வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 07, 2019

தஃவா பணியும் சர்ச்சைகளும்



 ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (125)

திருபுவனத்தில் இராமலிங்கம் என்பவர் கொலை செய்யப் பட்டார். அதற்கு காரணம் இஸ்லாமிய மதப் பிரச்சாரகர்களோடு முன் தினம் அவர் வாக்குவாதம் செய்தார். அதன் காரணமாகவே அவர் கொல்லப் பட்டார் என்றும் முஸ்லிம் தெருவில் வைத்து அவர் கொல்லப் பட்டார் என்றும் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
ராமலிங்கம் பாமக கட்சியிலும் பின்னர் இந்து அமைப்புக்களிலும் தீவிரமாக செயல்பட்டார் என்று தெரிய வருகிறது.

தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியிலுள்ள ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருபுவனம் நகரத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சென்று இஸ்லாமிய பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களிடம் ராமலிங்கம் வாதம் செய்த்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் கூட ராமலிங்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் கடுமையானதாக இல்லை. ஒரு சாதரணா சர்ச்சையாகவே முடிந்திருக்கிறது. ஒரு படுகொலைக் கான மோட்டிவ் எதுவும் அதில் இல்லை.
இந்நிலையில், ராமலிங்கத்தை ஆட்டோவில் வந்து வெட்டி கொன்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது பெயர் முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான் என்பதாகும். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

ராமலிங்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமான தகறாறு என்பது சாதாரண ஒரு தகறாறு, ஆனால் அதை அவர் பேஸ் புக்கில் வெளியிட்டதைப் பயன்படுத்தி அவர் படு கொலை செய்யப் பட்டிருக்கிறார்.

கொலையை நேரில் பார்த்த சாட்சி அவரது மகன் ஷியாம் சுந்தர் இருக்கிறார். அவர் கொலையாளிகள் மது அருந்தி விட்டு வந்த்தாக கூறுகீறார்.   கொலை நடந்த இடம் புது முஸ்லிம் தெரு பள்ளிவாசலி வீதி. அந்த வீதியில் இருபுறமும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன. ராமலிங்கம் அவரது கடைக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

எனவே இது திட்ட மிட்டு இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்கும் திட்ட்த்தோடு சமூக விரோதிகள் இப்படுகொலையை செய்ய வாய்ப்பிருக்கிறது.


காவல் துறை வாய் விசாரித்து ஒரு அறிக்கை தருவதற்கு முன்னதாகவே ஊடகங்கள் இந்த படுகொலையை முஸ்லிம்களால் தான் நடை பெற்றது என்பது போலவும். மதமாற்றம் நடந்தது  காரணம் என்பது போலவும் கூறுவது பொறுப்பற்ற செயலாகும்.

பாஜக வோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிற பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் மதமாற்றத்தோடு இந்தப் படுகொலை தொடர்பு படுத்தி இவ்வளவு விரைவாக அறிக்கை வெளியிட்டது வருத்தம் தரும் செய்தியாகும்.

உண்மையில் மதமாற்றத்தை தடுத்த்தற்காக ஒருவர் கொலை செய்யப் படுவார் எனில் இஸ்லாம் அதை வன்மையாக கண்டிக்கிறது.

ஒருவர் தனது மத்ததைப் பின்பற்றவும் அதைக் காப்பாற்றிக் கொள்ளவும் அதற்காக பிரச்சாரம் செய்யவும் இஸ்லாம் ஆதரவளிக்கிறது.

 لكم دينكم ولي دين

என்ற பிரகடணத்தை பகிரங்கப் படுத்திய சித்தாந்தம் இஸ்லாம்..

இஸ்லாம் ஒரு சத்திய சன்மார்க்கம். மது வில்லாத,  வட்டியில்லாத , சாதீய தீண்டாமை இல்லாத, ஒழுக்கேடுகள் இல்லாத ஒரு நன்மையான சமூதாயத்தை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது.

இதற்காக பிரச்சாரம் செய்வதை முஸ்லிம்களின் தார்மீக கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ

நாம் ஈமான் கொண்டிருக்கிறோம் என்பதை விட நமது சமூக பொறுப்பு இங்கே முதன்மைப் படுத்தப் பட்டிருப்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

யாரையும் அழிப்பது , யார் மீது ஆதிக்கம் செலுத்துவது இஸ்லாமின் நோக்கம் அல்ல.

 تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا ۚ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (83)

பாமர மக்களை காசு கொடுத்தோ அதிகாரத்தைப் பயன்படுத்தியோ முஸ்லிம்காக நிர்பந்திப்பது இஸ்லாமில் இல்லை.


لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (256) اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۖ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ (257

யார் ஏற்றுக் கொண்டு விட்டார்களோ அவர்கள் உறுதியான வழிக்கு வந்து விட்டார்கள். மற்றவர்கள் நரகத்கதை சென்றடைவார்கள் என்ற எச்சரிக்கை செய்வது மட்டுமே இஸ்லாமிய தஃவா பணியின் இலட்சனம்.

உமர் ரலி அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் போது ஒரு வயதான பெண்ணுக்கு இஸ்லாமை எடுத்துச் சொன்னார்கள். நான் கிழவி . மரணிக்கப் போகிறேன் என்றார் அந்த அம்மையார்.

أنا عجوز كبيرة والموت إلي قريب

உமர் ரலி அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அதட்டவில்லை. உருட்டவில்லை.  لَا إِكْرَاهَ فِي الدِّينِ
 என்ற வார்த்தையை முனுமுனுத்துக் கொண்டே நகர்ந்து விட்டார்கள்.

ஒருவேளை இந்தப் பிரச்சாரப் பணியில் இடையூறுகள் ஏற்படும் என்றால் அதை தஃவா பணி செய்வோர் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது.

الَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُم بِالْآخِرَةِ كَافِرُونَ (45

இத்தகையோரிடம் சண்டையிடுங்கள் கொல்லுங்கள் திருக்குர் ஆன் கூறவில்லை.

தஃவா பணியில் ஈடுபட்டவர்கள் எண்ணற்ற சோதனைகளை சந்தித்துள்ளார்கள். அப்போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமே கையேந்தினார்கள்.

