வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 25, 2019

பஜ்ரு தொழுகையும் முஸ்லிம்களின் விடியலும்.

திருக்குர் ஆனில் அல்லாஹ் துல் ஹ்ஜ் மாத்தின் முதல் பத்து நாட்கள் குறித்து சத்தியம் செய்கிற போது பஜ்ரு நேரத்தை பிரதானமாக கூறுகிறான்.

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2)

விடியலை தேடி என்பது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பெரும் முழக்கமாக  இருக்கிறது

பஜரு என்ற வார்த்தை தவிர அதற்கு வேறு சிறந்த விடை ஏதுவுமில்லை
தொழுகை தான் இஸ்லாத்தின் பிரதான அடையாளம்.
اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ) العنكبوت/45 .
قال رسول الله (ص): العهد بيننا و بينكم الصلاة, من تركها فقد كفر.

தொழுகை தான் வாழ்கையில் பரக்கத்திற்கு காரணம்.

فعن جابر بن عبدالله رضي الله عنهم قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قضى أحدكم الصلاة - (المراد بها الصلاة الفريضة) - في مسجده، فليجعل لبيته نصيبًا من صلاته، فإن الله جاعل في بيته من صلاته خيرًا؛ رواه مسلم وغيره.

தொழுகையால் வாழ்க்கை வெளிச்சமாகும்

عن أبي مالك الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والصلاة نور؛ رواه مسلم 


கியாமத் நாளின் முதல் விசாரணை தொழுகையைப் பற்றித்தான்.

عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أول ما يحاسب به العبد يوم القيامة عن عمله صلاته؛ رواه الترمذي

பெருமானாரின் கடைசி அறிவுரை தொழுகையப் பற்றியதே!


وروى ابن ماجه وغيره عن أم سلمة رضي الله عنها، قالت: إن رسول الله صلى الله عليه وسلم كان يقول في مرضه الذي توفي فيه: الصلاة وما ملكت أيمانكم، فما زال يقولها حتى ما يَفيضُ لسانه.

தொழுகை சரியில்ல்ல எனில் வேறெதுவும் சரியிருக்காது என்ற உமர் ரலி


وقد كان عمر يكتب إلى الآفاق أن أهمَّ أمورهم عنده الصلاة، فمن حفِظها حفِظَ دينَه، ومن ضيَّعها فهو لما سواها أضيع، 

தொழுகை முஃமின்களின் அதிக நேசத்திற்குரிய ஒர் அமல் ஆகனும்

عن أنس رضي الله عنه قال قال رسول الله : وجعلت قرة عيني في الصلاة)

பெருமானாருக்கு ஒரு கவலை ஏற்பட்டால் தொழுக நின்று விடுவார்கள்.

أن الرسول صلى الله عليه وسلم كان إذا حزبه أمر فزع إلى الصلاة) فهذا الحديث أخرجه أبو داود (1319

இமாம் புகாரியின் உஸ்தாத் ஸாபித் (ரஹ்) அவர்களுடைய கபருக்கு பக்கத்தில் இன்னொரு கப்ரை ஒருவர் வெட்டிக் கொண்டிருந்தார். ஸாபித் ரஹ் அவர்களின் கப்ரின் சுவர் சரிந்த்து. அதில் தெரிந்த காட்சியை பார்த்த வெட்டியான் ஸாபித் ரலி அவர்களின் வீட்டை நோக்கி ஓடினான். சாபித் ரலி அவர்களின் மகளை அழைத்து கூறினான். உங்களுடைய தந்தை கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்.
ஸாபித் ரஹ் அவர்களின் மகள் அல்லாஹ்வை புகழ்ந்தார். எனது தந்தை கப்ரிலும் தொழுகிற பாக்கியம் வேண்டும் என்று அல்லாஹ்வை கேட்டுக் கொண்டிருந்தார். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான்,


அவுரங்கசீப் யுத்த களத்திலும் யானையின் நிழலில் தொழுவார் என்கின்றது இந்திய வரலாறு. அதைப் பார்த்த எதிரி நாட்டி அரசன் யுத்த்த்தை முடித்துக் கொண்டான். இவரோடு யுத்தம் செய்து ஜெயிக்க முடியாது என்று கூறினாராம்.

பத்று யுத்த்த்திற்கு முந்தைய இரவில் முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்தார்கள்.  எதிரிகளுக்காக முஸ்லிம்கள்ள உளவு பார்க்க வந்த உமைர் பின் வஹம் இந்தக் காட்சியை பார்த்து விட்டு எதிரிகளிடம் சென்று கூறினார்.

  فقال : ما وجدت شيئا ، ولكني قد رأيت ، يا معشر قريش ، البلايا تحمل المنايا ، نواضح يثرب تحمل الموت الناقع ، قوم ليس معهم منعة ولا ملجأ إلا سيوفهم ، والله ما أرى أن يقتل رجل منهم ، حتى يقتل رجلا منكم ، فإذا أصابوا منكم أعدادهم فما خير العيش بعد ذلك ؟ فروا رأيكم 

வியபாரத்தில் கிடைக்கும் பெரும் இலாபத்தை விட இரண்டு ரகாத் நபில் தொழுகையை சிறந்த்தாக பார்க்கும் பார்வையை பெருமானார் (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு கற்றுத் தந்தார்கள்

وعن عبدالله بن سلمان عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال: جاء رجل يوم خيبر إلى النبي صلى الله عليه وسلم، فقال: يا رسول الله، لقد ربحتُ اليوم ربحًا ما ربحه أحد من أهل هذا الوادي. قال: ويحك وما ربحتَ؟ قال: ما زلتُ أبيع حتى ربحتُ ثلاثمائة أوقية، فقال له صلى الله عليه وسلم: أفلا أُنبئك (أي: أُخبرك) بخير ربح؟ فقال: ما هو يا رسول الله؟ قال: ركعتين بعد الصلاة؛ أخرجه أبو داود

பஜ்ரு – எல்லாவற்றிற்கும் விடியல்.


ஐந்து நெர தொழுகைகளில் பஜ்ரு மிக்ப் பிரதானமானது.

 முஸ்லிம் சமூகம் இது விசயத்தில் மிகவும்
அசிரத்தையாக இருக்கிறது. தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் இது மிகவும் கவலைக்குரிய ஒரு நிலையாகும்.

7 மணிக்கு மேல் எழுந்திருத்தல் என்பது இஸ்லாமிய குடும்பத்திற்குரிய குணமல்ல.

பஜரு தொழுபவன் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறான்.

وقال: (من صلّى الفجر فهو في ذمة الله فلا يطلبنكم الله بشيء من ذمته

சஹாபாக்களின் காலத்தில் இஷாவுக்கும் பஜ்ருக்கு வராதவர்களை அவர் நயவஞ்சகரோ என்று கருதுவர்.

ال ابن عمر رضي الله عنهما : " كنا إذا فقدنا الرجل في الفجر والعشاء أسأنا الظن به " [ رواه الطبراني وبن خزيمة

பஜ்ரு தொழுவோருக்கு 10 நற்செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

 நாம் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை மட்டுமல்ல. நமது வாழ்வில் என்ன காரணத்திற்காக பஜ்ரு வேண்டும் என்று நாம் கணக்கிடுவதற்குமானதாகும்.

பஜ்ரின் 10 நன்மைகள்

மறுமையில் அது பேர்ரொளி

نْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : " بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ ، بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ " [ رواه أبو داود

البشارة الثانية : خير من الدنيا

عَنْ عَائِشَةَ رضي الله عنها ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : " رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " [ رواه مسلم ] ، يعني سنة الفجر 


البشارة الثالثة  : حصد الحسنات

தொழுகைக்கு காத்திருந்தாலே தொழுதது போல

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ إِلَى الْمَسْجِدِ كُتِبَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا عَشْرُ حَسَنَاتٍ ، وَالْقَاعِدُ فِي الْمَسْجِد يَنْتَظِرُ الصَّلاَةَ كَالْقَانِتِ ، وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ ، حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ " [ أخرجه أحمد

البشارة الرابعة  : شهادة الملائكة

காலையிலேயே மலக்குகளின் சிபாரிசிற்கு
 சொந்தமாகி விட்கிறார்.

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " تَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ " ، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ : فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : { إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ متفق عليه

البشارة الخامسة : دخول الجنة والنجاة من النار

وعن أبي موسى الأشعري رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ " [ متفق عليه ] ، والبردان : هما الفجر والعصر 

البشارة السادسة : رؤية الله عز وجل

 فعَنْ جَرِيرٍ بن عبد الله رضي الله عنه قَالَ : كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً - يَعْنِى الْبَدْرَ - فَقَالَ : " إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ _ تضارون _ فِي رُؤْيَتِهِ ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا " يعني الفجر والعصر ، ثُمَّ قَرَأَ : { وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ } ، قَالَ إِسْمَاعِيلُ _ أحد رواة الحديث _ افْعَلُوا لاَ تَفُوتَنَّكُمْ [ متفق عليه ] .

البشارة السابعة  :أجر قيام الليل
இரவு முழுவதும் நின்று வணங்க முடியவில்லையா ? கவலை வேண்டாம். பஜ்ரு தொழுதால் அந்த நன்மை கிடைக்கும்.

عن عُثْمَانُ بْنُ عَفَّانَ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ " [ رواه مسلم ] .

لبشارة الثامنة  : دعاء الملائكة

 عَنْ علي بن أبي طالب رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْفَجْرَ ثُمَّ جَلَسَ فِي مُصَلاَّهُ ، صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ ، وَصَلاَتُهُمْ عَلَيْهِ : اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، اللَّهُمَّ ارْحَمْهُ " [ رواه أحمد ] .

البشارة التاسعة : أجر حجة وعمرة

இப்போது ஏராளமானோர் ஹஜ்ஜுக்கு உமராவுக்கு செல்கிறார்கள். கூட்டம் குடும்பமாக செல்கிறார்கள். நம்மால் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் வேண்டாம். பஜ்ரு தொழுதால் அந்த நன்மை கிடைக்கும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ صَلَّى الْغَدَاةَ _ الفجر _ فِي جَمَاعَةٍ ، ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ " [ رواه الترمذي

البشارة العاشرة : في ذمة الله وحفظه

 فعن جندب بن عبد الله رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ ، فَلاَ يَطْلُبَنَّكُمُ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَىْءٍ ، فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَىْءٍ يُدْرِكْهُ ، ثُمَّ يَكُبَّهُ عَلَى وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ " [ رواه مسلم ] .

பஜ்ரை தொழாமல் தூங்குகிறவர்கள். அல்லது அலட்சியம் காட்டுகிறவர்கள் இந்த நன்மைகளை இழக்கிறார்கள்.

ஒரு வீடு , அல்லது ஒரு மஹல்லா , இந்த நன்மைகளை இழக்குமானால் அதன் நிலை எப்படி இருக்கும் ?

முஸ்லிம்கள் வெறும் உலகியல் சிந்தனைகளை மட்டுமே பெரிது படுத்துகிறவர்களாக இருக்க முடியாது.

அல்லாஹ்வை  நெருக்கமாக்கி வைக்கிற காரியங்கள் குறித்து அவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் வரலாற்றில் எப்போது முஸ்லிம்கள் பெரும் வெற்றியாளர்களாக இருந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் தமது சொந்த பலத்தால் அல்லது தகுதியால் அந்த உயர்வை பெறவில்லை. அல்லாஹ்வின் உதவி தான் இதற்கு காரணம் என்பதை வரலாறு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சிந்தனை தெளிவும்,
மன அமைதியும்
முக வெளிச்சமும்.
நேரத்தில் பரக்கத்தும்

பஜ்ரு தொழுகையின் பலன்களாகும்.

ஆரோக்கியமான வாழ்க்கைகு அதிகாலையில் எழுந்திருங்கள் என்று இப்போது சுய முன்னேற்றப் பேச்சாளார்கள் கூவிக் கூவிக் குறுகிறார்கள்.

வெற்றிகரமான மனிதர்கள் தங்களது அதிகாலைப் பொழுதை அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே வரலாற்று நிஜம்.


மனித மனதை மூடுகிற அமானுஷ்யமான சிந்தனைகள் எண்ணங்களிலிருந்து விடுபட பஜ்ரு தொழுகையை போல் ஒரு துணை இல்லை.

عن أبي هريرة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " يَعْقِدُ الشِّيطَانُ عَلَى قَافِيَةِ رَأسِ أحَدِكُم إذا هُوَ نَامَ ثَلاثِ عُقَدٍ ، يضرب على كل عقدة ، عليك ليل طويل فارقد ، فإن استيقظ فذكر الله انحلت عقدة ، فإن توضأ انحلت عقدة ، فإن صلى انحلت عقدة ، فأصبح نشيطاً ، طيب النفس ، وإلا أصبح خبيث النفس كسلان " [ متفق عليه ] .

பஜ்ரு தொழாதவன் காதில் சாத்தான் சிறுநீர் கழிக்கிறான் என்ற வார்த்தையை விட  காலையில் விழிக்காதவனை கண்டிக்க வேறு வார்த்தை தேவை இல்லை .

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ : ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ! فَقِيلَ : مَا زَالَ نَائِماً حَتَّى أَصْبَحَ ، مَا قَامَ إِلَى الصَّلاَةِ ، فَقَالَ : " بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ " [ متفق عليه ] .

ஏழுமணிக்கு மேல்தான் எழுந்திருப்பேன் என்பவர்கள் யோசிக்க வேண்டிய செய்தி இது.

ஈமானிய வாழ்க்கை பஜ்ரு தொழுகையோடு அதிக தொடர்புடையது.

இந்த உலகியல் வாழ்வும் பஜ்ரு நேரத்தோடு அதிக தொடர்புடையது.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

(மக்கா முகர்ரமாவிலிருந்து )






3 comments: