قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُونَ (28)
சுமார் 45 கோடி மக்கள் அம்மொழியை பேசுகிறார்கள்.
அது மட்டுமல்ல உலகின் வர்த்தக மொமிகளில் அதாவது வியாபாரத்திற்கு பயன்படுத்தப் படுகிற மொழிகளில் சீனா மொழிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது அரபு மொழியின் பொருளாதார சிறப்பிற்கு மட்டுமல்ல அது இன்று வரை நீடித்து வாழ்வதற்கும் எடுத்துக் காட்டாகும்.
இவை எல்லா வற்றையும் விட அரபு மொழிக்கு இருக்கும் பெருஞ்சிறப்பு அரபு, குர் ஆனின் மொழியாகவும் பெருமானாரின் மொழியாகவும் சொர்க்க வாசிகளின் மொழியாகவும் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை பெருமானார் (ஸல்) அவரக்ள் வலியுறுத்தினார்கள்.
عن ابن عمر رفعه ( حب العرب إيمان وبغضهم نفاق - دراقطني
ஆனால் அரபு மொழி அரபுகளை விட தொன்மையானது என்று மொழியியல் அறிஞர்களில் ஒரு சாரார் சொலிகிறார்கள். ஆதம் நபி சொர்க்கத்தில் பேசிய மொழி அரபு என்கிறார்கள் அவர்கள்.
أن اللغة العربية أقدم من العرب أنفسهم فقالوا أنها لغة آدم في الجنة
வரலாற்று
பூர்வமாக அரபு மொழியை
ஆராய்வோர் பின்வரும் கருத்துக்களை
கூறுகிறார்கள்
ஹுத் அலை அவர்கள்
தான் முதன் முதலில்
அரபி பேசியவர் என்று ஒரு சாரார் கூறுகின்றன.
இல்லை அவரது தந்தை தான் முதன் முதலில் அரபியில்
பேசினார் என்றும் கூறப்படுகிறது. இல்லை ஹூத் அலை அவர்களின் மகன் தான் முதன் முதலில் அரபு மொழியை பேசியவர்
என்றும் சொல்லப் படுகிறது.
فزعم بعضهم أن يعرب بن قحطان كان أول من تكلم هذه العربية
யஃரப் என்பவர் ஹூத் அலை அவர்களின்
மகன் ஆவார்.
குர் ஆனில் கூறப்பட்டுள்ள
நபிமார்களில் ஹுத் அலை அவர்களும் சாலிஹ்
அலை அவர்களும் அரபு நபிமார்களாவார்கள் என்ற கருத்து
திருக்குர் ஆன் விரிவுரையில்
உண்டு
حديث أبي ذر الغفاري أنه سمع النبي محمد يقول في ذكر الأنبياء والمرسلين: «منهم أربعة من العرب: هود، وصالح، وشعيب، ونبيك يا أبا ذر».
இப்னு ஹிப்பான்
இந்த ஹதீஸின் பின்னணியில் அரபு
மொழி என்பது ஹூத் அலை அவரக்ளோடு வரலாற்று ரீதியாக தொடர்புடையதாகிறது.
எனவே அரபு மொழியியல் அறிஞர்கள் . ஹூத் அலை அவர்களை அரபுல் ஆரிபா – கற்கால அரகள் என்று வகைப்படுத்துவார்கள்.
நூஹ் நபியின் மகன் சாம் அவர்களின் மகன் அவ்ஸ் அவரது மகன் ஹூத் ஆகும் என்ற வரலாற்றின் படி பார்க்கையில்
ஹூத் அலை அவரக்ளின் காலம் சுமார் 5000 ஆயிரம் வருடங்உகளுக்கு முந்தையது ஆகும். அப்படியானால் அரபு மொழியின்
பழமை ஐயாயிரம் வருடங்கள் என்று ஆகும்.
அரபு சொம்மொழி
அரபு மொழியை முதன் முதலாக பேசியவர்
நபி இஸ்மாயீல் அலை அவர்கள் என்ற ஒரு கருத்தும் வரலாற்றில் உண்டு.
எதார்தத்தில் அரபு மொழியை செம்மையாக
பேசியர் இஸ்மாயீல் என்பதே சரியானதாகும்.
அரபுல் ஆரிபா எனும் தூயர் அரபியர்கள்
எனப்படுவோர் ஆது, சமூது, ஜுர்ஹும், தஸ்ம்,ஜதீஸ், உமைம், மத்யன், இம்லா, ஜாஸிம், கஹ்தான், பனூ யக்ழான் ஆகியோர் ஆவார்கள்.
இவர்களில் ஜுர்ஹும்களோடு இஸ்மாயீல்
அலை திருமணம் சம்ப்ந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் மூலமா அரபு மொழியை கற்றுக்
கொண்ட இஸ்மாயீல் அலை அவர்கள் அம்மக்களை விட செம்மையாக அரபு மொழியை பேசினார்கள்.
எனவே அரபுல் முஸ்தஃரபா எனும்
இலக்கியத்தரமாக அரபு மொழியை பேசியவர்களில் இஸ்மாயீல் அலை அவர்கள் முதன்மையானவர்கள்
ஆவார்கள்
இதை தான் சிலர் முதன் முதலில்
அரபு பேசியவர் இஸ்மாயீல் அலை என்று கூறுகிறார்கள்.
وفريق ذهب أن إسماعيل هو أول من تكلم بها
இஸ்மாயீல் அலை அவர்களின் காலம் சுமார் 4 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது.
அப்படி பார்க்கிற போது அரபு செம்மொழியின் வரலாறு 4 ஆண்டுகளை கடந்து செல்கிறது.
தொல்லியல் ஆய்வுகளில் இதற்கு போதுமான சான்றுகள் கிடைக்க வில்லை
எனினும் அரபு மொழி கிருத்துவிற்கு முன்பே வழக்கில் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்ற சான்றுகள் கிடைத்துள்ளன.
1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான 'நபீதான்' என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த
எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 'நபீதான்' என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கணக்கு' என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான் நெடுங்கணக்'கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள்
கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன
ஆக, தொல் பொருள் சான்றுகளின் படியும் கூட அரபு மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய பாரம்பரியச் சிறப்பு இருக்கிறது.
இளமையான மொழி
அரபு தொன்மையான மொழி மட்டுமல்ல மிக இளமையாக இன்று வரை நடப்பில் இருக்கிற வாழும் மொழியுமாகும்.
பல உலக மொழுகளுக்கு தொன்மையான வரலாறு இருந்தாலும் கால் போக்கில் அவை பெரிதும் மாற்றம் பெற்றுள்ளன். பழங்காலத்து பாஷையை இப்போது பேசினார்ல் இது என்ன பாஷை என்று சொந்த மக்களே கேள்வி எழுப்பிவிடுவார்கள்.
கீ ராஜ நாரயணன் வேடிக்கையாக ஒரு செய்தி சொல்வார்.
பழந் தமிழை படிக்கப் போனர் ஒருவன் வீட்டுக்கு திரும்பி வந்து “அண்ணாய்! சற்றே அடிசில் புக்கி அயனம் கொணர்க!” என்று சொன்னானாம். வீட்டிலிருந்தவர்கள் பயந்து போய் வெளியூறுக்கு சென்ற பையனுக்கு பேய் பிடித்து விட்டது என்று கட்டி வைத்து மந்திரித்து பார்த்தார்களாம்.
பசியில் நொந்து போன பையன் கடைசியாக “ அம்மா அரிசி வேகவச்சி கஞ்சி கொண்டு என்று சொன்ன போதுதான் பையனுக்கு பைத்தியம் தெளிந்து விட்டது என்று பெற்றோர்கள் நிம்மதியடைந்தனராம்.
வள்ளுவரின் பாஷையில் இப்போது தமிழில் பேசினால் அடிக்க் வந்து விடுவார்கள்.
உலகின் பல மொழிகளுக்கும் இந்த விபத்து நடந்திருக்கிறது,
ஆனால் அரபு மொழி இந்த சிதைவுக்கு ஆளாகவில்லை.
திருக்குர் ஆன் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் உறுதிப்படுத்தியது.
قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَّعَلَّهُمْ
يَتَّقُونَ (28)
சிதைவடையாத அரபு மொழியில் குர் ஆனை இறக்கினோம் என்கிறான் அல்லாஹ்.
இப்போதும் குல் ஹுவல்லாஹு அஹ்த் என்ற சொல் நடை மூறையில் உள்ள சொல்லாக வே இருக்கிறது.
நபி (ஸல் ) அவர்கள் பேசிய அரபு தான் இன்றும் செம்மையான அரபு மொழியாக இருக்கிறது.
பொருளாதார செல்வாக்கு
உலக வர்த்தக மொழிகளில் சீன மொழிக்கு அடுத்ததாக இடம் பிடித்திருப்பதும் அரபியாகும். வேறெந்த செம்மொழிக்கும் இப்படி பொருளாதார அமைப்புக்களில் இடம் பிடித்திருக்கிற
வாய்ப்பு இல்லை.
ஒரு காலத்தில் (சுமார் 50 வருடங்களுக்கு முன்) ஜப்பானிலிருந்து வாட்சுகள் வரும் போது அதில் நாட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்
இருக்கும் அடுத்து அரபியில் இருக்கும்.
