வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 04, 2025

எது சுப்ரீம் ?

நமது நாட்டின் மத்திய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து முஸ்லிம்களை துனபுறுத்தும் நோக்கில் பல்வேறு சட்டங்களும் நடைமுறைகளும் கொண்டு வரப்பட்டு வருகின்றன

முத்தலாக் தடை சட்டம்

சி ஐ ஏ

வக்பு திருட்டு சட்டம்

காஷ்மீருக்கான தனி அந்தஸ்த்து ரத்து

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது.

இப்போது சிஐஏ

என தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் குறிவைக்கப்பட்டு வருகிறது.

கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகிறது.

மத்திய அரசு திட்டமிட்டு இழைத்து வரும் கொடுமைகளை முஸ்லிம் சமுதாயம் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்டு  குறைந்த அளவிலான எதிர்ப்புக்களை காட்டுவது நீதிமன்றங்களை அணுகுவது என்ற நடைமுறைகளை கடைபிடித்து  வருகிறது,

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு முஸ்லிம் சமூகத்திடம் வெளிப்பட்ட கோபாவேச பதிலடிகள் எதுவும் எங்கும் இப்போது வெளிப்படுவதில்லை.

ஆனாலும் ஆங்காங்கே ஒரு சில தீவிரவ வாத தாக்குதல்கள் நடை பெறுகிற போது அதை வைத்தும் மத்திய அரசும் அதன் ஏவல் படைகளான என் ஐ ஏ, ஈடி போன்ற துறைகள் தொடர்ந்து முஸ்லிம்கள்ள எந்த சட்ட நடைமுறைகளையும் பேணாமல் வேட்டையாடி வருகின்றன.

கலவரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டை கூறி மிக சகஜமாக முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கிவருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவமே பல வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியுள்ளது.

தில்லியில் சமீபத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது ஒரு மருத்துவர் என்பதை காரணம் காட்டி பல மருத்துவர்களை என் ஐ ஏ கைது செய்து அவர்களை பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டியது. முஸ்ளிம்களி அதிகம் படித்தவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிலும் மரியாதையிலும் கை வைக்க மத்திய் அரசின் நிறுவன்ங்கள் முயற்சி செய்தன.

ஊடகங்கள் தம் பங்கிங்கிற்கு இதை ஊதிப் பெரிதாக்கின. ஒரு மளையாள் ஊடகம் உங்களுக்கு அருகே ஒரு மருத்துவர் இருந்தால் அவர் கூட மனித வெடிகுண்டாக இருக்கலாம் என்று சொல்லி அனைத்து மக்களிடமும் முஸ்லிம்களை பற்றி ஒரு பீதியை உண்டாக்க முயற்சி செய்தன.

இதற்கிடையில் என் ஐ ஏ கைது செய்த 4 மருத்துவர்களில் 3 பேர் இந்த வழக்கில் சம்பந்தப் பட்டவரகள் அல்ல என விடுதலை செய்யப் பட்டனர். அதற்குள் அவர்களுடைய மரியாதையை ஊடகங்க நார் நாராக கிழித்து விட்டன.  

இந்த சூழ்நிலையில் தில்லி குண்டு வெடிப்பில் சம்பதபட்ட மருத்துவர் பணியாற்றிய அல்பலாஹ் மருத்துவ மனையின் நிறுவனர் ஜாவேத் அஹ்மத் சித்தீக்கியை மத்திய அரசின் அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் மீது அன்னியச் செலாவணி மோசடி குற்றச் சாட்டை சுமத்தி 14 நாட்கள் கஸ்டடியில் வைத்தது.

அல்பலாஹ் மருத்துவ கல்லூரி ஹரியானாவின் பரீதாபாத் மாவட்ட்த்தில் உள்ளது.

இந்தியாவில் ஒரு தொடக்க பள்ளியை  நடத்துவதே எவ்வளவு சிரம்மானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மருத்துவ பல்கலை கழகத்தை நடத்துவது எவ்வளவு பெரிய காரியம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

28 ஆண்டுகளாக நடை பெற்று வந்த மருத்துவ கல்லூரி அது. 11 வருடங்களுக்கு முன் அது பல்கலை கழகமாக மாறியது.

அதன் இஸ்லாமிய அடையாளம் ஒன்றே அதை குறி வைப்பதற்கு போதுமாகாதா /

கார் வெடிப்பில் அங்கு பணியாற்றிய ஒரு மருத்துவர் ஈட்பட்டார் என்பதை காட்டி அந்த மருத்துவ பல்கலை கழக நிறுவனரே கைது செய்யப் பட்டிருக்கிறார்.

