வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 19, 2018

ஹஜ்! ஒழுங்குகளே பிரதானம்



وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ

1430 வது ஹஜ் தொடங்கிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கடந்த சனிக்கிழமை காலை பாக்கிஸ்தானிலிருந்து 171 புனிதப் பயணிகளின் விமானம் மதீனாவிலுள்ள இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது.
186 பாக்கிஸ்தானியர்களை கொண்ட மற்றொரு விமானம் ஜித்தாவின் மன்னர் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தை அடைந்தது.
முதல் ஹஜ் பயணிகளை சவூதி ஹஜ் விவகரா துணை அமைச்சர் அப்தல்லா அல் பதாஹ் வரவேற்றார்.
பங்களாதேஷிலிருந்து 419 ஹஜ்பயணிகள் ஜித்தா வந்தடைந்தனர்.
மலேஷியா ஹ்ஜ் பயணிகள் மதீனா வந்தடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 342 பேர் முதல் பயணிகளாக சவூதி அரேபியா வந்தடைந்துள்ளனர். ஆப்கானிலிருந்து ஹஜ் செய்யக் கூடிய சுமார் 30 ஆயிரம் ஹாஜிகளில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டோரின் குடும்பங்களில் சுமார் 500 பேருக்கு சவூதி அரசின் செலவில் ஹஜ் பயண வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 604 பேர் ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஆண்கள் 1,89,217 பேர் பெண்கள் 1,66,387 பேர். இவர்களில்  1,75,025 பேர் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற் கொள்ள இருப்பதாக மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவ்வளவு பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
6,700 pilgrims will go from Ahmedabad, 350 from Aurangabad, 5,550 from Bengaluru, 254 from Bhopal, 11,700 from Cochin, 4,000 from Chennai, 19,000 from Delhi, 5,140 from Gaya, 450 from Goa, 2,950 from Guwahati, 7,600 from Hyderabad, 5,500 from Jaipur, 11,610 from Kolkata, 14,500 from Lucknow, 430 from Mangalore, 14,200 from Mumbai, 2,800 from Nagpur, 2,100 from Ranchi, 8,950 from Srinagar and 3,250 from Varanasi.
ஹஜ் மானியம் என்ற மாயத்தை இரத்து செய்த மத்திய அரசு விமான கட்டணங்களை குறைத்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாது , ஆகையால் கடந்த ஆண்டு 1,24,852 பேருக்கு 1,030 கோடி விமான கட்டணமாக செலவிடப் பட்டுள்ள தொகை இந்த ஆண்டு 973 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 57 கோடி கட்டணம் குறைந்துள்ளது.
(செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் )
இந்திய ஹாஜ் பயணிகளின் முதல் விமானம் தில்லியிலிருந்து சுமார் 419 ஹஜ்பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானம் 14 ம் தேதி சனிக்கிழமை மதீனா வந்தடைந்தது. கடந்த புதன் கிழமை வரை மதீனாவிற்கு 67 விமானங்களில் 19471 இந்திய ஹாஜிகள் வந்தடைந்துள்ளதாக ஜித்தாவிலுள்ள இந்திய ஹைகமிஷனின் பேஸ் புக் தகவல் தெரிவிக்கிறது. https://www.facebook.com/hajmission/photos/pb.244886735720937.-2207520000.1532052270./815944728615132/?type=3&theater
இந்திய ஹைகமிஷனின் பேஸ் புக் பக்கத்தில் இந்திய ஹஜ் பயணிகளின் வருகை தங்குமிடம் நோயாளிகள் பற்றி விவரங்கள்  பதியப்படுகின்றன. வாட்ஸப் வழியான தகவல் பரிமாற்றத்திற்கு இந்திய ஹைகமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதுவரை வந்துள்ள பயணிகளில் 266 பேருக்கு சிகிட்சை அளிக்கப் பட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்கிற அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அல்லாஹ் மக்பூலானதாக ஆக்குவானாக! அவர்களின் பயணங்களை எளிதாக்குவானாக!  சிறப்பான தங்குமிடங்களை தருவானாக!  சீதோஷ்ண நிலையை அவர்களுக்கு ஏற்றதாக ஆக்குவானாக! ஹஜ்ஜின் அனைத்து கிரிகைகளை நிறைவேற்ற தேவையான உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் வசதியான சூழ்நிலைகளை அமைத்தருள்வானாக!
இந்த ஹஜ்ஜை பாதுகாப்பானதாகவும்  மக்களை பக்குவப்படுத்தக் கூடியதாகவும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
நம் அனைவருக்கும் ஹஜ்ஜின் வாய்ப்புக்களை மீண்டும் மீண்டும் அல்லாஹ் தந்தருள்வானாக!
ஹஜ்ஜுக்கு செல்கிற ஹாஜிகளும் , ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிற நாமும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் “ நமது ஹஜ் -  “ஹஜ் மப்ரூர்” ஆக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் நன்மையை சிறப்பித்து சொன்ன இடத்தில் இந்த நிபந்தனையையும் சேர்தே கூறினார்கள்.
عَنْ جَابِرٍ  رضي الله عنه  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةَ
எல்லா வற்றிலும் தரம் பார்க்கிற நாம் ஹஜ்ஜிலும் தரம் பார்க்க வேண்டும்.
எல்லா வற்றிலும் பெறுமையை வெளிப்படுத்துகிற நாம் ஹஜ்ஜில் எந்த வகையிலும் பெருமையை வெளிப்படுத்தி விடக் கூடாது.
பணம், காசு, பதவி, அந்தஸ்து, எங்கள் சொந்தக் காரங்கள் இங்கே இருக்காங்க, இது என்னோட ஐந்தாவது ஹஜ் என்பது போன்ற எந்த பெருமைக்கு அங்கே இடமில்லை.
முதலில் ஹஜ்ஜுக்கு செல்பவர் ஹஜ் பயணத்தின் தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஹஜ்ஜுக்கு செல்ல நினைப்பவர்களும் தான்.
ஹஜ் பற்றிய குர் ஆனிய வசனம் மிகச் சரியாக நம்மை வழி நடத்து கிறது.,
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ
மிகச் சிறிய வாக்கியம் தான். ஆனால் மிக அழுத்தமானது, எப்போது நமது கவனத்தில் இருக்க வேண்டியது.
ஹஜ்ஜு அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும்.
மற்ற வணக்கங்களை விட ஹஜ்ஜில் அதிக தற்பெருமைக்கு அந்தஸ்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்குமான வாய்ப்புக்கள அதிகம் என்பதனால் தான் அல்லாஹ்விற்காக தொழுங்கள் என்று சொல்லாத இறைவன அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறான். ஹஜ்ஜு அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும். வேறு எதற்காகவும் இருக்க கூடாது.
சைத்தான் அதிகம் தலையிடுகிற வணக்கம் ஹஜ்ஜாகும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ -
இதிலுள்ள صِرَاطَكَ الْمُسْتَقِيمَ என்பதற்கு    الطريق الي المكة  என்றும் திருக்குர் ஆனிய விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். காரணம் மனிதர்களின் அனைத்துப்  பாவங்கள் மன்னிக்கப் படுவது சைத்தானுக்கு ஒரு போது ம் ரசிப்பதில்லை.  
சமீபத்தில் ஒரு செய்தி அரபு நாடுகளில் பிரபலமாக பேசப்பட்டது.
பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவர் தனது நண்பரை பார்க்க ஜித்தாவிற்கு வந்தார். நண்பர் உம்ராவிற்கு சென்றிருப்பதை அறிந்தார். அங்கு சென்று நண்பரை பார்த்து விட முடிவு செய்தார். மக்காவிற்கு வந்தார். அங்கு வந்த இடத்தில் நாமும் ஒரு தவாபு செய்ய லாம் என்று நினைத்தார். மஸ்ஜிதுல் ஹரமிற்கு சென்றார். அவரது கண்களுக்கு கஃபா தெரியவில்லை. ஏதோ திரை விழுந்தது போல இருந்தது. மற்றவர்கள் இதோ கஃபா என்றார்கள் அவருக்கு அது தெரியவில்லை. பின்னர் வெளியே வந்த சிறிது நேரத்தில் அவருக்கு பார்வை சரியாக தெரிந்தது.
ஹஜ் மப்ரூருக்கு ஆசைப்படுகிற எவரும் அல்லாஹ்விற்காக ஹஜ்ஜு செய்யகிறேன் என்ற எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.  
இரண்டாவதாக ஹஜ்ஜை பரிபூரணமாக நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ்ஜின் சட்டங்கள் ஒழுங்கள் அனைத்தையும் முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.
நம்மில் பலருக்கும் ஒரு புனிதப் பயணம் போகிறோம் என்ற சிந்தனை இருக்கிறதே தவிர அந்தப் பயணத்தை புனிதமாக்கிக் கொள்ளும் திட்டமே இருப்பதில்லை. அதனால் ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்றும் ,வாய்ப்புக் கிடைப்பதில்லை.
ஹஜ்ஜை பரிபூரணப் படுத்திக் கொள்ளும் சில வழிகளை அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள். ( அல்லாஹ் நமது ஹஜ்ஜை பரிபூரணமானதாக ஆக்குவானாக!  பரிபூரணமான ஹஜ்ஜின் பாக்கியத்தை நமக்கு மீண்டும் மீண்டும் தந்தருள்வானாக!
,ஹஜ் என்பது பெரிதாக எந்த வணக்கத்தையும் கொண்டதல்ல. துல் ஹஜ் 9 முதல் 12 வரை மினா முஸ்தலிபா அரபா போன்ற மைதானங்களில் தங்கியிருந்தால், ஏழு தடவை கஃபாவை சுற்றி விட்டால் , சபா மர்வாவிற்கு இடையே நடந்து விட்டால், மினாவில் சைத்தானை கல்லெறிந்து விட்டால் ஹஜ் நிறைவேறி விடும்.
ஹஜ் மப்ரூர் ஆவதற்கு இந்த செயல்கள் மட்டும் போதுமானதல்ல. இவற்றை நிறைவேற்று வதற்கு முன் சில நிபந்தனைகளை ஹாஜி பூர்த்தி செய்திக்க வேண்டும்
1.   ஹஜ்ஜின் மகத்துவத்தை உணர வேண்டும்.

·         இது ஜிஹாதுக்கு அடுத்த சிறந்த அமல்

·         فعن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم: أي العمل أفضل؟ قال: «إيمان بالله ورسوله». قيل: ثم ماذا؟ قال: «الجهاد في سبيل الله». قيل: ثم ماذا؟ قال: «حج مبرور» رواه البخاري ومسلم.

·         ஹஜ்ஜில் பாவம் மன்னிக்கப் படாது என்று நினைப்பது பெரும் குற்றம் என இமாம் கஜ்ஜாலி ரஹ் இஹ்யாவில் கூறியுள்ளார்கள்.

·         வசதியிருந்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஹஜ்ஜு செய்து விட வேண்டும். இல்லை எனில் அவர் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகிவிட்டார் என்கின்றன ஸஹீஹான ஹதீஸ்கள்

·         من أعطاه الله الصحة ولم يزر بيت الله كل خمس سنوات فهو محروم "
இந்த செய்தி இப்படி ஹதீஸீல் உள்ளது.
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال : قال الله : " إنَّ عبداً أصححتُ له جسمه ووسعتُ عليه في المعيشة تمضي عليه خمسة أعوام لا يفد إليَّ لمحروم " . رواه والبيهقي ( 5 / 262

·         சைத்தான் மிகவும் நொந்து போகிற ஒரு வணக்கத்தை நிறைவேற்றுகிறோம்.

عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنْ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ. قِيلَ: وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ

·         சில பாவங்களுக்கான மன்னிப்பு ஹஜ்ஜில் மட்டுமே கிடைக்கும். அது என்ன வென்று சொல்லப் படவில்லை.
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: إن من الذنوب ذنوباً لا يكفرها إلا الوقوف بعرفة. كذا في الإحياء،


·         ஹாஜியின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என பெருமானாரே துஆ செய்தார்கள். மட்டுமல்ல. ஹாஜி யாருக்கு துஆ செய்கிறாரோ அவரின் பாவங்களும் மன்னிக்கப் பட வேண்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.
عن أبي هريرة رضي الله عنه  اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ ) رواه البيهقي في الكبرى والطبراني في الأوسط والصغير والكبير

இதன்  காரணமாக முற்காலங்களில் ஹஜ்ஜுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைவாக இருந்த காலத்தில் கண்ணிய மிகு ஆலிம்கள் பலரும் ஹஜ்ஜுக்கு செல்கிறவர்களை வெளியூர் வரை தேடிச் சென்று துஆ செய்யுங்கள் என்று கேட்பவர்களாக இருந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு புறப்பட்ட உமர் ரலி அவர்களிடம் என்னை துஆ வில் மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஹஜ்ஜுக்குப் போகிறவர் ஹஜ்ஜின் இது போன்ற மகிமைகளை தன் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2.   ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்த நாளிலிருந்து தொழுகையை சரி செய்து கொள்ள வேண்டும். ஹஜ்ஜுக்குப் பிறகும்.
ஹஜ்ஜுக்கு பணம் கட்டியதிலிருந்து தொழுகையை சரி செய்து விட்டால் ஹஜ்ஜுக்கு முன் மவ்தாகி விட்டாலும் ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்.

3.   திருக்குர் ஆனுடன் அதிகம் தொடர்பில் இருக்க வேண்டும்.
மினாவில் வைத்து ஒரு குர் ஆனை முடிப்பது முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. அது ஹஜ்ஜு கபூலாக உதவும்

அது போல இரண்டு புனிதப் பள்ளிவாசல்களிலும் ஒரு குர் ஆனை முடிப்பது மீண்டும் ஹஜ்ஜின் நஸீபை தரும் என்று முன்னோர்கள் தமது அனுபவதத்தை பதிவு செய்திர்க்கிறார்கள்

ஓதத்ததெரியாதவர்கள் பாத்திஹா சூராவையும் சூரத்துல் இஹ்லாசையும் ஓதிக் கொள்ள வேண்டும்.

4.   சுபுஹுத்த்தொழுகைக்குப் பின் தூக்கத்தை தவிர்த்து விட்டு இஷ்ராக் வரை அதாவது சூரிய உதயத்திற்கு பின் 20 நிமடம் வரை தூங்க கூடாது.
சுபுஹ் தொழுது விட்டு இஷ்ராக் வரை திக்ரில் இருந்து இஷ்ராக் தொழுதால் ஒரு உம்ராவின் நன்மை என்று பெருமானார் (ஸல்) கூறினார்கள்.

5.   பார்வையை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கஃபாவை முஸ்லிம் பார்க்கிற முதல் பார்வையில் அவர் கேட்கிற துஆ ஏற்றுக் கொள்ளப் படும்
எனவே கஃபாவை காணவுள்ள கண்களை தீய பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

டி வி . செய்தித்தாள்கள் சோஷியல் மீடியாக்கள் அனைத்தும் ஆபாசங்களின் வலையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் விருந்தாளிகளாக புறப்படுகிற ஹாஜிகள் அதற்கேற்ப தம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

6.   பொறுத்தப் தேட வேண்டியவர்களிடம் பொறுத்தம் தேடிக்கொள்ள வேண்டும்.
பிறரின் ஹக்குகளை நிறைவேற்றி விட வேண்டும்.
மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கோரி விட வேண்டும்.
அல்லாஹ் தனக்கு செய்யப் பட்ட தவறுகளை மன்னித்து விடுவான். சக மனிதருக்கு செய்த பாவத்தை அவன மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு கிடைக்கும்.

7.   பயணம் புறப்படுவதற்கு முன் ஓரிரு நாட்கள் – குறிப்பாக திங்கள் வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.
8.   உயர்ந்த நற்குணங்களுக்கும் பெருந்தன்மையான போக்கிற்கும் உதவும் மன்ப்பான்மைக்கும் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிமின் அடிப்படை இயல்பை பெருமானார் (ஸல்) அவர்கள் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்கள் .

عن عبد الله بن عمرو ـ رضي الله عنهما ـ عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه.
ஹாஜி முஸ்லிம்களில் சிறந்தவராக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்
9.   குடும்பம் வியாபாரம் சொத்துக்கள உள்ளிட்டவைகளை கவனிக்க ஆட்களை நியமித்திருந்தாலும் முழுப் பொறுப்பையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு புறப்பட வேண்டும். அல்லாஹ்வின் மிதான தவக்குலே இறுதியாக இருக்க வேண்டும்

வீட்டிலிருந்து புறப்படுகிற போது

كان من دعائه - صلى الله عليه وسلم - إذا سافر: ((اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل))؛ (رواه مسلم وغيره من حديث ابن عمر


10. ஹஜ் உம்ராவின் சட்டங்களை தெளிவாக தெரிந்து கொண்டு அதன்படி, செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் செய்யக் கூடாததை விட்டு விட வேண்டும்.

இந்த ஒழுங்குகள் கடை பிடிக்கப் பட்டால் ஹஜ் பர்பூரணத்துவம் அடையும்.

நாம் கவனிக்க தவறி விடக்கூடாது.

ஹஜ் என்பது ஒரு வணக்கம். எந்த வணக்கத்தை யும் முழுமைப் படுத்துவது  அதன் ஒழுங்குகளாகும். – அதன் கிரிகைகளை நிறைவேற்றுவது அல்ல.

நோன்பு குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

·         عن أبي هريرة رضي الله عنه أن النبيَّ صلى الله عليه وسلم قال: ((مَن لم يَدَعْ قول الزُّور والعملَ به والجهلَ، فليس للهِ حاجةٌ أن يَدَعَ طعامه وشرابه))؛ رواه البخاري
ஜகாத் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

ஹஜ்ஜை பற்றி பேசுகிற போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ ) .

الرفث في الحديث يشمل الفحش في القول والجماع معاً .
( وَلَمْ يَفْسُقْ ) أَيْ لَمْ يَأْتِ بِسَيِّئَةٍ وَلا مَعْصِيَةٍ .

அல்லாஹ்விற்காக பரிபூரணமாக ஹஜ்ஜு செய்கிற வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அல்லாஹ் கபூல் செய்வானாக!  அனைவருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக!







No comments:

Post a Comment