வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 27, 2018

பாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.

 إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ (18) سورة التوبة .
ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்து உரையை தொடங்குகிறேன்
கடந்த 2010 ம் ஆண்டுஅதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய ஆண்டு  செப்டம்பர் மாத்த்தில்  ஒரு ஜும் வில் முஸ்லிம்கள் பொறுமை காக்கு வேண்டும் என்று ஒரு உரை நிகழ்த்தப்பட்ட்து. அந்த உரையில்
பாபரீ மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்துத்துவ சக்திகளின் உணர்ச்சியை தூண்டும் விவகாரங்களுக்கு ஆளாகி விட வேண்டாம் எனவும் அதில் கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது.
அதே போல எந்த வித்தியாசமும் இல்லாமல். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில்  மீண்டும் திடீரென பாபரீ மஸ்ஜித் வழக்கு இப்போது தூசு தட்டப் பட்டிருக்கிறதுபாசிசி பாஜக அரசை காப்பாற்று வதற்காக உச்ச நீதிமன்றம் பல்வேறு பட்ட அதிரடி தீர்ப்புக்களை வழங்கி வருகிறதுநாட்டில் இப்போது எத்தகைய சூழ் நிலை நிலவுகிறது, ?
மத்தியை ஆளும் பாஜக அரசு, அரசியல், நிர்வாகம். வெளியுறவு, நிதி, நீதி உள்ளிட்ட  அனைத்து துறைகளிலும் தோற்றுப் போய்விட்டது.
பிராண்ஸ் நாட்டிடமிருந்து 36 ரபேல் போர் விமான்ங்களை வாங்கியதில் பெருமளவில் முறைகேடு நடை பெற்றுள்ளது. பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஒல்லாந்த் அவர்களும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இது விசயத்தில் பதில் பேச சொல்ல முடியாமல் மத்திய அரசு தடுமாறி நிற்கிறது. ஆரம்பத்தில் அரசியல் கட்சிகளின் ஒரு சராசரி குற்றச் சாட்டு என்று கருதப் பட்ட இவ்வழக்கு இப்போது நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து சாமாணிய மக்களின் கேள்வியாக வளர்ந்து நிற்கிறது.
பெட்ரோல் விலை உயர்வு மக்களை பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது.
கடுமையான வரி விதிப்பால் தொழில் உலகம் நசிந்தே போய்விட்டது.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாயை எட்டிக் கொண்டிருக்கிறது
தேர்தலில் வாக்களிப்பட்ட  ஒண்ணரை கோடி புதிய வேலை வாய்ப்புக்கள் எங்கே என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டி பதுக்கி வைக்கப் பட்டிருக்கிற கறுப்பு பணத்தை மீட்டு இந்திய குடிம்கன் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 இலட்சம் போடப்படும் என்ற வாக்குறுதி என்ன வானது ?
நாட்டை ஏமாற்றிய பண முதலைகள் பலரும் பத்திரமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இந்த அரசே உதவியிருக்கிற்து என்றல்லவா செய்திகள் கூறுகின்றன ?
ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தக்குதல்களும் அடாவடித்தன்ங்களும் அரசின் ஆசியோடு கணக்கின்றி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது  மக்கள் வாழும் நாடுதானா –என்ற கேள்வி எழும் வண்ணம் மத தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.  இங்கே சட்டம் என்று ஒன்று இருக்கிறதா   என்ற கேள்வி வானளாவ எழுந்து நிற்கிறது.
இத்தனையிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து மத்திய பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உச்ச நீதிம்னறம் ஒத்தூதி வருகிறது.
கள்ள உறவு குற்றமல்ல என்று நேற்றைய ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது,. பெண்கள் அமைப்புக்களே இதை கண்டித்துள்ளன.
இந்த தீர்ப்பின் விவரத்தையும் தீர்ப்பு வழங்கியது யார் என்பதை கவனித்துப் பாருங்கள்  .
கள்ள உறவு கொள்பவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால்  5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபாரதம் விதிக்கப் பட வேண்டும் என்று  தண்டிக்கப் பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டம் ஐபிசி 497-வது பிரிவு கூறுகிறது.  
இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக டந்த 1985-ம் ஆண்டு மே 27-ம் தேதி சவுமித்ரா விஷ்னு என்பவர்  மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் மனுவை விசாரித்த நீதிபதி  ஓய்.வி.சந்திரசூட் அந்த மனுவை ரத்து செய்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், தவறான உறவு வைத்துக்கொள்பவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் சமூகத்தின் நலன் காக்கப்படும். நிலையான திருமண பந்தம் மட்டும் தவறான உறவுகளைத் தடுக்க முடியாது என்று தெரிவித்து 497 பிரிவை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
ஆனால் இந்த  தீர்ப்பை  மாற்றி திருமண பந்தத்தை மீறிய சட்டவிரோத உறவு தவறில்லை. மனைவி கணவரின் சொத்து அல்ல. ஆதலால், 497-ன்பிரிவை ரத்து செய்கிறோம் என அரசியல் சாசன அமர்வில்  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. .

கள்ள  உறவு தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு  விசாரித்து முகம் சுளிக்க வைக்கிற தீர்ப்பை வழங்கியிருக்கிறது.  

சுதந்திரத்திற்குப் பிறகு  நாட்டில் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிற பாபரீ மஸ்ஜித் நில விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட  அரசியல் சாசண அமர்வுக்கு மாற்ற முடியாது என்று முஸ்லிம்களின் ஒரு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.   

என்ன விந்தை இது ? இந்த அநீதியை எங்கு போய்ச் சொல்லுவது ?
இந்த தீர்ப்பு விவரத்தை நாம் கவனமாக பார்க்க வேண்டும்
1992 ம் ஆண்டு டிஸம் பர் 6 ம் தேதி பாசிசி இந்துத்துவ சக்திகளால் 450 ஆண்டு கால பழமையான பாபரீ மஸ்ஜித் இடிக்கப் பட்டது. அப்போது அதை உத்திரப் பிரதேச காவல் துறையும் இந்திய இராணுவமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
அதன் பிறகு மத்திய அரசு அயோத்தியில் பாபரீ மஸ்ஜிதுக்கு சொந்த மான 2.77 ஏக்கர் நிலத்தையும் அதன் அருகிலுள்ள சுமார் 65 ஏக்கர் நிலத்தையும் ஒரு சட்ட்த்தின் மூலம் கையகப் படுத்தியது.
மத்திய அரசு பள்ளிவாசல் நிலத்தை கையகப் படுத்தியதை எதிர்த்து இஸ்மாயீல் பரூக்கி  என்பவர் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்த்து  அந்த தீர்ப்பும் ஒரு முகமான தீர்ப்பல்ல. பெரும்பான்மை அடிப்படையிலான தீர்ப்பு. அந்த தீர்ப்பில்  பள்ளிவாசல் என்பது இஸ்லாம் மத்த்தில் மிக முக்கியமான ஒன்றல்ல. பொது வெளியில் நின்று கூட முஸ்லிம்கள் தொழலாம் என்று கூறப்பட்டிருந்த்து.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த வழக்கை அரசியல் சாசண அமர்வு விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் உச்ச நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 2010 ம் ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட இந்த மனுவை விசாரித்த்த விசாரித்த் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் இரண்டு நீதிபதிகள் இப்போது அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற சூழலில் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.  5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசணம் பெஞ்ச் தேவையில்லை என்றும் . மூன்று பேர் கொண்ட பெஞ்சே விசாரிக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த வழக்கை அரசியல் சாசண பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டதற்கு பிரதான காரணம் 1994 ம் ஆண்டு மசூதி இஸ்லாத்தின் முக்கிய இடமல்ல என்று கூறியதாகும். இது விசயத்தை பேசித்தீர்ப்பதற்கு அதிக நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசண பெஞ்சு அவசியமே என்பதை சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.
இந்த விவாதம் தொடருமானால் வழக்கில் இறுதி தீர்ப்பு வருவது தாமதமாகும்..
2010 ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபரீ மஸ்ஜித் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா , ராம் ல்ல்லா ஆகிய மூன்று அமைப்புக்களும் சம்மாக பங்கிட்டு கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடைங்கிய பெஞ்சு முன் விசாரணையில் உள்ளது.
இந்த நீதிபதிகளை பயன்படுத்தி  அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக தங்களுக்குச் சார்பான ஒரு தீர்ப்பை விரைவாக  பெற்றுவிட இந்துத்துவ அமைப்புக்கள் முயற்சிக்க்கின்றன , காலம் தாழ்வதை அவர்கள் விரும்ப வில்லை.  
இந்த நிலையில் தான் 3 நீதிபதிகள் பென்சின் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் மசூதி இஸ்லாத்தில் முக்கிய அம்சமல்ல என்று 1994 ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதற்கு புதிய விளக்கம் கொடுக்க முயற்சிக்கின்றனர்
இந்த வழக்கு இஸ்லாம் மதத்திற்கு மசூதி தேவையா என்பதை பற்றியது கிடையாது, இந்த நில கையகப்படுத்தும் விவகாரத்தில் மசூதி தேவையா என்பதை பற்றியதுதான் என்று விளக்கம் அளித்துள்ளனர். “
இது பிரச்ச்னையை திசை திருப்பும் உத்தியாகும். அயோத்தி வழக்கில் முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம் மசூதி தேவை இல்லை என்று கருத்து தெரித்தவர்கள் – தங்களது தீர்ப்பை சரியாக சொல்லத் தவறி விட்டனர் என்று அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்திருக்க வேண்டும்.
1994  ம் ஆண்டு  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வெளியிட்ட கருத்து இனி நாட்டிற்குள் எங்கு வேண்டு மானாலும் பள்ளிவாசல்களுக்கு எதிராக பயன்படுத்துப்படும் ஆபத்து இருக்கிறது.  இது விசயத்தை முந்தைய  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வைவிட இன்னும் அதிக்ப்படியான நீதிபதிகளை கொண்ட வலுவான அரசியல் சாசணம் பென்சு விசாரிப்பது தான் பொருத்தமானது.
ஏனெனில் இதில் இந்திய சிறுபான்மை முஸ்ளிம் சமுதாயத்திற்கு அரசியல் சாசணம் வழ்ங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதிக்கும் அம்சம் இருக்கிறது.
இதைத்தான மூன்று நீதிபதிகளில் மூன்றாவது தனியாக தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் நசீர் தனியாக தீர்ப்பு கூறியுள்ளார்.
இது மதம் தொடர்பான வழக்கு என்பதால், இதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற வேண்டும். அரசியல் சாசன அமர்வே வழிபாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நீதிபதி அப்துல் நசீர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிபதி அப்துல் நசீரின் தீர்ப்பே நீதியின் பாற்பட்ட்து எனபதை சிற்ற்றிவுள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியும்.
ஐந்து உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் கூறிய மிக முக்கியமான கருத்தை  கருத்தை மறு பரிசீலனை செய்வதாக இருந்தால் அதை விட அதிகமான எண்ணிக்கை கொண்ட அரசியல் சாசணம் பெஞ்ச் விசாரிப்பதே பொருத்தமானது.
கள்ள உறவு வழக்குகளுக்கெல்லாம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசண பென்சு தீர்ப்பு வழங்குகிறது என்றால்  பாபரீ மஸ்ஜித் உடைப்பின் மூலம் தேசத்தின் மரியாதை களங்கப்படுத்தப் பட்ட  ஒரு வழக்கில் ஐந்து நீதிபதிகளோ அதற்கு மேற்பட்டவர்களோட் கொண்ட ஒரு அமர்விற்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதி ஏன் யோசிக்க வேண்டும்.  முந்தையை நீதிபதிகளின் கருத்த்துக்கு வலிந்து புது விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை என்ன ?
மத்தியை ஆளும் அரசு தடுமாற்றத்தில் இருக்கிறது . அதற்கு முட்டிக் கொடுத்து  உச்ச்ச நீதிமன்றம் உதவு கிறது என்பது தான்.
சதிகார்ர்கள் மிக நுனுக்கமாக திட்டங்களை தீட்டலாம். அல்லாஹ் கைருல் மாகிரீன்.
இஸ்லாமும் முஸ்லிம்களின் வாழ்வியலும் பின்னிப் பிணைந்த விசய்ங்களாகும்.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (18
عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ - صلى الله عليه وسلم - يَقُولُ :\"الْمَسْجِد بَيتُ كُلّ تَقِيّ \". أخرجه أبو نعيم 
நபி (ஸல் அவர்கள் மதீனாவிற்குள் நுழைவதற்கு முன் குபா செவ்வாய் புதன் வியாழன் மூன்று நாட்கள் குபா வில் தங்கியிருந்தார்கள். அமைதி கிடைத்த சொற்ப காலத்திற்குள் அங்கு இஸ்லாமின் முதல் பள்ளிவாசலை கட்டினார்கள் என்பதும்
மதீனாவிற்கு சென்றதும் முதலாவதக அவர்கள் கவனித்த்து மஸ்ஜிதுன்ன பவிக்காக இட்த்தை வாங்கி பள்ளிவாசலின் கட்டிடப்பணியை கவனித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத நிஜங்களாகும்.
அது மட்டு மல்ல சிறுது காலம் எங்கே தங்க நேர்ந்தாலும் பெருமானார் (ஸல்) அங்கே ஒரு பள்ளிவாசலை எழுப்பினார்கள் என்பதுதான் வரலாறு. முஸ்லிம்களுக்குகும் அது வே கற்பிக்கப் பட்டிருக்கிறது என்பது தான் வரலாறு .
وكان النبي صلى الله عليه وسلم إذا نزل منزلاً في سفر أو حرب وبقي فيه مدة اتخذ فيه مسجداً يصلي فيه بأصحابه رضي الله عنهم، كما فعل في خيبر. وفاء الوفا بأخبار المصطفى للسمهودي 3/1028.
ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்தினரும் தமக்கு ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வேண்டும் என உமர் ரலி உத்தரவிட்டார்கள் .
عن عثمان بن عطاء قال لما فتح عمر بن الخطاب البلد كتب إلى أبي موسى الأشعري وهو على البصرة يأمره أن يتخذ للجماعة مسجداً فإذا كان يوم الجمعة انضموا إلى مسجد الجماعة فشهدوا الجمعة .كنز العمال 8/313-314
وعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ:مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ لِبَيْضِهَا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا في الْجَنَّةِ.أخرجه أحمد 
وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم :\" إن الله ينادى يوم القيامة أين جيراني أين جيراني فتقول الملائكة ربنا من ينبغي له أن يجاورك فيقول أين عُمَّارُ المساجد \". أخرجه الحارث
وعَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:( مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ ، أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلاً كُلَّمَا غَدَا وَرَاحَ.)\".أخرجه أحمد 
وعَنْ بُرَيْدَةَ , عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم , قَالَ:بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ ، إِلَى الْمَسَاجِدِ ، بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَة.أخرجه أبو داود (561
عَنْ أَبِي رَزِينٍ ، عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ ، قَالَ:جِئْتُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، كُنْتُ ضَرِيرًا ، شَاسِعَ الدَّارِ ، وَلِي قَائِدٌ لاَ يُلاَئِمُنِي ، فَهَلْ تَجِدُ لِي رُخْصَةً أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي ؟ قَالَ : أَتَسْمَعُ النِّدَاءَ ؟ قَالَ : قُلْتُ : نَعَمْ ، قَالَ : مَا أَجِدُ لَكَ رُخْصَةً. أخرجه أحمد 
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: أَلاَ أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا ، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ؟ إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ ، وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ، فَذَلِكُمُ الرِّبَاطُ ، فَذَلِكُمُ الرِّبَاطُ ، فَذَلِكُمُ الرِّبَاطُ.)\".أخرجه أحم

இந்த நபி மொழிகள் பள்ளிவாசலுக்கும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்குமான தொடர்பை தெளிவு படுத்த போது மானவை

இன்னொன்றும் கவனிக்கத்தக்கது. பள்ளிவாசல் என்பது முஸ்லிம் சமூகத்தின் அடையாளம்.
அதை உடைப்பது அல்லது அதற்குரிய மரியாதையை தர மறுப்பது முஸ்லிம் சமுதாயத்தையும் இஸ்லாமையும் அவமதிப்பது போன்றதேயாகும்.
தற்போதைய ஆட்சியை காப்பாற்ற நீதிமன்றங்கள் நடனமாடுகின்றன. நீதி ஆட்டம் கண்டு விடக்கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானக!



பாபர் மஸ்ஜித் வழக்கு ஒரு சுருக்கமான பார்வை
ராமர் கோவிலை இடித்து விட்டு பாபரின்படைத்தளபதி மீர்பாகி பள்ளிவாசலை கட்டவில்லை அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் பழக்கமில்லை.

திருக்குர் ஆனோ நபிகள் நாயகமோ அவ்வாறு ஒரு சிறு உத்தரவை வெளியிட்டிருப்பார்கள் எனில் ஒவ்வொரு முஸ்லிமும் அதையே இலட்சியமாக கொண்டிருப்பார்கள் 

பாபருக்கு முன்னரே பன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள்இந்தியாவை ஆண்டு வந்துள்ளனர்இப்படி ஒரு பழி அவர்கள்மீது சொல்லப் பட்ட்தில்லை.

1528 பாபர் பள்ளி கட்டப்பட்ட்து. 350 வருடங்களாக ஒரு பிரச்சினையும் இல்லை
1987 சிப்பாய் கலகத்திற்கு பிறகு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க பிரிட்டிஷ்கார்ர்கள் திட்டமிட்டனர்.
அயோத்தியில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பாபர் பள்ளி இருப்பது அந்த ஊரில் இருந்த சில இந்துக்களின் கண்களை உறுத்தியது.அவர்கள் பிரிட்டிஷாரின் திட்ட்த்திற்கு துணைபோயினர்.  
1859 முதல் தகராறு  தொடங்கியது.
சுதந்திரத்திற்குப் பிறது 1949 டிஸ்ம்பர் 22 இஷா வரை தொழுகை நடைபெற்ற பள்ளிவாசலில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக சிலை வைக்கப் பட்ட்து.
பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்றது நீதிபதி கே.கே நய்யார் பள்ளிக்குப் பூட்டுப் போட்டார்.  அன்றிலுருந்து நடந்துவருகிறவழக்கிற்கு இப்போது வயது 61
இடையில் காங்கீரஸ் ஆட்சிக்காலத்தில் தொடந்துமுஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்ட்து
1986 – சிலைகளை வழி பட அனுமதிக்கப் பட்ட்து –முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தடை
1989 – சிலா நியாஸ்
1990 ரதயாத்திரை

1992 – பாபர் பள்ளி உடைப்புதொடர்ந்த கலவரத்தில்  2000முஸ்லிம்கள் பலியாயினர்







  

No comments:

Post a Comment