வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 11, 2016

ஓதிப்பார்த்தல் குர் ஆனின் மகிமை

திருக்குர் ஆனுடைய கருத்தழகு அபரிமிதமானது,
அதன் சக்திக்கு கிடைத்த வெற்றிச் சான்றுகள் ஏராளம் உண்டு.
குழந்தை எப்படி கருத்தரிக்கிறது என்பதை குர் ஆன் கூறுகிறது
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ(12)ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ(13)ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ(14)
கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ( (Spermatazoa) எனும் அதாவது  விந்தணு எனும்  செல்லை மைக்ரோஸ்கூஒ மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

நவீன விஞ்ஞானம் 1677 க்கு முன் யோசித்தும் பார்த்திருக்க முடியாத கருவியல் தத்துவத்தை திருக்குர் ஆன் ஆயுரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருப்பதை கண்டு அதிசயப்பட்ட கனடா நாட்டு கருவியல் அறிஞர் கீத் மோர் இஸ்லாத்தை ஏற்றார்.
1981-ல் சவூதிதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள
அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக கூறினார், 

திருக்குர் ஆனுடைய  சொல் அழகு அதை விட அபரிமிதமானது,
அதன் சக்திக்கு கிடைத்த வெற்றி எராளம். ஹஜ்ரத் உமர் (ரலி) துபைல் பின் அம்ரு (ரலி)  போன்ற சஹாபாக்கள் திருக்குர் ஆனின் சொல்லழகுக்கு மயங்கியவர்களே!
திருக்குர் ஆனுக்கு வேறு பல சக்திகளும் உண்டு
அதில் பிரதானமானது அதன் மூலம் கிடைக்கும் நிவாரணிகள் ஆகும்.
திருக்குர் ஆனின் மூன்று வசனங்கள் குர் ஆன் ஒரு நிவாரணச் சக்தி என்பதை கூறுகின்றன,
·        (يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ) [يونس: 57].
·        (وَنُنَزِّلُ مِنَ الْقُرْآَنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا) [الإسراء: 82].
·        (وَلَوْ جَعَلْنَاهُ قُرْآَنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آَيَاتُهُ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ آَمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آَذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ) [فصلت: 44].

திருக்குர் ஆனின் ஷிபா நிவாரணம் என்ற வார்த்தை 4 இடத்தில் வருகிறது. இம்மூன்றிற்கு அடுத்த படியாக தேன் பற்றிக் கூறும் போதும் அதில் ஷிபா இருக்கிறது என்கிறான் இறைவன்
يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ) [النحل: 68-69].

திருக்குர் ஆனிய சிந்தனையாளர்கள் கூறுவதுண்டு,
நிவாரணங்களில்  நான்கில் ஒரு பங்கு மட்டுமே மருந்து மாத்திரைகளில் இருக்கிறது. மற்ற மூன்று பங்கும் திருக்குர் ஆனில் இருக்கிறது.

திருக்குர் ஆனில் இருக்கிறது என்றால் திருக்குர் ஆனை ஓது வதன மூலம் ஓதி நமக்கு நாமே ஓதிக்கொள்வதன் மூலமும் பிறருக்கு ஓதி ஊதுவதின் மூலம் நிவாரணம் பெற முடியும் என்பதாகும்.

இது மார்க்கம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட ஒரு நடை முறையாகும்.

எல்லா சிக்கல்கள்களிலிருந்து பாதுகாப்பு தேட உதவும் இரு அத்தியாயங்கள்

عن ابن عابس الجهني أن النبي صلى الله عليه وسلم قال له "يا ابن عابس ألا أدلك - أو- ألا أخبرك بأفضل ما يتعوذ به المتعوذون؟ "قال بلى يا رسول الله قال "قل أعوذ برب الفلق" و "قل أعوذ برب الناس" هاتان السورتان فهذه طرق عن عقبة كالمتواترة عنه تفيد القطع عند كثير من المحققين في الحديث.  (இப்னு கஸீர் )

عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ بهن وينفث في كفيه ويمسح بهما رأسه ووجهه وما أقبل من جسده
عن أبي سعيد أن رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ من أعين الجان وأعين الانس فلما نزلت المعوذتين أخذ بهما وترك ما سواهما. رواه الترمذي
 பிறரைக் கொண்டு ஓதி ஊதுதல்
قال الإمام مالك عن ابن شهاب عن عروة عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اشتكى يقرأ على نفسه بالمعوذتين وينفث فلما اشتد وجعه كنت اقرأ عليه بالمعوذات وأمسح بيده عليه رجاء بركتها
தேள் கடி பட்டவனுக்கு பாத்திஹா சூராவை ஓதி குணப்படுத்திய சஹாபி
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كُنَّا فِي مَسِيرٍ لَنَا فَنَزَلْنَا فَجَاءَتْ جَارِيَةٌ فَقَالَتْ إِنَّ سَيِّدَ الْحَيِّ سَلِيمٌ وَإِنَّ نَفَرَنَا غَيْبٌ فَهَلْ مِنْكُمْ رَاقٍ فَقَامَ مَعَهَا رَجُلٌ مَا كُنَّا نَأْبُنُهُ بِرُقْيَةٍ فَرَقَاهُ فَبَرَأَ فَأَمَرَ لَهُ بِثَلَاثِينَ شَاةً وَسَقَانَا لَبَنًا فَلَمَّا رَجَعَ قُلْنَا لَهُ أَكُنْتَ تُحْسِنُ رُقْيَةً أَوْ كُنْتَ تَرْقِي قَالَ لَا مَا رَقَيْتُ إِلَّا بِأُمِّ الْكِتَابِ قُلْنَا لَا تُحْدِثُوا شَيْئًا حَتَّى نَأْتِيَ أَوْ نَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَكَرْنَاهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَمَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ புகாரி 5007
குர் ஆன் ஓதுகையில் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டோர் பற்றிய செய்திகள் பலவுண்டு

وقال طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ رحمه الله تعالى: "كَانَ يُقَالُ: أَنَّ الْمَرِيضَ إِذَا قُرِئَ عِنْدَهُ الْقُرْآنُ وَجَدَ لَهُ خِفَّةً، فَدَخَلْتُ عَلَى خَيْثَمَةَ وَهُوَ مَرِيضٌ، فَقُلْتُ: إِنِّي أَرَاكَ الْيَوْمَ صَالِحًا، قَالَ: إِنَّهُ قُرِئَ عِنْدِي الْقُرْآنُ"، رواه البيهقي.
தீய சக்திகளை விரண்டோட வைக்கும் பகரா
وفي الترمذي بسند حسن عنه صلى الله عليه وسلم أنه قال : "لا تجعلوا بيوتكم قبورا, فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان"
செய்வினையிலிருந்து நிவாரணம் அளிக்கும் சூரத்துல் பகரா
عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم :  اقرؤا سورة البقرة فان أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة
والبطلة : هم السحرة

இந்த அத்தியாயம் எதெற்கெல்லாம் நிவாரனம் தரும்?  ஆய்வு அறிஞர்களின் கருத்து

·        إلى كل مصاب أصيب بالسحر او بالمس او بالعين او بالقلق
·        إلى من توالت عليه المصائب  
·        إلى من فقد غالياவிலை மதிப்புள்ள பொருளை தொலைத்தவன்
·        إلى كل مريض يبحث عن الدواء سواء وجده أم لم يجده
·        إلى من حرم الذرية மலடன்
·        إلى كل امرأة لا يستمر حملها கர்ப்பம் தங்காமல் போகும் பெண
·        إلى من أراد البركة في جميع شؤونه

ஆயத்துல் குர்ஸீ
பகராவின் 255 வது வசனமான ஆயத்துல் குர்ஸீ சகல பாதுகாப்புக்கு பொருத்தமாக பயன்படுத்தப் படும் வசனமாகும்,

பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள்

آَمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آَمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ * لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ)

وقد أخبر سيدنا محمد صلى الله عليه وسلم أنه من قرأ هاتين الآيتين في ليلة كفتاه من أي شر ومرض وهم وغم

சூரத்துல் இஹ்லாஸ்

நிவாரணங்களுக்கு பயன்படும் மிகச் சக்தி வாய்ந்த வசனமாகும். குல் ஹுவல்லாஹு அஹ்த் என்பதிலுள்ள 11 எழுத்துக்களுக்கு ஏற்ப 11 முறை இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதுவது சிறந்த பலன் தரும் என்பது அறிஞர்களின் கருத்து

மனக் கலக்கத்திற்கு மருந்து

சூரத்துல் குறைஷ் அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஓதுவதன் மூலம் மனக் கலக்கத்திலிருந்து விடுபட முடியும்

பின்னடைவிலிருந்து ஈடேற்றம் பெற

யூசுப் அத்தியாயத்தை ஓது வது பின்னடைவிலிருந்து ஈடேற்றம் பெற உதவும். மக்காவில் பெருமானார் (ஸல்) அவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போது இந்த அத்தியாயம் அருளப்பட்டது,

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ) [يونس: 58].

இந்த ஆயத்தை மூன்று முறை ஒதுவதும் மகிழ்ச்சியை மீட்டுத்தரும்,

யாசீன்
யாசீன் அத்தியாயத்தை அதிகமாக ஓது வது பெரு நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் சிரமங்களை குறைக்கவும் சிரமங்களிலிருந்து விடுபடவும் உதவும்

யாசீனை கேட்பதும் அப்படியே!

தோல் வியாதியிலிருந்து விடுபட
·         أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ) [الأنبياء: 83].
·         اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُتَشَابِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ) [الزمر: 23].

மன நோய் அதிகார நெருக்குதல் ஆகியவற்றிலிருந்து விடுபட

·         لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ) [الأنبياء: 87]

வாரிசுகளை தேட

(رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ) [الأنبياء: 87].

கண் காது மற்ற படைப்பியல் கோளாறுகளுக்கு

சூரத்துல் அஃலா வை ஏழு தடவை ஓதுவதும் அத்துடன் அதிகமாக சூரத்துல் இஹ்லாஸ் சூரத்து பலத் அதிகமாக ஓதுவதும் பயன் தரும்.

அலாரம்

அலாரம் இல்லாமலே குறித்த நேரத்தில் எழுந்திருக்க

குல் லவ்கான பஹ்ரு என்று தொடங்கி கஃபு அத்தியாயத்தின் கடைசி வசனங்களை ஓதினால் குறித்த நேரத்தில் எழுந்திருக்கலாம் என முப்தீ முஹம்மது ஷபீ சாஹிப் ம ஆரிபில் முன்னோர்களை ஆதாரம் காட்டிக் கூறுகிறார்.

தூக்கம் வர
சூரத்துல் முஜாதலா வை ஒரு தடவை ஓதினால் தூக்கம் குறித்த நேரத்தில் வரும்,
தூக்கம் வராமல் சிரம்ப்படுகிறவர்களின் அருகிலிருந்து முஜாதலா அத்தியாயத்தை ஓதினால் அவர்களுக்கு தூக்கம் வரும்.

இந்த ஆயத்துக்கள் அல்லது அத்தியாயங்கள் இன்ன பலனை தரும் என்பது அந்த அத்தியாயங்கள் அது சார்ந்த அல்லது அது தொடர்புடைய ஒரு வசனத்தை பேசுகிறது என்பதை அறிந்து அனுபத்தில் கண்டதின் அடிப்படையிலாகும். சில பெரியவர்களுக்கு மன உதிப்பாக தோன்றியவையும் உண்டு, ஹதீஸுகளின் ஆய்வின் அடிப்படையிலும் உண்டும்

உதாரணத்திற்கு தூக்கம் வருவதற்கு முஜாதலா அத்தியாயத்தையும் இணைக்கும் ஆய்வாளர்கள் இப்படி கூறுகிறார்கள்,

பொதுவாக தூக்கத்தை காதுடன் தொடர்பு படுத்தி குர் ஆன் பல இடத்திலும் கூறியிருக்கிறது,

குகை வாசிகளைப் தூங்க வைத்ததைப் பற்றி கூறுகிற போது

فضربنا علي آذانهم سنين عددا

என்று காதுகளை அடைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்,

பிந்தைய கால விஞ்ஞானம் தூக்கம் என்பதற்கான சரியான பொருள் கண்ணை மூடுவதல்ல காது தன் வேலையை நிறுத்திக் கொள்வது தான் என்று கண்டு பிடித்தார்கள்,
அதே போல தூக்கத்திலிருந்து விழிப்பது என்பதும் கண்ணை திறப்பதல்ல காது சப்தங்களை உணரத் தொடங்குவது தான் என்று விளக்கினார்கள்.

முஜாதலா அத்தியாயத்தின் முதல் வசனம் கேள்வி சப்பந்தப்பட்ட கருத்துடன் தொடங்குவதால் தூக்கம் வருவதற்கும் அதற்கு ஒரு தொடர்பு இருக்கிறது

இவ்வாறு ஓதிக் கொள்ளுதல் அல்லது ஓதிப்பார்த்தல் தொடர்பான ஒவ்வொரு வசனமும் அதிலிருந்து கிடைக்கிற நிவாரணத்துடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பை வைத்திருக்கீறது,

எல்லா நோய்களுக்கும் நிவாரணத்தை தன் கையில் வைத்திருக்கும் இறைவன் அவனுடைய வேதத்தின் வசனங்களை அந்த நிவாரணத்திற்கு பிரதான காரணமாக ஆக்குகிறான்.

எனவே சகல் நிவாரணங்களுக்கும் குர் ஆனை ஒரு மருந்தாக பயன்படுத்துவது ஈமானிய எழிலாகும்.

தனக்கு தானே ஓதிப்பார்த்தல் அல்லது பிறரிடம் ஒதிப்பார்த்தல் ஆகிய அனைத்தும் ஈமானிய செயல்பாடுகளாகும் , பெருமானார் (ஸல்) மற்றும் மார்க்க முன்னோடிகளின் நடை முறையாகும்.

ஓதிப்பார்ப்பதற்கு தடை கூறி வந்துள்ள செய்திகள் அனைத்தும் ஷிர்கான மார்க்கத்திற்கு முரணான வழிகளில் நடை பெறும் ஓதிப்பார்த்தல் தொடர்புடையதாகும்.

விவர மற்ற சிலர் விசயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் - இது பெருமானாரும் சஹாபாக்களும் செய்த பணி என்பதை சற்றும் நினைவில் கொள்ளாமல் - ஓதிப்பார்த்தலை ஷிர்க் என்று பிதற்ற் கிறார்கள்,

இது இஸ்லாமின் எதார்த்திற்கு முரணானதாகும்

அதே நேரத்தில் ஓதிப்பார்த்தலுக்கு சில வரையறைகள் இருக்கிறது, அதை முஃமின்கள் நினைவில் கொள்ள வேண்டும்

فالرقية الشرعية هي ما اجتمع فيها ثلاثة أمور :

1 - أن تكون بكلام الله أو بأسمائه وصفاته أو المأثور عن النبي صلى الله عليه وسلم .
2 - أن يعرف معناه : فكل اسم مجهول فليس لأحد أن يرقي به فضلاً عن أن يدعو به ولو عرف معناه أنه يكره الدعاء بغير العربية ، وإنما يرخص لمن لا يحسن العربية .
3 -أن يعتقد أن الرقية لا تؤثر بذاتها بل بتقدير الله تعالى .

وقد قال صلى الله عليه وسلم : " لا بأس بالرقى ما لم تكن شركاً ". رواه مسلم .

குர் ஆனின் நிவாரணத்தை பெற தேவையான இரண்டு
1.   முழு நம்பிக்கையோடு ஓதுவது - ஓதிப்பார்ப்பது
2.   குர் ஆனின் படி செயல்படும் எண்ணம்

ஒதிப்பார்த்தலில் அல்லது நிவாரணம் தேடி ஒதிப்பார்க்கும் படி ஒருவரிடம் செல்கிற போது அந்த மனிதரிடம் அல்லது அந்த மனிதர் ஓதிப்பார்ப்பதில் மார்க்கத்திற்கு முர்ணானது இல்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்ளனும்.

தொழுகை இருக்கிறதா என்பதை பார்க்க தொடங்கிவிட்டாலே ஓதிப்பார்ப்பதற்கு தகுதியானவரை தெரிந்து கொள்ளலாம்.

குர் ஆனிய வசனங்களுக்கு இந்த ஷிபாவின் மகத்துவம் இருக்கீறது என்பதை உள்ளார்த்தமாக உணர்ந்து கொண்டால் ஓதிப்பார்ப்பது ஷிர்கா என்ற கேள்வி எழாது.

இதில் சில தவறான ஆசாமிகள் இருப்பதை காட்டி யாரும் சத்தியப்பாதையிலிருந்து மக்களை வழி திருப்பி விட முடியாது,

قال الإمام ابن القيم رحمه الله :  من لم يشفه القرآن فلا شفاه الله ..ومن لم يكفه فلا كفاه الله


1 comment:

  1. Afraasalma @gmaik.com4:47 AM

    அஸ்ஸலாமு அலைகும் ஹள்ரத்!இந்த உரையை தாங்கள் தந்தபொழுதே இதை பதிவிட்டேன் ஆனால் பதிவேற்கவில்லை தகவல் என்னவென்றால் உங்களது எழுத்தே ஒவ்வொரு ஜுமுஆவிலும் எனது உரை. ஓர் வோண்டுகோள்...ஓதிப்பார்த்தலை தொட்டு தல்ஸமாத் சார்ந்த விசயங்களையும் தந்தால் மிகப் பயனுல்லதாக இருக்கும் இங்கனம் பழவை மு. அமானுல்லாஹ் பாகவி

    ReplyDelete