Thursday, February 06, 2025

இருமுகம் வேண்டாம் .

 

ரமலான் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நாம் வாழ்கிற காலத்தில் நிகழ்கிற மாற்றங்கள் பரிசுத்தமான ஈமானை கேள்விக்குள்ளாக்குகின்றன.

·         உல்லாசத்தின் மீதான நாட்டம் சட்டங்களை மீற வைக்கிறது.

உதரணத்திற்குஆண் பெண் கலப்பு, ஆடைகளில் குறைஹராம்களை கண்டு கொள்ளாமை சர்வசாதாரணமாகி இருக்கிறது.

1.   சுதந்திரத்தின் மீதான நாட்டம் ஈமானை தளர்வடையச் செய்கிறது.

நான் நபிகள் நாயகத்தை பரிசுத்தமானவர் என்று ஏன் நம்ப வேண்டும் என்று கேட்கிற சூழல் உருவாகியிருக்கிறது.

அடுத்துவருகிற ரமலானை அல்லாஹ் நமது ஈமானிய உணர்வையும் இஸ்லாமிய வாழ்வையும் பலப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக ஆக்கியருள்வானாக!

முஸ்லிம்கள் எப்போதும் சிந்தனையில் இருத்தவ வேண்டிய ஒரு எச்சரிக்கையை திருக்குர் ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 136 வது வசனம் கூறுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنزَلَ مِن قَبْلُ ۚ وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا (136)

முஃமின்களை ஈமான் கொள்ளுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

நமது முன்னோர்களை திகைப்பில் ஆழ்த்திய செய்தி இது.

நான் கலிமா சொல்லியிருக்கிறேன் என்று நிம்மதி யடைந்து விட முடியாது. கலிமா சொன்ன படி நடக்கிறேனா என்பதை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வை ரப்பாகவும் முஹம்மது (ஸல்) அவர்களை ரஸூலாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு அதற்குரிய வாழ்க்கை என்னிடம் இருக்கிறதா என்று ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். 

என் கண்கள் முஸ்லிமாக இருக்கிறதா

எனது காதுகள் முஸ்லிமாக இருக்கிறதா

எனது நாவு முஸ்லிமாக இருக்கிறதா

எனது கைகள் கால்கள் முஸ்லிமாக இருக்கிறதா

எனது இதயத்தில் அல்லாஹ் அல்லாதவை தானே நிறைந்திருக்கின்றன?

உலகின் மரியாதையும் பெருமையும் தானே சிந்தனையை ஆக்ரமிதித்திருக்கிறது ?

என்ற வகையில் ஒவ்வொன்றாக சிந்திக்கிற பொறுப்பை இந்த ஆயத் நமக்கு உணர்த்துகிறது.

இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் எச்சரிக்கிறது. அச்சப்படுத்துகிறது. 

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹுதைபா ரலி அவர்களிடம் தன்னுடைய பெயர் முனபிக்குகளின் பட்டியலில் இருக்கிறதா என்று விசாரித்து அதை தெளிவு படுத்திக் கொண்ட பிறகு தான் நிம்மதியடைந்தார்கள்

فعن حذيفة قالدعي عمر لجنازة، فخرج فيها، أو يريدها، فتعلقت به، فقلت: اجلس -يا أمير المؤمنين-، فإنه من أولئك. فقال: نشدتك بالله، أنا منهم؟ قال: "لا، ولا أبرئ أحدًا بعدك

            رواه البزار، ورجاله ثقات       

அதே போல் உம்மு சலமா அம்மாவிடமும் ஒரு ரகசியத்தை அறிந்து கொள்ள துடித்தார் உமர் ரலி அவர்கள்

 என் தோழர்களில் சிலர் எனது மரணத்திற்கு பிறகு என்னை சந்திக்க முடியாது என்றார்கள் நபி (ஸல்) அந்த பட்டியலில் தானும் இடம் பெற்றுவிடுவேனோ என பயப்படுவார்கல் உமர் ரலி

 فقد سأله أيضًا لأم سلمة، حين قالتسمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إن من أصحابي من لا يراني بعد أن أفارقه»، فقال لها عمر: بالله أنا منهم؟ قالت: «اللهم لا، ولن أبرئ أحدًا بعدك». رواه أحمد

 அல்லாமா இக்பால் அருமையாக ஒரு கவிதையில் கூறுவார்

 நீ அரபியோ அஜமியோ

உன் இதயம் சாட்சிப் படுத்தாத வரை

லாயிலாக உனக்கு அன்னியம் தான்!

 تو عرب ہے یا عجم ہے تیرا لا الہ الا لغتِ غریب جب تک ترا دل نہ دے گواہی

நபி (ஸல்0 அவ்ர்கள் இப்படி சொல்லியிருக்கிறரர்கள்

பள்ளிவாசல்களில் தொழுகையாளிகள் நிறைந்து இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வின் நினைவு காலியாக இருக்கும்.

இன்று நாம் இதயத்தோடு பெரிதும் போராட கடமைப் பட்டிருக்கிறோம். இரட்டை வாழ்க்கை விட்டு ஒரு முகப்பட்ட வாழ்க்கையை நமக்கு நாமே அடிக்கடி உத்தரவிட வேண்டிய் அவசியம் இருக்கிறது.

நாம் வெறும் வாயில் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு நம் மனம் போன படி வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதை தடுத்தாக வேண்டும்.

இன்றைய முஸ்லிம்களின் அவசர அவசிய தேவையாக இது உருவெடுத்திருக்கிறது.

நாம் சரியான முஸ்லிமாக இருப்பதற்கு, நம்முடைய ஒவ்வொரு செயலையும் இஸ்லாமிய அளவு கோள்படி சரிதானா என்று சிந்திக்கவும், சரியில்லை என்றால் சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தவ்பாவும் அதற்கான முயற்சியும் செய்வது அவசியமாகும்.

 பரிசுத்தமான ஈமானிய வாழ்க்கையை மாசு படிந்த நிலையிலிருந்து பாதுகாப்பத்ற்கு சில வழிகள் உண்டு.

சக மனிதர்களிடம் இரு முகத்தோடு நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இங்கு ஒரு விதமாக அங்கு ஒரு விதமாக நடப்பது நிபாக் வஞ்சகமாகும். முகத்துக்கு நேரே சிரிப்பதும் முதுகுக்குப் பின் கருவுவதும் நிபாக் ஆகும்.

  இந்த வஞ்சகம் மனிதரில் தொடங்கி அல்லாஹ்விடம் வஞ்சகம் வெளிப்படுவதை வளர்ந்து விடக் கூடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

·         تجد من شرار الناس يوم القيامة عند الله ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه ) البخاري.

·         حديث عمار بن ياسر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : ( من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من نار ) رواه أبو داود.

·         حديث أبي هريرة رضي الله عنه قال : إن رسول الله صلى الله عليه و سلم قال :( لا ينبغي لذي الوجهين أن يكون أمينا) رواه البخاري

 கண்களின் வஞ்சகம் தவிர்க்கவும்.

நமது கண்கள் வஞ்சகம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இடைக்கண் பார்வைசாடைகளால் தீங்கு செய்வது, கண்களால் கேலி பேசுவது, கண்களை சுருக்கி இழிவு படுத்துவது போன்ற உண்மைக்கு எதிரான கண் அசைவுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

இது நல்ல மனிதர்களின் குனம் அல்ல;

அல்லாஹ் பார்வைகளின் ஓட்டத்தையும் அதன் பாவச்  சிந்தனைகளையும் அறிந்திருக்கிறான்.

يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ (

கடும் தண்டனை அறிவிக்கப் பட்ட ஒருவர் விவகாரத்தில் கூட கன் சாடை காட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் மறுத்தார்கள்.

 உஸ்மான் ரலி அவர்களின் பால் குடிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் சஃது பின் அபீஸரஹ்

 عبد الله بن سعد بن أبي السرح

وهو أخو عثمان بن عفان من الرضاعة ووالي مصر

இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது இவரிடமிருந்த அறிவாற்றல் காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் அவரை வஹியை எழுதும் எழுத்தர்களில் ஒருவராக நியமித்துக் கொண்டார்கள். ஒரு முறை பெருமானார் (ஸல்) சமீஉல் அலீம் என்று எழுதச் சொன்ன போது இவர் அந்த இடத்திற்கு அலீமுன் ஹகீம் என்பது தான் பொருத்தமானது என்றார்.

أن النبي أملى عليه (السميع العليم) فكتبها عبد الله (العليم الحكيم

அதன் பெருமானர் (ஸல்) அவர்களுடன் முரண்பட்டு இஸ்லாமை விட்டு வெளியேறி மக்காவிற்கு சென்று விட்டார்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது பலருக்கு மன்னிப்பு வழங்கினாலும் சிலருக்கு மன்னிப்பு கிடையாது அவர்களுக்கு மரண தண்டனை தான் என்றார்கள். அப்துல்லாஹ்வும் அவர்களில் ஒருவர். உஸ்மான் ரலி அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு பெருமானாருக்கு முன்னள் வந்து மூன்று முறை அவரை மன்னிக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே அவரது அம்மா என்னை  மிகவும் கருணையோடு வளர்த்தார். ஆகவே இவரை மன்னித்து விடுங்கள் என்று  பணிந்து நின்றார். பெருமானாரை கட்டிப்பிடித்து அவர்களது நெற்றியில் முத்தமிட்டு கெஞ்சினார். நீண்ட நேரம் பெருமானார் (ஸல்) அவர்கள் மவுனமாகவே இருந்தர்கள். கடைசியாக சரி என்று சம்மதித்து பை அத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்விருவரும் அந்த இடத்தை விட்டு கடந்த பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் சொன்னார்கள். நான் மன்னிக்க தாமதமான போது உங்களில் யாராவது அவரை கொன்றிருக்க கூடாதா ? அப்போது உப்பாத் பின் பிஷ்ரு ரலி கேட்டார் ; அல்லாஹ்வின் தூதரே நீங்கள் கண்ஜாடை காட்டியிருக்க கூடாதா ? நான் உங்களது கண் அசைவை தான் அனைத்து திசைகளிலும் கவனித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கண் அசைத்திருந்தால் நான் அவரது கதையை முடித்திருப்பேன் என்றார். முஹம்மது நபி (ஸ்ல் ) அவர்கள் கூறினார்கள். ஒரு நபி கண் ஜாடையல் மோசம் செய்யக் கூடாது. என்றார்கள்.

في السنة الثامنة للهجرة، كان فتح مكة، وكان هُناك أحد عشر شخصاً (ثمانية رجال وثلاث نساء) أمر النبي بقتلهِم ولو وجدوا مُتعلقين بأستار الكعبة، وكان عبد الله منهُم، ولم يُقتلوا جميعاً وإنما قُتل بعضهم وعفى عن بعضهم، وكان عبد الله بن أبي السرح ممن عُفي عنهم، وكان أخ عثمان بن عفان في الرضاعة، فأختبأ في منزله - أي منزل عُثمان - ولما وجده عُثمان قال له عبد الله، يا أخي إني والله أخترتُك فأحتسبني ها هنا وإذهب إلى مُحمد وكلمه في أمري، فإن محمداً إن رآني ضرب الذي فيه عيناي إن جُرمي أعظم الجُرم وقد جئت تائباً فقال له عُثمان بل تذهب معي، فلم يرع النبي إلا بـ عثمان أخذ بيد عبد الله بن سعد بن أبي السرح واقفين بين يديه فأقبل عُثمان على النبي فقال يا رسول الله إن أمه كانت تحملني وتمشيه وترضعني وتقطعه وكانت تلطفني وتتركه فهبه لي، وأكب عُثمان على رسول الله يُقبل رأسه وهو يقول يا رسول الله، تُبايعه، فداك أبي وأمي يا رسول الله فصمت النبي محمد طويلاً ثم قال: «نعم» فبايعه النبي محمد على الإسلام. وبعد رحيلهما التفت إلى أصحابه وقال ما منعكم أن يقوم أحدكم إلى هذا فيقتُله؟ فقال عباد بن بشر ألا أومأت إلي يا رسول الله؟ فـ والذي بعثك بالحق إني لأتبع طرفك من كل ناحية رجاء أن تشير إلى فـ أضرب عُنقه فقال الرسول صلى الله عليه وسلمإن النبي لا ينبغي أن تكون له خائنة الأعين».

 மன்னிப்பு கிடையாது என்று தீர்மானிக்கப்பட்ட ஒருவர் விவகாரத்தில் கூட கன் ஜாடை காட்டி பேச பெருமானார் (ஸல்) அவர்கள் தயங்கினார்கள் என்கிற போது சாமாணிய மனிதர் யார் விவகாரத்தில் கண் ஜாடையால் வஞ்சகம் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

பேச்சில் சூது வாதுபொடி வைத்து பேசுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

பலரிடமும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகிற வழக்கம் இருக்கிறது. இது இழிவானது. மிகவும் அச்சப்படக் கூடியது.  

 

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும். 

 

என்று வள்ளலார் கூறுவது இதன் இழிவை உணர்த்தும் ஒரு பிரார்த்தனை ஆகும்

 காட்டில் வாழும் கரடிக்கு கூட நான் பயப்பட மாட்டான் இறை வனை பயப்படாமல் இப்படி வாழ்கிற மனிதர்களுக்கு நான் பயப்படுகிறேன் என்றார் சைவ  சமய அறிஞர் திருநாவுக்கரசர்.

 திருக்குர் ஆனின் ஆரம்ப வசனங்கள் பலவும் மதீனாவில் வாழ்ந்த நயவஞ்சகர்களின் இந்த நாடகத்தை படம் பிடிக்கின்றன.

 அல்பகரா அத்தியாயத்தின் தொடக்கத்தில் முஃமின்களைப் பற்றி இரண்டு வசனங்களிலும் காபிர்களை பற்றி 2 வசனங்களிலும் பேசுகிற இறைவன் இந்த முனாபிக்குகளை பற்றி 15 வசனங்களில் பேசுகிறான்.

 சமூகம் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக.

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ

يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ

 அவர்களது பேச்சு எப்படி இருக்கும் என்று குர் ஆன் கூறுகிறது

 وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ

 யூதர்களின் வஞ்சக விளையாட்டையும் குர் ஆன் கூறுகிறது.

 வஞ்சகத்தோடு வார்த்தை வளைத்துப் பேசுவது.

 ஆ! நீங்க சொன்னதை எல்லாம் கேட்டு கிட்டோம். அதற்கு மாறு செய்வோம். என்று கூறுவது.

ராயீ..னா என்று வார்த்தையை நீட்டுவது. மேம்போக்காக கேட்கிற போது எங்கள் மீது கருணை காட்டுங்கள் என்று பொருள் வரும் கொஞ்சம் கவனித்துக் கேட்டால் எங்களது ஆடு மேய்ப்பவரே என்று அர்த்தம் தரும்.

 من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ) [ النساء : 46 

 யூதர்கள் பெருமானாரிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்க என்று கூறுவார்கள் அதன் பொருள் உங்களுக்கு மரணம் ஏற்படட்டும் என்பது. நபி (ஸல்) அவர்கள் அதற்கு வ அலைக்க என்று மட்டும் பதில் கூறுவார்கள். அதன் பொருல் நீங்கள் நினைப்பது உங்களுக்கு நடக்கட்டும் என்பது.   

 இது போன்ற சொல்லாடல்களை தனிப்பட்ட அளவிலும் குடும்ப அளவிலும் சமூக அரங்கிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 அரசியல் அரங்கிலும் சமூக செயல்பாட்டிலும் தலைவர்கல் சில நேரங்களில் மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.

 நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் மிக ஆபத்தானவர்கள்

 அமெரிக்க அதிபர் டிரம்ப் காஸாவின் மக்களுக்கு நல்ல வீடும் நல்ல வசதிகளும் வேண்டும் எனவே அங்கிருப்பவர்கள் காஸாவை காலி செய்து விட்டு எகிப்து அல்லது ஜோர்டானில் குடியேற வேண்டும். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்கிறார்.

என்ன வன்மம் நிறைந்த வார்த்தைகள் பாருங்கள்!

 40 இலட்சம் மக்கள் வாழும் காஸா நகரம் இப்போது கட்டிட இடுபாடுகளின் குப்பை மேடாக இருக்கிறது. எந்த வித அடிப்படை வசதியும் கிடையாது. அதையும் மீறி கொஞ்சம் போர் ஓய்வு கிடைத்திருக்கிற சூழலில் மக்கள் தங்களது குடியிருப்பை அமைத்து வருகிறார்கள் .இஸ்ரேலின் கொடும் ஆக்ரமிப்பை தலை முறைகளாக சகிப்புத்தன்மையோடு எதிர் கொண்டு போராடி வருகிறார்கள்.

அங்கிருந்து அந்த மக்களை துரத்துவேன் என்று சொல்வதை என்ன நயமான வார்த்தைகளில் பேசுகிறார் பாருங்கள்

 இப்படித்தன் பொடி வைத்துப் பேசும் பேச்சுகள் மற்ற மக்களை பாதித்து விடக் கூடியவை

 நமது நம்பக தன்மையை கேலிக் குள்ளாகக் கூடியவை.

 அதனால் இது மாதிரியான  பழக்கத்தை எங்கும் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது.

 மக்களிடம் நாம் வஞ்சகமாக நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்கிற போது  நமது ஈமானில் அது ஏற்பட்டு விடாது அல்லாஹ் பாதுகாப்பான்.

 ஈமானில் மாசு ஏற்படுவதை தவிர்க்க மற்றொரு வழி

 மற்றவர்களுக்கு நல்லதையே நினைப்பதாகும்

 அபுல் ஹஸன் நூரி ரஹ் அவர்களிடம் அப்போதைய அரசன் தனக்கு சார்பான ஒரு பத்வாவை எதிர்பார்த்தான். அது கிடைக்கவில்லை என்றதும் அவரையும் அவருடன் இருவரையும் சேர்த்து மரண தண்ட்னைக்கு உட்படுத்தினான்.  தண்டனையை நிறைவேற்ற தயாரான போது அபுல் ஹசன் நூரி முத்லாவதாக வந்து நின்றார். அவர் மீது அரசனுக்கு ஒரு மரியாதை இருந்தது. அவரை காப்பாற்ற நினைத்த அவன் இந்த இடத்தில் அல்ல; இந்த இடத்தில் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று வேறு இடத்தை காட்டினான் மற்றவர்களுக்கு தண்டனையை கொடுத்து இவரை காப்பாற்றி விடலாம் என்று அரசன் நினைத்தான். ஆனால் அங்கும் அபுல் ஹஸன் நூரியே முதலாவதாக நின்றார். அரசன் அவரை அழைத்து காரணம் கேட்டார். அபுல்ஹஸன் கூறினார். வேறென்றும் இல்லை எனக்கு தண்டனை நிறைவேற்றப் படும் நேரத்தின் அளவுக்காவது அவர்கள் இருவரும் உயிர் வாழட்டும் என்று நினைத்தேன் என்றார். அரசன் மனம் மாறினான்.

 இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் வட நாட்டில் காந்தலா என்ற ஊரில் ஒரு நிலத்தகறாறு ஒரு இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் இடையே நடந்தது. கடைசியில் அது இரு சமூகங்களின் பிரச்சினையாக மாறியது. இரண்டு தரப்பும் தாங்கள் ஜெயித்தால் அந்த இடத்தில் கோயில் அல்லது பள்ளிவாசல் கட்டுவோம் என்று பேசின. பிரச்சினையின் சூட்டை உணர்ந்த் ஆங்கில் ஜட்ஜ் இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது இந்துக்கள் சொன்னார்கள். இந்த கிரமாத்தில் இலாஹி பக்ஸ் காந்தலவி என்று ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள். அவரிடம் நீதிபதி விசாரித்த போது அது இந்துவுக்கு சொந்தமான இடம் என்று அவர் கூறினார். இங்கு கோயில் கட்டுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று ஜட்ஜ் கேட்டார். இடம் இந்துவுடையதாக இருக்கிற போது கோயில் கட்டினால் அதில் தவறென்ன என்று கூறினார். நீதிபதி தீர்ப்பில் எழுதினார். முஸ்லிம்கள் தோற்றனர். ஆனால் இஸ்லாம் வென்று விட்டது.

 இதை கேட்ட இந்துக்களும் மனம் மாறி கோயில் கட்டும் திட்டத்தை கை விட்டனர். பலரும் இஸ்லாமை ஏற்றனர்

 நாம் பேதமின்றி மக்களுக்கு நன்மையை நாடுகிற போது நிச்சயம் நமக்கு நன்மைகள் நடக்கும்

அந்த நன்மைகளில் பிரதானமாக நமது ஈமான் பாதுகாக்கப்படும்

 நாம் நமது உடல் உள்ளம் முழுவதுமாக முஸ்லிமாக இருப்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

 

No comments:

Post a Comment