இது பலத்த அதிர்ச்சியை நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு திட்ட மிட்டு முஸ்லிம் விரோத மனப்பான்மையோடு செயல்படுவதும் அதன் எடுபிடிகளாக அதிகாரம் மிக்க அமைப்புக்கள் மாறி வருவதும் நீதி மன்றங்கள் கூட மத்திய அரசின் கண்ணசைவுகளுக்கு ஏற்ப செயல்படுவதும் தொடர்ந்து முஸ்லிம்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தில்லியில் இரண்டு சிங்கங்கள் மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கிறகு எதிராக கர்ஜனை செய்திருக்கின்றன.

இது இந்தியாவிலுள்ள சராசரியான எந்த அரசியல் வாதியின் குரலிலிருந்து மாறுபட்டதும் அதிக கனம் உடையதும் ஆகும்.

ஜம் யித்தே உலமாயே ஹிந்த் அமைப்பின் தலைவர் மெள்லான அர்ஷத் மதனீ இந்தியாவில் முஸ்லிம்கள் பாகுபாடு காட்டப்படுவதாக கூறினார். இந்தியாவில் ஒரு முஸ்லிம் பல்கலை கழக  துணை வேந்தராக இருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறினார்.

இது சாதாரண செய்தியல்ல. உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற செய்தியாகும். அதனால் தான் ஆர் எஸ் எஸ் அமைப்பு இதற்கு வரிந்து கொண்டு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அர்ஷத் மதனியின் இந்த பேச்சு இந்திய முஸ்லிம்களின் மனோ உணர்வை ஒட்டு மொத்தமாக மிக நயமாக  உலகிற்கு வெளிச்சம் போட்டு  காட்டியிருக்கிறது,  

அர்ஷத் மதனீ அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடக் கூடியவர் அல்ல; அவர் விளம்பர அரசியல் வாதியும் அல்ல

அர்ஷத் மதனீ யாரோ ஒரு தலைவர் அல்ல; இந்திய வரலாற்றின் வேறோடு ஆழப் பினைந்த ஒரு குடும்பத்தின் விழுது.

அவருக்கும் அவருடைய குடுமப்த்திற்கு வட இந்திய அரசியலில் மிக முக்கிய செல்வாக்கு இருக்கிறது.  

அர்ஷத் மதனியின் தந்தை ஹுசைன் அஹ்மது மதனீ மிகப் பெரும் சுதந்திர போராட்ட வீர்ர் ஆவார்.

அவர் தேவ்பந்த் அரபுக்கல்லூரியில் ஷைகுல் ஹதீஸாக பணியாற்றி காலத்தில் சுதந்த்திரப் போராட்டத்திற்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்யச் செல்வார் , பாதி இரவு கழிந்து கல்லூரிக்கு வருவார். அவர் எப்போது வருவார் என்று காத்திருக்கிற மாணவர்கள் அவர் நள்ளிரவில் வந்தவுடன் அவரிடம் பாடம் பயில செல்வார்கள்.   

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் ஏராளமான மக்கள் பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியா தான் எங்களது தாய் நாடு என்று இருந்த்தற்கு காரணம் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று ஹுசைன் அஹ்மது மதனீ கேட்டுக் கொண்டதும் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறாததும் ஆகும்.

இந்தியாவை இன்று ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு அர்ஷத் மதனியின் குடும்பத்தின் நிழலில் கூட நிற்க தகுதி அற்றவரக்ள் ஆவார்கள்.

எனவே பொருமையின் எல்லையில் அர்ஷத் மதனீ இவ்வாறு பேசியிருப்பது சாமாணிய செய்தியல்ல. இந்திய முஸ்லிம்களையும் உலக முஸ்லிம்களையும் உணர்ச்சி வசப் படுத்தக் கூடியவையாகும்.

மத்தியில் ஆளும் அரசு இந்த நாசூக்கான எதிர்ப்பை முரட்டு பேச்சினால் எதிர் கொள்ளாமல் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும்.

பிஜேபி காரர்கள்  அர்ஷத் மதனியின் இந்த கருத்திற்கு பிறகு அவரது அமைப்பை தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பு என்று பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய தீவிர வாத அமைப்பு எது என்பதும் பாஜக வின் தீவிரவாத செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நாட்டிற்கும் உலகிற்கும் தெரியும். இந்தியாவின் முதல் மிகப்பெரிய தீவிரவாதச் செயலான காந்தியின் படுகொலைக்கு பின்னாள் இருந்தவர்கள் யார். அவரது கொலையாளி கோட்சேவை கொண்டாடுகிறவரகள் யார் என்பது நாட்டிற்கும் உலகிற்கும் தெரியும்     

இரண்டாவது குரல்

அர்ஷத் மதனியை தொடர்ந்து அதே ஜம்யிய்யத்து உலமாயே ஹிந்த் அமைப்பின் மற்றொரு தலைவரும் அர்ஷத் மதனியின் அண்ணன் அஸத் மதனியின் மகனுமான மஹ்மூத் மதனி இன்னும் கனமான மற்றொரு குரலை பதிவு செய்திருக்கிறார்.

அவரும் ஜம்யிய்யத்து உலமே ஹிந்த் அமைப்பின் மற்றொரு தலைவராவார். வட இந்திய முஸ்லிம்களிடம் ஆழமான செல்வாக்கு இவருக்கும் உண்டு.  பல நற்பணிகளை இவருடைய அமைப்பு செய்து வருகிறது.

கோவிட் காலத்தில் 10 ஆயிரம் முகாம்களை அமைக்க தயாராக இருப்பதாக அவர் நாட்டிற்கு தெரிவித்தார். எந்த ஒரு ஆபத்து காலத்திலும் அவருடைய அமைப்பினர் முனைப்போடு செயல்பட்டு நிவாரணப்பணிகளை செய்கிறார்கள். வட இந்திய முஸ்லிம்களை தரப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற அளவில் அவர் உழைத்து வருகிறார்.

கடந்த வாரம் போபாலில் நடை பெற்ற ஜம்யிய்யத்து உலமாயே ஹிந்தின் மாநாட்டில் அவர் பேசுகிற போது நெருக்கடி களுக்கு உள்ளாக்கப்படுகிற போது ஜிஹாது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார். if there is oppression, there will be jihad,” 

இது இஸ்லாமின் ஒரு எதார்த்தமான வழிகாட்டுதல் ஆகும். நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படும் போது மக்கள் கோழைகளாக இருக்க கூடாது. நீதிக்காக போராட வேண்டும் என்பதே அதன் கருத்து.

மஹ்மூத் மதனியின் கருத்தும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

மதனீ மேலும் ஒரு செய்தியை சொன்னார். இந்தியாவில் அரசியல் சாசணம் தான் சுப்ரீம் ஆகும். எந்த நீதிமன்றமும் அதை காப்பாற்றினால் தான் சுப்ரீம் கோர்ட்டாக இருக்க முடியும் என்றும் கூறினார். ‘

இந்த இரண்டு கருத்துக்களும் மிக சரியாக பாஜக அரசுக்கு சொல்லப் பட்ட எச்சரிக்கை மணிகளாகும்.

இவர்கள் மக்களுடைய ஊனர்ச்சியை எளிதில் தூண்டி விடக் கூடியவர்கள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தும் பின்பும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள்; பாஜகவினரை விட.

அக்கிரமக் கார ஆட்சியாளரின் முன்னிலையில் சத்தியைத்தை உரத்து சொல்வதே சிறந்த போர் என்ற பெருமானாரின் வழிகாட்டுதலின் வழியே இவர்கள் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

நீதிமன்றங்கள் இன்று எந்த திசையில் செல்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குரியாகி இருக்கிறது.

மஹ்மூத் மதன்யின் கருத்து மிகச் சரியானது. சுப்ரீம் என்பது அரசியல் சாசணம் தான் அதை பாதுகாத்தால் எதுவும் சுப்ரீம் என்ற சொல்லுக்கு தகுதியானதாக இருக்க முடியும்.

நீதிமான்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால்

இவரை அனுகினால் ஒரு தரப்பாக நீதியை பெற்று விட முடியும் என்று தப்பான ஆசாமிகள் நினைக்கிற அளவில் இருக்க கூடாது.

உமர் ரலி அவர்களின் நீதி உணர்வை பாராட்டித்தான் பெருமானார் இப்படி கூறினார்கள்.

