வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 13, 2019

உயர்வுக்கு வழி



வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்பதே பலருக்கும் பிரதான இலக்காக இருக்கிறது.
வெற்றி பெறுவதற்காக சில நேரங்களில் முறைகேடாக கூட நடந்து கொள்ள பலரும் தயங்குவதில்லை.
போக்ஸ் வாகன் கார் கம்பெனி உலகின் மதிப்பு மிக்க கார் உற்பத்தியாளர்களாக இருந்தனர். அவர்களது கார் விற்பனை அதிகரிக்க அவர்களுக்கு மூன்று நிர்பந்தங்கள் இருந்தன.
பிரபலப்படுத்துவது
வசதிகளை அதிகமாக தருவது.
விலை குறைவாக இருப்பது
இந்த மூன்றையைய்ம் ஒரு சேர கடைபிடிப்பதில் இருக்கிற சிரமங்களை தாண்டி வெற்றி பெற வேண்டும்.
இந்தச் சூழலில் அவர்களுடைய காரில்ரிந்து வெறியேறும் நச்சுப் புகையின் அளவு அதிகமாக இருந்த்து. அதை குறைவாக வெளியே தெரிவது மாதிரி ஒரு தந்திரம் செய்து காரை விற்பனை செய்தனர். இந்த தந்திரம் வெளியே தெரிய வந்த போது கம்பெணி பொது அரங்கில் மன்னிப்புக் கேட்கிற நிலை வந்த்து.
வெற்றி மட்டுமே இலக்காக இருக்கிற போது இத்தகைய ஷார்ட் கட் உத்திகள் அதிகம் கையாளப்படுகின்றன.
விளையாட்டு வீர்ர்கள் சிலர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கிற நிலையில் ஊக்க மருந்து அருந்தியதாக தகவல் வெளிவருவதும் அவர்கள் பெற்ற பதக்கங்கள் பறிக்கப்படுவதையும் கூட நாம் பத்ரிகைகளில் படித்திருப்போம்.
அதனால் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையும் வேகமும் வாழ்கையில் உயர்வடைய வேண்டும் என்ற அடித்தளத்தில் அமைய வேண்டும்.
வாழ்கையில் உயர்வடைவது வெற்றியடைவதை சிறப்பானது.
நாம் வெற்றி பெறாதவராக கூட இருக்கலாம். ஆனால் சிறுமையடைக் கூடாது.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய கருத்து இது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் உயர்ந்த  அந்தஸ்தை பெறுவதற்கான மூன்று வழிகளை மிகச் சுருக்கமாகவும் அற்புதமாகவும் நமக்கு கூறிச் சென்றார்கள்.
சிந்திக்கச் சிந்திக்க ஏராளமான கருத்துக்களை சுரக்கும் அமுத சுரபிகள் இவை
وعن أبي هُريرة t: أَنَّ رسولَ اللَّه ﷺ قَالَمَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ للَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ U رواه مسلم.

உயர்வுக்கான முதல் வழி தர்ம சிந்தனை

நம்மிடம் இருப்பவற்றிலிருந்து பிறருக்கு வழங்கி வாழும் சிந்தனை தாராளமாக இருப்பது நிச்சயம் வாழ்வில் உயர்வை தரும்.

ஒரு போதும் அது வருமையை ஏற்படுத்தி விடாது.

இந்த உலகில் சிலர் செல்வந்தர்கள் பலர் செல்வத்தின் காவலர்கள்.
செல்வந்தர்கள் என்போர் தமது செல்வத்தை தம்க்கும் பிறருக்கும் – இந்த உலகிற்கும் மறுமைக்கும் பயன்படுத்துகிறவர்கள்.

செல்வத்தின் காவலர்கள் என்போர் பேங்க் பாலன்ஸையும்  கையிருப்பை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்போர்.

தேவையுடையொருக்கு வழங்கி வாழாமல் இருப்பதை இஸ்லாம் தடுக்கிறது.

اما السائل فلا تنهر

மக்காவில் ஹரமில் ஒருவர் – இங்கு நிறையப் பேர் யாசகம் கேட்கிறார்களே யார் உரியவர்கள் என்று ஒரு பெரியவரிடம் கேட்டார்.  உனக்கு உரியதை தான் இறைவன் உனக்குத் தந்தானா என பெரிய்வர் திருப்பிக் கேட்டார் . இல்லை என் தகுதிக்கு மீறி இறைவன் கொடுத்தான் என்றார் அவர் , பிறகு நீ என்ன தகுதி பார்ப்பது கேட்பவனுக்கு கொடு என்றார் அவர்

யார் நம்மிடம் வந்து கேட்டாலும் பிறர் கேட்கும் நிலையில் அல்லாஹ் நம்மை வைத்திருக்கிறானே என்ற  மகிழ்ச்சியில் வழங்கிட வேண்டும்.

அதிக நேரம் யோசிப்பது கூட தர்மத்திற்கு தடையாகிவிடும்.

இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்று கொண்டிருந்த போது ஒருவர் ஜுப்பா இருந்தால் கொடுங்கள் என்று கேட்டார். அப்போதே ஜுப்பாவை கழட்டிக் கொடுத்தார்கள். உடனிருந்தவர்கள் சிறுநீர் கழித்து விட்டு வந்து பிறகு கொடுக்கலாமே என்றார்கள்
அதற்குள் அந்த எண்ணம் மாறிவிடலாம் என இமாம் பதிலளித்தார்கள்.

ஒரு காலத்தில் தாய மார்கள் வீடுகளில் சோறு சமைக்க அரிசி போடுகிற போது ஒரு பிடி அரிசியை ஏழைகளுக்கு என்று தனியாக ஒதுக்கி வைப்பார்கள். அத்த ஏழைகளுகும் மதரஸாக்களுக்கும் கொடுப்பார்கள்.  இது போன்ற அன்றாடம் செய்து வந்த அற்புதமான தர்மங்களின் சூழல் இப்போது அருகி விட்ட்து.
நபி ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
தனது ரிஜ்கிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்வான்.

தர்மங்கள் குறைகிற போது அல்லாஹ் நமது தேவைகளை அதிகப்படுத்தி விடுகிறான். சம்பாதிப்பதெல்லாம் தேவைகளுக்கே சரியாகிவிடும்.

தர்மங்களின் பரக்கத் என்பது ஆகிரத்தில் மட்டுமல்ல இந்த உலகிலும் உண்டு.

மூஸா அலை அவர்களிடம் ஒரு ஏழை நீங்கள் தூர் மலைக்கு செல்கிற போது எனக்கு எவ்வளவு ரிஜ்கு உண்டோ அதை ஒரே தடவையில் தந்துவிடுமாறு நீங்க பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே மூஸா அலை பிரார்த்தனை செய்தார். அவருக்கு கொஞ்சம் கோதுமையும் சில ஆடுகளும் கிடைத்தன. சில நாட்கழித்து மூஸா அலை அவர்கள் அம்மனிதரை பார்க்க வந்த போது அவர் பெரும் மாளிகையில் இருந்தார்.  தோட்டந்துறவுகளும் பெரும் பண்ணைகளும் அவருக்கிருந்தன. மூஸா அலை அவர்கள் இறைவா இவருக்கு விதிக்கப்பட்ட்தை எல்லாம் கொடுத்தாயே இப்போது எப்படி பெருகியது என்று கேட்டார். அல்லாஹ் கூறினான். இவர் தனது ரிஜ்கை தனக்காக மட்டுமே தர்மம் செய்திருப்பார் எனில் அவருக்குரியது அவ்வளவே . இவர் தனது செல்வத்தை பிறருக்காக செலவழித்தார். அதனால் அதில் ஏற்பட்ட பரக்கத் இது

தர்ம சிந்தனை கொண்டவர்கள் தர்ம்ம் செய்ய நினைத்தாலே நன்மை கிடைக்கும்.

யூதர்களூக்கு ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்ட்து. மக்கள் அதில் பலியாகியும் கொண்டிருந்தனர். ஒருவர் உணவை தேடி ஊருக்கு வெளியே சென்றார். ஒரு மலையை பார்த்தார். இந்த மலையளவு தானியங்கள் இருந்தால் இந்த ஊர் மக்களின் பசியை போக்கி விடலாமே என்று நினைத்தார். அல்லாஹ் உடனே ஒரு மலக்கை அனுப்பி அந்த மனிதரின் கணக்கில் ஒரு மலையளவு தானியம் தர்ம்ம் செய்த்தாக எழுதுமாறு கூறினான்.  

மரண பயம் நீங்கும் வழி தர்ம்ம்.

ஒரு நபித்தோழர் பெருமானாரிடம் எனக்கு மரணத்தை ப் பற்றி பயமாக இருக்கிறது என்றார். அதிகம் தர் மம்  செய்யுங்கள் என பெருமானார் கூறினார்கள். அவர் நிறைய தர்ம்ம் செய்தார். பின்னொரு தடவை அவரைச் சந்தித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போது உங்களது பயம் எப்படி இருக்கிறது என்றார் அவர் இப்போது அந்த பயம இல்லை  இதயம் மரணத்தை  விரும்புகிறது என்றார்.  பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனித மனம் எதை மூலதனம் என்று கருதுகிறதோ அதிலேயே படிந்திருக்கும். உலகை மூலதனமாக நினைக்கிற போது அதிலும் மறுமையை மூலதனமாக நினைக்கிற போது அதிலும் படிந்திருக்கும் என்றார்கள்

செல்வத்தை சேகரிப்பதிலேயே இதயத்தை பறிகொடுத்திருப்பவர்கள் கடைசியில் வாழ்கையின் மதிப்பை தவறவிட்டு விடுவார்கள்.

இரண்டு பேருக்கு அவர்களுடைய நிலத்தில் நடுவில் இருந்த ஒரு மரத்தை பற்றி வழக்கு இருந்த்து. அந்த வழக்கு நீதிமன்றம் சென்றது. வழக்கு செலவிற்காக இருவரும் தங்களது நிலம் மொத் த்த்தையும் விற்றார்கள். கடைசியில் நீதிபதி மரத்தை சரிபாதியாக வெட்டி ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். மரம் கூட அவர்களில் ஒருவருக்கும் முழுசாக கிடைக்க வில்லை.

பல நேரங்களிலும் மனிதர்கள் இப்படித்தான் பெருளைச் சேமிக்கிற ஆசையில் குருடர்களாக ஆகிவிடுகின்றனர்,

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த குருட்டுத்தனத்தை தான் உடைத்தெறிகிறார்கள். தர்மத்தால் செல்வம் ஒரு போதும் குறைந்து விடாது.

வளரும்.

செல்வம் மட்டும் அல்ல. அந்தஸ்தும் உயரும்.

இந்தியாவின் தொழிலதிபர்களில் இரண்டு பேர் மிகவும் பிரபலமானவர்கள்

ஒருவர் முகேஷ் அம்பானி

இன்னொருவர் விப்ரோ நிறுவனத் தலைவர் அஜீம் பிரேம்ஜீ

முகேஷ் அம்பானி பணத்தில் பெரியவர்.  அஜீம் பிரேம்ஜி மனதில் பெரியவர்.
அவருடைய சொத்தில் பாதியை தரமம்  செய்து விட்டார். இன்று இந்தியாவில் மிகப்பெரிய தர்ம கர்த்தா அஜீம் பிரேம்ஜி தான்.

அதனால் அவருக்குத்தான் உலகில் மதிப்பு அதிகம்.

வழங்கி வாழ்பவர்கள் நிச்சயம் குடும்பத்தில் சமூகத்தில் அரசியலில் மிக உயர்ந்த அந்தஸ்தை பெறுவார்கள்.

وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا

பொதுவாக சமூகத்தில் சண்டை ச்ச்சரவுகள் பெருக்க் காரணம் மன்னிக்கும் மனப்பான்மை இல்லாமல் போவதுதான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் மன்ப்பான்மையால் மிக உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார்கள்.

இப்ராஹீம் பின் அத்ஹம் அரசராக இருந்து அனைத்தையும் துறந்தவர். அவரது முதுமைக் காலத்தில் ஒரிட்த்தில் திரண்ட இளைஞர்கள் ஒரு படகில் பயணம் செய்ய ஆயத்தமாயினர். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹமை கவனித்த அவர்கள் இந்தப் பெரியவரை நாம் தூக்கி படகில் போட்டுக் கொண்டால் இவரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக தூக்கி படகில் இருத்தினர். போகும் வழியல்லாம் வேடிக்கை பேசுவதும் அந்த முதியவரின் தலையில் தட்டி சிரிப்பதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் இப்ராஹீம் பின் அத்ஹம் அவர்களது பொறுமை எல்லை மீறிய போது இப்படி ஆட்டம் போடுகிறார்களே இவர்களின் படகை கொஞ்சம் ஆட வைத்தால் என்ன என்ற சிந்தனை தோன்றியது, உடனே மனம் பதைத்து அல்லாஹ்விடம் கையேந்தினார்கள் , இறைவா !  இவர்களை அச்சுறுத்தி என்ன பலன் ஏற்படப் போகிறது . இவர்களது மனப் படகை சத்தியத்தை நோக்கி திருப்புவாயாக என்று துஆ செய்தார்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்  வாழ்கையில் எத்தனை உயரத்திற்கு செல்வார்கள் என்பதற்கான உதாரணம் இது.

وَمَا تَوَاضَعَ أَحَدٌ للَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ

இந்த உலகில் சாதாரணமாக மனிதர்கள் சிறிய அளவிலான மரியாதையை எதிர்பார்க்கிறார்கள்.

நாத்தனார் மதித்து விட்டால் பெண்களுக்கு அது போதும்.
அதிகாரி மதித்து விட்டால் ஆண்களுக்கு அது போதும்.

அது போல நகை அணிந்து விட்டால், ஒரு மாளிகை கட்டி விட்டால் ஒரு பெரிய கார் வாங்கி விட்டால் அதை கண்ணியம் என்று நினைக்கிற பழக்கம் தான் பெருவாரியாக இருக்கிறது.

உண்மையில் கன்ணியம் என்பது நன்மைகள் செய்கிற போது – பற்றின்மையோடு வாழ்கிற போது, அல்லாஹ்வை வணங்கி வாழ்கிற போது கிடைப்பதாகும்.

பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆசிப் அலி ஜர்தாரி மோசடிக் குற்றச் சாட்டில் இப்போது கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருக்கீறார்.

ஒரு காலத்தில் தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தவர் இன்று முதல் குற்றவாளி என்றால் கண்ணியம் எது என்பதை யோசிக்க வேண்டும்

எனவே முதலில் அந்தஸ்து என்பது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மிஃராஜை விட இந்த உலகில் மனிதர்களுக்கு கிடைக்கிற சிறப்பான அந்தஸ்து வேறொன்று இருக்காது.

அது யாருக்கு கிடைத்த்து.

அப்துஹூ என்ற அல்லாஹ்வின் அடிமையாக நடந்து கொணடவருக்கே கிடைத்த்து.

எங்கும் யாரிடமும் பணிவாக நடந்து கொள்வது வாழ்வில் நமது அந்தஸ்தை உயர்த்தும்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!



No comments:

Post a Comment