Thursday, December 26, 2024

டாக்டர் மன்மோகன் சிங்கின் படிப்பும் பண்பும்

 முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 வயதில் நேற்று இறந்து விட்டார்.

அவரது இறப்பு இன்றைய முக்கியச் செய்தியாகியிருக்கிறது. அது போல அனைத்து மக்களுக்கும் கவலையளித்திருக்கிறது.

இதற்கு காரணம் அவர் முன்னாள் பிரதமர் என்பது மட்டுமல்ல. அவரது படிப்பும் பண்புமாகும்.

இந்த இரண்டு அம்சங்களும் ஒவ்வொரு மனிதரும் குறிப்பாக முஸ்லிம்கள் நினைவில் கொள்ள வேண்டிய செய்திகளாகும்.

படி!

அதிகாரம் மிக்க பொறுப்புக்கள் எந்த ஒரு மணிதருக்கும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். பாரமபரியமாக ஒரு குடும்பத்தில் பிறப்பவருக்குத்தான்  ஆட்சியதிகாரம் கிடைக்கும் என்பதில்லை.

قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ263;


அல்லாஹ்  அவன் விரும்புகிறவர்களுக்குத் ஆட்சியை செல்வாக்கை வழங்குகிறான் என்பது திருக்குர் ஆன் உறுதிபடக் கூறும் தத்துவமாகும்.


இந்த சத்தியக் கோட்பாட்டை அல்லாஹ் பெருமானாரின் வாழ்க்கையில் நிறைவேற்றினான்.

 ·                     மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எட்டுவருடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள். அரசியல் அதிகாரம் என்ற வார்த்தை பிரயோகம் எதுவும் செய்யாமலே மாபெரும் அரசியலமைப்பை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸ்தாபித்தார்கள். அல்லாஹ்வின் விருப்பம் ஒன்றை மட்டுமே அதற்கு காரணமாக சொல்ல முடியும்.

·                      ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர் என்று தந்தை கத்தாபால் ஏசப்பட்ட உமர் (ரலி) இருபத்திரண்ட்ரை இலட்சம் சதுர மைல்களை கட்டியாண்டார்கள்.

·                     வியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும் சாமாணிய கூலித் தொழிலாளியான அலி ரலி அவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.

திருக்குர் ஆன் சில பழைய வரலாறுகளை சுட்டிக் காட்டுகிறது.

·                     கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் (அலை) எங்கோ இருக்கிற எகிப்தின் அரியனையை அலங்கரித்தார்கள்.

·                      ஜாலூட்தின் (கோலியத்) படையில் சாதரண கவன் அடிக்கும் வீர்ரான தாவூத் (அலை) டேவிட் இஸ்ரவேலர்களின் அரசரானார். 

 மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்

இந்த வரிசையில் டாக்டர் மன் மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக சுமார் 10 ஆண்டுகளும் அதற்கு முன் நிதியமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தார் என்பதும் அடங்கும்.

அவர் நிதியமைச்சராக பொறூப்பேற்பதற்கு முன்  அரசியல் அரங்கிற்கு தொடர்பே இல்லாதவராவார் என்பது கவனிக்கத்தக்கது.

மன்மோகன் சிங் பஞ்சாப்  பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில்   BA மற்றும் MA  தங்க மெடல் பெற்ற அவர் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பயில்கிற போது பல்வேறு   விருதுகளை வென்றுள்ளார். பிறகு ஆக்ஸ்போர் பல்கலையில் D.phil பட்டம் பெற்று டாக்டரானார். அவரது கவுர பட்டங்களை கூற ஒரு பட்டியல் தேவை

தனது கல்வியறிவின் காரணமாக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த அவர் இந்திய ரிசர்வு வங்கியின் கவர்ணராக ஆனார். நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்கள் அவருடைய கையெழுத்தோடு வெளியாயின.   

இது எதிர்ப்பார்க்கப் படக்கூடிய ஒரு முன்னேற்றம் தான்.  கல்வி எவரையும் உயர்த்துة

 يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

.ஆனால் 1991 ல் நரசிம்மராவ் திடீரென இந்தியப் பிரதமரான போது இந்தியாவின் நிதியமைச்சராக மன்மோகன் பெயர் அறிவிக்கப் பட்ட்து நிச்சயமாக யாரும் எதிர்பாராததே!

 அவரே கூட எதிர்பாராதது. “நீங்கள் தான் நிதியமைச்சர் என்று பிரதமரின் முதன்மை செயலாளர்     சொன்ன போது அதை ஒரு ஜோக் என்று நினைத்தார். அடுத்த நாள் அவர்  தயாராகுமாறு  கோபத்தோடு சொன்ன போது தான் விசயம் உறுதியாயிற்று என்கிறார் பிரிட்டிஷ் செய்தியாளர் மார்க டல்லி

·                      Singh told Mark Tully the British journalist in 2005 "“On the day (Rao) was formulating his cabinet, he sent his Principal Secretary to me saying, `The PM would like you to become the Minister of Finance’. I didn’t take it seriously. He eventually tracked me down the next morning, rather angry, and demanded that I get dressed up and come to Rashtrapati Bhavan for the swearing in. So that’s how I started in politics”

 (செய்திகளை தொடர்ந்து கவனிக்கிற எனக்கு மன்மோகன் சிங் ரிசர்வு வங்கி கவர்னராக இருப்பதும் அவரது கையெழுத்து ரூபாய் நோட்டுக்களில் இருப்பதும் தெரியும் என்றாலும். நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்ற அந்தச் சபையில் (21 ஜூன் 1991) இரண்டாவதாக மன்மோகன் அழைக்கப் பட்ட போது  என்று எழுந்த ஆச்சரிய அலையை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.)

 அதன் பின்னார் தான் அவர் காங்கிரஸ் காரர் ஆனார். பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அவர் தவிர்க்க முடியாதவராக மாறினார். சிறிது காலம் இரயில்வே துறை  பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த அவர் 22 மே 2004 ல் இந்தியாவின் சர்வ அதிகாரம் பெற்ற பதவியான பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். மட்டுமல்ல ஒரு முழு ஐந்தாண்டு பதவியை முடித்துக் கொண்ட பிறகு இரண்டாவது முறையும் பிரதமரானார். நேருவுக்குப்பிறகு வேறு எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது.   

 இதில் அதைவிடவும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முறை கூட அவர் மக்களை நேரடியாக தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற்றதில்லை.  

 1999 ல் நடைபெற்ற தேர்தலில் தெற்கு தில்லியில் போட்டியிட்ட அவர் தோற்றுப் போனார்.

 நிதியமைச்சராக ஆவதற்கு முன்பு வரை மாருதி 800 காரைத் தவிர (noting that he drives a Maruti 800 வேறு காரை அவர் ஓட்டியதில்லை. பிறகு இந்திய அரசாங்கத்திற்கு என்று வாங்கப்படுகிற உயர்தரமான் பி எம் டபிள்யூ ரக கார்களிலும் குண்டு துளைக்காத கார்களிலும் தனி விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலுமே அவரது  பயணங்கள் அமைந்தன.

குஷ்வந்த் சிங் தன்னுடையை  Absolute Khushwan  நூலில் 1999 ல் நடைபெற்ற தேர்தலின் போது வாடகை காருக்காக செலவான ரூபாய் 2 இலட்சத்தை தன்னிடமிருந்து மன்மோகன் கடன்  வாங்கியிருந்த்தாகவும். அத் தேர்தலில் தோற்ற உடனே அதை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார்.

 

·                     The Low-Down on Life, Death and Most things In-between where after losing the 1999 Lok Sabha elections, Singh immediately returned the 2 lakh he had borrowed from the writer for hiring taxis. 

1991 க்கு முன் சாதாரண இந்திய குடிமக்களுக்கு அறிமுகமில்லாத -  அரசியல்வாதி அல்லாத அவர் அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் மற்ற நாட்டு அரசியல் தலைவர்களால் மதிக்கப்படுபவராக ஆனார். உலகின் பிரபல பத்ரிகையான அமெரிக்காவின் பிரநியூஸ்வீக் எழுதுகிறது .

 மற்ற உலகத்தலைவர்களின் அன்பிற்குரிய தலைவர்

 In 2010, Newsweek magazine recognised him as a world leader who is respected by other heads of state, describing him as "the leader other leaders love.

·                  முன்னாள்அமெரிக்க அதிபர் ஒபாமா  அரசுத்தலைவர்களுக்கு அளித்த விருந்துகளில் அதிக செலவு பிடித்த விருந்து இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு வழங்கிய விருந்து தான் என பத்ரிகைக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ·                    கல்வி ஒரு மனிதனை எந்த அளவு உயர்த்தும் என்பதற்கு மன்மோகன் ஒரு நவீன உதாரணம்.

 அதிகாரமும் பொறுப்பும் திடீரென எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கிற போது நாம் அதற்குரிய கல்வியை முன் கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

 ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் மிகுந்த தீர்க்க தரிசனத்தோடு சொன்னார்கள்.

 قال عمر بن الخطاب - رضي الله عنه -: تفقهوا قبل أن تسودوا .

சிறுபான்மை இனம் உலகில் முன்னேற அல்லாஹ் வைத்திருக்கிற ஒரு முக்கிய வாய்ப்பு கல்வியாகும்.

நாம் பெறுகிற எந்த ஒரு கல்வியும் நாளை நம்மை ஒரு உயரத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும். அதை நாம் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம். அத்தகைய உயர் அந்தஸ்தை பெறுகிற போது நாம் அதற்கு தகுதியுடைவராக இருந்தால் நிச்சயமாக நாம் வகிக்கும் அந்த பதவி – அதற்கான காலம் முடிந்த பிறகு பாராட்டிற்குரியதாக அமையும்.

இளம் பருவத்திலேயே பிரபலமாகி விட வேண்டும், தலைவர்களாகி விட வேண்டும் என்ற ஆசை முஸ்லிம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கிறது.

ஆனால் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதியும் இருப்பதில்லை.

இது மிகப்பெரிய பலவீனமாகும்.

வளரும் பருவம் என்பதும் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கான பருவமாகும். வெட்டி பந்தாவை விட

 இன்று மன்மோகன் சிங் அவர்களுக்கு கிடைக்கிற பாராட்டுச் சொற்கள் அனைத்தும் அதற்கு உதாரணமாகும்.

 டாக்டர் மன்மோகன் சிங்கின் பெருமைக்கு மற்றொரு காரணம் அவருடைய பண்பாடாகும்.

 நேற்றிரவு அவருக்கு இரங்கல் தெரித்த இந்தியாவின் மிக பிரபலமான அரசியல் வாதி ஒருவர் கூறுகிறார்.

 “இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல்வாதியும் மன்மோகனை மதிக்காமல் இருக்க முடியாது. காரணம் அவர் கறைபடாதவர் –

சிக்கல்களை உண்டு பண்ணாதவர்.”

தலைமை பொறுப்பு என்பது மதிப்பிற்குரியதுதான் ஆனால் அந்த பொறுப்பில் இருப்பவர்கள் அதை தமது குணத்தால் மதிப்பிற்குரியதாக ஆக்க வேண்டும்.

இஸ்லாமில் 5 ம் கலீபா என்றழைக்கப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களைப் பற்றி சொல்லப்படும் செய்திகள் அவர் தனது பதவிக்கு எப்படி மரியாதை சேர்த்தார் என்பதை சொல்கிறது.

பதவி ஏற்ற  இரண்டாம்  நாளில் அலங்கரிக்கப் பட்ட குதிரைப் பூட்டிய சாரட் வண்டியை அரசின் கருவூலத்திற்கு திருப்பி அனுப்பினார்.

 அரச மாட்த்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்திற்கு  அனுப்பிவிட்டு சாதாரண பாயை விரித்து அமர்ந்தார். உயர் ரக அரசஆடைகளை கரூவூலத்திற்கு அனுப்பி விட்டு சாதாரண ஆடைகளை அணிந்தார்.  அரசமாளிகையில் இருந்த பணிப்பெண்களை அவர்களது இட்த்தையும் விசாரித்து திருப்பி அனுப்பினார்,

 அரசர்கள தங்களது பணிகளை கவனிக்க சேவர்களை நியமிப்பார்கள்.  உமர்,  தன்னை கண்காணிக்க –தான் செய்யும் தவறை சுட்டிக்காட்ட  சேவகரை நியமித்தார். (விக்கீபீடியா இணைய தளம்)

 - Rulers usually appoint people to watch over their subjects. I appoint you a watcher over me and my behaviour. If you find me at fault in word or action guide me and stop me from doing it Umar Ibn Abd al-Aziz

 மன்மோகன் சிங் இந்த இன்றுள்ள பிரதமர்களை விட மிக கை சுத்தமானவராக இருந்தார்.

அவர் பெரிய பொருளாதார வல்லுனராக இருந்த போதும் கூட நாட்டின் எந்த பெரிய முதலாளிக்கும் அவர் நெருக்கமாக இருந்தார் என்று சொல்ல முடியாது. எந்த பெரிய முதலாளியும் கடன் வாங்கி விட்டு தப்பித்து ஓடினார் என்று சொல்ல முடியாது.

அதே போல 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரது நடவடிக்கைகள் மக்களை சிரமப்படுத்தியதில்லை.

அவரது காலத்தில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த்து. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 48 ரூபாயக் இருந்தது. இப்போது அது 84 ரூபாயாக மாறியிருக்கிறது.

நம்மில் யாரும் தலைமை பொறுப்பிற்கு வருகிற போது மக்களை சிரமப்படுத்துகிறவரக்ளாக இருக்க கூடாது. எவ்வளவு தூரம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

ஆதிக்க மோகமும் பணப்பித்தும் கொண்டவர்கள் இறுதியில் இழிவையே சந்திப்பார்கள். வரலாறு அவர்களை தூற்றும் அவர்கள் எவ்வளவு திறமையாளர்களாக வெற்றியாளர்களாக இருந்தாலும்

فقال صلى الله عليه وسلم: "تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَعَبْدُ الدِّرْهَمِ وَعَبْدُ الْخَمِيصَةِ، إِنْ أُعْطِىَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ سَخِطَ، تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ" (البخاري 2887

பொற்காசின் அடிமையும் வெள்ளி காசின் அடிமையும் கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான் செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபம் அடைவான் அவன் துர்பாக்கியவான் ஆகட்டும் அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்து விட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்.

 فَقَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ -  البخاري7151 

மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத ஆட்சியாளருக்கு எச்சரிக்கை

  فَقَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمْ الْجَنَّةَ-  مسلم -205

 படிப்பிலும் பண்பிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்பது டாட்டர் மன்மோகன் சிங் என்ற சாமணிய மனிதர் சரித்திர மனிதரானது நமக்கு தருகிற பாடங்களாகும்.

 

3 comments:

  1. Anonymous8:22 PM

    மாஷாஅல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு ஜஸாக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete