வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 18, 2019

கபூலிய்யத்தில் கவனம்


நற்காரியங்களை செய்வது அல்லாஹ் கொடுக்கும் ஒரு பெரும் வாய்ப்பு.
அந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரிக்கும் போது தான் அந்த வாய்ப்பு பரிபூரணம் பெறுகிறது.
அதனால் நற்செயல்களைச் செய்கிற போது - அது எவ்வளவுதான் பெரிய காரியமாக இருந்தாலும் – அதை  அல்லாஹ்  அங்கீகரிக்க   வேண்டும் என்பதுதான் முக்கியம்.
யாருமற்ற இட்த்தில் மிகுந்த முயற்சி எடுத்து கஃபாவை கட்டி முடித்த பிற்கு இபுறாகீம் நபி கேட்ட  துஆ இது,
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ (127

ஒரு பெரும் பணியை செய்த நபி மார்களே கபூல் குறித்து கவலை படுகிறார்கள்.


அல்லாஹ்வுக்காக தனது வயிற்றிலிருக்கும் குழந்தையை அர்ப்பணித்த போது இம்ரானின் மனைவி கவலைப் பட்ட்து.

.. رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ}[آل عمران:35

அமல்கள் செய்வதை விட அதிக முக்கியத்துவத்தை கபூல் பற்றிய கவலைக்கு தர வேண்டும்,

 وقد روي عن علي رضي الله عنه قال: كونوا لقبول العمل أشد اهتماما منكم بالعمل ألم تسمعوا الله عز وجل يقول: {إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ}.  

எனது ஒரு அமல் அங்கீகரிக்கப் பட்டு விட்ட்து என நான் அறிவேன் எனில் உடனே மரணித்து விட விரும்புகிறேன் என்றார் இப்னு உமர் ரலி

جَاءَ سَائِلٌ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ لِابْنِهِ أَعْطِهِ دِينَارًا فَقَالَ لَهُ ابْنُهُ تَقَبَّلَ اللَّهُ مِنْكَ يَا أَبَتَاهُ فَقَالَ لَوْ عَلِمْتُ أَنَّ اللَّهَ تَقَبَّلَ مِنِّي سَجْدَةً وَاحِدَةً أَوْ صَدَقَةَ دِرْهَمٍ وَاحِدٍ لَمْ يَكُنْ غَائِبٌ أَحَبَّ إِلَيَّ مِنَ الْمَوْتِ، أَتَدْرِي مِمَّنْ يَتَقَبَّلُ اللَّهُ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ".

كان ابن مسعود يقول: "لأن أَكُونُ أَعْلَمُ أَنَّ اللَّهَ تَقَبَّلَ مِنِّي عَمَلًا أحب إليّ من أن يكون لي ملء الأرض ذهبا".


அமல் செய்து விட்டு அச்சப்படுகிறவர்களே முந்திநிற்பவர்கள்.

سألت أم المؤمنين عائشة -رضي الله عنها- رسول الله صلى الله عليه وسلم عن هذه الآيةوَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ) [المؤمنون:60] أهم الذين يشربون الخمر، ويسرقون؟" قال: "لا يا ابنة الصديق، ولكنهم هم الذين يصومون، ويصلون، ويتصدقون، وهم يخافون ألا تُقبل منهم"، (أُوْلَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ) [المؤمنون:61].

அமல்கள் அங்கீகாரம் பெற தேவை 3  

இக்லாஸ்
இத்திபாஃ
இஹ்திமாம்

1 மனத்தூய்மை

அல்லாஹ்வுக்காகவே என்று செய்யப்படும் அமல்கள் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறுகின்றன.

குர் ஆன் ஓதிக் கொண்டிருந்த இப்றாகீம் அன்னகயீ – ஒரு ஆள் அவரை பார்க்க வந்த்தும் குர் ஆனை மூடிவிட்டார்.

قال الأعمش : كنت عند إبراهيم النخعي وهو يقـرأ في المصحف ، فاستأذن عليه رجل فغطّى المصحف ، وقال : لا يراني هذا أني أقرأ فيه كل ساعة
 .
இமாம் மாவர்தீ ஏராளமான தப்ஸீர் பிக்ஹு நூற்களை எழுதினார். எதையும் வெளியே மக்களுக்குச் சொல்லவில்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒரு மனிதரிடம் மாவர்தீ கூறினார்.  நான் எழுதிய நூல்களை இன்ன இடத்தில் வைத்திருக்கிறேன். எனக்கு சகராத் வருகிற போது , எனது கையை பிடித்துப் பார் நான் கையை மூடியிருந்தால் எனது நூல்கள் அங்கீகரிக்கப் படவில்லை என்று பொருள். அவற்றை திஜ்லா நதியில் வீசி விடு. எனது கை திறந்து கொண்டால் அவற்றை அல்லாஹ் அங்கீகரித்து விட்டான் என்று பொருள் . அதை மக்களுக்கு தெரிவித்துவிடு என்றார். இமாம் மாவர்திக்கு  மரணம் நெருங்கிய போது அவரது கையை பார்த்த போது அது திறந்திருந்நது.

لإمام الماوردي قصة في الإخلاص في تصنيف الكتب، فقد ألف المؤلفات في التفسير والفقه وغير ذلك ولم يظهر شيء في حياته لما دنت وفاته قال لشخص يثق به: الكتب التي في المكان الفلاني كلها تصنيفي وإنما إذا عاينت الموت و وقعت في النزع فاجعل يدك في يدي فإن قبضت عليها فاعلم أنه لم يقبل مني شيء فاعمد إليها وألقها في دجلة بالليل وإذا بسطت يدي فاعلم أنها قبلت مني وأني ظفرت بما أرجوه من النية الخالصة، فلما حضرته الوفاة بسط يده ، فأظهرت كتبه بعد ذلك 

2 இத்திபா

மார்க்கம் எதை எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னதோ அதை அப்படியே செய்ய வேண்டும்.

நற்செயல்கள் என்றாலும் அதை நாம் விரும்பும் படி செய்யக் கூடாது,. செய்தால் அது நற்செயலாகாது. பிறகு அங்கீகாரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் ?

அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலி அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வியாழக்கிழமை மூஃதா யுத்த்த்திற்கு தலைமை ஏற்குமாறு சொல்லி அனுப்பினார்கள் . ஜைது பின் ஹாரிதா தலைவராக இருப்பார். அவர் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா தலைவராக இருப்பார். அவரும் கொல்லப்பட்டால் ஜாபர் பின் அபீதாலிப் தலைவராக இருப்பார் என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் ரவாஹாவுக்கு தான் கொல்லப் படுவோமென்று தெரிந்து விட்டது.  அவரிடம் விரைவாக செல்லக் கூடிய ஒரு குதிரை இருந்தது, 

அப்துல்லாஹ் நினைத்தார். நாளை ஜும் ஆவை பெருமானாருக்குப் பின்னால் நின்று தொழுது விட்டு நாம் விரைவாக சென்று படையை அடைந்து விடலாம். என்று நினைத்தார்.

ஜும் ஆவிற்குப் பின் அவரைப் பார்த்து விட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றவர்கள் காலையில் சொர்க்கம் சென்றால் நீ மதியத்திற்கு மேல் தான் சொர்க்கம் செல்வாய்

இப்போது மக்களில் சில ர் குர்பானி கொடுக்கிற காசை ஏழைகளுக்கு , படிப்புக்கும் திருமணத்திற்கும் வழங்கினால் என்ன ? என்று நினைக்கிறார்கள்.

அது தவறான சிந்தனை

மார்க்கம் எதை நன்மை என்று சொன்னதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.

ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றுகிறவர்கள். எது அமலோ அதை மட்டுமே செய்ய வேண்டும். மார்க்கத்தில் இல்லாத்தை நற்செயல் என்று கருதி செய்யக் கூடாது.

ஹஜ்ருல் அஸ்வதை முத்த மிட பெண்களை ஆண்களது கூட்ட்த்திற்குள் சிலர் திணிக்கிறார்கள். சில பெண்கள் பர்தாவை பேணாமல்  தவாப் செய்கிறார்கள். சிலர் ருக்னே யமானியை விழுந்து விழுந்து முத்தமிடுகிறார்கள். (ருக்னே யமானியை தொட மட்டுமே செய்ய வேண்டும், )
இது போல இன்னும் பல.

எச்சரிக்கை !

எது மார்க்கமாக சொல்லித்தரப்பட்ட்தோ அதை செய்கிற போது தான் கபூல் ஆகும்.

கபூலுக்கான மூன்றாவது நிபந்தைனை இஹ்திமாம் – கவனம் எடுத்துச் செய்தல்

கவனமில்லாமல் தொழுகிற தொழுகையாளிகளை அல்லாஹ் சபிக்கிறான்.

கஃபாவில் உருக்கமாக  ஒருவர் துஆ செய்து கொண்டிருந்தார். மூஸா அலை அவர்களுக்கு அவரது துஆ ஏற்கப்பட வில்லை என்று தெரிந்த்து, யா அல்லாஹ் இவ்வளவு உருகி உருகி பிரார்த்திக்கிறாரே என மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்கள் . அல்லாஹ் சொன்னான். அவருடைய கவனம் வாசலில் கட்டி வைக்கப் பட்டிருக்கிற ஆடுகள் மீது இருக்கிறது. இதை அந்த மனிதருக்கு மூஸா அலை தெரிவித்த போது அவர் ஒத்துக் கொண்டார். பிறகு அவர் துஆவில் கவனமாக கேட்ட போது அல்லாஹ் அவரது பிரார்த்தனை ஒப்புக் கொண்டார்.

எந்த அமைலையும் ஏனோ தானோ என்று செய்யக் கூடாது.

ஹஜ் போன்ற பெரிய அமல்களை இன்னும் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.   

குர்பானி போன்ற  பெரிய அமல்கள் ஒவ்வொன்றிலும் இந்த  அம்சங்களை கவனிப்பது முக்கியம்,

தனது மகளின் திருமணத்தின் போது ஒரு ஏழைக்கு திருமணம் செய்து வைத்தார் . ஒரு செல்வந்தார். ஆனால் இதை பெரிய வீளம்பரப் படுத்தினார். ஒரு ஏழைப் பெண்ணின் கண்ணீரை  துடைத்து அவளது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது என்பது மிகப்பெரிய நற்காரியம் அதற்கு நன்மை கிடைக்காமல் போகாது. ஆனால் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அது பெரும்பாக்கியமாக ஆகும். இல்லை எனில் வேறு வகையில் அதற்கான கூலியை தந்து அல்லாஹ் அதை தள்ளி விடக் கூடும்.

நற்செயல்களை அதற்குரிய கூலியோடு பெற்றுக் கொள்ள அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

  


No comments:

Post a Comment