வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 20, 2018

திசை திருப்பும் தந்திரம்ஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது.
ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும், பாவப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்கு கிடைத்த விடுதலையையும் நிம்மதியையையும் பறைச் சாற்றுகிற நாள்.
وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون(50)  البقرة
இது விவகாரத்தில் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றல் வெளிப்பட்ட நாள் இது.
யூதர்கள் “நாம் மாட்டிக் கொண்டோம் என்று புலம்பினார்கள். கதறினார்கள்.  எதிரே கடலும் பின்னால் கடல் போன்ற சுமார் 16 இலட்சம் பேர்களை கொண்ட (அல்பிதாயா வந்நிஹாயா)  பிர் அவ்னின் படையும் அவர்களை சூழ்ந்திருந்த நிலையில் – தப்பிப்பதற்காக எந்த மார்க்கமும் இல்லத சூழலில் – இவ்வாறு புலம்பினார்கள்.
فَلَمَّا تَرَاءا الْجَمْعَانِ قَالَ أَصْحَـابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ) [الشعراء:61

இறை நம்பிக்கை கொண்டோர் தங்களது தூதர் மூஸா  உடனிருக்கிற  நிலையில் புலம்பத்தேவையில்லை . எனினும் அவர்கள் புலம்பினார்கள்.
ஆனால் அல்லாஹ் மகத்தான தனது பேருளை வெளிப்படுத்தினான். செங்கடலை பிளக்கச் செய்து யூதர்கள் அனைவரையும் அவர்கள் வைத்திருந்த ஒரு சிறு பாத்திரம் கூட தவறிப்போகாமல் அல்லாஹ் பாதுகாத்தான். பிர் அவ்னினை அவனது படைகளை யும் அவர்களில் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் அல்லாஹ் அழித்தான்.
இத்தகைய அழிவை சந்தித்தவர்கள் சாமாணியர்கள் அல்ல. படோபடமான பலமான  அரசின் சொந்தக்கார்ர்கள்.
தாங்கள் இறந்து போன பிறகு தங்களது பிணங்கள் கூட அரச மரியாதையுடனேயே இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்.
எகிப்தின் பிரமிடுகளைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.  உலகின் மிக பிரம்மாண்டமான சமாதிகள் அவை.  பிர் அவ்னிய அரச குடும்பத்தவர்கள் இறந்து போனால் அவர்களது உடல்கள் பாடம் செய்யப் பட்டு கெட்டுப்போகாதவாறு  முக்கோன வடிவிலான் அந்த பிரமிடுகளில் வைக்கப் படும்.   
முக்கோன வடிவிலான அக்கட்டிடங்கள் சாமாணியமானவை அல்ல. உலகின் பெரும் அதிசயங்களாக காணப் பட்ட பிரம்மாணட கட்டிடங்கள் அவை. உலகின் பழைய அதிசயங்களில் ஒன்றாக இப்போதும் எஞ்சியிருக்கும் அவை மிக உறுதியானவை . ஒரே மாதிரியான பிரம்மாணட மான பாறைகள் அடுக்காக வைக்கப் பட்டு உருவாக்கப் பட்ட அவை இன்றும் கூட பிரமிப்பை தருகின்றன.
எகிப்திலுள்ள பெரிய பிரமிடு  கட்டப் பயன்படுத்தப் பட்ட பாறை ஒவ்வொன்றும்  இரண்டரை டன்னில் இருந்து 15 டன் வரை வரை எடையு கொண்டவை. இத்தகைய பதிமூன்று இலட்சம் கற்களைக் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது அது. இதன் அடிப்பாகம் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 755 அடி நீளமுடையதாக உள்ளது. இதன் உயரம் கட்டப்பட்டபோது 488 அடி யாக இருந்தது. இன்று இதன் உயரம் 455 அடி யாக உள்ளது.

பிரமிடுகளுக்கு உள்ளே அரசமாளிகைக்கு குறைவில்லாத அளவில் அறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட்டன. அரசங்கள் தாங்கள் திரட்டிய செல்வங்களோடு அதில் பாதுகாக்கப் பட்டார்கள்.
ஒவ்வொரு அரசனும் தனக்கான பிரமிடை தானே தான் விரும்பியவாறு கட்டிக் கொண்டான்.
இத்தகைய படோபடமான வாழ்க்கைக்குரிய பிர் அவ்ன் இரண்டாம் ராம்ஸெஸ் செங்கடலி மூழ்கி பரிதாபமாக இறந்து போனான். கூடவே அவனது படைகள் அத்தனையும் அழிந்தன.
பிர் அவ்னின் இயல்புகளில் ஒன்றை திருக்குர் ஆன் அடையாளப் படுத்துகிறது.
சத்தியம் அவனது முன்னிலையில் தெளிவாக வந்து நின்ற நிலையில் அவன் அதை எதிர் கொள்ள சக்தியற்று திசை திருப்பல் களில் ஈடுபட்டான்.
ثُمَّ بَعَثْنَا مِن بَعْدِهِم مُّوسَىٰ بِآيَاتِنَا إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ فَظَلَمُوا بِهَا ۖ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ(103وَقَالَ مُوسَىٰ يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ حَقِيقٌ عَلَىٰ أَن لَّا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ بَنِي إِسْرَائِيلَ (105) (104)

என்று மூஸா கூறிய போது , அவர் சொன்ன சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அவன் பேச்சை திசை திருப்பினான்.
 قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ (18وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنتَ مِنَ الْكَافِرِينَ (19)
குற்றம் செய்து விட்டு தப்பியோடிய நீ ! நான் உன்னை மகன் போல வளர்த்த்தற்கு நன்றி கெட்டு நடந்து கொண்டாய் என்று  கடிந்து கொள்வது போல் பேச்சை மாற்றினான்.

மூஸா அலை அவர்கள் மிக எதார்த்தமாக பதில் அளித்தார்கள்.  நான் அடித்து ஒருவன் இறந்து போனது வேண்டு மென்றே நடந்தது அல்ல, அறியாமல் நடந்த்து.  நீ என் ஒருவனுக்கு உபகாரம் செய்த்தை எண்னிப் பார்க்க சொல்கிறாய் ?  நீயோ யூதக்குழந்தகள் அனைவரையும் கொலை செய்த்த்தை வசதியாக மறந்து விடுகிறாய் என்று கூறி விட்டு அதிலேயே நின்று கொண்டிருக்காமல் மீண்டு அல்லாஹ்வை நோக்கி அவனை ஈர்த்தார்கள்.

அவன் அவரை பைத்தியக்கார்ர் என்றான், சிறையில் தள்ளிவிடுவேன் என்றான்.  தோற்றுப் போகிறவர்களின் உளரல் கள் இது.

قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ (20فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ (21وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ (22قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ (23قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ (24قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ (25قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ (26قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ (27قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ (28قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ


ஆனாலும் மக்களிடம் மூஸா மரியாதையை பெற்று விடக் கூடாது என்பதற்காக பிரச்ச்னை வேறு இட்த்திற்கு திருப்பினான் பிர் அவ்ன்

எங்களுடைய முன்னோர்களின் வழியை தானே பின்பற்றுகிறோம். எங்களுடைய முன்னோர்கள் எலாம் முட்டாள்களா என்றான்.  மூஸா அலை முன்னோர்களை முட்டாள்கள் என்று சொல்லி விட்டால் அதை வைத்தே  சபையோரிடம் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி விடலாம் என நினைத்தான்.  தாஹா அத்தியாயம் பேசுகிறது. பிர் அவ்ன் கேட்டான்.

 قَالَ فَمَا بَالُ الْقُرُونِ الْأُولَىٰ (51)

மூஸா அலை அவனது திசை திருப்புதலை மிகச் சாதுர்யமாக கையாண்டார்கள். கவனத்தை அல்லாஹ்வைவை நோக்கியே திருப்பிவிட்டார்கள்.

قَالَ عِلْمُهَا عِندَ رَبِّي فِي كِتَابٍ ۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى (52الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ (53)

அறிவார்த்தமான ஆதாரங்கள் பிர் அவ்னினிடம் எடுபடாத போது எவரையும் ஏற்கச் செய்யும் முஃஜிஸாக்களை வெளிப்படுத்தினார்.


 قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِينٍ (30قَالَ فَأْتِ بِهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ (31فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ(32وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ (33

பாம்பின் பிரம்மாண்ட்த்தை பார்த்த்துமே சாதாரணமாக நாற்பது நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கிற பழக்கம் கொண்ட பிர் அவ்னுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக அல்பிதாயா வில் இப்னு கஸீர் (ரஹ்) குறிப்பிடுகிறார்
إنه حصل له إسهال عظيم أكثر من أربعين مرة في يوم وكان قبل ذلك لا يتبرز في كل أربعين يوما إلا مرة واحدة فانعكس عليه الحال
அன்றைய காலம் மந்திரவாதிகள் நிறைந்த காலம் . எது மந்திரம் எது அற்புதம் என்பதை பிர் அவ்னுக்கு தெரிந்தே இருந்த்து. இருந்தும் அவன் அற்புதத்தை மந்திரம் என்று திசை திருப்பினான்.

قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ (34يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ (35

பிர் அவ்னின் மந்திரவாதிகளுக்கும் மூஸா அலை அவர்களுக்கும் ஏற்பட்ட போட்டி உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட மான வெளிப்படையான போட்டியாகும்.

அந்த போட்டியில் மந்திரவாதிகள் தோற்றுப் போனார்கள். மட்டுமல்ல அடுத்த கண்மே அல்லாஹ்வை பணிந்து சஜ்தாவில் விழுந்தார்கள். மந்திரம் தோற்று முஃஜிஸா பெரும் வெற்றி பெற்றது.

 فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (46قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (47)رَبِّ مُوسَىٰ وَهَارُونَ (48

பிர் அவ்னுக்கு மிகப்பெரும் தோல்வி. அனால் அதையும் அவன் திசை திருப்பினான்.  ஓ நீங்கள் மந்திரவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து என் நாட்டை பறிக்க நினைக்கிறீர்களா என்றான்.
 إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ

மூஸா அலை அவர்கள் மிக அமைதியாக எனது இறைவனுக்கு உண்மை தெரியும். ஆனால் அக்கிரமக்கார்ர்கள் ஒரு போதும் வெற்றியடை முடியாது என்றார்  

 وَقَالَ مُوسَىٰ رَبِّي أَعْلَمُ بِمَن جَاءَ بِالْهُدَىٰ مِنْ عِندِهِ وَمَن تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (37

அடுத்த நாள் பிர்அவனது  மந்திர சபை கூடியது , மூஸாவை வெற்றி பெற முடியாத சூழலில் பிரச்சனையை திசை திருப்ப பிர் அவ்ன் வித்தியாமான வேறு ஒரு உத்தியை கையாண்டான். கஸஸ் அத்தியாயம் கூறுகிறது.
மந்திரி ஹாமானிடம்  ஒரு உயரமான கோபுரத்தை எழுப்பச் சொன்னான்.  ஒரு பிரம்மாண்ட கோபுரம் தயாரிக்கப் பட்டது.  அதன் மேல் ஏறிப் பார்த்து மூஸா கூறிய வானத்தின் இறைவனை காணவில்லை என்றான்.
பிர் அவ்னின் அகந்தையின்  காரண்மாக சத்தியத்தை எதிர் கொள்ள மனமில்லாமல் அதை திசை திருப்ப மேற் கொண்ட உச்ச கட்ட நடவடிக்கைகளே அவனது அழிவுக்கு காரண்மாகிவிட்டது.  

 وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَا هَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَل لِّي صَرْحًا لَّعَلِّي أَطَّلِعُ إِلَىٰ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ (38وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُودُهُ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَظَنُّوا أَنَّهُمْ إِلَيْنَا 
 (39فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ ۖ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ (40)

 செங்கடல் பிளந்து மூஸா அலை அவர்களும் அவருடைய மக்களும் காப்பாற்றப் பட்டு அகபாவின் கறையை அடைந்து விட்ட நிலையில் பிர் அவ்னின் குதிரை செங்கடலின் அந்தப் பாதையில் வந்து நின்ற போது , பிர் அவ்ன் “எனக்காக கடல் வழி விட்டு நிற்கிறது” என்று சொன்னானாம்
பாவம் ! அது எதற்காக என்று அவன் அறிந்திருக்க வில்லை.
உலகில் சர்வாதிகார எண்ணம் கொண்டோர் பலரும் திசை திருப்பல் நட வடிக்கைகள் மூலம் தம்மை காப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ் அக்கிரமக்கார்களை விடுவதில்லை.
தற்போது மத்தியை ஆளும் பாரதீய ஜனதா அரசு எல்லா அம்சத்திலும் தோல்வியை தழுவி விட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அமைந்த அரசுகளில் தன்னுடைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால்  மக்களை அதிகம் சிரமத்திற்குள்ளாக்கிய அரசாக இந்த அரசு அமைந்து விட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை
ஜி எஸ் டி தடாலடி அறிமுகம்
வாக்கு இயந்திரங்களில் மோசடி
தேர்தலில் போதிய பலம் பெறாத போதும் கூட ஆளுநர்களை ஏஜெண்டு களாக வைத்து முறைகேடாக, கோவா போன்ற பல மாநிலங்களி அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வுகள்
இந்துத்துவ இலட்சமணம் கொண்ட அரசு,  எத்தகைய பாசிச அரசாக இருக்கும் என்பதை மக்கள் பெரும் விலை கொடுத்து உணர ஆரம்பித்துள்ளனர்.  
அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்கூறிய பலரை இந்த்துத்து அடியாட்கள் பகிரங்கமாக திட்டமிட்டு கொலை செய்தனர்.
குஜராத கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு ஹைதராபாத மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் குண்டு வைத்தாதக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியவர்களை  சிறைகளிலுருந்து விடுதலை செய்த்து.
கேரள மாநிலத்தை சார்ந்த இளம் பெண் ஹாதியா என்பவர் மனம் விரும்பி இஸ்லாமை ஏற்ற போது அவரையும் அவரது கணவரையும் எண்ணற்ற சிரமங்களுக்கு உள்ளாக்கியது.
நீதிமண்றங்களில் அரசின் தலையீடு எந்த அளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளியுலகிற்கு தெரிவித்த அவலம் இப்போது நடந்தது போல முன்னெப்போதும் நடந்ததில்லை.
உத்தம புத்திரர்களாக வேடமிட்ட பாஜக கட்சியின் சாயம் வெளுத்து விட்ட்து.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிற கள்ளப் பணத்தை மீட்டு வருவோம் என்று மார்தட்டியவர்கள் இப்போது கள்ளப்ப பண முதலைகளின் நிழலில் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் மல்லையா , நீரவ் மோடி போன்ற நாட்டை சுரண்டிய பல பெரும் பண முதலைகளை வெளிநாடுகளுக்கு திட்ட மிட்டு தப்ப விட்டது.  
ரபேல் ரக விமான்ங்கள் வாங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளது என்பது அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
நாட்டை நிர்வாகம் செய்ய தெரியாத அரசால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சரிவு கண்டுள்ளது.
பெட்ரோல் விலை விண்ணை தொடுமளவு உயர்ந்துள்ளது.
இரயில் பஸ் போக்குவரத்து கட்டணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்துள்ளன.
நாட்டு மக்கள் இந்த அரசை எபோதடா வீட்டுக்கு அனுப்புவோம் என்று காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசோ  மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிற நிலையில் நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பு வதற்காக முத்தலாக் தடை விவகாரத்தில் அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது.
நாட்டிலுள்ள மிகப்பெரிய சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராக – முஸ்லிம்களின் கருத்தை சற்றும் பொருட்படுத்தாமல் -  திட்ட மிட்டு ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றி சட்டமியற்றியுள்லது.  முத்தலாக் செல்லாது என்று அறிவித்து விட்ட பிறகு அவ்வாறு கூறியவருக்கு மூன்று ஆண்டுகள் ஜாமீன் இல்லாத சிறைத்தண்டனை , சிறையில் இருப்பவர் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்திப்பதற்கே சிரமமான விதிகள் அடங்கிய இந்த சட்டத்தை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலையில் அவசரம் சட்டமாக கொல்லைப் புற வழியாக திணிப்பதன மூலம்  தனது பாசிச மனப்போக்கின் உச்சத்தை  பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது.
தன்னுடைய இமாலய தோல்விகளிலுருந்து மக்களின் கவனத்தை திருப்பி விடலாம் என்பதே மத்திய பாஜக அரசின் திட்டம்.
அக்கிரமக்காரர்ரகள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள்.
 وَقَالَ مُوسَىٰ رَبِّي أَعْلَمُ بِمَن جَاءَ بِالْهُدَىٰ مِنْ عِندِهِ وَمَن تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (37
ஆசூரா நாள் தருகிற அருமையான பாடம் இது.
அல்லாஹ் தீய சக்திகளின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பானாக

No comments:

Post a Comment