வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 30, 2018

கபூலிய்யத் கவனிக்கப்பட வேண்டும்



إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ (( المائدة:27).

இன்று நாம் நிறைய அமல்கள் செய்கிறோம். ஆர்ப்பாட்டமாக படோபடமாக .

நமது பக்கத்து நாட்டிலும் வடமாநிலத்தின் சில பகுதிகளிலும் ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் கொடுத்து ஆடுகளை வாங்கி அறுக்கிறார்கள்.  நம் வீட்டிற்கு முன் நிற்கும் மாடு அனைவரையும் ஈர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் பரிமாறுகீறார்கள்.

அதே போல ஹஜ்ஜை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் .

நாம் அமல் செய்வதோடு திருப்தியடைந்து விடக்கூடாது, கபூலிய்யத் குறித்தும் சிந்திக்கவும் கவலை கொள்ளவும் ஆர்வம் காட்டவும் வேண்டும்.
ولقد قال عليّ رضي الله عنه: (لا تهتمّوا لقِلّة العمل، واهتمّوا للقَبول)،

அமல்களுக்கான வாய்ப்பு ஒரு பெரும் அருள்தான். எனினும் கபூலிய்யத்த் அதை விட பெரிய நிஃமத்தாகும்.
ஒரு அமல் கபூலாகி விடும் என்றால் மொத்த வாழ்வும் வெளிச்சம் பெற்றும் விடும். நம்முடையது மட்டுமல்ல. நமது சந்ததிகளுடையதும்.
இபுறாகீம் நபியின் குர்பானி கபூலாகியது. அல்லாஹ் மனித சமூகத்தின் தொடர்ச்சியான ஒரு வணக்கமாக்கினான். ஒவ்வொரு தடவையிலும் இபுறாகீம் நபி நினைவு கூறப்படுகிறார்.. மகன் இஸ்மாயீலும் அவர் அறுத்த கத்தியும், அறுக்கப் பட்ட இடமான மினாவும்.
அறுப்பதற்கு தடையாக வந்த செய்த்தான் ஒவ்வொரு வருடமும் கல்லால் எறியப்படுகிறான்.
 وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ 

பதுறு ஷுஹதாக்கள் என்னவும் செய்து கொள்ளட்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
قول النبى – صلى الله عليه وعلى ءاله وسلم - لعمر : (( وما يدريك أن الله اطلع علي أهل بدر فقال : اعملوا ما شئتم فقد غفرت لكم ))

அல்கள் கபூலாக நாம் என்ன செய்ய வேண்டும். ?

1.       கபூலிய்யத்தை பற்றிய கவலைப்படனும்
فعن عائشة ـ رضي الله عنها ـ قالت: سألت رسول الله - صلى الله عليه وسلم - عن هذه الآية: (وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ) [المؤمنون: 60]
أهم الذين يشربون الخمر ويسرقون؟! قال: (لا يا ابنة الصديق! ولكنهم الذين يصومون ويصلّون ويتصدقون، وهم يخافون أن لا يقبل منهم، أولئك الذين يسارعون في الخيرات).

2.     செய்தவற்றில் பெருமை கொள்ளாமல் இருப்பது. 
செய்தவற்றை சாதாரணமாக கருதுவதே பெருமை ஏற்படாமல் காக்கும்.


அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருட்கொடைகளை சரியாக எண்ணிப் பார்த்தால் நமது வணக்கங்களில் பெருமை அடைவதற்கு எதுவும் இருக்காது.

3.     அதிகம் இஸ்திக்பார் செய்வது

இபாதத்துகளின் இறுதியில் இஸ்திக்பார் இருக்க வேண்டும்,

ثُمَّ أَفِيضُواْ مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُواْ اللّهَ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ) ( البقرة:199).
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ )الذاريات18
فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ{1} وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجاً{2} فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّاباً{3})النصر

இபாதத் செய்து விட்டு பெருமிதம் அடைவதல்ல. அல்லாஹ்வை மேலும் சரணடைவதே கபூலிய்யத்தை பெற்றுத்தரும்.

4.     நிறைய துஆ கேட்க வேண்டும்

குர்பானி கொடுத்துவிட்டோம். ஜகாத் கொடுத்து விட்டோம். ஹஜ் செய்து விட்டோம் என்று சும்மா இருந்து விடக்கூடாது. அது அமலை நிறைவேற்றியதற்கான அடையாளம் அல்ல.
.
 إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم)( البقرة:127).


முற்காலத்தில் அமல்களை அங்கீகரித்து விட்ட்தை அல்லாஹ் வெளிப்படையாக காட்டினான்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ

அல்லாஹ் செய்த பெரும் கிருபை அந்த வழக்கத்தை மாற்றினான்.  

நமது குர்பானிகளுக்கும் , ஹஜ்ஜு களுக்கும் இப்படி ஒரு நிலை இருக்குமானால் நிலமை என்னவாகும் யோசித்துப் பாருங்கள் ?

ஆனாலும் அமல் கபூலாகி விட்ட்தா என்பதை அறிந்து கொள்ள சில அடையாளங்கள் உண்டு என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

1.       பாவங்கள் குறைந்த வாழ்கை
பாவங்கள் தொடர்வது நஷ்டத்தின் அடையாளமே! எனவே பாவங்களை தொடரும் சிந்தனையோடு அமல்களை செய்வது பயனற்றதே!
قال يحي بن معاذ :" من استغفر بلسانه وقلبه على المعصية معقود , وعزمه أن يرجع إلى المعصية بعد الشهر ويعود , فصومه عليه مردود , وباب القبول في وجهه مسدود ".

2.     தொடர்ந்து நல் அமல்களைச் செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்

நல் அமல் என்பது ஒரு செடியை நடுவது போலஅது வளர மேலும் நீரூற்றுவது உரமிடுவது போல நன்மைகள் அதிகரிக்க வேண்டும்.


3.     நன்மைகளின் மீதான ஆசையும் பாவங்களின் மீதான் அருவருப்பும் அதிகரிக்கும்.

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ )الرعد28

பெருமானாரின் துஆக்களில் ஒன்று.

اللهم حبب إليَّ الإيمان وزينه في قلبي وكرَّه إليَّ الكفر والفسوق والعصيان واجعلني من الراشدين


4.     வழிபாடுகளுக்கு வழி இலேசாகும். பாவங்களை விட்டு விலகும் வழியும் இலேசாகும்.

قال تعالى: (فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَى{5} وَصَدَّقَ بِالْحُسْنَى{6} فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى{7} وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى{8} وَكَذَّبَ بِالْحُسْنَى{9} فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى{10})4-10 الليل

5.     நல்லவர்களின் மீது நேசமும் பாவிகளின் மீது கோபமும் ஏற்படும்

لقد روى الإمام أحمد عن البراء بن عازب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((إن أوثق عرى الإيمان أن تحب في الله وتبغض في الله

ولله در عطاء الله السكندري حين قال :(إذا أردت أن تعرف مقامك عند الله فانظر أين أقامك

நற்செயல்களை செய்யும் வாய்பு அதிகரிப்பதே இவற்றில் மிக முக்கியமாகும்

தொடர்ந்து நற்செய்லகளை கடைபிடிக்க நாம் அக்கறை செலுத்த வேண்டும்.

أحب الأعمال إلى الله أدومها وإن قل). متفق عليه

வசதி வாய்ப்புள்ள போது, ஆரோக்கியம் மற்றும் ஓய்வுள்ள போது அமல்களை செய்து விட்டால் வாய்ப்புக்குறைகிற கால கட்ட்த்தில் அல்லாஹ் அதை நிவர்த்தி செய்கிறான்.

إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً) رواه البخاري

ما من امرئ تكون له صلاة بليل فغلبه عليها نوم إلا كتب الله له أجر صلاته، وكان نومه صدقة عليه). أخرجه النسائي.

 ( on bord in the way to coimbatore from sharja .)

No comments:

Post a Comment