வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 25, 2016

உணவே மருந்து

இன்றைய மனித வாழ்வு மருந்து மாத்திரைகளால் நிரம்பியிருக்கிறது.
முற்காலத்தில் மருந்து நோய் வந்தால் சாப்பிடுகிற பொருள்
இப்போது நோய் பெருகாமல் தடுக்கவும் அணுகாமல் காக்கவும் மருந்து அதிக அளவில் உபயோகிக்க்ப்படுகிறது.  
அதனால் குழந்தைகள் இளைஞர்கள் கூட தொடர்ந்து மருந்து சாப்பிடுகிற நிலையில் இருக்கிறார்கள்,
மருத்துவம் வளர வளர மனிதர்கள் அதிக மருந்து சாப்பிடுகிறார்கள்.
பழத்தட்டு என்பது போல மாத்திரைப் பெட்டி என்பதும் உணவுப் பந்தியில் ஒரு இடம் பிடித்து மாத்திரைகளும் அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகிவிட்டது, சிலர் ஒரு நாளைக்கு 15 – 20 மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.
அல்லாஹ் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிற நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! எல்லா நிலையிலும் ஆபியத்தை தந்தருள்வானாக!
அதே நேரத்தில் நோய் ஏற்படும் போது மருத்துவம் செய்து கொள்ள இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அதனால் தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக எந்த நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வது வாஜிப் என்று ஷாபி ஹன்பலி மத் ஹபின் சில அறிஞர்கள் கூறினாலும் அவசியமான கட்டத்தில் மருத்துவம் செய்து கொள்வது வாஜிபு என்பதே பெரும்பாலானா அறிஞர்களின் கருத்தாகும்.
أوجبه طائفة قليلة من أصحاب الشافعي وأحمد-  
أما إذا خشي الإنسان على نفسه التلف بتركه فإنه حينئذٍ يجب، وقد أخذ مجمع الفقه الإسلامي بالقول بوجوب التداوي إذا كان تركه يفضي إلى تلف النفس أو أحد الأعضاء أو العجز، أو كان المرض ينتقل ضرره إلى غيره، كالأمراض المعدية
تحفة المحتاج(3/182
அல்லாஹ் தேனைப் பற்றி சொல்கிற போது அதில் ஷிபா இருக்கிறது என்கிறான்.
فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ [[النحل:69]
இது மருத்துவம் செய்துகொள்வது அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தை தருகிறது.
நபி (ஸல்) அவர்கள் மருத்துவம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்.

عن أبي الدرداء - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -:« إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ - أبو داود(3874
عن أسامة بن شريك - رضي الله عنه - قال: قالت الأعراب يا رسول الله ألا نتداوى قال:« نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ شِفَاءً أَوْ قَالَ دَوَاءً إِلاَّ دَاءً وَاحِدًا ». قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ قَالَ:«الْهَرَمُ»- أخرجه أحمد(4/278)، وأبو داود(3855)
இஸ்லாமிய அறிஞர்கள் தேவைக்கு மருத்துவம் செய்வது கடமை என்று சொன்னாலும் பொதுவாக மருத்துவம் அனுமதிக்கப்பட்டதே என்று சொல்வதை கவனிக்க வேண்டும்.

ال المباركفوري بعد إيراده لحديث:« تَدَاوَوْا» فيه إثبات الطب والعلاج وأن التداوي مباح غير مكروه كما ذهب إليه بعض الناس، ونقل عن العيني قوله: فيه إباحة التداوي وجواز الطب
ஆயிஷா (ரலி) பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மருத்துவம் செய்பவராக இருந்தார்கள்
ولما سئلت أم المؤمنين عائشة - رضي الله عنها - عن علمها بالطب قالت: (إن رسول الله - صلى الله عليه وسلم - كان يسقم عند آخر عمره فكانت تقدم إليه وفود العرب من كل وجه فينعت لهم الإنعات، فكنت أعالجه- صفة الصفوة لابن الجوزي (2/33

இது  எதெற்கெடுத்தாலும் சட்டென மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கிற கருத்துக்கு உடன்பாடாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக ஜலதேசத்தை ப் பற்றி மருத்துவத்துறையில் ஒரு சொல் உண்டு.
“மாத்திரை சாப்பிடாவிட்டால் ஒரு சரி ஆக ஒரு வாரமாகும். மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாள் ஆகும்”.

சில சிரமங்களை சற்று பொறுத்துக் கொண்டால் தானே சரியாகி விடும். நமது உடல் அமைப்புக்கு அந்தச் சக்தியை அல்லாஹ் வைத்திருக்கிறான்.

அவசரப் பட்டு மாத்திரைகள் சாப்பிடுகிற போது சில கட்டங்களில் அதிக மாத்திரைகளைச் சாப்பிடுகிற போது தேவையற்ற பின் விளைவுகள் ஏற்படுகின்றன.

இங்கிலீஷ் மருத்துவம் என்று சொல்லப்படுகிற அலோபதி மருத்துவத் துறையில் தரப்படுகிற மாத்திரைகள் உடனடி நிவாரணத்திற்க்குரியதாக இருந்தாலும் அதில் பக்க விளைவுகள் அதிகம் இருப்பதை அத்துறை சார்ந்தவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

தலை வலி மூட்டு வலி, கால் வலிக்கு என்று தொடர்ந்து வலி மாத்திரைகள் சாப்பிடுகிற போது அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்

வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்திய சில சர்வேக்கள்.

சென்னையைச் சேர்ந்த-காது -மூக்கு -தொண்டை மருத்துவர் குமரேசன் கூறுகிறார்.
.
" காசநோய்க்காக ஸ்ட்ரெப்டோமைசின் எடுத்துக்கிட்ட நிறையப் பேருக்கு காது கேட்காமப் போன சம்பவம் நிகழ்ந்தபோதுதான் முதன்முதலா மருத்துவ உலகத்துக்கே இந்த பாதிப்பு பற்றி தெரிய வந்தது

குமரேசன், சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கிறார்... "உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கு. வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை இந்தப் பக்க விளைவுகள் நெருங்கப் பயப்படுறதா கண்டுப்பிடுச்சிருக்காங்க!"

மருந்து சாப்பிடுகிற போது அதன் விளைவுகளை முறியடிக்கிற காரியங்களை செய்வதாலும் நோய் குணமாகாமல் போகிறது அதிக நாள் மருந்து சாப்பிட நேருகிறது. அதனாலே ஒரு மருந்தை சாப்பிடுகிற போது அதற்கு ஒவ்வாதது எது என்பதை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலும் மாத்திரை மருந்துக்களின் சக்தியை வீணடித்து விடக்கூடியது என்று ஆய்வாளர்கள் சில வற்றை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அவற்றை நாபகத்தில் வைத்துக் கொள்வது நலம்

ஆல்கஹால் :
மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்து விடுகின்றது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
وعن أبي الدرداء رضي الله عنه قال : أوصاني خليلي صلى الله عليه وسلم: "لا تشرب الخمر، فإنها مفتاح كل شر". (رواه ابن ماجه).
பால் பொருட்கள் :
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து உணவுகள்: கீரைகளைத் தவிர்க்கனும்.
ஜல தோஷம் காயங்களை ஆற்றுதல் போன்ற வற்றிற்காக ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
அமிலத் தன்மை உள்ள உணவுகள் :
அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்து விடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்து விடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
 ஹெவி ஃபுட் :
மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் நிலை விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதிக சாப்பாடு பல வியாதிகளுக்கும் தாய்.
குர் ஆனின் ஒரு வசனத்தின் சிறு பகுதியில் மருத்துவத்தின் சாறு அடைத்து தரப்பட்டிருக்கிறது.
كلوا واشربوا ولا تسرفوا

ولا تسرفو  என்பதற்கு தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது என்றும் ஒரு பொருள் இருக்கிறது.

இன்றைய மருத்துவ உலகில் அலோபதி மருத்துவத்தினால் ஏற்படுகிற பக்க விளைவுகளுக்கு பயந்து அல்லது அதில் சொல்லப்படுகிற ஆப்ரேஷன் இலேசர் சிகிட்சைகளுக்கு பயந்து பலரும் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள்.

இன்னொரு காரணம் இன்றைய நோய்களுக்கு போதிய மருந்துக்கள் இல்லை. அதனாலும் மக்கள் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள்.

அவ்வாறு நாடப்படுகிற மருத்துவ முறையில் நபி மருத்துவம் எனப்படுகிற திப்புன்னபவியும் ஒன்று.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்கிற காரணத்தால் மனித வாழ்விற்கான அனைத்து அத்தியாவசிய வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறார்கள். அதில் மருத்துவ குறிப்புக்களும் அடக்கம். அந்த மருந்த்துவக் குறிப்புக்கள் தான் திப்புன்னபவி என்றழைக்கப்படுகிறது.

திப்புன்னபி எனும் தலைப்பில் இமாம் இப்னுல் கய்யுமில் ஜவ்ஸீ, இமாம் சுயூத்தி உட்பட பலர் நூல்களை எழுதி அதிப் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்களை தொகுத்திருக்கிறார்கள்.

திப்பனபவியில் பிரதான அம்சம் சாப்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகும்.

இன்றைய நவீன உலகில் உணவுக் கட்டுப்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.  வித்விதமான ஆச்சரியமான முறைகள் முன் வைக்ககப்படுகின்றன,

நபி (ஸல்) அவர்கள் மிக எச்சரிக்கையாகவும் வழிகாட்டுதலாகவும் சொன்னார்கள்

فقال صلى الله عليه وسلم :( مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ ، بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ : فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ ) رواه الترمذي (2380

இன்றைய விஞ்ஞானம் அருமையாக இதை விளக்குகிறது.

வீடுகளில் சோறு சமைப்பதை பார்த்திருப்பீர்கள், பாத்திரத்தில் கால் பங்கு அரிசி போடப்படும். அதற்கு சற்றொப்ப தண்ணீர் ஊற்றப்படும். பாத்திரத்தில் மீதி கொஞ்ச இடம் காலியாக விடப்படும். அப்போது சோறு பொங்கி சாதமாக வரும். இல்லை பாத்திரம் முழுவதையும் அரிசி தண்ணீரால் நிரப்பியிருந்தால் சாதம் வழிந்து விடும்.

இது போலத் தான் வயிற்றுக்குள் உணவைப் போட்டு தண்ணீரை ஊற்றி கொஞ்சம் காலியிடம் விட வேண்டும். அப்போது தான் உணவு சரியாக ஜீரணமாகி சக்தி உடலுக்குச் சேரும். தொண்டைக்குழி வரைக்கும் சாப்பாட்டை நிரப்பினால் உணவு ஜீரணமாகாமல் அப்படியே கழிவாக வெளியேறிவிடும்.

இதை விஞ்ஞானிகள் சொல்லிக் கேட்கிற போது முஸ்லிம் ரசிக்கிறார்கள், ஆனால் சாப்பிடுகிற போது மறந்து விடுகிறார்கள்.

முஸ்லிம் உம்மத் உணவு விச்யத்தில் தாரளமானது என்று உலகே அறிந்து வைத்துள்ளது,

ஆண்களும் பெண்களும் சாப்பாடு விசயத்தில் அண்ணல் பெருமானார் ஸல்) அறிவுரை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேணும்,

உணவு என்றாலே பலர் வயிறு நிறைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது தவறு . பசி அடங்கி விட்டாலே உடலுக்கு போதுமான உணவு கிடைத்து விட்டது என்று பொருள். அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள பழகனும்.

சாப்பிட்டு முடித்த பிறகு பசிக்காமல் மேலும் மேலும் உண்ணுவதே உடல் நலக்குறைவுக்கு பிரதான காரணம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தேன்
தேன் சிறந்த நிவாரணி என்பது குர் ஆனின் கருத்தாகும் . நபி (ஸல்) அவர்களும் தேனுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்தார்கள்.

وروي عن النبي صلى الله عليه وسلم أنه قال: "عليكم بشراب العسل"  

சீழ் வடிந்து கொண்டிருந்த பெண்ணுக்கு தேன் மருத்துவம்

بعث لبيد بن ربيعة إلى رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ابعث إلي بشفاء، وكانت به الدبيلة، فبعث إليه رسول الله صلى الله عليه وسلم بعكة عسل، فكان يلعقها حتى برئ.

وعن نافع قال: كان ابن عمر لا يصيبه شيء إلا داواه بالعسل حتى إنه كان ليجعله على القرحة والدماميل، ويقول: قال الله: {فيه شفاء للناس} [النحل: 69]

கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று தேனீக்கள் குறைந்து போவது என்றார்கள் பெருமானார் .

இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது, கூட்டம் கூட்டமாக பூக்களை தேடிச் செல்கிற தேனீக்கள் திரும்புவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் காலையில் எழுந்ததும் அல்லது தொழுது  விட்டு வந்ததும் தண்ணீரில் தேனைக் கலந்து அதை வாயில் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள். என நபி மொழிகள் தெரிவிக்கின்றன, இவ்வாறு செய்வதை தண்ணீர் மருத்துவம் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.//

பேரீத்தம் பழம்

قال النبي: "من تصبّح بسبع تمرات لا يصيبه في هذا اليوم سم ولا سحر - أبو داود ". 

பேரீத்தம் பழம் இரத்ததை உற்பத்தி செய்வதிலும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருக்கிறது என்று அறிகிற போது பேரீத்தம் தேனும் பேரீத்தம் பழமும் கலந்த கலவையை உண்டு வந்தால் இரத்தம் ஓட்டம் சீரடைகிறது,

ஏழு பேரீத்தம் பழம் பற்றிய செய்திகள் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன,
தினசரி 7 பேரீத்தம் பழங்களைச் சாப்பிடுவது கண் காது திறனை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரியாழில் உள்ள மன்னர் அப்துல் அஜீஜ் பல்கலைக் கழகம் அது போல கெய்ரோவில் உள்ள அல் அஜ்ஹர் பல்கலைக் கழகங்களில் இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்படூள்ளன.

ஆய்வுக்கூடங்களிலும் கெமிக்கல் அதிகமாக பயன்படுத்தப் படுகிற இடங்களிலிலும் பணியாற்றுகிற ஊழியர்களிடம் பேரீத்தம் பழம் பயன்பாடு பரிசோதிக்கப்பட்ட போது நச்சுத்தன்மையின் பாதிப்பு அவர்களிடம் குறைந்து காணப்பட்டது.

وقد بحث العلماء في جامعة الملك عبدالعزيز وجامعة القاهرة وتوصلوا لنفس النتائج، من أن العمال الذين يعملون بالمناجم وبالرصاص وبالمواد السامة، أي الأكثر عرضة للسموم، عندما يتناولون سبع تمرات يومياً يتوقف تأثير المواد السامة تماماً،

யூதரான இன்ரியா வேல் என்பவர் ஏழு பேரீத்தம் பழம் போதும் என்ற தன்னுடைய ஆய்வில் நச்சுத் தன்மை நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் பேரீத்தம் பழத்தினாலேயே தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்..

نشر العالم اليهودي اندريا ويل (الذي أعلن إسلامه بعد ذلك ) في بحثه تحت عنوان "سبع تمرات كافية" الذي أثبت فيه أن سبع تمرات تعد علاجاً للتسمم ونصح جميع العاملين المعرضين للتسمم بتناولها يومياً

அவர் முன் வைக்கும் இரண்டு ஆதாரங்கள்
رواه الترمذي في سننه من أن (التمر من الجنة وفيه شفاء من السم ) والدليل من القرآن يساقط عليك رطبا جنيا..

ஆலிவ் எண்ணெய்,

فقد روى الترمذي وابن ماجه عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة. ورواه أحمد والترمذي

கருஞ்சீரகம்

ن أبا هريرة أخبرهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: " إن في الحبة السوداء شفاء من كل داء إلا السام" والسام: الموت والحبة السوداء -  البخاري ومسلم .

இன்னும் பல பொருட்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மருத்துவ நன்மை சார்ந்தவையாக குறிப்பிட்டுள்ளார்க:.

இன்றைய சிந்தனையாளர்கள் மருந்தே உணவாக இருக்கிற சூழ் நிலையை மாற்ற உணவையே மருந்தாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் , அதில் கவனம் செலுத்த வேண்டிய து காலத்தின் கட்டாயம்

அதனால் எந்த உண்வு வகைகளில் உடலுக்கு தேவையான சத்துக்களும் நன்மையும் இருக்குமோ அவற்றை நாம் சாப்பிட வேண்டும்.
அதே போல உடலுக்கு ஆரோக்கியமான அளவிலும் சாப்பிட வேண்டும்.

நமது மருத்துவம் பற்றிய சிந்தனையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய மருத்துவக் குறிப்புக்களுக்கு முக்கியத்துவம் தருவோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!


1 comment: