வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 01, 2019

தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி வளர்ந்த இஸ்லாம் 2


பாஜக அரசு முத்தலாக் தடை சட்ட்த்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து , சில கட்சிகளை மிரட்டி பணிய வைத்த்தன் மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட்த்திற்கு ஜனாதிபதி உடனே ஒப்புதல் வழங்கிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.
புதிதாக பொறுப்பேற்ற அரசு நாட்டில் மிக குறைந்த எண்னிக்கையில் நடைபெறுகிற முத்தலாக் பிரச்சனையை காரணமாக காட்டி இந்திய சிறுபான்மையினரான முஸ்லிம்களை அச்சுறுத்த நினைக்கிறது என்பது மட்டுமே இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் ஒரே நோக்கம்.
கேரளாவைச் சர்ந்த பிரேம் சந்திரன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது போல உண்மையில் பாஜக வுக்கு முஸ்லிம் பெண்கள் மீது அக்கறை இருக்குமானால் அது நாடாளுமன்ற தேர்தலில் சில முஸ்லிம் பெண்களுக்காவது இடமளித்திருக்க வேண்டும். அமைச்சரவையிலும் இடமளித்திருக்க வேண்டும். என்று கேட்ட்து நூற்றுக் நூறு சரியான கேள்வி.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்தப் போக்கு இந்திய நாட்டுக்கு எதிரானதாகும். இந்திய நாட்டின் பெரும்பானை மக்களாக தலித்துக்க்கள் மற்றும் சாமாணிய மக்களுக்கு எதிரானதாகும். இந்துத்துவாவின் அடக்குமுறைக்கு அதிகம் பலியாவது அவர்கள் தான்.
எனவே இதை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்று பார்க்காமல் நீதிக்கு எதிரானது என்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும் இந்திய மக்கள் பார்க்க தவறுவார்கள் எனில் அதற்கான விளைவு நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அமைந்து விடும்.
இஸ்லாமோ முஸ்லிம் சமுதாயமோ இதனால் ஒருபோதும் பாதிப்படையாது, முத்தலாக் செல்லாது என்று இந்திய நாடாளுமன்றம் கூறுவதால் அது செல்லாத்தாகிவிடாது.
முத்தலாக் சொல்லக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் வழிகாட்டுதலும். அதையும் மீறி ஒருவர் முத்தலாக் கூறினால் அது நிகழ்ந்து விடும் , அதனால் கடும் விளைவுகள் ஏற்படுமென்பதே இஸ்லாமிய சட்டம் . இதை ஏற்றுக் கொள்வதில் முஸ்லிம் சமுதாயம் காட்டுகிற உறுதிப்பாடு பாஜக அரசின் இந்த சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
சோவியத் ரஷ்யாவில் குர் ஆனை தடை செய்தார்கள்.
இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் தொழில் நுட்பம் கற்க சென்ற ஒரு முஸ்லிம் அதிகாரி தனக்கு ஏற்பட்ட ஒரு முக்கிய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
நான் மாஸ்கோவில் சென்ற முதல் வெள்ளிக்கிழமை ஜும் ஆ விற்கு செல்ல நினைத்தேன். இங்கே ஜும் ஆ எங்கே நடக்கிறது, பள்ளிவாசல் எங்கே இருக்கிற து என்று விசாரித்தேன். பள்ளிவாசல் இருக்கிறது , அதை மியூசியமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். ஜும்  ஆ வெல்லாம் இங்கே கிடையாது என்றார்கள். இத்தகைய பெரிய நாட்டில் ஜும் ஆ இல்லை என்பது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது,
ஆயினும் அந்தப் பள்ளிவாசலையாவது பார்த்து விட முடிவு செய்து பள்ளிவாசலுக்கு சென்றேன். பலர் வேடிக்கை பார்க்க குழுமியிருந்தனர். நான் ஒரு ஓரத்தில் சென்று தொழ ஆரம்பித்தேன். தொழுது முடிந்த்தும் ஒரு சிறுவன் என் பின்னே நின்று என் ஆடைய பிடித்து இழுத்தான். அவன் போசிய மொழி எனக்குப் புரியவில்லை. அவனது செய்கையிலிருந்து தனது வீட்டினர் என்னை அழைக்கிறார்கள் என்று அவன் கூற முற்படுவது புரிந்த்து. நான் அவன் பின்னே சென்றேன், ஒரு வீட்டில் ஒரு பெரியவர் என்னை வரவேற்றார். அவர் என்ன வெல்லாமோ கேட்டார், பேசினார். எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு அன்னியோன்யம் நிலவியது. பிறகு அந்த வீட்டிலிருந்த சிறுவர்களோடு சேர்ந்து ஒரு பெரிய விரிப்பில் அமர்ந்தோம். நான் இந்த மக்கள் குர் ஆனையே பார்க்காதவர்கள் இவர்களுக்கு நமக்கு தெரிந்த குர் ஆனை ஓதிக்காட்டுவோம் என நினைத்து எனக்கு தெரிந்த திருக்குர் ஆன் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். அப்போது தான் உண்மையில் எனக்கு பேரதிச்சி ஏற்பட்டது. ஏனெனில் நான் ஓத ஆரம்பித்த்தும் அங்கிருந்த சிறுவர்கள் என்னை தொடர்ந்து மிக அழகாக குர் ஆனை ஓதினர். அப்போது தான் எனக்குப் புரிந்த்து .ரஷ்ய அரசு குர் ஆனின் பிரதிகளுக்கு தடை செய்திருந்த போது ரஷ்ய சமூகம் குர் ஆனை ஓதும் தனது உறுப்பாட்டை பற்றியிருந்த்தலா அது குர் ஆனை கை விடவில்லை. பிற்காலத்தில் சோவியத் ரஷ்யா காணாமல் போனது. குர் ஆன் தனது நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக் கொண்ட்து.
ஒரு சமூகம் ஒரு விசயத்தை உறுதியாக பற்றி நிற்கிற போது எந்த அக்கிரம் அதிகாரமும் தனது சட்டங்களால் அதை உடைத்து விட முடியாது.
எனவே முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் சமுதாயம் உறுதியாக நிற்க வேண்டும். அடுத்த  தலைமுறைகளுக்குக்கு இந்த சட்ட்த்த்டின் எதார்த்த்தை  எடுத்துச் சொல்ல வேண்டும்.
எனவே அரசு கொண்டுவந்துள்ள சட்டம் எங்காவது தெரியாத்தனமாக முத்தலாக் சொல்லி விடுகிற சிலரை பாதிக்க கூடும். அல்லது குடும்ப பகை காரணமாக முத்தலாக் குற்றம் சுமத்தப்படுகிற சிலரை அது பாதிக்க கூடும். ஏற்கெனவே இந்த விவகாரம் இந்திய குடும்ப நீதிமன்றங்களில் ஒரு சதவீதம் கூட இல்லை.
எனவே முத்தலாக் பிரச்சனை என்பது இதில் பெரியதாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றே அல்ல. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடுதான் இப்போது கவனத்திற்குரியதாகும்,
இதை எதிர் கொண்டு,  அக்கிரம்ம் செய்கிற அரசாங்கத்திடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அனைத்து வழி முறைகளையும் கடைபிடிக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும்.
இத்தகைய சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்கையின் அனுகுமுறைகள் நமக்கு மிகவும் பயணளிக்க கூடியவை.
மக்கா சமூகத்தின் அநீதியான போக்குகளுக்கு எதிராக  கனத்த மொளனத்தை பெருமானார் (ஸ்ல) அவர்கள் கடைபிடித்தார்கள். அவரகளது அநீதிகளுக்கு எதிராக போர்க்கொடு தூக்கி நிற்கவில்ல, அதே நேரத்தில் தமது கொள்கையில் சமரம் செய்து கொள்ளவும் இல்லை.
அல்லாஹ் பெருமானாருக்கு ஆரம்பமாக அறிவுரை சொன்ன போது கூட இரவு நேரத்தில் தொழுகுமாறு அப்போது திருக்குர் ஆனை ஓதுமாறும் உத்தரவிட்டான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் பகல் நேர தொழுகையில் மெதுவாகவும் இரவு நேர தொழுகையில் சப்தமாகவும் ஓதினார்கள்.
يَا أَيٌّهَا المُزَّمِّلُ ` قُمِ اللَّيلَ إِلاَّ قَلِيلاً ` نِصفَهُ أَوِ انقُص مِنهُ قَلِيلاً ` أَو زِد عَلَيهِ وَرَتِّلِ القُرآنَ تَرتِيلاً) [المزمل: 1-4]
பெருமானாரின் மக்கா வாழ்கை தரும் அனுபங்கள் இரண்டு
1.       ஆதிக்க சமூகத்திடம் சண்டைப் போக்கை தவிர்ப்பது
2.       சொந்தக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்த்து, சாதகமான ஒரு சூழல் உருவாக பாடுபடுவது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நமது உரிமைகளை காத்துக் கொள்ள நாம் விழுப்புடன் இருந்து நம்மை காத்துக் கொண்டால் போதுமானது.

இஸ்லாம் தன்னை தற்காத்துக் கொள்ளும். இன்ஷா அல்லாஹ்

இந்த வாரத்திற்கு பொருத்தமான முந்தைய பதிவு

தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி வளர்ந்த இஸ்லாம்

من المدينة المنورة

No comments:

Post a Comment