வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 07, 2018

இன்னும் இருக்கிறது ரமலான்.

وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً

ரமலான் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.
ரமாலான் முடியப் போகிறது என்று நினைப்பதை விட இந்த எண்ணம் மேலானது.
பயன்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
ஷாப்பிங்கில் செலவழிவதை விட நமது நேரம் சேவிங்கில் செலவழியட்டும். நண்மைகளை முடிந்த வரை சேகரிப்போம்.
கடந்த மே மாதம் 29 ம் தேதி இறந்து போன அலி பனாத்தைப் பற்றி சமூக ஊடகங்கள் வழியாக அறிந்திருப்பீர்கள்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிக்க இளைஞன் . 1982 ல் பிறந்தவர். அவரது சொத்து மதிப்பு ஏராளம். உல்லாசமான வாழ்கைகு சொந்தக்காரர். அவரது யூ ட்யூப் பேட்டியில் அவரிடமிருந்த உயர்ந்தரமான பொருட்களை அவர் காட்டுகிறார். ஒரு ஹவாய் சப்பல் 700 டாலர். ஒரு கை செயின் 60 ஆயிரம் டாலர். அவர் வைத்திருந்த பெராரி காரின் மதிப்பு 4 இலட்சத்து 80 ஆயிரம் டாலர். சுமார் 400 மில்லியன் டாலருக்கு சொந்தக் காரரான அவருக்கு 2015 வருடம் கேன்சர் என்று மருத்துவர் சொன்னார். நீங்கள் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தால். இளமை செழிக்கும் அந்த இளைஞருக்கா கேன்சர் என்று கேட்பீர்கள் . இன்னும் 7 மாதங்கள் தான் உயிர் வாழ்வது சாத்தியம் என்று மருத்துவர் கூறியிருந்தார். அலி பனாத் கூறினார். கேன்சர் இறைவன் எனக்கு கொடுத்த கொடை . நான் எப்படி வாழ வேண்டும் என்பதில் அது சிறப்பான மாற்றததை கொண்டு வந்தது என்று சொன்னார். அதிலிருந்து தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்கினார். வெளிக்காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு நிமிடமும் தனக்கு கிடைக்கும் அருள் என்று கருதினார். முஸ்லிம் அரவுண்ட த வோர்ல்ட் என்ற ஒரு அற நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனது சொத்து முழுவதையும் தானம் செய்தார். ஆப்ரிக்காவில் வருமையில் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் சென்று செய்தார். தொடர்ந்து செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். தனது ஒவ்வொரு ஷூவும் ஒவ்வொரு கூலிங்கிளாஸும் ஒவ்வொரு துணியும் உலக மக்களில் யாருக்கேனும் பயன்படும் வகையிலான ஏற்பாடுகளை செய்தார். 7 மாதங்களில் இறந்து போவார் என்று கருதப் பட்டவர், அல்லாஹ்வின் கிருபையால் இரண்டரை ஆண்டுகள் அதிகப்படியாக வாழ்ந்து ஏராளமான நன்மைகளை செய்து உலகின் அதிகப்படியான மக்களின் துஆ வை பெற்றவராக கடந்த மாதம் 29 ம் தேதி வபாத்தானார். தொழில் நுட்பத்தின் உதவியால் அவருடைய ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் சமூகத்திற்கு செய்தி சொல்லும் வாய்ப்பாக பயனப்டுத்திக் கொண்டார். உலகம் முழுவதிலும் ஏராளமான இளைஞர்க்ள் அவரது வீடியோக்களால் ஈர்க்கப் பட்டார்கள்.
அல்லாஹ் அந்த இளைஞனுக்கு சிறந்த மறுமைப் பேற்றை வழங்குவானாக! அவரை இழந்து வாடுவோருக்கு தகுந்த ஆறுதலை தருவானாக!
கிடைத்திருக்கிற நாட்களை பெரும் கொடையாக எண்ணிச் செயல்பட வேண்டும் என்ற மகத்தான உணர்வை இந்த சமீபத்திய நிகழ்வு நமக்கு தருகிறது.
ரமால்னின் மீதியுள்ள காலங்களில் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்களை நன்மையான வழிகளில் செலவழிக்க முயற்சிப்போம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!’
تقول عائشة - رضي الله عنها -: "كان يَجتهِد في العشْر الأواخِر ما لا يَجتهِد في غيرها"؛ كما رواه مسلم.

وتقول - رضِي الله عنْها -: "كان النَّبيُّ - صلَّى الله عليْه وسلَّم - إذا دخَل العشْر، شدَّ مِئْزَرَه، وأحْيا ليْلَه


முன்னோர்கள் இந்த 10 நாட்களில் தமது கவனத்தை அமல்களில் கூராக்கி வைத்திருந்தனர்.
 இரவில் அதிகம் உழைக்கனும் என்றார். இமாம் நவவி ரஹ்

قال النَّوويُّ: "يُستحبُّ أن يُزاد من العبادات في العشْر الأواخر من رمضان، وإحياء لياليه بالعبادات".

இந்தக் காலங்களில் பகலிலும் அதிகம் உழைக்கனும் என்கிறார் இமாம் ஷாபிஈ

وقال الشَّافعيُّ: "أستحبُّ أن يكونَ اجتِهادُه في نهارِها كاجتهادِه في ليلِها

குடும்பத்தாரையும் நன்மைக்கு தூண்ட வேண்டும் என்கிறது இந்த ஹதிஈஸ்

قال عليُّ بنُ أبِي طالب - رضِي الله عنْه -: "كان النَّبيُّ - صلَّى الله عليْه وسلَّم - يوقِظ أهلَه في العشْر الأواخر من رمضان"؛ صحيح سنن التِّرْمذي.

லைலத்துல் கத்ர்

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்பதை கவனிக்கவும்.  சில அறிஞர்கள் மொத்த உலக நாட்களையும் விட இதைச் சிறந்தது என்கின்றனர்.

قال بعض أهل العلم: "هِي خيرٌ من الدَّهر كلِّه؛ لأنَّ العرب تذكُر الألف غاية في العدد


அது மலக்குகள் அணிஅணியாக வந்திறங்கும் இரவு
மலக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
பூமியில்கிடக்கும் பொடிக் கற்களின் அளவு.

هي ليلة ﴿ تَنَزَّلُ المَلائِكَةُ وَالرُّوحُ فِيهَا [القدر: 4]، إنَّها اللَّيلة التي تتنزَّل فيها الملائكة حتَّى تكون أكثر في الأرض من عدَد الحصى.

وقال النَّبيُّ - صلَّى الله عليْه وسلَّم -: ((ليْلة القدْر: ليلة سابعةٍ أو تاسعةٍ وعشرين، إنَّ الملائكة تلك الليلة في الأرْض أكثر من عدَد الحصى))؛ صحيح الجامع.

அத்தனை மலக்குகளும்  நமக்கு சலாம் சொல்வது மட்டுமல்ல நாம் கேட்கிற துஆக்களுக்கு ஆமீனும் சொல்கிறார்கள்.

ؤمِّنون على دعاء النَّاس، ويسلِّمون على أنفُسِهم وعلى المؤمنين في المساجِد حتَّى يطلع الفجْر.

லைலைத்துல் கத்ரை மறைத்ததற்கான காரணத்தை இமாம் ராஜி கூறுகிறார்.

قال الفخر الرازي - رحِمه الله -: "إنَّ الله أخْفى هذه اللَّيلة لوجوه، أحدها: أنَّه أخفاها كما أخْفى سائر الأشياء، فإنَّه أخفى رضاه في الطَّاعات حتَّى يرْغبوا في الكلِّ، وأخْفى غضبه في المعاصي ليحترِزوا عن الكلِّ، وأخفى الإجابة في الدُّعاء ليبالغوا في كلِّ الدعوات، وأخْفى قبول التوبة ليواظِب المكلَّف على جَميع أقسام التَّوبة".

இப்னு ஹஜர் அல் அஸ்கலானி கூறுகிறார்.
وأرْجى أوْتار العشر عند الجمهور: ليلة سبْع وعشرين؛ "فتح الباري".


அறிஞர்கள் பலரின் கருத்துப் படி 27 ம் நாளை லைலத்துல் கத்ர் என்று கருதுகிறோம் என்றாலும்.

அனைத்து நாட்களிலும் ஆரவத்தோடு கிடைத்திருக்கிற புண்ணியத்தை கவனத்தில் கொண்டு அமல் செய்வோம்.

அலி பனாத்திற்கு கிடைத்ததை விட நமக்கு அதிகமாக கிடைத்திருக்கிறதல்லவா ?

ஜகாத்
திருக்குரானின் 27 இடங்களில் தொழுகையுடன் சேர்த்தே ஜகாத் சொல்லப் பட்டுள்ளது.

ஜகாத் கடமையின் முக்கியத்துவத்தை புலப்படுத்துவதோடு தொழுகையைப் போலவே ஜகாத்திலும் முஸ்லிம்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தூண்டுகிறது.

திருக்குர் ஆன்பில் மூன்று விசயங்களை  ஜோடியாகஇணைத்தே அல்லாஹ் கூறுகிறான்

·         وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
·         وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
·         وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ

ஒருவர் தொழுகிறார். அவர் மீது ஜகாத் கடமையாக இருந்தும் நிறைவேற்றவில்லை எனில் அவரது தொழுகையை அல்லாஹ் ஒப்புக்கொள்ள மாட்டான் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள். நான் சேர்த்த்து வைத்தை பிரிக்க நீ யார் என அல்லாஹ் கேட்பதாக அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

ஜகாத் யார் மீது கடமை

612 கிராம் வெள்ளிக்கு நிகரான சுமார் 30 ஆயிரம் ரூபாயை தனது தேவைகள் கடன் கள் போக அதிகப்படியாக ஒரு வருடம் முழுவதும் கையிருப்பில் வைத்திருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டியவர் ஆவார்.

மாதச் சம்பளக்கார்  அல்லது வாடகை வருவாய் உள்ளவர் ஜகாத் கடமையானவராக இருந்தால் ஒரு வருடம் முழுவதும் கடந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரது வருத்தில்  செலவு போக கையிருப்பில் உள்ள தொகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் .

ஆகவே ஒரு வருத்தில் ரூபாய் 30 ஆயிரத்திற்குமே ல் வைத்திருப்பவர்  ஒரு ஆலிமை அணுகி தன் மீது ஜகாத் கடமையாகுமா எவ்வளவு கடமையாகும் என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

குடியிருக்கிற வீட்டிற்கு , உபயோகப்படுத்தும் வாகணங்களுக்கு, வைரக் கற்கள், குதிரைகள், காலியாக இருக்கும் வீட்டு மனைகளுக்கு ஜகாத் கிடையாது. வாடகை வருமானம் வரக்கூடியவற்றில் மூலப் பொருட்களூக்கு ஜகாத் கிடையாது, வாடகை வருமானத்திற்கு மட்டுமே ஜகாத் கடமையாகும். தொழில் நிறுவனங்களின் கட்டிடங்கள் தளவாடச்சாதணங்களில் ஜகாத் கடமையாகாது

நேற்று ஒருவர் தொலைபேசியில் கேட்டார் வைடூரியத்திற்கு ஜகாத் கடமையாகுமா ? பதில் கடமையில்லை என்பது தான்,

ஜகாத் கொடுப்பவர்கள்  எப்படிக் கொடுக்கிறோம். என்பதை கவனித்துக் கொடுக்க வேண்டும் , ஏதோ என் கடமைக்கு கொடுக்கிறேண்.  வீட்டுக்கு வந்து கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்று கொடுத்தால் ஜகாத் நிறைவேறாமல் போய்விடும்.
ஜகாத்த்தை யாருக்கு கொடுக்கிறோமோ அவர்களுக்கு தம்லீக் முழுவதும் சொந்தமாக்கி விட வேண்டும் என்ற நிபந்தனையை நாம் கவனிக்க வேண்டும்.
நம் உறவினர்கள் நமது ஊழியர்கள் நமது மஹல்லா வாசிகளே ஜகாத்தை பெற்றுக்கு கொள்ள மிக தகுதி படைத்தவர்கள் .  

நமக்கு தேவையான ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குவதில் எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்வோமோ அதே அளவு கவனத்தை ஜகாத் கொடுப்பதிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லை எனில் நாம் கொடுத்து  ஜகாத் ஆகாது,

அமைப்புக்களுக்கு ஜகாத் கொடுக்கிறா போது நாம் கொடுத்த தொகை உரியவர்களை சென்று சேர்ந்து விட்டது என்று தெரிந்தால் மட்டுமே ஜகாத் செல்லும் , இல்லை எனில் திரும்ப கொடுக்க வேண்டியதாகிவிடும்.

அமைப்புக்கள் இயக்கங்களூக்கு ஜகாத் பித்ரா பணம் கொடுப்பது ஒரு வகையான இயக்க வெறியாகவே மாறிவருகிறது. கண்ணுக்கு முன்னாள் ஏழைகள் காத்திருக்க இயக்கங்களின் மர்மக் கணக்குகளுக்கு காசு கொடுக்கிறார்கள். இதில் நடை பெறுகிற ஏராளமான குற்றச் செயல்கள் வெளியே தெரிந்த பிறகும் கூட இவற்றிற்கு வழங்குவது எந்த வகையிலும் இபாதத் ஆகாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அது முகஸ்துதிக்காக செய்த்தாகவே பெரும்பாலும் அமையும்.

அமைப்புக்கள், இயக்கங்கள், ரமலானில் ஆங்காங்கே உற்பத்தியாகும் குழுக்கள், ரமலானின் பெயரைப் பயன்படுத்தி மக்களின் காசை அநியாயமாக சுரண்டுகீறார்கள். மக்கள் தீர்மாணமாக இவற்றை தவிர்க்க வேண்டும்

இப்தார் பார்ட்டி என்ற பெயரில் தேவையற்ற பெரும் செலவுகள் செய்யப் படுகின்றன. தம்மிடம் காசு பணம் வைத்திருப்பவர்கள் மக்களுக்கு இப்தாருக்கு உணவளிக்க அல்லது சஹர் உணவளிக்க விருந்தளிப்பார்கள் எனில் அது நியாயமானது. மக்களிடம் வசூல் செய்து இப்தார் பார்ட்டி நடத்த வேண்டிய தேவை என்ன ? அமைப்புக்கள் தமது ஜம்பத்தைக் காட்டிக் கொள்ளவே இப்படி பிச்சை எடுக்கிறார்கள். இதற்காக காசு கொடுப்பதை நன்மை என்று எப்படிக் கருத முடியும்,
செல்வந்தர்கள் யோசிக்க வேண்டும்.

தற்போது சிலர் கட்டிடம் கட்டுவதற்காக கட்டிடத்திற்கு இடம் வாங்குவதற்காக என ஜகாத் கேட்கிறார்கள். இவற்றிற்கு கொடுப்பாது செல்லாது. அது பள்ளிவாசலாகவே இருந்தாலும் சரி. அது போல் பொதுவான ஊழியர்கள் சமபளத்திற்காக ஜகாத் பணத்தை பயன்படுத்துவதும் செல்லாது.

ஜகாத் முறையாக செல்லுபடியாகும் இடங்களைப் பார்த்து செலவழிக்கப் பட வேண்டும்.
ஜகாத்
·         பிச்சைக்காரர்களுக்கும்
·         ஏழைகளுக்கும்,
·         ஜகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
·         இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுகிறவர்களுக்கும்,
·         அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
·         கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
·         அல்லாஹ்வின் பாதையில் அறச்செயல்களுக்கும்
·         வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன்மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

இந்த எட்டுவகையினரில் யார் நமக்கு தகுதியானவர்களாக அறியக் கிடைக்கிறார்களோ அவர்களுக்கு முழு உரிமைப்படுத்துதல் என்ற வகையில் ஜகாத்தை தந்து விட 

பல பைத்துல் மால் அமைப்புக்கள் ஆண்டுக்கணக்கில் ஜகாத் தொகையை செலவிடாமல் வைத்திருக்கின்றன.  காரணம்  கேட்டால் எங்களைத் தேடி ஆட்கள் வரவில்லை என்கின்றனர்.

பல அமைப்புக்கள்  ஜகாத் பணத்தை வசூலித்து சண்டையிட்டுக் கொள்கின்றன.

பைத்துல் மால் அமைப்பு என்பது அதன் உரிய முறைப்படி அரபு நாடுகளில் கூட இல்லை, எனவே பைத்துல் மால் என்ற பெயரில் இயங்கும் அமைப்புக்களூக்கு கொடுத்தாலும் அவர்கள் உரியவர்களூக்கு உடனே கொடுத்து விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாத வரை ஜகாத் கொடுத்து விட்டதாக ஆகாது,

சதகதுல் பித்ரு
ஈத் பெருநாள் அன்று நிறைவேற்றுகிற வணக்கங்களில் பிரதானமானது ஈதுல் பித்ரா தர்மம். தொழுகைக்குசெல்வதற்கு முன் வழங்கிவிடவேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காகவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்காகவும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்

قَالَ الشَّافِعِيُّ: وَكُلُّ مَنْ دَخَلَ عَلَيْهِ شَوَّالٌ وَعِنْدَهُ قُوتُهُ وَقُوتُ مَنْ يَقُوتُهُ يَوْمَهُ وَمَا يُؤَدِّي بِهِ زَكَاةَ الْفِطْرِ عَنْهُ وَعَنْهُمْ أَدَّاهَا عَنْهُمْ وَعَنْهُ
، وَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ إلا مَا يُؤَدِّي عَنْ بَعْضِهِمْ أَدَّاهَا عَنْ بَعْضٍ، وَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ إلا سِوَى مُؤْنَتِهِ وَمُؤْنَتِهِمْ يَوْمَهُ فَلَيْسَ عَلَيْهِ وَلا عَلَى مَنْ يَقُوتُ عَنْهُ زَكَاةُ الْفِطْرِ. الأم 

அது நமது நோன்பை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகிறது.
عن عبدالله ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما  قال فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ- سنن أبي داود

قال ابن الأثير: الرفث هنا هو الفحش من كلام

يقول عَنْ وَكِيعٍ بْنِ الْجَرَّاحِ زَكَاةُ الْفِطْرِ لِشَهْرِ رَمَضَانَ كَسَجْدَتِي السَّهْوِ لِلصَّلاةِ، تَجْبُرُ نُقْصَانَ الصَّوْمِ كَمَا يَجْبُرُ السُّجُودُ نُقْصَانَ الصَّلاةِ

 

ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 80  பித்ரு சதகாவாககொடுக்க வேண்டும். ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசிபித்ராவாக கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும்கொடுக்கலாம். 
قال رسول الله " أغنوهم عن المسألة في هذا اليوم رواه البيهقي والدارقطني، أي إغناء الفقير يوم العيد عن المسألة.
தாய் தந்தை மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய  சொந்தக்  காரர்களுக்கு  பித்ராவை  கொடுக்கலாம். 
அமைப்புக்களிடம் பித்ராவை ஒப்படைப்ப்பது பொறுப்பற்றசெயலாகவே அமையும். நம்மை நெருங்கி பல ஏழைகள் இருக்கும் போது அவர்களுக்கு தேடிச் சென்று கொடுப்பதில் இருக்கிற  சிரமத்தை நாம் சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதே அதன் பொருள்.
நம்மிடம் பித்ராவை வசூலித்துக் கொடுப்பவர்கள் அதை பெருகிறவர்களிடம் தங்களுடைய கூட்டத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்துவதும் பெண்களிடம் தவறாக நடப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

பெருநாள் பிறை
பெருநாள் பிறை விசய்த்தில் குழப்பத்திற்கு ஆட்பட வேண்டாம், கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல் பெருமானுருடையது,
29 இரவு பிறை தென்பட்டது என காழி அறிவித்தால் 15 ம் தேதி வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ரு பெருநாளைக் கொண்டாடுவோம். இல்லை எனில் 16 ம் தேதி சனிக்கிழமை பெருநாளைக் கொண்டாடு வோம்.

அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம் காட்டாதீர்கள், சர்வதேச பிறை சவூதிப் பிறை என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக் குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக் கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். 

திடல் தொழுகை 

சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் பெருநாள் தொழுங்கள்.

திடல் தொழுகை என்ற பெயரில் செய்யப்படும் ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்
இது விசயத்தை மிகவும் முக்கியமான ஒரு கருத்தாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

எதார்த்தத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,
நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்ற அறிவுரை ஒன்று கூட இல்லை.

மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைகென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,
ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,

மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,

أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).

மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.

இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதியிம் மதீனாவிலிருந்த சுற்று புரங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். என வே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்

أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة
தக்பீர்  

பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்லுங்கள் அதுவே பெருநாளின் அழகாகும்.

فالتكبير في العيدين سنة وهو آكد في الفطر لقوله تعالى (ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون )[البقرة:185]

ووقته في الفطر يبتدئ من رؤية هلال شوال أي بغروب شمس آخر يوم من رمضان
قال ابن عباس :(حق على المسلمين إذا رأوا هلال شوال أن يكبروا)
وينتهي التكبير في الفطر بخروج الإمام إلى الصلاة.
فيكبر في السوق وفي الطريق وفي البيوت والمساجد ونحو ذلك

 அனைத்து நன்மைகளையும் நிறைவாக பெற்றுக் கொள்ள அல்லாஹ் அருட் செய்வானாக!                                                                                                                      (உங்களின் இந்தச சகோதரனையும் குடும்பத்தாரையும் உங்களது துஆவில் மறந்து விட வேண்டாம். )

  


No comments:

Post a Comment