வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 23, 2019

தோல்வி யாருக்கு ?



நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியை பெற்றிருக்கிறது, காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்திருந்க்கிறது,
அமேதியில் ராகுல் எப்படி தோற்றார் என்பது பெரிய விவாதமாகியிருக்க்றது.  எல்லா வகையான தகிடுதித்தங்களுக்கும் பழக்கப் பட்ட பாஜக தனக்கு வசதி வாய்ப்புள்ள இடங்களில் சந்தேகத்திற்கிடமின்றி ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி செய்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மடியில் இருந்த பயம் காரணமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் நாட்டில் பதட்டம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் 20 ஆயிரம் கட்சித் தொண்டர்களை கட்சி தலைமையகத்திற்கு வருமாறு pjp bகூறியிருக்கிறது.
ஆயினும் எந்தவித பதட்டமும் இல்லாமல் பாஜக அடுத் அரசை அமைக்க இருக்கிறது.
(அல்லாஹ் அவர்கள் ஜனநாயக வழிப்படி நடக்கச் செய்வானாக)
பாஜக வின் இந்த வெற்றி ஒரு வகையில் முஸ்லிம்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். சிறு அச்சம் கூட தோன்றலாம்.
ஆனால் அது தேவையற்றது
மக்களின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆட்சி அதிகாரம் அல்லாஹ் தீர்மாணிப்பது.
 قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26


அவனது தீர்மாணத்தில் ஏதோ ஒரு நன்மை இருக்கும்.

உஹது யுத்த்த்தில் முஸ்லிம்கள் தோற்றார்கள்

நபி உடன் இருக்கும் போது  தோல்வி வந்த்து எப்படி என்று சிலர் சிந்தித்தார்கள்.

அப்போது தான் பத்ரின் வெற்றியை பற்றிய வசனத்திஅ அல்லாஹ் அருளினான்.
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ ۖ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ - 
(இந்த வசனத்தை பெரும்பாலும் நாம் பத்ரைப் பற்றி பேசுகிற போது எடுத்தாள்கிறோம். உண்மையில் இது உஹதின் தொல்விக்குப் பிறகு இறங்கியது.

இந்த வசனம் தருகிற செய்தி என்ன ?

 இந்த முடிவுக்கும் காரணம் அல்லாஹ்தான்.

இனி நீங்கள், ஆட்சியாளர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதீர்கள் . அல்லாஹ்வைவே அஞ்சிக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை.

யார் அல்லாஹவை பயப்படாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.

அவர்கள் பிர் அவ்ன்களாக இருந்தாலும் கூட.

அதே போல தன நம்பிக்கை அற்றவர்களுக்கும் தோல்வி நிச்சயம் .
உண்மையில் தோற்றுப் போன்வர் யார் என்றால் யார் இனி போராட முடியாது என்று மனதை இழந்து விடுகிறாரோ அவரே உண்மையான தோல்வியாளர்

கைபர் கோட்டைகளை பெரும் சஹாபிகளால் வெற்றி கொள்ள முடியாமல் போன போது நாளை நான் ஒரு வரிடம் கொடியை கொடுப்பேன் அவர் வெற்றி பெறுவார் என்றார்கள் பெருமானார் (ஸல்) . அந்த வாசகம் தோழர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் அலி ரலி அவர்கள் கைபர் கோட்டையின் பெரும் கதவுகளை தனது கைகளாலேயே உடைத்தெறிந்தார்கள்

ஆப்ரகாம் லிங்கன் 17 தோல்விகளைச் சந்திந்த்த பிறகுதான் வெற்றி பெற்றார்

எனவே எந்த சூழலிம் தன்னுடைய உரிமைக்காக போராடும் குணம் கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும்.


அடுத்த்தாக பாஜகாவின் வெற்றிக்கு காரணம் என்ன ? என்பதை நாம் ஆராய வேண்டும்.


கடந்த 5 ஆண்டுகால பாஜக அரசின் அவலமான ஆட்சிக்குப் பிறகும் மக்கள் ஏன் பாஜக வை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்விக்கு மிக தெளிவாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது அவர்கள் உருவாக்கிய இந்துத்துவ உணர்வுதான்.
இந்துத்துவ உணர்வு பெருகுவதற்கு காரணம் முஸ்லிம்களின் மீதன வெறுப்புணர்வேயாகும்.
எனவே இந்த தேர்தலில் இருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய பாடம்இந்து மக்களிடம் பரவி வருகி இந்துத்துவ உணர்வை கட்டுப்படுத்த – முஸ்லிம்கள் மீது அக்கறையையும் அரவணைப்பையும் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இதில் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது.  எதிர்ப்புணர்வு பெரிய அளவில் பரப்ப்ப் பட்டு வருகிற சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகள்  
உடனடியாக வெற்றி பெறாது.

 சன்னம் சன்னமாக முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

பெருமானாரை பல யுத்தங்களில் சந்தித்த அபூசுப்யான் ரலி  பிற்காலத்தில் இஸ்லாமை தழுவினார் 


எனவே அல்லாஹ்வை அஞ்சி தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டிய திசையில் செயல் பட்டால் அல்லாஹ் சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக்குவான்.


----------------------

(பின்வரும் குறிப்புக்கள் 2014 ல் எழுதப்பட்டவை – தேவைக்கு தகுந்த மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)

எது எப்படி இருப்பினும் ஆட்சியதிகாரத்தை தீர்மாணிப்பவன்அல்லாஹ் தான் எனபதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.முஸ்லிம்களின் உள்ளத்தில் திடத்தையும் தெளிவையும்ஏற்படுத்துகிற சித்தாந்தம் இது.

மதினாவில் பெருமானார் (ஸல்அவர்களும் முஸ்லிம்உம்மத்தும் கூட்டணிப் படையினரின் (அஹ்ஸாப்)நெருக்கடிகளுக்கு ஆளாகியிருத சமயத்தில் அல்லாஹ்முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்த பிரார்த்தனை இது.

பிரார்த்தனை மட்டுமல்ல முஸ்லிம்கள் பிரதான அரசியல்கோட்பாடும் இதுவாகும்.
قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ263;

அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன்விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.

இந்த சத்தியக் கோட்பாட்டை அல்லாஹ் பெருமானாரின்வாழ்க்கையில் நிறைவேற்றினான்.

·                     மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறியமுஹம்மது நபி (ஸல்அவர்கள் எட்டுவருடத்தில்இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள்.அரசியல் அதிகாரம் என்ற வார்த்தை பிரயோகம்எதுவும் செய்யாமலே மாபெரும் அரசியலமைப்பை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸ்தாபித்தார்கள். அல்லாஹ்வின் விருப்பம் ஒன்றை மட்டுமே அதற்கு காரணமாக சொல்ல முடியும்.
·                      “ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர்” என்று தந்தைகத்தாபால் ஏசப்பட்ட உமர் (ரலிஇருபத்திரண்ட்ரைஇலட்சம் சதுர மைல்களை கட்டியாண்டார்கள்.
·                     வியாபாரியான உஸ்மான் (ரலிஅவர்களும்சாமாணிய கூலித் தொழிலாளியான அலி ரலிஅவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.

திருக்குர் ஆன் சில பழைய வரலாறுகளை சுட்டிக் காட்டுகிறது.
·                     கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால்கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் (அலைஎங்கோஇருக்கிற எகிப்தின் அரியனையைஅலங்கரித்தார்கள்.
·                      ஜாலூட்தின் (கோலியத்படையில் சாதரண கவன்அடிக்கும் வீர்ரான தாவூத் (அலைடேவிட் –இஸ்ரவேலர்களின் அரசரானார்
·                     எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நியாயமான தேர்தல் மூலம் வெற்றி பெற்ற பிறகும் - ஆட்சியில் அமர முடியவில்லை
·                     அமெரிக்க தாக்குதலுக்கு முன் யார் என்றே உலகிற்குதெரியாத ஹமீத் கர்சாய் தொடர்ந்துஆப்கானிஸ்தானின் அதிபராக 14 ஆண்டுகளாக (22 December 2001) பதவி வகித்து வருகிறார்.

இஸ்லாமிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தஆட்சித்தலைவர் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்).
அவர் ஒரு ஜும்  தொழுகைக்காக புகழ்வாய்ந்த டமாஸ்கஸ்நகரத்தின் உமய்யா ஜாமிஆ பள்ளிவாசலில் உட்கார்ந்திருந்தபோது அடுத்த ஆட்சியாளர் யார் என்பது பற்றி மன்னர்சுலைமான் பின் அப்தில் மலிக்கின்  வசிய்யத் படிக்கப் பட்டது.ஆட்சிக்குரியராக சுலைமானுடைய மகன் வலீத்கருதப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக  சுலைமானின்மச்சான் உமர் பின் அப்துல் அஜீசின் பெயர் அறிவிக்கப் பட்டது.
அதிர்ச்சியில் உமர் பின் அப்துல் அஜீஸ் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் என்று சொன்னார்.  
دابتيكفايتي وفسطاطي  أوسع لي
எனது கூடாரமே எனக்குப் போதுமானதுஎனது வாகனமேஎனக்கு அதிகம் “ என்றார்.

சுலைமான் பின் அப்துல் மலிக் நோயுற்று இருந்தகாரணத்தினால் அவருடைய தீர்மாணத்தை அதிகம் மறுக்கமுடியாத உமர் பின் அப்துல் அஜீஸ்ஆட்சிப் பொறுப்பைஏற்றபிறகு மக்களிடம் “எனது விருப்பமில்லாமலும்ஆலோசனை கலக்காமலும் என்னை அமீர் என்று அறிவித்துவிட்டார்கள் எனவே மக்களை நீங்கள் விரும்பினால் வேறுஒருவரை தேர்ந்தெடுக்கலாம்” என்று அறிவித்தார்.
மக்கள் பெரும் சப்தமெழுப்பி நீங்களே அரசராக இருக்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினர்இப்படித்தான்இஸ்லாமின் ஐந்தாம் கலீபா உமர் ஆட்சியதிகாரத்தைப்பெற்றார்.

بويع بالخلافة بعد وفاة سليمان بن عبد الملك وهو لها كاره فأمر فنودي في الناس بالصلاة، فاجتمع الناس بالمسجد الأموي بدمشق، فلما اكتملت جموعهم، قام فيهم خطيبًا، فحمد الله ثم أثنى عليه وصلى على نبيه ثم قال: "أيها الناس إني قد ابتليت بهذا الأمر على غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي، فاختاروا لأنفسكم خليفة ترضونه". فصاح الناس صيحة واحدةقد اخترناك يا أمير المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.

அல்லாஹ் ஆட்சியை கொடுப்பதும்அதை பறித்துக்கொள்வதும்  இமை மூடித்திறப்பதற்குள் நூலிழை அளவுகாரணத்தில் நிகழ்ந்து விடுகிறது.

அரசியல் கைதிகள் பிற்காலத்தில் ஆட்சிக்கு வருகிறார்கள்என்பது சகஜமானதுநெல்சன் மண்டேலாவை போலஅவர்.27ஆண்டுகள் சிறை இருந்த பின்னர் தென்னாப்பிரிக்காவின்புகழ் பெற்ற அதிபரானார்.
ஆனால் பொருளாதாரக் குற்றவாளியாக பல ஆண்டுகள் 1996 லிருந்து 2004 வரை சிறையிலிருந்த ஆசிப் அலி ஜர்தாரி ( பேநசீர்புட்டோவின் கணவர்) 2008 ல் பாகிஸ்தானின் அதிபரானா போது.ஆட்சியதிகாரம் யாருக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில்கணிப்புக்கள் காலாவதியாகி விடுகின்றன.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிலாந்துக்கு மகத்தான் வெற்றியை தேடித் தந்தவர் வின்ஸன் சர்ர்சில்ஆனால் அதை தொடர்து நடைபெற்ற தேர்தலில் அவர் தோற்றுப் போனார்உலகத் தலைவர்களை ஆச்சரியப் படவைத்த திருப்பம் அதுலேபர் கட்சியை சார்ந்த அட்லீ (Clement Attlee ) இங்கிலாந்தின் பிரதமரானார்.,  இந்தியா உட்பட காலனியாதிக்கத்தில் சிக்கித் தவித்த நாடுகள் சீக்கிரமாக சுதந்திரம் பெற அது காரணமானது.

இஸ்ரேல் என்றொரு நாடு இவ்வளவு வலிமை பெறும் என்றோயூதர்களுக்கு என்று ஒரு நாடு அமையும் என்றோ உலகத் தலைவர்கள் கூட 75 வருடங்களுக்கு முன்  கறபனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அது போல கடந்த நூற்றாண்டில் 1922 லிருந்து பூமியின் வரை படத்தை  ஆக்ரமித்திருந்த  USSR என்கிற சோவியத் யூனியன் 1991 ல் சிதறிப்போன போது அது மகா அதிசயமாக இருந்தது.   

இந்த நிகழ்வுகள் எல்லாம் கற்பனைக்கும் யூகங்களுக்கும்ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டவை அல்லாஹ்வின் மகத்தானசக்தியின் வெளிப்பாடுகள்.

ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது என்பதன் பொருள் அல்லாஹ் தான் இந்தியப் பிரதமராக வரவேண்டும் என்பதல்ல. 
ஆட்சியதிகாரம் முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்இருக்கிறதுஅவன் நாடுகிறவர்களே அதிகாரத்திற்குவருகிறார்கள் என்பதாகும்

ஒரு சமூகத்திற்கு நன்மையை நாடுகிற போது அல்லாஹ்சிறந்த ஆட்சியாளர்களை கொடுக்கிறான்,
அதே போல ஒரு சமூகத்திற்கு வேதனையை கொடுக்கநினைத்தால் அவர்கள் மீது தீய ஆட்சியாளர்களைஅல்லாஹ் ஏவீவிடுகிறான் என திருக்குர் ஆனியஅறிஞர்கள்  
قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ(65(6:

மேலெயிருந்து வருகிற தண்டன் என்பது (புயல் காற்று,கல்மழை போலதீய ஆட்சியையும் குறிக்கும் என முப்திமுஹம்மது ஷபீ சாஹிப் குறிப்பிடுகிறார்அதே போல கீழேஇருக்கிற ஏற்படுகிற தண்டனை என்பது பூகம்பம் நிலச்சரிவுபோல விசுவாசமற்ற வேலைக்காரர்களையும் குறிக்கும்என்றும் அவர் கூறுகிறார்.

தப்ஸீர் இபுனு கஸீரில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாக இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
إن ابن عباس كان يقول في هذه الآية "قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم" فأئمة السوء "أو من تحت أرجلكم" فخدم السوء -

அதாவது ஒரு மக்களுக்கு தண்டனையாக அல்லாஹ் தீயஆட்சியாளர்களை தருகிறான்தலைவர்களுக்குதண்டனையாக தீய தொணர்களை  தருகிறான் என்பத் இதன்கருத்து,
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் மழையை போலஅது அல்லாஹ் நமக்கு கொடுத்த கொடை என்றும் ஒருவேளைஆட்சியாளர்கள் தீயவர்களாக இருந்தால் அது அல்லாஹ் நமக்குவைத்த சோதனை என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.'

அதே போல எந்த ஆட்சியாளரையும் அவர் செய்கிறபணிகளை வைத்துத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர–  எடுத்த எடுப்பிலேயே அல்ல

இஸ்லாமிய அறிஞர்கள் தருகிற அற்புதமான கருத்து ஒன்றை இங்கு
நினைவில் நிறுத்திக் கொள்ள தவறக் கூடாது. 
பூமியில் அரசாட்சி செய்த பலரும் தமது ஆட்சிப் பிரதேசத்திற்கு நன்மை செய்கிறவரை அல்லாஹ்அவர்களை அனுமதிக்கிறான் என்றும் அவர்கள் அக்கிரம்ம்செய்யத் தொடங்குகிற போது அல்லாஹ் அவர்களிடமிருத்அதிகாரத்தைப் பறித்து விடுகிறான் ”,

·                     எகிப்தை ஆட்சி செய்த யூதர்கள் யூசுப் அலை காலத்தில் கன் ஆனிலிருந்து வந்து எகிப்தில் குடியேறிய வெளியூர்க்கார்ர்கள், சிறுபான்மையினர். அவர்கள் யூசுப் நபியை பின் தொடர்ந்து அவரைப் போல நீதியாளர்களாக ஆட்சி செய்யும் வரை எகிப்தின் அதிகாரம் அவர்களிடம் இருந்த்து. பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு கட்டுப்படுமாறு அல்லாஹ் செய்தான். பின்னால் வந்த யூதர்கள் அதிகாரம் தங்களது குடும்பச் சொத்து என்பது போல கருதி அக்கிரமம் செய்த போது அல்லாஹ் அவர்களது அதிகாரத்தை பறித்து கிப்திகளான பிர் அவ்ன்களிடம் கொடுத்தான். யூதர்கள் கொத்தடிமைகளாக்கப் பட்டார்கள்.
·                      இந்தியாவை முன்னர் ஆட்சிய செய்த உள்நாட்டுஅரசுகள் காலத்திற்கேற்ற ஆட்சியை தரமுடியாதுஎன்ற நிலையில் வெளியிலிருந்து வந்த படைஎடுப்பாளர்களிடம் அல்லாஹ் ஆட்சியைவழங்கினான்முகலாயர்களால் இந்தியாவிற்குநன்மை ஏற்பட்ட வரை அவர்களுக்கு அதிகாரத்தைகொடுத்த இறைவன்அவர்களால் தொடர்ந்து நாட்டைபராமரிக்க முடியாது என்ற நிலையில் அதிகாரத்தைஅவர்களிடமிருது பறித்து ஆங்கிலேயர்களிடம்அல்லாஹ்வே அதிகாரத்தை வழங்கினான்அவர்கல்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையாகஇருக்கிறவரை அனுமதிக்கப் பட்டார்கள்அவர்களதுஅக்கிரமம் எல்லையை கடந்த போது அந்த மகாசர்வாதிகாரச் சக்தியிடமிருந்த் அல்லாஹ் ஆட்சியைபறிந்த்துக் கொண்டான்.

அவர்கள் நீதியை நிலைநாட்டுகிறவர்களாக மக்களின் நலன்னபேணுகிறவர்களாக இருக்கும் வரை அனுமதிக்க்ப்படுவார்கள் .இல்லை எனில் தூக்கி எறியப்படுவார்கள்.
  
நீதியான அரசுகள் அமையும் என்றால் மக்கள் அதற்குகட்டுப்பட வேண்டும்

அநீதியான அரசுகள் அமையும் என்றால் மக்கள் அதைமாற்ற முயற்சி செய்ய வேண்டும். 

அநீதியான அரசு என்பது பாய்ந்து தாக்க வரும் புலியை விட கொடியது.

சீனத் தத்துவ அறிஞர் கான்பியூசஸ் தாய் மலையருகே ஒருபெண்மணியை சந்தித்தார்.
அவள் ஒரு சமாதியின் அருகே கதறிக் கொண்டிருந்தாள்.
கான்பியூஸஸ்   பெருங் கவலைக்கு ஆளானவள் போல்அழுகிறாயே ஏன்
பெண்           :“இதோ இந்த என் குழுந்தையின் கண்ணெதிரே ஒருபுலி என் கணவரையும் மாமனாரையும்சாப்பிட்டு விட்டது அவர்கள் இறந்துவிட்டார்கள்இந்தக் குழந்தையோ இருந்தும்இறந்தவன் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
கான்பியூஸ்ஸ்   :இத்தகைய அச்சம் சூழ்ந்த இடத்தில் இன்னும்ஏன் வாழ்ந்து   கொண்டிருக்கிறாய்?
பெண்           : இங்கே இருக்கிற அரசு அநியாயம் செய்கிறஅரசல்ல.  
கான்பியூஸ்ஸ் அந்த இடத்தை கடந்து சென்றார் அவரது வாய்முனுமுனுத்ததுஅநியாயமான் அரசு பாயும் புலியை விடக்கொடியது.

·                     ஒரு வேளை தற்போதைய தேர்தலில் பாஜக அரசுஅமையும் என்றால் அதை  முஸ்லிம்களுக்குஎதிரானதாக நாம் பார்க்கத் தேவையிலைஅச்சப்படவேண்டிய அவசியமும் இல்லைநம்முடையஅடிப்படை அதிகாரம் எதையும் அவர்களால் பறித்துவிட முடியாது.
·                     அதிகப் பட்சமாக முஸ்லிம்கள் மீது குரோத்த்தைஉண்டு பண்னவும் முஸ்லிம்களை அச்சப்படுத்திவைக்கவும் அவர்கள் முயற்சி செய்யக் கூடும்.
·                      
·                     அல்லாஹ்வை சரியாக பயந்து நடந்து கொள்கிறசமூகம் அவனை தவிர வேறு எந்தச் சக்திக்கும்பயப்படத் தேவையில்லை. அஞ்சாது.
·                     அதே நேரத்தில் அரசியல் ரீதியாக இன்னும் அதிகவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மட்டுமேநம்முடைய கடமையாகும்.
·                     அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனமாககண்காணிக்க வேண்டும்.
·                     அவர்களுடைய இரகசிய திட்டங்கள் இந்த நாட்டின்அடித்தட்டு மக்களுக்கு எதிரானவை இந்தியாவின்தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊரு விளைவிப்பைவைஎன்பதை பொது சமூகத்துக்கு புரிய வைக்க நாம்முயற்சி செய்ய வேண்டும் 
·                     அவர்களுடைய முயற்சி நமக்கு எதிராக குரோத உணர்வை ஏற்படுத்துவது, நாம் அதற்கு இடம் கொடுக்காமல் உணர்ச்சி வசப்படாமல் சகிப்புத்தன்மையோடு அதே நேரத்தில் காரியத்தை சாதிக்கிற சித்தியோடு செயலாற்ற வேண்டும்.
·                     நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிற சமூகம் வீறு கொண்டு எழும் என்பது தான் வரலாறு.  உரிமைகளையும் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்கு நியாயமாக நாம் செய்கிற எந்த முயற்சிக்கும் அல்லாஹ்வின் உதவியும் மக்களின் ஆதரவும் கிடைக்கும்.
·                     நாட்டு நலனில் அக்கறை கொண்ட மதச்சார்பற்றசக்திகளின் கரத்தை வலிமைப்படுத்தவும அவர்களுடனான நெருக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரளவிலும், மஹல்லாக்கள் அளவிலும்.
நிறைவாக ஒரு ஹதீஸை ஞாபகப்படுத்துகிறேன்
عن علي أن رسول الله صلى الله عليه وأله وسلم قال سألت ربي ثلاث خصال فأعطاني اثنتين ومنعني واحدة فقلت يا رب لا تهلك أمتي جوعا فقال هذه لك قلت يا رب لا تسلط عليهم عدوا من غيرهم يعني أهل الشرك فيجتاحهم قال ذلك لك قلت يا رب لا تجعل بأسهم بينهم فمنعني هذه. - الطبراني 
என சமூகத்தை பசியால் அழித்து விடாதே என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. என் சமூகத்தை வெளியிலிருந்து வரும் பகையால் அழித்து விடாதே முஷ்ரிக் களிடம் அடிமைப்படும் நிலையை ஏற்படுத்தி விடாதே என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. உட்கட்சி குழப்பத்தால் ஏற்படும் அழிவை ஏற்படுத்தாதே என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அல்லாஹ்விடம் கையேந்து வோம்.
ربنا لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا







                                      

No comments:

Post a Comment