بعث الرجيع

ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா عضل والقارة  வமிசத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும் குர்ஆனையும் கற்றுத் தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 6 நபர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களுக்கு மர்ஸத் இப்னு அபூமர்ஸத் கனவி (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இது இப்னு இஸ்ஹாக்கின் கூற்றாகும்.
அனுப்பப்பட்டவர்கள் 10 நபர்கள்; அவர்களுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்கள்என்பது இமாம் புகாரியின் கூற்றாகும்.
இவர்களை அழைத்துக் கொண்டு ரஜீஃவு என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸு பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்தை சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த 100 அம்பெறியும் வீரர்கள் காலடி காவடி அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம் வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட நபித்தோழர்கள் ஃபத்ஃபத் என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர். அங்கு வந்த எதிரிகள் நாங்கள் உங்களைக் கொலை செய்யோம் என்ற உறுதிமொழி தருகிறோம், இறங்கி வாருங்கள்எனக் கூறினர். ஆனால், ஆஸிம் இறங்கி வர மறுத்துவிட்டு, தங்களது தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளை எதிர்த்தனர். ஆனால், எதிரிகள் நபித்தோழர்களில் 7 நபர்களைக் கொன்றுவிட்டனர். மீதம் குபைப், ஜைது இப்னு தஸின்னா (ரழி) இன்னும் ஒருவர் ஆகிய மூவர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் இந்த எதிரிகள் கொல்ல மாட்டோம் என் மீண்டும் வாக்களித்தனர். அம்மூவரும் அவர்களிடம் இறங்கிவரவே தங்களின் வாக்குக்கு மாறுசெய்து வில்லின் நரம்புகளால் அவர்களைக் கட்டினர்.
அந்த மூன்றாவது நபித்தோழர் இது இவர்களின் முதல் மோசடிஎனக் கூறி அவர்களுடன் செல்வதற்கு மறுத்தார். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் வர மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டனர். அதற்கு பின் குபைப், ஜைது (ரழி) இருவரையும் மக்காவிற்கு அழைத்து வந்து அங்கு அவர்களை விற்றனர். இவ்விருவரும் பத்ர் போரில் மக்காவின் தலைவர்களில் சிலரை கொன்றிருந்தனர். குபைபை வாங்கியவர்கள் சில காலம் வரை அவர்களைச் சிறை வைத்திருந்தனர். பின்பு அவரை கொன்றுவிட முடிவு செய்து மக்காவின் புனித எல்லைக்கு வெளியில் அழைத்து சென்றனர். அங்கு அவரைக் கழு மரத்தில் ஏற்றி கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர். அப்போது குபைப் (ரழி) நான் இரண்டு ரக்அத் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்என்று கேட்க அவர்களும் அனுமதித்தனர். தொழுது முடித்தபின் அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நடுக்கம், பயம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள் என்றிருப்பின் நான் மேலும் தொழுதிருப்பேன் என்று கூறிய பிறகு, அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்! இவர்களை தனித்தனியாக பிரித்து கொன்றுவிடு! இவர்களில் எவரையும் மீதம் விடாதே!என்று கூறி பின்வரும் கவிதையை படித்தார்.
எதிரி ரானுவத்தினர் என்னை சூழ்ந்தனர்;
தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்;
ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்;
தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்;
ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்;
எனது கஷ்டம், தனிமை, அந்நியம்
மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள ராணுவம்
இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்;
இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்;
(
எங்ஙனம் அதனைச் செய்வேன்)
மரணம் எனக்க அதைவிட மிக எளிது;
என் கண்கள் அழுகின்றன; நீர் ஒட இடமில்லை;
எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க
அர்ஷின் அதிபதி எனக்கு பொறுமையளித்தான்;
அணு அணுவாக அவர்கள் என்னை கொல்கின்றனர்;
எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது;
நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால்
மரணம் ஒரு பொருட்டல்லவே!
எந்த பகுதியில் கொலையுண்டாலும்
அல்லாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே!
அது, அல்லாஹ் நாடினால், துண்டு துண்டான
சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்
இந்த கவிதைகளைச் செவிமடுத்தப் பின் அபூஸுஃப்யான் குபைபிடம் உன்னை உனது குடும்பத்தாரிடம் விட்டுவிடுகிறோம். ஆனால், முஹம்மதை நாங்கள் கொன்று விடுகிறோம். இது உனக்கு விருப்பமா? என்று கேட்டார். அதற்கு நான் எனது குடும்பத்தில் இருக்க, முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிக்கும் விதமாக அவருக்கு முள் குத்துவதை கூட நான் விரும்பமாட்டேன்என குபைப் பதிலளித்தார். இதற்குப் பின் அவரை கழு மரத்தில் ஏற்றிக் கொன்றனர். அவர்களின் உடலை காவல் காக்க அங்கு சிலரை நியமித்தனர். ஒரு நாள் இரவில் அம்ர் இப்னு உமையா ழம்ரி என்பவர் அவரை கழு மரத்திலிருந்து இறக்கி நல்லடக்கம் செய்தார். பத்ர் போரில் குபைப் ஹாரிஸை கொன்றதால் அதற்குப் பதிலாக அவனின் மகன் உக்பா என்பவன் குபைப் அவர்களை கொன்றான்.
கொல்லப்படும் தருணத்தில் இரண்டு ரக்அத் தொழும் பழக்கத்தை முதலில் குபைப் தான் ஏற்படுத்தினார். மக்காவில் பழங்களே இல்லாமல் இருந்த காலத்தில் கைதியாக இருந்த குபைப் திராட்சைக் குலைகளைச் சாப்பிடுவதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். (ஸஹீஹுல் புகாரி)
ஜைது இப்னு தஸின்னாவை ஸஃப்வான் இப்னு உமைய்யா விலைக்க வாங்கி தனது தந்தை உமைய்யா பத்ரில் கொல்லப்பட்டதற்கு பதிலாக அவரைக் கொன்றான்.
முன்னால் கொல்லப்பட்ட ஆஸிமுடைய உடலின் ஒரு சில பகுதியையாவது எடுத்து வர குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை பத்ரில் கொன்றிந்தார். ஆஸிமை பாதுகாப்பதற்கு அல்லாஹ் தேனியைப் போன்ற சில வண்டுகளை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். தான் எந்த இணைவைப்பவனையும் தொடமாட்டேன்; எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக் கூடாதுஎன்று ஆஸிம் அல்லாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த வேண்டுதலையும் உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அல்லாஹ் முஃமினான (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட) அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
وبعث الرجيع هي سرية عاصم بن ثابت الأنصاري رضي الله عنه، وكان بعثه في صفر من السنة الرابعة - مايو سنة 625م -.
وسبب هذا أن بني لحيان من هذيل مشوا إلى عضل والقارة وهما قبيلتان من بني الهون بن خزيمة بن مدركة فجعلوا لهم إبلا على أن يكلموا رسول الله ﷺ أن يخرج إليهم نفرا من أصحابه فقدم سبعة نفر مظهرين الإسلام، فقالوا: يا رسول الله إن فينا إسلاما فابعث معنا نفرا من أصحابك يفقهونا في الدين ويقرئونا القرآن ويعلمونا شرائع الإسلام، وقيل: إنه ﷺ أراد أن يبعث عيونا إلى مكة ليأتوه بخبر قريش، فلما جاء هؤلاء النفر يطلبون من يفقههم، بعث معهم ستة من أصحابه للأمرين جميعا وهذه البعثة مؤلفة من - عاصم بن ثابت، مرثد بن أبي مرثد الغنوي، وخبيب بن عدي الأوسي البدري، وزيد بن الدَّثِنة، وعبد الله بن طارق، وخالد بن البكير.
خرج هؤلاء حتى أتوا الرجيع فغدروا بهم واستصرخوا عليهم هذيلا ليعينوهم على قتلهم، فلم يرع القوم وهم في رحالهم إلا الرجال بأيديهم السيوف، فأخذ عاصم ومن معه أسيافهم ليقاتلوا القوم، فقالوا: إنا والله لا نريد قتلكم ولكم عهد الله وميثاقه ألا نقتلكم، وقالوا ذلك لأنهم يريدون أن يسلموهم لكفار قريش ويأخذوا في مقابلتهم أجرا لعلمهم أنه لا شيء أحب إلى قريش من أن يأتوا بأحد من أصحاب محمد ﷺ يمثلون به ويقتلونه بمن قُتل منهم ببدر وأُحد، فأبوا أن يقبلوا منهم.
فأما مرثد وخالد بن البكير وعاصم بن ثابت فقالوا: والله لا نقبل من مشرك عهدا، وقاتلوا حتى قُتلوا، وأما زيد وخبيب وعبد الله بن طارق فلانوا ورقوا ورغبوا في الحياة فأعطوا بأيديهم فأسروهم ثم خرجوا بهم إلى مكة ليبيعوهم بها حتى إذا كانوا بالظهران انتزع عبد الله بن طارق يده من القرآن ثم أخذ واستأخر عنه القوم فرموه بالحجارة حتى قتلوه، فقبره بالظهران، وأما خبيب بن عدي وزيد بن عدي وزيد بن الدثنة فقدموا بهما مكة فباعوهما فابتاع خبيبا حُجير بن أبي إهاب التميمي حليف بني نوفل لعقبة بن عامر بن نوفل وكان حجير أخا الحارث بن عامر لأمه ليقتله بأبيه، وأما زيد بن الدثنة فابتاعه صفوان بن أمية ليقتله بأبيه أمية بن خلف وكان شراؤهما في ذي القعدة فحبسوهما حتى خرجت الأشهر الحرام فقتلوا زيدا، وأما خبيب فقد مكث أسيرا حتى خرجت الأشهر الحرام ثم أجمعوا على قتله، وكانوا في أول الأمر أساءوا إليه في حبسه فقال لهم: ما يصنع القوم الكرام هكذا بأسيرهم، فأحسنوا إليه بعد ذلك وجعلوه عند امرأة تحرسه وهي ماوية مولاة حجير وقد قالت ماوية: كان خبيب يتهجد بالقرآن فإذا سمعه النساء بكين ورققن عليه، فقلت له: هل لك من حاجة؟ قال: لا إلا أن تسقيني العذب ولا تطعميني ما ذُبح على النصب وتخبريني إذا أرادوا قتلي، فلما أرادوا ذلك أخبرته فوالله ما اكترث بذلك ولما خرجوا بخبيب من الحرم ليقتلوه قال: ذروني أصلِّ ركعتين، فتركوه فصلى سجدتين فجرت سُنَّة لمن قُتل صبرا أن يصلي ركعتين ثم قال خبيب: لولا أن يقولوا جزعَ لزدت وما أبالي على أي شِقَّي كان لله مصرعي ثم قال:
وذلك في ذات الإله وإن يشأ ** يبارك على أوصال شلو ممزع
«اللهم أحصهم عددا وخذهم بددا»، ثم خرج به أبو سروعة بن الحارث بن عامر بن نوفل بن عبد مناف فضربه فقتله، رحمه الله تعالى.
وعن عروة بن الزبير رضي الله عنه قال: لما أرادوا قتل خبيب ووضعوا فيه السلاح والرماح والحراب وهو مصلوب نادوه وناشدوه: أتحبّ أنّ محمدا مكانك؟ قال: والله ما أحب أن يفديني بشوكة في قدمه، وقيل: إن زيد بن الدثنة قالوا له ذلك أيضا عند قتله فأجابهم بمثل ذلك، فقال أبو سفيان رضي الله عنه: ما رأيت من الناس أحدا يحب أحدا كحب أصحاب محمدا محمدا، وقد قتل زيدا نسطاس.
وقد كانت هذيل حين قتل عاصم بن ثابت قد أرادوا رأسه ليبيعوه من سلافة بنت سعد بن شهيد وكانت قد نذرت حين أصاب ابنها يوم أُحد لئن قدرت على رأس عاصم لتشربن في قحف رأسه الخمر فمنعه الدبر - الزنابير - فلما حالت بينهم وبينه قالوا: دعوه حتى يمسي فتذهب عنه فنأخذه فبعث الله سيلا فاحتمل عاصما فذهب به، وكان عاصم قد أعطى الله عهدا ألا يمسه مشرك أبدا ولا يمس مشركا أبدا تنجسا منه، فكان عمر بن الخطاب يقول حين بلغه أن الدبر منعته: «عجبا لحفظ الله العبد المؤمن كان عاصم نذر ألا يمسه مشرك ولا يمس مشركا أبدا في حياته فمنعه الله بعد وفاته كما امتنع منه في حياته».

 இதே போல இன்னொரு நிகழ்ச்சி பிஃரு மவூனா

قال اليعقوبي
«بئر معونةوالمنذر بن عمرو الأنصاري على سرية إلى بئر معونة. و ذلك أن أسد بن معونة قدم على رسول الله بهدية من قبل عمه أبي براء بن مالك ملاعب الأسنة، وأهدى له فرسين و نجائب، وكان صديقا للنبي. فقال رسول الله: و الله لا أقبل هدية مشرك. فقال لبيد بن ربيعة: ما كنت أرى أن رجلا من مضر يرد هدية أبي براء. فقال: لو كنت قابلا من مشرك هدية لقبلتها منه. قال: فإنه يستشفيك من دبيلة في بطنة قد غلبت عليه. فتناول رسول الله جبوبة من تراب فأمرها على لسانه ثم دفها بماء ثم سقاه إياه، فكأنما انشط من عقال. وكان أبو براء سأل رسول الله أن يبعث إليه بنفر من أصحابه ليفقهوهم في الدين ويبصروهم شرائع الإسلام، فقال رسول الله: إني أخاف أن يقتلهم بنو عامر، فأرسل أبو براء انهم في جواري. فبعث إليه المنذر بن عمرو ونفرا من أصحابه في تسعة وعشرين عامتهم بدري. فأغار عليهم عامر بن الطفيل وتابعه ثلاثة أحياء من بني سليم رعل وذكوان وعصية فلذلك لعنهم رسول الله، وأقبل عامر إلى حرام بن ملحان، وهو يقرأ كتاب رسول الله، فطعنهبالرمح. فقال: الله أكبر فزت بالجنة. واقتتل القوم قتالا شديدا وكثرتهم بنو سليم، فقتلوا من عند آخرهم ما خلا المنذر بن عمرو فإنه قال لهم: دعوني أصلي على أخي حرام ابن ملحان. قالوا: نعم. فصلى عليه ثم أخذ سيفا وأعنق نحوهم فقاتلهم حتى قتل. وقال الحارث بن الصمة: ما كنت لأرغب بنفسي عن سبيل مضى فيه المنذر، والله لأذهبن فلئن ظفر لأظفرن ولئن قتل لأقتلن. فذهب فقتل وأعتق عامر بن الطفيل أسعد بن زيد الديناري عن رقبة كانت على أمه

பிஃரு மஊனா
ரஜீஃ என்ற இடத்தில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட துக்கமான நிகழ்ச்சிக்குப் பின் அதைவிட படுபயங்கரமான, ஒரு துக்கமான சம்பவம் நடந்தது. இதையே வரலாற்றில் பிஃர் மஊனா அசம்பாவிதம் என் குறிப்பிடப்படுகிறது. அதன் சுருக்கமாவது:
ஈட்டிகளுடன் விளையாடுபவன் என்றழைக்கப்படும் அபூபரா என்ற ஆமிர் இப்னு மாலிக் என்பவன் மதீனாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்நித்தான். நபியவர்கள் அவனுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுத்தார்கள். அவன் அதை ஏற்கவுமில்லை, அதை மறுக்கவுமில்லை. அவன் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நஜ்து மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்க என்னுடன் உங்களது தோழர்களை அனுப்புங்கள், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணுகிறேன்என்றான். அதற்கு நபியவர்கள் நஜ்துவாசிகள் எனது தோழர்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்கலாம் என நான் அஞ்சுகிறேன்என்றார்கள். அதற்க அபூபரா நான் அவர்களை பாதுகாப்பேன்என்றான். எனவே, நபியவர்கள் நாற்பது தோழர்களை அனுப்பினார்கள். இது இப்னு இஸ்ஹாக் (ரஹ்) உடைய கூற்று. ஆனால் எழுபது நபர்கள் என ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள எண்ணிக்கையே சரியானதாகும். இவர்களுக்கு ஸாயிதா குடும்பத்தைச் சேர்ந்த முன்திர் இப்னு அம்ர் என்பவரை நபியவர்கள் தலைவராக்கினார்கள். பிற்காலத்தில் இவர் முஃனிக் லியமூத்மரணமாக விரைந்தவர் என்று இவர் அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம், அவர் இந்நிகழ்ச்சியில் வீரமரணம் அடைய முதலாவதாக விரைந்தார். அனுப்பப்பட்ட தோழர்கள் அனைவரும் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களாகவும், குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர்களாவும் இருந்தனர். இவர்கள் பகலில் விறகு பொறுக்கி அதை விற்று திண்ணைத் தோழர்களுக்கு உணவு வாங்கி வருவர். இரவில் குர்ஆன் ஓதுவதும், தொழுவதுமாக தங்களது வாழ்வைக் கழித்து வந்தனர்.
இவர்கள் அவனுடன் புறப்பட்டு பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்தனர். இந்த இடம் ஆமிர் கிளையினருக்குச் சொந்தமான நிலத்திற்கும் ஸுலைம் கிளையினருக்கு சொந்தமான விவசாயக் களத்திற்கம் மத்தியலுள்ள நீர் நிலையாகும். அங்கு அனைவரும் தங்கிக்கொண்டு ஹிராம் இப்னு மில்ஹான் என்ற தோழரை நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொடுத்து ஆமிர் இப்னு துiஃபல் என்பவனிடம் அனுப்பினர். இந்த அல்லாஹ்வின் எதிரி அக்கடிதத்தை படிக்கவில்லை. அவன் சாடைக்காட்ட, ஒருவன் சிறு ஈட்டியால் ஹிராமைப் பின்புறத்திலிருந்து குத்தினான். தான் குத்தப்பட்டதையும், தனது உடம்பில் இரத்தம் வருவதையும் பார்த்த ஹிராம் அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப் பெரியவன், கஅபாவின் இறைவின் மீது சத்தியம்! நான் வெற்றி பெற்றுவிட்டேன்என்று கூறினார்.
அல்லாஹ்வின் எதிரியான அவன் எஞ்சிய மற்ற நபித்தோழர்களைக் கொல்வதற்கு ஆமிர் கிளையினரை அழைத்தான். ஆனால், அபூபரா இவர்களுக்கப் பாதுகாப்பு அளித்திருப்பதால் ஆமிர் கிளையினர் அதற்கு மறுத்து விட்டனர். பின்பு ஸுலைம் கிளையினரை அழைத்தான். ஸுலைமினரில் உஸைய்யா, ரிஃல், தக்வான் என்ற மூன்று வகுப்பினர் அவனது அழைப்பை ஏற்று அவனுடன் கிளம்பினர். இவர்கள் அனைநிகழ்நவரும் நபித்தோழர்களைச் சுற்றி வளைத்து நபித்தோழர்களுடன் சண்டையிட்டனர். இதில் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால், கஅபு இப்னு ஜைது இப்னு நஜ்ஜார் என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் பூமியில் சாய்ந்தார். இவர் இறந்துவிட்டதாக எதிரிகள் எண்ணினர். எதிரிகள் சென்ற பிறகு அவ்விடத்தில் இருந்து தப்பித்து மதீனா வந்தார். இவர் பின்னால் நடந்த அகழ் போரிலும் கலந்தார். அதில் எதிரிகளால் கொல்லப்பட்டார்.
தோழர்களில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரி, முன்திர் இப்னு உக்பா இப்னு ஆமிர் ஆகிய இருவரும் முஸ்லிம்களின் வாகனங்களை மேய்த்து வருவதற்க்காகச் சென்றிருந்தனர். அங்கிருந்து முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பிணந்தின்னி பறவைகள் வட்டமிடுவதை பார்த்து முஸ்லிம்களுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதை உணர்ந்தனர். உடனே அவ்விருவரும் அங்கு விரைந்தனர். எதிரிகள் தங்கள் தோழர்களை வஞ்சித்ததைப் பார்த்து பொங்கி எழுந்தனர். தாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்பதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்த்தனர். நீண்ட நேர சண்டைக்குப் பின் முன்திர் எதிரிகளால் கொல்லப்பட்டார். அம்ர் இப்னு உமையா கைதியாக்கப்பட்டார். அம்ர் முழர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரின் முன்னந்தலையை சிரைத்துவிட்டு எதிரிகளின் தலைவனான ஆமிர் தனது தாய் செய்திருந்த நேர்ச்சைக்காக அவரை உரிமையிட்டு விட்டான்.
இந்த இரு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் குனூத் ஓதி அல்லாஹ்விடம் உதவி தேடினார்கள்.
தஃவா பணியில் ஏற்படுகிற இடையூறுகளை சகித்துக் கொள்ளவே முஸ்லிம்கள் அறிவுறுத்தப் பட்டார்கள். கோப்ப் படவோ ஆத்திரப் பட வோ அல்ல.
ஆனால் அதே நேரத்தில் தஃவா பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு அல்லாஹ் சொன்ன முதல் அறிவுரை ஹிக்மத் எனும் புத்திசாலித்தனத்தை ஞான வழியை கடை பிடிக்க வேண்டும் என்பதாகும்.
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ
மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் கவனிக்க வேண்டிய வார்த்தை இது.

ஞான வழிகளில் மிக முக்கியமானது

நாமிருக்கிற இட்த்திற்கு மற்றவர்களை வரவழைத்து இஸ்லாமை எடுத்துச் சொல்வதாகும்.

அல்லது நமது சொல்லை கேட்கிற நிலையில் மற்றவர்கள் இருக்கிற போது இஸ்லாமை எடுத்துச் சொல்வதாகும்.

உம்மு சுலைம் ரலி அவர்களை தல்ஹா ரலி அவர்கள் திருமணம் செய்து கொள்ள சம்ப்ந்தப் பேசி வந்த போது உம்மு சுலைம் அம்மா தாஃவா செய்தார்கள். அபூ தல்ஹா இஸ்லாமை தழுவினார்
عن أنس قال خطب أبو طلحة أم سليم فقالت إنه لا ينبغي أن أتزوج مشركا أما تعلم يا أبا طلحة أن آلهتكم ينحتها عبد آل فلان وأنكم لو أشعلتم فيها نارا لاحترقت قال فانصرف وفي قلبه ذلك ثم أتاها وقال الذي عرضت علي قد قبلت قال فما كان لها مهر إلا الإسلام

அபூதல்ஹா  தேடி வந்த போது அவரது கடவுள்களைப் பற்றி பேசிய செய்திகளை உம்மு சுலைம் அம்மா பொது வெளியில் பேசியிருப்பார் எனில் நல்ல விளைவுகளுக்கு பதில் தீய விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு .
சமுதாயத்தில் பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் பெரும் அசம்பாவிதங்களையும் ஏற்படுத்துகிற பிரச்சார உத்திகளை தஃவா பணியில் ஈடுபடுவோர் தவிர்க்க வேண்டும்.
திருபுவனத்தில் நட்ட பெற்ற நிகழ்வு தமிழகத்தை பொருத்தவரை மதிப்பிழந்து வரக்கூடிய இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் சூழலில் இஸ்லாமிய பிரச்சாரம் என்பது பொது வெளிகளில் இஸ்லாமின் அழகுகளை வெளிப்படச் செய்வதும். இஸ்லாமை அறிந்து கொள்ள விரும்புகிற மக்களுக்கு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தருவதுமேயாகும்.
பொது வெளிகளில் போகிற வருவோரை கையைப் பிடித்து இஸ்லாமை எடுத்துச் சொல்கிறோம் என்று தடுப்பதும்.  இணக்கமற்ற மாற்று மதத்தவர்களின் வாழ்விடங்களுக்குச் சென்று இஸ்லாமிற்கு அழைப்பதும் . உதவி ஒத்தாசை செய்கிற இடங்களில் இஸ்லாமிய சமய அடையாளத்தை முன்னிலைப் படுத்துவதும் தவிர்க்கப் பட வேண்டிய அம்சங்களாகும்.
மதீனாவாசிகள் கேட்டுக் கொண்ட போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ் அப் ரலி அவர்களை அங்கு அனுப்பி வைத்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. மதீனா வாசியான அஸ் அது பின் ஜராரா ரலி அவர்களின் வீட்டில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வைத்துத்தான் முஸ் அப் ரலி அவர்கள் முஸ்லிம்களுக்கு குர் ஆனை கற்றுக் கொடுத்தார்கள் என்பதும் . அங்கு வந்து தான் மதீனாவின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமை தழுவினர் என்பதும் . அதன்காரணமாக மதீனா முஸ்லிம் நகராக மாறியிருந்தது  என்பது கவனிக்கத் தக்க விசயமாகும்.
இந்த் வரலாற்றில் தஃவா பணிக்கான ஏராளமான பாடங்கள் இருக்கின்றன.
இந்துத்துவ அமைப்புக்கள் தங்களை தமது சொந்த கொள்கைகளில் அடிப்படையில் நிலை நாட்டிக் கொள்ள முடியாத நிலையில் முஸ்லிம் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தியே எந்த ஒரு விசயத்திலும் அரசியல் செய்து வருகின்றனர். சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்ட போது கேரள மாநில பாஜக  தலைவர் பள்ளி வாசல்களுக்கு முஸ்லிம் பெண்களை அனுமதிக்க கோரி வழக்குத் தொடர்ந்தார்.
எனவே இந்த பாணியில் இவர்களது திட்டங்கள் அமைந்திருக்கிற நிலையில் முஸ்லிம்கள் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள்.
தஃவா பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அது பகிரங்கமாக செய்யப் படும் போதுதான் என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பிர் அவ்னுடைய சபையில் பகிரங்க பிரச்சாரம் செய்தவரை அல்லாஹ் பாதுகாத்தான்.
தஃவா பணியில் ஹிக்மத்தின் தேவையை தற்போதைய நிகழ்வு முஸ்லிம்களுக்கு உணர்த்தியிருக்கிறது.


























































  


No comments:

Post a Comment