வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 03, 2016

நவீன உலகிற்கு நபிகளாரின் செய்திகள்

இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற இலக்கியவாதியும், விமர்சகருமான ஜார்ஜ் பெர்னாட்ஷா (1856 – 1950)  கறாரான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். தனக்கு சரியெனப் பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடக் கூடியவர்.
அதனாலேயே அவருக்கு நண்பர்கள் குறைவு. எந்த அளவுக் கென்றால்?
அவரை பிடிக்காத ஒருவர் தன்னுடைய நாடகத்தை பார்க்க வருமாறு பெர்னாட்ஷாவை முதல் நாள் காட்சிக்கு அழைத்தார். இரண்டு டிக்கட்டுகளை அவருக்கு அனுப்பி விட்டு உங்களது நண்பரையும் அழைத்து வாருங்கள். அப்படி யாராவது இருந்தால்என்று குறிப்பும் எழுதி அனுப்பி விட்டார். பெனாட்ஷாவுக்கு அவரின் கிண்டல் புரிந்தது. விடுவாரா பெர்னாட்ஷா  அவருக்கு ஒரு குறிப்பை பதிலாக எழுதி அனுப்பினார். முதல் நாள் என்னால் கலந்து கொள்ள முடியாது. இரண்டாம் நாள் வருகிறேன். நாடகம் இரண்டாவது நாள் தொடர்ந்து நடந்தால் என்று எழுதி அனுப்பினார்.
இங்கிலாந்து காரர்கள் பைப் பிடிப்பதை பெருமையாகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் கருதுவார்கள். பெர்னாட்ஷா பைப் பற்றி ஒரு முறை சொன்னார், அதன் ஒரு முனையில் நெருப்பு இருக்கும். மற்றொரு முனையில் ஒரு முட்டாள் இருப்பான்.
இந்தக் கருத்தினால் பெரிய மனிதர்களின் வெறுப்பை சந்திக்க வேண்டியது வருமே என்று தயங்கிக் கொண்டிருப்பது பெர்னாட்ஷாவின் இயல்பல்ல.
கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் பிரபுக்களின் விளையாட்டு, அதில் ஆரோக்கியத்திற்குரிய அம்சங்கள் குறைந்து நேரத்தை போக்குவது பிரபலங்களின் மோகம் மட்டுமே மிகைத்திருப்பது பெர்னாட்ஷா வுக்கு வெறுப்பை கொடுத்தது, ஒரு முறை நிருபர்கள் கிரிக்கெட் பற்றி கருத்துக் கேட்ட போது பெர்னாட்ஷாவுக்கு வசதியாகிவிட்டது. பெர்னாட்ஷா சொன்னார். 11 முட்டாள்கள் விளையாட 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
இத்தகைய இயல்புடைய பெர்னாட்ஷா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது வெறுப்பை உமிழும் ஐரோப்பிய மக்களுக்கு பெருமானாரை ப்பற்றி ஒரு செய்தி சொன்னார்.
“I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness
The Genuine Islam
அவரை போன்ற ஒருவர் இன்றைய நவீன உலகின் சர்வாதிகாரத் தலைமையை அடைவார் எனில் இந்த உலகிற்கு தேவையான அமைதி மகிழ்ச்சி ஆகியவற்றை கொண்டு வரும் வகையில் இன்றைய பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண்பதில் வெற்றீ அடைவார்/
ஒரு அறிவாளியின் மிகச் சரியான கனிப்பு இது.
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் தான் வாழ்ந்த காலத்தின் மனித சமூகத்தின் சீர்கேடுகளையும் பிரச்சனைகளையும் அற்புதமான் சீரமைப்பையும் தீர்வுகளையும் தந்தவர் என்பதை ஓரு ய்வாளராக அவர் புரிந்திருந்தார்.
1936 ம் ஆண்டு மெளலானா அப்துல் அலீம் சித்தீக்கியுடனான பேட்டியின் போது 75 வருடங்களுக்கு முன்னாள் பெர்னாட்ஷா சொன்ன போது உலகில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமே மிகைத்திருந்தன. இரண்டாம் உலக யுத்ததிற்கான போர்ச்சூழல் மட்டுமே இருந்தது. இன்று உலகில் அரசியல் சமூகம் கலாச்சாரம் எல்லாமே கடும் சிக்கலுக்குரியதாக மாறியிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையிலிம் சமூகத்தின் புதிதாக் உருவாகிற பிரச்சனைகளுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் அற்புதமான தீர்வுகளை தருப்வர்களாக இருக்கிறார்கள்.
பெர்னாட்ஷாவின் வார்த்தைகளை கவனியுங்கள்! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில வெற்றி அடைவார் என்று மட்டும் அவர் சொல்லவில்லை, அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிரச்சனைகளற்ற அமைதியும் மகிழ்ச்சியும் அர்த்தமும் நிறைந்த ஒரு வாழ்க்கை தேவை என்று நினைப்பவர்கள் அண்ணலாரின் வழிகாட்டுதல்களை கடை பிடித்தால் நிச்சயம் வெற்றியடைவார்கள்.
வாழ்வின் இலக்குத் தெரியாதிருந்த – குடும்பச் சண்டைகளில் வெற்றி காண்பது மட்டுமே வாழ்க்கை என நினைத்திருந்த உமர்  அபூஹுரைரா முஆது பின் ஜபல் – ஸஃது பின் முஆத்  காலித் பின் வலீத் (ரலி)  போன்ற  எத்தனை எத்தனை சஹாபாக்கள் பெருமானார் (ஸல்) அவர்களால் வரலாற்றில் நீடூழி வாழும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இயந்திர வாழ்க்கை
இன்றை உலகின் பெரிய பிரச்சனைகளில் ஒன்று மக்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது.
உளவியல் ரீதியான ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட  இதற்கான காரணிகளில்  ஒன்று உறவுகளுடனான தொடர்பை இன்றை நவீன உலகம் முற்றிலுமாக துண்டித்துக் கொண்டதாகும். அல்லது உறவுகளை பராமரிப்பதில் சரியான கவனத்தை செலுத்தாதாகும்.
இன்றை குடும்பம் என்பது வெகுவாக சுருங்கிவிட்டது.
இன்றைய நவீன தலைமுறைக்கு உறவுகளே தெரியாது. அங்கில் ஆண்டி என்ற வார்த்தை எல்லா உறவுகளுக்குமான ஒற்றை அடையாளமாகிவிட்ட்டது.
பெரியத்தா சின்னத்தா என்பது தூரத்து உறவாக மாறிவருகிறது.
தனிமனித வாழ்வில் வெறுமையும் பொறுப்பின்மையும் படர இது ஒரு முக்கிய காரணமாகும்
உறவுகள் குறித்து முஹம்மது நபி (ஸல்;) அவர்கள் சொன்ன வழிகாட்டுதல்கள் நவீன உலகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
உறவு ரஹ்மானின் ஒரு கிளை – உறவுக்கு இறைவன் கொடுத்துள்ள வாக்குறுதி. எந்த நவீனத்தின் நெருக்கடியிலும் இதை மறக்காமலிப்பது மனித சமூகத்தின் கடமை
 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّحِمَ شَجْنَةٌ مِنْ الرَّحْمَنِ فَقَالَ اللَّهُ مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ
உறவுகளுக்கான இந்த முக்கியத்துவத்தை தவற விட்டது தான் மேற்குலகின் தனிமனித வாழ்வு சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும்.
உறவுகள் அன்பு காட்டுவார்கள். கண்டிப்பார்கள் திருத்துவார்கள் பிரச்சனைகள் ஏற்படுகீற போது பஞ்சாயத்து செய்வார்கள்.
குடும்ப உறவுகள் பராமரிக்கப்படாத இடங்களில் இந்தப் பணியை கோர்ட்டுகள் கவனிக்கின்றன.. கோர்ட்டுகள் பிரித்து வைப்பது அல்லது விலக்கி நிறுத்துவதன் மூலம் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடுகின்றன.
பணம் புகழ் பெற ஒரு அற்புத வழி
உறவுகளால் தொல்லை என்று கருத வேண்டாம். செலவு என சளித்துக் கொள்ள வேண்டாம்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُالخاري 2067
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல தெரிந்தாலும். நியாபகத்தில் வையுங்கள்!! இது அல்லாஹ்வின் ரஸூல் போடுகிற முடிச்சு !!!
உறவுகளால் சிக்கல்
உறவுகளால் தொல்லைகள் ஏற்படுகிறது என்பது சிலரின் குற்றச் சாட்டு , அது உறவுகளை பிறரைப் போல கருதுவதால் ஏற்படுவதாகும்.
உறவுகளால் சில வேளைகளில் தொல்லைகள் ஏற்படும். நாம் செய்கிற உதவிக்கு பதிலாக அவர்கள் நன்றியோடு நடந்து கொள்ள மாட்டார்கள். சிலவேளைகளில் எதிராக கூட செயல்படுவார்கள்.
ஆனால் இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் உறவுகளை பராமரிக்க வேண்டும்
அபூபக்கர் சித்தீக ரலி தனது சின்னம்மா மகனான மிஸ்தஹை அவரது தந்தை இறந்த பிறகு 4 வயதிலிருந்து  தொடர்ந்து பராமரித்து வந்தார். அவரோ ஒரு கட்டத்தில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களது மகளான அன்னை ஆயிஷா ரலி விசயத்தில் அவதூறை பரப்பியோரில் ஒருவராக ஆனார். அதற்காக அவருக்கு 80 கசையடி தண்டனை வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் அவரை தன் வீட்டிலிருந்து வெளியேற்றி இனி உனக்கு உதவி செய்ய மாட்டேன் என அபூபக்கர் ரலி. சபதம் செய்தார்கள், அப்போது,  “தயாளமான உள்ளம் கொண்டவர்கள் இப்படி சத்தியம் செய்யக் கூடாது. அல்லாஹ் உங்களை மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா? நீங்களும் அது போல பிறரை மன்னியுங்கள் என அல்லாஹ் சொன்னான். அபூபக்கர் ரலி அடுத்த கணமே மிஸ்தஹு ரலி க்கான உதவியை தொடர்ந்தார்கள்
مسطح بن أثاثة –
كان فقيرا ينفق عليه أبو بكر الذي اعتنق الإسلام على يديه. ذكره ابن سعد
عث أبو بكر إلى مسطح بن أثاثة فقال: أخبرني عنك وأنت ابن خالتي ما حملك على ما قلت في عائشة؟, وأنت في عيالي منذ مات أبوك وأنت ابن أربع حجج, وأنا أنفق عليك وأكسوك حتى بلغت, ما قطعت عنك نفقة إلى يومي هذا, والله إنك لرجل لا وصلتك بدراهم أبدًا ولا عطفت عليك بخير أبدًا, ثم طرده أبو بكر وأخرجه من منزله, فنزل القرآن: {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا} [النور: 22], فلما قال: {أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ} [النور: 22], بكى أبو بكر فقال: أما قد نزل القرآن بأمري فيك, لأضاعفن لك النفقة وقد غفرت لك, فإن الله أمرني أن أغفر لك.  
உறவுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் சந்ததிகளுக்கு தெரிவிக்கவும் முயற்சிக்க வேண்டும்.
இன்றைய காலத்தின் மிக அத்தியாவசியத் தேவை இது.
பள்ளிப் புத்தகங்களில் அல்லது கணிணி விளையாட்டுக்களில் மூழ்கிக் கிடக்கிற பிள்ளைகளுக்கு உறவுகளைப் பற்றி தெரிவதில்லை, தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடக்கிற பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் நேரம் இல்லை.
வீட்டுக்கு எப்போதாவது வருகிற உறவுக்காரர்கள் நான் யார் தெரியுமா உங்களுக்கு சொந்தமாக்கும் என்று சொல்லுகிற சூழுலும். அதை ஓ அப்படியா என சந்ததிகள் அசிரத்தையாக கேட்கிற சூழ்நிலையும் தான் இன்று நிலவுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி 1902)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ فَإِنَّ صِلَةَ الرَّحِمِ مَحَبَّةٌ فِي الْأَهْلِ مَثْرَاةٌ فِي الْمَالِ مَنْسَأَةٌ فِي الْأَثَرِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَمَعْنَى قَوْلِهِ مَنْسَأَةٌ فِي الْأَثَرِ يَعْنِي بِهِ الزِّيَادَةَ فِي الْعُمُرِ
ஒரு காலத்தில் உறவுகளை தேடிப்பிடித்து பராமரித்தார்கள். எங்களுக்குச் சொந்தமாக்கும் என பெருமைப் பட்டுக் கொண்டார்கள். உறவுக்காரர்கள் நாங்கள் இருக்க நீ பிறரிடம் செல்லலாம என கடிந்து கொண்டார்கள்
இன்றோ அது வெல்லாம் கற்பனையாகிவிட்டது.
ஆனால் அதே நேரத்தில் உறவுக்காரர்கள் வசதி படைத்தவர்களாக பிரபலங்களாக இருந்தால் வலிந்து சென்று உரிமை பாராட்டுகிறோம். இது சரியல்ல, உறவுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டுவது மனிதாபிமானம் அல்ல,
இன்றைய நவீன உலகு உறவுகளை பராமரிக்காத்தால் அதன் மகிழ்ச்சிக்கான எல்லை என்பது குறுகி விட்டது. அதே போல கவலையின் அடர்த்தியும் அதிகரித்து விட்டது.
நம்முடைய நாட்டில் ஓரளவுக்காவது உறவுகளுடனான நெருக்கம் பேணப்படுகிறது.
வெளிநாடுகளில் கிடைக்காத அமைதியும் மகிழ்ச்சியும் இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் இங்கு குடும்ப உறவுகளைப் பராமரிப்பதில் காட்டப்படும் அக்கறையாகும். நாகரீக மோகத்தில் இந்த பாரம்பரியத்தை நாம் தவறவிட்டால் நாமும் வெறுமையான இயந்திரத்தனமான உலகிற்கு தள்ளப்படுவோம்.
சமூக உறவுகளிலும் விரிசல்
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என உலகின் எல்லா பகுதிகளிலும் சமூகங்களுக்கிடையேயான பதற்றமும் அதிகரித்து வருகிறது.
ஆய்வாளர் stanly j. thambiah ஸ்டான் லீ ஜே தம்பையா குறிப்பிடுகிறார்.
வளர்ச்சி, நவீனமயம், மருத்துவ வசதிகள்,கல்வி பெருளாதாரம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் நடந்துள்ள போதிலும் பெரிய சிவில் யுத்தங்களையும், இனங்களுக்கிடையேயான இரத்தக் களறியையும் நவீன் உலகம் உள்ளடக்கியுள்ளது.
மிகச் சரியான வார்த்தைகள் நவீனம் பேசுகிற உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மனிதாபிமானத்தை குழு தோண்டிப்புதைக்கிற கொடூரங்கள் அதிகம்.
ஆப்ரிக்காவின் ஒரு பகுதியில் டூட்ஸி இனத்தவர்கள் ஹூட்டு இனத்தவர்களை கொன்று குவித்து வருகிறார்க்ள்.
இருவருமே ஆப்ரிக்க இனத்தவர்கள் தாம். ஒரே ஒரு வித்தியாசம் ஹூட்டு இனத்தவர்களுக்கு கழுத்து கொஞ்சம் நீளம். அவ்வளவு தான்..
பாலஸ்தீனில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நிமிட நேரத்தில் சுட்டுப் பொசுக்கப்படுகிறார்கள் அல்லது குண்டு வீசி அழிக்கப்படுகிறார்கள்.
நம்முடைய ஹைதராபாத்தில் ஒரு மத்திய அமைச்சரின் தலையீட்டால் பாதிப்படைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்ற இளைஞன் உதுமானியா பல்கலை கழக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்பது சமீபத்திய செய்தி
உலகின் பல பாகங்களிலும் சமூகங்களுக்கு இடையே இனவெறி அல்லது குழு மனப்பான்மை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தனது குழு என்ன செய்தாலும் அது சரி என்று நியாப்படுத்துகிற கோட்டு சூட்டு அணிந்த கனவான்கள் மிக தைரியமாக ஐநா சபைகளிலேயே வாதம் செய்கிறார்கள்.
முஹ்ம்மது நபி (ஸல்) அவ்ர்கள் குலப்பெருமையும் இன உணர்வும் கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில் பிறந்தார்கள்.
குலத்தின் அடையாளங்களையோ குடும்பச் சிறப்புக்களையோ அவர்கள் முற்றிலுமாக ஒதுக்க வில்லை. முழுவதுமாக புறக்கணிக்கச் சொல்லவும் இல்லை.
மாறாக அவற்றை நன்மைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
نْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قِيلَ : " يا رَسُولَ اللَّهِ ، أَيُّ النَّاسِ أَكْرَمُ ؟ قَالَ : أَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاهُمْ . قَالُوا : لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ . قَالَ : فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونَنِي ؟ قَالُوا : نَعَمْ . قَالَ : خِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلامِ إِذَا فَقِهُوا "
ஆனால் அதே நேரத்தில் தனி மனித இரத்தில் ஊற்றெடுக்கிற , குடும்பத்தால்- குலத்தால்- குழுவால்- தேசத்தால்- பணத்தால் - நான் உயர்ந்தவன் என்கிற சிந்தனையை தகர்த்தெறிந்தார்கள்
குலப்பெருமை கோலோச்சிய மக்களிடம் அவர்கள் செய்த பிரகடனமும் நிகழ்த்திய மாற்றங்களும் எவ்வளவு அசாதாரணமானது என்று பாருங்கள்.! ஹிஜ்ரீ 10 ல்ஹஜ்ஜத்துல் விதாவின் தனது இறுதி அறிவுரையில் கூறினார்கள்.
(يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى رواه الإمام أحمد بن حنبل في ( باقي مسند الأنصار - روقمه 22391 ..))
இதனடிப்படையில் நடக்கிற ஒரு சமூதாயத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கியும் காட்டினார்கள். இன்னும் சொல்வதானால் அத்தகைய ஒரு சமுதாயத்தை சத்தமில்லாமல் உருவாக்கி விட்டுத்தான் இந்தப் பிரகடனத்தை செய்தார்கள்.
ஹிஜ்ரீ 8 ல் மக்கா வெற்றியின் போது அரபு மக்கள் முஸ்லிம்களும் குலபெருமை கொண்ட காபிர்களும் கூடி – எல்லோரும் கீழே - நின்ற சபையில் கஃபாவின் மீது ஏறி பாங்கு சொல்லும் அதிகாரத்தை கருப்பு நிரத்தவரான பிலால் ரலி அவர்களுக்கு வழங்கினார்கள்.
இந்தக் காட்சியை பார்த்த மக்காவின் காபிர் தலைவர்களில் சிலர் நல்ல வேளை இந்தக் காட்சியை காண எங்கள் பெற்றோர்கள் உயிருடன் இல்லை என்றார்கள்  ஆனால் பெருமானார் (ஸ்ல்) அவர்களின் திட்டம் சத்தமில்லாமல் சாதனை நிகழ்த்தியது
ஹிஜிர் 10 ல் பெருமானார் இந்தப் பிரகடணத்தை வெளியிட்ட போது ஒட்டு மொத்த சமூகமும் கொஞ்சமும் சலனமின்றி அதை ஏற்றுக் கொண்டது.
எவரும் தமது செயல்பாடுகளின் தரத்தால் மட்டுமே உயர்வு பெற முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
وَمَنْ يُبْطِئُ بِهِ عَمَلُهُ لَا يُسْرِعُ بِهِ نَسَبُهُ என்றார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ قَوْمٍ يَجْتَمِعُونَ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ عَزَّ وَجَلَّ يَقْرَءُونَ وَيَتَعَلَّمُونَ كِتَابَ اللَّهِ عَزَّ وَجَلَّ يَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا حَفَّتْ بِهِمْ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَا مِنْ رَجُلٍ يَسْلُكُ طَرِيقًا يَلْتَمِسُ بِهِ الْعِلْمَ إِلَّا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَنْ يُبْطِئُ بِهِ عَمَلُهُ لَا يُسْرِعُ بِهِ نَسَبُهُ
இன்றைய நவீன உலகில் தன்னிடம் இருக்கிற அறிவால் அல்லது பணத்தால் அல்லது ஆயுதங்களால் தன்னை உயர்ந்தவனாக கருதி பிறருடைய உரிமைகளையும் மதிப்பையும் மரியாதையும் பொருட்படுத்தாத சிந்தனைப் போக்கு இன்று வளர்ந்து வருகிறது அதுவே இன்றய சமூகப்பதற்றங்களுக்கு முக்கியக் காரணமாகும்.
லா இக்ராக பித்தீன் என்ற குர் ஆனிய வாசகம் பிறை நிர்பந்தம் படுத்தக் கூடாது என்பதை மட்டுமல்ல. அவருடைய உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் கற்பிக்கிறது.
முஸ்லிம் சமூகத்தலும் கூட இன்று பணத்தால் அல்லது குடும்ப் பாரம்பரியத்தால் மட்டுமே தம்மை உயர்ந்தவர்களாக கருதும் போக்கு நிலவுகிறது. இது திருத்திக் கொள்ளப்பட வேண்டும் ,
முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு பாரம்பரியத்தால் நன்மைகள் அதிகமாக செய்ய முயலவேண்உம்மே தவிர யாரையும் இழிவாக கருதக் கூடாது,
அதே போல முஸ்லிம்களிடம் குழு வெறியும் அதிகரித்து வருகிறது தமது குழுவினர் அல்லாத பிறரைப் பற்றி என்னவும் பேசலாம் எப்படியும் இழிவு படுத்தலாம், தம்முடைய குழுவினர் அல்லாதவர் மீது கூட்டமாக சேர்ந்து எத்தகை அக்கிரமத்தையும் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இது வெறித்தனமாகும். இந்த வெறிந்த்தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரிக்கீறார்கள்
عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قُتِلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ يَدْعُو عَصَبِيَّةً أَوْ يَنْصُرُ عَصَبِيَّةً فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ مسلم 3440
عَنْ بِنْتِ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا يَقُولُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْعَصَبِيَّةُ قَالَ أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ- ابوداوود 4454
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ- ابوداوود 4456
இன்று நம்முடைய நாட்டில் பிரதமர் முதல் சாதாரண காவல்துறை அதிகாரிகள் வரை இந்த இனவெறியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாரர்கள். அதுவே நாட்டின் பெரும் பிர்ச்சனையாக இருக்கிற்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ல வேண்டும்.
அத்தகைய இனவாதக கருத்துக்குது நாமும் ஆட்பட்டு விடக்கூடாது.
சிறப்பான வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிற மனிதர்கள் தம்மை மட்டுமே உயர்வாக கருதிக்கொள்ளக் கூடாது தமது கீழே பணிசெய்கிற சாமாணிய மனிதனையும் மதித்து அவனது உரிமைகளை வழங்கி அவனைத் தேவையான கட்டத்தில் பாராட்ட வேண்டும் என்று இன்றை நிர்வாகவியல் கற்றுத் தருகிறது. ஆனால் அதை கடைபிடிப்போர் தான் யாரும் இல்லை
முஸ்லிம்கள் அப்படிச் இருந்து விட முடியாது, ஏனெனில் இது நபியின் உத்தரவாகும்.
இப்போது யோசித்துப் பாருங்கள் முஹம்மது நபி இருந்தால் இன்றைய பிரச்சனைகளுக்கு அவர் மகிழ்ச்சியையும் அமைதியை கொண்டு வருகிற வகையில் தீர்வு காண்பார் என பெனாட்ஷா சொன்னது எத்தகைய சத்திய வாக்கு என்பது புலனாகும்.No comments:

Post a Comment