الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191)
இது ரபீஉல் ஆகிர் மாதம்
இறைநேசர்கள் நினைவு கூறப்படுகிற மாதம்.
இறை நேசர்கள் என்றால் இந்த உலகில் அல்லாஹ்வை மட்டுமே நேசிப்பதில் கறைகண்டு வாழ்ந்தவர்கள் என்பது பொருளாகும்.
அல்லாஹ் மட்டுமே என்பது ஏகத்துவம்
ஆகும். அதில் கறைகண்டு என்பது சூபித்துவம் ஆகும்.
எனவே இஸ்லாமிய ஏகத்துவத்தை நிலை நாட்டுவதிலும் அதில் ஈடுபாடு கொண்டதிலும் இறைநேசர்களின் பங்கு மகத்தானதாகும்.
வீட்டை சுத்தம் செய்வது போல அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றின் நினைவுகளிலிருந்து இதயத்தை சுத்தமாக்கி வைத்துக் கொள்வார்கள்.
ஹகீம் அத்திர்மிதி ஹிஜ்ரீ 3 ம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர் மிகச் சிறந்த ஆன்மீக வாதி
.
لحكيم الترمذي باحث صوفي وعالم بالحديث وأصول الدين من كبار مشايخ خراسان ومن أبرز الشخصيات الصوفية التي كانت في القرن الثالث الهجري
அவரது மனைவியும் அவரை போலவே ஆழ்ந்த பக்தி மிக்கவர். அவருடைய கனவில் ஹிழ்ரு அலை அவர்கள் தோன்றி உனது கனவரிடம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல் என்று சொன்னார். அந்த அம்மையார் தனது கணவரிடம் இதை பற்றி சொன்ன போது அவர் விளக்கம் அளித்தார். நான் சிலரை பற்றி தேவையற்ற செய்திகளை பேசியிருக்கிறேன். அதை தவிர்க்குமாறு எனக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்று சொன்னார்,
தமது தனிப்பட்ட சக்திகளை கூட அல்லாஹ்விற்காக அன்றி எத்தைகைய செல்வாக்கிற்காகவும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
பாயஜீத் அல் பிஸ்தாமி ஹிஜ்ரீ 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநேசர், ஈரானை பூர்வீகமாக கொண்டவர். கராமத் எனும் அற்புதங்களின் சொந்தக் காரர். ஒரு முறை ஒரு மாவு மூட்டையை தூக்கி செல்ல வேண்டியிருந்தது. கழுதைகள் எதுவும் கிடைக்கவில்லை. அங்கு வந்த சிங்கத்தின் முதுகில் அவர் மாவு மூட்டையை ஏற்றி கொண்டு வந்தார். இதை கண்ட் ஒரு மூதாட்டி நீ ஒரு பொறூப்பற்ற சர்வாதிகாரி என்று குற்றம் கூறினார். உனது மதிப்பை காட்டிக் கொள்ள சிங்கத்தின் மதிப்பை கெடுப்பதா என்று கேள்வி எழுப்பினார்.
அந்த பெண்மணியை தனது சிறந்த ஆசிரியையாக பாயஜீது பிஸ்தாமி காலமெல்லாம் போற்றினார்.
மாளிகைகளில் வாழ்ந்த போதும் அல்லாஹ்வின் நினைவில் அதன் சுகங்களை துறந்து விட்டவர்கள் வலிமார்கள்
ஷாஜ்ஹானின் மூத்த மகள் ஜஹானரா பேகம் அரச் மாளிகையில் வாழ்ந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமலே இறைவனில் லயித்தவர் ஆவார்.
இப்போதுள்ள புகழ் பெற்ற ஆக்ரா கோட்டையில் ஜஹானாரா பேகத்தின் மாளிகைப் பகுதி இருக்கிறது. அதன் கம்பீரத்தையும் வசீகரத்தையும் காண்பவர்கள் வியப்படையாமல் இருக்க முடியாது. அவர் அறிவாளி, கவிஞர், சிறந்த நிர்வாகி, தந்தையை போலவே கட்டிட்த்துறையில் அனுபவம் மிக்கவர். இப்போது தில்லியிலிருக்கிற பிரபல வணிகப்பகுதியான சாந்தினி செளக் அவர் திட்டமிட்டு உருவாக்கியது.
இப்படி ஒரு பெருமையோடு அரச ஒரு மாளிகையில் வாழ்ந்த போதும் அல்லாஹ்வின் நினைவில் திளைத்தவராக இருந்தார் ஜஹானரா பேகம். அவுரங்கசீப்பின் காலத்தில் அவருக்கு நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்திக் கொள்ள வில்லை.
தூக்கம் மனித சமூகத்திற்கு அத்தியாவசியமானது ஆனாக் அந்த தூக்கம் கூட இறைநேசர்களை அல்லாஹ்விடமிருந்து பிரித்து விடவில்லை.
ஒரு இறைநேசர் இரவு நேரத்தில் 600 ரகாத்துகள் தொழுவார். கொஞ்சம் உறங்கலாமே என்று சீடர்கள் கேட்பார்கள். அவர் சொல்வார், இந்த கண்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குழிக்குள் சென்ற பிறகு தூங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. அது தெரிந்தும் இப்போது தூங்க நினைக்கிறது என்று சொல்லி தூக்கத்தை உதறிவிட்டு தொழுகையில் ஈடுபடுவார்.
தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூட அல்லாஹ்வை நோக்கி திரும்பும் வழிகளாக இறைநேசர்கள் ஆக்கிக் கொள்வார்கள்.
ஒர் இறைநேசர் பாதையில் நடந்து கொண்டிருந்தார். மாடியிலிருந்து கீழே விழுந்த ஒரு ஆள் அவர் மேல் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவரிடம் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் சொன்னார், காரன காரியங்களை அதிகம் நம்பம் கூடாது. கீழே விழுந்தவர் அவர். ஆனால் காயம்பட்டது எனக்கு. இங்கே தீர்வுகளை முடிவு செய்கிறவன் வேறொருவன் இருக்கிறான் என்றார்.
ராணுவமோ ஆயுத பலமோ அல்ல; அல்லாஹ்தான் பெரு வெற்றிகளை தருகிறான் என்பதை உணர்ந்து
நடந்தவர்கள் இறைநேசர்கள்.
முகலாய மன்னர் அவுரங்கசீப்,
போர்க்களத்தில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு யானையின் நிழலில் தொழுது
கொண்டிருந்தார். இதை பார்த்த எதிரிப் படை தளபதி இவரிடம் சண்டையிடுவது சரியல்ல
என்று கூறி சரணடந்து விட்டார். ஆலம்கீர் உலகை கட்டி ஆண்ட அரசர் என்று அவர்
புகழப்பட்டாலும் தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக
பாவித்துக்கொண்டார் என்கிறது விக்கீபீடியா.
40 இலட்சம் சதுர கிலோ மீட்டர்களை ஆட்சி
செய்த ஒரே இந்திய அரசர், சுமார் 19 கோடி மக்களின் அன்றைய தலைவர், இறக்கும் போது
எழுதி வைத்த உயில் ஆச்சரியமானது.
நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு
ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆபேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு
என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
என் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன்
மூலம் கிடைக்கப்பெற்ற முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும்
அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள்.
என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி
அடக்கம் செய்யுங்கள்
என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள்.
இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.
இத்தகைய உணர்வு தான் மனித வாழ்வின்
உயர்வும் உன்னதமும் ஆகும்.
இப்போதை அமெரிக்க அதிபரை பாருங்கள்! எவ்வளவு மட்டரகமாக நடந்து கொள்கிறார். 48 பணயக் கைதிகளை விடுவியுங்கள் என்று ஐநா சபையில் அப்பாவித்தனமாக பேசுகிறார். காஸாவில் இஸ்ரேல் பன்னூற்றுக்கணக்கான குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் அன்றாடம் கொன்று குவித்துக் கொண்டிருப்பதை ஆதரித்து நிற்கிறார்.
என்ன கேவலமான
பிளாக்மெயில் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?
கோட்
சூட்ளும் எஸ்கார்ட்டுகளிலும் அல்ல மனிதனின் மவுசு. அல்லாஹ்வை அறிந்து அதன்படி
நடப்பதிலேயே மனிதனின் சிறப்பு இருக்கிறது.
புத்திசாலிகள் (உலுல் அல்பாப்) யார் என்பதற்கு திருக்குர் ஆன் கூறும் விளக்கம்
இது.
لَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ
جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا
خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191
இறை நேசர்கள் இந்த புத்திசாலித்தனத்தின்
உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் அவரவரவது நிலையிலிருந்து
இறைவனை நேசிக்க முடியும்
இறைவனை நேசிப்பதற்கு காட்டுக்கு போக
வேண்டிய அவசியம் இல்லை
கல்யணம் செய்வதை தவிர்க்க வேண்டியதில்லை.
பொருளாதாரத்தை திரட்டுவதை நிறுத்த வேண்டியதில்லை.
அரசியல் அதிகாரம் செய்வதை விட்டு விலக
வேண்டியதில்லை.
இஸ்லாமின் நான்கு கலீபாக்களும் மிக
உன்னதமான இறைநேசர்களாக இருந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில்
இருந்தார்கள்.
அபூபக்கர் ரலி அப்பாவியாக இருந்தார்.
உமர் ரலி பெரும் வீர்ராக இருந்தார்.
உஸ்மான் ரலி பெரும் செல்வந்தராக இருந்தார்.
அலீ ரலி - صفر اليدين என்று சொல்லப்படுகிற அளவுக்கு ஏழையாக இருந்தார்.
முஸ்லிம்களுக்கான மிகப்பெரும் பாடம்
இது.
நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம்.
அறிஞராக பாமரனாக முதலாளியாக தொழிலாளியாக எப்படி இருக்கிற நிலையிலும் இறைவனின் மீது
நேசத்தை வைத்துக் கொள்வது சாத்தியமானது.
வியாபாரிகளுக்கு அதற்கான வழியை நபி
(ஸல்) அவர்கள் மிக எதார்த்தமாக கற்றுக் கொடுக்கிறார்கள்.
التاجرُ الصَّدُوقُ الأمينُ : مع النَّبِيِّينَ،
والصِّدِّيقِينَ، والشهداءِ، والصالحينَ
الراوي : أبو سعيد
الخدري- الترمذي
குடும்பஸ்தனுக்கு
அதற்கான வழியை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்
அல்லாஹ்வின்
வார்த்தைக்கு கட்டுப்பட்டு குடும்பத்தின் உயர்வுக்கு உழைக்கிறேன் என்று நினைப்பவர்
முஜாஹித்.
مر على النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ رجلٌ فرأى أصحابُ النبيِّ
صلَّى اللهُ عليهِ وسلَّمَ من جلَدِه ونشاطِه فقالوا: يا رسولَ اللهِ لو كان هذا
في سبيلِ اللهِ؟! فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ: إنْ كان خرج يسعى
على ولدِه صغارًا فهو في سبيلِ اللهِ وإن كان خرج يسعى على أبوين شيخين كبيرين فهو
في سبيلِ اللهِ وإنْ كان خرج يسعى على نفسِه يعفُّها فهو في سبيلِ اللهِ وإنْ كان
خرج يسعى رياءً ومفاخرةً فهو في سبيلِ الشيطانِ
عن عبدالله بن عمرو رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: رضى الرب في رضى الوالد وسخط الرب في سخط
الوالد
மனைவியர்களுக்கு அதற்கான வழியை கற்றுக் கொடுத்தார்கள்.
அந்த நேசத்தை இன்னும் ஒரு படி உயர்த்திக்
கொள்வதற்கும் சில வழிகள் உண்டு,
அபூ உஸ்மான் அல் ஹீரீ எனும் ஹிஜ்ரீ 3 ம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநேசர்
கூறுகிறார்.
அல்லாஹ்வுடனான நட்புக்கு மூன்று வழிகள் இருக்கின்றன.
1. நல்லொழுக்கம்
2. நிலையான அச்சம்
3. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்ற உணர்வு
இவைகளுடன் நபிலான வணக்கங்களில் ஈடுபாடுகாட்டுவதும் கூடுமானவரை திக்ரு தஸ்பீஹ்களில்
ஈடுபடுவதும் இதில் சில படிநிலைகள் உயர்ந்து செல்லும் வழிகளாகும்.
நபில் வணக்கங்கள்
إنَّ اللَّهَ قالَ: مَن عادَى لي وَلِيًّا فقَدْ آذَنْتُهُ بالحَرْبِ،
وما تَقَرَّبَ إلَيَّ عَبْدِي بشَيءٍ أحَبَّ إلَيَّ ممَّا افْتَرَضْتُ عليه، وما
يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حتَّى أُحِبَّهُ، فإذا
أحْبَبْتُهُ، كُنْتُ سَمْعَهُ الَّذي يَسْمَعُ به، وبَصَرَهُ الَّذي يُبْصِرُ به،
ويَدَهُ الَّتي يَبْطِشُ بها، ورِجْلَهُ الَّتي يَمْشِي بها، وإنْ سَأَلَنِي
لَأُعْطِيَنَّهُ، ولَئِنِ اسْتَعاذَنِي لَأُعِيذَنَّهُ، وما تَرَدَّدْتُ عن شَيءٍ
أنا فاعِلُهُ تَرَدُّدِي عن نَفْسِ المُؤْمِنِ؛ يَكْرَهُ المَوْتَ، وأنا أكْرَهُ
مَساءَتَهُ.
திக்ரு
பெருமானார் (ஸல்) அவர்களின் தோழர்களில் முஆத் ரலி அவர்கள் எப்போதும் நிர்வாக
காரியங்களில் பிஸியாக் இருப்பவர். எங்காவது ஒரு பிரச்சனை என்றால் பெருமானார் (ஸ்ல்)
அவரை தான் அனுப்பி வைப்பார்கள். அவருக்கு மற்றவர்களை போல பெருமானாருடன் இருக்க வேண்டும்
என்ற ஆசை இருக்கும். ஆனாலும் பெருமானாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சென்றுவிடுவார்.
நிறைவாக அவரை பெருமானார் (ஸல்) அவர்கள் எமன் நாட்டின் ஆளுநராக நியமித்து அனுப்புகிறார்கள்.
நிர்வாக உத்தரவுகளுக்கு இடையே முஅத் ரலி அவர்கள் அல்லாஹ்வை நெருங்கும் வழியை பெருமானாரிடம்
கேட்கிறார்கள் .அதற்கு பெருமானார் உனது நாவு திக்ரில் நனைந்ததாக இருக்கட்டும் என்று
பதிலளித்தார்கள்.
حديث معاذ بن
جبل ، قال
: آخر ما فارقت عليه رسول الله - صلى الله عليه وسلم - أن قلت له : أي
الأعمال خير وأقرب إلى الله ؟ قال : أن تموت ولسانك رطب من ذكر الله عز وجل .
நாவின் திக்ரு கல்பின் திக்ரு சேர்ந்து கொள்ளுமாயின் அல்லாஹ்வை நேசிக்கிறோம்
என்பதற்கு சிறந்த அடையாளம் அது.
இறைநேசர்கள் பரிசுத்தமாக அல்லாஹ்வை நேசித்தவர்கள். அல்லாஹ் அவர்களை நேசிக்கிறான்.
அவர்களது அந்தஸ்தை உயர்த்துகிறான்.
இறைநேசர்கள் நெருங்குகிறவர்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக மாறுகிறார்கள்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களுக்கு கெள்ஸ் என்ற பட்டப்பெயர்
இருக்கிறது.
கெள்ஸ் என்ற இறைநேசத்தின் தரம் எத்தகையது எனில்
அவரை நெருங்குகிறவரை அவரால் இறைவனின் நேசராக ஆக்க முடியும்.
இறைநேசர்களை நெருங்குபவர்கள் எப்போதும் நன்மையையே அடைவார்கள்.
இறைநேசர்கள் தம்மை
நாடி வருபவர்களை தமது பெருமைக்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
வருகிறவர்களின் நன்மையை சிந்திப்பார்கள்
வேலூர்
அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் (ரஹ்)
அவர்களை ஒரு செல்வந்தர் சந்தித்தார். அன்னாருக்கு அன்பளிப்பாக 500 ரூபாய்
கொடுத்தார். அன்றைய மதிப்பில் அதன் மரியாதை மிக பெரியது. அஃலா ஹழ்ரத் கூறினார்.
நீங்கள் இதை எனக்கு கொடுத்தால் நன் மட்டும் துஆ செய்வேன். இதை மதரஸா மாணவர்களுக்கு
கொடுப்பீர்கள் எனில் அவர்கள் அனைவருடைய துஆ வும் கிடைக்கும் என்றார்கள். பிறகு
அந்த பணத்திற்கு மதரஸாவின் ரசீது வழங்கப்பட்டது.
இறைநேசர்களை மதித்தும் நெருங்கியும்
போற்றியும் வாழ்வோம்.
அல்லாஹ்
நாமிருக்கிற நிலையில் நமக்கு இறைநேசத்தை
தந்தருள்வானாக!
முராகபா
ReplyDeleteநமக்கும் அல்லாஹ்
கௌஸாகும் பாக்கியத்தை தருவானாக
ஆமீன்... இமாம் தக்கோலம்