வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 11, 2025

வக்பின் புனிதமும் வக்பு வாரியங்களின் போக்கும்

 مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ اللَّهِ بَاقٍ ۗ 

கடந்த 2024 ம் ஆண்டு மத்திய அரசு வக்பு சொத்துக்களை திருடும் நோக்கில் ஒரு அநீதியான சட்டத்தை கொண்டு வந்தது. அது 2025 ல் நடைமுறைக்கும் வந்து விட்டது. அந்த சட்ட்த்தின் 2 அம்சங்களை தவிர மற்ற எதற்கும் தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டது.    

வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பதவி என்ற ஒற்றை செய்தி வக்பு திருத்த சட்டம் எப்படி ஒரு திருட்டு சட்டமாகி இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட போதுமானது.

இன்னொரு முக்கிய திருட்டு அம்சம், வக்பு சொத்துக்களின் புதிய பதிவு என்ற நடைமுறையாகும்.  

1955 லேயே வக்பு சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டு அவை அனைத்தும் 100 சதவீதம் மின்னணு பதிவேற்றம் செய்யப் பட்டு விட்டன என்று பாஜகவின் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியே நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார். நிலைமை இப்படி இருக்க மீண்டும் வக்பு சொத்துக்களை பதிவு செய்யும் படி மத்திய அரசின் புதிய சட்டம் உத்தரவிட்டிருக்கிறது,

இதுவும் வக்பு சொத்துக்களை பலவீனப்படுத்தும் ஒரு திட்டமாகும்

ஏனெனில் ஆயிரமாண்டு பாரம்பரியத்தை கொண்ட வக்பு சொத்துக்கள் அரசு தற்போது கேட்கும் ஆதாரங்களை கையில் வைத்திருக்குமா என்பது பெரும் கேள்வியாகும்

1955 ம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவிலுள்ள வக்பு சொத்துக்களை கணக்கிட்ட போதுஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட ( 7.85,934) சொத்துக்கள் இருந்தன. . தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் இருந்தன. இந்த சொத்துக்களின் மதிப்பு ஒண்ணே கால் லட்சம் கோடியாகும். தா

இந்த கால கட்ட்த்திற்கு பின்னுள்ள வக்புகளையும் கணக்கில் கொண்டு 9 இலட்சம் வக்பு  சொத்துக்கள் இந்திய வக்பு வாரியங்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்த உமீத் எனும் வக்பு போர்ட்டலில் பதிவு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்திய போது முஸ்லிம் அமைப்புக்களில் இது விவகாரத்தை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறி பதிவு செய்வதை தாமதித்தனர். அதன் பிறகு இதுவிவகாரத்தில் மத்திய் அரசு உறுதியாக இருப்பத்த அறிந்து டிஸ்மபர் 6 ம் தேதிக்குள் பதிவு செய்யும் படி அவசரப்படுத்தின.

மத்திய அரசு டிஸம்பர் 6 தேதியை இதற்கு கடைசி நாளாக நிர்ணயம் செய்த்தே கூட ஒரு முஸ்லிம் விரோத மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.

இந்த தேதியை நீட்டித்து வழங்க வேண்டும் என்று முஸ்லிம்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

மிக எதார்த்தமாக மக்களின் இந்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்ற அனுமதியளித்திருக்க வேண்டும். இந்த 6 ம் தேதியை தவற விட்டால் என்ன குடி முழுகிப் போய்விடப் போகிறது என்பதை விளக்கம் சொல்லாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி உச்ச நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

அதன் பிறகு முஸ்லிம் வேக வேகமாக உமீது போர்ட்டலி தங்களது வக்புகளை பதிவு செய்தனர்.

டிஸம்பர் 6 ம் தேதி இதற்கான காலக்கெடு முடிவடைந்த்து.

ஒரு ஆச்சரியம் .

இதை அக்கிரமம் என்று கூட சொல்ல்லாம். மத்திய அரசின் வஞ்சகம் எப்படி வெற்றி பெற்றிருக்கிறது என்பதன் முதல் அடையாளமாக இதுவரை மத்திய் அரசாங்கத்தின் அறிவிப்ப்பின் படியே 7 இலட்சம் சொத்துக்கள் இருந்த்தாக சொல்லப் பட்ட நிலையில் டிஸம்பர் 7 ம் தேதி மத்திய சிறுபான்மை நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 5,17,040 சொத்துக்கள் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

முதல் எடுப்பிலேயே 2 இலட்சம் சொத்துக்கள் மயாமாகி விட்டன.

அரசு என்ன சொல்லப் போகிறது என்றால் முஸ்லிம்கள் ஏராளமானவற்றை தங்களுடையது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவை சரியல்ல என்பது நிரூபணமாகியிருக்கிறது என்று சொல்லு விட வாய்ப்பிருக்கிறது.

எதார்த்தம் அப்படியல்ல.. பன்னூறு வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களுக்கு இப்போது ஆதாரம் தேடுவதில் உள்ள சிரமம் யாருக்கும் புரியாதது அல்ல;  அது போல பல வக்பு சொத்துக்கள் கேட்பாரற்று கிடக்கின்றன என்பதும் எதார்த்தமாகும்.

உதாரணத்திற்கு பஞ்சாப் மாநிலத்தில் முஸ்லிம்களால் விட்டுச் செல்லப் பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் தர்காக்களும் உண்டு. அவைகளுக்கு இப்போது உரிம்ம கோருவோர் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அவை பதிவு செய்யப்படவும் வாய்ப்பு இல்லை.

இப்போதைய இந்த பதிவின் மூலம் அந்த வக்பு சொத்து பறிபோய்விட்டது.

முதல் எடுப்பிலேயே 2 இலட்சம் பறி போய்விட்ட்து என்றோமோ அதற்கடுத்த நிகழ்வையும் கொஞ்டம் பாருங்கள்

பதிவு செய்யப் பட்ட சொத்துக்களை அரசு அப்படியே ஏற்பதில்லை அவற்றை பரிசீலிக்கிறது. ஆதாரங்களை ஆய்வு செய்கிறது .

இந்த பரிசீலனையின் போது 10869 சொத்துக்கள் நிராகரிக்கப் பட்டதாக மத்திய சிறுபான்மை நலத்துறையின் அறிக்கை கூறுகிறாது.

இது கூட மொத்த விண்ணப்பங்கள் ஐ ந்து இலட்சத்தில் இருந்தல்ல

ஐந்து இலட்சம் விண்னப்பங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு இலட்சம் விண்ணப்பங்களே பரிசீலிக்கப் பட்டுள்ளன (213942) இதிலிருந்து தான் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. அதாவது விண்ணப்பிக்கப் பட்டவைகளில் சுமார் 5 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.

(https://www.dailythanthi.com/amp/news/india/517-lakh-waqf-properties-uploaded-on-central-government-website-1194390)

இனி அடுத்த்து வருகிற பரிசீலனகளில் நிராகரிப்புக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ தெரியாது.

பாஜக நினைப்பதும் இது தான்.

மொத்தமாக வக்பு சொத்துக்களை அபாகரித்து விட முடியாது. அதில கணிசமானவற்றை கேளிவிக்குள்ளாக்கி விட வேண்டும் என்பது தான்.

இனி இதன் பிறகு நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் வக்பு விவகாரங்களில் பிரச்சனைக்கு பலர் தயாராகிவிடுவார்கள் அல்லவா ?

நாட்டில் எந்த ஒரு தேவையும் இன்றி பிரச்சனைகளை ச் என்றே கொண்டு வரப் பட்ட திட்டம் தான் வக்பு திருட்டு சட்டம் அதன் தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்து விட்டது.

நிர்வாக அமைப்பும் நீதிமன்றமும் ஊடகங்களும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்திடம் பாரபட்டசமாக நடந்து கொண்டு வருகிற சூழ் நிலை இருப்பதால் முஸ்லிம்கள் இனி இதற்கேற்ற நடவடிக்கைகளை மிக அக்கறையாக செய்ய வேண்டியிருக்கிறது.

மத்திய அரசும் அதன் சார்பு ஊடகங்களும் நீதிக்கு எதிராக மிக வஞ்சகமனா வார்த்தைகளை  பிரயோகித்து புனிதமான வக்பு சொத்துக்களை  ஒரு திருட்டு அல்லது அபகரிப்பு நடவடிக்கைகளை போல சித்தரித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் வக்பு வாரியங்கள்  விழிப்படைவதும் சரியான சரியான நீதியான நடவடிக்கைகளை மிக கவனமாக மேற்கொள்வதும் அத்தியாவசியமாகிறது.

இதே போல வக்பு நிருவன்ங்களான பள்ளிவாசல் மற்றும் தர்கா போன்ற வக்பு நிருவன்ங்களும் கூட உஷாராக இருப்பதும் சர்ச்சைகள் இல்லாதவாரு பார்த்துக் கொள்வதும் அத்தியாவசியமாகிறது.

துர்திஷ்ட வச்மாக நாட்டிலுள்ள 32 வக்பு வாரியங்களிலும் மேலிருந்து கீழ் வரை ஏராளமான முறை கேடுகள் நடக்கின்றன.

வக்பு சொத்துக்களை நிர்வகிக்கிற பள்ளிவாசல தர்கா மற்றும் பொது நிறுவன்ங்களின் நிர்வாகங்களிலும் முறைகேடுகள் சக்ஜமாக இருக்கின்றன.

இத்தகை சில முறைகேடுகளை சாக்காக வைத்து தான் மத்திய பாஜக அரசு தனது திருட்டு சட்டங்களை நியாயப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

வக்பு சொத்துக்கள் பதிவு செய்யப் பட்டு விட்டன் என்று சொன்ன முக்தார் அப்பாஸ் நக்வியே மீண்டு ம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்ட்த்தை ஆதரிக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் இது மத்த்திற்கு எதிரானது அல்ல; வக்பு சொத்துக்களை அனுபவிக்கிற பலருக்கு எதிரானது என்கிறார்.

உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். இத்தகைய உழ்ழல்ல்க்கள்ள் அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வர்களாலேயே செய்யப்படுகின்றன என் பதுதான் கொடுமை.

 

வக்பு சொத்துக்கள் சுமார் லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள் ளது. அதில் லட்சம் ஏக்கர் பதிவு செய்யப்பட்டவை. இவற்றில் பல 800 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டவை.

 

அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும்பராமரிக் கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் அவை அடகு வைக்கப்பட்டும்விற்கப் பட்டும்ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. 

பல மாநிலங்களிலும் பெரிய நிலத் திமிங்கலங்களின் கைகளிலும்பெரும் கட்டுமான நிறுவனங்களின் கைகளிலும் தான் வக்பு சொத்துக்கள் சிக்கியுள்ளன. அங்கு மிகப் பெரிய ஊழலின் உறைவிட மாகவே வக்பு வாரியங்கள் உள்ளன.

வக்பு குறித்த நாடாளுமன்றக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அறிக்கை யைச் சமர்ப்பித்தது. அதன் தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான் இருந்தார். அந்த அறிக்கை யில்வக்பு வாரிய சொத்துக்கள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தால் வேலையின்மைகல்விக்கான வாய்ப் பின்மை மற்றும் வறுமை ஆகிய பிரச் சனைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது 70 சதவிகித சொத்துக்களும் ஆக்கிரமிக்கப் பட்டோ அல்லது அபகரிக்கப்பட்டோ உள்ளன. மீதி 30 சதவிகித சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தினால் கூடபல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலும் என்று அந்த குழு கருதியது. ஆனால் தற்போதுமீதமுள்ளவைகளைக் கூட கொள்ளையடிக்க முனைப்பான முயற்சி கள் நடைபெற்று வருகின்றன.

1997ல் தமிழ்நாடு வக்பு வாரியம்சென் னை திருவல்லிக்கேணியில் மிகவும் விலைமதிப்புள்ள பகுதியில் இருந்த 1710 சதுர அடி நிலத்தை வெறும் லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுத்தது.

மும்பையில் மகாராஷ்டிர வக்பு வாரியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அல்டமவுன்ட் சாலையில் 4532 சதுர அடி நிலத்தை வெறும் ரூ.16 லட்சத்திற்கு முகேஷ் அம்பானிக்கு விற்பனை செய்தது. அதில் அவர் 27 மாடியில் ஒரு பிரம்மாண்டமான மாளி கையைக் கட்டினார்.

பெங்களூரில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஏக்கர் நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப் புள்ள மிகப்பெரிய ஓட்டலைக் கட்டி யுள்ள வின்சர் மேனர் ஓட்டல் நிர்வாகம்மாத வாடகையாக வெறும் ரூ. 12000 மட் டுமே கொடுக்கிறது.

ரீதாபாத்தில் வக்பு வாரியம் ஏக்கர் நிலத்தை பல வருடங் களாக 11 மாத குத்தகைக்கு என்ற பெய ரில் குறைந்த வாடகையான ரூ. 500க்கும் ரூ.1500க்கும் கொடுத்துள்ளது. இங்கு ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது.

வற்றிற்கெல்லாம் காரணம் வக்பு வாரி யங்கள் ஊழல்பேர்வழிகளல் நிறைந்திருப்பது ஆகும்.

இதில் ஆளும் கட்சிகளின் தலையீடுகள் தான் முக்கிய காரணம்தான் என் பது மறுக்க முடியாத உண்மை.

டில்லி சிறுபான்மைனர் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்டில்லியில் நிஸாமுதீன் சாலையில் மிகவும் மதிப்புமிக்க பகுதியில் வக்பு வாரி யத்திற்கு உரிமையான நிலத்தில் ஒரு தனியார் பள்ளிக் கூடத்தை நடத்துகிறார். அதற்கு ரூ .1000 ஆயிரம் என்ற பிச்சைக் காசை வாடகை யாக வாரியத்திற்குக் கொடுக்கிறார்

பல மாநிலங்களிலும் அரசு நிர்வாகங்களே வக்பு சொத்துக்களை கொள்ளையடித்துள்ளன.

மத்திய அரசுடெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டிதொல்பொருள் ஆய்வு நிறுவனம்அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசு நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்றும் டெல்லி கோல்ப் கிளப்ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்மத்திய புலனாய்வு அமைப்பின்  தலைமை அலுவலகம்ஓபராய் நட்சத்திர ஹோட்டல் ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக டெல்லி வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வி.சி.ராஜ்பிராச்சார் அவர்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார்

ஆந்திர மாநிலத்தில் மாநில அரசே வக்பு வாரிய சொத்துக்களைக் கைப் பற்றியுள்ளது. உதாரணமாகஹைதராபாத் ஹை டெக் நகரம் வக்பு சொத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் அரசு ரூ.500 கோடி மதிப்புள்ள 6000 ஏக்கர் வக்பு நிலத்தைக் கைப்பற்றி, 900 ஏக்கர் நிலத்தை என்டிபிசி நிறுவனத் திற்கும், 800 ஏக்கர் நிலத்தை ஹிந்து ஜாஸ் நிறுவனத்திற்கும் ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் எனும் அற்ப விலைக்கு வழங்கி யுள்ளது.

தமிழக முன்னால் வக்பு வாரிய தலைவர் ஒருவர் வக்பு வாரிய நிதியிலிருந்து  50 ஆயிரம் ரூபாயை தொகுப்பூதியமாக (அமைச்சர் அனுமதியுடன்) பெற்றுக் கொண்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த உத்தரவு பல பத்ரிகைகளிலும் வெளியானது.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்ப்பட்ட்து . இதுவரை வக்பு வாரிய உறுப்பினராக இருந்த அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்பட்டார். அரசு அதற்கு பல சப்பையான காரணங்களை அப்போது கூறியது .

உண்மையில் வக்பு நிர்வாகத்தில் இருக்கிற சிலர் பெரும் சொத்துக்களை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கைமாற்றியதை முன்னாள் முதலமைச்சரின் கவனத்திற்கு அவர்  கொண்டு சென்றார். இது போல பல மூறை அவர் முறைகேடுகளை தைரியமாக கண்டித்திருக்கிறார். அவரை வைத்திருப்பது ஒரு தொல்லை என்ற காரணத்தினாலேயே ப்போது அவரை வெளியேற்றியிருக்கிறார்கள்.

இப்போதும் கூட வக்பு வாரியம் புதிதாக அமைக்கப் பட்டிருக்கிறது. இதில் ஆலிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் இந்த விதியை கட்டபிடிக்குமாறு அரசை கேட்டுக் கொள்ள முஸ்லிம் பெயரில்லுள்ள எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் தயாராக இல்லை. காரனம் ஆலிம் ஒருவர் இந்த பதவிக்கு ஏற்ப வளைந்து கொடுக்க் மாட்டார் என்பதே காரணம்.

நமக்கு பக்கத்தில் இருக்கிற கேரள் மாநிலத்தில் ஆலிம் ஒருவர் தான் ஹஜ் கமிட்டியின் தலைவராக இருக்கிறார்.

நம்முடைய மாநிலத்தில் அது கற்பனை கூட செய்ய முடியாத நிகழ்வாகும்.

ஹஜ் என்பதன் ஒரு கால் புள்ளிக்கான சட்டமும் நடை முறையும் அனுபவமும் அற்றவர் தான் அரசியல் செல்வாக்கில் ஹஜ் கமிட்டி தலைவராக இருப்பார்.

தமிழக ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் சுமார் 30 ஆண்டுகால ஹஜ் அனுபவம் உள்ளவர். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்யக் கூடியவர்களுக்கு தமிழக ஹஜ் கமிட்டியில் இருக்கிற எந்த உறுப்பினரையும் விட நன்மை செய்தவர்.

அவரை ஹஜ் கமிட்டி தலைவராராக்குவார்களா ? இதி பற்றி தமிழகத்தில் யோசிக்க முடியுமா

இவர் மட்டுமல்ல் இவரை போல் ஒ எம் அப்துல் காதிர் ஹழ்ரத் பெருந்தகை அவர்களப் போல இன்னும் தகுதியும் தரமும் உள்ள பலர் இருக்கிறார்கள்.

ஆனால் வக்பு வாரியம் ஹஜ் கமிட்டி ஆகிய பொறுப்புக்கள் அரசியல் பிச்சை பாத்திரமாகவே இருக்கிறது. கூட்டணி கட்சிகளை சரிக்கட்டுவதற்காக ஆளும் கட்சி பயன்படுத்துக் ஒரு கருவியாக வக்பு வாரியமும் ஹஜ் கமிட்டியும் ஆகி விட்டன.  

இதில் ஆளும் கட்சியை குறை சொல்வதை விட ஆலிம்களுக்கான இட்த்தை தரத் தவறுகிற தமிழக அரசியல் கட்சிகள்  மற்றும் அமைப்புக்களையுமே காரணமாக சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

தமிழகத்தில் முஸ்லிம் இஸ்லாம் என்ற கோசங்கள் ஒரு அர்த்தமற்ற கோஷங்களாகவே இருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் வக்பு சொத்துக்களின் எண்ணிக்கை பெருக ஆலிம்களின் பங்களிப்பே பிரதான காரணமாகும்

إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث : صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له

இந்த ஹதீஸை சொல்லாத ஒரு ஆலிம் இருக்க மாட்டார்.

எங்களுடைய கோவை மாநகரின் பழைய பள்ளி ஒன்று ஓலைக் கூரை வேய்ந்த்தாக இருந்த்து. ஒரு பணக்கார்ர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று ஒரு ஆலிமிடம் முறையிட்டார். அந்த ஆலிம் நான் துஆ செய்கிறேன். உங்களுக்கு குழந்தை பிறந்தால் இந்த பள்ளிவாசலை கட்டித்தருவதாக நேர்ச்சை செய்து கொள்ளுங்கள் என்றார். அதன் படி அவருக்கு குழந்தை பிறந்த்து. அந்த பள்ளிவாசலை அவர் கட்டிக் கொடுத்தார்.

இது ஒரு சின்ன உதாரணம்.  உலகம் முழுவதிலுமுள்ள வக்பு களுக்கு பின்னே இது பேன்ற பல உதாரணங்கள் உண்டு. சஹாபாக்களின் வக்புகளுக்கு பின்னே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காரணமாக இருந்த்து போல.

அநீதியாக ஆலிம்களின் பங்கேற்பும் பங்களிப்பும் ஓரங்கட்டப்படுது. அல்லது தடுக்கப்படுகிறது. என்ற  இந்த பிரச்சினை பொதுமக்களின் அரங்கிற்கு எடுத்துச் செல்லலப்படுவதில்லை. சமுதாய புரவலர்களிடமும் கொண்டு செல்லப் படுவதில்லை.

என்வே மத்திய அரசு வக்பு சொத்துக்களை பிடுங்க முயற்சிக்கிறது அதை தடுக்க வேண்டும் என்பது எப்படி பிரதானமானதோ அதே போல் வக்பு வாரிய அமைப்புகளுக்குள் நடை பெறுகிற முறைகேடுகளை தடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

வக்பு சொத்துக்களை பராமரிக்கிறவர்களுக்கு உமர் ரலி அவர்களிடம் நிறைய உதாரணங்கள் உண்டு.

ஒரு முறை ஒரு வக்பு ஒட்டகையை உமர் ரலு குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்த வழியாக பக்தாதின் புகழ் பெற்ற ஒரு அரசப் பிரதிநிதி வந்தார். அவர் உமர் ரலி அவர்களிடம் இந்த வேலைக்கு ஒரு அடிமைய ஏவக் கூடாதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த உமர் ரலி அவர்கள் இதற்கு என்னை விடச் சிறந்த அடியமை யார் என்று கேட்டார்கள்.
اي اعبد مني

 வக்புகளின் நிர்வாகிகள் வkபு சொத்துக்கள் செம்மையாக நிர்வகிக்கப் பாடு பட வேண்டும்.

நமக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் வளமாக வாழ்ந்து வக்பு செய்தார்கள். அதை மேம்படுத்த நம்மால் முடிந்த ஒரு இலையை ஆவது கிள்ளிப்போட வேண்டும்.

வக்பு வாரியங்களை முழுக்க அரசியல் விளையாட்டுக்களின் களமாக ஆக்க கூடாது. குறைந்த பட்சம வக்பு சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

அது அவர்களின் இம்மை வாழ்க்கைகும் மறுமை வாழ்க்கைகும் உதவும்.

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது ஒரு பதவி அல்ல ஒரு வணக்கம் என்று கருதுகிற மனோ நிலை வேண்டும்.

 மத்திய அரசு எல்லா வகையிலும் முஸ்லிம்களை ஒடுக்க அவர்களது

வளத்தையும் செல்வாக்கையும் குறைக்க திட்டமிடுகிறது.

 இந்த சூழலில் முஸ்லிம்களுக்கான அமைப்புக்கள் கூடுமான நேர்மையையும் விழிப்புணர்வையும் கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

(அமீரகத்தின் அல் அய்ன் நகரிலிரூநது )

No comments:

Post a Comment