வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 20, 2025

தொலைக்காட்சி தொல்லை காட்சி ஆகி விடக்கூடாது.

 இன்று சர்வதேச தொலைக காட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

. 1996-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த நாள் உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவிக்கப்பட்டது

தொலைக்காட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இப்படி ஒரு தினத்தை தேர்வு செய்த்தற்கு இரண்டு காரணங்களை பிரதானமாக ஐநா கூறியது .

1 மக்களிடம் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு அது உதவுகிறது.

2 உலகளாவிய அளவில் மக்களிடம் உரையாடலை அது வளர்க்கிறது.

மிக சரியான ஒரு முடிவுதான்.

உண்மையில் தொலைக்காட்சி வந்த பிறகு உலகம் ஒரு கிராம்மாக சுருங்கி விட்டது. எந்த ஒரு மூலையில் நடைபெறும் செய்தியும் நேரடியாக சுடச் சுட நம் வீட்டுக்கு வந்து விடுகிறது.   

அதனால் தொலைக்காட்சி இன்றைய நவீன உலகில் மிக அத்தியாவசியமான ஒரு தேவையாக ஆகிவிட்டது.

இது தொலைக்காட்சியின் நன்மையை கூறினாலும் அதன் தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி பழக்கத்திற்கு வந்த போது ஆலிம்கள் மிக கடுமையாக அதை எதிர்த்தனர்,. இப்போதும் எதிப்பவர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாத முஸ்லிம் வீடுகளும் கிராமங்களும் கனிசமாக இருக்கின்றன.

ஆலிம்களின்  ஆரம்ப கால எதிர்ப்பை சிலர் கேலி செய்ததுண்டு அது தவறானது.  இப்போதும் கூட தொலைக்காட்சி பெட்டி பற்றிய இஸ்லாமின் சட்டம் அதை எல்லா வகையிலும் ஆதரிப்பதோ ஏற்றுக் கொள்வதோ அல்ல;

ஹராமான காட்சிகளை பார்ப்பது கேட்பது ஹராம்

அனுமதிக்கப்பட்ட விவகாரங்களுக்கு அது ஹலால் என்பதே ஆகும்.

அதே நேரம் தொலைக்காட்சி பெட்டி கொள்கை பண்பாட்டில் மிக மோசமான ஆபத்துகளை விளைவிக்க கூடியது என்பதே ஆகும்.

ஆலிம்கள் தொலைகாட்சியை எதிர்த்த்தற்கு முதல் காரணம்

அது புகைப்படம் சார்ந்த்து என்பதாகும்

இஸ்லாம் புகைப்படங்கள் வைப்பதை தடை செய்திருக்கிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய ஷரீஅத்துக்களின் புகைப்படங்கள் சிலைகளுக்கு அனுமதி இருந்த்து.

சுலைமான அலை அவர்களுக்காக ஜின்கள் சிற்பங்களை செய்து தரும் என்று குர் ஆன் கூறுகிறது.

يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ.

முன்னோர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுடைய சிலைகளின்  வழியாகவே மனித சமூகத்தில் சிலைவணக்கம் தோன்றியது.

ஆகவே இறுதி ஷரீத்தான இஸ்லாமில் ஷிர்க்கின் அனைத்து வழிகளையும் அடைக்கிற வகையில் உயிர் பிராணிகளை ஓவியமாக வரைவதற்கும் சிலைகளாக வடித்து வைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடை செய்தது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

மலக்குகள் வரமாட்டார்கள்.

عن بسر بن سعيد، عن زيد بن خالد: عن أبي طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم قال: إن رسول الله صلى الله عليه وسلم قال: "إن الملائكة لا تدخل بيتًا فيه صورة - رواه البخاري في كتاب اللباس

உயிர் கொடு என்று நிர்பந்தப்படுத்தி  வேதனை செய்யப்படும்

 

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال صلى الله عليه وسلم: "إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة، يقال لهم: أحيوا ما خلقتم- رواه البخاري في كتاب اللباس

பெருமானார் (ஸல்) அவர்களின் வீட்டிற்கு ஜிப்ரயீல் அலை வருவதை தடுத்த திரைச்சீலை ஓவியங்கள்

.عن أبي هريرة رضي الله عنه قال: قال صلى الله عليه وسلم: "أتاني جبريل فقال: إني أتيتك الليلة، فلم يمنعني أن أدخل عليك البيت إلا أنه كان في البيت تمثال رجل، وكان في البيت قرام ستر فيه تماثيل، وكان في البيت كلب، فأمر برأس التمثال الذي في البيت يقطع فيصير كهيئة الشجرة، وأمر بالستر يقطع فيجعل في وسادتين منتبذتين ويطآن، وأمر بالكلب يخرج. ففعل رسول الله صلى الله عليه وسلم. رواه أحمد وأبو داود والترمذي

பெருமானாரின் இந்த வழிகாட்டுதல் காரணமாக இஸ்லாமிய உலகு புகைப்படம் மற்றும் சிலைகள் ஆகியவற்றிலிருந்து வெகு தூரம் விலகி நின்றது.

 முந்தைய காலத்தில் மரியாதையாக நினைவு படுத்திக் கொள்வதற்காக அலங்காரத்திற்காகவும் செய்யப்பட்ட உருவப்படங்கள் பிற்காலத்தில் சிலை வணக்கத்திற்கு காரணமாக மாறியது

 பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியடைந்து புகைப்பட சாதனங்கள் பெருகி செய்தி ஊடகங்கள் வளர்ந்த போது செய்திக்காகவும் தகவல் பறிமாற்றத்திற்காகவும் ஆவணப்படுத்துதலுக்காகவும் புகைப்படங்கள் தேவைப்பட்டன.

 காலத்தின் தேவைக்கேற்ப அடிப்படை சிதையாத அளவில் சட்டங்களில் திருத்தங்கள் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது அந்த வகையில் பிற்கால அறிஞர்கள் தேவைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அதே வேளையில் அவை மரியாதை செய்ய பயன்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதையும் உறுதியாக கூறினார்கள்

 இப்போதும் நாம் இது புகைப்படங்கள்  விசயத்தில் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

 தொலைக்காட்சி என்பது புகைப்படங்களையே பிரதானமாக கொண்டது அதிலும் குறிப்பாக ஆபாச தோற்றங்களை பரப்புவதே அதன் ஆதி கால நடை முறையாக இருந்த்து  என்பதால் ஆரம்பத்தில் ஆலிம்கள் அதை எதிர்த்தார்கள்.

 ஆலிம்களின் எதிர்ப்பிற்கு மற்றொரு காரணம்

 இஸ்லாம் எந்த ஒரு செயலையும் ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பிரதான அளவுகோலை வகுத்திருக்கிறது.

ஒன்றில் தீமை அதிகமாக இருக்குமானால் அது தவிர்க்கப்பட வேண்டும்

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا

وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ} [الأنعام

அல்லாஹ் கூறிய இந்த வழிகாட்டுதல் மிக நமது வாழ்க்கைக்கு மிக அடிப்படையானது.

 நாகரீகத்தின் எந்த ஒரு அம்சத்தோடு பொருந்தக் கூடியது.

எந்த ஒன்றிலும் சில நன்மைகள் இருந்து  தீமைகள் அதிகமாக இருக்குமானால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

 தொலைக்காட்சிகளில் தீமைகள் மட்டுமே பிரதானமாக இருந்த காலத்தில் – சினிமா வீடியோ  பார்ப்பதற்கும் ஆபாச காட்சிகளுக்கும் மட்டுமே உரியதாக இருந்த காலத்தில்   ஆலிம்கள் அதை கடுமையாக எச்சரிக்கவே செய்தார்கள். .

 இப்போதும் கூட அப்படித்தான் நமது வீடுகளில் இருக்கிற டீவி ஆபாசங்களுக்கானதாக இருப்பதை விட அறிவியல்பூர்வமான நன்மைகளுக்குரியதாக அதை நாம் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 செய்திகளை அறிந்து கொள்ள – அறிவை வளர்த்துக் கொள்ள அது அதிகம் பயன்பட வேண்டும்.

 வீட்டில் தொலைக்காட்சி வைத்திருக்கிற ஒவ்வொருவரும் இஸ்லாமிய கண்ணோட்ட்த்தில் அதற்கு நியாயம் கற்பிக்க அது இப்படிப் பயன்படுகிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

 தொலைக்காட்சிகள் பொழுது போக்கிற்காகவும் ஆபாசத்திற்காகவும் மட்டுமே பயன்படுமானால் இதற்காக காசு செலவழித்த்தற்காகவும் நேரத்தை வீணடித்தற்காகவும்  நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

 عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ رواه الترمذي (

 மிகவும் அச்சத்தை தருகிற நபி மொழிகளில் ஒன்று இது

 عَنْ أُسَامَةَ بن زيد، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَقُمْتُ عَلَى بَابِ الجَنَّةِ، فَكَانَ عَامَّةُ مَنْ دَخَلَهَا المَسَاكِينَ، وَأَصْحَابُ الجَدِّ مَحْبُوسُونَ البخاري

 وَأَصْحَابُ الجَدِّ أي: الغنىபணக்காரர்கள்

கொஞ்சம் வசதி வந்தவுடன் டிவி யின் சைஸை அதிகப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகீற நாம் – அது என்ன நோக்கத்திற்காக அதிகம் பயன்படுகிறது என்பதில் நிச்சயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

 தொலைக்காட்சிகள் பற்றிய முஸ்லிம் அறிஞர்களின் எச்சரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இன்று அதைப்பற்றி சிந்திக்கிற எவரும் அறிந்து கொள்ளலாம். 

தொலைகாட்சி தினம் கொண்டாடப்படுகிற நாளில் அதன் பயன்பாட்டு நியாயங்களை நாம் நிச்சயமாக பரிசீலித்தே ஆக வேண்டும்.

 தொலைக்காட்சியில் நன்மைள் சிலது உண்டு.

 செயதிகளை அறிந்து கொள்ள பயான்களை கேட்க புத்துணர்வூட்டும் காட்சிகளை காண என தொலைக்காட்சி பயன்படுகிறது.

 இத்தகைய நன்மையான காரியங்களுக்கு நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொலைக்காட்சியின் தீமைகள் என்று அறிவியலாலர்களே பட்டியலிடுகிற பல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் பிரதானமானது. 6

 

  1. அதிக நேரம் தொலைக்காட்சியை அருகிலிருந்து அல்லது தொடர்ந்து பார்ப்பதால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது..
  2. படிப்பு வணக்க வழிபாடு  மற்றும் பிற முக்கியமான விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பி, கவனக்குறைவை ஏற்படுத்கிறது.
  3. குழந்தைகளுக்கு, அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை வெகுவாகக் குறைக்கும்.
  4. தொலைக்காட்சி பார்ப்பது ஒரு செயலற்ற அனுபவம் என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் படைப்பாற்றல் திறனை  - உழைப்பை  பாதிக்கக்கூடும். 
  5. அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது சமூக மற்றும் நடத்தை (ஒழுக்கம்) சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. ( பெரியோர்களை  - விருந்தினர்களை மதிக்காமல் போவது- ஆபாச தூண்டுதல்களுக்கு ஆளாவது போன்ற தீமைகளுக்கு காரணமாகும்.)
  6. செய்திகளின் தாக்கம்: செய்திகளை உண்மையை முழுமையாக கூறாமல் அரைகுறையாக கூறுவது, போலித்தனமான செய்திகளை கூறூவது ஆகியவை தவறான சிந்தனைகளுக்கு வழி வகுக்கும்.

 

இந்த ஆறு தீமைகளை முஸ்லிம் அறிஞர்கள் சொல்ல வில்லை. அறியவில் ஆய்வுகளும் ஏ ஐ என்ப்படும் செயற்கை நுன்னறிவு தளமும் சொல்கின்றன.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி பார்க்காதே என்று சொல்வது பொருத்தமற்றதாக தோன்றலாம். – சிலர் அதை பிற்போக்கு தனமானதாக கருதலாம்.

ஆனால் தொலைக்காட்சி பார்ப்பதில் சில கட்டுப்பாடுகளையும் விழிப்புணர்வைய்ம் நாம் கடைபிடித்தே ஆகவேண்டும்

நம்முடையவும் நம்முடைய சந்த்திகளுடையவும் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளுக்கும் இது அவசியம்.  

நாம் பிரதானமாக தவிர்க்க வேண்டியது

தொலைக்காட்சிக்கு என்று நேர நிர்ணயம் செய்வது.

எப்போதும் வீட்டில் டி வி ஓடிக் கொண்டிருக்கும் என்ற நிலையை தவிர்க்க வேண்டும்.

அது கண்பார்வையை பாதிக்கும் என்கிறது அறிவியல்

சிறிது நேரம் டி வி பார்த்து விட்டு வேறு வேலைகளை கவனிப்போம்.

இரவு தூங்க செல்வதற்கு முன்பதாக டி வி பார்ப்பதை தவிர்ப்போம். அது தூக்கத்தை தடுக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

தூரத்திலிருந்து டி வி பாருங்கள் வெளிச்சத்தில் டி வி பாருங்கள்.. பலருக்கும் கண்பார்வை குறைவு ஏற்பட இது காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

நாம் நமது கண்ணுக்கு கண்ணான மலக்குகளை வீட்டிற்குள் வருவதற்கு கொஞ்ச நேரமாவது தர  வேண்டாமா ?

இந்த துஆ வேண்டாமா?

روى أبو هريرة رضي الله عنه، أن النبي -صلى الله عليه وسلم- قال(ما من يوم يصبح العباد فيه، إلا ملكان ينزلان، فيقول أحدهما: اللهم أعط منفقا خلفا، ويقول الآخر: اللهم أعط ممسكاً تلفاً) متفق عليه.

 

நமது நன்மைகளை அல்லாஹ்விடம் கொண்டு செல்கிறவரக்ள் மலக்குகள். விரைவில் பரிசை பெற்று தருபவர்கள்  

حديث أبي هريرة رضي الله عنه

نَّ لِلَّهِ مَلائِكَةً يَطُوفُونَ في الطُّرُقِ يَلْتَمِسُونَ أهْلَ الذِّكْرِ، فإذا وجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنادَوْا: هَلُمُّوا إلى حاجَتِكُمْ قالَ: فَيَحُفُّونَهُمْ بأَجْنِحَتِهِمْ إلى السَّماءِ الدُّنْيا، قالَ: فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ -وهو أعْلَمُ منهمْ- ما يَقولُ عِبادِي؟ قالوا: يَقولونَ: يُسَبِّحُونَكَ ويُكَبِّرُونَكَ، ويَحْمَدُونَكَ ويُمَجِّدُونَكَ، قالَ: فيَقولُ: هلْ رَأَوْنِي؟ قالَ: فيَقولونَ: لا واللَّهِ ما رَأَوْكَ، قالَ: فيَقولُ: وكيفَ لو رَأَوْنِي؟ قالَ: يقولونَ: لو رَأَوْكَ كانُوا أشَدَّ لكَ عِبادَةً، وأَشَدَّ لكَ تَمْجِيدًا وتَحْمِيدًا، وأَكْثَرَ لكَ تَسْبِيحًا، قالَ: يقولُ: فَما يَسْأَلُونِي؟ قالَ: يَسْأَلُونَكَ الجَنَّةَ، قالَ: يقولُ: وهلْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ لو أنَّهُمْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لو أنَّهُمْ رَأَوْها كانُوا أشَدَّ عليها حِرْصًا، وأَشَدَّ لها طَلَبًا، وأَعْظَمَ فيها رَغْبَةً، قالَ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ قالَ: يقولونَ: مِنَ النَّارِ قالَ: يقولُ: وهلْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ لو رَأَوْها؟ قالَ: يقولونَ: لو رَأَوْها كانُوا أشَدَّ مِنْها فِرارًا، وأَشَدَّ لها مَخافَةً، قالَ: فيَقولُ: فَأُشْهِدُكُمْ أنِّي قدْ غَفَرْتُ لهمْ، قالَ: يقولُ مَلَكٌ مِنَ المَلائِكَةِ: فيهم فُلانٌ ليسَ منهمْ، إنَّما جاءَ لِحاجَةٍ، قالَ: هُمُ الجُلَساءُ لا يَشْقَى بهِمْ جَلِيسُهُمْ

 நம்மை பாதுகாப்பவர்கள் மலக்குள்

له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله} (الرعد:11)،

وتفسير ذلك كما جاء عن مجاهد: " ما من عبد إلا وله ملك موكّل به، يحفظه في نومه ويقظته من الجن والإنس والهوام، فما منهم شيء يأتيه يريده إلا قال: وراءك. إلا شيء يأذن الله فيه فيصيبَه".

இந்த மல்லுகளோடு நமக்கு நட்பு வேண்டு மெனில் தொலைக்காட்சி பெட்டிக்கு அதிக நேரம் தருவதை தவிர்க்க வேண்டும்.

 மஃரிபுக்கு பிந்தைய நேரத்தை ப்ரைம் டைம் என்று தொலக்காட்சி சானல்கள் கருதுகின்றன.

