Thursday, October 24, 2024

ஈமானிய வாழ்விற்கும் அது இல்லாத வாழ்விற்கும் என்ன வேறுபாடு؟

 பிரபாகரனுக்கும்  யஹ்யா சின்வருக்கும் என்ன வித்தியாசம் ?

இஸ்ரேல் இஸ்லாமிய உலகின் மேல் நட்த்திவருகிற தாக்குதலில் ஒரு நிகழ்வாக, பாலஸ்தீனின் காஸா பகுதியை ஆட்சி செய்து வருகிற ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் அவர்களை படுகொலை செய்து விட்ட்து..

பாலஸ்தீன் மக்களின் வாழ்வு  கடந்த நூறு ஆண்டுகளாக எப்படி இருக்கிறது என்பதற்கு சின்வர் ஒரு உதாரணம்.

அவர் 1662 ல் கான் யூனிஸ் அகதி முகாமில் பிறந்தார்.  தன்னுடைய 62 வது வயதில் மொத்தமும் அகதி முகாமாக  மாறியிருக்கிற காஸா பகுதியில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மரணித்தார். வாழ்க்கை முழுவதுமே சிதைவுக்கு உரியதாக இருந்திருக்கிறது. இவர் மாத்திரம் அல்ல; இவரைப் போன்ற பல இலட்சம் மக்களுக்குடைய வாழ்வு இப்படித்தான் போர் களத்திலேயே பிறந்து அதிலேயே மடிவதாக அமைந்திருக்கிறது.

அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வையும் நிம்மதியையும் தந்தருள்வானாக!

இதில் நாம் இன்று கவனிக்கிற செய்தி என்ன வெனில் ?

இஸ்ரேல் எதிர்பாராத வகையில் சின்வரை கொன்று விட்டது. ஆனால் இதன் மூலம் ஹமாஸ் அமைப்பை முடிவுக்கு வந்து விட்டதாக இஸ்ரேலும் கருதவில்ல்லை. உலகமும் நினைக்கவில்லை. இவர் போனால் என்ன நூற்றாண்டுகளாக தொடரும் போராடட்த்திற்கு இன்னொருவர் வந்து விடுவார் என்று அனைவருக்கும் தெரியும்.

ஒரு வித்தியாசத்தை பாருங்கள்

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 2009 ம் ஆண்டு முல்லைத்தீவில் நடைபெற்ற இறுதிச் சண்டையில் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளின் வரலாறு முடிந்து விட்டது,

நாம் இன்றைய இந்த பயானில் அரசியல் பேச வரவில்லை.

ஈமானிய வாழ்விற்கும் அது இல்லாத வாழ்விற்கும் இடையே இருக்கிற ஒரு  மாபெரிய வித்தியாசத்தை உணர்ந்து கொள்வதற்காக இந்த செய்தியை பரிமாறுகிறேன்.

வாழ்க்கையை பற்றி இந்த உலகில் இரண்டு கண்ணோட்டம் இருக்கிறது. ஒன்று இது தான் வாழ்க்கை என்பது. மற்றொன்று இது தற்காலிமானது என்பது.

முஃமின்கள் இங்கு கிடைக்கும் எந்த இன்பத்தையும் தற்காலிகமானதாகவே கருதுகிறார்கள். கருத வேண்டும். அது போல எந்த துன்பத்தையும் தற்காலிகமானதகவே கருதுகிறார்கள். கருத வேண்டும்.

இந்த இரண்டு கருத்தோட்ட்த்திற்கும் இடையே வாழ்க்கையின் போங்கில் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!

முந்தையவர்கள் தன்னுடைய தற்போதைய மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் அவர்களுடைய வாழ்க்கை அளவோடு முடிந்து போய்விடும்.

பிந்தையவர்கள் எந்த மகிழ்ச்சி கிடைக்கிற போதும் இது நிரந்தரமற்றது என்றே வாழ்வார்கள்.

பிறக்கும் போதே இறப்பிற்காக வாழ்வார்கள்

வீடு கட்டுகிற போதே இது ஒரு நாள் இடியும் என்று தெரிந்தே கட்டுவார்கள்

தலைமை பதவி ஏற்கிற போதே இது எப்போதைக்கு மானதல்ல என்பதை உணர்ந்தே இருப்பார்கள்.

அதனால் எந்த இழப்பையும் அவர்கள் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். உலகின் இழப்புக்களை அவர்கள் மிகப்பெரும் இழப்பாக கருத மாட்டார்கள். நாளைய உலகிற்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதை தான் கவனத்தில் கொள்வார்கள்.  

.நபி (ஸல்) அவர்களின் ஒரு வாசகம் மிக இதை அற்புதமாக கற்றுத்தருகிறது.

قال عليه السلام: إِنَّ لِلَّهِ مَلَكاً يُنَادِي فِي كُلِّ يَوْمٍ: لِدُوا  لِلْمَوْتِ، وَاجْمَعُوا لِلْفَنَاءِ، وَابْنُوا لِلْخَرَابِ     

 

மவ்தை எதிர்பார்த்து அனுபவியுங்கள்! அழிவை எதிர்பார்த்து சேகரியுங்கள்! சிதைவை எதிர்பார்த்து கட்டுங்கள்.

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த அடிப்பட்டயில் தான் ஒரு மாபெரும் சமுதயத்தை உருவாக்கினார்கள்.

 

இன்றைய இருப்பையே நிரந்தரமானது என்பதாக நினைத்து ஏமாந்து விடாத ஒரு சமுதாயத்தை தான் உருவாக்கினார்கள்.

 

அதனால் தான் உலகின் பேரரசர்களில் ஒருவராக வாழ்ந்த  உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் தனது 11 மகன்களுக்கு 11 திர்ஹ்மகளை மட்டுமே விட்டுச் சென்றார். அந்த மகன்கள் தமது சொந்த உழைப்பால் பிற்காலத்தில் பெரும் கொடைவள்ளல்களாக மாறினார்கள்.

 

இந்த உலகின் எதார்த்த இயல்பை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

 

இன்றைய நமது கல்வியின் சிறப்பு,

இன்றைய நமது செல்வத்தின் மதிப்பு

இனறைய நமது அதிகாரத்தின் மகிமை

 

இவற்றினால் நாம் வெளிப்படுத்துகிற

மமதையான

அல்லது அதிகப்பிரசங்கித்தனமான்

அல்லது எல்லை மீறிய

 

எந்த போக்கும் நிலைக்காமல் போகும்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது நாம் நிலை குலைந்து போவோம்.

 

நமது இன்றைய பெருமை எதையும் தாற்காலிகமானது தான் நிர்ந்தர வாழ்விற்குரியதை , நிர்ந்தர நிம்மதிக்குரியதை , நிரந்தர மரியாதைக்குரியதை நாம் சிந்தித்தாக வேண்டும் என்ற சிந்தனை நமது இளம் வாலிபர்கள் மூத்தவர்கள் அனைவரின் கனவத்திலும் வந்தாக வேண்டும்.

 

துரதிஷ்ட வசமாக இஸ்லாம் உருவாக்கிய இந்த மகத்தான வாழ்வியல் சிந்தனை தற்கால தலைமுறையிட்த்தில் குறைந்து வருகிறது.

 

இன்றைய கல்வியும் நாகரீகமும் இளைய தலைமுறையை இந்த சிந்தனையிலிருந்து தடுமாற வைக்கிறது.

 

செல்வமும் செல்வாக்கும் நடுத்தர - முதிய வயதினரை இந்த சிந்தனையிலிருந்து தடுமாற வைக்கிறது.

 

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

 

ஈமானிய வாழ்வின் பலன்கள்

 

1.   வாழும் வாழ்க்கையை சீராக்குகிறது.

 

நமக்கு தோன்றிய படி வாழ்வோம் என்று பலர் வாழ்கிறார்கள். இது சரியானது அல்ல, ஆபத்தானது.

 

இன்று சமூக ஊடகங்களில் தொலைக்காட்சி அல்லது பொது அரங்குகளில் சிலர் மிக ஆவேசமாக இப்படிப் பேசுகிறார்கள்.

 

நான் எனக்கு பிடித்த மாதிரித்தான் வாழ்வேன் – அதை அதில் என்ன தப்பு, கல்யாணம் செய்து தான் ஒரு ஆணுடன் இருக்கனுமா ? கல்யாணம் செய்யாமலே இருந்தால் என்ன ? இது என் விருப்பம். நான் சம்பாதிக்கிறேன் என் இஸ்டப்படி வாழ எனக்கு உரிமை இருக்கிறது என்று பேசப்படுகிற செய்திகளை இப்போதெல்லாம் நாம் அதிகமாக செவியேற்கிற்கிறோம். இதற்கு மேலாக பல கன்றாவிகள் அரங்கேறுகின்றன.

 

நான் எனக்கு பிடித்த படி கார் ஓட்டுவேன் என்று ஒருவர் ஓட்டினால் என்ன ஆகுமோ அது போலத்தான் இத்தகைய போக்கினால்  வாழ்க்கையிலும் சமூகத்திலும் விரும்பத்தகாத பல  விபத்து ஏற்பட்டு விடும். அது பின்னால் புரிய வரும் போது காலம் கடந்து போய்விடும்.

 

ஒரு எளிய உதாரணம் பாருங்கள்!

 

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள இரண்டு இளம் பெண்கள் டிக்டாக் வீடியேக்களில் வெளிப்பட்டு ஆரம்பத்தில் அவர்களது அழகு, உருவ ஒற்றுமையின் மூலம் சில திறமைகளை வெளிப்படுத்தி லைக்குகளை வாங்கி வந்தார்கள். அது அவர்களுக்கு கொஞ்சம் பண வசதியை ஏற்படுத்தியிருக்க கூடும். இப்போது அந்த மோகம் அவர்களை கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து ஆடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. 

 

ஈமானில் உறுதி கொண்டோருக்கு நிச்சயமாக தெரியும் இந்த போக்கு பிற்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்காது.

 

திரைப்படங்களில் கவர்சியாக நடித்த நடிமை மும்தாஜ் சமீப காலங்களில் என்ன பேசிவருகிறார் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

 

“தயவு கூர்ந்த் எனது பழைய கவர்ச்சியான போட்டோக்களை இப்போது வெளியிடாதீர்கள் என்கிறார். அழுகிறார். எனத் இறைவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என புலம்புகிறார்.

 

இந்த திருத்தம் கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும்

 

தன்னிஷ்ட்த்திற்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அதற்காக வருத்தப்பட நேரும்.  

 

திருக்குர் ஆன் மிக அழுத்தமாக பேசுகிறது.

اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور

 

அறிந்து கொள்ளுங்கள்! என்ற வாசகம் நமது அலட்சியம், ஆணவம் அனைத்தையும் உலுக்கி எடுக்கிற சொல்லாகும். பீ கேர்புல் என்ற எச்சரிக்கைக்கு சம்மாகும். இந்த உண்மையை உணரத்தவறினால் வசந்தம் வாடியபிறகு ஏற்படும் வறட்சியில் தவிப்பீர்கள் என்ற எச்சரிக்கையாகும்.

 

கேரளாவில் ஹேமா கமிஷன் என்ற ஒரு கமிஷனின் அறிக்கை திரைப்பட்த் துறையில் பெண்கள் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

 

மிக பிரம்மாணடமான விளம்பர வெளிச்சத்திற்காக தங்களது வாழ்க்கையை இழந்த ஏராளமான பெண்கள் கண்ணீரும் கம்பளையுமாக தங்களது சொந்தக் கதைகளை பேசுவதை உலகம் கண்டது.

 

இது பெண்கள் சம்பந்தப்பட ஒரு குறிப்பிட்ட துறையில் என்று மட்டுமல்ல. மக்களோடு தொடர்புடைய வியாபாரம், சமூக வாழ்க்கை, அரசியல் அதிகாரம் என அனைத்து துறைகளுக்கும் இது பொதுவானது தான்.  

 

ஈமானிய கட்டொழுங்குகளுக்கு உடபடாத வாழ்க்கை சீர் கேட்டை சந்திக்கும்

 

ஈமானை கட்டொழுங்குக்கு உட்பட்ட வாழ்வு சீரடையும்.

புழைல் இப்னு இயாழ் ரஹ்)

  

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பெருய ஆன்மீக ஆளுமை. மிகப் பேணுதலான வாழ்விற்கு சொந்தக் காரர்.

 

அவருடைய பெருமையை பாருங்கள்

 

ஹாரூன் ரஷீத் “ புழைலைப் போன்ற பேணுதலானவரை நான் பார்த்த்தில்லை என்கிறார்.

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்)” பூமியின் மேபரப்பில் புழைல் அளவுக்கு இன்று சிறந்தவர் யாருமில்லை என்கிறார்

 

ويقول عنه الخليفةهارون الرشيد”: (ما رأيت في العلماء أهيب من “مالك“، ولا أورع من “الفضيل”).

ويقولابن المباركأيضًا: ما بقي على ظهر الأرض أفضل من الفضيل بن عياض.[4]

 

ஆனால் இந்த பெரிய மனிதர் ஒரு நேரத்தில் வழிப் பறிக் கொள்ளையராக இர்ந்தார். எந்த அள்வுக்கு என்றால் அன்றைய மக்கள் பயணத்தை தீர்மாணிப்பதற்கு முன் புழைலின் நடமாட்ட்த்தை கவனித்து தான் பயணம் செய்வார்கள்.

 

ஆனால் அவருடைய உள்ளத்திலிருந்த ஈமானை திருக்குர் ஆனின் ஒரு வாசகம் திருப்பி விட்டது.

ஒரு தீய செயலுக்கு செல்லும் வழியில் அவர் காதில் இந்த வசனம் விழுந்தது.      ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله

அவரது ஈமானிய வாழ்வு இப்போது ஆயிரத்து இருநூறு வருடங்கள் கழித்தும் அவரை பற்றிய பேச்சை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அவரது உபதேசங்களை பின்பற்ற வைக்கிறது.

 

روى ابن عساكر بسنده عن الفضل بن موسى قال: كان الفضيل شاطرا يقطع الطريق بين أبيورد وسرخس وكان سبب توبته أنه عشق جارية فبينما هو يرتقى الجدران إليها سمع تاليا يتلو «ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله» قال: يارب قد آن فرجع فآواه الليل إلى خربة فاذا فيها رفقة فقال بعضهم: نرتحل وقال قوم: حتى نصبح فان فضيلا على الطريق يقطع علينا قال: ففكرت وقلت: أنا أسعى بالليل في المعاصي وقوم من المسلمين هاهنا يخافونني وما أرى الله ساقني إليهم إلا لأرتدع اللهم إني قد تبت إليك وجعلت توبتي مجاورة البيت الحرام.

 

 ஈமானிய வாழ்வால் மகிமையடைந்தோருக்கு

அன்றைய சஹாபாக்களில் இருந்து இன்று சினிமா நட்சத்திரங்கள் வரை ஏராளமான உதாரணங்கள் உண்டு

 

நாம் சிந்திக்க வேண்டும். உணர வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

ஈமானிய வாழ்வின் இரண்டாவது பலன் இழப்புக்களை எத்தகைய இழப்புக்களையும் அது தாங்கிக் கொள்ள வைக்கும்.

இந்த உலகம் நிரந்தரமல்ல என்ற உறுதி எத்தகைய இழப்புக்களுக்கும் நம்மை தயார் படுத்தி விடும்  நல் வாழ்விலிருந்து நம்மை திசை திருப்பாது.

 

முஹம்மது நபி (ஸல் அவர்கள் வபாத்தானதை முஸ்லிம்கள் தாங்கிக் கொண்ட்து இந்த ஈமானிய உறுதியால் தான்.

 

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ ۚ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا ۗ وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ

இழப்புக்களில் நீங்கள் தடுமாறிப் போவீர்களா என்று அல்லாஹ் எச்சரிப்பதை கவனிக்க வேண்டும்.

 

அதனால் வரலாற்றில் எந்த பெரிய சோகத்திலும் முஸ்லிம்கள் நிலை குலைந்து போவதில்லை.

 

துருக்கி கிலாபத் வீழ்ச்சியுற்ற பிற்கு இஸ்லாமிற்கு ஒரு அடையாளம் இனி உலகில் இருக்காது என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்படி நடக்க வில்லை. இரண்டாம் உலக யுத்திற்கு பிறகு 45 க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உலக வரைப் படத்தில் சுயாதீனத்தோடு தோன்றின.  

 

இப்போது யஹயா சினவர் இறப்பிலும் அப்படித்தான் அந்த போரழிகளை அது நிலைய குலைய வைத்து விடாது.

 

அல்லாஹ் அவர்களுக்கு துணை நிற்கட்டும்.

 

ஈமானிய வாழ்வின் மூன்றாவத் பலன்

அது தொடர்ந்து வாழ வைக்கும், போராட வைக்கும் வெற்றி பெற வைக்கும்.

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவ்று குகையின் வாசலில் தங்களை கொல்ல வந்திருக்கிற எதிரிகளை கண்ட போது  

قال الله تعالى:ـ(لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا)

என்று சொன்னார்கள். அது ஈமானிய இயல்பின் உச்சம்.

அந்த வார்த்தையில் இப்போது நம் தப்பிப்போம் என்பது மட்டுமல்ல. இனி வரும் காலம் நம்முடையதே என்ற செய்தியும் இருக்கிறது.

 

அச்சப்படுக்றவர்களாக இருந்தால் நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று சொல்லியிருப்பார்கள். எதிர்காலத்தை பற்றிய பெரும் நம்பிக்கையுடையவர்களே அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று சொல்ல முடியும்.

 

ஈமானிய வாழ்வு எதிர்காலத்தை பற்றி பெரும் நம்பிக்கை தருவதாகும். அது தடுமாற்றத்திலிருந்து பாதுகாக்கும்.

 

ஒரு முதலாளி வெளிநாட்டு விமானப்பயணத்திற்கு தயார் ஆனார். 7 மணிக்கு விமானம். 4 மணிக்கு டிரைவரை வரச் சொன்னார். 3 மணிக்கே எழுந்து தயாராகிவிட்டார்./ 4.30 மணி ஆகியும் டிரைவர் வரவில்லை பதட்ட மடைந்தார் .டிரைவர் வந்த போது அவனை திட்டினார். பாதி தூரம் சென்றதும் ட்யர் பஞ்சர் ஆனது. அவரை வண்டியை திட்டினார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த ஒரு இளைஞன் அவருக்கு லிப்ட் கொடுத்து விமான நிலையத்தில் இறக்கி விட்டார்.

அவருக்கு அந்த இளைஞன் கடவுள் அனுப்பிய உதவியாக தோன்றியது. அந்த இளைஞனை மனதிலும் தொடர்ந்து  பாராட்டிக் கொண்டே இருந்தார். விமானம் கிளம்பியது ; பாதி தூரம் சென்ற போது விமானம் ஆபத்தில் இருப்பதாக விமானி கூறினார். விமானத்தில் இருந்தோர் அனைவரும் பதறினர். அந்த முதலாளிக்கு இப்போது டிரைவர் தாமதமாக வந்ததும் டயர் பஞ்சரானதும் இறைவன் தன்னை காப்பற்ற செய்த ஏற்பாடாக பட்டது அந்த இளைஞன் மரணத்தின் தூதுவனாக தெரிந்தான். இப்போது அந்த இளைஞனை சபிக்க ஆரம்பித்தான்.

 

இது ஈமான் இல்லாத்தால் ஏற்படும் தடுமாற்றம்.

அதே நேரம் ஈமான் உள்ள மனிதர் இவை அனைத்தும் இறவனின் செயல் என்று நினைப்பா.

அதே போல இறைவன் நாடினால் தன்னை இந்த நிலையிலும் பாதுகாப்பான் என்று உறுதி கொள்வார்.

தன்னையும் தன்னுடைன் இருப்பவர்களை பாதுகாத்துக் கொள்ள அவர் உழைப்பார்.

இது தான் ஈமானிய வாழ்வின் சிறப்பம் சம்சம்

அல்லாஹ் நமது ஈமானிய வாழ்க்கையை உறுதிப்படுத்துவானாக!

   

 

No comments:

Post a Comment