வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 28, 2016

திப்புவின் அரசியல்

இன்று மைசூர் மன்னர் திப்பு சுல்தான் இறந்த 217 வது நினைவு நாள்.
இரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்தாலும் அவருடைய வாழ்வும் மரணமும் இன்றுவரை மலர்ச்சியாகவே இருக்கிறது.
திப்பு என்றவுடன் மக்களின் மனதில் வீரம் நிழலாடுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த நான்காம் மைசூர் போர்க் களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை அணுகிய கிழக்கிந்திய கம்பெனி படைப்பிரிவின் தலைவன் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கூறிய போது முடியாதுஎன மறுத்து, “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்என அவர் முழங்கிய. கர்ஜனை வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமாகிவிட்டது.
திப்பு சுல்தானின் வரலாற்றை அவரது தந்தை ஹைதர் அலியின் வரலாற்றோடு சேர்த்தே படிக்க வேண்டும். அப்போதுதான முழுமையான ஒரு புரிதலும் தெளிவும் கிடைக்கும்.
இந்தியாவை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அவர்களுக்கு சிம்ம சொப்பனாமாக இருந்தவர்கள் இவ்விருவரும். தந்தை ஹைதர் அலியோ சென்னையை முற்றுகையிடத் துணிந்து வெள்ளையர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கினார். அவருடைய மகனான திப்பு சுல்தானோ ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்தே வெள்ளையர்களைத் துரத்த முனைந்தவர் ஆவார்..
ஹைத்ர் அலியின் வரலாறு
கிபி 18 ம் நூற்றாண்டில் - அதவாது 1700 வது ஆண்டுகளில் - அதாவது முன்னூறு வருடத்திற்கு முன்பு தென்னிந்தியாவில் மைசூரை மையமாக கொண்டு மைசூர் உடையார் அரசர்கள் மைசூரை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா தமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர் .
18 ம் நூற்றாண்டின் தொடக்காலத்தில் தான் பிரிட்டிஷ்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஊடுறுவியது. இந்திய மன்னர்களை அச்சுறுத்தி , ஆசைவார்த்தை காட்டி , போர் தொடுத்து பல பகுதிகளை கைப்பற்றியது. பல இந்திய மன்னர்களோடு வஞ்சகமாக உறவாடி தன்னுடைய தளதத்தை பலத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தது.
ஆற்காட்டு நவாபுகள் ஒரு புறம், மராட்டியர்கள் மறுபுறம், வியாபாரிகளாக வந்து நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரகளான கிழக்கிந்திய கம்பெனியினர் ஒருபுறமாக மைசூர் அரசர்களுக்கு இடையூறு அளித்துக் கொண்டிருந்தனர், கிழக்கிந்திய கம்பெனி ஆற்காட்டு நவாபுகளுடன் சேர்ந்து கொண்டு மைசூருக்கு இடையூறளித்துக் கொண்டிருந்தது.
மைசூரின் கட்டுப்பாட்டில் இருந்த கோலார் மாவட்டத்திலுள்ள புதுகோட் எனும் இடத்தைல் 1722 ல் ஹைதர் அலி பிறந்தார்.   அவர் வீரம் மிக்கவராக இருந்ததால் இளவயதிலேயே மைசூர் படையில் சேர்ந்து சீக்கிரமே உயர்பதவிகளைப் பெற்றார்.  1749 ல் மராட்டியர்களின்  தேவனஹல்லியை முற்றுகையிட்டிருந்த போது அதில் வெற்றி பெற ஹைதர் அலி காட்டிய தீரம் அவருக்கு படைத்தளபதி பொறுப்பை பெற்றுத்  தந்தது.
ஹைதர் அலி தேவனஹல்லியில் தங்கியிருந்த போது அவருடைய இரண்டாவது மனைவி பாத்திமா பக்ருன்னிஸாவுக்கு திப்பு சுல்தான் பிறந்தார்,
திப்பு சுல்தான் 1750 நவம்பர் 20 ம் தேதி (ஹிஜ்ரி 1163 துல் ஹஜ் பிறை 20 ) வெள்ளிக்கிழமை பெங்களூருவிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற தேவனஹல்லியில் பிறந்தார். ஆர்க்காட்டில் அடங்கியிருக்கிற திப்பு மஸ்தான் அவுலியாவின் ஞாபகார்த்தமாக திப்பு சுல்தான் எனப் பெயரிடப்பட்டார்.
ஹைதர் அலி தனது மகனை இளவயதிலிருந்தே ஒரு இளவரசருக்குரிய தகுதியோடு வளர்ந்தார். உயர்தரமான கல்வியும் இராணுவப் பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டது.
உருது ஹிந்தி கனடா பாரசீகம் அரபு மொழிகள் அவருக்கு கற்றுத்தரப்பட்டன, சிறு வயதிலேயே குர் ஆனையும் இஸ்லாமிய சட்டக்கலை பிக்ஹையும் கற்றார், குதிரயேற்றமும் துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றார்.  இளவயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 17 வது வய்தில் திப்புவுக்கு இராணுவத்தில் தனிப் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஹைதர் அலியின் பல போர்களில் திப்பு அவருக்கு உதவியாக இருந்தார். திருப்பத்தூர் வாணியம்பாடி ஆகிய பகுதியை ஹைத்ர் அலி கைப்பற்ற திப்பு பெருந்துணை புரிந்தார்.
தனியாகவும் திப்பு பல போர்களை வழி நடத்தினார். மங்களூரை முற்றுகையிட்டு அங்கிருந்த கர்னல் பெய்லியை தலை தெரித்து ஓடச் செய்தார், அப்போது திப்புவ்ன் படையில் 150 வீரர்களே இருந்தனர். அப்போது ஆங்கிலேயரின் படையை அவர் சின்னா பின்னப்படுத்தியதை “ ஆங்கிலேயருக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வி “ என விமர்ச்சிக்கிறார் தாமஸ் மன்றோ.  
1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.
இதற்கிடையே மைசூர் மன்னர் இந்தக் கால கட்டத்தில் மிக பலகீனமானவராக இருக்கவே ஆட்சிப் பொறுப்பு முழுவதும் ஹைதர் அலியிடம் வந்தது. ஆனால் ஹைதர் அலி மன்னரை அப்புறப்படுத்த வில்லை. மன்னர் பேருக்கு மன்னராக இருந்தார். ஹைதர் அலியே நிஜ மன்னராக உலா வந்தார்
தொடர்ச்சியாக ஹைதர் அலி. பல போர்களிலும் தீரத்துடன் போராடி மராட்டியர்கள்ளையும் ஆற்காட்டு நாவாபுகளையும் ஆங்கிலேயர்களையும் வெற்றி கொண்டு பல பகுதிகளையும் மைசூருடன் இணைத்தார்.
சத்தியமங்கலம் தாராபுரம் பாலக்காடு பகுதிகளை எல்லைகளாக கொண்ட கோவை மாவட்டத்தையும் (கொங்கு மண்டலம்) ஹைதர் அலி வெற்றி கொண்டு மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
அதே போல கரூர்  திருச்சியையும் திண்டுக்கல்லையும் மைசூர் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ந்தார், அது போல மங்களூர் கொச்சி ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தார்.
தென்னிந்தியாவில் மராத்தியர்களும் ஐதராபாத் நிஜாம்களும்  பிரிட்டிஷ்காரர்களுக் பணிந்து அவர்களுக்கு உதவிய போதும் அழுத்தமான நெஞ்சுரத்தோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று அவர்களது கோட்டையான சென்னை வரை படை நடத்திச் சென்றார் ஹைதர் அலி.
1781 ஜூலையில்  ஆங்கிலேயரை எதிர்த்து பரங்கிப் பேட்டையில் நடை பெற்ற யுத்தத்தில் ஹைதர் அலி தோற்றுப் போனாலும் கூட கடலூரை கைப்பற்றி தன் வசத்தில் வைத்துக் கொண்டார்.
1782 ல் புற்று நோய காரணமாக ஹைதர் அலி மரணமடந்தார்.      
ஹைதர் அலி மரணமடைந்தத போது திப்பு சுல்தான் பொன்னானியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலியின் மரணத்தை அமைச்சர்களாக இருந்த பூர்ணைய்யாவும் கிருஷ்ணராவும் மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர். திப்புவுக்கு இரக்சியமாக சொல்லியனுப்பினர்.
செய்தி கிடைத்தவுடன் நான்கு நாட்களில் தலைநகருக்கு திரும்பி 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் சுல்தானாகஅரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான், மைசூர் வேங்கை என புகழப் பெற்ற புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைதன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார்.
தென்னிந்தியாவில் தங்களது ஊடுறுவலை நாலா புறத்திலும் ஹைதர் அலி கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆங்கிலேயர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அவருக்குப் பின் திப்புவின் தீரமும் இராஜ தந்திரங்களும் அவர்களுக்குக்கு பெரும் தொல்லையாக அமைந்தது.
திப்பு சுல்தானின் தாய் பாத்திமா பக்ருன்னிஸா ஆந்திராவின் கடப்பா பகுதி கவர்னர் மீர் முயீனுத்தின் மகளாவார். தாய்வழியின் அரச இரத்தமும் தந்தையின் வீரமும் திப்புவை தீரமும் அதே சமயம் விவேகமும் நிறைந்தவராக உருவாக்கியிருந்தன.
தந்தையை போல ஆங்கிலேயரை தடுத்து நிறுத்துவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் நாட்டிலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என திப்பு திட்டமிட்டார்.
அதற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பிரஞ்சு மன்னர் நெப்போலியனுடன் பேசினார், துருக்கிய மன்னருக்கு தூதனுப்பினார். காபூல் அரேபியா மொரீஷியஸ் உள்ளிட்ட பல தூர நாடுகளுக்கும் தூதனுப்பி உதவி கோரினார். துரதிஷ்டவசமாக அவருக்கு தேவையான உதவியை அவர்கள் செய்ய நினைத்தும் உதவி வந்து சேர வில்லை.
பிரிட்டிஷ் காரர்கள் மராத்தியரையும் ஹைதராபாத் நிஜாமையும் துணைக்கழைத்துக் கொண்டு வந்து திப்புவின் மீது தாக்குதல் தொடுத்தனர்.
மூன்றாவது மைசூர் போரில் பிரிட்டிசின் காரகளிடம் திப்பு தோற்றார்.
ஆட்சிப் பகுதியில் பாதியையும் முப்பது இலடம் ரூபாயையும் பிரிட்டிஷாருக்கு திப்பு கொடுக்க வேண்டும் என்ற வகையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் வரை தன்னுடை முயீசுத்தீன் , அப்துல் காலிக் ஆகிய இரண்டு  மகன்களை பிரிட்டிஷ்காரர்களிடம் பணையமாக திப்பு கொடுத்தார்.  
சிறிது காலத்திற்குள் உரிய தொகையை கொடுத்து திப்பு மகன்களை மீட்டார்.
அதன் பின்னரும் ஆங்கிலேயரை எதிர்க்கும் திப்புவின் வேகம் குறையவில்லை.
ஆங்கிலேயரை விரட்டியடிக்கும் வரை பஞ்சு மெத்தையில் உறங்குவதில்லை என சபதம் செய்து கூடாரம் அடிக்க பயன்படுத்தும் முரட்டுத் துணியில் படுத்துறங்கினார்.

1798 ம் ஆண்டு ஆங்கிலேய படைத்தளபதியாக பெறுப்பேற்ற வெல்லஸ்லீ பிரபு திப்புவை ஒடுக்கினால் மட்டுமே இந்தியாவில் தாம் காலூன்றுவது சாத்தியமாகும் என்பதை உணர்ந்தார். நாலாபுறம் இருந்தும் தாக்குதலுக்கு திட்டமிட்டார்.
"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் "என திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.
"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்".என்று கடிதம் எழுதினார்ன்  மார்க்வெஸ் வெல்லெஸ்லீ ."
அனைத்து தரப்பிலும் சூழப்பட்டிருந்த நிலையிலும் திப்பு ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையில் நிலை குலையாது நின்றார்.
குள்ளநரித்தனத்தில் கைதேந்த ஆங்கிலேயர்கள் திப்புவுன் படையிலிருந்த சில அதிகாரிகளை விலைக்கு வாங்கினர்.
ஒரு திட்டம் இரக்சியமாக தீட்டப்பட்டது.
1799 ம் ஆள் மே நான்காம் தேதி படைவீரர்களுக்கு சம்பளம் வழங்கப் படும் என திப்புவின் அதிகாரி மீர் சாதிக் திடீரென அறிவித்தார். வீரர்கள் சம்பளம் பெற முண்டியடித்துக் கொண்டு வந்தனர். தமது காவல் பணியை விட்டனர். அந்த நேரம் பார்த்து ஆங்கிலேயர்கள் உள்ளே வருவதற்கு ஒருவர் கோட்டைக் கதவை திறந்து விட்டார். திவான் பூர்ணய்யா, மீர் சாதிக், மிர் குலாம் அலி ஆகிய அதிகாரிகள் இச்சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தனர்.
இந்த நேரத்தில் தன்னுடைய இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த திப்பு சுல்தான் எதிரிகள் நுழைந்து விட்டதை தெரிந்து கொண்டு அப்படியே யுத்தத்தில் குதித்தார்.
பாதி உணவில் எழுந்து வந்த திப்பு, தீரமுடன் எதிர்த்து நின்றார். நெஞ்சிலும், தோளிலும் பலமான வெட்டுக் காயங்கள். அப்படியும் உறுதியுடன் எதிர்த்து நின்றது அந்த மாமலை. இறுதியில் வலது காதின் கீழ் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார் அந்த மாவீரர்.
திப்புவின் வீழ்ச்சி அவரது சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியாவையும் வெள்ளையர்களின் ஆளுகைக்குக் கீழ் இட்டுச் சென்றுவிட்டது எனலாம்.
திப்புவின் மரணச் செய்தியை கேட்டதும் ஆங்கிலப் படையின் ஜென்ரல் ஹார்ஸ் : “ இன்றிலிருந்து இந்தியா நம்முடையது’  என்று சொன்னார் எனில் திப்பு எந்த அளவுக்கு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தடுத்து நிறுத்திருந்தார் என்பதை உணரலாம்.
திப்பு இறந்த பிறகு அவரது அவரது பிரதத்தின் அருகே செல்லக் கூட ஆங்கிலேயர் பயந்தனர்.
யுத்தத்திற்கு அடுத்த நாள் படுகாயமுற்று இறந்திருந்த திப்புவை அவர் கையில் அணிந்திருந்த தாயத்தை கொண்டு அடையாளம் கண்டு கொண்ட மக்கள் அவருக்கு ஜனாஸா தொழ வைத்து அவரது தந்தையின் அடக்கவிடத்திற்கு அருகே அடக்கம் செய்தனர்..
திப்பு சுல்தான் பெறுப்பேற்ற போது நாலா புறத்திலிருந்து சூழ்ந்திருந்த எதிர்ப்பை தாங்கி தந்தை உருவாக்கிய ஒரு பரந்த அரசாங்கத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்தார். எத்தகை சிக்கலான சந்தர்ப்பத்தில் இருந்த போது திப்புவின் ஆட்சியின் நேர்த்தி அற்புதமானது என அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏகோபித்து கூறுவர்.
பனிரெண்டு ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திப்பு சுல்தான் தந்தையை போல ஒரு போர் வீரராக மட்டும் இல்லாமல் சிறந்த ஆட்சியாளராகவும் இருந்து மக்கள் பணியாற்றினார்.
விவசாயத்திற்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்
கட்டுரை 2012 மார்ச் 17 ம் தேதி தினமணி நாளிதழ் சிறுவர் மலரில் இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான் என்ற தலைப்பில் கலக்கண்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் திப்புவின் சமூகச் சாதனைகள் பலவற்றை அவர் பதிவு செய்திருந்தார்,

சாதனை 1
அதில் திப்பு சுல்தான் உயர் ரகப் பயிர்களை அறிமுகம் செய்ததாதகவும் விவசாயத்திற்கு  கடன் வசதி அளித்ததாகவும், நீர்ப்பாசன வசதி அதிகமாக தரப்பட்ட்டதாகவும் , கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தினார் திப்பு. என்றும் அவர் கூறுகிறார்;
எந்த ஒரு சிறந்த அரசுக்கான முதல் அடையாளம் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் விவசாயத்தை கவனிப்பதாகும். ஆனால் இன்றைய நம்முடைய அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை எண்ணிப்பாருங்கள்! 
விவசாயத்தை மறந்து விட்ட அரசுகள். வெளிநாட்டுக் கம்பெனிகள் தரும் நச்சு விதைகளை பயன்படுத்த வேண்டிய நிர்பந்த்தத்தில் நமது விவசாயிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விதையை – தக்காளிவிதையைக் கூட விளைக்கு வாங்க வேண்டிய நிலையில் விவசாயம் இருக்கிறது. இப்போது முழைக்கிற தக்காளியில் விதைகள் இருப்பதில்லை.
விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் கவலைப்படக் காணோம்.
சாதனை 2  
தொழிற்துறையிலும் பிரெஞ்சு நாட்டவரின் உதவியுடன் நவீன உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தினார். சொந்தமாகக் கப்பல் கட்டும் தளம்  நிறுவினார்.
இஸ்லாமிய கலைக் களஞ்சியம் சொல்கிறது :  திப்பு வெளிநாட்டிலிருந்து கைத்தொழிலாளர்களை வரவழைத்து துப்பாக்கி கண்ணாடி கடிகாரம் வெல்வெட் ஆகியவற்றை இங்கேயே திப்பு உற்பத்தி செய்தார்.. மஸ்கட்டிலிருந்து பட்டுப்பூச்சிகளை வரவழைத்து இங்கேயே பட்டு உற்பத்தி செய்தார்.
மைசூர் பட்டு என்பது திப்புவின் சாதனை என விக்கிபீடியா கூறுகிறது.
திப்பு பீரங்கித் தொழில் நுட்பத்தின் தந்தையாக  அறியப்படுகிறார். அவர் உருவாக்கிய பீரங்கிகள் இன்றளவும் இந்தியாவின் பல கோட்டைகளிலும் மியூசியங்களிலும் இருக்கின்றன.
சென்னை எக்மோரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் திப்பு உருவாக்கி மிகச் சிறிய பீரங்கி இப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
திப்பு தன்னுடை வாளில் புலியின் தோற்றத்தை வரை கோடுகளாக வரைந்து வைத்திருதார். அந்த வாளும். அவர் அணிந்திருந்த மோதிரமும் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நமது முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அமெரிக்காவின் வாலோபஸ் விண்வெளி நிலையம் சென்றபோது, அங்கிருந்த ஒரு சித்திரத்தில் யுத்தம் ஒன்றில் ஆசியர்கள் ராக்கெட் தாக்குதலை மேற்கொள்ளும் படம் வரையப்பட்டிருந்ததைப் பார்த்தார். அருகில் சென்று பார்த்த கலாம் வியந்திருக்கிறார். காரணம் மைசூர் யுத்தத்தின்போது திப்புவின் படை வெள்ளையர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிடும் சித்திரம் அது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னமேயே மன்னர் திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய செய்தி மக்களை வியப்பிற்குள்ளாக்கியது.
திப்பு நம் நாட்டிலேயே நமக்கு தேவையான அனைத்துப் பெருட்களும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என விரும்பினார் என இஸ்லாமிய கலைக் களஞ்சியம் கூறுகிறது. அதே போல் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிற துணிகளையே அவர் அணிந்தார் என்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிற உப்பு தனது உணவு விரிப்பில் இருப்பதை அவர் அனுமதிக்க வில்லை என்றும் கலைக் களஞ்சியம் கூறுகிறது.
சாதனை 3
நாட்டின் பெருளாதார வளத்திற்கு அடிநாதமாக கூட்டுறவு சன்கங்களை திப்பு நிறுவினார். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவது என்றும் .திப்பு வணிக மூளையுடன் பிறந்தவர் என்றும் அறிஞர் “புக்கானன்” கூறுகிறார். (கலைக் களஞ்சியம்)
“திப்புவின் ஆட்சியில் கிராமங்களும், நகரங்களும் சமமான நிலையில் முன்னேற்றத்தை அடைந்தன என்று கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளின் குறிப்புகளே வியப்புடன் குறிப்பிடுகின்றன” (தினமணி சிறுவர் மலர் கட்டுரை)

சாதனை 4
நாட்டு மக்களிடையே மிகச் சிறப்பான சமூக நல்லிணக்கதை திப்பு நிலை நாட்டினார்
கலக்கண்ணன் தினமணி கட்டுரையில் கூறுகிறார்
“இந்து-இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் உறவைப் பேணும் வகையில் ஆட்சிமுறை சிறந்து விளங்கியது. உதாரணம் , இந்துக் கோயில்களுக்கு இம்மன்னர் அளித்த மானியங்களும், நிவந்தங்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு அளித்ததைவிட பன்மடங்கு அதிகம்” .
ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்க நாதர் ஆலயம் தீக்கிரையான போது அதனை திரும்ப புதுப்பித்து கொடுத்தார். திப்பு .
சிருங்கேரி மடாதிபதிகளுக்கு திப்பு எழுதிய முப்பது கடிதங்கள் இப்போதும் அங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அக்கடிதங்களின் தலைப்பில் மடாதிபதிகளின் பெயர்கள் அவர்களது பட்டங்களுடன் எழுத்தப்பட்டிருக்க அனுப்பிய திப்புவின் பெயர் எந்தப் பட்டங்களும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.
(இதை 1916 ம் ஆண்டின் மைசூர் அகழ்வாராய்ச்சிப் பிரிவின் அறிக்கை கூறுகிறது).
திப்புவின் படை வீரர்கள் சிலர் குருவாயூர் கோயிலுக்கு தீ வைத்தன. பயந்து போன் கோயியிலின் குருக்கள் சிலைகளை திருவாங்கூருக்கு எடுத்துச் சென்றனர்.  இதையறிந்த திப்பு தீயிட்டவர்களை தண்டித்தார். சிலைகளை கொண்டு வரச் செய்து மீண்டும் குருவாயூரில் வைக்கச் சொன்னார். அத்தோடு தேவையான சீரமைப்பு பணிகளை செய்து கொடுத்தார், அத்தோடு இப்படி நடந்து விட்டதற்காக குருவாயூரின் நிலவரியை உயர்த்தாமல் எப்போதும் ஒரு மாதிரியே இருக்கும் படி பட்டயம் எழுதிக் கொடுத்தார்.
காந்தியடிங்கள் தமது யங் இந்தியா பத்ரிகையில் இதைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
திப்பு தேவஸ்தானங்களுக்கு ஒரு இலட்சத்து தொன்னூற்றி மூன்று இலட்சத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது (1, 93. 959 ) பக்கோடாக்களும், பிராமண மடங்களுக்கு 20000 ஆயிரம் பக்கோடாக்களும் , முஸ்லிம் வக்புகளுக்கு 20000 ஆயிரம் பக்கோடாக்களும் வழங்கினார் என மைசூர் கெஜெட் கூறுகிறது.
அதனாலே காந்தியடிகள் தமது யங் இந்தியா பத்ரிகையில் “ நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் உயிர் நீத்த தியாகிகளில் திப்புவிற்கு நிகராக எவரும் கிடையாது என்று குறிப்பிட்டார். ‘
திப்பு சுல்தானும் சரி ஹைதர் அலியும் சரி தங்களது ஆட்சியிப் மததுவேஷத்தை ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை.
في البخاري أنه صلى الله عليه وسلم قال: من قتل معاهدا لم يرح رائحة الجنة، وإن ريحها توجد من مسيرة أربعين عاماً.
من آذى ذمياً فأنا خصمه.
போன்ற நபிமொழிகளை தமது வாழ்வில் அழுத்தமாகவே கடை பிடித்தனர்.

ஆனால் தற்காலத்தில் இந்துத்துவ சிந்தனையாளர்கள் வராலாறு இது காறும் பாராட்டிய வாழ்த்திய பெருமக்களை இந்துக்களின் துரோகி என்றும் கட்டாயப்படுத்தி மக்களை மதம் மாற்றினர் என்றும் கொடுமைகள் இழைத்தத்தாகவும் அவதூறு பேசுகின்றனர்,

இதை இந்து முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்கும் ஒரு தொடர் முயற்சியாக அவர்கள் செய்து வருகின்றனர்.

இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

சில வரலாற்றாசிரியக்ரள் கூட ஹைதர் அலி திப்பு சுல்தானின் பெருமைகளை பேசிவருகிற இடத்தில் இடையே இப்படி அவதூறான செய்திகளை எந்த வித ஆதரமும் இன்றி திணித்து விடுகின்றனர்,

உண்மையில் இது இந்துக்களையு முஸ்லிம்களையும் பிர்த்தாளுவதன் மூலம் இலாபமடைய நினைத்த ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவதூறுகளாகும்.

தொலைத் தொடர்பு வசதியற்ற அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் சொல்வதும் எழுதுவதும் தான் வரலாறாக இருந்தது. அவர்கள் தீய எண்ணத்தோடு பல தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். திப்பு எழுதியதை தவறாக திரித்தும் பல செய்திகளை உருவாக்கி விட்டனர்,

இந்தியா என்ற இந்த நாட்டில் இஸ்லாம் வேர்விடுவதற்கு இந்துக்களே வழி விட்டனர் என்பது தான் வரலாறாகும்.

ஆர்னால்டு தாயன்பி சொல்கிறார். கேரளாவின் சாமுத்ரிகா குடும்பத்தில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தால் அதை முஸ்லிமாக்கிவிடுகிற பழக்கம் இருந்தது என்கிறார்.

இது போல பன்னூற்றுக்கணக்கான செய்திகள் உண்டு இந்தியாவில் இஸ்லாம் வளரவும் வாழவும் இந்துக்களே வழி விட்டனர் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு

அப்படி வழி கிடைத்த இடத்தில் இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாம் கற்றுக் கொடுத்த மிக உயர்ந்த பண்புகளையே தம் வாழ்வாக கொண்டு நடந்தனர் என்பதுதான் அதற்கு மாற்றான வரலாறாகும்

மங்களூரை வெற்றி கொண்ட திப்பு 30 ஆயிரம் பேரை கட்டாய மதமாற்றத்திற்காக மைசூருக்கு அனுப்பி வைத்தார் என ஒரு தகவலை பொய்யாக சிலர் பரப்பி வருகின்றனர்,

திப்பு மார்க்கத்தை தெளிவாக அறிந்தவர் என அவரது வரலாற்றை எழுதுகிறவர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர், படிப்பதில் ஆர்வம் கொண்ட திப்புவுக்கு அவர் சாப்பிடும் போது ஊழியர் ஒருவர் மார்க்கச் சட்ட நூலை வாசித்துக் கொண்டிருப்பார் என்று வரலாறு சொல்கிறது.

தன்னுடைய திருமணத்திற்கு பரிசாக தனக்கு ஒரு நூல் நிலையத்தை அமைத்து தருமாறு தன்னுடைய தந்தை ஹைதர் அலியிடம் திப்பு கேட்க 2000 ஆயிரம் அபூர்வ நூல்கள் அடங்கிய ஒரு நூல் நிலையம் திப்புவுக்கா தயாரிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இத்தகைய பெரும் அறிஞரான திப்புவுக்கு

لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ( 256 ) ) 

என்ற வசனம் தெரியாமல் இருக்காது. அவர் அப்படிச் செய்யவும் முடியாது, மார்க்கமே கட்டாயப்படுத்தி யாரையும் இஸ்லாத்தில் கொண்டுவரத் தேவையில்லை என்று சொல்லும் போது தன் குடிமக்களை சிரம்ப்படுத்த வேண்டிய அவசியம் திப்புவுக்கோ ஹைதருக்கோ ஒரு போதும் இல்லை.

இது ஆங்கிலேயர் இந்து முஸ்லிம்களை பிரிப்பதற்கு உருவாக்கி விட்ட கட்டுக்கதையாகும்.

ஹைதர் அலி திப்பு சுல்தானின் வரலாற்றை சற்று நிதானமாக வாசித்தாலே இது புரிய வரும்.

ஏனெனில் இவர்கள் இருவரும். சொந்த நாட்டில் இந்துக்களின் படைகளுக்க் தலைமை தாங்கியவர்கள்.. எங்கிருந்தோ படைகளை கொண்டு வந்தவர்கள் அல்ல.

தமது குடிமக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தாத அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு வழியமைத்துக் கொடுத்த மத நல்லிணக்தின் சான்றுகளாகவே திப்புவும் ஹைதரும் திகழ்கிறார்கள்.

அவ்விருவரும் உண்மையான தேசப்பற்றின் நாயகர்கள். சொந்த நாட்டிற்குள் அந்நியர்கள் தலைஎடுக்கவும் தலை நிமிரவும் விடாமல் தடுத்து நின்ற சிங்கங்கள் அவர்கள்.

திப்பு மக்களை கட்டாயமாக மதமாற்ற முயற்சி செய்திருப்பார் எனில் முதலில் தனது இராணுவத்திலும் அமைச்சரவையிலும் இருப்பவர்களை மதம் மாற கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தனது அமைச்சர்களாக முஸ்லிம்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் 

Tipu Sultan's treasurer was Krishna Rao, Shamaiya Iyengar was his Minister of Post and Police, his brother Ranga Iyengar was also an officer, and Purnaiya held the very important post of "Mir Asaf". Moolchand and Sujan Rai were his chief agents at the Mughal court, and his chief "Peshkar", Suba Rao, was also a Hindu. 

(ஹிஸ்டரி ஆப் திப்பு சுல்தான், )

(இப்போது நமது ஜனநாயக நாட்டின் பிரதமர் பிரதமர் ஒரு பெருநாள் வாழ்த்துக் கூட சொல்லாமல் இருப்பதை ஒப்பிட்டுப்பாருங்கள்.

திப்பு ஒரு மதவெறியராக இருந்திருந்தால் கோயில்கள் விசயத்தில் அவர் அக்கறை செலுத்தியிருக்க மாட்டார்.

வரலாறு கூறும் சான்றை பாருங்கள்

Editor of Mysore Gazettes Srikantaiah has listed 156 temples to which Tipu regularly paid annual grants. There is such evidence as grant deeds, and correspondence between his court and temples, and his having donated jewellery and deeded land grants to several temples, which some claim he was compelled to do to make alliances with Hindu rulers. Between 1782 and 1799 Tipu Sultan issued 34 "Sanads" (deeds) of endowment to temples in his domain, while also presenting many of them with gifts of silver and gold plate. The Srikanteswara Temple in Nanjangud still possesses a jewelled cup presented by the Sultan

சிருங்கேரி மடம் தாக்கப்பட்ட விச்யத்தில் வரலாறு சொல்கிற சாட்சியை கேட்டுப் பாடுங்கள்

In 1791, Maratha army raided the temple and matha of Sringeri Shankaracharya, killing and wounding many, and plundering the monastery of all its valuable possessions.

 The incumbent Shankaracharya petitioned Tipu Sultan for help. A bunch of about 30 letters written in Kannada, which were exchanged between Tipu Sultan's court and the SringeriShankaracharya were discovered in 1916 by the Director of Archaeology in Mysore. Tipu Sultan expressed his indignation and grief at the news of the raid:
"People who have sinned against such a holy place are sure to suffer the consequences of their misdeeds at no distant date in this Kali age in accordance with the verse: "Hasadbhih kriyate karma rudadbhir-anubhuyate" (People do [evil] deeds smilingly but suffer the consequences crying)."
He immediately ordered the Asaf of Bednur to supply the Swami with 200 rahatis (fanams) in cash and other gifts and articles. Tipu Sultan's interest in the Sringeri temple continued for many years, and he was still writing to the Swami in the 1790s CE.[
(விக்கிபீடியா)

திப்பு ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி . மட்டுமல்ல .திப்பு சிறந்த அரசு நிர்வாகி. அவருக்கு இன்னும் சில காலம் கிடைத்திருக்குமானால் , சுற்றி இருந்தவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்குமானார் ஒரு போதும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றி இருக்க முடியாது.

ஹைதரும் திப்புவும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல. தேசத்தை மதத்தின் பெயரால் துண்டாட நினைத்தவர்களும். ஆனால் இன்று அவர்களைப் பற்றி பேச அருகதையற்றவர்கள் ஹைதர் அலியுன் புகழையும் திப்புவின் புகழையும் சிதைக்க நினைக்கிறார்கள்.

வரலாற்றின் ஆச்சரியம் என்ன தெரியுமா?  மறைக்க செய்யும் முயற்சிகளே சத்தியத்தை வெளிக்கொண்டு வந்து விடும் என்பது தான்..


இன்றும் நம் நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமாக போரிட்டவர்கள் யார் என்று கேட்டால் திப்புவை போல ஹைதரைப் போல என்று சொல்வதற்கு எவரும் இல்லை. 

இந்த தேர்தல் நேரத்தில் இன்னொரு ஒப்பீடும் எழுகிறது
200 வருடங்களுக்கு முன் நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் ஒரு மன்னன் விவசாயத்தில் புதுமைகளைச் செய்தான். தொழில் நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்து கிறான். சொந்த நாட்டு தயாரிப்புகளையே உபயோகிப்பேன் என் கிறான். அந்நிய தயாரிப்பா உப்பு கூட வேண்டாம் என் கிறான். நாட்டின் ஒரு மூலையில் மாற்று மதத்தவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தபால் மூலம் வருகிற குற்றச் சாட்டிற்கு தகுந்த தீர்வைக் காணுகிறான். சகல சமய மக்களோடும் சமரசம் பேணுகிறான்.  வறுவாயை திட்டமிட்டு பெருக்குகிறான். இவன் இருக்கிறவரை நிம்மதி கிடையாது என கார்ப்பரேட் எதிரிகளை நடுங்க வைக்கிறான் மாவீரன் திப்பு சுல்தான். அவனுடைய அரசியல் எங்கே நிற்கிரது. நாம் எங்கே இருக்கிறோம்.

No comments:

Post a Comment