அனைவருக்கும்
இனிய ஹிஜ்ரீ 1439 ம்ஹிஜிரீ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அல்லாஹ்
இந்த வருடம் முழுவதையும் இனி வரும் காலங்களையும் அமைதியும் பரக்கத்தும் நிரம்பி வழியும்
பொழுதுகளாக ஆக்கி வைப்பானக! நன்மைகளுக்கு நெருக்கமானதாகவும் தீமைகளிலற்றதாகவும் ஆக்கிவைப்பானாக!
உலகெங்கிலும்
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியான நடவடிக்கைகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. இனியும்
சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி முஸ்லிம்களுக்கு இல்லை. அல்லாஹ் விரைவான விடியலை
தந்தருள்வானாக!
இந்த
காலகட்டத்தில் முஸ்லிம்கள் தத்தமது குடும்பங்களில் மஹல்லாக்களில் ஊர்களில் அமைதியையும்
நிம்மதியையும் தக்க வைத்துக் கொள்ள் அதிகப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும். சச்சரவுகள்
பிணக்குகள் அதிகரிக்க நாம் காரணமாகி விடக் கூடாது என உறுதியேற்க வேண்டும்.
சொர்க்கத்தின்
ஓரத்தில் ஒரு வீடு !
عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنا زعيم ببيت
في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن
كان مازحا، وببيت في أعلى الجنة لمن حسن خلقه. - سنن أبي داود
ஹிஜ்ரீ
புத்தாண்டு நமக்கு மதீனாவின் அன்சாரிகளின்
பேருதவியை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின்
மகோன்னதமான மனிதர்களை ஹிஜ்ரத் ஆண்டு தோரும்
அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இன்றைய
உலகின் மிகப்பெரிய் அதிகாரம் படைத்த செல்வாக்கான பதவியில்
இருப்பவர் அமெரிக்க அதிபர். ஜனநாயக்ம் நாகரீகம்
உலக அமைதி அனைத்துக்கும் சொந்தம்
கொண்டாடக் கூடியவர் நேற்று முன் தினம்
ஐநா சபையில் உரையாற்றினார். உலகத்
தலைவர்கள் பலரும் இதற்காகவே அங்கு
கூடியிருந்தனர். உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்துச் செய்தி சானல்களும் அவரது
உரையை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
அந்த
உரை பல நாடுகளை மிரட்டும்
தொனியில் அமைந்திருந்தன குறிப்பாக ஈரானை வட கொரியாவை
சுவிட்சர்லாந்தை அரபு நாடுகளை, இஸ்லாமிய
அடிப்படை வாதிகளை என ஒவ்வொரு
வரையும் வாட்டி எடுத்தார்.
இது
வரை ஐக்கிய நாடுகள் சபையின்
45 கண்டனத் தீர்மாணங்களுக்கு இலக்காகி இருக்கிற இஸ்ரேலுக்கு சார்பாக பேசினார்.
இந்தக்
கொடுமைகளுக்கெல்லாம் மேலாக உலக நாடுகளில்
அதிகரித்து வருகிற பெருமளவிலான அகதிகள்
குடியேற்றம் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது
என்றார்.
ஒரு
பெரிய நாட்டின் தலைவரின் நாவிலிருந்து எத்தகை கொடூர மிருகத்தனமான
வார்த்தைகள் நாகரீகமாக வெளியே வருகின்றன. ?
கூச்சமில்லாமல்
இந்த கள்ள ஆசாமிகளால் எப்படி உலக அரங்கில் மனிதர்களாக தலை காட்ட முடிகிறது
?
.
இன்றைய
சுடசுட நிகழ்கிற ரோகிங்கியா அகதிகளின் வாழ்க்கைச் சிரமங்களைப் பற்றி அவர் ஒற்றை
வார்த்தை பேசவில்லை.
எத்தனை
ஈனத்தமான தலைமை இது ?
ரோகிங்க்யா
அகதிகளுக்கு நேர்ந்த கொடூரங்கள் சிலவற்றை மீடியாக்கள்
போனால் போகிறது என்று பிரசுரிக்கின்றன. அந்தச் செய்திகள் எத்தகைய கொடூரமாக இருக்கின்றன
?
ஒட்டு
மொத்த உலகத்தை குலை நடுங்கச்
செய்கிற கோடூரம் குறித்து ஒரு
உலகத் தலைவர் இப்படி கண்டு
காணாமல் போவது என்ன வகையிலான
நாகரீகமாகும் ?
At Rohingya Camp In
Bangladesh, Horror Stories என்ற தலைப்பில்
என் டி டி டிவியின் இணைய தளம் வெளியிட்ட தகவல்கள் வாசிக்க முடியாத வேதனைகளுக்குரியவவை
40 வயதான பேகம் சான் ஜிதா தன்னுடைய 10 வயது குழந்தையோடு முகாமில் நடுங்கிய
படி இருக்கிறார். அவருடைய கணவரை பர்மிய இராணுவம் அவர் கண் முன்னாலேயே சுட்டுக் கொன்று
விட்டது.
தனது தோளில் ஒன்பது மாத குழந்தையை சுமந்து கொண்டிருக்கிற அன்வரா பேகத்தின்
கணவரை பர்மிய இராணுவம் கொன்று விட்டது.
எல்லா வற்றிலும் பெரும் கொடுமை முஹம்மது காஸிம் என்ற 40 வயதுக்காரருக்கு தன்
கண் முன்னேலேயே மக்ள் கற்பழிக்கப்படுவதையும் பிறகு கொல்லப்படுவதையும் பார்க்க நெர்ந்திருக்கிறது. பர்மீய் இராணுவம் தான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியது
என்று அவர் கூறுகிறார். அவரது மனைவியும் மற்ற குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்று அவருக்கு
தொரியவில்லை. இத்தனைக்கும் ராக்கைன் மாநிலத்தில் சொந்த வீடூ மற்றும் கார் என வசதியாக
வாழ்ந்தவர் அவர்
ஆகஸ்ட் 25 ம் தேதி பர்மாவின் ராக்கைன் மாகாணத்தை அந்நாட்டு இராணுவம் தாக்கத்
தொடங்கியதிலிருந்து இது வரை சுமார் 10 இலட்சம் அகதிகள் பங்களாதேஷில் குடியேறியிருக்கிறார்கள்.
இதற்கும் மேம்பட்ட கொடூரங்களை அறிந்திது உணர்ந்தும் கூட அமெரிக்க அதிபர் இவவகதிகளைப்
பற்றி வாய் திறக்க வில்லை.
வட கொரிய அதிபரை இராக்கட் மேன் என்று கிண்டலடித்து நாங்கள் நினைத்தால் சாம்பலாக்கி
விடுவோம் என ஒரு கேங்க் தலைவரைப் போல பேசிவிட்டுச் சென்று விட்டார்.
இரக்கமும் மனிதாபிமானமும் வெட்கப்படுகிற இன்றை இந்த நிகழ்வுகளுக்கு இடையே ஆயிரத்து
நானுறு ஆண்டுகளுக்கு முன்னர் மதீனாவின் அன்சாரிகள் அகதிகளிடம் காட்டிய மானுடக் கருணையின்
விசாலத்தை எண்ணிப்பார்க்கிறோம்.
சகோதரத்துவத்தின் ராஜபாட்டை
மஸ்ஜிதுன்னபவி கட்டமைக்கப்பட்ட பின் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர் – அகதிகளுக்கு மதீனாவின் அன்சாரிகளோடு சகோதரத்துவ பந்தத்தை பெருமானார் (ஸல்) ஏற்படுத்தினார்கள்.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!
இப்படி ஒரு இறுக்கமான உறவை உலக வரலாறுசந்தித்ததில்லை.
குலப்பெருமையும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த அரபுச்சமூகத்தில் அதி
அற்புதமான சகோதரத்துவத்தை முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அன்சாரியின் சொத்தில்முஹாஜிர் வாரிசாவார் என்னும் அளவில் அந்தப் பிணைப்புஅழுத்தமாக கட்டமைக்கப்பட்டது.
وبعد قدومه صلى الله
عليه وسلم إلى المدينة بخمسة أشهر آخى بين المهاجرين والأنصار لتذهب عنهم وحشة
الغربة وليؤنسهم من مفارقة الأهل والعشيرة ويشد بعضهم أزر بعض، وقد آخى بينهم على
الحق والمواساة ويتوارثون بعد الممات دون ذوي الأرحام وكانوا تسعين رجلاً خمسة
وأربعين من المهاجرين وخمسة وأربعين من الأنصار، فلما كانت وقعة بدر وأنزل الله
تعالى: {وَأُوْلُواْ الارْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَبِ اللَّهِ
إِنَّ اللَّهَ بِكُلّ شَىْء عَلِيمٌ} (الأنفال: 74)، نسخت هذه الآية ما كان قبلها
وانقطعت المؤاخاة في الميراث
தம்மிடம் அடைக்கலமாகி வந்த மக்களுக்கு ஆரம்பத்தில் இடமளித்த அன்சாரிகளின் வீடுகள்
– இது பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பு.
فتح الأنصار أبواب بيوتهم وقلوبهم ،
واستعدوا لاحتضان من جاءهم مهاجراً تحت ظاهرة عظيمة من التكافل الاجتماعي، فحوى
المسكن الواحد تحت سقفه الأنصاريٌّ والمهاجر وهم يتقاسمون كل شي المسكن والمال
والطعام ، فمن هذه البيوتات التي أوت المهاجرين هي:
1- دار مبشر بن عبد المنذر بن زنبر بقباء: ونزل بها مجموعة من المهاجرين نساءً ورجالاً، وقد ضمت هذه الدور عمر بن الخطاب، ومن لحق به من أهله، وقومه وابنته حفصة وزوجها وعياش بن ربيعة.
2- دار خبيب بن إساف أخي بني الحارث بن الخزرج بالسنح نزل بها طلحة بن عبيد الله بن عثمان وأمه وصهيب بن سنان.
3- دار أسعد بن زرارة من بني النجار، قيل: نزل بها حمزة بن عبد المطلب.
4- دار سعد بن خيثمة أخي بني النجار، وكان يسمّى بيت العزاب ونزل بها الأعزاب من المهاجرين.
5- دار عبد الله بن سلمة أخي بَلْعجلان بقباء: نزل بها عبيدة بن الحارث وأمه سخيلة، ومِسْطَح بن أثاثة بن عبّاد بن المطلب، والطفيل بن الحارث، وطُليب بن عُمير، والحصين بن الحارث نزلوا جميعاً على عبد الله بن سلمة بقباء.
6- دار بني جَحْجبتى، والمحتضن هو منذر بن محمد بن عقبة، نزل عنده الزبير ابن العوام، وزوجه أسماء بنت أبي بكر، وأبو سبرة بن أبي وهب وزوجته أم كلثوم بنت سهيل.
7- دار بني عبد الأشهل، والمحتضن هو سعد بن معاذ بن النعمان من بني عبد الأشهل، نزل بها مصعب بن عمير، وزوجته حَمنة بنت جحش.
8- دار بني النجار، والمحتضن هو أوس بن ثابت بن المنذر، نزل بها عثمان بن عفان وزوجته رقية بنت رسول الله r ([38]).
1- دار مبشر بن عبد المنذر بن زنبر بقباء: ونزل بها مجموعة من المهاجرين نساءً ورجالاً، وقد ضمت هذه الدور عمر بن الخطاب، ومن لحق به من أهله، وقومه وابنته حفصة وزوجها وعياش بن ربيعة.
2- دار خبيب بن إساف أخي بني الحارث بن الخزرج بالسنح نزل بها طلحة بن عبيد الله بن عثمان وأمه وصهيب بن سنان.
3- دار أسعد بن زرارة من بني النجار، قيل: نزل بها حمزة بن عبد المطلب.
4- دار سعد بن خيثمة أخي بني النجار، وكان يسمّى بيت العزاب ونزل بها الأعزاب من المهاجرين.
5- دار عبد الله بن سلمة أخي بَلْعجلان بقباء: نزل بها عبيدة بن الحارث وأمه سخيلة، ومِسْطَح بن أثاثة بن عبّاد بن المطلب، والطفيل بن الحارث، وطُليب بن عُمير، والحصين بن الحارث نزلوا جميعاً على عبد الله بن سلمة بقباء.
6- دار بني جَحْجبتى، والمحتضن هو منذر بن محمد بن عقبة، نزل عنده الزبير ابن العوام، وزوجه أسماء بنت أبي بكر، وأبو سبرة بن أبي وهب وزوجته أم كلثوم بنت سهيل.
7- دار بني عبد الأشهل، والمحتضن هو سعد بن معاذ بن النعمان من بني عبد الأشهل، نزل بها مصعب بن عمير، وزوجته حَمنة بنت جحش.
8- دار بني النجار، والمحتضن هو أوس بن ثابت بن المنذر، نزل بها عثمان بن عفان وزوجته رقية بنت رسول الله r ([38]).
நபி (ஸல்) அவர்கள்
வந்த பின்பு
அகதிகளுக்கு
எதுவும் இல்லை என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் கூறிய போது தங்களது நிலங்களை
இரு கூறாக பிரித்து ஒருபாகத்தை அகதிகளுக்கு
பங்கிட்டு கொடுத்தார்கள் அன்சாரிகள்.
பிறகு ஒரு நாள்
பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் அகதிகளுக்கு விவசாயம் தெரியாதே என்றார்கள். அகதிகள்
சும்மா இருக்கட்டும் நாங்களே அவர்களது நிலத்திலும் விவசாயம் செய்கிறோம். அதில் வருகிற
மகசூலை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்றனர் அன்சாரிகள். விளைச்சலை எடுத்துக் கொண்டு
முதலில் தம் வீட்டுக்கு செல்ல மாட்டார்கள், முஹாஜிர் சஹாபியிடம் கொண்டு சென்று நான்
சிறிது நேரம் தள்ளி நிற்கிறேன். உங்களுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்ள கூச்சம்
வேண்டாம். நீங்கள் உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்ட பிறகு என்னைக் கூப்பிடுங்கள்
மீதமுள்ளதை எடுத்துச் செல்கிறேன் என்பார்கள் அன்சாரிகள்.
இன்றைய அகதிகளின்
நிலை கண்ணீரை வர வழைக்கிறது. ஆனால் அன்றைய அன்சாரிகளின் உபச்சாரம் கண்ணீரை வரவழைக்க
கூடியது.
أن النبي صلى
الله عليه وسلم عندما هاجر وصحابته إلى المدينة ذهب إلى الأنصار وقال لهم عن
المهاجرين: إخوانكم تركوا الأموال والأولاد وجاءوكم، لا يعرفون الزراعة، فهلا
قاسمتموهم ؟ فقالوا: نعم يا رسول الله ، نقسم الأموال بيننا وبينهم بالسوية –
والرسول كان يقصد مساعدتهم فقط – فقال لهم النبي أو غير ذلك ؟ - ممكن تقدموا لهم
شيء آخر – فقالوا له وماذا بعد يا رسول الله ؟ فال تقاسمونهم الثمر – لأنهم لن
يستطيعوا التصرف بالأموال أو الخروج من المدينة لأنها محاصرة فقالوا : نعم يا رسول
الله ، بمَ يا رسول الله ، فقال : بأن لكم الجنة.
فكان الأنصاري يعمل طوال العام وعندما يثمر الزرع يأخذ التمر ويذهب به إلى المهاجر قبل أن يذهب إلى بيته . - لم يجلس ليختار الأفضل له ثم يذهب له بالباقي، بل يذهب بالتمر كله لأخيه ويقول له : اختر ما تشاء ، وإني سأتركك ساعة حتى تتخير ما شئت – حتى لا يحرجه – ثم يعود فيكون المهاجر قد اختار الثمر الغير جيد ويظلوا يتشاجرون ، كل منهما لا يوافق أن يأخذ الآخر غير الجيد .
فكان الأنصاري يعمل طوال العام وعندما يثمر الزرع يأخذ التمر ويذهب به إلى المهاجر قبل أن يذهب إلى بيته . - لم يجلس ليختار الأفضل له ثم يذهب له بالباقي، بل يذهب بالتمر كله لأخيه ويقول له : اختر ما تشاء ، وإني سأتركك ساعة حتى تتخير ما شئت – حتى لا يحرجه – ثم يعود فيكون المهاجر قد اختار الثمر الغير جيد ويظلوا يتشاجرون ، كل منهما لا يوافق أن يأخذ الآخر غير الجيد .
இமாம் புகாரி
கூறுகிறார்.
لَمَّا قَدِمُوا الْمَدِينَةَ آخَى رسول اللَّهِ r بين عبد الرحمن بن عَوْفٍ
وَسَعْدِ بن الرَّبِيعِ قال لِعَبْدِ الرحمن: إني أَكْثَرُ الأنْصَارِ مَالًا
،فَأَقْسِمُ مَالِي نِصْفَيْنِ وَلِي امْرَأَتَانِ ،فَانْظُرْ أَعْجَبَهُمَا
إِلَيْكَ، فَسَمِّهَا لي أُطَلِّقْهَا، فإذا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا
قال: بَارَكَ الله لك في أَهْلِكَ وَمَالِكَ أَيْنَ سُوقُكُمْ ،فَدَلُّوهُ على
سُوقِ بَنِي قَيْنُقَاعَ، فما انْقَلَبَ إلا وَمَعَهُ فَضْلٌ من أَقِطٍ وَسَمْنٍ)
அன்சாரிகளின்
வீடுகளில் முஹாஜிர்கள் தங்கியிருந்தனர். சிரமத்தையே காட்டாது இன்பமாக அதை ஏற்றனர் அன்சாரிகள்.
ஹிஜ்ரீ 4 ம்
ஆண்டு பனூன் னுழைர் வெற்றிக்குப் பிறகு அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள் பல கிடைத்தன,
அவற்றை முஹாஜிர்களுக்கு விட்டுக் கொடுக்க நினைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை
அழைத்துக் கூறினார்கள்.
இந்த வீடுகளை
அவர்களுக்கு கொடுத்து விடலாம். உங்களது வீடுகளில்
சிரமம் குறையும்
என்றார்கள்
ஆனால் அன்சாரிகள்
அதற்குச் சம்மதிக்கவில்லை. வீடுகளை அவர்களுக்கு கொடுங்கள் தாரளமாக! ஆனால் எங்களது வீடுகளை
விட்டு முஹாஜிர்களை வெளியேறச் சொல்ல வேண்டாம் என்றார்கள்.
இத்தகைய அர்ப்பணிப்பு
மிக்க உதவிகளை அன்சாரிகள் செய்த போது தம்மிடம் மேல்மிச்சமாக இருக்க அவர்கள் உதவினார்கள்
என்று அர்த்தம் இல்லை, ஏழைகளாக இருந்தவர்களும் இவ்வாறு உதவத் தயாரகவே இருந்தார்கள்.
وهذا سيدنا جعفر بن أبي طالب مات يوم مؤتة وترك
ثلاثة أطفال والصحابة ضعفاء فقراء، ووقف النبي - صلى الله عليه وسلم - يقول من
يكفل أولاد جعفر؟ يقول الراوي: فخرج ثلاثة من الصحابة يتشاجرون: أنا يا رسول الله،
بل أنا يا رسول الله...
يقول الراوي: والثلاثة أفقر من بعضهم البعض - ويريدون أن يأخذوا 3 أولاد أيتام،
يقول الراوي: والثلاثة أفقر من بعضهم البعض - ويريدون أن يأخذوا 3 أولاد أيتام،
பெருமானார்
(ஸல்) அவர்களது உள்ளத்திலும் அன்சாரிகளின் அர்ப்பணிப்புக்கு ஏதேனும் கைமாறு செய்ய
வேண்டும் என்ற எண்ணம் இருந்து
கொண்டே இருந்தது.
ஒரு
வாய்ப்பு வந்தது, பஹ்ரைன் வெற்றி
கொள்ளப்பட்டது.
அப்போது
மதீனாவின் அன்சாரிகளை அழைத்த பெருமானார் (ஸல்)
உங்களுக்கு கென்று சொந்தமாக்கப்படும் தனிச்
சொத்தாக பஹ்ரைனை எழுதித்த் தந்து
விடுகிறேன் என்றார்கள். அங்கிருந்து கிடைப்பவை உங்களுக்கு மட்டுமே
என்றார்கள்.
இதற்குள் ஆண்டுகள்
பல கடந்து விட்டிருந்தன. சாதாரணமாக உதவக் கூடியவர்கள் சோர்வு அடைந்திருப்பார்கள். வாய்ப்பு
வசதிகள் வருகிற போது அதிலிருந்து தமக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்று
வது சகஜமானது. ஆனால் அன்சாரிகள் இந்த சாமானிய உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களாக இருக்க
வில்லை.
தங்களுக்கு
என்று தனியாக எழுதித் தர வேண்டாம் முஹாஜிர்களுக்கும் சேர்த்து பங்கிடுவதானால் சரி என்றார்கள்.
.இந்தக் கட்டத்தில்
அன்சாரிகளின் உதவி முஹாஜிர்களை மலைக்கச் செய்தது. எங்கே நன்மைகள் அனைத்தையும்
இவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று
பயந்தார்கள்,
فعن أنس بن مالك رضي الله عنه قال: ((لما قدم المهاجرون المدينة نزلوا على الأنصار في
دورهم، فقالوا: يا رسول الله، ما رأينا مثل قوم نزلنا عليهم أحسن مواساة في قليل،
ولا أبذل في كثير منهم، لقد أشركونا في المهنأ (4) وكفونا المؤنة، ولقد خشينا أن يكونوا ذهبوا بالأجر
كلِّه. فقال رسول الله صلى الله عليه وسلم: كلَّا ما دعوتم الله لهم وأثنيتم به
عليهم
பெருமானாரின்
விருந்தாளிக்காக உண்ணுவதைப் போல நாடகமாடிய அன்சாரி.
عن أبي هريرة رضي الله عنه ((أنَّ رجلًا أتى النَّبيَّ صلى الله عليه وسلم، فبعث
إلى نسائه، فقلن: ما معنا إلَّا الماء. فقال رسول الله صلى الله عليه وسلم: مَن
يضمُّ- أو يضيف- هذا؟ فقال رجل مِن الأنصار: أنا. فانطلق به إلى امرأته، فقال:
أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم. فقالت: ما عندنا إلَّا قوت صبياني. فقال:
هيِّئي طعامك، وأصبحي سراجك (1) ، ونوِّمي صبيانك إذا أرادوا عشاء. فهيَّأت طعامها، وأصبحت سراجها،
ونوَّمت صبيانها، ثمَّ قامت كأنَّها تصلح سراجها فأطفأته، فجعلا يريانه أنَّهما
يأكلان، فباتا طاويين (2) ، فلمَّا أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: ضحك
الله اللَّيلة- أو عجب مِن فعالكما-، فأنزل الله: وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ
بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ [الحشر:9])
மதீனாவில்
ஊரை சுற்றி திரும்பி வரும்
ஒரு ஆட்டுத்தலை
- قال ابن
عمر رضي الله عنه: أهدي لرجل مِن أصحاب رسول الله صلى الله عليه وسلم رأس شاة،
فقال: إنَّ أخي فلانًا وعياله أحوج إلى هذا منَّا. فبعث به إليهم، فلم يزل يبعث به
واحد إلى آخر حتى تداولها أهل سبعة أبيات حتى رجعت إلى الأوَّل، فنزلت: وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ [الحشر: 9] (12)
இது
போல ஒன்றல்ல இரண்டல்ல பன்னூற்றுக்கணக்கான
உபகாரங்களும் துணை நின்ற செயல்களும்
அன்சாரிகளுக்குச் சொந்தமானவை,
இந்த
அன்சாரிகளுக்கு தன் வாழ்நாளில் பெருமை
பாராட்டி நன்றியை வெளிப்படுத்தினார்கள் பெருமானார் (ஸல்)
அவர்கள்
قال فيهم رسول الله r : (الأَنْصَارُ لَا يُحِبُّهُمْ إلا مُؤْمِنٌ ولا
يُبْغِضُهُمْ إلا مُنَافِقٌ فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ الله وَمَنْ
أَبْغَضَهُمْ أَبْغَضَهُ الله ) [ البخاري)3572(]،
وقال
فيهم أيضاً : لو أَنَّ الأنْصَارَ سَلَكُوا وَادِيًا
أو شِعْبًا لَسَلَكْتُ في وَادِي الأنْصَارِ وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ
امْرَأً من الأنْصَارِ( [البخاري(3568)]
وقال فيهم
أيضاً: (وَالَّذِي نَفْسِي بيده إِنَّكُمْ أَحَبُّ الناس إليَّ مَرَّتَيْنِ)
[البخاري (3575
இறுதியாக
தன்னையே மதீனாவுக்கு கொடுத்ததில் தான் பெருமானாரின் உள்ளம்
சாந்தியடைந்தது.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : لَمَّا فَرَغَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِنْ تِلْكَ الْعَطَايَا
الَّتِي أَعْطَى النَّاسَ , وَلَمْ يُعْطِ الأَنْصَارَ تَكَلَّمَتِ الأَنْصَارُ
فِي ذَلِكَ فَقَالَ قَائِلُهُمْ : لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ , قَوْمَهُ , فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ : يَا رَسُولَ اللَّهِ ،
إِنَّ هَذَا الْحَيَّ مِنَ الأَنْصَارِ قَدْ وَجَدُوا
عَلَيْكَ لِمَا كَانَ فِي سَفَرِكَ هَذَا , وَبِمَا صَنَعْتَ فِي قَوْمِكَ مِنْ
هَذِهِ الصَّنَائِعِ , قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
" فَأَيْنَ أَنْتَ مِنْ ذَلِكَ يَا سَعْدُ " . قَالَ : " مَا أَنَا
إِلا امْرُؤٌ مِنْ قَوْمِي , قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ : " اجْمَعْ لِي قَوْمَكَ فِي هَذِهِ الْحَظِيرَةِ "
. قَالَ : فَجَمَعَ الأَنْصَارَ فِيهَا وَقَامَ عَلَى بَابِهَا , فَجَاءَتْ
رِجَالٌ مِنَ الْمُهَاجِرِينَ , فَأَدْخَلَهُمْ فِيهَا , وَجَاءَتْ رِجَالٌ
فَرَدَّهُمْ , ثُمَّ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
, يَمْشِي حَتَّى جَلَسَ مَعَهُمْ , ثُمَّ قَالَ : " يَا مَعْشَر الأَنْصَارِ
مَا مَقَالَةٌ بَلَغَتْنِي عَنْكُمْ , أَلَمْ آتِكُمْ ضُلالا فَهَدَاكُمُ اللَّهُ
بِي ؟ " . قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ , اللَّهُ أَمَنُّ وَأَفْضَلُ
, قَالَ : " أَلَمْ آتِكُمْ أَعْدَاءً , فَأَلَّفَ اللَّهُ بَيْنَكُمْ بِي ؟
" . قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ , اللَّهُ أَمَنُّ وَأَفْضَلُ ,
قَالَ : " أَلَمْ آتِكُمْ عَالَةً فَأَغْنَاكُمُ اللَّهُ بِي ؟ " .
قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ , اللَّهُ أَمَنُّ وَأَفْضَلُ , ثُمَّ قَالَ
: " أَلا تُجِيبُونِي ؟ " . قَالُوا : فَبِمَ نُجِيبُكَ يَا رَسُولَ
اللَّهِ ؟ لَكَ الْفَضْلُ عَلَيْنَا , قَالَ : " أَمَا لَوْ شِئْتُمْ
لَقُلْتُمْ , فَلَصَدَقْتُمْ جِئْتَنَا طَرِيدًا فَآوَيْنَاكَ , وَجِئْتَنَا
مَخْذُولا فَنَصَرْنَاكَ , وَعَائِلا فَآسَيْنَاكَ , يَا مَعْشَرَ الأَنْصَارِ
أَوَجَدْتُمْ فِي أَنْفُسِكُمْ فِي لُعَاعَةٍ مِنَ الدُّنْيَا تَأَلَّفْتُ بِهَا
أَقْوَامًا , وَوَكَلْتُكُمْ إِلَى إِسْلامِكُمْ , أَلا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ
النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ , وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى
رِحَالِكُمْ , لَوْ أَنَّ النَّاسَ سَلَكُوا شِعْبًا , وَسَلَكَتِ الأَنْصَارَ
شِعْبًا لَسَلَكْتُ شِعْبَ الأَنْصَارِ , وَلَوْلا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً
مِنَ الأَنْصَارِ , الأَنْصَارُ عَيْبَتِي وَكَرِشِي , وَهُوَ شِعَارٌ وَالنَّاسُ
دِثَارٌ " . قَالَ : فَقَالُوا : رَضِينَا بِاللَّهِ وَبِرَسُولِهِ قَسْمًا .
இந்த பங்கீட்டிற்கு பிறகு அன்சாரிகள் ஆட்சியைகூட முஹாஜிர்களுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
இஸ்லாமியப் பேரரசுகள் எதுவும் அன்சாரிகளின் தலைமையில் இதுவரை அமையவில்லை.
தம்மை நாடி வந்த மக்களுக்கு மகத்தான பேருதவிகள் புரிந்த மகோன்னதமான அன்சாரி
சஹாபாக்களின் உபசரணைகளுடையவும் ஆதரித்தலுடையவும் மதிப்பு மிக்க அடையாளங்களை சுமந்து
புதிய் இஸ்லாம் ஆண்டு பிறந்துள்ளது.
அல்லாஹ் எல்லா வகையான ஆபத்து நெருக்கடிகளிலிருந்தும் நமக்கு ஆபியத்தை தந்தருள்வானாக!
நெருக்கடிக் குள்ளான மக்களுக்கு உதவி நிற்கிற தவ்பீக்கையும் மனப்பக்குவத்தையும்
அல்லாஹ் நமக்குத் தருவானா!
உலகில் அதிக கரிசனத்திற்குரியவர்களாக பரிதாபத்திற்குரிய மக்கள் மீது அல்லாஹ்
அருள் பொழிவானாக!
அவர்கள் விசயத்தில் கருணையோடு நடந்து கொள்ள ஆட்சியாளர்களை அல்லாஹ் வழி நடத்துவானாக!
கருணையற்றவர்கள் இரக்கமற்றவர்களின் அதிகாரத்தை அல்லாஹ் பறித்து விடுவானாக! அத்தகையோரின்
பாதிப்பிலிருந்து உலக மக்களையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானக!
மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி
இனிய ஹிஜ்ரீ 1439 ம் ஆண்டின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
بكل
عام وانتم بخير
تقبل
الله منا صالح الأعمال ووفقنا لما يحب ويرضاه
அல்ஹம்து லில்லாஹ் புத்தாண்டு நல் வாழ்த்துகளுடன் ஹிஜ்ரத்தை உலகலாவிய அளவில் சிந்திக்க வைத்த கட்டுரை அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteEnter your comment...அருமை பாரகல்லாஹ்
ReplyDeleteஅருமை பாரகல்லாஹ்
ReplyDeleteبارك الله
ReplyDelete