வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 14, 2016

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்


இது தேர்தல் காலம். தங்களக்கு விருப்பமானவர்களை தலைக்கு மேல் வைத்து புகழ்வதும்,
பிடிக்காதவர்களை காலுக்கு கீழே மிதித்து இகழ்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிற நேரம் இது
முஸ்லிம்கள் இது விசயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க கடமைப் பட்டிருக்கிறார்கள்.
நமது மார்க்கம் புகழ்வதற்கும் இகழ்வதற்கும் வரையரைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரையரைகள் உண்மையில் மரியாதைக்குரிய எந்த மனிதனும் கடைபிடிக்க வேண்டிய நன்மைகளாகும்.
இது விசயத்தில் எல்லை மீறுவது அல்லது தவறுகளைச் செய்வது  தேர்தலில் வெற்றியை அல்லது தோல்வியை தரலாம்.
ஆனால் நாளை மறுமையில் நம்மை கேள்விக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கி விடும்.
இன்னொரு செய்தியும் கவனிக்கத்தக்கது.
இதனால் ஏற்படும் தீமைகள் கட்சிக்கோ அமைப்புக்கோ அல்ல; நேரடியாக நமக்கு ஏற்படக் கூடியதாகும்.
ஒரு மனிதனை புகழலாமா? அல்லது இகழலாமா?
எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே உரியது என்பதற்கு விளக்கம் எல்லா புகழுக்குரிய செயல்களுக்கும் காரணமானவன் அவனே ! எனவே அவனே உண்மையான புகழுக்குரியவன் என்பதாகும்.
வேறு யாரையும் புகழக்கூடாது என்பதல்ல.
புகழ்ச்சி அனுமதிக்கப்பட்டதே!
அல்லாஹ் நல்லோர்களை புகழ்கிறான்,
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ المُهَاجِرِينَ وَالأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ الله عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أبداً ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ [التوبة:99-100]

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ المُنْكَرِ وَتُؤْمِنُونَ بِالله.)[آل عمران:110].

مُحَمَّدٌ رَسُولُ الله وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلاً مِنَ الله وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ..الآية [الفتح:29].


பெருமானார் புகழ்ந்துரைத்தவைகளும் பல உண்டு.
دّثنا سفيان بن عيينة، عن زائدة، عن عبدالملك بن عمير، عن ربعي بن حراش، عن حذيفة: أن النبيّ صلّى الله عليه وسلّم،" قال: اقتدوا باللذين من بعدي أبي بكر وعمر" . رواهُ أحمد (5|382)

சக மனிதனை புகழலாமா?
عبد الله بن مسعود رضي الله عنه (إن الله نظر في قلوب العباد، فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد، فاصطفاه لنفسه، فابتعثه برسالته ثم نظر في قلوب العباد بعد قلب محمد، فوجد قلوب أصحابه خير قلوب العباد، فجعلهم وزراء نبيه، يقاتلون على دينه، فما رأى المسلمون حسناً فهو عند الله حسن، وما رأوا سيئاً فهو عند الله سيئ)=  احمد
நல்லவர்களின் நன்மையான விசயங்களை புகழ்வது நன்மையானது. அந்த நல்லவர்களின் அந்தஸ்தை நெருங்க உதவக்கூடியது.
மதீனாவின் மக்களை புகழச் சொன்ன பெருமானார்.
عَنْ أَنَسٍ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَتَاهُ الْمُهَاجِرُونَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا رَأَيْنَا قَوْمًا أَبْذَلَ مِنْ كَثِيرٍ وَلَا أَحْسَنَ مُوَاسَاةً مِنْ قَلِيلٍ مِنْ قَوْمٍ نَزَلْنَا بَيْنَ أَظْهُرِهِمْ لَقَدْ كَفَوْنَا الْمُؤْنَةَ وَأَشْرَكُونَا فِي الْمَهْنَإِ حَتَّى لَقَدْ خِفْنَا أَنْ يَذْهَبُوا بِالْأَجْرِ كُلِّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا مَا دَعَوْتُمْ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِதிர்மிதி 2411
புகழ்ச்சி வார்த்தையிப் பேணுதல் அவசியம். இப்படித்தான் அப்படித்தான் என்று உறுதியாக பரிசுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடாது. இப்படி இருக்க கூடும் அப்படி  இருக்கலாம் என்ற வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது சிறப்பு
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ 2662 – புகாரி
புகழ்ச்சியில் மகிழ்ச்சியடையலாமா?
புகழ்ச்சியால் நஷ்டமா?
பிறர் அதிகமாக புகழ்வதில் அதிகம் பெருமையடைவது ஆபத்தாக முடியும்
புகழ்ச்சியால் நஷ்டமே
அளவு கடந்து புகழ்பவர்களின் முகத்தில் மண் அள்ளீப்போடுங்கள் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ قَامَ رَجُلٌ فَأَثْنَى عَلَى أَمِيرٍ مِنْ الْأُمَرَاءِ فَجَعَلَ الْمِقْدَادُ يَحْثُو فِي وَجْهِهِ التُّرَابَ وَقَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَحْثُوَ فِي وُجُوهِ الْمَدَّاحِينَ التُّرَابَ திர்மிதி 2316
காரணம் ஒருவரை அளவு கடந்து புகழ்வது அவருக்குச் செய்யும் நன்மை அல்ல. அவரை தற்பெருமைக்கு ஆளாக்கி அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும்.

عَنْ مَعْبَدٍ الْجُهَنِيِّ عَنْ مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ
முகத்துக்கு நேரா புகழ்வது குற்றமாகாதா?
முகத்துக்கு நேரே பொருத்தமற்ற புகழுரைகளை கேட்கிற மனிதன் நல்லவனாக இருந்தாலும் அவனையும் அறியாமல் தற்பெருமைக்கு ஆட்பட நிறைய உதாரணங்கள் உண்டு.

பிரான்ஸை ஆட்சி செய்த லூயி மன்னர்களை அவர்களது துதிபாடுகள் you are tha state நீங்கள் தான் அரசு என்று அதிகப்படியாக புகழ்ந்ததன் விளைவே பிரஞ்சு புரட்சியின் போது அழிந்து போன் 16 ம் லூயி மன்னன் I an the state நானே அரசு என்றான்.

தீய நபர்கள் அந்த புகழுரைகளை வைத்தே தப்பான தகுதியை தங்களுக்கு சூடிக்கொள்ளும் ஆபத்தும் உண்டு,

1900 காதியானிய்யத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும் , அந்த ஆண்டு தான் மிர்சாவின் தீவிர பக்தரான் மவ்லவி அப்துல் கரீம் ஒரு ஜும் குத்பாவில் ஏனெய நபிமார்களைப் போலவே மிர்சா நபியாகவும் இரஸீலாகவும் இருக்கிறார். தூதர்களிடம் வேறுபாடு காட்டக் கூடாது. என அறிவித்தார்.

இதன் பின்னரே மீர்சா தன்னை என்றும் தனக்கு வஹி வருகிறது என்றும் பிதற்ரத் தொடங்கினான்,

ஒரு தனிமனிதர் தனது தீய தலைவனை அதிகப்படியாக புகழ்ந்த் காதியானியத்திற்கு காரணமாக அமைந்தது.

நமது புகழ்ச்சியால் புகழப்படுவர் தற்பெருமைக்கு ஆளாகமாட்டார். என்ற உறுதியிருந்தால் ஒருவரின் பெருமையை அவரது முகத்துக்கு நேரே சொல்வதில் குற்றமில்லை,
رواه البخاري عن المسور بن مخرمة قال: ((لما طعن عمر جعل يألم فقال ابن عباس – وكأنه يجزعه -: يا أمير المؤمنين ولئن كان ذاك، لقد صحبت رسول الله صلى الله عليه وسلم فأحسنت صحبته، ثم فارقته وهو عنك راض، ثم صحبت صحابته فأحسنت صحبتهم، ولئن فارقتهم لتفارقنهم وهم عنك راضون، قال: أما ما ذكرت من صحبة رسول الله صلى الله عليه وسلم ورضاه فإنما ذاك منّ من الله تعالى منّ به علي، وأما ما ذكرت من صحبة أبي بكر ورضاه فإنما ذاك منّ من الله جل ذكره منّ به علي، وأما ما ترى من جزعي فهو من أجلك وأجل أصحابك، والله لو أن لي طلاع الأرض ذهباً لافتديت به من عذاب الله عز وجل قبل أن أراه))
وقالت عائشة نعم النساء نساء الأنصار لم يمنعهن الحياء أن يتفقهن في الدين 
தற்புகழ்ச்சி
ஒரு மனிதர் தன்னுடைய பெருமையை தேவை கருதி வெளியே சொல்லலாம். அல்லது அல்லாஹ்வின் நிஃமத்தை எடுத்துக் காட்டுவதற்காக சொல்லலாம்.

ஹுனைனிலிருந்து திரும்புகிற போது தனது கழுத்தில் துண்டை இறுக்கி நிதி கேட்ட தோழர்களிடம் பெருமானார் (ஸல்) தனது பெருமையை சொல்லிக்காட்டினார்கள். “நான் கஞ்சனல்ல பொய்யனல்ல கோழை அல்ல.”

قَالَ أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ النَّاسُ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ فَخَطِفَتْ رِدَاءَهُ فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَعْطُونِي رِدَائِي لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ ثُمَّ لَا تَجِدُونِي بَخِيلًا وَلَا كَذُوبًا وَلَا جَبَانًا- புகாரி 2821

கலீபா காரூன் ரஷீது ஒரு முறை உப்பரிகையில் நிற்கிற போது ஒரு மேகம் வந்தது, அங்கு அது மழையாக பொழியாமல் அவரை கடந்து சென்றது. ஹாரூன் ரஷீது சொன்னார்நீ எங்கு வேண்டுமானாலும் பொழி! அதன் விளைச்சல் எனக்கு வந்து சேரும்.
الرخاء في عهد هارون الرشيد
كان هارون الرشيد ينظر إلى السحابة المارة ويقول: (أمطري حيث شئت؛ فسيأتيني خراجك). وقد بلغت إيرادات الدولة العباسية في عهده (70 مليون و150 ألف دينار)،  

கலீபாவின் உள்ளம் எத்தகையது என்பது உலகிற்கு தெரியும். அவர் அல்லாஹ்வின் பேரடிமையாக நடந்து கொண்டவர். அதனால் அவரது இந்த வார்த்தை தற்பெருமையாக பார்க்கப்படாது, தனது ஆட்சியில்ன் விஸ்தீரணத்தை எடுத்துக் காட்டி அல்லாஹ்வை புகழ்வதாக அமையும். அதனால் தாவ் அவர்களது அரசு மேலும் விரிவடைந்தது,
ஆனால் இரண்டம் உலக யுத்தத்தின் கால கட்டத்தில் உலகின் தொன்னூறு நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிர்ட்டிஷ் பேரரசின் பிரதமர் வின்ஸடன் சர்ச்சில் ஒரு தடவை சொன்னார்,
sun never sets on the british empire
ஆனால் அது தற்பெருமையின் உச்சத்தில் சொல்லப்பட்டதாக அமைந்தது, சீக்கிரமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சிதைந்தது, இதைச் சொன்ன சர்ர்சிலும் பதவி இழந்தார்.   
புகழ்ச்சியை எதிர்பார்க்கலாமா?
தன்னுடைய சொந்த பெருமையாக இல்லாமல், அல்லாஹ் தனது புகழை உயர்த்தி வைக்க வேண்டும் என்று நினைப்பது முஃமின்களின் இயல்பே . அது இந்த உலகில் தற்பெருமையை காட்டுவதை நோக்கமாக இருக்க கூடாது.
புகழ் மிக்க ஒரு வாழ்வு வேண்டும் என நபிமார்கள் பிரார்த்தித்துள்ளார்கள்,
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآَخِرِينَ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ} [الشعراء: 83 ـ 89]
இது உலகியல் அந்தஸ்தை நோக்கமாக கொண்டதல்ல, மறுமையின் அந்தஸ்தையும் தான் கண் மூடிய பிறகு கிடைக்கும் நல்ல துஆ வையும் நோக்கமாக கொண்டது,
நல்ல விசயத்தில் புகழ் வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம் “ அல்லாஹ்வை கோபப்படுத்தி மக்களின் புகழுரையை வாங்கக் கூடாது, அதை விட நஷ்டம் வெறில்லை.
மனித சமூகத்தை முழுமையாக திருப்திப் படுத்தவும் அதன் மூலம் அனைவரின் புகழைப் பெருவதும்  யாராலும் முடியாது என கஸ்ஸாலி ரஹ் கூறுகீறார்கள்/
قال الغزالي: رضا الناس غاية لا تدرك فكل ما يرضي به فريق يسخط به فريق ورضا بعضهم في سخط بعضهم ومن طلب رضاهم في سخط الله سخط الله عليه وأسخطهم أيضاً عليه. انتهى.

புகழுக்குரிய ஒரு வாழ்க்கை அமையும் போது அல்லாஹ்வின் பக்கம் மீள்வது சிறப்பானது,
மிகுந்த வசதியோடும் புகழோடும் வாழ்ந்த இப்னு உமர் ரலி இப்படி பிரார்த்திப்பார்கள்
دعاء عمر رضي الله عنه: اللهم اجعل عملي كله صالحاً واجعله لوجهك خالصاً ولا تجعل لأحد فيه شيئاً.  - ذكره عنه ابن القيم في الجواب الكافي.
தப்பான ஆட்களை புகழ்வதையும் ஒரு வரை தகுதிக்கு மீறி தப்பாக புகழ்வதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
عن عبد الله بن بريدة عن أبيه أن نبي الله صلى الله عليه وسلم قال: «لا تقولوا للمنافق سيدنا فإنه إن يك سيدكم فقد أسخطتم ربكم».  وأبو داود (4977

ن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله عز وجل يغضب إذا مدح الفاسق في الأرض». ("شعب الإيمان"/ (4543))

இழிவு படுத்துவது தகுமா?
தவறான போக்கை சமுதாயத்திற்கு உணர்த்தும் நோக்கில் இகழ்வதற்கும் அனுமதி உண்டு, இதன் நோக்கம் கண்டிப்பதும் திருத்துவதுமாக இருக்க வேண்டும். பிறரை தாழ்வாக கருதும் எண்ணத்தில் இருக்க கூடாது.
அல்லாஹ் திருக்குர் ஆனில் தீயவர்களை தீய குணங்களை இகழ்கிறான்.
إن الإنسان لظلوم كفار، إبراهيم، آية: 34 ..
وكان الإنسان عجولا، الإسراء، آية: 11 ..
وكان الإنسان أكثر شيء جدلا

وَلاَ يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ [آل عمران: 180


பெருமானார் இகழ்ந்துரைத்த தைவகளும் பலதுண்டு
பேராசை கொண்ட ஓநாய்கள்.
عن كعب بن مالك الأنصاري، عن النبي صلى الله عليه وسلم قال: ((ما ذئبان أرسلا في غنم بأفسد لها، من حرص المرء على المال، والشرف لدينه

இகழுதல் என்பது தவறுகளை சுட்டிக்காட்டி அதன் விளைவை இழிவாக காட்டுவதாகும்.  
ஒரு தனிமனிதனை தனிப்பட்டு மானக்கேட்டுக்கு உள்ளாக்குவது அல்ல,
அதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.
அதே போல நியாயமற்று ஒரு மனிதனின் மரியாதையை இழிவுக்குள்ளாக்குவது ஹராமாகும்
فقد قال النبي صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام، دمه وماله وعرضه. رواه مسلم، 
في صحيح مسلم قال رسول الله صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام: عرضه وماله ودمه، التقوى هاهنا. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. 
وقال صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. روا ه البخاري ومسلم. 
மனிதனின் மானம் கஃபாவை விட புனிதமானது,
ஒரு தீயவனை இழிவுபடுத்தும் குர் ஆனின் சிறந்த நடை முறை . இப்படிச் சிலர் இருக்கிறார்கள் கொஞ்சம் நகர்ந்துட்டா ஏமாத்தி விடுவான் என்று சொல்வது.
وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

விமர்சனம் எப்போது இழிவு படுத்துவதாகும் ?
ஒரு குறிப்பிட்ட மனிதரின் மரியாதையை குறி வைத்து அவரது மரியாதையை குறைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வார்த்தைகளை பிரயோகிப்பது ஹராமாகும்.
ஆனால் தேவையேற்படும் பட்சத்தில் ஒரு மனிதனை கண்டிக்க நேரடியாகவும் கடிந்து கூறலாம். إنك امرؤ فيك جاهلية
عن المعرور بن سويد قال : "رأيت أبا ذر رضي الله عنه وعليه بُردٌ وعلى غلامه بُرد، فقلت: لو أخذتَ هذا فلبسته كانت حلّة، وأعطيته ثوباً آخر، فقال: كان بيني وبين رجل كلام، وكانت أمه أعجمية فنلت منها، فذكرني إلى النبي -صلى الله عليه وسلم- فقال لي: ( أساببت فلاناً؟ )، قلت: نعم قال: ( أفنلت من أمه؟ ) ، قلت: نعم، قال: ( إنك امرؤ فيك جاهلية ) ، قلت: على حين ساعتي هذه من كبر السن ؟، قال: ( نعم، هم إخوانكم جعلهم الله تحت أيديكم، فمن جعل الله أخاه تحت يده فليُطعمه مما يأكل، وليُلبسه مما يلبس، ولا يكلّفه من العمل ما يغلبه، فإن كلفه ما يغلبه فليُعِنْه عليه ) "متفق عليه واللفظ للبخاري .

முஸ்லிம்கள் கவனிக்க வேண்டியது,
புகழ்வதும் இகழ்வது குர் ஆனிலும் ஹதீஸிலும் இருக்கிறது,
முஸ்லிம்கள் நியாயமாக காரியத்திற்காக புகழும் போதும் இகழும் போது குர் ஆன் எப்பபடி இது விசயத்தை கையாணடது என்பதை நினைவில் நிறுத்தி அதன் படி செயல் பட வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் கட்சிக்காரர்கள் தமது ஆட்களை புகழ்வதிலும் அல்லது தமது கட்சியின் நடவடிக்கையை புகழ்வதிலும். அதே நேரத்தில் தமக்கு பிடிக்காத ஆட்களை தனிப்பட்டு இகழ்வதிலும் எல்லை மீறிச் செல்கிறார்கள்,
எச்சரிக்கை!
அதிகப்படியாக ஒரு வரை புகழ்ந்து அல்லது ஒருவரின் மானத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு அணியில் நின்று நியாயமற்று பேசினீர்கள் என்றால் தேர்தல் முடிந்த பிறகு போட்டி அணிகள் ஒன்று சேரக் கூடும்
ஆனால் மானக் கேடுக்கு உள்ளாக்கப்பட்டவன் நாளை அல்லாஹ்வின் அர்ஷின் முன்னிலையில் கேள்வி எழுப்புவான்.
அப்போது பதில் சொல்ல நாம் தனியாகத்தான் நிற்க வேண்டும். கட்சியோ கட்சிக்காரர்களோ வர மாட்டார்கள்.
ஞாபகத்தில் வைக்க வேண்டும் . நமது வாழ்வியல் பண்பு என்பது தேர்தலுக்கு அப்பாலும் நிலைக்க் வேண்டியது.


1 comment:

  1. அல்ஹம்து லில்லாஹ் காலத்திற்கு ஏற்ற வார்த்தைகள் அருமை

    ReplyDelete