 நமக்கும் அது பிரைம் டைம் தான் . நம்முடைய முன்னோர்கள் மஃரிபிலிருந்த் இஷா வரை உள்ள நேரத்தை அல்லாஹ்வை நெருங்கும் மந்திரப் பொழுது என்று கருதுவார்கள்.

 என்னுடைய சில உஸ்தாதுகள் மஃரிபுக்கு பிறகு தங்களது அரைகதவை பூட்டி வைத்து விடுவார்கள் – மிக அத்தியாவசியம் இருந்தால் தவிர அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.

 இதை நியாயப்படுத்தும் ஒரு ஹதீஸும் திரிமிதியில் உண்டு

ஹுதைபா ரலி அவர்கள் தன் அம்மாவிடம் நான் பெருமானாரை மஃக்ரிப்க்கு பின் சந்தித்து நமக்காக  துஆ கேட்குமாறு வேண்டு விட்டு வருகிறேன் என்றார், பிறகு பெருமானாருடன் மஃரிபு தொழுதார். ஆனால் இஷா தொழுது விட்டுத்தான் பெருமானார் அவரை சந்தித்தார்கள் என்று அந்த ஹதீஸ் தொடர்கிறது.

  فَقُلْتُ لَهَا: دَعِينِي آتِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَأُصَلِّيَ مَعَهُ المَغْرِبَ، وَأَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لِي وَلَكِ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَصَلَّيْتُ مَعَهُ المَغْرِبَ، فَصَلَّى حَتَّى صَلَّى العِشَاءَ، ثُمَّ انْفَتَلَ فَتَبِعْتُهُ، فَسَمِعَ صَوْتِي، فَقَالَ: «مَنْ هَذَا؟ حُذَيْفَةُ؟»…

 சேனல்களையும் நிகழ்ச்சிகளையும் தீர்மாணிப்பது

 அறிவை வளர்க்கீற – பொழுதை பயனுள்ள வகையில் கழிக்க்கிற மன நிம்மதியை தருகிற காட்சிகளை காண வேண்டும் என்று தீர்மாணித்துக் கொள்ள வேண்டும்.

 சினிமாக்கள் கூட சில மணி நேரத்தில் முடிந்து விடுகின்றன. நாடங்கள் எளிதில் முடிவதில்லை. தலைமுறைகளை தாண்டி மக்களை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

 தமிழ் இந்தி நாடகங்கள் போய் இப்போது தென்கொரிய நாடகங்கள் பிரபலமாகி வருகின்றன.

 இந்த நாடகங்கள் நம்முடைய சாதரண வாழ்க்கையில் காண முடியாத வக்கிரத்தை பரப்புகின்றன.

 இதனால் மக்கள் மிகவும் ஆழமான மன பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

 குறீப்பிட்ட நாடகத்தை பார்த்தால் தான் எதுவும் நடக்கும் என்ற சூழல் இருக்கிறது. கணவனை குழந்தைகளை கவனிப்பது கூட அதற்கு பிறகு தான் என்ற சூழல் பெண்களிடம் இருக்கிறது .

 இப்போது நாடகங்களுக்கு ஆண்களும் அடிமைகளாகி வருகிறார்கள்.

 அதனால் வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதை நிறுத்துவது எப்படி என்று மதுவுக்கு விளம்பரம் செய்வது போல கோர்ஸ் நடத்தப்படுகிற நிலை வளர்ந்திருக்கிறது.  

 நல்ல வேளை அல்லாஹ் நமக்கு திட்ட மிட்ட நேர தொழுகை என்பதை கடமையாக்கியிருக்கிறான். அதுவும் இல்லை என்றால் இதிலிருந்து விடுபடுவது அசாதாரணம் தான்.

 நாடகங்கள் மக்களின் உறவுகளில் மிகப்பெரிய சேத்த்தை ஏற்படுத்துவதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

 பிரபல தொலக்காட்சி அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள்.

 எங்களது வீட்டில் எனது பெற்றோருக்கு திடீரென பிபி அதிகமாகிவிட்டது.

என்ன காரணம் என ஆய்வு செய்த போது என் வீட்டில் சாட்டிலைட் தொடர்பை ஏற்படுத்தி சில டிவிக்களை காண்கிற வசிதியை ஏற்படுத்திய போது என் பெற்றோர்கள் நாடகம் பார்க்க பழகியிருந்தார்கள். அதனால் அவர்களுடைய பிபி அதிகரித்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம் என்று கூறுயிருந்தார் .

 எனவே நாடகங்களால் ஏற்படுகிற மன நிலை பாதிப்புகள் கண்ணுக்கு தெரியாத வகையில் அதிகரித்து வருகின்றன.  

 ஒரு பெரிய பங்களாவில் மஃரிபு தொழுக்கைக்கு பிறகு அதிக சத்த்தோடு ஒரு காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது . அதில் ஒரு இறப்புக்காக ஒரு குடும்பம் அழுது கொண்டிருக்கிறது. அந்த அழுக்க டி டி எஸ் ஸீல் வீடு முழுக்க எதிரொலிக்கிறது. அங்கு வந்த ஒரு ஆலிம் சொன்னார் “  உங்க வீட்ல தான் யாரோ அழுவுறாங்கன்னு நான் நினைச்சேன். அல்லாஹ் உங்களை இவ்வளவு சந்தோஷமாக வைத்திருக்கிற போது அதை ஏன் நீங்க அழுகை வீடா மத்துறீங்க! என்றார். .

 நாடகத்துல அழுகிறவன் காசு வாங்கிட்டு அழுகுறான். அதை பார்க்கிறவர்கள் அல்லாஹ் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற போது தேவையின்றி .அநியாயத்திற்கு கண் கலங்குகிறீங்கள்.

  என்வே இது விசயத்தில் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது புத்திசாலித்தனமாகும்.

 பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன.

நாகரீக உலகத்தின் இன்னொரு வக்கிர புத்தி இது.

 நமது வாழ்க்கைக்கு நாம் என்ன மதிப்பு கொடுக்கிறோம். (வேல்வியூ) என்பதை கேலிக்குள்ளாக்குகிற நிகழ்வு இது.

 காசு கிடைக்கிறது என்பதற்காக எவ்வளவு கேவலமாகவும் நாடகத்தனமாகவும் சிலர் தங்களுடைய அந்தரங்கங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

 அதை வெட்க மின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது எந்த வகையில் அறிவுடமையும் நாகரீகமும் ஆகும்.

 ஒரு பிரபல மனிதரிடம் நீங்கள் பிக்பாஸ் பார்ப்பதுண்டா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

 I don’t want to be a fool நான் ஒரு முட்டாளாக இருக்க விரும்ப வில்லை என்றார்.

 எனவே நம்மை முட்டாள்களாக்குகிற நம்மை விகாரப்படுத்துகிற காட்சிகளை பார்ப்பதை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 இதில் பரப்ப்படுகீற  கலாச்சார தீமைகளுக்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.

 இன்றைய காலத்தில் மிக முக்கியமாக தேவைப்படுகிற் எச்சரிக்கை இது.

 என்ன மாதிரியான காட்சிகளை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதல்ல என்ன மாதியான பாதிப்புக்களை நீங்கள் தாங்கிக் கொள்ல முடியும் என்பதை திர்மாணிப்பது தான்.

 பரபரப்பு –தவிர்க்க

 தற்காலத்தில் செய்தி தொலைக்காட்சிகள் கூட மக்களை உண்மையிலிருந்து திசை திருப்பு கின்றன.

பரபரப்பிற்காக பாதி உண்மையை சொல்கின்றன

 வேணுமென்றே மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிற செய்தியை ஒளிபரப்புகிறார்கள்.

 சமீபத்தில் ஒருவர் மதரஸாக்களில் தீவிர வாதம் பரப்பபடுகிறது என்று பகிரங்கமாக கூறினார்.   இதை அவர் பேசும் போது நெறியாளர் அதை தடுக்க முயற்சிப்பது போல நடித்தாலும் இப்படி பேசுவார் என்று தெர்ரிந்து தான அழைக்கீறார்கள். இப்படி அவர் பேச வேண்டும் அப்போது தான் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயரும். அப்போதுதான் விளம்பர வருவாய் அதிகம் கிடைக்குன் என்பத திட்டமிட்டே இவ்வாறு செய்கிறார்கள்.

 அதனால் செய்தி ஊடகங்களில் இப்போது உண்மையான செய்தியாளர்கள் என்பது கிட்ட தட்ட இல்லை என்றே ஆகிவிட்டது.

 செய்திகளும் செய்திகளை பற்றி விவாதங்களும் பெரும்பாலும் மக்களுக்கு அறிவை வளர்க்கும் செய்தியை தருவதை விட மக்களை தூண்டி விடுகிற செய்திகளையே வழங்குகிறார்கள்.  

 நம்மில் சிலர் தொலைக்காட்சி விவாதங்களை பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

 இது தேவையற்ற கோபம் பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

 என்வே இன்றைய தொலைக்காட்சிகள் பொய் அதிகமாக திட்டமிட்டு பரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 தேவையற்ற செய்தி விவாதங்களை பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும்.

 அறிவார்த்தமான விவாதங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் தான் அநாவசியத்திற்கு சண்டை போடுகிறவர்களையே விவாதங்களுக்கு அழைக்கிறார்கள்./

 பொழுது போகவில்லை என்பதற்காக மக்களில் கனிசமானோர் இந்த விவாதங்களை பார்ப்பது நாட்டில் பொய்கள் உலாவருவதற்கு முக்கிய காரணமாக மாறிவருகிறது.

படிப்பு பாழாக கூடாது.

தொலைக்காட்சி சிறுவர்களின் நினைவு கூர்மை படுவதை தடுக்கிறது என்று பிரதான ஆய்வுகள் சொல்கின்றன.

12 வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறுகிற பல மாணவர்களும் நாங்கள் தொலைக்காட்சியை ஒதுக்கி வைத்து விட்டோம். என்று சொல்வதும் சிலருடைய பெற்றோர் நாங்கள் தொலைக்காட்சியை விற்று விட்டோம் என்று சொல்வதையும் நாம் ஆண்டு தோரும் காண்கிறோம்.

ஆலிம்கள் தொலைக்காட்சி வேண்டாம் என்றூ சொன்ன போது அதை கேலி செய்த சிலர் இப்போது கல்வியாளர்கள் தொலைக்காட்சியை தவிர்த்து விடுங்கள் என்று சொல்வதை கொண்டாடுகீறார்கள்.

நம்முடைய பிள்ளைகளின் படிப்புக்கு தடையாக நம் வீட்டு தொலைக்காட்சி அமைந்து விடக் கூடாது.

வீட்டில் நாம் தொலைக்காட்சி பார்ப்பதற்Kஉ கட்டுப்பாடுகளை கடை பிடித்தால் தான் நமது பிள்ளைகள் படிப்பில் உயர முடியும் என்பதை கவனத்தில் கொள்ல வேண்டும்.

 ஆபாசம் தவிர்ப்போம்.

 இன்றைய தொலைக்காட்சி என்பது எந்த கட்டுப்பாடும் இல்லாத அளவில் எளிதில் ஆபாசத்தை பரப்பி வருகிறது.

 சில காட்சிகளையும் சேனல்களையும் குழந்தைகள் பார்ப்பதற்கு தடை செய்து விட முடியும் என்றாலும எல்லா நிகழ்வுகளுமே ஆபாசம் மேலோங்கியதாகவே இருக்கீறது.

 ஒரு நாகரீக சமூகம் ஆபசத்தை அருவெறுக்க வேண்டும்.

வீட்டில் தனிமையாகவோ குடும்பத்தோடு அமர்ந்தோ ஆபச காட்சிகளை பார்ப்பது எந்த வகையிலும் நாகரீகத்திற்கு பொருத்தமானது அல்ல

  أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ  பகிரங்கமாக ஆபாசமா நடக்கிறீர்களா ? என்பது லூத் நபி கேட்ட எச்சரிக்கையாகும்.

 நமது தொலைக்காட்சிகள் நம்மிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்கிறதா என்பதா என்பதை நாகரீகமுள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்.

 إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

 சில குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் கணவன்கள் தங்களது மனைவியருக்கு ஆபாச காட்சிகளை காட்டியது. அது போன்ற நடத்தையை அந்த பெண்கள் எதிர்பார்த்தது. என்ற கிடைக்கிற செய்திகள் மிக அதிர்ச்சிகரமானவை ஆகும்.

 தொல்லக்காட்சி நமது நேரத்த்தைய்ம் கவுரவத்தையும் கரைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்வது தற்காலத்தில் நம்மில் ஒவ்வொருவரூடைய மிக முக்கிய பொறுப்பாகும்.

தொலைக்காட்சி பெட்டி நம் வாழ்வில் ஒரு தொல்லை காட்சிப் பெட்டியாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

No comments:

Post a Comment