நற்காரியங்களுக்காக சொத்துக்களை எழுதி வைப்பது எல்லா சமூகங்களிலும் இருக்கிறது.
இஸ்லாத்தில் அதற்கு சிறப்பான இடம் இருக்கிறது,.
மதினாவில் மஸ்ஜிதுன்னபவிக்கு ஒரு கில் ரூமா என்ற ஒரு கிணறு
இருந்த்து. உஸ்மான் ரலி அதை தனது காசில் வாங்கி மக்களின் தண்ணீர் தேவைக்கென வக்பு செய்தார்கள்.
ي -صلى الله عليه وسلم- المدينة أمر -عليه الصلاة والسلام-
ببناء مسجده، وكان الموقع المختار أرضاً كانت لبني النجار، فقال النبي -صلى الله
عليه وسلم-: "يا بني النجار، ثامنوني حائطكم هذا"، يعني بيعوه علي بثمنه، فقالوا: لا والله يا
رسول الله، لا نطلب ثمنه إلا مِن الله؛ فأوقفوا أرضهم لمسجد رسول الله -صلى الله
عليه وسلم-. رواه البخاري.
அதே போல மஸ்ஜிதுன்னபவியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்ட போது
உஸ்மான் ரலி அவர்கள் பக்கத்திலிருந்த இடத்தை வாங்கிக் கொடுத்தார்கள்.
ولما كثُر أهل الإسلام، وضاق مسجد رسول الله -صلى الله عليه
وسلم-، قال رسول الله -صلى الله عليه وسلم-: "مَن يشتري بقعة آل فلان فيزيدها في المسجد بخيرٍ منها في الجنة؟" فسارع عثمان -رضي الله عنه- وأرضاه
إلى ذلك وسبق، فاشتراها من حُرِّ ماله بخمسة وعشرين ألف درهم ووسع بها المسجد.
أخرجه الترمذي والنسائي
உஸ்மான் ரலி இவை
மட்டுமல்ல இன்னும் ஏராளமான சொத்துக்களை வக்பு செய்தார். அவை இன்னமும் அவருடைய பெயரிலேயே பராமரிக்கப்படுவதை காணலாம்.
பெரிய பண்க்காரர்கள்
மட்டுமல்ல சாதாரண மக்களும் வக்பு செய்தார்கள்.
உமர் ரலி பெரிய
பணக்காரர் அல்ல ஆனாலும் அவரும் வக்பு செய்தார். அவருக்கு அத்தி பூத்தார் போல ஒரு இடம்
கைபரில் கிடைத்தது.
هذا عمر الفاروق -رضي الله عنه-، أصاب أرضاً بخيبر، فأتى
النبيَّ -صلى الله عليه وسلم- فقال أصبت أرضاً بخيبر لم أصب مالاً قط أنفس منه،
فكيف تأمرني به؟ فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إن شئتَ حبَسْتَ أصلها وتصدَّقْتَ بها"، فتصدق بها عمر -رضي الله عنه- لا يُباعُ
أصلُها، ولا يوهَبُ ولا يورث، في الفقراء والقربى والرقاب وفي سبيل الله والضعيف
وابن السبيل. متفق عليه.
முஸ்லிம்கள் தங்களுக்கு
வேண்டாத்தை அல்ல்; தங்களுக்கு மிக பிடித்தமானதை வக்பு செய்தார்கள், அதை மார்க்கம் விரும்பிய
படி செய்தார்கள்
وكان أبو طلحة الأنصاري -رضي الله عنه- مِن أكثر أهل المدينة مالاً من
نخل، وكان أنفس أمواله بستان يقال له (بيرحاء)، وهو بستان جميل قرب مسجد رسول الله
-صلى الله عليه وسلم- يدخله النبي -عليه الصلاة والسلام- ويشرب من ماء فيه طيِّب،
فلما نزل قول الله تعالى في سورة آل عمران (لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا
مِمَّا تُحِبُّونَ)
[آل عمران:92]، جاء أبو طلحة إلى النبي -صلى الله عليه وسلم- فقال: يا
رسول الله، إن الله تعالى يقول:
(لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ)، وإن أحب أموالي إليَّ
(بَيْرُحاء)، وإنها صدقة لله أرجو بِرَّها وذخرها عند الله، فضعها حيث أراك اللهُ
يا رسول الله، فقال النبي -صلى الله عليه وسلم-: "بَخٍ بَخٍ! ذلك مالٌ رابحٌ، وقد سمعتُ ما قلتَ، وإني أرى أن تجعلها في
الأقربين"، فقال أبو طلحة: أفعَلُ ذلك يا رسول الله. فقسمها أبو طلحة في
أقاربه وبني عمه. متفق عليه
வியாபாரிகளின் சமூகத்தில் சொத்து சேர்ப்பதற்கே அதிக ஆசைப்படுவார்கள்.
ஆனால் இஸ்லாம் இவ்வாறு வக்பு செய்வதை சிறந்த வியாபாரம் என்று குறிப்பிட்டது.
(إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ
وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ) [التوبة:111
الراوي : أبو هريرة | المحدث : مسلم
வக்பை
நிர்வகிப்பதற்கும் விசேசமான சட்டங்களை இஸ்லாம் கொடுத்த்துள்ளது.
வக்பு
வாரியம் மக்களின் சொத்துக்களை தம்மிஷ்ட்த்திற்கு எடுத்துக் கொள்வதாக கூறி மத்திய அரசு
ஒரு அநீதியான வக்பு சட்டத்தை
அத்தோடு பழைய வக்பு சட்டம் 1924 மற்றும் வக்பு சட்டம் 1995
ஆகியவற்றை இரத்து செய்த்து.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக காரசாரமாக விவாதிக்கப்
பட்ட இந்த சட்டம் எதிர்க் கட்சிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல்
முஸ்லிம் சமூகத்தின் எந்த வேண்டுகோளையும் நிராகரித்து முழுக்க முழுக்க முஸ்லிம்களே
இல்லாத ஒரு அரசால் வனமப் போக்குடன் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்ச அவர்கள் கூறியது
போல முஸ்லிம்களை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு இந்த சட்ட திருத்தத்தை
கொண்டு வந்துள்ளது.
உண்மையில் இது சட்ட திருத்தமே அல்ல; சட்டப் பூர்வ கொள்ளையாகும்.
ஒரு சட்டத்தில் திருத்தம் என்றால் ஒரு சில
வார்த்தைகளை திருத்துவார்கள் . ஒரு சில விதிகளை திருத்துவார்கள். ஆனால் இந்த
திருத்தமோ வக்பு சொத்துக்களின் தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறாது.
மத்திய
அரசு 44 திருந்தங்களை செய்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இதில் 33 அம்சங்களை புதிதாக சேர்த்துள்ளது. 45 பழைய விதிகளை மாற்றியுள்ளது. 37 விதிகளை அகற்றியுள்ளது. ஆக மொத்தம் 115 திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளன.
புனிதமான
ஒரு அறச் செயலை அது முஸ்லிம்களுடையது என்பதற்காக வக்பு வாரியத்தை ஒரு திருட்டு –
கொள்ளை கூட்டம் என்பது போல மத்திய அமைச்சர்ர்கள் சித்தரித்தனர். அதே
கண்னோட்ட்த்தோடு சட்ட விதிகளை கொண்டு வந்தனர்.
ஒரு முஸ்லிம்
அவருக்கு சொந்தமான சொத்தை எப்போது வேண்டுமானாலும் வக்பு செய்யலாம் எனபது இஸ்லாமின்
விதி. அதை ஒருவர் முஸ்லிமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தான் வக்பு செய்ய
முடியும் என்று மாற்றினர்.
ஒரு சொத்து எதற்காக
வக்பு செய்யப் பட்டதோ அதற்காகவே செலவு செய்யப்பட வேண்டும் என்பதே வக்பின் மிக
முக்கியமான சிறப்பம்சமாகும். மத்திய் பஜக அரசு கொண்டு வந்த சட்டமோ, வக்பு சொத்துக்கள் மத்திய
அரசு விரும்பும் வழிகளில் செலவிடப்படும் என்று கூறியது.
ஒரு சொத்தை வக்பு
வாரிய சொத்தா என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம் மாவட்ட கலக்டருக்கு உண்டு
என்று இந்த் சட்டம் கூறியது.
வக்பு
சொத்த்துக்களை ஆக்ரமித்திருப்பவர்களுக்கு ஜாமீன் இல்லாத தண்டனைகள் வழங்கப்படும்
என்பது முந்தைய சட்டம் கூறியது அதை இந்த புதிய சட்டம் ஜாமீன் வழங்கப்படும் தண்டனையாக
மாற்றியிருந்தது.
அதே போல வக்பு
ஆகமிப்பாளர்களுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்ற பழைய சட்டத்தை சாதாரண
தண்டனை வழங்கப்படும் என்று மாற்றியது.
வக்பு என்பது முழுக்க முஸ்லிம்களுக்கு உரியதாக இருக்கிற நிலையில் அதை நிர்வகிக்கும்
வக்பு வாரியத்தில் 4 இந்துக்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறியது.
இந்த கடுமையான கொடுமையான சட்டத்திற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்கி விட்டார்.
அதாவது முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அராஜகத்திற்கு ஜனாதிபதி கூட ஒத்துழைத்து விட்டார்
இந்த சட்டம் மிக அப்பட்டமாக முஸ்லிம்களை வஞ்சிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது
என்பது சாதரணமாக சிந்திக்கிற எவருக்கும் புரியும்.
நூற்றாண்டுகளாக
இந்தி அரசால் கடைபிடிக்கப் பட்டு வந்த சட்டங்களில்
இத்தனை மாற்றங்களை செய்ததில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடிக்கவும் நாடு முழுவதிலும் வக்பு சொத்துக்களில் பிரச்சினைகளை
செய்ய இந்துத்துவ சக்திகளுக்கு வழிவகுக்கவும் மத்திய பாஜக அரசு ஓர வஞ்சனையோடு
செயல்பட்டுள்ளது என்பது அப்பட்டமாக தெரிந்த்து.
அதனால் இந்த சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது என்று சட்ட அறிஞர்கள் பலரும் கூறியிருந்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின்
ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட
கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
ஒரு எதார்த்தமான பார்வையில் ஏராளமன சட்டங்கள் ஏற்கெனவே இருக்க திருத்தம் என்று
சொல்லி விட்டு இந்திய அரசியல் சாசணம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அடியோடு
சட்டங்களை மாற்றியுள்ளதை தீர்க்கமாக ஆலோசிக்கும் வகையில் தடை விதித்து உச்ச
நீதிமன்றம் உத்தரவிடும் என்ற எதிர்ப்பர்ப்பு முஸ்லிம்களிடம் இருந்தது.
இந்த வழக்கில் செப்டம்பர் 14 ம் தேதி உத்தரவிட்ட தலைமை
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ‘ வக்பு திருத்த சட்டம்
முழுமைக்கும் இடைக்கால தடை விதிக்க முடியாது
என்று கூறி சில பிரிவுகளுக்கு நாங்கள்
இடைக்கால தடை விதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு சில விவகாரங்களில் மக்களுக்கு நிம்மதி
அளித்துள்ளது.
அதில் பிரதானமானது.
ஒரு சொத்து வக்பு சொத்தா என்பதை முடிவு செய்யும் அதிகாரம்
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உண்டு என்ற சட்ட திருத்ததிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வக்பு வழக்குகளில்
நீதிமன்றம் தான் முடிவு ச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வக்பு தீர்ப்பாயத்திற்கு இருந்த உரிமை
காக்கப் பட்டுள்ளது.
வக்பு வாரியத்துக்கு சொத்துகளை தானாக
அளிக்கும் நபர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்பதற்கான விதிகளை
மாநில அரசுகளும் உருவாக்கும் வரை, இந்த விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்ப்பட்டுள்ளாது. .
இந்த இரண்டு வகையில் மட்டுமே மக்களுக்கு நிம்மதியளிக்கும்
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருட்டுச் சட்டத்திற்கு
உச்ச நீதிமன்றம் தடை விதிக்காதது இன்றுள்ள
சூழ்நிலையில் புரிந்து கொள்ள கூடியதுதான். மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்து
சொல்லும் நீதிபதிக்கும் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது.
ஆனால் அப்பட்டமான் ஒரு பகல் கொள்ளையாக நடைபெற்றிருக்கிற
சட்ட்திருத்திற்கு நீதிமன்றம் கூட சில வகைகளில் ஒத்து போயிருப்பது ஒரு சரியான
நீதியை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
மத்திய வக்பு கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் 20 உறுப்பினர்களில்
முஸ்லிம் அல்லாத இதர உறுப்பினர்கள் 4 பேருக்கு மேலும், மாநில வக்பு
வாரியத்துக்கு நியமிக்கப்படும் 11 உறுப்பினர்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கும் மேலும்
இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது இதற்கு எதிராக
கூறப்பட்ட எந்த நியாயத்தையும் நீதிமன்றம் கண்டு கொள்ள வில்லை என்பதை காட்டுகிறது.
மாநில வக்பு வாரியங்களுக்கு நியமிக்கப்படும் தலைமை செயல்
அதிகாரி பதவிக்கு கூடுமானவரை ஒரு முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.
முஸ்லிம்களின் ஒரு பெரும் சொத்தை நிர்வகிக்கும் அமைப்புக்கு
ஒரு முஸ்லிமை தான் நியமிக்க வேண்டும் என்ற உறுதியான குரலில் இல்லாம் கூடுமானவரை
நியமிக்க வேண்டும் என்று குறியிருப்பது நீதி எந்த அளவில் வளைந்திருக்கிறது என்பதை
காட்டுகிறது.
வக்பு சொத்துக்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று
புதிய சட்டம் கூறுகிறது. அது எவ்வளவு தூரம் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தக் கூடியது
என்பது அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ மிக லாவகமாக பள்ளிவாசல்களுக்கும்
வக்பு சொத்துக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் அந்த விதியை அப்படியே ஏற்றுக்
கொண்டிருக்கிறது. அதற்கு கூறும் காரணம் தான் விந்தையானது.
வக்பு சொத்துகள் பல ஆண்டுகளாகப் பதிவு செய்யப்படுவதால், வக்பு சொத்துகளைப் பதிவு செய்ய வகைச் செய்யும சட்ட திருத்தத்துக்குத் தடை
விதிக்கத் தேவையில்லை’ என இடைக்கால தீர்ப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பதிவு
செய்யப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீண்டும் ஏன் பதிவு செய்ய வேண்டும். இதில்
தேவையற்ற பிரச்சனைகளை அதிகாரிகளால ஏற்படுத்த முடியாதா என்பதை பற்றி நீதிபதிகள்
சிந்திக்கவில்லையே என்ற கவலை மேலிடுகிறது.
இது மாத்திரம் அல்ல்; தீர்ப்பின்
அம்சங்களை விவரிக்கிற இட்த்தில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிற சில
வார்த்தை பிரயோங்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில்
அமைந்துள்ளன. இதை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிலர் வாங்கிய கடனை
திருப்பி கொடுக்க மனமில்லாமல் சொத்துக்களை வக்பு செய்கின்றனர் என்ற கருத்தில் உச்ச
நீதிமன்ற தீர்ப்பின் 82,84 ஆகிய பாராக்களில் சில வாசங்களை பதிவு செய்திருப்பதை அந்த
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையில் பரிசுத்தமான வக்பு நடைமுறைகளை கொண்ட முஸ்லிம்
சமூகத்தின் மீது அப்பட்டமான ஒரு கருத்து தாக்குதலாகும். ஆதாரங்கள் ஏதுமின்றி
உச்சநீதிமன்றமே வாய்க்கு வந்தபடி இப்படி கூறலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
நாடாளுமன்றத்தில் பஞ்சாபை
சார்ந்த எம்பி ஒருவர் எங்களூரில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு நல்லடக்கம் செய்ய
இடமில்லை. நாங்கள் அதற்காக ஒரு இடத்தை வக்பு செய்தால் அது சரியல்ல என்பது எந்த
வகையில் மனிதாபிமானமாகும் என்று கேள்வி
எழுப்பி யிருந்தார்.
உச்ச நீதிமன்றம் இத்தக்கய
நியாயமான வாத்ங்களை கண்டு கொள்ளாமல் மாற்று மத்ததினர் வக்பு செய்ய முடியாது என்ற
பாஜக அரசின் விதியை அப்படியே ஏற்றுக்
கொண்டிருக்கிறது.
நம் நாட்டில் இப்போதுள்ள
சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தான் கொஞ்சமாவது நம்பிக்கையளிக்க முடியும் என்ற
நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சில வகைகளில் நிம்மதியளித்திருந்தாலும் பல
வகைகளில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
எனினும் இன்னும் காலம்
இருக்கிறது
நம்பிக்கையோடு
காத்திருப்போம்.
தர்மத்தின் வாழ்வதை சூது
கவ்வும்
மீண்டு தர்மம் வெல்லும்.
No comments:
Post a Comment