இப்போதும் கூட அரபு மொழி 45 கோடி மக்களுடைய தாய் மொழியாக இருந்தாலும் உலகின் நாலா பாகத்திலிருந்தும்
வியாபார நோக்கிற்காக் அதிகம் கற்ற்க் கொள்ளப்படுகிற பேசப்படுகிற மொழியாக அரபு மொழி
இருக்கிறது.
அறிவியல் மொழி
அரபு மொழியின் மகத்தான சிறப்புக்களில்
ஒன்று நவீன அறிவியலின் அனைத்து துறைகளுக்கு அரபு மொழியும் அது சார்ந்த அறிஞர்களுமே
காரணமாக இருந்தார்கள். ஐரோப்பா இருளில் மூழ்கி இருந்த்ந் போது அரபு மொழியின் புகுந்த
வீடான பக்தாது உலகிற்கு ஞான விளக்கை ஏந்திக் கொண்டிருந்தது.
ஆளுமை திறன் மிகு மொழி
மனித வரலாற்றில் அரபு மொழி அளவுக்கு ஆளுமை
திறன் மிக்க ஈர்ப்பு சக்தியுடைய மொழியை கான்பது அரிது.
எமனிலு இன்றைய சவூதி அரேபியாவின் சில பகுதிகளிலும்
மட்டுமே பண்டைய காலத்தில் அரபு மொழி பேசப்பட்டது. இராக் எகிப்து மொரோக்கோ போன்ற நாடுகளின் தாய் மொழி வேறு. ஆனால் அந்தப் பகுதிகளுக்கு திருக்குர் ஆனின் மூலம் அரபு
மொழி சென்ற போது அந்நாடுகளில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த மொழியை மறந்து விட்டு அரபு
மொழியை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டன.
ஜெர்மனிய அறிஞர் ஜீபர் ஹோன்கா சொன்னார்.
அரபு மொழியின் அழகையும் செல்வாக்கையும் எப்படி
மதிப்பிட முடியும்? அரபுகள் வெற்றி கொண்ட
நாடுகளில் வாழ்ந்த மக்களை அவர்களது மொழி ஆட் கொண்டு விட்டதே!
قالت
الألمانية زيفر هونكه: (كيف يستطيع الإنسان أن يُقاوم جمال هذه اللغة ومنطقها
السليم، وسحرها الفريد؟! فجيران العرب أنفسهم في البلدان التي فتحوها سقطوا
صَرْعَى سحر تلك اللغة).
அரபு சொற்களின் ஆதிக்கம்
உலகின் பல
மொழிகளை ஆட்கொண்ட்தற்கு அப்பால் உலகின் பல மொழிகளுக்கும் அரபு மொழி செல்வாக்கும் செலுத்தும் வார்த்தைகளை கொடுத்திருக்கிறது.
இதற்கு இரண்டு
காரணங்கள்
ஒன்று அரபு
மொழியின் சுருக்க தன்மை
மிக சுருக்கமான
எழுத்துக்களில் அதிகப்படியான கருத்துக்களை அரபியில் சொல்ல முடியும்.
புதித்தாக்
ஒன்றை கண்டு பிடித்து உருவாக்கியவர் என்பதை ஃபாதிர் என்ற ஒற்றை சொல்லில் சொல்லி விட
முடியும்.
வ அலல் மவ்லூதி
லஹு - என்ற ஒரு சொல்லில் ஒரு குழந்தை தந்தைக்கு
சொந்தமானது என்ற சட்டத்தை
திருக்குர் ஆன் விவரித்து விட்டது.
அரபு மொழியின்
இரண்டாது சிறப்பு அதன் தெளிவு –
அரப் என்ற
சொல்லுக்கே தெளிவு என்பது பொருளாகும்.
திருக்குர்
ஆனை அரபு மொழியில் இறைவன் அருளக் காரணம் அந்த மொழியின் தெளிவும் ஒன்றாகும் என்பார்கள்
அறிஞர்கள்.
ஜலஸ் என்றால்
நடந்து வந்து உட்கார்ந்தான் என்று பொருள்
கஅத என்றால்
நிற்னு கொண்டிருந்தவன் உட்கார்ந்தான் என்று பொருள்
சுலைமான் அலை அவர்களின் வரலாற்றில் அவரிடம் பல்கீஸ் அம்மையாரின் சிம்மாசணம் வந்து
சேர்ந்த்தை முஸ்தகர்ரன் என்ற வார்த்தையில் குர் ஆன் குறிப்பிடும். அதற்கு. ஆடாமல் அசையாமல் கால்மெல்லாம் அங்கேயே இருந்தது போன்று அந்த சிம்மாசணம் அங்கிருப்பதை
அவர் கண்டார் என்ற விளக்கம் விரியும்.
இந்த இரண்டு அம்சங்கள் காரணமாக உலகின் பல மொழிகளில் அரபு வார்த்தைகளின் தாக்கம்
ஏராளமாக இருக்கிறது.
தமிழ் மொழியிலும் அரபுச் சொற்கள் ஏராளமாக நமது அன்றாட பயன்பாட்டைல் இருக்கின்றன.
ஆகிய சொற்கள் அனைத்தும் அரபு மூலத்தை கொண்ட சொற்களாகும். இன்றும் நடைமுறையில் உள்ள சொற்களாகும்
தமிழில் அரபு சொற்கள் அளவுக்கு வேறு மொழி சொற்களின் கலப்பு
சகஜமாகவும் தொன்மையாகவும் இல்லை.
மார்க்க மொழி
அரபு மொழியின் தொன்மை, இளமை, செல்வாக்கு, அ ஆகிய்வற்றிற்கு மேலாக அரபு மொழி இஸ்லாமின் மொழி என்ற வகையில் மொழிகளி உச்சத்தில்
வாழும் மொழியாக இருக்கிறது.
பெயர் வைப்பதில் தொடங்கி, சலாமில் தொடர்ந்து,பாத்திஹா ஓதுவது வரை ஒவ்வொரு
முஸ்லிமுடைய வாழ்வோடும் அரபு மொழி பின்னிப் பிணைந்து இருக்கிறது.
மனித சமூகத்தோடு இனம் மொழி நிரம் கடந்து விரிவடைந்திருப்பது
அரபு மொழியை தவிர வேறில்லை.
ஜெர்மனிய மொழியியல் ஆய்வாளர் புருக்ளமேன் கூறுகிறார்
.
திருக்குர் ஆனின் தயவால் வேறெந்த மொழியும் எட்ட முடியாத
சிகரத்தை அரபு மொழி எட்டியிருக்கிறது. உலகம்
முழுவதிலும் இருக்கிற முஸ்லிம்கள் தொழுகையில் அரபு மொழியை ,மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
وقال
المستشرق الألماني كارل بروكلمان: (بلغت العربية بفضل القرآن من الاتساع مدىً لا
تكاد تعرفه أيُّ لغةٍ أخرى من لغات الدنيا، والمسلمون جميعاً مؤمنون بأن العربية
وحدها اللسانُ الذي أُحِلّ لهم أن يستعملوه في صلاتهم)
முஸ்லிம்களான் நம் மீதுள்ள கடமை
அரபு மொழியை அறிந்து கொள்ள பேச ஆசைப்பட வேண்டும் ஏனெனி அது நமது நபியின் மொழியாகும்
.
அரபு மொழியறிவு இருந்தால் குர்ஆனை புரிந்து கொள்வதும் எடுத்தாள்வதும் எளிதாகும்.
قال
الخليفة الراشد عمر بن الخطاب رضي الله عنه تعلموا
العربية؛ فإنها من دينكم
அரபு மொழியறவு குறந்த பட்ச அளவாவது இருந்தால் தான் நாம் சரியாக குர் ஆனை ஓத
முடியும் .
அரபு சொற்களின் நளினம் அப்படி
பழக்கம் என்பதை பளக்கம் என்று நான் தமிழில் சொன்னால் ஒன்று ஆகிவிடப் போவதில்லை.
ஆனால் إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ
الْعُلَمَاءُ) என்பதை அல்லாஹு என்று படித்து விட்டால் அர்த்தம் மாறிவிடும்.
தொழுகை கெட்டு விடும்.
أَنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ
وَرَسُولُهُ)
என்ற ஆயத்தில்
வரஸீலிஹி என்று படித்தால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்.
ஆகவே திருக்குர்
ஆனை நாம் தவறின்றி ஓத குறைந்த பட்ச அளவிலாவது அரபி மொழியை படித்துக் கொள்ள ஆர்வம் செலுத்தனும்.
குறைந்த பட்சம் நாம் பயன்படுத்துகிற துஆக்களையாவது தமிழுடன் அரபு மூலத்துடன்
புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட மற்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் அரபு பேச்சு
மொழியை கற்றுக் கொள்வது அவர்களது பொருளாதார வளத்திற்கு துணை சேர்க்கும்.
நாம் அரபு மொழியை நேசிப்போம். அது நமது ஈமானுக்கு அடையாளமாகும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
(ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரின் அல்சரோஜ் பகுதியில் இருந்து)
No comments:
Post a Comment