قال فيه رسول الله صلى الله عليه وسلم: (إيه يا عمر! ما سلكت فجاً إلا سلك الشيطان فجاً غير الفج الذي سلكته

 அரசியல் வாதிகளிடமிருந்து ஆதாயத்தை எதிர்பார்க்கிற நீதமான அல்ல அவர். அவர் நீதியை படித்த்து அப்படிப்பட்டவர்களிடமிருந்து

அபூபக்கர் சித்தீக் ரலி மரணப்படுக்கையில் தனது ஆடையை கழற்றிக் கொடுத்து இதை அரசு கஜானாவில் சேர்த்து விட்டு தற்கு பதில் பழைய ஆடைய கொண்டு என்னை கபனிடுங்கள் என்று கூறினார்.

கதறி அழுத உமர் ரலி < அரச பொறுப்பை நீங்கள் மிகவும் கஸ்டமானதாக ஆக்கி விட்டீர்கள் என்ரு கூறினார். உமர் மரத்தடிகளில் படுத்துறங்கினார். .  

ينظر إلى أبي بكر الصديق رضي الله عنه وأرضاه عندما كان على فراش الموت ويقول: خذوا ثوبي هذا فضعوه في بيت مال المسلمين، ثم ائتوني بثوب خلق -يعني بال- أكفن فيه، فقال عمر بعدما بكى: قد أتعبت من بعدك يا أبا بكر! وكان عمر رضي الله عنه أعدل ما يكون في رعيته؛ حتى إن رسول الروم جاء يسأل عن أمير المؤمنين فقال: أين قصر أمير المؤمنين؟ قالوا: هناك، وكان عمر بن الخطاب ينام تحت الشجرة.

قال: أسأل عن أمير المؤمنين لا على آحاد الرعية.

قالوا: هو هناك.

فذهب إليه فوجده يتوسد نعله فقال: هذا هو أمير المؤمنين؟ قالوا: نعم، فقال الكلمة المشهورة: يا عمر حكمت فعدلت فأمنت فنمت يا عمر.

சுப்ரீம் என்பதற்கான இலக்கணம் இது.

ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கிற பதவி சுகத்திற்காக நீதியை வளைப்பதும் மறுப்பதும்  சுப்ரீம் குணம் அல்ல

வக்பு சொத்துக்களை உமீட் பக்கத்தில் பதிவேற்றுவதற்கு இன்னும் சில நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் மிக அவசியமான செய்திகளை சொல்லி வாதாடுகிறார்.

மிக இயல்பான ஒரு கோரிக்கை அது.

சில நாட்கள் நீட்டித்தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. இதை நீட்டி தருவதால் ஒன்றும் குடி முழுகி போய்விடப் போவதில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை மறுக்கிறது.

இந்திய ஜனநாயகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற செய்தி இது.

இதில் நீதிமன்றத்தின் பதில் மிக அதிர்ச்சிகரமானது. இந்த சட்ட்த்திலேயே அதற்கு இடமிருக்கிற்து என்று நீதிபதிகள் சொல்கிறார்கள்.

சட்ட்த்திலே என்ன இடமிருக்கிறது என்றால் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்யாதவர்கள் டிரிப்யூனலில் தங்களது ஆதாரத்தை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றிருக்கிறது என்கிறார்கள்

டிரிப்யூனல் முறையீடு என்பதெல்லாம் ஒரு சாதாரண வக்பு அமைப்புக்கு நியாயம் இன்றி எவ்வளவு சிரமம் தரக்கூடியது என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்து கொள்ள வில்லை.

இதில் பெரிய கேள்வி என்ன வெனில் சில நாட்கள் நீட்டிப்பு கொடுத்தால் என்ன மோசமாகிவிடப் போகிறது என்பதற்கான காரணம் எதையும் நீதிமன்றம் சொல்லவில்லை,\

நாட்டிலுள்ள ஒரு பெரிய சிறுபான்மை இனத்தின் கோரிக்கை இது என்ற கவனிப்பு நீதிமன்றத்திற்கு இருக்க வில்லை.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஒருவரை அதிகாரியாக நியமிக்க அழைத்தார்கள். அவர் வந்த போது தன்னுடைய மகனை உமர் ரலி முத்தமிட்டார். அந்த நபர் நான் என் குழந்தைகளை முத்தமிட்ட்தில்லை என்று கூறினார். உமர் ரலி அந்த நபரை ஆட்சிப் பொறுப்புக்கு நியமிக்க மறுத்துவிட்டர்கள்.

ஒரு குழந்தைக்கு இரக்கம் காட்ட தெரியாதவர் அதிகாரியாக இருக்க முடியாது என்று கூறினார்கள்

 عن مالك قال: دعا عمر بن الخطاب رجلاً يستعمله، فجاء ابن لـ عمر، فأخذ عمر يقبله، فقال له الرجل: يا أمير المؤمنين أتقبله؟ قال: نعم، فقال: إن لي أولاداً ما قبلت منهم أحداً قط، فقال له عمر: أنت لا ترحم ولدك فأنت للناس أقل رحمة، فأبى أن يستعمله

நீதிமான்களில் வரலாறு இப்படி செல்கிறது.

சுப்ரீம் கோர்டே இப்படி சொல்லுமானால் கீழ் கோர்ட்டுக்ள் எப்படி நடந்து கொள்ளும்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் வரலாற்றில் மற்றொரு செய்தி இருக்கிறது.

ஒருவர் மதீனாவில் பெரிய வீட்டை கட்டினார். ஏன் இப்படி கட்டினாய் என உமர் ரலி கேட்டார். பெருமைக்காக கட்டவில்லை. நான் சென்ற நாடுகளில் இப்படிப் பார்த்தேன் அதனால் கட்டினேன் என்று அவர் சொன்னர். உமர் ரலி கூறினார்.

நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன். ஆனால் உங்களைப் பார்த்து இங்குள்ள மற்றவர்களும் உயரமாக வீடுகளை கட்டி விடக் கூடாது  அல்லவா எனவே நீங்கள் வீட்டின் உயரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

عن مالك قال: مر عمر بن الخطاب على منزل طويل البناء، فلما رآه طويل البناء جلس في ظله حتى جاء صاحبه، فقال له: ما حملك على أن أقمت هذا البنيان؟ فقال: يا أمير المؤمنين! ما أطلته أشراً ولا رياء، غير أني كنت ببلد يطيلون البنيان فاتخذت مثلهم، فقال: أظن الأمر على ما قلت، ولكن أقصره حتى ترده مثل بنيان الناس، فلا يتأسى بك أحد

ஒருவருடைய உரிமையை ஏற்றுக் கொள்கிற அதே நேரத்தில் அது தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்கிற எண்னம் நீதிபரிபாலிப்பவர்களுக்கு வேண்டும்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நூறாண்டுகளக இல்லாத பழக்கத்தை யாரோ சிலர் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக  பிரிட்டிஷ் காலத்தில் உள்ள  தீர்ப்பை கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளை தர்காவுக்கு  அருகில் தீப்பந்தம் ஏற்ற  தீர்ப்பளித்திருக்கிறது.

நீதி மன்றம் அப்பட்டமாக ஒரு தரப்பாக செயல்படுகிறது என்று எல்லோருக்கும் தெரிகிறது.  நீதிமன்றத்தின் மரியாதை கருதி மக்கள் நீதின்மன்றத்தை நாம் குறை சொல்லாமல் இருக்கிறோம்.

ஆனால் மஹ்மூத் மதனீ சொன்னது போல சுப்ரீம் என்ற அதிக மரியாதைக்க்குரியது என்பது சரியான நீதியை கடை பிடிக்கிற போதுதான் கிடைக்கும் என்பதை நீதிம்னறங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் பெயரை வைத்துக் கொண்டு அதிக நாள் மக்களை அடக்கி  வைத்து விட முடியாது.  

நாடு ஏற்கெனவே பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் 90 ரூபாயை எட்டி விட்டது. ஏழை நாடு என்று ஏளனம் செய்யப்பட்ட பங்களாதேஷ் கூட இப்போது நம்மை முந்திச் செல்ல முயன்று கொண்டிருக்கிறது.

நாட்டில் நீதி தடுமாற்றம் காணுமானால் – தொடர்ந்து ஒரு தரப்பாக அரசும் அது சார்ந்த நிருவனங்களும் செயல்படுமானால் நம் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குரியதாகி விடும்

அற்பமான மத உணர்வுகளை தூண்டி விடுபவர்களுக்கு சார்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படுமானால் மஹ்மூத் மதனீ சொன்னது போல எது சுப்ரீம் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

அறிஞர் அர்ஷத் மதனியும் அறிஞர் மஹ்மூத் மதனியும் எச்சரிக்கை சங்கொலியை ஊதியிருக்கிறார்கள்.

இந்திய ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் அதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

  (மக்கா முகர்ரமாவின் அரீஜ் அல் வபா விடுதி அறை எண் 402 ல் இருந்து)

 

2 comments:

  1. பாங்கொலியைப் போன்று இரண்டு மதனிகளின் சங்கொலியும் ஒலிக்கட்டும்

    ReplyDelete