வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 25, 2025

இறுதி நேரச் சிந்தனை

 2025  ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது

இந்த வருடம் முழுவதும் நிம்மதியாக வாழ அல்லாஹ் நமக்கு அருள் செய்து விட்டான்.

இனி அடுத்த வருடம் எப்படி இருக்கப் போகிறது என்பது சிந்திப்பதற்குரியதாகும்.

வாழ்க்கையில் எது நிச்சயமோ இல்லையோ மரணம் நிச்சயமானது.

ஆனால் அது எப்போது வரப்போகிறது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்திலும் மரணத்தின் தேதியை அறிந்து கொள்ள மனிதர்களால் அறிய முடிந்ததில்லை.  

இந்த உலகில் மரணத்தை அல்லது நீண்ட வாழ்வை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒருவருக்கு மட்டும் அளிக்கப் பட்டது.

அவர் தான் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள்

மரணத்தின் மலக்கு ஒருவரின் அறைக்குள் நுழைய எவரிடமும் அனுமதி கேட்க மாட்டார். பெருமானாரிடம் மட்டும்  அனுமதி கேட்டார்.

دخل الملك جبريل على النبي صلى الله عليه وسلم وقال : ملك الموت بالباب ، ويستأذن أن يدخل عليك ، وما استأذن من أحد قبلك ، فقال له : ائذن له يا جبريل . ودخل ملك الموت وقال : السلام عليك يا رسول الله ، أرسلني الله أخيرك بين البقاء في الدنيا وبين أن تلحق بالله ، فقال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بل الرفيق الأعلى ، بل الرفيق الأعلى 

 

நபிமார்களுக்கு மரணத்தின் செய்தி சொல்லப்படும்.  

பெருமானிரிடம் மட்டும் அவர் வாழ விரும்பினால் விரும்பும் அளவு வாழலாம் என்று தெரிவிக்கப் பட்டது. விருப்பம் தெரிவிக்கப் பட்டது.

أتاني جبريلُ عليه السَّلامُ فقال : يا محمَّدُ ! عِشْ ما شئتَ فإنَّك ميِّتٌ، وأحبِبْ من شئتَ فإنَّك مفارقُه، واعمَلْ ما شئتَ فإنَّك مجزِيٌّ به، ثمَّ قال : يا محمَّدُ ! شرفُ المؤمنِ قيامُه باللَّيلِ، وعِزُّه استغناؤُه عن النَّاسِ

மரணத்திற்கு தேதி குறிக்கப் பட்டவர்கள் பல்லாண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

வாழ்க்கைகு உத்தரவாதம் வழங்கப்பட்டவர்கள் பட்டென்று பறி போயிருக்கிறார்கள்.

மரணம் உத்தரவாதமானது. எது எப்போது என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

மரணம் இல்லாதவன் அல்லாஹ் மட்டுமே!

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ 

ஆயத்துல் குரிஸீயின் இந்த முதல் வாசகம் அல்லாஹ்வை அவனது சக்திய்ய நம்முடைய பலவீனத்தை சுட்டிக் காட்ட மிக அருமையான வாசகமாகும்.

 

அல்லாஹ் மட்டுமே நிலையாக வாழக் கூடியவன். நமக்கு தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு.

 

الْقَيُّومُ ۚ  என்ற வாசகம் அதை விட மிக அற்புதமானது.

 

அல்லாஹ் உயிர்வாழ எதனிடம் தேவையற்றவன் ஆவான்

 

நாம் உயிர் வாழ பலது தேவை. உயிர். உடல் உறைவிடம் உணவு உடைகள் தேவை

 

அல்லாஹ்வுக்கு இடம் காலம் எதுவும் தேவையில்லை

 

அவன் உணவளிக்கிறான். அவனுக்கு உணவு தேவையில்லை

அவன் அழ வைக்கிறான். அவனை யாரும் அழ வைக்க முடியாது.

அவன் மரணத்த்த கொடுக்கிறான். அவன் மரணிப்பதில்லை.

 

இத்தகைய பண்பு படைப்புகளில் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருப்பதால் கைய்யூம் தனியாக யாரையும் அழைப்பதை மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை.

 

கைய்யூம் என்ற சொல் மனித அல்லது படைப்புகளின் பலவீன்ங்கள் அனைத்திலிருந்தும் அல்லாஹ்வை பரிசுத்தப்படுத்தி விடுகின்றன

 

யூதர்கள் மூஸா அலை அவர்களிடம்  உன் இறைவன் தூங்குகிறானா ? என்று கேட்டனர். மூஸா அலை அதை அல்லாஹ்விடம் கேட்டார்.

அல்லாஹ் அவருக்கு.  

இரவு நேரத்தில் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்துக் கொண்டு நில்லுங்கள் என்று உத்தரவிட்டான். அவர் கொஞ்ச நேரம் தெளிவாக நின்றார். பின்னர் உறக்கம் மேலிட கோப்பைகளை நழுவ விட்டார்.

கோப்பைகள் விழுந்து உடைந்தன.

அல்லாஹ் அவரிடம் .  உன் இறைவன் இந்த உலைகை பரிபாலிப்பவன் உறங்கினால் என்ன ஆகும் ? என்று கேட்டான்.

 

படைப்புகளின் எந்த பலவீனமும் அல்லாஹ்விடம் இல்ல்ல என்பதை உணர்த்த வந்த ஒரு அருமையான அத்தியாயம் தான் இஹ்லாஸ் அத்தியாயம்.

 

மக்காவின் மக்கள் முஹம்மது நபியிடம் எங்களுக்கு பாரம்பரியம் இருக்கிறது உனது இறைவனின் பாரம்பரியம் எது என்று கேட்டார்கள்.

 

அந்த கேள்விக்கு பதிலாக எழுபதாயிரம் மலக்குகளோடு இந்த அத்தியாயத்தை கொண்டு வந்தார் ஜிப்ரயீல்

 

அது மிக தெளிவாக கூறியது அல்லாஹு ஸ்ஸமத்..

 

அவன் தனித்தன்வன் . –தேவைகள் அற்றவன்.

இந்த படைப்புக்களிடம்  அவனுக்கு எந்த தேவையும் இல்லை,

 

يا بني آدم ما خلقتكم لأستكثر بكم من قلة ولا لأستأنس بكم من وحشة ولا لأستعين بكم من وحدة على أمر عجزت عنه ولا لجر منفعة ولا لدفع مضرة بل خلقتكم لتعبدوني طويلا وتشكروني كثيرا وتسبحوني بكرة وأصيلا .

 

அரசியல் வாதியை போல கூட்டத்தை காட்டி வலிமை தேட உங்களை படைக்க வில்லை.

காதலனை போல தனிமையை விரட்ட உங்களை படைக்கவில்லை.

என்னால் ஒரு காரியம் தனியாக செய்ய முடியவில்லை. அதற்கு துண்ணயாக உங்களை படைக்க வில்லை.

 

எல்லா தரப்பிலும் வஹ்தானிய்யத்தை நிரூபித்த பிறகு அல்லாஹ் கூறுகிறான். என்னை நீங்கள் அதிகம் வணங்கவேண்டும் என்பதற்காகவே படைத்தேன்.

 

ஒரு வருடம் முடிவடைகிற போது அந்த அல்லாஹ்வுக்காக நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

இனி வரும் காலத்தில் என்ன அதிகமாக செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

 

ஏனெனில் இனி எவ்வளவு காலம் என்பது நமக்கு நிச்சயமானதல்ல.

 

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

 

அது வரும் போது அந்த சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திப்பதும் அதில் நல்லதற்கு ஆசைப்படுவதும் தீயதற்கு அச்சப்படுவதும் வாழ்க்கையில் பரக்கத்தை கொண்டு வரும் செய்திகளாகும்.

எங்களுடைய உஸ்தாத்  ஷப்பீர் அலி ஹழர்த அவர்கள் சில நேரங்களில் அவருக்கு விருப்பமான திருமண வீடுகளில் மரணத்தை பற்றி பேசுவார்கள்.

கல்யாண வீட்டில் மரணத்தை பேசுகிறாரே என்று சிலர் கவல்ல தெரிவிப்பார்கள்.

 

ஹழ்ரத அவர்கள் அதற்கான காரணத்தை ஒரு தடவை சொன்னார்கள். மரணத்தை பற்றி பேசுவது பரக்கத்தை கொண்டு வரக்க் கூடியது என்றார்கள் .

 

திருக்குர் ஆன் மரணத்தின் சில காட்சிகளை எடுத்துக் கூறுகிறது அது நாம் சிந்திக்க வேண்டிய செய்திகளாகும்.

 

தீயவர்களின் மரணம் எப்படி இருக்கும்.

 

அவர்களின் முகத்திலும் பின்புறத்திலும் மலக்குகள் அடிப்பார்கள்.

 

وَلَوْ تَرَىٰ إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا ۙ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ (50

 

மரணத்தின் ஆரம்ப கட்ட அவஸ்த்தைகளை அனுபவிக்கிற போதே அவன் துடிப்பான்.

கொஞ்ச  நேரமாவது நன்மைகளை செய்ய வாய்ப்புக்கிடைத்து விடாதா என்று ஏங்குவான். கோரிக்கை வைப்பான். ஆனால் அந்த வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது.

 

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ (100

 

உயிர் பறிக்கப்படும் இறுதி நேரம் எப்படி இருக்கும் பெருமானர்   ஒரு ஹதீஸில் கூறினார்கள்.

وإنَّ العبدَ الكافِرَ إذا كان في انْقِطاعٍ مِنَ الدُّنيا، وإقبالٍ مِنَ الآخِرَةِ، نَزَل إليه من السَّماءِ مَلائكةٌ سُودُ الوُجوهِ، مَعَهمُ المُسُوحُ، فيَجْلِسونَ منه مَدَّ البَصَرِ، ثُمَّ يَجيءُ مَلَكُ المَوتِ حتَّى يَجْلِسَ عِندَ رَأسِه، فيَقولُ: أيَّتُها النَّفْسُ الخبيثةُ، اخْرُجي إلى سَخَطٍ من اللهِ وغَضَبٍ! فتَفَرَّقُ في جسَدِه، فيَنتَزِعُها كَما يُنتزع السَّفُّودُ مِنَ الصُّوفِ المَبْلولِ، فيَأْخُذُها، فإذا أخَذَها لَم يَدَعُوها في يَدِه طَرْفةَ عينٍ حتَّى يَجْعَلوها في تِلك المُسوحِ، ويَخْرُج مِنها كأنْتَنِ رِيحِ جِيفةٍ وُجِدَت على وَجهِ الأرضِ. فيَصْعَدونَ بها

 

உயிர் பிரிந்த பின் தண்ணீர் வேண்டும் என்று தாகம் பெரிதாக இருக்கும் அவர்களுக்க் மண்ணறையில் எத்தக்கய தண்ணீர் கிடைக்கும் குர் ஆன் கூறுகிறது.

 

கடுமையான சுடுநீர் வழங்கப்படும்

விரிவுரைகள் கூறுகின்றன்.

அவர்களுக்கு வழங்க்கப்படும் நீரில் ஒரு சொட்டு நீரை உலகில் உள்ள கடல்களில் கலந்தால் ஏழு கடல்களும் கொதித்து கொந்தளித்து விடும்.

 

 

 وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا (29

 

அந்த தண்ணீரை அவர்கள் குடித்தால் அவர்களுடைய இரப்பை துண்டு துண்டாகிவிடும் என இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

 

وسقوا ماء حميما فقطع أمعاءهم ) [ محمد : 15 

 

நல்லவர்களின் நிலை

 

ஈமான் கொண்டு கால மாற்றத்தின் எந்த தாக்குதலுக்கு ஆளாகி விடாமல் கொள்க்கயில் உறுதியாக நின்று தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்தவகள் மிக மதிப்பான ஒரு மரண நேரத்தை பெறுவார்கள்.

 

உலகம் பொய் புரட்டுக்களின் பக்கம் சென்ற போதும் அப்படி மாறிவிடாமல் இருந்தவர்கள்

உலகம் போதை ஆபாசத்தின் பக்கம் சென்ற போதும் அப்படி சென்று விடாமல் உறுதியாக நின்றவர்கள்.

உலகம் வன்முறை அநீதியின் பக்கம் சென்ற போதும் நீதி நியாயத்தின் பக்கம் சார்ந்திருந்தவர்கள்.

நிச்சயமாக அதற்குரிய கூலியை வாழ்க்கையிலேயே சந்திப்பார்கள் குறைந்த பட்சம மரணத்தருவாயில் காண்பார்கள்.

 

அவர்க்ளுக்கு ஆதரவாக அணியணியாக மலக்குகள் இறங்கி வருவார்கள்.

 

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ

 

பொதுவாக நமக்கு சார்பானவரக்ள் நமக்கு அருகே திரண்டு நிற்பது நமக்கு நிம்மதியும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிற விசயங்கள் அல்லவா?

 

சஃது பின் முஆத் ரலி அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது நபி (ஸ்ல) அவர்கள் அவரது அறைக்குள் தட்டு தடுமாறு நடப்பது போல நடந்தார்கள். உட்கார இடமில்லாத இடத்தில் உட்கார முயற்சிப்பது போல உட்கார்ந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே அறை காலியாகத்தானே இருக்கிறது ஏன் நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்று தோழர்கள் கேட்டனர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வளவு மலக்குகள் இங்கு திரண்டிருக்கிறார்கள். ஒரு மலக்கு அவரது இறக்கையை சுருட்டி எனக்கு இடமளித்தார் என்று கூறினார்கள்.

 

நல்லவர்களுக்கு அவர்களது தரத்திற்கேற்ப மலக்குகளின் வருகை அமையும்.

 

அந்த மலக்குகள் அவருக்கு ஆறுதல் சொல்வார்கள் தைரியம் கொடுப்பார்கள்.

 

இறக்கும் நேரத்தில் இனி என்ன நடக்குமோ என்ற அச்சம் அவருக்கு இருக்கும் எனில் இனி பயம் வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும் என மலக்குகள் அவருக்கும் நிம்மதி அளிப்பார்கள்.

 

அது போல அவர் விட்டுச் செல்கின்ற பிள்ளைகள் சொத்துக்கள் நிறுவனங்கள் என்ன ஆகுமோ என்ற கவலை அவருக்கு இருக்குமெனில்  அது பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை எல்லாம் அவர் விருப்ப படி நடக்கும் என அவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்வார்கள்.

உங்களுக்கு சொர்க்கம் தான் என்று நற்செய்தி சொல்வார்கள்.

 

யாரும் உங்களுக்கு துணை இல்லை என்று நினைக்க வேண்டாம். உலகில் எப்போதும் உங்களுடன் இருந்தது போல இனியும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று துணையாக தோள்கொடுப்பார்கள்

 

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ (30نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ                                                                                                                                             وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ (32

 

நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்கும் என்று உறுதி மொழி கொடுப்பார்கள்.

 

அது சொர்க்கத்தின் நன்மைகளின் முதல் கட்ட உணவாகும்.

நுஜுல் என்ற வார்த்தைக்கு விருந்தினர் வீட்டுக்கு வந்தவுடன் அளிக்கப்படுகிற முதல் கட்ட உணவுக்கு சொல்லப் படும்.

 

முதல் கட்ட உண்வே சொர்க்கம் என்றால் அதிலுள்ள பிரதம் உணவு எவ்வளவு சிறப்பானதாக இருக்கும் ?

 

இத்தக்கய ஒரு வரவேற்புக்கு நம்ம்ம நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இஸ்லாமின் பரம் விரோதி அபூஜஹ்ல் உடைய மகன் இக்ரிமா ரலி ஹிஜிரி 8 மக்கா வெற்றியின் போது இஸ்லாமை தழுவினார்.

 

இஸ்லாமின் எதிரிகளை அழிப்பதில் மிக தீவிரமாக இருந்தார்.  ஒரு முறை ஒரு படைக்கு அவரை தலைமையாக்கிய அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அவரை சந்தித்து இன்னும் கூடுதல் படைகளை தரட்டுமா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொல்லி அவர் சிரியாவை நோக்கி சென்றார்.

 

அவர் யர்மூக் யுத்ததில் கலந்து கொண்டார். போர் கடுமையாக இருந்தது. வெற்றி நழுவிக் கொண்டிருந்தது. அது கடுமையான வெயில் காலம்.   தண்ணீருக்காக காதிருந்தவன் கிணற்றை நோக்கி பாய்வது போல இக்ரிமா பாய்ந்தார். தனது தலைக்கவசத்தை கழற்றி போட்டார். கவச ஆடையையும் தூக்கி வீசினார். வாளின் உறையை கிழித்தெரிந்தார். தோழர்களே என்னோடு யார் மரணத்திற்கு வருகிறீர்கள் என்று கேட்டார் 400 குறைஷித் தோழர்கள் அவருடன் கை கோர்த்தனர். போர் நெருக்கடியில் இப்படி தற்காப்பு ஏற்பாடுகளை கைவிட்டு இவர்கள் புறப்படுதை கண்ட இஸ்லாமிய படைகளின் தளபதிகளில் ஒருவரான் காலித் பின் வலீத் ரலி அவரை நோக்கி ஓடி வந்தார்.

தம்பீ! நீங்கள் கொல்லப்ப்ட்டால் அது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பாகி விடும் இப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

  

அப்போது இக்ரிமா வெடுக்கென்று சொன்னார்! காலிதே தள்ளி நில்லுங்கள்! நான் பெருமானாருக்கு எதிராக போர் புரிந்தவன் நான், இப்போது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காவும் போராடு வதை தடுக்க வேண்டாம் என்று கூறி யுத்தத்தில் இறங்கினார்.

 

கடுமையான காயங்களுடன் அவர் வீழ்ந்து கிடந்த அவரை காலித் ரலி தனது மடியில் கிடத் தினார். இக்ரிமா ரலி காலித் ரலி யிடம் கூறினார். காலிதே ! உமர் ரலி யிடன் சென்று நாங்கள் முந்திக்க் கொள்ள முயற்சித்தோம் என்று கூறிவிடுங்கள் என்றார்.

 

அது ஒரு பழைய நிகழ்விற்கு பதில் கூறும் வாசகம் ஆகும்

.

உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் பிலால் ரலி அவர்களைப் போன்ற சாமாணிய சஹாபாக்களும் அபூசுப்யான் ரல் அவர்களைப் போன்ற பெரிய பிரமுகர்களும் உமர் ரலி அவர்களை சந்திக்க காத்திருந்தனர்,  பிலால் ரலி போன்ற சாமாணியர்களுக்கு அவர்களை சந்திக்க முதல் அனுமதி கொடுக்கப் பட்டது. அப்போது பிரமுகர்கள் மனம் குமுறினர். இதை அறிந்த சஹ்லு பின் சஃது ரலி கூறினார்கள். குறைஷிகளே! நீங்கள் பின்தங்கியுருந்த காலத்தில் அவர்கள் முந்திக் கொண்டார்கள். அவர்களை நீங்கள் முந்த வேண்டும் எனில் ஜிஹாதில் பங்கேற்று கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்கள்.

அதை சுட்டிக் காட்டி இக்ரிமா ரலி இவ்வாறு கூறிவிட்டு மரணமடைந்தார்கள்

 

 فبادر إليه خالد بن الوليد فقال له “لاتفعل يا بن العم فإن قتلك سيكون على المسلمين شديد”، فما كان من عكرمة إلا ان قال “تنحى عنى يا خالد جاهدت بنفسى ضد رسول الله! أفأستبقيها الآن عن الله ورسوله!” ثم نادى في المسلمين من يبايع على الموت؟ فبايعه عمه الحارث بن هشام بن المغيرة وضرار بن الأزور في أربعمائة من المسلمين، فقاتلوا

 அவர் இஸ்லாமை தழுவுவதற்கு முன் இஸ்லாமின் மகத்தான சகோதரத்து மாண்பை பறைசாற்று அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்த்து.

 

மரணத்தருவாயில் இருந்த ஹாரித் ரலி தண்ணீர் தண்ணீர் என்று கேட்டார். அவரிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்ட போது அதை இக்ரிமா ரலி பார்ப்பது அவருக்கு தெரிந்தது. தண்ணீரை அவருக்கு கொடுங்கள் என்றார் ஹாரிது.

 

இக்ரிமா ரலி யிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்ட போது அதை அயாஷ் ரலி பார்த்தார். அதை கண்ட இக்ரிமா தண்ணீரை அயாஷுக்கு கொடுங்கள் என்றார். தண்ணீர் பை அவரிடம் கொண்டு வரப் பட்ட போது அவர் ஷஹீதாகி இருந்தார். மற்ற இருவர்களிடம் திரும்பி வந்த போது அவர்களும் ஷஹீதாகி இருந்தனர்.

.

عن حبيب بن أبي ثابت أن الحارث بن هشام وعكرمة بن أبي جهل وعياش بن أبي ربيعة أثبتوا يوم اليرموك فدعا الحارث بشراب فنظر إليه عكرمة فقال: ادفعوه إلى عكرمة فدفع إليه فنظر إليه عياش بن أبي ربيعة فقال عكرمة: ادفعوه إلى عياش فما وصل إلى أحد منهم حتى ماتوا جميعا وما ذاقوه

 

மரணத்த எதிர் கொண்ட என்ன ஒரு கவுரமான நிலை ?

 

நமக்கு இனி உள்ள நாட்களில் மரணத்தை கம்பீரமாக எதிர் கொள்ள தேவையான ஒரு வாழ்வுக்கு ஆசைப்படுவோம். முயற்சி செய்வோம்.

 

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

 

2 comments: