Thursday, October 30, 2025

ஜனநாயகத்தை கொள்ளையடிக்கும் தேர்தல் கமிஷன்

 கடந்த  வாரம் இந்திய தேர்தல் கமிஷன் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) என்ற ஒரு திட்டத்தை  அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2025  அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026  பிப்ரவரி இறுதி வரை இப்பணி நடைபெறும் என்றும் இதற்காக 77 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் அது கூறியுள்ளது.

அக்டோபர் 30 முதல் (அதாவது நேற்றைக்கு முன் தினத்திலிருந்தே) இதற்கான பணி தொடங்கி விட்டது.  நவம்பர் 3 ம் தேதி வரை இதற்கான அடிப்படை பணிகள் நடைபெறும் .

நவமபர் 4 ம் தேதியிலிருந்து டிஸம்பர் 4 ம் தேதி வரை வாக்குச் சாவடி அதிகாரிகள் வீடுகள் தோறும் சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை விநியோகிப்பார்கள். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக் கொள்வார்கள். அப்போது முகவரியில் இல்லாதவர் இடம்மாறியோர் இறந்தவர்கள் இரட்டைப் பதிவுகள் கொண்டவர்களின் பெயர்கள் நீக்கப்படும்  என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதற்கான நோக்கம் போலி வாக்களர்களை நீக்குவதும் முறையான வாக்காளர்களை சேர்ப்பதும்  என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.

இந்த நோக்கம் நல்லது தான்.

ஆனால் இந்த அவசர அறிவிப்பு இந்தியா முழுவதிலும் மிகப் பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஜனநாயகத்த கொள்ளையடித்தல்

நாட்டில் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிற தேர்தல் கமிஷம் தற்போதைய மத்திய அரசுக்கு அடிமை அமைப்பாக மாறி மத்திய அரசு விரும்பாதோரியன் வாக்குரிமையை பறித்து ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக ஆக்கப் போராடுகிறது என்று இதை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

வாக்கு திருட்டு

ஏற்கெனவே திரு ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷன் தேர்தல் திருட்டில் ஈடுபடுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகங்களுக்கு முன் பகிரங்கமா வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த பாராளுமன்ற  தேர்தலிலிலும் கர்நாடக சட்ட மன்ற தேர்தலிலும் வாக்கள் சேர்ப்பு அல்லது நீக்கம் என்பதற்கான படிவங்களை சம்பந்தமே இல்லாத யாரோ இணைய தளத்தை பயன்படுத்தி செய்துள்ளனர். இது அப்பட்டமாக வெளியில் கொண்டு வரப்பட்ட போது அந்த இனைய தளத்தின் முகவரிவை வெளியிட திரு ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார். அப்படி வெளியிடப்படுமானால் இந்த திருட்டில் ஈடுபட்ட்து யார் என்று கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறினார்.

கர்நாடக மாநில ஆலந்து தொகுதி வாக்காளர்ப் பட்டியலில் நடைபெற்ற முறை கேட்டை இதற்கு ஆதரப்பூர்வமாக குறிப்பிட்டார். ஒன்றல்ல இரண்டல்ல ஒரு சட்ட மன்ற தொகுதியில் 6018 விண்ணப்பங்கள் போலியாக பதிவு செய்யப் பட்டுள்ளன. கால் செண்டர்கள், நவீன் கம்ப்யூட்டர்கள், புது வகை ஆப்புகளை பயன்படுத்தி இது நடைபெற்றுள்ளது. இதை கண்டுபிடிப்பது எளிதானது; இணைய தளத்தில் எந்த ஒரு செய்ல்பாடும் ஐபி அட்ரஸ் இல்லாமல் நடக்க முடியாது. இந்த பதிவுகள் நடைபெற்ற ஐபி அட்ரஸ் தேர்தல் கமிஷனுக்கு தெரியும். அந்த ஐபி அட்ரஸை வெளியிடுமாறு திரு ராகுல் காதி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டார். ஆனால் தேர்தல் கம்ஷன் இதை வெளியிட மறுத்து விட்டது. அதனால் இந்த திருட்டில் சம்பந்தப் பட்டவர்களை தேர்தல் கம்ச்ஷன்ர் ஞானஸ்வரன் பாதுகாக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இன்று நாடு நகர்ந்து கொண்டிருக்கிற சர்வாதிகார சூழலில் எந்த அதிகாரியும் மக்களுக்கு பதில் சொல்வதில்லை. அதை போலவே ராகுல் காந்தியை குறை கூறியதை தவிர தேர்தல் கமிஷன் குற்றச் சாட்டுகளுக்கு நம்பிக்கையளிக்கிற எந்த பதிலையும் தரவில்லை

வாக்காளர் பட்டியல் திருத்ததிற்கு  இவ்வளவு அவசரம் ஏன் ?

வாக்களர்ப் பட்டியலை பரிசுத்தப் படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுவது ஏற்புடையது. ஆனால் அதற்கு இவ்வளவு அவசரம் ஏன் என்ற எதார்த்தமான கேள்விதான் தேர்தல் கம்ஷனின் இந்த திட்டத்திற்கு எதிராக எழுந்து நிற்கிற மிகப் பெரிய கேள்வியாகும்.

பீகாரில் இதற்கு முன் 2003 ம் ஆண்டு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அதை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.

 தமிழகத்தில் இதற்கு முன் வாக்காளர் சீர்திருத்தம் இரண்டு வருட காலங்களில் நடைபெற்றுள்ளது. 2002 ல் சுமார் 190 தொகுதிகளுக்கும் 2004 44 தொகுதிகளுக்கும் நடைபெற்றது

 இப்போது சில நாட்களிலேயே  அந்த வேலையை முடிக்கப் போவதாக தேர்தல் கமிஷன் சொல்லுகிறது. இது சந்தேகத்தை கிளப்புகிறது

 மிக சமீபத்தில் தேர்தல் நடைபெற இருக்கிற மாநிலங்களில் அதுவு குறிப்பாக பாஜகவிற்கு எதிரான போக்குகள் நிலவுகிற மாநிலங்களில் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தேர்தல் கமிஷன் இப்படி அவசரம் காட்டுவது யாருக்காக என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக இருக்கிறது.

இதற்கு தேர்தல் கமிஷனிடம் எந்த பதிலும் இல்லை.

தமிழகத்தில் நவம்பர் 4 முத்ல டிஸம்பர் 4 க்குள் இந்த பணி முடிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது. இது வட கிழக்கு பருவ மழைக்காலமாகும். 

இந்த சீர்திருத்த பணியை பற்றிய அறிக்கை,  ஒவ்வொரு வீட்டிற்கும் தேர்தல் அதிகாரி மூன்று முறை செல்வார் என்று கூறுகிறது.

இது எப்படி சாத்தியமாகும் என்பது தேர்தல் கமிஷனுக்கே வெளிச்சம் ?

தேர்தல் கமிஷன் நாட்டு மக்களை முட்டாள்களாக்க முய்ற்சிக்கிறது என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

தேர்தல் கமிஷனின் திட்டத்தில் தில்லுமுல்லுகள்

பீகார் மாநிலத்தில் வரக்கூடிய நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

இதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக ஜூன் மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யப் போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதுவே ஒரு பெரும் தில்லு முல்லு ஏற்பாடுதான்

இது தவிர பீகாரில் சிறப்பு தீவிர வாக்களர் திருத்த முயற்சியில் நடை பெற்று வருகிற பல தில்லுமுல்லு திட்டங்கள்  அப்பட்டமாக வெளிப்பட்டன.

பீகாரில் 7 கோடி 89 இலட்சம் வாக்களார்கள் இருந்தனர்.

இவர்களுக்கு தேர்தல் கமிஷன் ஒரு உத்தரவு போட்டது.

நீங்கள் இந்த தொகுதியில் 2002 க் குப்பிறகு வசித்தீர்கள் என்பதற்கு 11 சான்றுகளில் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று கூறியது.

அந்த சான்றுகளில்

·         வாக்காளர் அடையாளர் அட்டை  இல்லை

·         ரேஷன் கார்டு இல்லை.

·         ஏன் ஆதார் கார்டு கூட சான்று இல்லை என்று கூறியது.

இந்தியாவில் ஏழை குடிமக்கள் வைத்திருக்கிற சான்றுகளில் இந்த மூன்றும் தான் பிரதானமானவை என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்.

வாக்காளர் அடையாள அட்டை என்பது தேர்தல் ஆணையமே வழங்கிய ஒன்று

ஆதார் கார்டு என்பது வங்கிக் கணக்கு முதல் டிரைன் ரிசர்வேசன் பாஸ்போர்ட் பெறுதல் வரை ஒவ்வொன்றிலும் ஏற்கப்படக் கூடியது. எந்த ஒரு டாக்குமெண்டுடனும் ஆதார் அட்டை இணைக்கப்படனும் என்று மத்திய் அரசு தான் வலியுறுத்துகிறது.

ஆனால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சாமாணிய இந்தியக் குடிமகனுக்கு எந்த சான்றிதழகள் கிடைப்பது சிரமமோ அவற்றை பட்டியலில் வைத்துக் கொண்டது.

அதன்பிறகு  65 இலட்சம் வாக்களர்களை தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. (பிபிசி)

இது உலகம் விழித்துக் கொண்டிருக்க அப்பட்டமாக நடை பெற்ற உலக மகா அநீதியாகும்.

இதில் இதை விடப் பெரிய கொடுமை என்ன வென்றால்

 

இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடை பெற்ற போது நாட்டின் குடிமகனின் அடிப்படை உரிமையை பறித்த தேர்தல் ஆணையம்  நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லையென்றும், பெயர் நீக்கத்திற்கான காரணங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லையென்றும் பதில் மனு தாக்கல் செய்தது.

 ஜனநாயகத்தை காவல் காக்கும் ஒரு அமைப்புக்கு இவ்வளவு சர்வாதிகார சிந்தனை ஏன் என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு கேள்வியாகும். .

 மட்டுமல்ல இந்தியாவிற்கு நேர்ந்துள்ள ஆபத்தை சுட்டிக் காட்டும் பெரும் வேட்டுச் சத்தமாகும்.

 இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஆதார் கார்டை ஏற்கும் படி அறிவுரை கூறியிருக்கிறது.  

 போலி வாக்காளர்களை நீக்குவதற்கு பதிலாக, ஏழை, எளிய வாக்காளர்களை நீக்கிவிட்டு, பா..,வுக்கு ஆதரவான பட்டியல் தயாரிக்கும் பணி நடப்பதாக ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளது சரிதான் என்பதையே தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

 அம்பலம்

 பீகாரில் அவசர கோலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் எவ்வளவு அலங்கோலங்களை செய்துள்ளது என்பதற்கு ஒரு உதாரணத்தை உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் யோகிந்தர யாதவ் நேரடியாக காட்டினார்.

 இறந்து போனவர்களின் பெயர்களை நீக்குவது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. அதை சரியாக செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. ஏனெனில் உயிருடன் இருக்கும் பலரை இது இறந்தவரக்ளின் பட்டியலில் சேர்த்திருக்கிறது என்று கூறிய யோகிந்தர யாதவ் தேர்தல் கமிஷன் இறந்து விட்டதாக கூறிய  7 நபர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

 இபோது போலி வாக்களர்களை நீக்காவிட்டால் தவறானவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் குரலை பாஜக எதிரொலிக்கிறது.

 மிக முக்கியமான தேள்வி என்ன வென்றால் அப்படியானால் இதற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போலி வாக்காளர்களால் தான் பாஜக வெற்றி பெற்றதா?

 பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் ஆரம்பத்தில் சில் பூத்துகளின் பின்னடைந்திருந்தார், பின்னர் தான் முன்னேறி வெற்றி பெற்றார் என்பது நாபகம் இருக்கிறதல்லவா ? அவர் போலி வாக்காளர்கள் நீக்கப்படாததாதால் தான் வெற்றி யடைந்தார் என்று சொல்ல லாமா ?

 தேர்தல் கமிஷனும் இப்போது அதை ஆதரித்து நிற்கீற பாஜகாவும் நாட்டு மக்களை ஏமாற்ற திட்டம் போடுகிறார்கள். எதார்த்தமான பிரச்சனைகளிலில் இருந்து மக்களின் கவனத்தை அவர்களுடைய அடிப்படை உரிமைகளை காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தேர்தல் நேரத்தில்  தள்ளிவிடுகிறார்கள் என்பதே உண்மை.

 இதுவரைக்கும் நடந்த தேர்தல்கள் எல்லாம் சரியாகவே நடந்தன. பாஜக வும் அதன் ஆதரவு அணிகளும் இப்போது தேர்தல் கமிஷனை பயன்படுத்தி ஜனநாயகத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள் என்பதே எதார்த்தமாகும்.  

 பீகாரில் மேற்கொள்ளப் பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தான் இப்போது நாட்டில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் நடைபெற போகிறது.

 பிரச்சனை 1

 தேர்தல் கமிஷனின் இந்த திட்டம் பாஜக வுக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த தொகுதிகளிலுள்ள எதிர்ப்பு வாக்காளர்களை ஓட்டுப் போட விடாமல் செய்து விடுவதாகும்.

 அப்படி யோசிக்கையில் தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக இருக்கிற முஸ்லிம் வாக்காளர்கள் பலருடைய வாக்குரிமையை இந்த திட்டம் பறித்து விடும் ஆபத்து இருக்கிறது.

 இதற்கு முன் நடைபெற்ற தீவிர வாக்காளர் திருத்தம் நடை முறையில் இருந்த சமயங்களிலேயே கனிசமான வாக்காளர்கள் தமிழகத்தில் குறைக்கப் பட்டனர்.

 தேர்தல் ஆணையத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் 4,72,52,271 வாக்காளர்கள் இருந்தனர். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை 4,66,03,352 பேராகக் குறைந்தது. அதாவது 6,48,919 வாக்காளர்கள் குறைந்தனர்.

 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நடந்த சரிபார்ப்பு நடவடிக்கையின்போது வாக்காளர் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்தது. அதாவது 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 4,66,03,352ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, 4,16,20,460ஆகக் குறைந்தது. அதாவது முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டால் 49,82,892 பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.

 இப்போது பீகாரில் நடைபெற்றது போல வாக்காளர் திருத்த நடைமுறை தொடருமானால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் குறைந்த்தாக ஆக கூடும்.

 பிரச்சனை 2

 வெளிமாநில தொழிலாளர்கள் கோடிக் கணக்கில் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். சென்னையிலிருந்து குமரி வரை ஒவ்வோரு ஊரிலும் இலட்சக்கணக்கில் அவர்கள் வேலை செய்கிறார்கள்அவர்கள் தேர்தல் கமிஷனின் இந்த திட்டத்தின் படி தமிழ்க வாக்காளர்களாக ஆக்கப்படுவார்கள். ஒரு கோடி வட இந்திய வாக்காளர்கள் இந்த முறை தமிழகத்தில் வாக்களிப்பார்கள் என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

.தமிழகத்தில் நேரடியாக அதிகாரத்தை பிடிக்க முடியாத பாஜக மறைமுகமாக வட நாட்டு பணியாளர்கள் மூலம் இங்குள்ள அரசியல் அமைப்பை சிதைக்க திட்டமிடுகிறது. இதற்கு தேர்தல் கமிஷன் ஒத்துழைக்கிறது. இதன் மூலம் தமிழர்களின் ஆட்சியதிகாரம் பாதிப்புக்குள்ளாகும்

 தற்போதைய தேர்தல் கமிஷனர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் இதற்கு முன் செயலாளராக இருந்தவர் என்ற ஒரு தொடர்பும் இது விவகாரத்தில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

 பிரச்சனை 3

 தேர்தல் கமிஷன் 2003 க்கு பிறகுண்டான வாக்காளர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க இயல்பாக மக்களிடம் இருக்கிற அரசுகள் வழங்கிய தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆதார் கார்டு மின் கட்டண் அட்டை, கேஸ் ரசீது ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.

 11 புதிய ஆவணங்களை கேட்கிறது\

1.   பிறப்பு சான்றிதழ்

பீகா போன்ற மாநிலங்களில் பிறப்பை பதிவு செய்வது என்பதே இன்னும்  முழு வழக்கில் வர வில்லை.

 2  பாஸ்போர்ட்

வாக்களர்களர்களில் எத்தனை பேரிடம் பாஸ்போர்ட் இருக்கப் போகிறது. 7 கோடி வாக்களர்களை கொண்ட பீகாரில் 36 இலட்சம் பேரிடம் தான் பாஸ்போர்ட் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர் முறையிட்ட போது. நீதி மன்றம் அது அதிகம் தான் என்று கூறியிருப்பது ஒரு விநோத்ம்.

3.   படிப்பு சான்றிதழ் மெட்ரிகுலேசன்

4.      4 நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ்,

5.     5 வன உரிமைச் சான்றிதழ்,

6.      6 சாதிச் சான்றிதழ்,

7.   மத்திய மாநில அரசு ஊழியர் அடையாள அட்டைபென்சன் அட்டை

8.   பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை

9.   மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்ட இதர திட்ட அடையாள ஆவங்கள் 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள்

 10.  மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு,

 11.  NRC நடைமுறை உள்ள பகுதிகளில் அந்த சான்று.

ஆதாரை அடையாளாமாக ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும் இதுவரை அதை ஒரு ஆவனமாக ஏற்று கொள்ள வில்லை/.

இந்த 11  ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவன்ங்கள் நம்முடைய நாட்டில் ஒரு சில உயர்ந்த ஜாதிக் கார்ர்களை தவிர மற்றவர்களுக்கு அரிதான ஆவணங்களாகும்.

 

 இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், பெற்றோரின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் இல்லாவிட்டால், வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அப்பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர் முடிவு எடுப்பார்.

 அதாவது சாதாரண ஒரு அதிகாரி ஒரு குடிமனின் ஓட்டுரிமையை மறுத்து விட முடியும் என்பது மட்டுமல்ல அவர் இந்தியர் அல்ல என்று அதற்கு அர்த்தமாகும்.

 எனவே இந்த திட்டத்தின் மூன்றாவது முக்கிய பின் விளைவு நாட்டின் குடிமக்களில் ஏராளமானோர் குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

 மிக சுருக்கமாக சொல்வதானால் என் ஆர் சி என்ற பதிவு சட்டத்தின் மூலம் நாட்டின் குடிமக்களை நாடற்றவர்களாக ஆக்கும் திட்டத்தை மத்திய அரசு தேர்தல் கமிஷனின் மூலம் வேறு வடிவத்தில் கொண்டு வருகிறது.

 

இல்லை எனில் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாத்த்திற்கு முன் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யக் கூடாது என்ற அடிப்படையை உரிமையை தேர்தல் ஆணயம் துவம்சம் செய்து அநாயசமாக அதிரடி காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

 எந்த கேள்விக்கும் ஜன்நாயகத்தை மதித்து காப்பாற்றும் பதிலை சொல்லாமல் அதிகார தொனியிலேயே தேர்தல் கமிஷன் பேசிக் கொண்டிருக்கிறது.

 நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து, நமது குடியுரிமைக்கு ஆபத்து என்ற ஒரு நெருக்கடியான சூழலில்அதிகாரத்தின் மொத்த பலத்தையும் சர்வாதிகார சக்திகள் கையில் எடுத்திருக்கிற நிலையில்

 நாம் என்ன செய்ய வேண்டும் ?

 என்ற கேள்வி பிரதானமானது.

 திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது

 وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ

 ஒரு காலத்தில் தனிப்பட்ட வீரத்தின் வெளிப்பாடுகள் பலமாக இருந்த்து.

அப்போது பெருமானார் வில்லெறிதலி பயிர்ச்சி பெற வலியுறுத்தினார்கள்.

 ألا إنَّ الرمي هو القوة, ألا إنّ الرمي هو القوة

என்று பெருமானார் (ஸல்) சொன்னார்கள்

 அதே போல ஆயுதங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் இதற்கு பொருள் வரும்.

 தற்காலத்தில் அநீதிக்கு எதிரான போராட்ட முறைகள் மாறி இருக்கீற சூழலில் அதற்கேற்ற வடிவங்களில் தயாராக வேண்டும்.

 அதில் ஒன்று ஜனநாயக ரீதியில் எதிர்த்து போராடுவது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது போன்ற வற்றை செய்ய வேண்டும். 

 அநீதிக்கு எதிரான முழு பலத்தையும் முடிந்த வரை திரட்ட வேண்டும். போராட வேண்டும்.

 பீகாரில் இது விவாகரம் வந்த போது உச்ச நீதிமன்றத்தில் பலர் போராடினர்.

 

ஏன் உச்ச நீதிமன்றமே தேர்தல் கமிஷனிடம் போராடியது என்று தான் சொல்ல வேண்டும்.

 பீகாரில் நீக்கப் பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  4 முறை கேட்ட பிறகு தான் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

 உச்ச நீதிமன்றம் ஆதரை சான்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

 65 இலட்சம் பேரை ஆரம்பத்தில் நீக்கிய தேர்தல் கமிஷன் அந்த எண்ணிக்கையை பின்னர் வெகுவாக குறைத்தது.

 அநீதிக்கு எதிரான போராட்டம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை குர் ஆன் அளவிட்டு கூறுகிறதுஎதிரிகளும்  அச்சப்பட வேண்டும். இனி எதிர்க்கலாம் என்று நினைப்பவர்களும் அச்சப்பட வேண்டும்.

 تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ

 அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பதே சிறந்த ஜிஹாத் என பெருமானார் (ஸல்) அவரகள் கூறினார்கள்

 أنَّ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ سئل أيُّ الجهادِ أفضلُ قال كلمةُ حقٍّ عند سلطانٍ جائرٍ

 இத்தகைய போராட்ட்த்தில் இழப்புக்குள்ளாகிறவர்  ஹம்ஸா ரலி அவர்களைப் போல ஷஹீதுகளின் தலைவர் என்றார்கள் பெருமானார் (ஸல்)

 قال رسول الله صلى الله عليه وسلمسيد الشهداء حمزة بن عبد المطلب، ورجل قام إلى إمام جائر فأمره ونهاه، فقتله. رواه الحاكم

 அநீதிக்கு எதிரான போரட்டத்தை பண்பாட்டு பொறுப்பு என்பதோடு இஸ்லாமிய சமய கடமை என்றும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

 எனக்குப் பின்னர் நடக்க கூடிய அநீதிகளுக்காக நான் மறுமையில் போராடுவேன் என்றார்கள் பெருமானார் (ஸல்)

 يقول النبي صلى الله عليه وسلم : ( ألا من ظلم معاهدا، أو انتقصه، أو كلفه فوق طاقته، أو أخذ منه شيئا بغير طيب نفس، فأنا حجيجه يوم القيامة 

 அநீதி பலருடைய கண்ணீருக்கு காரணமாக கூடியது. அது ஒரு வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. அதன் விளைவாக நாட்டில் எதிர்பாராத தீமைகள் நிகழும்.

அபூஹுரைரா ரலி அவர்கள் எச்சரிக்கீறார்கள்

 قول أبو هريرة، رضي الله تعـالى عنـه  ; إن الحبـارى لتمـوت في وكرها من ظلـم الظـالم"

அக்கிரமக்காரனின் கொட்டத்தால் ஹுபாரி பறைவகள் அதன் கூடுகளிலேயே இறந்து போகும். 

 மனிதர்கள் என்று மட்டுமல்ல; அநீதியின் பாதிப்பு மலைகளையும் விடாது.

 இப்னு மஸ்வூத் ரலி கூறுகிறார்கள்

 قال ابن مسعود: "لو بغى جبل على جبل، لجعل الله الباغي منهما دكا

போராடு!

 இதை தமிழக அரசு தேவையற்றது என்று கூறியுள்ளது. கேரள அரசும் இதே போன்ற தீர்மாணத்தை நிறைவேற்றியுள்ளது.

 தமிழகத்தில் பாஜக அதிமுகவை தவிர உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு இதை எதிர்க்கின்றன.

 இதற்கு எதிரான நடவடிக்கைகளை பொருத்தமான அரசியல் கட்சிகள் அறிவிக்குமானால் அதில் கலந்து கொள்ள வேண்டும்.

 உச்சநீதிமன்றத்தின் கதவுகளை மக்களின் உணர்வுகளை முன் வைத்து மீண்டும் தட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படித்த மேதைகளாக இந்த வழக்கை அனுகாமல் சாமாணிய இந்திய குடிமகனின் சூழ்நிலைகளை கருத்திக் கொண்டு செயல்பட வலியுறுத்த வேண்டும்.

இந்த போராட்டத்தில் முஸ்லிமக்ளின் பங்கு பிரதானமாகவும் விழிப்புணர்வு மிக்கதாகவும்  இருக்க வேண்டும். ஏனெனில் இது நடை முறைப்படுத்தப் பட்ட பீகாரில்

முஸ்லிம்களே அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

 பீகாரின் தாஹா மாவட்டத்தில் வாக்கு சாவடி முகவர்களிடம் விண்ணப் அளித்த 80 ஆயிரம் முஸ்லிம்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டனர். அதே நேரத்தில் இந்துக்கள் அதிகமுள்ள கயா மாவட்டத்தில் ஒரு முகவரியில் 947 பேர் இடம் பெற்றிருந்தனர் . இதை பாலிமர் தொலைக் காட்சி விவாதத்தில் தமிழன் பிரசன்னா கூறினார்.

 கோஷமிடு !

 சமீபத்தில் அமெரிக்க மக்கள் ஒன்று திரண்டு நோ கிங்க் என்ற ஒரு கோசத்தை வெளிப்படுத்தினார்கள். அமெரிக்க அதிபர் ஒரு அரசரை போல செயல்பட முடியாது என்று வலியுறுத்துகிற கோஷம் அது அது போன்ற கோசங்கள் நீதிமன்றங்களை நிதானப்படுத்த பயன்படுத்தப் பட வேண்டும்.

 விளம்பரம் செய்!

 இன்றைய இளம் தலைமுறை மத்திய அரசு இது விவகாரத்தில் காட்டுகிற வஞ்சகத்தை வளைதள உலகில் முடிந்த வரை எல்லை மீறுதல் இல்லாமல் விமர்சிக்கவும் விவரிக்கவும் வேண்டும்.

 1951 முதல் 2004 வரை எஸ் ஆர் நடத்தப்ப்ட்டிருக்கிறது. எனவே இப்போது செய்வது ஒன்றும் புதுமை அல்ல; ஆனால் இந்த அவசரம் புதுமையானது. சந்தேகத்திற்குரியது.

 2002 2004 ன் வாக்காளர் பட்டியலை ஒப்புக் கொள்வோம் எனில் தற்போதைய வாக்காளர் பட்டியலை ஒப்புக் கொண்டால் என்ன ? அதற்கிடையில் நடைபெற்ற தேர்தல்களின் தரம் எப்படிப் பட்ட்து என்பது போன்ற நியாயமான கேள்விகளை மக்கள் அளவில் அதிகமாக கொண்டு சேர்க்க் இளைய சக்தியினர் முயற்சிக்க வேண்டும்.

 சமீபத்தில் நேபாள நாட்டில் இளையோர்களின் டிஜிட்டல் புரட்சியால் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டதை  நாம் கண்டிருக்கிறோம்.

 பிரார்த்தனை செய்!.

 திட்டமிட்டு அநீதியிழைப்பவர்களுக்கான தண்டனை விரைவில் கிட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறீயுள்ளார்கள். அது நம் நாட்டிலும் விரைவில் நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

 ما من ذنب أحرى أن يعجل الله تبارك وتعالى العقوبة لصاحبه في الدنيا، مع ما يدخر له في الآخرة، من البغي وقطيعة الرحم

 மக்களில் ஒரு சாராருக்கு எதிராக அநீதியிழைப்பது நாடு நகரங்கள் நாசமாவதற்கான அறிவிப்பு என்றார். இப்னு கல்தூன்

 يقول ابن خلدون "مؤذن بخراب العمران"

 குர் ஆன் எச்சரிக்கிறது.

  فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون(النمل:52).

தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் எல்லை மீறிப் போவதற்குள் அல்லாஹ் நம் நாட்டை காப்பாற்றுவானாக!

 நாம் கைகொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்

 இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் திட்ட்த்தின் படி நவம்பர் 4 முதல் டிஸம்பர் 4 க்குள் உங்களது வீடு தேடி வாக்குச் சாவடி அதிகாரி (பிஎல்ஓ) வருவார்

 அவரிடம் 2002 2004 ம் ஆண்டு வாக்காளர் பதிவேடு இருக்கும். அதில்  உங்களது பெயர் இருந்தால் தப்பித்தீர்கள், அவர் தருகிற படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுத்தால் போது,  அது பொன்ற ஒரு காப்பியை உங்களுக்கு தருவார். அதை நீங்கள் வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

 முகவரி மாறி இருந்தால் பார்ம் 8 சமர்ப்பிக்க வேண்டும்

 சிக்கல் யாருக்கு ?

 உங்களது பெயர் 2002 2004 வாக்களர் பட்டியலில் இல்லை என்றால் பிரச்சனை தான்.

 அப்போது நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க உங்களது பெற்றோர் இருவரின் வாக்காளர் எண்ணை கொடுக்க வேண்டும்.

 அது உங்களிடம் இல்லை எனில்

 நீங்கள் 1987 ஜூலை 1 லிருந்து 2004 டிஸம்பர் 2 க்குள் பிறந்தவராக இருந்தால் உங்களது பெற்றோர் இருவரில் ஒருவர்  பிறந்த நாள் பிறந்த இடம் பற்றிய ஆவனத்தை கொடுக்க வேண்டும்

 2004  டிஸம்பர்  2 தேதிக்குப் பிறகு பிற்நதவராக இருந்தால் பெற்றோர் இர்ருவரின் பிறந்த நாள் பிறந்த இடம் ஆகியவற்றுக்கான ஆவனத்தை கொடுக்க் வேண்டும்

இவை எதுவும் இல்லை என்றால் இப்போது தேர்தல் கமிஷன் குறிப்பிடுகிற 12 ஆவணங்களில் ஒன்றை கொடுக்க் வேண்டும்.

உங்களது புதிய விண்ணப்பத்தை  அதிகாரி அங்கீகரித்தாரா இல்லையா என்பதை டிஸம்ப்ர் 9 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிபடப்பட்டிருக்கும் அதில் உங்களது பெயர் இணைக்கப் பட்டிருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

 அதில் உங்களது பெயர் இல்லை என்றால் ஜனவரி 8 ம் தேதி வரை முறையிட வாய்ப்புண்டு.- (கிளைம்ஸ் அண்ட் அப்ஜக்ஸன் டைம்)

 உங்களது கோரிக்கைகள் ஜனவரி 9 முதல் 31 வரை பரிசீலனை செய்யப்படும்

 பிப்ரவரி 7 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளிப்படும்.

 என்வே அநீதிக்கு எதிராக தீவிரமாக போராடுகிற அதே நேரத்தில் அக்கிரமச் சக்திகள் நம்மை வீழ்த்தி விடாமல் இருக்க

·         தேவையான ஆவணங்கள்

·         இறுதித் தேதிகள்

·         சம்பந்தப் பட்ட அதிகாரிகள்

 பற்றிய  விழிப்புணர்வும் அவசியம். அத்தியவசியமான ஆதாரங்களை தயார் செய்து கொள்வதும் அவசியம்

 எல்லாம் வல்ல இறைவன் பெருமை மிக நமது நாட்டை பீடித்து வருகிற சர்வாதிகார போக்கிலிருந்து நம்மை பாதுகாப்பானாக!

2 comments:

  1. الظُّلْمُ مُؤْذِنٌ بِخَرَابِ الْعُمْرَانِ

    ReplyDelete
  2. Anonymous10:54 PM

    இந்த sir ஒரு திட்டமிட்ட சதி. முஸ்லிம்களின் பெயர்களை நீக்கும் திட்டம். எனவே ஒவ்வாரு பள்ளிவாசல் நிர்வாகமும், இஸ்லாமிய இயக்கங்களும்,அமைப்புகளும் இறங்கி முழுமையாக வேலை செய்து முஸ்லிம்களுக்காக பெயர் சேர்க்க அந்தந்த பகுதிகளில் முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் பகுதிகளில் அதிகாரிகள் வரும் போது அவர்களுடன் அப்பகுதி மஸ்ஜித், அமைப்பு பொறுப்பாளர்டளும் இருக்க வேண்டும்

    ReplyDelete