வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 30, 2010

அர்த்தமுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டம்

وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا

2011  ம் ஆண்டு தொடங்குகிறது.

கீ.பி ஆண்டு சூரிய ஓட்ட்த்தை அடிப்ப்டையாக்க் கொண்ட்து. ஹிஜிர் ஆண்டு சந்திர ஓட்ட்த்தை அடிப்ப்டையாக்க் கொண்ட்து.

சூரிய ஆண்டு (அதாவது பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர) 365 ¼ நாட்கள் ஆகும். துல்லியமாக சொல்வதானால் 365 நாட்கள் 5 மணி 48 நிமிஷம் 46 விநாடி ஆகிறது.)

சந்திர ஆண்டு என்பது (அதாவது சந்திரன் ஒரு முறை பூமியைச் சுற்றிவர) 354 நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு சூரிய ஆண்டையும் விட சந்திர ஆண்டு 10 ¾ நாள் குறைவானதாகும்.

ஒவ்வொரு 33 சூரிய வருட்த்திற்கும் ஒரு முழு சந்திர வருடம் அதிகமாக் அமையும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து கண்க்கிடுகிற போது இன்றுவரை யுள்ள சூரிய வருட்த்தில் சுமார் 42 சந்திர வருடங்கள் அதிகரித்துள்ளன,   

கி.பி ஆண்டுடன் முஸ்லிம்களுக்கு சண்டை  எதுவும் இல்லை.

ஆனால் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை இஸ்லாம் ஒரு போதும் ஏற்பதில்லை.

இஸ்லாம் மட்டுமல்ல்  எந்த நாகரீகமுள்ள சமுதாயமும் அதை ஏற்க இயலாது.
  • மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரண்டு இளம் பெண்களை எண்பது இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
  • சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டங்களில் விபத்து நேர்ந்ததில் நீச்சல் குளத்தில் விழுந்து ஒருவர் மரணமடைந்தார் .பலர் காயமடைந்தனர். .
  • சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வய்து  பெண் ஒருத்தி கொச்சியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தச் சிறு விபத்துக்களால் மாத்திரமே இந்தக் கூத்துக்களை நாம் எதிர்க்கவில்லை. அடிப்படையில் இந்தக் கொண்டாட்டங்கள் எந்த அர்த்தமும் அற்றவையாகும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் என்னவெல்லாம் நடக்கிறத்து. செய்திகளில் தேடிப்பாருங்கள்.

மது ஆட்டம் பாட்டம்.ஆபாசம் ஆகிய அனைத்து  ஒட்டல்களும் கிளப்புகளும் உருவாக்கிய கலாச்சாரம்  என்பதை உண்ரலாம்.  

பொதுவாக சமூகத்தில் வியாபாரிகள் பெரும் தொழிலதிபர்களும் தங்களது வியாபார நோக்கத்திற்காக விளம்பரங்கள் மூலம் புதிய திருவிழாக்களை உருவாக்குகிறார்கள்.

ஒரு உதாரணம் அட்சய திருத்திகை – ஒரு இருபது வருட்த்திற்கு முன்பு இப்படி ஒரு வார்த்தையே இல்லை. இப்போது அன்றைய தினத்தில் ஒரு பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என மக்கள் கியூவில் நிற்கிறார்க்ள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் அப்படி அர்த்தமற்றதே!

நள்ளிரவு 12 மணி ஆனதும் ஆ ஊ என்ற ஒரு கத்தல் அவ்வளவு தான். இதற்காக பல பத்தாயிரங்களை மக்கள் அள்ளி வீசுகிறார்கள்.

வியாபாரிகளின் தந்திரத்திற்கு படித்தும் விவரமற்றவர்கள் ஏமாறுகிறார்கள்.

ந்தப்  புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்  தலையாய கடமை போன்ற தோற்றம் இன்று இளைஞர்களிடையே வரவி வருகிறது

சில இளைஞர்கள்  மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்கிறார்கள் , பந்தயங்கள்  நட்த்துகிறார்கள் .

முஸ்லிம்கள்  இவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக விலகி நிற்கவேண்டும்.

மகிழ்ச்சி என்ற பெயரில் அல்லாஹ்விற்கு கோபமூட்டும் எந்தச் செயலையும் செய்து விட்டால அல்லாஹ்வின் பரகத் பிறகு எப்படிக் கிடைக்கும்.  

ஒவ்வொரு புத்தாண்டும் நமது ஆயுளின்  எல்லை நெருங்கிவருவதை  ஞாபகமூட்டுகிறது. நமது பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறது.

குழந்தைகள் பள்ளியிலிருந்து உயர் நிலைப்பள்ளிக்குச் செல்லும் போது அல்லது கல்லூரிக்கு செல்லும் பேது நாம் நினைவூட்டுகிறோம்.

நீ இப்ப பெரியவன். பொருப்பா நடந்துக்கணும் என்கிறோம்.
இது நம்க்கும் பொருந்தும்

கடந்த வாரம் புத்தாண்டைப் பற்றிய் சிந்தனையோடு கஹ்பு சூரா ஓதிக் கொண்டிருக்கிறேன். இதயத்தை ஈர்த்த்து இந்த வசனம்.

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا
 இந்த வசனத்தை எப்போது ஓதும் போது ஒரு செய்தி ஞாபகத்திற்கு வரும்

வேலூர் ஷம்சுல் உலமா அப்துல் வஹாப் ஹஜ்ரத் அவர்கள் தனது மதரஸாவுக்கு என்ன பெய்ர் வைக்கலாம் என்று யோசித்த ப்டி குர்ஆனைத் திறந்து பார்த்த போது  இந்த வசனமே அவர்களது பார்வையில் பட்ட்து.  பாகியாத் என்று பெயர் சூட்டினார்கள்.

என்ன அற்புதமான பெயர் பொருத்தம் பாருங்கள் அப்துல் வஹாப் ஹ்ஜரத் அவர்கள் இந்த உலகில் விட்டச் சென்ற நிலையான நல்ல காரியமாக அவரது நிறுவனம் அமைந்து விட்ட்து.

ஜமால் முஹம்மது  மறைந்து விட்டார் அவர் உருவாக்கி விட்ட கல்லூரு இன்று திருச்சியில் மட்டுமல்ல அகில உலகிலும் புகழ் பெற்று நிலைத்துக் கொண்டிருக்கிறது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்க்கு காஜா மைதீன் என்பவர் 100 ஏக்கர் நிலம் கொடுத்தார். இன்று அவருடைய பெய்ர் கூட பலருக்கு தெரியாது. ஆனால் அவரது கொடை நின்று நிலைத்துக் கொண்டிருக்கிறது.
இமாம் ரூமி அவர்கள் மஸ்னவி என்று பார்ஸி காவியம் எழுதினார். அவர் மறைந்த பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அவரது பணி வாழ்ந்து கொண்டிருக்கிறது,

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸ் நூலை தொகுத்துக் கொடுத்தார். இன்றும் அது முஸ்லிம்களின் நாவில் குர் ஆனுக்கு அடுத்தப்டியாக பேசப்பட்டுக்க் கொண்டிருக்கிறது.

இது போல ஏராளமான அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் த்த்துவ ஞானிகள் கவிஞர்கள் தாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த்தற்கான தட்த்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்,

நாம் நம்முடைய பங்கிற்கு நிலைத்து நிற்கிற நற்செய்லாக என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும்.

பணம் சேர்ர்பதும் பிள்ளைகளை பராமரிப்பதுமே நம்முடைய பிரதான் இலக்காக இதுவரை இருந்திருக்கிறது.? திருக்குர் ஆனின் வார்த்தையை கவனியுங்கள்.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَ
செல்வமும் குழ்ந்தைகளும் அழகுதான் என்று குர் ஆன் ஒத்துக் கொள்கிறது.  
அது தவறல்ல. ஆனால் அது போதுமா என்று யோசிக்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மை பெறச்சிறந்த்து நிலைத்து நிற்கும் நற்செயலே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல. நாம் பனத்தையும் பிள்ளைகளையும் அது நம்மை பாதுகாக்கும், சிரம்மான சூழ்நிலையில் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வசனத்தின் கடைசி வாத்தை சொல்கிறது.
وَخَيْرٌ أَمَلًا
    
நாம் எதிர்பார்க்கச் சிறந்த்தும் நமது நற்செயல்களே! என்று அது அறிவுறுத்துகிறது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் ஒரு சக்தியை வழங்கியிருக்கிறான். அந்தச் சக்தியையை பயன்படுத்தி நிலைத்து நிற்கிற நறகாரியங்களை செய்ய நாம் தீர்மாணிக்க வேண்டும்.

எதுவுமே செய்ய முடியவில்லையா தஸ்பீஹ் திக்ர் செய்யும் வழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ  என்பதற்கு திக்ரு தஸ்பீஹ் என்ற அர்த்தமே பிரதானமாக சொல்லப்படுகிறது.

عن سعد بن جنادة رضي الله عنه قال: كنت في أول من أتى النبي صلى الله عليه وسلم من أهل الطائف فأتيت النبي صلى الله عليه وسلم فأسلمت وعلمني " قل هو الله أحد" و " إذا زلزلت " وعلمني هؤلاء الكلمات: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وقال " هن الباقيات الصالحات
நாம் வாழ்ந்த்தின் அடையாளமாக என்ன நன்மைய விட்டுச் சென்றோம் என்று யோசிப்பதும் அதற்காக முயல்வதுமே ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் புத்திசாலித்தனமான வழி முறையாகும்.

புத்தாண்டை கொண்டாடும் சரியான வழிமுறைகள்

·         புத்தாண்டு தினம் என்பது 'நமது வாழ்க்கை வங்கியில் ஆயுள் பேலன்ஸ் கழிந்து கொண்டிருக்கிறத் ' எனும் பக்குவம் வளரவேண்டும். அல்லது
மனிதத்தையும், குடும்ப உறவுகளையும், சமூக பிணைப்பையும் ஊக்கப்படுத்தும்
செயல்களை புத்தாண்டு தினத்தில் கொண்டாடுவதே சிறப்பானதாக இருக்கும். இஸ்லாமிய பெருநாட்கள் அதற்கான சரியான முன்னுதாரணத்தை நமக்கு வழங்கியிருக்கின்றன.  
·         குடிக்கமாட்டேன், புகைக்கமாட்டேன், உடற்பயிற்சி செய்வேன் என்பது போன்ற  நம் வாழ்வை ஒழுங்கு படுத்தும் உறுதிமொழிகளை  ஏற்கலாம்.
·         குழந்தைகளுக்கு  ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்யப் பழக்கலாம்.
·         ஒவ்வொருவரும் அவரவரது சூழ்நிலைக்கு ஏற்ப தமது ஈருலக வாழ்வை மேம்படுத்த சரியான திட்டமிடலாம்.   

1 comment:

  1. assalamu alaikum. ithu yanna sariyana muraigal .itharku munnal nengal veliyitta islamiya puthandin katturaiyil ithu ponra urudimozigal illaiye? intha katturai islamiya puthandi vida ithai meanmai paduthuvathaga ullathu

    ReplyDelete