வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 11, 2025

ஆணவம் தலைக்கேறியுள்ள இஸ்ரேலும் அச்சத்தில் அரபு நாடுகளும்.

கடந்த செவ்வாய்க்கிழமை கத்தார் நாட்டின் தலை நகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பல நாடுகளிலும் நடைபெறுகிற சண்டைகளை சமரசம் செய்து வைப்பதில் ஈடுபாடு காட்டி வரும் கத்தார் மீது இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அமெரிக்கா வின் ஏற்பாட்டின் போரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் திட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர்களுடன் பேச்சுவார்த்தையில் கத்தார் ஈடுபட்டிருக்கும் போது இந்த தாகுதல் நடை பெற்றிருக்கிறது.

இதை அக்கிரமத்த்ன் உச்சம் என்று பத்ரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

கத்தார் நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்று இருக்கிறது. அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை அணி கத்தர் நாட்டிலேயே இருக்கிறது.

இந்த நிலையில் கத்தார் மீது விமானங்கள் மூலமாக கத்தாரின் தலை நகரில் உள்ள Katara Cultural Village  எனும் இட்த்தில் ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த இடத்தின் மீது குறிவைத்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பரசீக வளைகுடாவில் உள்ள ஒரு அரபு நாட்டின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள முதல் தாக்குதல் இது. ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரான இஸ்மாயில் ஹனீய்யாவின் அலுவலகம் இருந்த பகுதியில் ஒன்று கூடியிருந்த கலீல் ஹய்யா, காலித் மஸ்கல், தர்வேஷ், மர்சூக் ஆகிய ஹமாஸின் தலைவர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 இது இஸ்ரேலின் உளவு அமைப்பின் பலத்தையும் அரபு நாடுகளின் பலவீனத்தையும் அமெரிக்காவின் நயவஞ்சக்த்தனத்தையும் உலகிற்கு ஒரு சேர காட்டியுள்ளது.

 அமெரிக்கா அதிபருக்கு  கத்தார் சமீபத்தில் 400 கோடி டாலர் மதிப்புள்ள விமானத்தை பரிசாக வழங்கியது. தன்னை பாதுகாப்பதற்காக ஆண்டு தோறும் அமெரிக்காவுக்கு ஏராளமான கட்டணத்தை கத்தார் செலுத்தி வருகிறது.  

 ஆனால் தனது நெருங்கிய கூட்டாளி நாடான இஸ்ரேலின் தக்குதலில் இருந்து கத்தாரை காப்பாற்ற அமெரிக்காவால் முடியவில்லை.

 முடியவில்லை என்பதல்ல அமெரிக்க கத்தாரை காப்பாற்ற நினைக்க விலை என்பதே சரி.

 கத்தாருக்குள்  துல்லியமாக இஸ்ரேல் விமானங்கள் மூலம் தக்கியிருக்கிறது என்றால் அமெரிக்காவின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.

 ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுவதாக டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார்.

 இத்தாக்குதல் தனக்கு  தெரியவில்லை என்கிறார் டிரம்ப். உச்ச கட்ட நயவஞ்சத்தனத்தின் நாடகம் அது.

 அரபு நாடுகள் இந்த் அரசியல் நாடகத்தை எப்போது புரிந்து கொள்ளாப் போகிறார்களோ ? அல்லாஹ்வே அறிவான்.

 உலகம் முழுவதிலும் கத்தாருக்கு உள்ள மதிப்பின் காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவை இத்தாக்குதலை கண்டித்துள்ளன. மிக அதிசயமான ஒரு நிகழ்வாக இந்தியா கூட வெளிப்படையாக இத்தாக்குதலை கண்டித்துள்ளது.

 ஆனால் அதை கடந்து இஸ்ரேலுக்கு என்ன நெருக்கடி கொடுக்கப் பட்டுள்ளது என்பது கேள்விக்குரியாகும்.

 ஹமாஸ் தலைவர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளனர். அல்ஹ்ம்துலில்லாஹ். ஆனால் சுமார் ஆறு பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

 அவர்களுடைய ஜனாஸாவில் கத்தார் நாட்டின் அமீர் கலந்து கொண்டுள்ளார்.

 இது போதுமா என்ற கேள்வி தான் இப்போதைக்கு உலக முஸ்லிம்களிடம் இருக்கிற பெரிய கேள்வி ஆகும்.

 நிச்சயம் கத்தார் பதிலடி கொடுக்கும் என்று கத்தார் கூறியுள்ளது.

 ஆனால் அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் அல்லது அமெரிக்காவிற்கு தெரியாமல் கத்தாரினால் பதிலடி தர முடியுமா என்பது ராஜதந்திரிகளின் ஏளனச் சிரிப்புக்குள்ளான கேள்விகளாகும்.

 அரபு நாடுகள் ஒன்று சேர வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இப்போது அறைகூவல் விடப்படுகிறது.

 அந்த இணைப்பு ஏற்கெனவே இருக்கிறது.

அது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டி வைத்த இணைப்பு.

பணத்திமிரிலும் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் ஆணவத்திலும் அந்த இணைப்பை அரபு ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினார்கள்.

 அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களையும் அரசியல் ஆதரவையும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாகரீகத்தையும் அரசியல் மரியாதையை எதிர்பார்த்தார்கள்.

 இன்று அரபு நாடுகளின் நிலை ஐயோ என்று இருக்கிறது.

 கத்தாரை தாக்கிய இஸ்ரேலின் அதிபர் ஹமாஸ் அமைப்பினரை வெளியேற்றாவிட்டால் இன்னும் தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

 அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் பலிகடாக்களாக மாறியிருக்கிற அரபு நாடுகள் இப்போதாவது சரியான மாற்றம் குறித்து சிந்திக்குமா என்பது தான் இப்போதையை பெரிய கேள்வியாகும்.

 அரபுகளுக்கு வழிகாட்ட குர் ஆன் ஒன்று போதும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (51

இதை விட வெளிப்படையான வழிகாட்டுதல் வேறென்ன வேண்டும். ?

குர் ஆன் மற்ற சமூகத்தினரோடு உறவாடுவதை தடுக்க வில்லை. அதே நேரத்தில் நீ உனது சமூக அடையாளத்தை ஒதுக்கி விட்டு உங்களின் பாதுகாவலான யூதர்களையும் கிருத்துவர்களையும் ஆக்கிக் கொள்ளாதே என்று எச்சரிக்கிறது.

நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையானவராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமின் மீதான எதிர்ப்புணர்விலேயே இருக்கிறார்கள்.  

அதனால் தான்

ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ என்கிற அளவு அல்லாஹ் எச்சரிக்கிறான்.

 இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள் எனில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான அணியிலேயே நீங்கள் நிற்கிறீர்கள் என்ற வாசகம் எவ்வளவு உறுதி மிக்க விமர்சனத்தை முன் வைக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 பலரும் எடுத்து வைக்கிற ஒரு பலவீனமான வாதத்தை அல்லாஹ் உடைத்து பேசுகிறான்.

 அவர்களோடு தொடர்பு வைக்காவிட்டால் ஆபத்து என்பது தான் அமெரிக்கா இஸ்ரேல் ஐரோப்பாவோடு நட்பு வைக்கிறவர்கள் கூறுகிற சப்பை வாதம் அல்லாஹ் அதை இதயத்தில் உள்ள நோய் என்கிறான்.

  فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ ۚ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ 

 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் இருந்த அரபுகள் யூதர்களின் தொடர்பை தான் தங்களுக்கு பாதுகாப்பாக கருதினர்.

 பத்று யுத்த்தில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போது அது யூதர்களுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்தது. முஸ்லிம்களுக்கு தைரியத்தை கொடுத்தது.

 நீங்கள் சாதாரண வியாபாரிகளை வென்று விட்டதை பெரிதாக கருதிக் கொள்ள வேண்டாம். எங்களை போன்ற போர்த்திறன் படைத்தவர்க்கள் உறுதியாக நின்றால் உங்களால் எங்களை எதிர்க்க முடியாது என்று மாலிக் பின் சைப் என்ற யூதன சொன்னார்.

 فقال مالك بن صيف: غرَّكم أن أصبتم رهطًا من قريش لا علم لهم بالقتال!! أما لو أمْرَرْنَا العزيمة أن نستجمع عليكم،  لم يكن لكم يدٌ أن تقاتلونا‍

  யூதர்களின் இந்த கொக்கரிப்பு பரவலாக பரவிய போது முஸ்லிம்களில் சிலர்  நம்மோடு நட்புறவில்  இருந்து கொண்டு நமது வெற்றியில் மகிழ்ச்சியடையாமல் நம்மையே எச்சரிக்கிற யூதர்களின் தயவு இனி நமக்கு எதற்கு என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே எனக்கு யூதர்களில் பல நட்புக் கரங்கள் இருந்தன அவற்றை நாங்கள் உதறி விட்டோம் என்று கூறினர்.

ஆனால் அப்போது நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் எனக்கு அவர்களிடம் நிறைந்த தொடர்பு உண்டு என்னால் அப்படி விலக முடியாது. அதனால் எனக்கு ஆபத்துக்கள் வரலாம் என்று கூறினான். அதற்கு நபியவர்கள் “உன்னை விட சாமாணிய மக்கள் யூதர்கள் வேண்டாம் என்கிற போது வலிமையான தலைவனான உனக்கு அது அவசியமா என்று கேட்டார்கள். வேறு வழியில்லாமல் அவன் ஒப்புக் கொண்டான்.

  قال: جاء عبادة بن الصامت من بني الحارث بن الخزرج، إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن لي موالي من يهود كثيرٌ عدَدُهم، وإني أبرأ إلى الله ورسوله من وَلاية يهود، وأتولَّى الله ورسوله. فقال عبد الله بن أبي: إنّي رجل أخاف الدَّوائر، لا أبرأ من ولاية مواليّ. فقال رسول الله صلى الله عليه وسلم لعبد الله ابن أبيّ: يا أبا الحباب، ما بخلتَ به من ولاية يهود على عبادة بن الصامت فهو إليك دونه؟ قال: قد قبلتُ. فأنـزل الله" يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضُهم أولياء بعض " إلى قوله: فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ .

 யூத கிருத்துவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சி தொடர்பு வைக்கீற  உணர்வை வஞ்சக் இயல்பு என்று அல்லாஹ் வர்ணிப்பதை எப்போதுமே முஸ்லிம் உலகம் நினைவில் கொள்ள வேண்டும்.

 எவ்வளவுதான் ஆச்சரியப்பட்த் தகுந்த அம்சங்கள் இருந்தாலும் கூட அவர்களுடனான உறவு ரகசியங்களை அறிந்து கொள்ளும் அளவில் இருக்க கூடாது என்று இந்த வசனம் எச்சரிப்பதாக முபஸ்ஸிர்கள் கூறூவார்கள்.

 தப்ஸீர் இப்னு கஸீரில் ஒரு நிகழ்வு இடம் பெற்றுள்ளாது.

 உமர் ரலி அவர்கள் அபூமூஸா அல் அஷ் அரீ அவர்களை பஸராவின் ஆளுநராக நியமித்திருந்டார்கள். அவர் ஒரு முறை ஒரு கணக்கு புத்தகத்தை உமர் ரலி யிடம் காட்டினார். மிக சிறப்பாக இருக்கிறது என்று அவரை பாராட்டிய உமர் ரலி அவரக்ள் எனக்கு சிரியாவிலிருந்த் ஒரு கடிதம் வந்திருக்கிறது வாருங்கள் அதை பள்ளிவாசலுக்குள் வந்து அதை படித்துக் காட்டுங்கள் என்று கூறினார். இல்லை நான் அவரை பள்ளிக்குள் அழைத்து வர முடியாது என்றார் அபூ மூஸா . ஏன் அவர் ஜுனுபாளியா என்று கேட்டார் உமர் ரலி. இல்லை அவர் ஒரு கிருத்துவர் என்றார் அபூ மூஸா – இரகசியங்களை அறிந்து கொள்ளும் அந்த பொறுப்புக்கு அப்படி ஒருவரை நியமித்தற்காக அவரது தொடையில் அடித்து அவரை கடிந்து கொண்டார். உமர் ரலி அவர்கள்.

 أن عمر أمر أبا موسى الأشعري أن يرفع إليه ما أخذ وما أعطى ، وكان له كاتب نصراني ، فرفع إليه ذلك ، فعجب عمر [ رضي الله عنه ] وقال : إن هذا لحفيظ ، هل أنت قارئ لنا كتابا في المسجد جاء من الشام؟ فقال : إنه لا يستطيع [ أن يدخل المسجد ] فقال عمر : أجنب هو؟ قال : لا بل نصراني . قال : فانتهرني وضرب فخذي ، ثم قال : أخرجوه ، ثم قرأ( يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء [ بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين

 யூத கிருத்துவர்களுடனான அரசியல் தொடர்புக்கு குர் ஆன் இவ்வளவு எச்சரிக்கையான அளவு கோல்களை கொடுத்திருக்கீற போது அனைத்து எல்லைகளையும் கடந்து அவர்களை நெருக்கமாக்கி கொண்ட்தன் விளைவை இப்போது கத்தார் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இனியாவது அரபு நாடுகள் உஷாராக வேண்டும்.

 முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைய  வேண்டும்.

 அல் மாயிதா அத்தியாயத்தின் அடுத்த வசனம் மிக எதார்த்தமாக மற்றொரு செய்தியை கூறுகிறது.

 அவர்களுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள். நீங்கள் வீண் போவீர்கள் !

 இப்போது அமெரிக்க அதிபர் தான் கத்தாருடன் இருப்பதாக கூறுகிறார். இஸ்ரேலின் தாக்குதலைப் பற்றி தனக்கு தெரியாது என்கிறார்.

மிக சாதாரண பதில் இது . கத்தார் அமெரிக்க இராணுவத்திற்காக ஆண்டு தோறும் வழங்கும் கட்டணம் மிக அதிகம், இதற்கான முழு உத்தரவாதம் தருகிற பொறுப்பும் அவருக்கு உண்டு. அதற்கு மேல் ஹமாஸுடனான பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த்தே அமெரிக்கா தான் .

இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டு அவர் கொதித்து எழுந்திருக்க் வேண்டும். உலகத்திற்கு ஒரு பெரிய நாட்டின் தலைவராக உருப்படியாக இஸ்ரேலுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இனி கத்தரில் இது போல நடக்காது என்கிறார் என்றால்

இஸ்ரேலின் மூலம் அவர் கத்தாரையும் அது போல மற்ற அரபு மற்றும் மூஸ்லிம் நாடுகளையும் எச்சரிக்கிறார் என்றே பொருளாகும். இதை அரபுகள் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களுடை திட்டங்களும் தந்திரங்களும் வீணாணவையே

திருக்குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தருகிற எச்சரிக்கை இது.  

   وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ    (53

 பத்று யுத்தம் நடந்த போது சைத்தான் சுராக்கா பின் மாலிக்கின் தோற்றத்தில் வந்து மக்காவின் காபிர்களுக்கு நான் உங்களுடன் இருக்கிறேன் என்று ஊக்கமளித்தான்.  ஆனால் ஜிப்ரயீல் அலை அவர்களை கண்டவுடன் ஓடிப்போனான்.

 فعَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : جَاءَ إِبْلِيسُ يَوْمَ بَدْرٍ فِي جُنْدٍ مِنَ الشَّيَاطِينِ مَعَهُ رَأَيْتُهُ فِي صُورَةِ رَجُلٍ مِنْ بَنِي مُدْلِجٍ فِي صُورَةِ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ ، فَقَالَ الشَّيْطَانُ لِلْمُشْرِكِينَ : لاَ غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ ، فَلَمَّا اصْطَفَّ النَّاسُ ، أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْضَةً مِنَ التُّرَابِ ، فَرَمَى بِهَا فِي وُجُوهِ الْمُشْرِكِينَ ، فَوَلَّوْا مُدْبِرِينَ . وَأَقْبَلَ جِبْرِيلُ إِلَى إِبْلِيسَ ، فَلَمَّا رَآهُ ، وَكَانَتْ يَدُهُ فِي يَدِ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ ، انْتَزَعَ إِبْلِيسُ يَدَهُ ، فَوَلَّى مُدْبِرًا هُوَ وَشِيعَتُهُ ، فَقَالَ الرَّجُلُ : يَا سُرَاقَةُ تَزْعُمُ أَنَّكَ لَنَا جَارٌ ؟ قَالَ : (إِنِّي أَرَى مَا لاَ تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ) وَذَلِكَ حِينَ رَأَى الْمَلاَئِكَةَ .

رواه الطبري 

இது பற்றி குர் ஆன் கூறுகிறது.

وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ) الأنفال/48 

 தப்பான நம்பிக்கைகள் ஆபத்தானவை. அழிவுக்கு கொண்டு செல்லக் கூடியவை என்ற அற்புதமான வழிகாட்டுதலை திருக்குர் தருகிற போது முஸ்லிம்கள்  இதை கவனிக்காமல் இருப்பது எத்தகைய அறியாமை ?

 உலக வல்லரசுகளை கதி கலங்க செய்த முஸ்லிம் படைகளின் வரலற்றை அரபுகள் மீண்டும் நினைவு படுத்திப் பார்க்க் வேண்டும் .

இஸ்லாம் வெற்றி பெற தொடங்கிய காலத்திலேயே  அதன் வெளிப்பாடு சக்தி மிக்கதாக இருந்தது.

அது அலாஹ்வின் பொதுவான  ஏற்பாடு.

திருக்குர் ஆன் ஒரு பழைய வரலாற்றை கூறுகிறது.

 قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ (115قَالَ أَلْقُوا ۖ فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ

 ஏன் மூஸா அலை முதலில் தனது தடியை போட வில்லை.

நீங்க முதலில் போடுங்க என்பது அச்சத்தின் அடையாளம் அல்லவா?

இல்லை. அல்லாஹ் முஃஜிஸா வெளிப்படும் போதே அது வெற்றி பெற வேண்டும். தாமதம் கூடாது என்று நினைத்தான். அதனாலேயே மூஸா கடைசியாக தனது தடியை போட்டார்.

இதுவே அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் நிகழும் உத்தி.

வெளிப்படும் போது சக்தி யோடு வெளிப்படுது.

இஸ்லாம் அப்படித்தான் வெளிப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்கள் பாரசீக மன்னருக்கு கடிதம் எழுதிய போது அது அவ்வளவு அரசியல் ரீதியாக செல்வாக்கானதாக இருக்க வாய்ப்பில்லை.

பாரசீக மன்ன்ன்.  ايكتب إلي عبدي

எனது அடிமை ஒருவர் எனக்கு கடிதம் எழுதுவதா என்று கொக்கரித்தான்.

பெருமானார் (ஸல்) கடிதம் அனுப்பியது ஹிஜ்ரீ 7ல்

ஹிஜ்ரீ 15 வருடம் ஷஃபான் மாதம் உமர் ரலி காலத்தில் காதிஸீய்யா யுத்தம் நடைபெற்றது. அதில் தளபதி ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் பாரசீகத்தை வென்றெடுத்தார்கள்.

7 வருடங்களில் இந்த மாற்றம் நடந்த்து.

ஒரு வல்லரசை புதிதாக அமைந்த ஒரு சிற்றரசு வெற்றி கொண்டது.

பாரசீக மன்னன் யஜ்தஜ்ரித் எப்படி கொல்லப்பட்டான் என்பதை வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் – அல்பிதாயா வன் னிஹாயாவில் இவ்வாறு தலைப்பிட்டு கூறுகிறார்

كيفية قتل كسرى ملك الفرس وهو يزدجرد"

 

முஸ்லிம்களிடம் தோற்றுப் போன கிஸ்ரா என்ற யஜ்தஜ்ரித் தனது தலையில் சூடிய மகுடத்தோடும், ஆபரணங்களோடும் ஆயுத்த்தோடும் நடந்து சென்று ஒரு குடிசையை அடைந்தான் . அங்கு திருகையில் மாவு தள்ளிக் கொண்டிருந்த ஒருவன் மன்னரை அருகே அமர வைத்து அவன் அசந்திருக்கும் போது அவனது உடமைகளுக்காக அவனை கொன்றான்.

 ال ابن إسحاق: هرب يزدجرد من كرمان فى جماعة يسيرة إلى مرو، فسأل من بعض أهلها مالا فمنعوه وخافوه على أنفسهم، فبعثوا إلى الترك يستفزونهم عليه، فأتوه فقتلوا أصحابه وهرب هو حتى أتى منزل رجل ينقر الأرحية على شط، فأوى إليه ليلا، فلما نام قتله.

  وقال المدائني: لما هرب بعد قتل أصحابه انطلق ماشيا عليه تاجه ومنطقته وسيفه، فانتهى إلى منزل هذا الرجل الذى ينقر على الأرحية، فجلس عنده فاستغفله وقتله وأخذ ما كان عليه،

 420 ஆண்டு காலம் நிலைத்திருந்த பாரசீக வல்லரசின் தலைவன் முஸ்லிம்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாத போது அவனுக்கு கிடைத்த தண்டனை இது.

 திருக்குர் ஆனிலும் மிக செழிப்பான கடந்த கால இஸ்லாமிய வரலாற்றிலும்  இன்றைய அரபுகளுக்கு அருமையான பாடங்கள் இருக்கிறது.

வரலாற்றில் அரபுகள் வலிமையாக இல்லாத காலத்தில் அரபுகள் அல்லாத ஆட்சியாளர்கள் இஸ்லாமின் எதிரிகளை சிதறடித்து இருக்கிறார்கள்

 முஹம்மது அல் பத்திஹ் நூருத்தீன் ஜன்கீ, சலாஹுத்தீன் அய்யூபி போன்ற அரபு பாரம்பரியத்தை சாராத தலைவர்கள் தாங்கி வளர்த்த வரலாறு தான் பிற்கால இஸ்லாமிய அரசியல் வரலாறு.அரபுகள் தாங்கள் அரபுகள் என்ற எண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கை விட்டு விட்டு, இன்றூ சர்வதேச அளவில் இஸ்ரேல் எனும் தீய சக்தியையும் அதற்கு முழு ஒத்துழைப்பாக இருக்கிற அமெரிக்காவையும் எதிர்ப்பதில் வலுவாக இருக்கிற துருக்கி மலேசியா போன்ற மற்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்து செயலாற்ற சிந்திக்க வேண்டும்.

 

அப்போது நிச்சயம் மாற்றாம் ஏற்படும் \

 

திருக்குர் ஆனின் மாயிதா அத்தியாயத்தின் அடுத்த வசனங்கள் பேசுகின்றன.

 

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ (55وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ (56)  

 

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிற இஸ்ரேலின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டுவானாக!

 

அதை நட்த்துவதற்கேற்ற ஒரு தலைமையை முஸ்லிம் உம்மத்திற்கு அடையாளம் காட்டுவானாக

 

பாலஸ்தீனம் எனும் பழைமிக்க நாடு புதுப் பொலிவோடு எழுச்சியுற அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

2 comments:

  1. மாஷா அருமை சூப்பர் பாரகல்லாஹ்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete