வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 16, 2020

போராட்டங்கள் தொய்வடையாமல் இருக்க…


وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238
)
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சி ஏ ஏ சட்ட்த்திற்கு எதிராகவும் கொண்டு வர உத்தேசித்துள்ள என் ஆர் சி மற்றும் என் பி ஆர் சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நம்முடன் இந்திய ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டுள்ளவர்களும் மிகப் பெரிய அளவில் போராடி வருகின்றனர் . 

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் 65 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நட்த்திய இரு ஆய்வு கூறுகிறது.

இந்தச் சட்டங்கள் நமக்கு எத்தகைய கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்பதை புரிந்து கொண்டு வருகிற முஸ்லிம்கள் சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஷஹீன் பாக் போராட்டம்

தில்லியின் தெற்குப் பகுதியில் ஷஹீன் பாக் என்ற இடத்தில் கடந்த டிஸம்பர் 14 ம் தேதி மதியம் புர்கா அணிந்த பெண்கள் போராட்ட்த்தில் அமர்ந்தார்கள், ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தில்லி மாந்கர போலீஸ் நட்த்திய வன்முறை வெறியாட்ட்த்திற்குப் பிறகு இந்த போராட்டம் தொடங்கியது, அமைதியான முறையில் தொடங்கிய பெண்களின் இந்தப் போராட்ட்த்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன, பஹ்ருன்னிஸா என்ற பெண்மணி தனது வேலையை இராஜினாமா செய்து விட்டு முழு நேர போராளியாக இப்போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்,  : அவர்கள் எங்களது குழந்தைகளின் குரல்வளையை நெறிக்க முயற்சி செய்கிறார்கள், அதனால் தாய்மார்களான நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்று (They tried to stifle the voices of our children[b]... So, as mothers, we decided to stand up.) அவர் வைத்திருக்கிற பேனர் இப்போது உலகப் புகழ் பெற்று விட்டது. (சி.என்.என்)
(Stifle – ஸடைபில்ட் – அடக்குவது)

போராட்டம் அனைத்து வகையான அடக்குமுறை முயற்சிகளையும் தாண்டி நடந்து கொண்டிக்கிறது. போராட்ட்த்திற்கு தடை விதிக்கி தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட மறுத்து விட்டது, ஏனேனில் தில்லி அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒரு புனித யாத்திரை போல இங்கு தொடர்ந்து வந்து குழுமி இருந்து விட்டு செல்கிறார்கள். நாளென்றுக்கு இலட்சக்கணக்கானோர் வந்து செல்வதாக த வையர் என்ற இணையச் செய்தி இதழ் தெரிவிக்கிறது.
The Wire notes that lakhs of protesters have turned up over the days.)
நாட்டின் புகழ் மிக்க பலரும் இங்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் திரைப்பட நடிகை தீபிகா படுகோனே இந்த போராட்ட்த்தில் பங்கேற்றது பாஜக வினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.   டிஸம்பர் 31 ம் தேதி இரவு ஒரு நூறு வருட்த்தில் இல்லாத அளவு கடும் குளிர் தில்லியை வாட்டியது என்ற போது ஷஹீன் பாக் மைதானத்தில் குழுமியிருந்த திரளான மக்கள் தேசீய கீதம் பாடி புத்தாண்டை வரவேற்றனர்.

இன்றுடன் 34 வது நாட்களாக தொடரும் இப்போராட்டம், CAA _ NRC _ NPR க்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் மீக நீண்ட தொடர் போராட்டம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. t has now become the longest ongoing continuous protest against CAA-NRC-NPR

இதே போன்ற தொடர் போராட்டங்கள் இப்போது அலகாபாத். கயா , கொல்கத்தா, ஹைதராபாத, லக்னோ போன்ற இடங்களிலும் நடை ஆரம்பமாகியிருக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் இந்தியர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் கண்டனப் பேரணிகள் நடை பெற்றுவருகின்றன.

இந்தியா டுடே பதிரிகை
England, Germany, Switzerland: Anti-CAA protests break barriers, shake the world

இங்கிலாந்து, ஜெர்மனி , ஸ்விட்சர்லாந்த ஆகிய நாடுகளில் சி ஏ ஏ வுக்கு எதிராக திரண்ட போரணிகள் உலகை உலுக்கியுள்ளன என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை பிரசுரித்துள்ளது. அப்பேரணிகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்களே !

சில அரபு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் இச்சட்டம் பற்றி கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் போராட்டம் நடை பெற்றுள்ளது.
சி ஏ ஏ வுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின் ஞோ அபே கலந்து கொள்வதாக இருந்த  இந்தியா ஜப்பான் கூட்டு கூட்டம் இரத்து செய்யப் பட்டது,

போராட்டங்கள் காரணமாக டிஸம்பர் மாத்த்தின் பின்பகுதியில் கார்கள் வாட்ச்கள் உணவகஙகளின் விற்பணை குறைந்துள்ளதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது,

சுமார் 20 விமான்ங்கள் இரத்து செய்யப்பட்டூள்ளன, 700 விமான்ங்கள் தாமதமாகியுள்ளன, சில மாநிலங்களில் இரயில் போக்கு வரத்து நிறுத்தப் பட்டுள்ளாது, இதுவரை சுமார் 90 கோடி ரூபாய அளவுக்கு இரயில்வே நஷ்டமடைந்துள்ளது,  மேற்குவங்க மாநிலத்தில் 72 கோடி அளவுக்கு இரயில்வேயுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது,

பல மாநிலங்களில் இண்டெர்னெட் சேவையை அரசு தடை செய்துள்ளது,

கனடா, பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா, சிங்கப்பூர், தைவான்., அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்களை இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன,
ஆக்ராவின் தாஜ் ,மஹாலை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு டிஸம்பர் மாத்த்தில் 60 சதவீதம் குறைந்து விட்டதாக சுற்றூலாத் துறை தெரிவித்துள்ளது,

மத்திய அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இவ்வாறு பல்வேறு வகையிலும் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வித்த்திலும் போராட்டங்கள் நடை பெற்று பலத்த விளைவுகளை உண்டு பண்ணி வருகீற போதும் கூட மத்தியில் இருக்கிற ஆட்சியாளர்கள் தமது பிடிவாத்த்தை விடுவதாக தெரியவில்லை.

தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிற வாதங்களை செய்து வருவதோடு, பல பிரமுகர்களையும் நிர்பந்தப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட வைத்து வருகின்றனர், அத்தோடு தமது திட்டங்கலை செயல் படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்

இதனால் முஸ்லிம்களும் இந்திய ஜனநாயக சக்திகளும் தங்களது போராட்ட்த்தை தீவிரப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பல்வேறு புதிய போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

இந்திய வரலாற்றின் – இந்திய முஸ்லிம்களின் வரலாற்றின் ஒரு முக்கியமான கால கட்ட்த்தில், - அமைதியான வாழ்வா அல்லது அடிமை வாழ்வா என்ற நிர்பந்த்த நிலைக்கு ஆட்படுத்தப்படும் சூழலில், போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் தலைவர்கள், அமைப்புக்கள் ஜமாத்துக்களின்  தலைவர்கள் அதன் தொண்டர்க்ளை நினைவில் நிறுத்தியாக வேண்டிய் சில செய்திகளை இன்றைய ஜும் ஆ வில் பரிமாறிக் கொள்கிறோம்.

இது யாரையும் குறை சொல்கிற நோக்கில் அல்ல, போராட்ட்த்தின் கனத்தை கவனத்தையும் மேலும் கூர் படுத்துவதற்காக சொல்லப் படும் செய்திகளாகும்.
ஏனெனில் இது போன்ற சந்தர்ப்பத்தில் எதுவெல்லாம் நம்மை 

பலவீனப்படுத்தக் கூடுமோ அந்த அம்சங்களை நாம் கவனமாக நினைவில் வைத்திருந்து அவற்றை அகற்றியாக வேண்டும்.

போராட்டங்களை சிதைக்கும் அம்சம் 1
சுயநலம்.

இந்த இக்கட்டான நேரத்தில் தனி மனிதர்கள் அல்லது தனி அமைப்புக்கள் இயக்கங்கள் தங்களை தனித்து அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக போராட்டங்களில் ஈடுபடுவது போராட்ட்த்தின் வலிமையை கூர் மங்கச் செய்யும்.

நமது மாநிலத்தின் பல பகுதியில் பெரும்பாலான ஜமாஅத்த்துகள் முஸ்லிம்கள் பெருவாரியாக திரண்டு போராட்டங்களை நிகழ்த்திய பிற்கு – நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக நட்த்தப் படும் போராட்டங்கள் அதன் புனித்த்தை கெடுத்து விடுகின்றன.
அதனால் இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரிடமும் அல்லாஹ்வின் பெயரால் முன் வைக்கப் படுகிற ஒரு கோரிக்கை
அருள் கூர்ந்து அல்லாஹ்விற்காக போராடுங்கள்
திருக்குர் ஆன் கூறுகிறது,
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238)
இது இரண்டு செய்தியை சொல்கிறது,

ஒன்று போராட்டம் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்.

இரண்டு போராட்டம் கட்டுப்பாட்டுடன் அமைய வேண்டும்.

இஸ்லாமிய வரலாறு தனது அபரிமிதமான வெற்றி களுக்கு பின்னணியில் இந்த இரண்டு முக்கிய இயல்புகளை கொண்டிருந்த்து.
நமக்கு மிகவும் தெரிந்த நிகழ்வு

அலி ரலி அவர்கள் ஒரு மல்யுத்த வீரனுடன் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்ட்த்தில் அவன் மீது ஏறி உட்கார்ந்து விட்டார்கள். அப்போது அவன் அலி ரலி அவர்களின் முகத்தில் துப்பினான். அலி ரலி அவர்கள் எழுந்து விட்டார்கள்.

இதுவரை நான் அல்லாஹ்வுக்காக போராடினேன் . அவன் துப்பிய பிறகு அவனை கொன்றால் அது எனக்காக கொன்றதாகிவிடும் எனவே எழுந்து விட்டேன் என்றார்கள் . எதிரி இஸ்லாமை தழுவினான்.

நமது ஓவ்வொரு செயலுக்கும் இந்த உளத்தூயமை இருக்க வேண்டும் என்கிற போது சமுதாயத்தின் மிக முக்கியமான ஒரு போராட்ட களத்தில் அது எந்த அளவு அவசியம் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.

அபூபக்கர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில்  சிரியாவுக்கு ஒரு படையெடுப்பிற்கு ஒரு சஹாபியை அமீராக அறிவித்தார்கள். உமர் ரலி அவர்கள் அவரை மாற்றுமாறு கூறினார்கள் . அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை அவரை மாற்றி விட்டு அன்று இரவு காலையில் அமீராக நியமித்த சஹாபியின் வீட்டுக்கு சென்றார்கள், அபூபக்கர்சித்தீக் ரலி அவர்களை தன் வீட்டு வாசலில் பார்த்த்தும் அந்த சஹாபி பதறினார்ர். அவரை நிதானப்படுத்திய அபூபக்கர் ரலி அவர்கள்  “ நான் வேறு ஒருவரை அமீராக நியமித்து விட்டேன். ஆனால் நீங்கள் நிச்சயம் படையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  அடுத்த நாள் படை அணீ திரட்டப்பட்டு படை வீர்ர்களுக்கான அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த படையில் நேற்று தளபதியாக நியமிக்கப் பட்டு மாற்றப் பட்டவரும் இருந்தார்.  ஒருநபர் அவரை அணுகி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
ما لا بي بكر  يقول اليوم أنك قائد الجيش ويقول غدا انك جندي عادي
அதற்கு அந்த சஹாபி சொன்னார். நேற்று அபூபக்கர் ரலி அவர்கள் என்னை படைத்தளபதி என்று சொன்ன போது நான் அதிகம் மகிழ்ச்சி அடையவும் இல்லை. இன்று என்னை சாதரண வீரன் என்றதற்காக நான் துக்கப் படவும் இல்லை. என்றார்.

இதே போல காலித் பின் வலீ ரலி அவர்களை காதிஸிய்யாவின் போர் முனையில் உமர் ரலி அவர்கள் படைத் தளபதி பொறுப்பிலிருந்து மாற்றி போது அவரை அணுகிய ஒருவர் நேற்று வரை தளபதியாக இருந்தீர் இன்று சாதாரண வீர்ராகி விட்டீர் உமது  மனோ நிலை எப்படி இருக்கிறது என்றார் , காலித் பின் வலீத் ரலி அவர்கள் கூறினார்கள் . நேற்றும் நான் அல்லாஹ்விற்காகவே போரிட்டேன். இன்றும் அல்லாஹ்விற்காகவே போரிடுகிறேன். எனவே எந்த மாற்றமும் இல்லை என்றார்
குழுப்பம் செய்ய நினைத்தவர் ஏமாந்து போனார்.

எந்த் போராட்ட களத்திலும் இத்தகைய உள்ளத்தூய்மை – அல்லாஹ்வுக்காக போராடுகிறேன் என்ற சிந்த்தனை நமக்கு வேண்டும்.

எனது பெறுமைக்காக, அல்லது எங்களது குழ்வின் பெருமைக்க்க என போராட்டங்கள் திசை மாறுமானால் வெற்றி நம் கை நழுவிப் போய்விடும்.
இன்றைய நம்முடைய போராட்டங்களில் ஒரு மைய தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தான் தோன்றித்தனமாக செயல்படுவதை நம்மில் ஒவ்வொருவரும் நிறுத்தி விட்டால் அந்த் தலைமை தானாகவே தோன்றி விடும்.

அடுத்தடுத்து என்ன செய்வது என்பது நமது ஆர்வமாக இருக்கலாம். ஆனால் பொறுப்பான இட்த்திலிருந்து அடுத்த திட்டம் தரப்படுகிற வரை நிதானம் காப்பதே சுயநலத்திலிருந்து விடுபடுவதன் அடையாளமாகும்.

முஸ்லிம் சமுதாயம் தன் வாழ்விற்கான போராட்ட சூழலில் இருக்கும் போது, எதிரிகள் பெரும் வலிமையோடு நமக்கு எதிராக திரண்டிருக்கும் போது சுயநலத்தோடு நடந்து கொள்வது எவ்வளவு தீமையானது என்பதை நாம் மிக கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.

போராட்டங்களை சிதைக்கும் அம்சம் 2
சமூக அக்கறையுள்ளவர்களுக்கு நிறைய கருத்துக்கள் தோன்றும். திட்டங்கள் உதிக்கும். அதை தலைவர்கள் மீது அவர்களிடம் அவர்கள் எடுத்துரைக்கலாம் . வலியுறுத்தலாம் திணிக்கமுயற்சிக் கூடாது.
நமது திட்டங்கள் நிராகரிக்கப் பட்டாலும் தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும்.
عن عبدالله بن عمر رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: ((السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره، ما لم يؤمر بمعصية، فإذا أُمِر بمعصية فلا سمع ولا طاعة))؛ متفق عليه


தலைமைக்கு கட்டுப்படுதல் அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத்தரும் என்பது மார்க்க அறிஞர்களின் வழி காட்டுதல். அது மட்டுமல்ல அது சமூக அமைதிக்கு அடிப்படையானது என்பது எதார்த்தமாகும்.

எனவே சுயநலம் அற்ற நமது அதிகப் படியான – தலைமைக்கு உட்படாத  அக்கறையும் போராட்ட்த்தை வலுவிழக்கச் செய்யும் அம்சங்களாகும்.

போராட்டங்களை சிதைக்கும் அம்சம் 3
பின்வாங்கும் சிந்தனை அல்லது பலவீனப்படுத்தும் சிந்தனை அல்லது நிராசை போக்கு  
மக்களில் சிலர் இயல்பாக வேறுபட்டு சிந்திப்பவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாக கருதிக் கொள்வார்கள். அத்தகையோருக்கு போராட்ட வழி முறைகளில் நம்பிக்கை இருக்காது. இத்தகையோர் போராடி என்ன கிடைத்து விடப் போகிறது என்பார்கள்
இத்தகையோரும்
இன்னும் சிலர் போராட்ட களத்தில் இருப்பார்கள் . திடீரென களத்திலிருந்து விலகுவார்கள் பிறகு அவர்கள் போராட்டத்தை எதிர்ப்பார்கள் இத்தகைய்யோரும் போராட்டைத்தை பலவீனப்படுத்தவே செய்வர்.
இவை அனைத்தும் புறமுதுகு காட்டும் சிந்தனைகளே . மிக திட்ட்டவட்டமாக தவிர்க்க பட வேண்டியது இது.
இஸ்லாத்தில் மிகப்பெரிய குற்றம் இது.



போராட்டங்களை சிதைக்கும் அம்சம் 4
வன்முறை
முறைய தவறிய எந்த வன்போக்கும் போராட்ட்த்தை திசை திருப்பிவிடும்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் வெள்ளையர்களை தினறடித்துக் கொண்டிருந்த போது,, செளரி செள்ரா என்ற இட்த்தில் போராட்டக் கார்ரகள் ஒரு போலீஸ் ஸ்டேசனுக்கு தீவைத்தார்கள். போராட்டம் நின்று போனது.
காந்தியடிகளை கோட்சே சுட்டுக் கொன்ற ஒரு நிகழ்ச்சி ஆர் எஸ் எஸ் அமைப்பை இன்று வரை கலங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
போராட்டம் என்பது தியாகத்தை அடிப்படையாக கொண்ட்து. தாக்குதலை வழிமுறையாக கொண்ட்து அல்ல.
ஆங்கிலேயர்களின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்ட இந்தியர்களின் தியாகம் தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்.
மிக அவசியமாக புரிந்து கொள்ள வேண்டிய தத்துவம் இது.
தாக்குபவர்கள் எப்போதும் வெற்றியடைந்து விட முடியாது என்பது தான் இந்திய சுந்தந்திர போராட்ட்ட்தின் பாடம்.
இதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.
  
போராட்டங்களை சிதைக்கும் அம்சம் 5
திசை திருப்பும் செய்திகள் நிகழ்வுகள்
ஆதிக்கத்திலிருப்பவர்களுக்கு எந்தப் போராட்டமும் பிடிக்காது.

போராட்டங்கள் வலுவடைகிற போது அதை இழிவுபடுத்த முயற்சிப்பது அல்லது கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பது ஆதிக்க சக்திகள் கையாளும் வழிமுறை

நாடு முழுக்க முஸ்லிம்கள் பாஜக அரசின் அக்கிரமத்திற்கு எதிராக  போராடிக் கொண்டிருக்கிற இப்போது நாகர் கோவிலில் வின்செண்ட் என்ற  போலீஸ்கார்ரை முஸ்லிம்கள் கொன்று விட்டார்கள் என்ற செய்தி பெரிது படுத்தப் படுகிறது. தொப்பி போட்டுக் கொண்டு இரண்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் ஓடிவருகிற ஒரு வீடியோ வைரலாக்கப் படுகிறது.

இந்த நேரத்தில் போராட்ட் களத்திலிருந்து கவனம் திருப்ப்ப் படுகிறது.

இது ஒரு படுகொலை. இது நிச்சய்ம கண்டிக்க தக்கது. இது அரசின் பலவீனம் . அரசின் உளவுத்துறையின் பலவீனம் . இது சம்பதப் பட்ட யாராக இருப்பினும் தண்டிக்கப் பட வேண்டும் என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவதான் இன்றைய போராட்டத்தின் வலிமையை பாதுகாக்கும் உத்தியாகும்.

சுயநலம்
கட்டுப்பாடின்மை
பின்வாங்கும் சிந்தனை
வன்முறை
திசை திருப்புதல்

ஆகிய ஐந்து பலவீன்ங்களை ஒதுக்கிவிட்டு நடந்தால் தான் எந்தப் போராட்டமு வெற்றியடையும்

நமது இந்தப் போராட்டமும் கூட

அல்லாஹ் நம்மை சுயநலம்ற்றவர்களாக ஆக்குவானாக்!  கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள்ச் செய்வானாக! கோழைத்தனமான சிந்தனைகளிலிருந்து பாதுகாப்பானக! வன்முறை திசை திருப்புதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பானக!


  






No comments:

Post a Comment