வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 07, 2016

கோடை தரும் ஆடை விழிப்புணர்வு



இன்னும் ஒரு நாளில் ரஜப் மாதம் பிறக்க இருக்கிறது,

ரஜப் வந்துவிட்டாலே ரமலானுக்கான ஆரம்பம் தான்,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ -  احمد 222

அல்லாஹ் புனித் ரஜப்  ஷஃபானின் பரக்கத்தையும் ,ரம்லானை அடைந்து கொள்ளும் வாய்ப்பையும் அதன் நிறைவான பரக்கத்துக்களையும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சகல முஸ்லிம்களுக்கும் தந்தருள்வானாக!1

கோடை வந்து விட்டால் கோடைக்கேற்ற ஆடையை தேடத் தொடங்குகிறோம்,
பருத்தி ஆடைகள் நல்லவை. இறுக்கமற்ற ஆடைகள் சிறந்தவை என சுகாதாரத்துறையினர் கருத்து வெளியிடுகின்றனர், 

கோடை நம்முடைய ஆடையைக் கட்டுப்படுத்துவதை ஏற்கிறோம்.
அறிவு அதை வரவேற்கிறது,
மார்க்கம் ஆடைக் கட்டுப்பாட்டைச் சொன்னால் அதை அடிமைத் தனம் என்று சிலர் கருதுகிறார்கள், 

நான் என்ன மாதிரி ஆடை அணிய வேண்டுமென்பதை தீர்மாணிக்க நீங்கள் யார் என்று கேட்கிறார்கள் 

தமிழக கோயில்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பக்தர் களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தர விட்டார்.
இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஆதரித்தும் தனித் தனியாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச் சந்திரபாபு ஆகியோர் நாங்கள் ஆடை கட்டுப்பாடு தேவையா? இல்லையா என்பதை ஒரு விவாதப் பொருளாக்க விரும்ப வில்லை. மேலும் இந்த விவாதத் துக்குள்ளேயே செல்லவும் விரும்பவில்லை. எனவே கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஆக மரியாதையான ஆடை அணிந்துதான் ஆலயத்திற்கு வர வேண்டும் என்ற தீர்ப்பு மற்றப்பட்டுவிட்டது. 

கோடைக்கு ஏற்ற ஆடைகள் என்றால் ஏற்றுக் கொள்ளும் மக்கள் கோயிலுக்கு ஏற்ற ஆடைகள் என்றால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது, 

உண்மையில் இந்த போக்கு அறிவு ரீதியானதோ சுதந்திர தாகம் கொண்டதோ அல்ல.  

ஏதேனும் ஒரு நட்சத்திர ஓட்டல் இன்ன மாதிரித்தான் ஆடை அணிந்து வர வேண்டும் என்று கேட்டாலோ (உதாரணத்திற்கு கருப்புக் கலர் கோட்)
அல்லது நட்சத்திர நிகழ்ச்சிகளில் டிரஸ் கோடு அறிவிக்கப்பட்டாலோ (உதாரணத்திற்கு சிவப்புக் கலர் குட்டைப் பாவாடை – அல்லது டையுடன் கூடிய சட்டை)  அதை அப்படியே பின்பற்றிச் செல்வதில் சுதந்திர தாகத்தையோ அல்லது அறிவின் தேடலையோ  யாரும் பொருட்படுத்துவதே இல்லை, 

மதம் கலாச்சாரம் சார்ந்து ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அதை அடிமைத்தனம் என்று  சிலர் பேசுகிறார்கள் இது போலித்தனமாகும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வழியாகும். 

சமூக அக்கறையோடு சிந்திக்கிற யாராக இருந்தாலும் ஆண்களானாலும் பெண்களானாலும் ஆடை விசயத்தில் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதை ஏற்கவே செய்வார்கள்

ஒரு உதாரணம பாருங்கள்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து குறிப்பாக பெண்கள் லெக்கின்ஸ் எனப்படும் கன்றாவி தொடைகாட்டி ஆடையை அணியக் கூடாது என தடை விதித்தது, 
இது கல்வி அறிவு தேடல் மிக்க மாணவ மாணவிகளை கோபப்படுத்தியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லை !
அரசின் மாணவ மாணவியர் அரசின் உத்தரவை ஏற்று கொண்டனர்,
தி ஹிந்து தமிழ் நாளிதம் 7 மாதங்களுக்கு முன்பு  சுமார் 4000 ஆயிரம் மாணவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு நடத்தியது, அதன் முடிவை பாருங்கள்!
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை அணியை தடை விதிக்கப்பட்டுள்ளது...
வரவேற்கத்தக்கது
:
83%
எதிர்க்கத்தக்கது
:
11%
விவாதிக்கத்தக்கது
:
7%
மொத்த வாக்குகள்: 3995
   
(August 31, 2015 09:49 IST Updated: August 31, 2015 10:02 IST)

எனவே ஆடை விசயத்தில் கட்டுப்பாடு என்பது சிந்திக்கிற எவரும் ஏற்கத்தக்கதே! அந்தக் கட்டுப்பாடு கல்லூரிகளுக்கு எப்படி பெருந்துமோ அது போல இந்த உலகிற்கும்,  சமூக வெளிக்கும் பெருந்தும் என்பது தான் இஸ்லாமின் கோட்பாடாகும்.

முஸ்லிம்களின் முழு வாழ்க்கைக்கும் வழி காட்டியிருக்கிற இஸ்லாம் ஆடை அணிவதிலும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது, அந்த வழிகாட்டு தலை பேணவேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அதில் அவர்களுக்கு இவ்வுலகில் மரியாதையும் மறுமையில் வெற்றியும் அடங்கியிருக்கிறது. 

மார்க்கத்தின் அந்தக் கட்டுப்பாடுகளை சுதந்திரம் அல்லது நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஒதுக்கித் தள்ள முயற்சிப்பது – ஒரு போலித்தனமான செயலாகும். அல்லாஹ் ரஸூலின் கருத்துக்கு முரணானதாகவும் ஆகிவிடும் 

பேஷன் சமூகத்தில் வாழும் முஸ்லிம்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த கடமைப் பட்டிருக்கிறார்கள்.,

இன்னொரு செய்தியும் இங்கு கவனிக்க வேண்டும். இஸ்லாமிய வழி காட்டுதலுக்கு எதிரான ஆடைகள் ஆபத்தாகவும் ஆபாசமாகவுமே அமையும். ஆபாசம் என்பது மானங்கெட்ட இயல்பாகும். 

சைத்தான் மனிதனின் மரியாதையை குறைக்க பயன்படுத்திய உத்தி மானக்கேடாக நிற்க வைத்தாகும்.
அதிலிருந்து மனித மரியாதையை பாதுகாக்க சொர்க்கத்திலெயே ஆடை அணியத்தொடங்கியது தான் முதல் மனிதரின் வரலறாகும்
ஆதம் ஹவ்வா (அலை) வுக்கு சொர்க்கத்தில் ஓரு வகையான ஆடை மூடியிருந்ததாகவும், தடுக்கப்பட்ட மரத்தின் கனியை சாப்பிட்டவுடன் அந்த ஆடை பறந்து விட்டதாகவும் ஆலூஸி பக்தாதி ரூஹுல் மஆனியில் ஒரு மேற்கோளைக் காட்டி கூறுகிறார்

 قال الكلبي : تهافت عنهما لباسهما فأبصر كل منهما عورة صاحبه فاستحيا

.
 وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ (22)

மனிதனை ஆபாசப்படுத்த நினைக்கும் சைத்தானின் உத்தியையும், அதை பாதுகாக்கும் மனிதனுடைய போராட்டமும் காலத்தின் எல்லைகளை கடந்தும் தொடர்கிறது என்பதை முஃமின்கள் உணர வேண்டும்.
ஆடையை குறைக்கும் எந்த திட்டத்தையும் நாகரீகத்தையும் - சைத்தானின் உத்தியாக பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஆடைகளின் குவாலிட்டியை  துணியின் தரத்தில் மட்டும் இன்றைய உலகம் பார்க்கிறது.  அல்ல ஆடை அணியும் விதத்திலும் குவாலிட்டி  இருக்கிறது என்கிறது, 

ஆடை அணிவது எதற்காக என்ற கேள்விக்கு பல பதில்கள் இருக்கின்றன, 

முதல் பதில் மானத்தை மறைப்பதற்காக என்பதாகும்.   
يا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنا عَلَيْكُمْ لِباساً يُوارِي سَوْآتِكُمْ وَرِيشاً وَلِباسُ التَّقْوى ذلِكَ خَيْرٌ ذلِكَ مِنْ آياتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (26)

قال القرطبي  :قَالَ كَثِيرٌ مِنَ الْعُلَمَاءِ: هَذِهِ الْآيَةُ دَلِيلٌ عَلَى وُجُوبِ سَتْرِ الْعَوْرَةِ،
ஆடை எந்த அளவு இருக்க வேண்டும் எனபதை இஸ்லாம் தெளிவாக வரையறுத்திருக்கிறது,
يجب أن يكون اللباس ساتراً لعورة الرجل والمرأة،

وعورة الرجل ما بين السرة والركبة،

ஆண்களுக்கு தொப்புள் அவ்ரத்தாகும்
பணியனில்லாமல் வெளியே தோன்றும் ஆண்கள் தொப்புளை மறைக்க வேண்டும்.

இஹ்ராம் உடையில் இருக்கும் பலர் இதை கவனிப்பதில்லை.

தவாபின் போது அவ்ரத்தை மறைத்திருப்பது கட்டாயமாகும். இல்லை எனில் தவாபு செல்லாது,

அதே போல் தொடை அவ்ரத்தாகும் .
·        أن الفخذ عورة عند جمهور أهل المذاهب الأربعة،

·        عن جرهد: أن رسول الله صلى الله عليه وسلم رآه كشف عن فخذه، فقال: غط فخذك فإن الفخذ من العورة. رواه الترمذي

·        وروى الدارقطني وأبو داود أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي" لا تكشف فخذك ، ولا تنظر فخذ حي ولا ميت "


ஆண்கள் மட்டுமே இருக்கிற இடமானாலும் சரி! தனியாக இருந்தாலும் சரி தொடை அவ்ரத்துதான். திறப்பதை தவிர்க்க வேண்டும்.

عن بهز بن حكيم قال: حدثني أبي عن جدي قال: قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر قال احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك، فقال الرجل يكون مع الرجل قال إن استطعت أن لا يراها أحد فافعل، قلت والرجل يكون خالياً قال: فالله أحق أن يستحيا. رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் தொடை தெரிய அமர்ந்திருந்தார்கள் என ஒரு ஹதீஸ் வருகிறதே!

عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم مضطجعاً في بيتي كاشفاً عن فخذيه أو ساقيه، فاستأذن أبوبكر فأذن له وهو على تلك الحال، فتحدث ثم استأذن عمر فأذن له هو كذلك، فتحدث ثم استأذن عثمان فجلس رسول الله وسوى ثيابه، فدخل فتحدث، فلما خرج قالت عائشة: دخل أبوبكر فلم تهش له ولم تباله، ثم دخل عمر فلم تهش له ولم تباله، ثم دخل عثمان فجلست وسويت ثيابك، فقال: "ألا أستحي من رجل تستحي منه الملائكة".

இந்த ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது.

இமாம் நவவி ரஹ் அவர்கள் இதற்கு விளக்கம் சொல்லுகையில் தொடையை திறந்து வைக்கலாம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இதில் இல்லை, அறிவிப்பாளர் தொடை அல்லது கரண்டைக் கால் என்று சந்தேகத்தோடு சொல்லியிருக்கிறார்  என்பதை கவனிக்க வேண்டும்.

قال الإمام النووي في شرح مسلم: (ولا حجة فيه، لأنه مشكوك في المكشوف هل هو الساقان أم الفخذان؟

எனவே தாய் சகோதரிகளின் முன்னிலையில் முட்டுக்கு மேல் ஆடை அணிந்த நிலையில் இருக்க கூடாது. அது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல.

நமது சிறுவர்களையு இளைஞர்களையும் வீட்டிற்குள் இத்தகை தோற்றத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

வெளிநாட்டு மோகத்தில் பலர் இப்படி நடக்கிறார்கள், அது அவலமானது,

அதுபோல் பார்க்குகள் பொழுது போக்கு மையங்கள் சிம்மிங்க் பூல்கள் அனைத்திற்கும் இந்தச் சட்டம் பெருந்தும்.

இந்த இடங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் கண்ணியத்தை பாதுகாப்பதில் முஸ்லிம் இளைஞர்களும் பெரியவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.


பெண்கள் மறைக்க வேண்டிய மானம்
وعورة المرأة ماعدا الوجه والكفين،

- عن عائشة: أن أسماء بنت أبي بكر دخلت على رسول الله صلى الله عليه وسلم وعليها ثياب شامية رقاق فأعرض عنها ثم قال: " ما هذا يا أسماء؟ إن المرأة إذا بلغت المحيض لم يصلح أن يرى منها إلا هذا وهذا. وأشار إلى وجهه وكفيه. أبو داود والبيهقي


பெண்களின் முடி அவ்ரத்தாகும்.
فإن كشف المرأة شعرها وخلعها حجابها في الأماكن التي يوجد فيها الرجال الأجانب عنها يعتبر من التبرج وهو من كبائرالذنوب ،

قال ابن حزم في مراتب الإجماع  :"واتفقوا على أَن شعر الحرَّة وجسمها حشا وجههَا ويدها عورة

தலை முடியை மறைத்தல் சம்ப்ந்தமாக பாரம்பரியமாக முஸ்லிம் சமூகத்தில் கடை பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் சமீப காலமாக தூக்கி எறியப்பட்டு விட்டன, மிகவும் கவலைக்குரிய செய்தி இது.

இன்று மார்க்க ஒழுக்கத்தின் படி பர்தா அணிகிறோம் என்று சொல்கிற பல பெண்களும் முடியை வெளியே தெரிய்ம் வண்ணமே விடுகிறார்கள்.

இது விசயத்தில் பெண்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு உண்டு,

அது போல பெண்களின் உடல் தோற்றமும் அவ்ரத்தாகும். அதாவது பெண்கள் தமது உடலின் அளவுகள் வெளியே தெரிகிற மாதிரி இறுக்கமான ஆடை அணியக் கூடாது.

இறுக்கமான மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே தோன்றுவது ஹராமாகும்.
عن  أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم : " صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ، ونساء كاسيات عاريات مميلات مائلات رءوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا " .
رواه مسلم ( 2128 ) .

قال العلماء في معنى"كاسيات عاريات":إنهن النساء اللواتي يلبسن ثيابا رقيقة تشف عما تحتها وتصف لون أبدانهن, أو أنهن يسترن بعض أبدانهن ويكشفن البعض الآخر, أو يجمعن بين الأمرين:يغطين بعض أبدانهن بثياب رقاق قصيرة تصف لون ما تحتها من أبدانهن, بل وتظهر حجم أعضائهن أيضا, ويتركن أجزاء أخرى من أبدانهن مكشوفة أصلا ليس عليها أي شيء ولو كان رقيقا. كما هو المشاهد في وقتنا الحاضر, إ

டைட்டான சுடிதார்கள், லெக்கின்ஸுகள் நைட்டிகள் அணிந்து அன்னிய ஆண்கள் முன்பு தோன்றுவது ஹராமாகும்.

மெல்லிய ஆடைகளுக்கு கீழே மற்றொரு ஆடையை அணிந்து கொளள் பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

رواه الإمام أحمد عن أسامة بن زيد رضي الله عنه قَالَ: كَسَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُبْطِيَّةً كَثِيفَةً كَانَتْ مِمَّا أَهْدَاهَا دِحْيَةُ الْكَلْبِيُّ، فَكَسَوْتُهَا امْرَأَتِي. فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَا لَكَ لَمْ تَلْبَسْ الْقُبْطِيَّةَ؟" قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتُهَا امْرَأَتِي. فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" مُرْهَا فَلْتَجْعَلْ تَحْتَهَا غِلَالَةً إِنِّي أَخَافُ أَنْ تَصِفَ حَجْمَ عِظَامِهَا"

قُبْطِيَّةً كَثِيفَةً உடலை மறைக்கிற மெல்லிய ஆடை  :

)قبطية: ثياب من مصر بيضاء فيها رقة ورهافة، منسوبة إلى الأقباط. وأراد بالكثيف هنا الساتر. الغلالة: شِعار يلبس تحت الثوب وتحت الدرع أيضا، والشعار: الثوب الذي يلي الجسد؛ لأنه يلي شعره(.

கவர்ச்சி  அழகு என நினைத்து மற்ற பெண்கள் விழுந்து வாரி எடுத்துக் கொண்ட பள்ளத்தில் முஸ்லிம் பெண்மணிகள் தற்போது விழ ஆரமபித்திருக்கிறார்கள்.,

இன்றைய பெண்களின் பர்தாக்கள் கூட இறுக்கமாக தைக்கப்படுகின்றன, அதனால் பர்தா அணிந்து வெளியே செல்கின்ற பெண்களின் அவயவங்கள் கவர்ச்சியாக வெளியே தெரிகின்றன,

முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்து வருவதை விட இப்போது பர்தா அணிந்து வருவது கவர்ச்சியாக இருக்கிறது என இளைஞர்கள் சொல்கிறார்கள்

பர்தா என்பது இஸ்லாம் பெண்களை ஆண்களின் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்காக கொடுத்த கண்ணியமான ஆடை .

அந்த கண்ணியமான ஆடையையே கவர்ச்சியான ஆடையாக மாற்றி விட்ட கொடுமை தற்காலத்திய பர்தா வியாபாரிகளுடையது, \அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். தமது தொழிலில் பெண்களை ஆபாசப்படுத்துகிறார்கள் என்பதோடு இஸ்லாமின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச் சாட்டும் அவர்களை வந்து சேரும். அவ்வாறு நடந்து கொள்கிற பெண்மணிகளையும் அதை தடுக்க முயற்சி செய்யாமல் இருக்கிற ஆண்களையும் வந்து சேரும்.

கை மறைக்கப்பட வேண்டியது,
இஸ்லாமிய ஆடை மரபில் பெண்களின் கை மணிக்கட்டை தவிர முழுவது மாக அனைத்தும் அன்னிய ஆண்களின் முன் தோன்றும் போது மறைக்கப்பட வேண்டியதே!

அரைக் கை முக்கால் கை என்பதெல்லாம் இஸ்லாமிய பெண்களின் ஆடை மரபல்ல.

குழந்தைகளுக்கு ஸ்லீவ் லஸ் கவுண்கள் சுடிதார்கள் அணிவித்து பழக்கு வது முஸ்லிம் பெற்றோர்களுக்கு அழகல்ல,

நைட்டி எனும் ஆடை இரவு ஆடை. அது பொது அரங்கிற்கான ஆடையாக மாற்றுவது முஸ்லிம் பெண்களின் கவுரவத்திற்கு ஆகாது,

திருக்குர் ஆன் முஸ்லிம் பெண்மணிக்கு போதிக்கிறது,

وَلاَ يُبْدِينَ زِينَتَهُنَّ إِلاَّ لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ }

குடுமபத்திற்கான ஆடை தெருவிற்கான ஆடை ஆகாது,

மஹல்லாக்களில் வசிக்கும் முஸ்லிம் தாய்மார்கள் இதை கவனிக்க வேண்டும். ஆண்கள் இதை எடுத்துச் சொல்லவும் கண்காணிக்கவும் வேண்டும்.

இதற்கான நியாயத்தை திருக்குர் ஆன் அற்புதமாக சொல்கிறது,
ذَلِكُم أَطْهَر لِقُلُوبِكُمْ وَقُلُوبِهنَّ } [الأحزاب: 59].


பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் சமப்ந்தப்பட்ட ஒரு சிறு விசயமும் ஆண்களை சலனப்படுத்தக் கூடும். அது அவர்கள் அணிந்திருக்கிற சாரிக்கு கீழே தெரிகிற பாவாடை ஓராமாக இருந்தாலும் சரி, ஜாக்கெட்டிற்கு வெளியே தெரிகிற பிராவின் பட்டையாக இருந்தாலும் சரி.

இதை சொல்வதில் வெட்கப்பட ஏது ம் இல்லை, இது எதார்த்தம்.

இது நமது தாய்மார்களுக்கு உணர்த்தப்படனும்.

ஒரு கவிஞன் 25 வருடங்களுக்கு முன் சொன்னது  இன்னும் நினைவில் இருக்கிறது,
கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குணிந்து நிமிர்ந்து
பெருக்கிப் போனாள்.
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு

திருக்குர் ஆனின் ஆழிய கண்ணோட்டத்தை எத்தகைய வார்த்தைகளில் பாராட்டுவது ? 
தமது அலங்காரம் விசயத்தில் பெண்கள் கவனித்துக் கொள்ள் வேண்டிய ஒரே ஒரு அம்சம்
அன்னிய ஆண் மகனின் மனதை அழுக்காக்கிவிடக் கூடாது,
    
ஆடை எனபது மானத்தை மறைப்பது என்பதற்கு அடுத்து அதன் இரண்டாவது இலக்கு மனித இனத்தை அடையாளம் காண்பது,

ஆண் பெண் என்கிற அடையாளப்படுத்துதலுக்கு ஆடையே முதல் அம்சமாகும். அன்றிலிருந்து இன்று வரை. மட்டுமல்ல மேற்கிலிருந்து கிழக்கு வரையும்,

அதனால் ஆண்களுக்குரிய ஆடையை ஆண்களும் பெண்களுக்குரிய ஆடைய பெண்களும் அணிய வேண்டும்.

இஸ்லாம் இதற்கு மாற்றமாக நடப்பதை கண்டிக்கிறது,

: ""لَعَنَ الله المتشبِّهات من النساء بالرجال والمتشبِّهين من الرجال بالنساء "" (صحيح البخاري، كتاب اللباس،

இன்றைய நாகரீக உலகில் ஆண் பெண் உடைகளில் வித்தியாசம் இல்லை, யுனிசெக்ஸ் உடைகள் - பொதுவான உடைகள் என்று கூறினாலும் இன்றளவும் உலகம் முழுவதிலும் ஆண்களுக்கான ஆடை ஆண்களுக்குரியதாகவும் பெண்களுக்கான ஆடை பெண்களுக்குரியதாகவும் தனித்தனியாகவே இருக்கின்றன, அது ஷர்ட் ஆக இருந்தாலும் டீ ஷர்ட் ஆக இருந்தாலும்.
இதில் ஒரே மாதிரி ஆடை என்ற வீண் பெருமைக்கு ஆளாகி பெண்கள் தம்மை அலங்கோலப்படுத்திக் கொள்ள வேண்டாம்
இது வரை உலக வரலாற்றில் எங்காவது பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்து கொண்டதை பேஷனாக யாராவது காட்டி இருக்கிறார்களா ? அல்லது கருதியிருக்கிறார்களா எனில் இல்லை என்பதே அதற்கு பதிலாகும் , அவ்வாறு அணிவதை சமூகம் அவமானமாக கேலியாக பார்க்கிறது,
நிலமை இப்படி இருக்க ஆண்களின் தோற்றத்திற்கேற்ற ஆடையை பெண்கள் அணிவதும் அவமானமே!
இவ்வாறு நடப்படைத ஊக்கு விக்கிற யாராக இருந்தாலும் பெண்களை ஆபாசமாக காட்ட வேண்டும் என்ற எண்னமுடையவர்களே தவிர வேறில்லை.

எனவே ஆண்களை ப் போல ஆடை அணிவதை பெண்கள் தம்மை ஆபாசப்படுத்திக் கொள்ளும் ஓரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.

நிச்சயமாக ஆண்களுக்கேற்ற ஆடைகளில் பெண்களின் நளினமும் இயல்பும் விகாரப்படுகிறதே அன்றி சிறப்படைவதில்லை.

அதே போல அளவு குறைந்த ஆடைகள் எதுவாக இருப்பினும் அதை எதார்த்தமாக காட்ட நினைக்கிற் நாடுகளிலும் கூட கவர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

அதற்கு ஒரே சான்று போதும் கவர்ச்சிக்கான காலம் முடிந்தவுடன் பெண்கள்  இய்லபாகவே அந்த உடைகளை தவிர்த்து விடுகிறார்கள், மேலை நாடுகளில்,

ஷார்ட்ஸ் பெண்களின் உடை என்றால் ஏன் இப்போது ஹிலாரி கிளிண்டன் அதை அணிவதில்லை ?

ஆடை அணிவதன் மூன்றாவது இலக்கு அழகு படுத்திக் கொள்ளுதலும் அந்தஸ்ததை வெளிப்படுத்துவதுமாகும்.

நிச்சயமாக இதில் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது,
மார்க்கம் இதை தடுக்கவில்லை.
அழகான ஆடை அணிவது தற்பெறுமை அல்ல, அல்லாஹ்விற்கு பிரியமானது,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُود ٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:"لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ". قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً؟! قَالَ:" إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ".- مسلم

தொழுகைக்கு அழகான ஆடைகளுடன் வாருங்கள் என்கிறது குர் ஆன்.

தமீமுத் தாரி ரலி தொழுகைக்கு செல்வதற்காக ஆயிரம் தீனார் மதிப்பில் ஒரு சட்டை வாங்கினார்,

قال ابن تميمة - رحمه الله -:"من لبس جميل الثياب إظهارا لنعمة الله أو استعانة على طاعة الله كان مأجورا".

ஆனால் ஆடை தற்பெருமைக்கு காரணமாகி விடக் கூடாது.

عن ابن عمر (رضي الله عنهما) عن النبي صلى الله عليه وسلم:"مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبًا مِثْلَهُ ثُمَّ تُلَهَّبُ فِيهِ النَّارُ", -  أبو داود  وفي رواية:"البسه الله ثوب مذلة",

وفي رواية أخرى لابن ماجه:"من لبس ثوب شهرة , أعرض الله عنه حتى يضعه متى وضعه-

இன்று பிராண்டட் பெருட்களின் மீது மோகம் அதிகரித்திருக்கிறது, 300 ரூபாயுக்கு கிடைக்கும் ஷூ வை மூவாயிரத்திற்கு வாங்கி அணிகிறார்கள், அது ஷூ வுக்கு தேவையற்ற செலவு.

அந்தஸ்த்திற்கேற்ற பெருட்களை ஆடைகளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம், அது பெறுமைக்காக செய்கிற அநாவசியச் செலவாக இருக்க கூடாது,

அதே போல ஆண்கள் பட்டாடை அணியக் கூடாது,
قال  علي بن أبي طالب : " أن رسول الله، أخذ حريراً فجعله في يمينه وأخذ ذهباً وجعله في شماله، ثم قال : إن هذين حرام على ذكور أُمتي " (سنن أبي داود، كتاب اللباس
அது முஸ்லிம் உம்மத்தின் ஆண்களுக்கு மறுமையில் கிடைக்கிற ஆடை . இங்கு அதை அணிந்து விட்டால் மறுமையில் அது தடுக்கப்படும்

இன்று முஸ்லிம்களில் கூட சிலர் கல்யாணம் போன்ற விசேசங்களில் பட்டு வேட்டி பட்டுச் சட்டை கட்டிக் கொள்கிறார்கள்.

கலயாண மாப்பிள்ளை ஒரு சந்தோஷமான பரக்கத்தை எதிர்பார்க்கும் தருணத்தில் ஏன் ஹராமைச் செய்ய வேண்டும். பிறகு பரக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்  /

இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆடை அணிவதற்கு நான்காவது ஒரு காரணமும் இருக்கிறது அது சீதேஷ்ண சூழ்நிலைகள் அதாவது குளிர் வெப்பத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்வது,

நாம் கோடை அதிகமாக இருக்கீற நாட்டில் வசிக்கிறோம்.

இங்கே அதற்கேற்ற ஆடை அணிய வேண்டும். இன்னும் நமது நாட்டில் குழந்தைகளுக்கு டை கட்டி விடுகிறவர்கள் இருக்கிறார்கள்.

டை கட்டுவதை நாகரீகம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.

டை அமெரிக்க பழக்கம் அல்ல, இங்கிலாந்து பழக்கம்.

இங்கிலாந்து கடும் பனிப்பிரதேசம், அங்கே டை கட்டுவது சீதோஷ்ணத்திற்கு தேவை, நம் நாட்டின் சீதோஷ்னத்திற்கு சட்டையே அதிகம்.

இன்றய நம்முடைய வாழ்வில் ஆடை அணிவதற்கான அனைத்து அம்சங்களிலும் போலித்தனம் மிகைத்து விட்டடது,

முஸ்லிம்களான நமக்கு அற்புதமான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன, நிச்சயமாக அது கண்ணியத்திற்கான ஒரிஜினல் வழி!  நாம் போலித்தனத்திற்கு ஆட்பட்டு விட வேண்டாம்.

எப்படி கோடைக்கான ஆடையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறோமோ அதே போல மானத்திற்கான அடை அடையாளத்திற்கான ஆடை அலங்காரத்திற்கான ஆடையையும் தேர்வு செய்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!


1 comment:

  1. جيد جدا ماشاءالله جزاك. الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete