகிறார்கள். 

மக்களை நுகர்வு கலாச்சாரத்திற்குள் இழுத்து விடுவதில் விளம்பரங்களும் ஷாப்பிங் மால்களும் முக்கியப் பங்கு  வகிக்கின்றன. படித்தவர்கள் என்றும் நிபுணர்கள் என்றும் கருதப் படுகிற மக்கள் கூட சிந்திக்கும் திறனற்றவர்களாகி இந்த விளம்பரங்களுக்கு அடிமையாகி பணத்தை வீணடிக்கிறார்கள்.
இந்த நுகர்வு மோகம் ஒரு புறம் ஹாபி யாகவும் மறுபுறம் பெறுமையைக் காட்டும் ஊடகமாகவும் மாறிவிட்ட்து.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்வசதியான குடும்பம் தான்கணவனும் மனைவியும் சம்பாதிக்கிறார்கள். ஒரு மதிப்பான பகுதியில் அபார்ட்மெண்டில் பிளாட் வாங்கினார்கள். தேவையே இல்லை. இருக்கிற வீடு நன்றாகத்தான் இருந்த்து. ஆனால் அது அந்தஸ்து அல்ல என்று கருதியும் ஸ்விம்மிங் பூல்கேட்டட் கம்யூனிட்டிஜிம் போன்ற விளம்பரத்தின் இழுப்புக்கு மயங்கியும் குடியிருந்த வீட்டை விற்று அந்த பிளாட்டை வாங்கினார்கள். அதற்கு மேலும் பணம் கட்ட வேண்டியிருந்த்து. அதற்காக வங்கியிலிருந்து வாங்கிய தொகைக்கு மாதத்தவணை செலுத்த அந்தப் பெண் வேலைக்கு போனாள். கணவன் இரண்டு ஷிப்டுகள் வேலை செய்ய வேண்டியதாயிற்று, பிளாட்டை விற்று விடலாம் என்று நினைத்த போது ரியல் எஸ்டேட் மதிப்பு வெகுவாக சரிந்திருந்த்து.  கணவனும் மனைவியும் ஒரு நாள் சொன்னார்கள் ஹஜ்ரத் வாழ்கையே வெறுத்துப் போச்சு! நாங்க இரண்டு பேரும் நிம்மதியா உட்கார்ந்து பேசியே பல நாளாயிடுச்சு!

வெளிநாடுகளில் இந்தக் காட்சிகள் சகஜம். பெரிய கம்பெனியில் அதிகாரியாக இருப்பவன், இரவு நேரங்களில் வாடகை கார் ஓட்டுவான். காரணம் விசாரித்தீர்கள் என்றால் இது மாதிரி ஏதாவது ஒரு தவணைத் தொகை கட்டுவதற்காகத்தான் இருக்கும்.

கண்ட்தையும் தகுதிக்கும் தேவைக்கும் மீறி வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம் செல்வத்தை அழித்துவிடும் எனது மாத்திரமல்ல  வாழ்க்கையில் நிம்மதியை பறித்துவிடவும் செய்யும்,

நுகர்வு கலாச்சாரம் பெரியவர்களைத் தாண்டி சிறுவர்களிடமும் பள்ளி கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களிடமும் பெருகிவருகிறது. ஆடைகள் உபகரணங்கள், வாகனங்கள். என்பதை தாண்டி பார்டிகள் என்ற பெயரிலும் அவர்களை நுகர்வு கலாச்சாரம் சீரழித்து வருகிறது.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.
சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.
ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.
சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.
நுகர்வு கலாச்சாரத்தின் வழியே நமது உணவுப் பழக்கங்கள் மாறிவருகின்றன. அது கற்பனைக்கு அப்பாற்பட்ட தீமைகளை நம்மை அறியாமலே நமக்குள் ஏறபடுத்துகின்றன

ஒரு அறிக்கை கூறுகிறது.

நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள்.

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு..வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..

குழந்தைகளை அதிக காசு செலவழித்து பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது கூட் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அம்சமே! பல பெற்றோர்கள் குறிப்பாக நடுத்தரவர்க்கத்து பெற்றோர்கள் அற்ப பெருமைக்காக ஸ்டார் பள்ளிக் கூடங்களில் சேர்க்க பெரும் முய்ற்சி செய்கிறார்கள். கல்வி பள்ளிக் கூடங்களைப் பொருத்த்து அல்ல, என்பதை இப்போதைய ரிசல்டுகள் வெளிப்படுத்துகின்றன,
இந்த ஆண்டு sslc  தேர்வில் முதலிடம் பெற்ற பஹீரா என்ற பெண் அரசுப் பள்ளியில் படித்தவர். இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற பலரும் சாமாண்ய பள்ளியில் படித்தவர்கள்.

எனவே ஸ்டார் பள்ளிகளைத் தேடும் பெற்றோர்கள் உண்மையில் தங்களது பிள்ளைகளின் படிப்புக்காக அல்ல, தங்களது பர்ஸின் வெயிட்டைக் காட்டவே அத்தகைய பள்ளிக் கூடங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு தீமையே!

நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு காசின் பின்னணியிலும் இறைவனின் பரக்கத்தும் சைத்தானின் லஃனத்தும் மறைந்திருக்கிறது. அதை எப்படி பெறுகிறோம் செலவு செய்கிறோம் என்பதை பெருத்து அது பரகத்தாகவோ லஃனத்தாகவோ மாறுகிறது.

அதனால் இஸ்லாம் நுகர்வு கலாச்சாரத்தின் தீமையை வன்மையாக கண்டிக்கிறது,

عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال له فراش للرجل وفراش لامرأته والثالث للضيف والرابع للشيطان   

صحيح مسلم ல் كتاب اللباس والزينة பாடத்தில்
   باب كراهة ما زاد على الحاجة من الفراش واللباس
என்ற தலைப்பில் இந்த ஹதீஸ் இடம் பெற்று ள்ளது.

சைத்தானுக்குரியது என்றால் இரண்டு கருத்து
ஒன்று மனிதனிடம் இருக்கிற தற்பெறுமை ஆணவம் போன்ற தீய குணங்கள் சைத்தானை திருபதிப்படுத்துகின்றன. இந்த இயல்புகளை தூண்டிவிட இக்காரியங்களை சைத்தான் பயன்படுத்திக் கொள்கிறான்.

இரண்டாவது எதார்த்தமாகவே சைத்தான் அவற்றில் குடியிருக்கிறான் எனபது,

قال العلماء : معناه أن ما زاد على الحاجة فاتخاذه إنما هو للمباهاة والاختيال والالتهاء بزينة الدنيا ، وما كان بهذه الصفة فهو مذموم ، وكل مذموم يضاف إلى الشيطان ؛ لأنه يرتضيه ، ويوسوس به ، ويحسنه ، ويساعد عليه . وقيل : إنه على ظاهره ، وأنه إذا كان لغير حاجة كان للشيطان عليه مبيت ومقيل ، كما أنه يحصل له المبيت بالبيت الذي لا يذكر الله تعالى صاحبه عند دخوله عشاء .

இன்றைய இந்த ஜும் ஆவில் நுகர்வு கலாச்சாரத்தின் தீமைகளைப் பற்றியல்ல அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு பிரதான  வழிமுறையை ப் பார்க்க இருக்கிறோம்.

இன்றைய இந்த மோசமான நுகர்வு கலாச்சாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இதயப் பரிசுத்தம் இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் உள்ளப் பக்குவம் முக்கிய தேவையாகும்.

தஜ்கியதுன் னப்ஸ் என்பது வண்க்க வழிபாடுகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் நிம்மதிக்கும் அத்தியாவசிய தேவையாகும்.

பெருமானார் (ஸல்) அவர்களை அனுப்பியதற்கான நோக்கத்தை விவரிக்கிற போது இரண்டாவதாக இதயப் பரிசுத்தம் பற்றி இறைவன் கூறுகிறான். இதன் முக்கியத்துவத்தை அது பிரதிபலிக்கிறது,

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ     

 அஷ்ஷம்சு அத்தியாயத்தில் பத்து விசயங்களின் மீது சத்தியம் செய்து விட்டு அல்லாஹ் சொல்லுகிற செய்தி
قد أفلح من زكاها

இந்த வசன்ங்களின் படி உள்ளத்தை பரிசுத்தப் படுத்திக் கொள்ளுதல் என்றால் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் வாழ்தல் என்று அர்த்தம்.  

இதை இஹ்ஸான் என்று நபிமொழிகள் கூறுகின்றன. இத்தகைய நிலை வந்து விட்டால் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும்.

இத்தகைய நிலைக்கு ஆளானதால் நபித்தோழர்கள், கழிப்பறையில், படுக்கையறையில், ஆடையைஉயர்த்துவதற்கும் யோசித்தார்கள். இதனால் அல்லாஹ் திருக்குர்ஆனில் 11: 5 வது  வசனத்தை இறக்கி வைக்க வேண்டி வந்தது.

الا انهم يثنون صدورهم ليستخفوامنه الا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون انه عليم بدات الصدور)  .11.5   (

அவர்கள் அல்லாஹ்விடமிருந்து மறைவை தேடி  தம் ஆடைகளால் இதயங்களைச் சுற்றி மறைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது மூடியிருக்கிற இதயங்களுக்குள் ரகசியமாக வைத்திருப்பதை அல்லாஹ் அறிகிறான். அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கு அறிகிறவன் என்பதை நீர் அறிந்து கொள்வீராக.. நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 11; 5.)

பெரியவர்கள் இந்த நிலையை உணர்ந்து கொள்வதோடு சிறுவர்களயும் இதே அளவு கோளில் பக்குப் படுத்தி வந்தால் நல்ல மாற்றங்களை நிச்சயமாக பார்க்க முடியும்.

இத்தகுல்லாஹ் என்ற வார்த்தையும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையும் வீடுகளில் பரிமாறப்படுமானால் நிச்சயமாக மாற்றத்தைப் பார்க்க முடியும்.

ஆனால் இன்றைய துரதிஷடம் நடிகைகளின் மார்கெட் நிலவரங்களை கூடங்களில் உட்கார்ந்து பேசும் குடும்பத்தினர். அல்லாஹ் ரசூல் என்று பேசவே வெட்கப்படுகின்றனர்.  

நுகர்வு கலாச்சாரத்தின் மிக முக்கிய காரணிகளில் ஒன்று தற்பெருமையாகும்.  தன்னை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் கொள்ளவும் தமது பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளவுமே பல நேரத்தில் தேவையற்ற பொருட்களை நாம் வாங்கிக் குவிக்கிறோம். அல்லது மாற்றித் தள்ளுகிறோம்.

முஃமின்கள் யோசிக்க வேண்டும். உலகம் நிரந்தரம், ஆரோக்கியம் நிரந்தரம், செல்வம் நிரந்தரம், நிம்மதி நிரந்தரம் ஏன் ஹிதாயத் நிரந்தரம் என்று நினைக்கிறோமா?

தற்பெருமைக்கு இங்கே இடமே இல்லை. ஒவ்வொருவருக்கும் மேல இறைவன் இன்னொருவனை வைத்திருக்கிறான். அதே போல ஒவ்வொரு உயர்வுக்குப் பின்னரும் இறைவன் ஒரு பள்ளத்தை வைத்திருக்கிறான்.

தற்பெருமை மிக மோசமானது என இஸ்லாம் எச்சரிக்கிறது,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ

ஆன்மிக அறிஞர்கள் சொல்கிறார்கள்

الكبر اعظم من السرق والزنا وقتل النقس

நுகர்வுப் பொருட்களை வைத்து பெருமை தேடுவது தீமையின் அறிகுறியாகும்

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
ياتي علي الناس زمان شرفهم متاعهم
இப்படி ஒரு சூழ்நிலை பரவும் என்றால் பஞ்சமும் அக்கிரம அரசும் ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 இந்தச் செய்தி இந்த ஹதீஸீல் விரிவாக உள்ளது.

قال النبي صلى الله عليه وآله : « يأتي على الناس زمان بطونهم آلهتهم ونساؤهم قبلتهم ، ودنانيرهم دينهم ، وشرفهم متاعهم ، لا يبقى من الايمان إلا اسمه ، ومن الاسلام إلا رسمه ، ولا من القرآن إلا درسه ، مساجدهم معمورة ، وقلوبهم خراب من الهدى ، علماؤهم أشر خلق الله على وجه الأرض . حينئذ ابتلاهم الله بأربع خصال : جور من السلطان ، وقحط من الزمان ، وظلم من الولاة والحكام ، فتعجب الصحابة وقالوا : يا رسول الله أيعبدون الأصنام ؟ قال : نعم ، كل درهم عندهم صنم-   كنز العمال

நுகர்வு கலாச்சாரத்திற்கு இன்னொரு காரணம் உலக் ஆசையாகும். முஃமின் கள அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளார்கள். ஏனெனில் இந்த ஆசை பெருகுமானால் பண்டிகை கொண்டாடுவதற்காக மாணவர்கள் கத்தியை கையில் எடுத்தார்களே அது போல எல்லா உயர்ந்த பண்பாடுகளும் பறிபோய்விடும். حب الدنيا راس كل خطياه. رواه ترمذي رزين