Thursday, May 22, 2025

துல்கஃதா போர் நிறுத்தத்தில் இபுறாஹீம் நபியின் தனிப் பெரும் சாதனை

  إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ

 இஸ்லாமிய மாதங்களில் 11 வது மாதம் துல்காதா. 

 யுத்தம் தடை செய்யப் பட்ட நான்கு மாதங்கள் உண்டு. அவை துல் கஃதாவில் தொடங்குகின்றன. துல்ஹஜ் முஹர்ரம் என்று தொடர்கின்றன. இடையில் ரஜப் மாதம் வருகிறது. 

 கஃத என்ற வார்த்தைக்கு இருத்தல் என்று பொருள். யுத்தம் செய்யாமல் இருக்கிற மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

 நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்கள் போர் நிறுத்த காலங்களாகும்.

 عن النبي صلى الله عليه وسلم قال"إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السموات والأرض، السنة اثنا عشر شهراً منها أربعة حرم، ثلاثة متواليات: ذو القعدة وذو الحجة والمحرم، ورجب، شهر مُضر، الذي بين جمادى وشعبان.

இறைவனின் தீர்மானத்தில் இம்மாதங்கள் தொடக்கத்திலிருந்தே போர் நிறுத்த காலங்களாக இருந்தாலும் இது நடப்பில் வந்தது இபுறாஹீம் அலை அவர்களது காலத்திலிருந்தாகும்.

 இபுறாகீம் நபியின் காலத்திலிருந்து அதாவது சுமார் 4500 வருடங்களாக ஹஜ் நடைமுறையில் இருக்கிறது. 1437 ஆண்டுகளாக இஸ்லாமிய ஹஜ் நடை முறையில் இருக்கிறது.  

 ஹஜ்ஜை அச்சமின்றி நிறைவேற்றும் வசதிக்காக ஹஜ்ஜுக்கு முன் ஒரு மாதமும் ஹஜ்ஜுக்கு பின் ஒரு மாதமும் யுத்தமில்லா காலமாக அரபுகள் வகுத்துக் கொண்டிருந்தனர். இந்த கால கட்டத்தில் அரபுக் குலங்களுக்கு இடையே எந்த தாக்குதலும் நடைபெறாது. அப்படி நடை பெறுவதை மிகப்  பெரிய இழிவாக கருதினர்.

 இந்த பழக்கமும் கூட இபுறாகீம் நபி (அலை) அவர்களிடமிருந்தே வந்ததாகும்.

 இபுறாஹீம் நபியின் நிர்வாக உன்னதம்

 இன்று உலகில் புகழ் பெற்ற தலைவர்களாக பலர் அறியப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கோமாளிகளாகவும் குரூரமானவர்களாகவுமே இருக்கிறார்கள். தலைமுறைகளை கடந்து மனித வரலாற்றில் தாக்கம் செலுத்துவபர்களாக இருப்பதில்லை. ஆட்சிக்காலத்திற்குப் பிறகு அவர்களுடைய அடையாளங்கள் குப்பைத் தொட்டிகளுக்குள் வீசப்படுகின்றன.

நபி இபுறாஹீம் அலை அவர்கள் உன்னதமான தலைமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

அவரது தீர்க்கமாண செயல்களும் திட்டங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்தும் வரலாற்றில் நிலை பெற்று நிற்பதை பார்க்கிறோம்.

 தலைமைத்துவத்திற்கான பாடங்களை காசு கொடுத்து படிப்பதில் அக்கறை செலுத்துகிற இன்றைய மக்கள் சும்மாவே கிடைக்கிற நபி இபுறாஹீம் அலை அவர்களின் வாழ்க்கையை ஒருமுறையேனும் படித்து பார்க்க வேண்டும்.

 ஒப்பற்ற தலைமைக்கான பாடங்களை அதில் படித்துக் கொள்ள முடியும்.  

 இபுறாஹீம் நபியை ஒரு நபியாக மட்டுமே முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். அவரை பெரும் தியாகியாக போற்றுகிறார்கள். அத்துடன் கிடைக்கிற அவரது தலைமைப் பண்பின் உன்னத இயல்புகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள். தங்களுடைய இளைய சமுதாயத்திற்கு  இபுறாஹீம் நபியை முன்னோடியாக்க மறந்து விடுகிறார்கள்.

 கஃபாவின் தொன்மையும் இபுறாஹீம் நபியின் நிர்வாகமும்.

 இஸ்லாமிய வரலாற்று மூலங்கள் பூவியியல் பற்றி சொல்லும் கருத்துக்களில் பிரதானமாக சில செய்திகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கஃபாவின் வரலாறு.

إن أول بيت وضع للناس மக்களுக்காக பூமியி கட்டப் பட்ட முதல் ஆலயம் கஃபா என்ற வசனத்தின் விரிவுரையில் இந்த செய்திகள் தப்ஸீர்களில் பேசப்படுகின்றன.

 உலகம் நீர் மயமாக இருந்தது. அதன் மேல் ஒரு மணல் திட்டு இருந்தது. அதில் மலக்குகள் கஃபாவை கட்டினர். அதன் கீழே பூமி விரிவாக்கப் பட்டது.

 خرج البيهقي في " الشعب " عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم" أول بقعة وضعت في الأرض موضع البيت، ثم مهدت منها الأرض ، وإن أول جبل وضعه الله على وجه الأرض أبو قبيس، ثم مدت منه الجبال  

பூமி படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே கஃபா கட்டப்பட்ட்து. (

பைஹகீயில் வருகிறது.

عن ابن عمرو قال : خلق الله البيت قبل الأرض بألفي سنة،

 அந்த கஃபாவை ஆதம் அலை அவர்களும் அவர்களுடைய மகன் ஷீஸ் அலை அவர்களும் கட்டினர். அது நூஹ் நபியின் காலத்து வெள்ளப் பெருக்கில் சிதைந்தது. ஆனாலும் அதன் அஸ்திவாரம் அப்படியே இருந்தது.

 ஒட்டக திமிழ் போன்ற அந்த அஸ்திவாரத்தை நபித்தோழர்கள் கண்டுள்ளனர். பிற்காலத்தில் கஃபா கட்டப் பட்ட போதும் மக்கள் கண்டுள்ளனர். இப்போதும் அதே அஸ்திவாரத்தில் தான் கஃபா நிற்கிறது. 

 கஃபா சிதைவுற்றிருந்த நிலையில் அதன் அஸ்திவாரத்தை நபிமார்கள் வலம் வந்து சென்றுள்ளனர்.

 ஹூத் நபியை தவிர மற்ற அனைத்து நபிமார்களும் ஹஜ் செய்துள்ளனர் என்கிறது நபி மொழி.

   عن عروة بن الزبير رضي الله عنهما، أنه قال: ما من نبي إلا وقد حج البيت، إلا ما كان من هود وصالح، ولقد حجه نوح فلما كان من الأرض ما كان من الغرق أصاب البيت ما أصاب الأرض، وكان البيت ربوة حمراء، فبعث الله هوداً عليه السلام فتشاغل بأمر قومه حتى قبضه الله إليه، فلم يحجه حتى مات، فلما بوأه الله لإبراهيم عليه السلام حجه، ثم لم يبق نبي بعده إلا حجه. أخرجه البيهقي في السنن

 விழுந்தும் அழிந்து போகாததற்கான செந்நிற அடையாளத்தோடு இருந்த் கஃபாவை உயர்த்திக் கட்ட இபுறாஹீம் நபியே தீர்மானித்தார்.

 وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ

இந்த தீர்மணம் இபுறாஹீம் நபியின் தீர்க்க தரிசண இயல்புகளில் முதன்மையானதாகும்.

 அதற்கடுத்து அந்த இறையாலயத்தில் இறை வணக்கம் தங்கு தடையின்றி நடை பெற வேண்டும் என்று சிந்தித்தார்.

 கஃபாவில் இறைவனக்கம் என்பது பூமியின் ஆகப் புராதாணமானது என்றாலும் அதில் இபுறாஹீம் நபியே முன்னோடி என்று புகழப்பட காரணம் அவரது திட்டமிட்ட இந்த யோசனைகளே ஆகும்.

 ஒரு நிர்வாகியாக அவர் மேற்கொண்ட அந்த ஏற்பாடுகள் அதிக கவனதிற்குரியவை .

தகுதிமிக்க தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பாடங்களாக அமையத் தக்கவையாகும்.

இபுறாஹீம் நபியை  உலகின் மிக உன்னதமான நிர்வாகியாக சுட்டிக் காட்டுபவையுமாகும்.  

 ஒரு சிறப்பான மனிதர் சிறப்பான எந்த ஒரு காரியத்தை அரை குறையாகவோ – தீர்க்கமின்றியோ செய்து விடக் கூடாது. பரிபூரணமாக செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் அவை

 ஊர் உருவாக்கம்

பைத்துல்லாஹ்வை மீள் கட்டமைப்பு செய்வதற்கு முன் அங்கு தனது குடும்பத்தை குடியேற்றினார்.  

 மனைவி ஹாஜரா அம்மாவையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களை எங்கு  எதற்க்காக விட்டுச் செல்கிறார் என்ற அவரது திட்டவட்டமான  இலக்கை குர் ஆன் பறைசாற்றுகிறது.

 رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ 

அந்த இருவரிலிருவது மக்கா நகர்  உருவாயிற்று , அதன் பிறகு காபா வி அவர் கட்டினார் 

 முதல் முஅத்தின்

 கஃபாவை கட்டி முடித்த பின் அங்கு வருமாறு அவர் மக்களை அழைத்தார்.

 وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ (27

 இந்த வரலாற்றை இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு ஜுபைர் (ரலி) ஆகியோர் விவரிக்கின்றன. (குர்துபி)

 وقيل له : أذن في الناس بالحج ، قال : يا رب ! وما يبلغ صوتي ؟ قال : أذن وعلي الإبلاغ ؛ فصعد إبراهيم خليل الله جبل أبي قبيس وصاح : يا أيها الناس ! إن الله قد أمركم بحج هذا البيت ليثيبكم به الجنة ويجيركم من عذاب النار ، فحجوا ؛ فأجابه من كان في أصلاب الرجال وأرحام النساء : لبيك اللهم لبيك ! فمن أجاب يومئذ حج على قدر الإجابة ؛ إن أجاب مرة فمرة ، وإن أجاب مرتين فمرتين ؛ وجرت التلبية على ذلك ؛ قاله ابن عباس ، وابن جبير .

 இபுறாஹீம் நபி  விடுத்த அழைப்பிற்கான பதிலாகத்தான் நான்காயிரம் வருடங்களாக மக்கள் லப்பைக் என பதிலளித்து வருகிறார்கள்.

 இதில் கவனிக்கத்தக்க மற்றொரு நுட்பமும் இருக்கிறது.

 وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا என்ற வசனத்தில் லப்பைக் என்ற கோஷத்தோடு செல்கிற மக்களை கஃபாவிற்கு வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. உம்மிடம் வருவார்கள் என்று சொல்கிறான். يَأْتُوكَ. இதன் பொருள் கஃபாவிற்கு வருகிற அத்தனை கோடி மக்களும் நபி இபுறாஹீம் நபியிடம் வருகிறார்கள் என்றே பொருள் அமையும் என்கிறார்கள் விரிவுரையாளர்கள்

 இமாம் குர்துபீ கூறுகிறார் ;

وإنما قال ( يأتوك ) وإن كانوا يأتون الكعبة لأن المنادي إبراهيم ، فمن أتى الكعبة حاجا فكأنما أتى إبراهيم ؛ لأنه أجاب نداءه ، وفيه تشريف إبراهيم

இது இபுறாஹீம் நபியின் மாண்பிற்கு மற்றுமொரு சாட்சியாகும்.  

 உலகின் முதல் புனிதப் பகுதி (ஹரம்)

 கஃபாவில் வணக்கம் தங்கு தடையின்றி நடை பெற வேண்டும் என்பதற்காக அவர் செய்ய ஏற்பாடு தான் ஹரம் எனும் மக்காவின் புனிதப் பகுதி பற்றிய அறிவிப்பாகும்.

நபி இபுறாகீம் (அலை) இறைக் கட்டளைப்படி கஃபாவை கட்டி முடித்த பிறகு இறைவா! இங்கு வழிபடும் முறைகளை எங்களுக்கு கற்றுக் கொடு என்று பிரார்த்தித்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரயீல் ஹரமின் அந்த எல்லைகளை இபுறாகீம் (அலை) அவர்களுக்கு அடையாளப் படுத்தினார்கள்.

فقد روي أن جبريل أخذ بيد إبراهيم عليهما السلام وأوقفه على حدود الحرم، فنصب عليها الخليل علامات تعرف بها، فكان إبراهيم عليه السلام أول من وضع علامات حدود الحرم،

மக்கா நகரில் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 87552 (என்பத்தி ஏழாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி இரண்டு) மீட்டர் அளவிலான பகுதியை ஹரம் -புனிதப் பகுதி என்று   இபுறாஹீம் நபி அறிவித்தார்.

இந்தப் பகுதிக்குள் யாருக்கும் எந்த தொல்லையும் தரப்படக் கூடாது. விலங்குகள் செடிகொடிகளுக்கும் கூடஇப்பகுதியில்  அபயம்  தரப்பட்டிருக்கிறது, 

நபி இபுறாகீம் (அலை) அந்த இடங்களில் அடையாளக கற்களை நட்டு வைத்தார்கள்.  அந்த எல்லைகளாவன

கஃபாவிற்கு வடக்கே

மதீனாவின் திசையில் 7 கீமி தொலைவிலுள்ள தன்ஈம் என்ற இடம் ஹரமின் வடக்கு எல்லையாகும். அங்குதான் புகழ்பெற்ற ஆயிஷா பள்ளிவாசல் உள்ளது.

கஃபாவிற்கு தெற்கே அரபாவின் திசையில் 20 கீமி தொலைவிலுள்ள மஸ்ஜிதுன்னமிரா பள்ளிவாசல் ஹரமின் தெற்கு எல்லையாகும்

கஃபாவிற்கு கிழக்கே நஜ்தின் திசையில் 25 கீமி தொலைவிலுள்ள ஜிஃரானா எனும் இடம் ஹரமின் கிழக்கு எல்லையாகும். 

கஃபாவிற்கு மேற்கே ஜித்தாவின் திசையில் 18 கீமி தொலைவிலுள்ள  ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த இடம் ஹரமின் மேற்கு எல்லையாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு, தமீம் பின் அஸத் (ரலி) என்ற நபித் தோழரை அனுப்பி அந்த அடையாளங்களை புதுப்பித்து அதற்கு மறு அங்கீகாரம் கொடுத்தார்கள். 

எனவே ஹரம் புனித நிலம் என்ற அடையாளம் 4 ஆயிரம் வருடம் பாரம்பரியத்தை கொண்டதாகும். இதற்குள் முஸ்லிம்களுக்கு மடுமே அனுமதி எனும் நடைமுறை ஹிஜ்ரி 10 ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வந்தது.  ஆயிரத்து முன்னூற்றி முப்பத்தாறு வருடங்களாக அது நடைமுறையில் இருக்கிறது.

உலகில் புனித தளங்களாக பல பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கங்க்க நதிக்கரையில் உள்ள காசி நகரம் இந்துக்களின் புனித நகராகும்.

கெளதம புத்தர் ஞானம் பெற்ற புத்தகயாவும் அவர் பிறந்த  லும்பினியும் பெளத்தர்களின் புனிதப் நகரங்களாகும்.

ஜெரூசலத்தில் உள்ள கல்லறை தேவலாயப் பகுதியும் பெத்தெலஹேம் பகுதியும் கிருத்துவர்களுக்கு புனிதப் பகுதிகள் ஆகும்.

ஜெரூசலத்தில் உள்ள மேற்கு சுவர் பகுதியை யூதர்கள் புனிதப் பகுதி என்று கருதுகின்றனர்.

ஆனால் இந்த புனிதப் பகுதிகள் எதற்கும் ஹரம் எனும் புனிதப் பகுதிக்கு இருப்பது போன்ற தெளிவான உறுதியான வரலாறோ சட்ட விதிகளோ இல்லை என்லாம்.

திட்டவட்டமான நடைமுறைகளை தொடர்ந்த் நான்காயிரம் ஆண்டுகளாக தொன்மையாக கடைபிடிக்கப்படுகிற புனித வரலாறு மக்கா ஹரமிற்கு மட்டுமே இருக்கிறது.

இது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் மாண்பாகும்.

உலகின் தொன்மையான பேர் நிறுத்த காலங்கள்

ஹஜ் எனும் வணக்கத்தை பாதுகாப்பதற்காக இபுறாஹீம் நபி அலை அவர்கள் செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் ஹஜ்ஜின் மாதமான துல்ஹஜ் மாத்த்தையும் அதற்கு முந்திய துல்கஃதா மாதத்தையும் அதற்கடுத்த முஹர்ரம் மாதத்தையும் போர் நிறுத்த காலமாக அஷ்ஹருல் ஹுர்மு ஆக அறிவித்ததாகும்.

 இடையில் இருக்கிற ரஜப் மாதத்தை புனிதம் என்று அறிவித்தது கூட கஃபாவை நோக்கி உம்ரா செல்பவர்களின் வசதிக்காகத்தான் என்கிறார்கள் முபஸ்ஸிர்கள்.  .

 وحرم رجب في وسط الحول لأجل زيارة البيت والاعتمار به لمن يقدم إليه من أقصى جزيرة العرب، فيزوره ثم يعود إلى وطنه فيه آمنًا  

அது விதை விதைப்பின் காலம் என்றும் சிலர் கூறுகிறார்கள். விவசாயத்தை பாதுகாப்பதற்காக ரஜப் மாதம் புனிதப் படுத்தப்பட்ட்து என்கிறார்கள் அவர்கள்

عن أبي بكر الوراق البلخي قوله: «شهر رجب شهر للزرع

 இவை அல்லாஹ்விற்கு பிரியமான நாட்கள் என்றார் கஃபு ரலி

 عن كعب قال: «اختار الله الزمان، وأحبّ الزمان إلى الله الأشهر الحرم، وأحبّ الأشهر الحرم إلى الله ذو الحجة، وأحبّ ذي الحجة إلى الله العشر الأُوَل

இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவின் காபிர்களும் இதை புனிதப்படுத்தினர் என்கிறார் இப்னு கஸீர் ரஹ்

 ابن كثير -رحمه الله-: «كان الرجلُ يلقَى قاتلَ أبيه في الأشهُر الحرم فلا يمُدُّ إليه يدَه

 ஆனால் அவர்கள் தங்களது சண்டையிடும் சவுகரியத்திற்காக நான்கு மாதங்கள் எவை என்பதை அவ்வப்போது மாற்றிக் கொண்டனர்.

 திருக்குர்ஆன் அதை மறுத்து சரி செய்தது.

 إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِّيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ﴾ [التوبة: 37].

والنسيء عند العرب: تأخير يجعلونه لشهرٍ حرامٍ فيصيرونه حلالًا، ويحرمون شهرًا آخر من الأشهر الحلال عوضًا عنه في عامِه

 இம்மாதங்களின் புனிதத்தை பல சட்டங்கள் வழியாகவும் இஸ்லாம் உறுதிப்படுத்தியது.

يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير...} [البقرة: 217]

فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ) [التوبة:36] .
قال ابن كثير رحمه الله في تفسيره: (فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ) أي في هذه الأشهر المحرمة، لأنها آكد، وأبلغ في الإثم من غيرها، كما أن المعاصي في البلد الحرام تضاعف  

 عن قتادة قولهإن الظلم في الأشهر الحرم أعظم خطيئة ووزراً من الظلم في سواها، وإن كان الظلم على كل حال عظيماً

இம்மாதங்களில் சண்டையை தொடங்குவது ஹராம் ஆகும்.

 ஷாபி மத்ஹபின் படி இந்த மாத்த்தில் ஒரு கொலை நடை பெறுமானால் அதற்கான  ஈட்டுத்தொகை மற்ற மாதங்களை விட அதிகமாக தீர்மானிக்கப்படும்.

 ஆகவே இந்த மாதங்களில் சக மனிதர்களுக்கு செய்யும் அநீதிகளை அதிக  எச்சரிக்கையோடு தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்

இஸ்லாமின் தொடக்க காலத்தில் முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் எதிரிகளை சந்திக்க நேர்ந்த ஒரு நிகழ்வில் ஜமாதில் ஆகிர் மாதத்தின் இறுதியில் எதிரி ஒருவரை கொன்று விட்டனர். அன்றைய தினம் ரஜப் மாத்த்தின் முதல் நாளாக அமைந்து விட்டது. எதிரிகள் அதை பெரிய பிரச்சனையாக்கினர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் புனித மாத்த்தின் விதிகளை மீறி விட்டதாக பெரிதாக பழி சுமத்தி அதை அக்கம் பக்கம் எங்கும் பரபரப்பாக்கினர். அப்போது அல்லாஹ் மக்காவாசிகளை எச்சரித்தான், நீங்கள் மக்காவில் வைத்து மக்களுக்கு இழைக்கிற அநீதிகளை விட இது பரவாயில்லை என்று கூறினான்

وذلك أن رسول الله صلى الله عليه وسلم بعث سرية ، وكانوا سبعة نفر ، عليهم عبد الله بن جحش الأسدي ، وفيهم عمار بن ياسر ، وأبو حذيفة بن عتبة بن ربيعة ، وسعد بن أبي وقاص ، وعتبة بن غزوان السلمي حليف لبني نوفل وسهيل بن بيضاء ، وعامر بن فهيرة ، وواقد بن عبد الله اليربوعي ، حليف لعمر بن الخطاب . وكتب لابن جحش كتابا ، وأمره ألا يقرأه حتى ينزل بطن ملل فلما نزل بطن ملل فتح الكتاب ، فإذا فيه : أن سر حتى تنزل بطن نخلة . فقال لأصحابه : من كان يريد الموت فليمض وليوص ، فإنني موص وماض لأمر رسول الله صلى الله عليه وسلم . فسار ، فتخلف عنه سعد بن أبي وقاص ، وعتبة ، وأضلا راحلة لهما فأتيا بحران يطلبانها ، وسار ابن جحش إلى بطن نخلة ، فإذا هو بالحكم بن كيسان ، والمغيرة بن عثمان ، وعمرو بن الحضرمي ، وعبد الله بن المغيرة . وانفلت [ ابن ] المغيرة ، [ فأسروا الحكم بن كيسان والمغيرة ] وقتل عمرو ، قتله واقد بن عبد الله . فكانت أول غنيمة غنمها أصحاب النبي صلى الله عليه وسلم .
فلما رجعوا إلى المدينة بالأسيرين وما أصابوا المال ، أراد أهل مكة أن يفادوا الأسيرين ، فقال النبي صلى الله عليه وسلم" حتى ننظر ما فعل صاحبانا " فلما رجع سعد وصاحبه ، فادى بالأسيرين ، ففجر عليه المشركون وقالوا : إن محمدا يزعم أنه يتبع طاعة الله ، وهو أول من استحل الشهر الحرام ، وقتل صاحبنا في رجب . فقال المسلمون : إنما قتلناه في جمادى وقيل : في أول رجب ، وآخر ليلة من جمادى وغمد المسلمون سيوفهم حين دخل شهر رجب . فأنزل الله يعير أهل مكة( يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير 

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِندَ اللَّهِ ۚ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ

 இவ்வாறு பதிலளிக்கப் பட்ட்து என்றாலும் தொடர்ந்து 4 மாதங்களின் புனித்த்தை இஸ்லாம் அங்கீகரித்து நடை முற்ற படுத்தியது.

 இன்று போர் நிறுத்த காலங்கள் என்று அரசுகள் அறிவிக்கின்றன. அவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குரியாகும். அதே போல அது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதும் கேள்விக்குரியாகும்.

 உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு இடைக்கால  போர் நிறுத்தத்தை நடை முறை படுத்த அமெரிக்காவும் உலகின் மற்ற பல நாடுகளும் பலத்த முயற்சி செய்கின்றன. அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரோரு இரண்டு மணி நேரம் போனில் பேசும் எந்த பலனும் கிடைக்க வில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

 ஆனால் உலகில் இதை விட போர் மூர்க்கத்தனம் நிறைந்திருந்த காலத்தில் இபுறாஹீம் அலை அவர்கள் அறிவித்த போர் நிறுத்த காலம் என்பது நான்காயிரம் வருடங்களாக நடப்பில் இருக்கிறது.

முஸ்லிம்கள், இம்மாதங்களின் மரியாதையை உணர்து கொள்வதும் அவற்றை மதிப்பதும் கடமையாகும்.

கூடுமானவரை இம்மாதங்களில் சச்சரவுகளை தவிர்ப்பதும் நன்மையாகும்.

இப்புனித மாதங்களில் அதிகமாக நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

في الحديث الذي رواه أبو داود في سننه: (صُمْ مِنَ الحُرُم وَاترُكْ، صُمْ مِنَ الحُرُمِ وَاترُكْ، صُمْ مِنَ الحُرُمِ وَاترُكْ)

 அல்லாஹ் தவிபீக் செய்வானாக !

1 comment:

  1. உம்மத்திற்கு காலத்திற்கு ஏற்ப கட்டுரை

    ReplyDelete