வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 27, 2020

ஆஷூரா முந்தைய பதிவுகள்

அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த பல மாதங்களாக இந்த தளத்தை பயன்படுத்தாததால் சில புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறிய முடியவில்லை இங்கு தரப்பட்டுள்ள லிங்குகள் வேலை செய்யாவிட்டால் இந்த தலைப்புகளில்  cut past  செய்து கூகுளில் நேரடியாக தேடவும்.

 இன்ஷா அல்லாஹ் சிரமங்கள் சீக்கிரம்  சீர் ஆகும்.

2008 ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

2011   ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு  

2013 யூதர்களாகிவிடாதீர்கள்  
2015உறுதியின் மறு வடிவம் மூஸா (அலை) 

2015 பிளந்த பாதையும் பிளவு படாத மக்களும்
2016முன்னேற்றத்திற்கும் பின்னடைவுக்கும் ஆஷூரா தரும் பாடம் 

2017 போராட்டக் களங்களை எதிர் கொள்வதே ஈமான் 

2018 ஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர் 

Thursday, March 26, 2020

எச்சரிக்கைகளை கடைபிடிப்போம்!
(இன்று ஜும் ஆ இல்லை என்றாலும் இமாம்கள் ஆடியோ மற்றும் வீடியோ மூலம் தேவையான செய்திகளை மக்களுக்கு சொல்லலாம்.)

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(البقرة:195)

கொரோனோ வைரஸ் பரவலுக்கு ஞ்சி தமிழகம் முழுவதிலும் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன நம்முடைய வாழ்வில் இதுவரை நாம் சந்தித்திராத சோதனை இது அல்லாஹ் இந்த சோதனையிலிருந்து நம்மை வெகு சீக்கிரம் விடுவிப்பானாக! இந்த கொடூர நோய் தொற்றிலிருந்து நம்மையும் இந்த உலகில் அல்லாஹ் பாதுகாப்பானாக

கொரோனோவிற்கு உலகம் முழுவதிலும் சுமார் 21 ஆயிரம் பேர் பலியாகி விட்டார்கள் என்கிற செய்தி இதயத்தை நொருக்குகிறது. தமிழகத்தில் பதிமூன்று பேர் இருந்துள்ளார்கள். இந்நோயினால் இறந்தவர்களில் உடல்கள் கூட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது இந்த நோயின் கொடூரம் என்ன என்பதை காட்டுகிறது  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அல்லாஹுத்தஆலா தகுந்த ஆறுதலை பிரதி உபகாரத்தையும் தந்தருள் புரிவானாக.

26 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது சுமார் 85,000 பேர் நோய்த் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் அல்லாஹு அல்லாஹ் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் மிக விரைவாகவும் குணம் பெறச் செய்வானாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எந்தவித நோய் தொற்றுக்கு ஆளாகாமல் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!


இஸ்லாமிய வரலாற்றில் பல கொள்ளை நோய்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில்ஏராளமான மக்கள் பலியாகி உள்ளார்கள். குறிப்பாக உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி பதினெட்டாம் ஆண்டு கிம்வாஸ் பிளேக் நோய ஏற்பட்டது.  ஜெருசலத்திற்கும்  ரமலா விற்கும் இடையே உள்ள  கிம்வாஸ் என்ற சின்ன கிராமத்தில் தோன்றிய  அந்த பிளேக் நோய் சிரியா முழுக்க பரவியது. அதில் சுமார் இருபதாயிரம்  மக்கள் ஒரு சில நாட்களில் இறந்து போயினர் . இக் கொடிய நோயில் தலைசிறந்த நபித்தோழர்கள் பலரும் ஷஹீதானார்கள் அபூ உபைதா,  முஆத் பின் ஜபல்,  யஜீத் பின் அபீ சுப்யான் , ஹாரிஸ் பின் ஹிஷாம், சுஹைல் பின் அம்ரு  உத்பா பின் சுஹைல் போன்ற பலர் ஷஹீதானார்கள்.

இஸ்லாமிய வரலாறு கலங்கி நின்ற நேரம் அது

அதேபோல ஹிஜ்ரீ 68 ஆவது வருடத்தில் பஸ்ராவில் ஜாரிப்  என்ற பிளேக் நோய் ஏற்பட்டது ஜாரிப் என்றால் கழுவுதல் என்று அர்த்தம் ஊரையே ழுவியது போல் இந்நோய் மக்களை கொள்ளை கொண்டு சென்றதால் இப்பெயர் வந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்
இதுபோல இன்னும் பல்வேறுபட்ட கொள்ளை நோய்களை இஸ்லாமிய வரலாறு எதிர்கொண்டுள்ளது,

இக்கொள்ளை நோய்களை முஸ்லிம் சமூகம் அதிக பாதிப்புக்கு ஆளாகாமல் எதிர்கொண்டிருக்கிறது

உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் காலத்தில் ஏற்பட்ட கொள்ளைநோய் முஸ்லிம்கள் எதிர்கொள்ள பெருமானார் ஸல்லல்லாஹு செல்லம் அவர்களின் ஒரு அறிவுரை மிகப்பெரும் வழிகாட்டியாக இருந்தது

في موجة طاعون عمواس، ذُكر أن المسلمين تحركوا في إطار قول رسول الله صلى الله عليه وسلم عن الطاعون: «إِذا سمعتم به بأرضٍ؛ فلا تقدموا عليه، وإِذا وقع بأرضٍ، وأنتم بها؛ فلا تخرجوا فراراً منه »،

இன்றைய வழக்கில் கொரண்டைன் என்று சொல்கிறார்களே அதற்கு ஒப்பானதாகும்.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துவது ஐசுலேசன் என்றும் நோய்த் தொற்றுக்கு வாய்ப்பிருப்பதால் தனிமைப்படுத்தப்படுபவர்களை கொரண்டைன் என்றும் கூறுகிறார்கள்.

இது நோய் பரவாமல் காக்கின்றன  முக்கிய நடைமுறையாகும்.

இரண்டாவதாக நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதை முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் இன்றைய வழக்கில் இதையே ஐசி லேஷன் என்கிறார்கள்

மூன்றாவதாக இதற்காகவே தனியாக பீமாரிஸ்தான் என்கிற பெயரிலான மருத்துவமனைகளை முஸ்லிம்கள் அமைத்தார்கள் மம்லுக் களுடைய ஆட்சிக்காலத்தில் சிரியாவில் பிளேக் நோய் ஏற்பட்ட போது ஊரெங்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டது வரலாறு கூறுகிறது

1.       நோய் தொற்று ஏற்படும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது
2.       நோயாளிகளை தனிமைப்படுத்துவது
3.       புதிய மருத்துவமனைகளில் ஏற்படுத்துவது

ஆகிய மூன்று விஷயங்களில் மூலம் முஸ்லிம் உலகு கொள்ளை நோய்களை எதிர் கொண்டது என்று வரலாறு சொல்கிறது

இன்றைய சூழல் நம்முடைய பகுதியில் யார் வேண்டுமானாலும் கரோனா வைரஸ் சோற்றோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்ற அச்சம் யதார்த்தமானது.

நீங்கள் ஃபேஸ்புக் வழியாக ஒரு வீடியோ பார்த்திருக்கலாம்

ஒரு டாக்டர் அதில் பேசுகிறார்

இந்த வைரசால் பாதிக்கப் படுகிறவர்கள் மூன்று வகையாக பிரிக்கலாம் டைப் ஏ அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

இரண்டாவது டைப் சி . அதாவது அவருடைய உறவினர்கள் அவர் சென்று வந்த குறிப்பிட்ட இடங்களை சார்ந்தவர்கள்

மூன்றாவது டைப் பி.  அவர் பயணித்த வாடகை காரின் டிரைவர் அவர் சென்ற கடைகளின் அவரோடு இருந்தவர்கள் கோயில்கள் சர்ச்சைகள் பள்ளிவாசல்களில் அவர் சென்றபோது இருந்தவர்கள்

முதலாவது வகையினர் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள் இரண்டாம் வகையினர் கூட அடையாளம் காணப்பட்டு விட்டார்கள் மூன்றாம் வகையினரை அடையாளம் காண்பது என்பது மிக மிகச் சிரமமான காரியம்

அதனால் தாம் எல்லோரையும் தனித்திருக்குமாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்

சமீபத்தில் ஒரு ஊரில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு இளைஞன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக பள்ளிவாசலுக்கு வந்திருக்கிறார் அந்த இமாம் அவரை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார் இந்த நபர் பள்ளிவாசலுக்கு வந்தார் என்பதே அவர் வந்து சென்ற நேரத்தில் யாரெல்லாம் பள்ளிவாசலுக்குள் இருந்தார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த வைரஸ் தொற்றுக்கான ஆபத்து இருக்கிறது என்பது ஆகிவிடுகிறது

இதை நம்மில் யாரும் எதிர்பார்க்க முடியாது எனவேதான் பள்ளிவாசல்களை மூடி வைக்க வேண்டிய ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது

மனித குலத்தின் நன்மை கருதி இத்தகைய முடிவுகளுக்கு மார்க்கம் அனுமதித்திருக்கிறது கடுமையான மழை காலங்களில் தெருக்களில் சேரும் சகதியுமாக இருக்கிற சூழலில் நடமாடுவது அச்சத்திற்கு உரியதாக இருந்த நிலையில் முஹம்மது நபி (ஸல்)  அவர்களுடைய பள்ளிவாசலில் இருந்து சல்லூ பீ ரிகாலுகும்  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் இதேபோன்றதொரு செய்தியை இப்னு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் கூறுகிறார்கள்

இந்த அடிப்படையில் தான் இப்போதும் நம்முடைய பள்ளிவாசல்களில் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது

மக்கள் மிகுந்த பொறுமையோடு இதற்கு கட்டுப்பட வேண்டும்.

இளைஞர்களும் நடுத்தர வயதினரும் வீடுகளில் தங்கி இருப்பதில்லை போரடிக்கிறது என்று வெளியில் சுற்றுகிறார்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவது வீட்டில் இருக்கிற பெரியவர்களுக்கும் காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது இதனால்தான் ஒருகட்டத்தில் காவல்துறை தெருவில் சுற்றுகிற அவர்களை தடியால் அடிக்கிறார்கள்.

எனவே இளைஞர்கள் வீடுகளுக்குள் தங்கியிருந்து தங்களது நேரங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்

அலட்சியமாக இருந்து நடந்துகொண்டு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது

நோய் தாக்கும் என்று ஆபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை இஸ்லாத்தில் தொற்று நோய் இல்லை என்கிற பெருமானார் ஸல்லல்லாஹு செல்லம் அவர்களுடைய பொன்மொழி தொற்றுநோய் தானாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது அல்லாஹ் நாடினால் அன்றி என்பது பொருளாகும் எனவே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாலேயே நோய் வந்துவிட்டதாக அல்லது நோய் வந்துவிடும் என்று கருதவேண்டாம் பயப்பட வேண்டாம் அல்லாஹ் நாடினால் அன்றி நம்மை எதுவும் தாக்கி விடாது என்பதை உணர்ந்து தைரியமாக இருக்கவும்.

அதைப்போல நம்முடைய பகுதிகளில் சிலருடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் என்ற அடையாள போஸ்டரை சுகாதாரத்துறையினர் ஒட்டியிருக்கிறார்கள் அத்தகைய வீடுகளை அல்லது அந்த வீடுகளில் இருப்பவர்களை சமூகத்தில் யாரும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களைப் போல பார்க்கக்கூடாது. அவர்கள் சமூகத்திற்காக மிகப்பெரிய தியாகத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள் என்கிற மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும்

தேவையற்று இவர்களைப் பற்றிய அச்சத்தையும் பரப்பக்கூடாது இது விஷயத்தில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் செய்தி பரப்புவதை அறவே தவிர்த்துவிட வேண்டும் அவ்வாறு செய்தி பரப்புகிறவர்கள் கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்பது என்கிற அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மஹல்லாவிலும் அன்றாடங்காய்ச்சி களான ஏழைகள் பலர் இருப்பார்கள் அல்லது தினசரி உணவுக்கு மெஸ்ஸுகளை நம்பி இருக்கிற பலர் இருப்பார்கள் இத்தகையவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்வது காலத்தே செய்த பேர் உபகாரமாக இருக்கும்

ஜகாத் ஸக்தா போன்ற தானதர்மங்களை இது போன்ற  நேரத்தில் செலவிடுவது மிகப் பொருத்தமானது எனவே ஒவ்வொரு மஹல்லாவும் சாமானிய மக்களுக்கான உதவி கூடங்களை அமைக்க வேண்டும்

அடுத்து மிக முக்கியமாக இந்த நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறதோ

1.       அடிக்கடி கைகளைக் கழுவுவது
2.       வெளியே சென்று வந்த கையோடு கண் மூக்கு முகம் ஆகியவற்றை தொடாமல் இருப்பது
3.       சளி இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக் கொள்வது
4.       வெளியே செல்கிற இடத்தை அடுத்தவர்களை விட்டு ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க முயற்சிப்பது

ஆகிய நடைமுறைகளை கையாள வேண்டும் இந்த நோய்க்கிருமி 3 அடி வரை மட்டுமே பறக்கும் சக்தி உடையது என்பதால் இந்த ஏற்பாடு,

இனிவரும் நாட்கள் மிக முக்கியமானவை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்

அல்லாஹு திருக்குர்ஆனில் உங்களை நீங்களே நாசத்தில் தள்ளி விடாதீர்கள் என்று கூறுகிறான்
وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(البقرة:195)
இந்த  அறிவுரையை கவனத்தில் வைக்க வேண்டும்

அல்லாஹ் இந்த கொடிய நோய் தொற்றிலிருந்து நம்மையும் உலகையும் பாதுகாதருள்புரிவானாக இந்த நோய்க்கு ஆளான நபர்களுக்கு மிக விரைவான குணத்தை வழங்கிய புரிவானாக தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் எந்தவித ஆபத்தும் இல்லாமல் நிவாரணம் பெற அல்லா தௌபீக் செய்வானாக

மருத்துவ பணியாளர்கள் காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் போன்ற இந்த சோதனையான சூழ்நிலையிலும் திடமான மனதோடு மக்களுக்கு பணியாற்றுகிறார்வர்களை அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக! அவர்களுக்கு அல்லாஹ் தகுந்த நற்கூலியை தந்தருள்வானாக.