أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62
இன்று
மிக மட்டரகமான அரசியல் சதி வலையில் முஸ்லிம் உலகு சிக்கியிருக்கிறது.
காஸா
நகரின் மீது இஸ்ரேல் நடத்தி வருகிற படுபயங்கரமான தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலும் பலத்த கண்டனங்கள் வெளிப்பட்டு வருகின்றன.
இதுவரை
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக ஏற்காத ஐரோப்பிய நாடுகள் கூட ஒன்றன்பின் ஒன்றாக பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகின்றன.
கடந்த வாரத்தில் செப்டம்பர் 22 ம்
தேதி பிரான்ஸ் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த்து..
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்
சபையின் 80 வது பொதுக்குழு
கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் திங்களன்று I
declared that today the France recognise the State of Palestine என்று அறிவித்த போது
அரங்கம் அதிர்ந்தது.
21 ம் தேதி ஞாயிரன்று
ஆஸ்திரேலிய பிரதமர், ஆண்டனி அல்பானஸ்
தனது நாடு பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கூறியுள்ளார்.
இதே நாளில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட
வீடியோவில் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள நெருக்கடிகளை கணக்கில் எடுத்து தங்களது
நாடு பாலஸ்தீன தனி நாடு திட்டத்தை அங்கீகரிப்பதாக கூறியுள்ளார்.
முந்தய வரலாறு
1988 ல் யாசர் அரபாத் பாலஸ்தீனை ஒரு நாடாகாவும் கிழக்கு
ஜெரூசலத்தை அதன் தலைநகராகவும் அறிவித்த போது அதை முதன் முதலில் அல்ஜீரியா அங்கீகரித்தது.
ஒரு வாரத்திற்குள் 80 க்கும் அதிகமான
நாடுகள் பாலஸ்தீனை அங்கீகரித்தன.
2010 ல் இந்த எண்ணிக்கை 130
தாக உயர்ந்தது.
2011ல் பாலஸ்தீன் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு
உறுப்பினராக சேர முயற்சித்தது அப்போது அது தோல்வியடைந்தது. அமெரிக்கா மட்டுமே தன்னுடைய வீட்டோ அந்தஸ்த்தை பயன்படுத்தி அதை
தோல்வியடையச் செய்தது.
எனினும் 2012 ல் உறுப்பு
நாடு அல்லாத பார்வையாளர் அந்தஸ்து
பாலஸ்தீனிற்கு வழங்கப்பட்டது. அப்போது ஐநா சபை தலைமை அலுவலகத்தில் பாலஸ்தீன கொடி
ஏற்றப்பட்டது
2023 ல் இஸ்ரேல் காஸாவின் மீது போர் தொடுத்த போது
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒரு புதிய அலை உருவானது. அதன் பிறகு நார்வே, அயர்லாந்து மெக்ஸிகோ,
ஸ்பெயின், ஆர்மீனியா, உள்ளிட்ட 10
நாடுகள் பாலஸ்தீன தனி நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தன. கொஞ்சம் கொஞ்சமாக
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 146
ஆக உயர்ந்தது..
ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு சர்வதேச சமுதாயம் 4
அளவுகோல்களை வைத்திருக்கிறது.
1. அந்த நாட்டிற்கு நிரந்தர குடிமக்கள் இருக்க வேண்டும்
2. அந்த நாட்டிற்கு சொந்த நிலம்
இருக்க வேண்டும்
3. அந்த நாட்டிற்கு ஒரு
அரசு
4. அந்த நாட்டிற்கு வெளிநாடுகளுடன்
உறவு இருக்க
வேண்டும்.
பாலஸ்தீன் நாட்டிடம் இந்த தகுதிகள் முழுமையாக இர்ல்லை.
ஏனெனில் ஏனெனில் அது முழுக்க இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருக்கிறது.
அந்நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் சட்ட விரோத குடியேற்றங்களை
ஏரளாமாக ஏற்படுத்தி வருகிறது. அதன் வெளியுறவு கோட்பாடு
வெறும் கவுரவம் சார்ந்ததாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை
கூட்டத்தில் பாலஸ்தீனின் சார்பில் கலந்து கொள்வதற்கு பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத்
அப்பாஸுக்கு அமெரிக்கா விசா வழங்கவில்லை.
நிலைமை இப்படி இருந்தாலும் பாலஸ்தீன மக்கள்
தங்களது நீண்ட தியாகம அர்ப்பணிப்பு போராட்டங்கள் மூலமாக பாலஸ்தீனத்திற்கான
அங்கீகாரத்தை ஓரளவில் பெற்று வந்தனர்.
காஸாவின் மீது கடந்த இரண்டு வருடங்களாக இஸ்ரேல் நடத்தி
வருகிற மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலும், காஸாவில்
நிலவுகிற பட்டினிச் சாவுகளின் நிலவரமும், இஸ்ரேல் காஸாவை
மட்டுமல்லாது லெபனான், சிரியா, எமன்
கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் மீது தொடர்ந்து பயங்கரவாத வாத தாக்குதல்களை நட்த்தி
வருவதும் உலக மக்களின் இதயத்தை உலுக்கியது. அதன் பயனாக
காஸாவை பாதுகாப்பது என்பதை தாண்டி தனி சுதந்திர பாலஸ்தீனத்தை பிரகடனப்படுத்துவது
இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து பாலஸ்தீனத்தை விடுவிப்பது என்பதை நோக்கி உலக நாடுகளை
நிர்பந்தப்படுத்தியிருந்த்து.
நிலமை இவ்வாறு மாறிவருவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கிற நாடுகளை இஸ்ரேலும் அமெரிக்காவும்
சேர்ந்து மிரட்டாத குறையாக அச்சுறுத்தி வந்தன.
உலக சமுதாயம் இதை பொருட்படுத்தவில்லை. காஸா மக்களை இனியும்
வேண்டுமென்றே இஸ்ரேல் தொடர்ந்து பட்டினி போடுவது, இனியும் நாம் பார்த்துக்
கொண்டிருக்க முடியாது என ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருக்கிற சமூக
செயல்பாட்டாளர்கள் சுயமாக முடிவுக்கு வந்தார்கள். அரசுகளை இனி எதிர்பார்த்துக்
கொண்டிருப்பதில் பயனில்லை. நமது கண்ணுக்கு எதிரிலியே ஆயிரக்கணக்கான மக்க்ள்
பசியால் துடி துடித்து இறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அது ஒரு போதும்
மனிதாபிமானம் ஆகாது என்று முடிவு செய்து
இஸ்ரேலின் மிரட்டலை பொருட்படுத்தாமல் காஸா மக்களுக்கு உதவ
கடல் வழியாக பல ஐரோப்பிய நாட்டு பொதுமக்கள் படகுகளிலும் சிறிய கப்பல்களிலும்
நிவாரணப் பொருட்களுடன் இஸ்ரேலின் பாதுகாப்பை மீறி காஸாவுக்கு நேரே செல்ல
துணிச்சலாக முயன்று சென்று கொண்டிருக்கின்றனர்.
த குளேபல் ஸமிட் புளோட்டில்லா The Global Sumud Flotilla என்ற ஒரு படகுகளின் குழு காஸா வி நூக்கி சென்று கொண்டிருக்கிறத.
44 நாடுகளை சாரந் 50 க்கும் மேற்பட்ட கப்பல்களில் ஆயிரக்கணக்கானோர் – இநத படகுகளில் சென்றுகொண்டிருக்கிறக்கின்றனர,
உலக வரலாற்றில் மிகப்பெரிய கப்பல் அணிவகுப்பு இது. .
கால நிலை ஆர்வலர் கிரட்டா துன்பத், ஐரிஸ் நடிகர் நியாம் கன்னிகாம் நெல்சன் மண்டேலா உடைய பேரன் கோஸி ஸ்ரெலி வேலி
மண்டேலா
பிரான்ஸ் எம்பிக்கள் மேரி மெஸ்பியன் ரிமா ஹசன் – ஆகியோருடன் சாமானிய மக்கள் அல்லா மருத்துவர்கள் வழக்கறிஞர்கள்
கல்வியாளர்கள் இதில் பயணப்படுகின்றனர்.
சில நாடுகளின் இதில் கடற்படையினரும் உண்டும்
உலகின் மிகப்பெரிய சமூக ஆர்வலர்களின் படை என இது
வர்ணிக்கப்படுகிறது.
இ ந்த படையினர் ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிணைந்து ஜெனோவோ,
பார்சீலோனா, துனீசியா ஆகிய துறைமுகங்களில் இருந்து புறப்பட்டனர். மத்திய தரைக்கடல் பயணித்து காஸா துறைமுகத்தை
அடைந்து விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள் தண்னீர் உள்ளிட்ட
அத்தியாவசியப் பொருட்களை தங்களால் இயன்ற அளவு ஏற்றிக் கொண்டு அவர்கள்
பயணப்பட்டுள்ளனர்.
இந்த கப்பல்களில் இரண்டு கப்பல்கள் டிரோன் தாக்குதலுக்கு
ஆளானது. இதை இஸ்ரேல் தான் செய்துள்ளது என்பது வெளிப்படை. ஆனாலும் இஸ்ரேல் அதற்கு
பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி துனிசியா விசாரனை நட்த்திவருகிறது.
இந்த கப்பல் அணியினர் நேற்று காஸா பகுதியை நெருங்கியதும்
எதிர்பார்த்தது போலவே அதிலிருந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து தனது
நிலப்பரப்பிற்கு கொண்டு சென்றுள்ளது.
அது போல அவர்கள் கொண்டு வந்த பொருட்களை பறிமுதல்
செய்துள்ளது.
இதையும் மீறி ஓரிரு கப்பல்கள் இஸ்ரேலின் கண்ணில் மண்ணைத்
தூவி காஸாவிற்குள் நுழைந்துள்ளன,
இப்போதும் பல கப்பல்கள் காஸாயவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன
இந்த நிகழ்வு சாமாணியமானதல்ல.
உலகின் கண்ணெதிரே, இஸ்ரேல் அமெரிக்கா என்ற இரண்டு ராட்சத
அரசுகள் கணக்கில்லாத குண்டுகளை வீசி மக்களின் வாழ்விடங்களை அழித்து, அவர்களுக்கு
தண்ணீர் மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்கள் ஒன்று கூட கிடைக்க விடாமல் அவர்களை
பட்டிணி போட்டு கொன்றொழித்து அவர்களின் சொந்த நிலத்திலிருந்து அவர்களை வெளியேற்றி
விடலாம் என்று நினைக்கிற மாபெரிய பாதகத்தை – நவீன பிர்அவ்னிய கொடுங்கோன்மையை ஒன்றிணைந்து நடத்துகிற அட்டூழியத்தை கண்டு பண
பலம் மிக்க அரபு நாடுகள் வெறும் பேச்சுவார்த்தையில் இருக்கிற போது சாமாணிய மக்கள் ஒன்றிணைந்து
அந்த அக்கிரமத்தை தடுக்க மேற்கொண்டிருக்கிற இந்த முயற்சி உலகின் ஒரு உன்னதமான போராட்டமாகும்.
இந்த கப்பல்களில் செல்வோருக்கு நிச்சயம் இஸ்ரேல் தடுக்கும்
குண்டு மழை பொழியும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரியும். இஸ்ரேல் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுமானால் உணவுப் பொருட்களை நாங்கள் கொடுக்கிறோம் என்று
வாங்கிக் கொள்வார்கள். ஆனால் கொடுக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இது பற்றி உலக அரசுகளுடையவும் மக்களுடையவும்
கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர்கள் தம் உயிரை பணயம் வைத்து பயணம் செய்தார்கள். செய்து
கொண்டிருக்கிறார்கள்.
டிரம்பின் 20 அம்ச திட்டம்
உலகின் ஒட்டு மொத்த கவனமும் காஸாவுக்கு ஆதரவாகவும் தனி
பாலஸ்தீன நாடு உருவாக்கப்படவும் ஒன்று சேர்ந்திருக்கிறது என்பதை இஸ்ரேலும் அதன்
கூட்டாளியான அமெரிக்காவும் தெளிவாக புரிந்து கொண்டன.
இப்போதிருக்கிற நிலையில் இஸ்ரேல் காஸாவின் மீது தொட்ர்ந்து
குண்டுகளை வீசிக் கொண்டிருப்பதும் உணவு பொருட்களின் விநியோகத்தை தடை செய்வதும்
இஸ்ரேல் பாடுபட்டு உருவாக்கியிருக்கிற சர்வதேச அங்கீகாரத்திற்கு பெரும்
அச்சுறுத்தலாகி விடும் என்கிற காரணத்தால் அமெரிக்க அதிபரும் இஸ்ரேலிய பிரதமரும்
சேர்ந்து நேற்றைய முன் தினம் 20 அம்ச போர் நிறுத்த உடன்படிக்கை என்ற ஒன்றை
வெளியிட்டுள்ளனர்.
இது அப்பட்டமாக இஸ்ரேலின் அடாவடியை காக்கும் ஒரு
திட்டமாகும்.
இந்த 20 அம்சங்களில் முதன்மையானதே அபத்தமானதுக்
அக்கிரம்மானதுமாகும்.
காஸாவை பயங்கரவாத செயல்களில்லாத நகராக்குவது என்று இது
தொடங்குகிறது.
இந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய பயங்கர வாதி இஸ்ரேல்
ஆகும்.
காஸாவின் மக்கள் தங்களது இருப்பிற்காக போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள கைதிகளில் ஒருவரை விடுதலை
செய்யும் போது இஸ்ரேல் தான் பிடித்து வைத்துள்ள பத்து இருபது பாலஸ்தீனர்களை இஸ்ரேல்
விடுதலை செய்ததே இஸ்ரேல் அந்த பிராந்தியத்தில் எத்தகைய அக்கிரமத்தை கட்டவிழ்த்து
விட்டுள்ளது என்பதற்கு சாட்சியாகும்.
இந்த உடன்படிக்கை பசப்பு வார்த்தைகளை சொல்லி மக்களை
ஏமாற்றுகிறது. உலகின் முதலீடுகளை ஈர்த்து காஸாவை மறு கட்டமைப்பு செய்வோம் என்று
சொல்கிறது.
இது டிரம்பின் பழைய திட்டமாகும். காஸாவை காலி செய்து
விடுங்கள் அங்கே சிறந்த கடற்கரை இருக்கிறது. அதில் நாங்கள் சிறப்பான கட்டிடங்களை
கட்டி அதை ஒரு சுற்றுலா தளமாக்குவோம் என்று அவர் கொஞ்சமும் இறக்கமில்லாமல் காஸா
மக்களை வெளியேறுமாறு ஏற்கெனவே கூறியிருந்தார். இப்போதை அதையே பசை தடவிய இன்னொரு
வார்த்தையில் கூறியிருக்கிறார்.
காஸாவின் நிர்வாகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டனின்
முன்னாள் அதிபர் டோனி பிளேர் போன்றவர்களின் தலைமையில் அமையும் ஒரு குழு நிர்வாகம்
செய்யும் என்று இந்த திட்டம் கூறுகிறது.
காஸாவை இஸ்ரேலுக்கு திறந்து விடும் உலக மகா அயோக்கியத்தனத்தின்
அடையாளம் இது.
இந்த கொடுமையான திட்டத்தை அரபு நாடுகளும் சில இஸ்லாமிய
நாடுகளும் ஏற்றுக் கொண்டு விட்டன என்று டிரம்ப் கூறிகிறார்.
உலக நாடுகள் இதை ஏற்றுக் கொள்கின்றன என்று பதிரிகை
செய்திகள் கூறுகின்றன.
இது எந்த அளவில் உண்மை என்பது இனி போகப் போகத்தான்
தெரியும்.
இந்த திட்டம் ஹமாஸ் அமைப்பினருக்கு பொது மன்னிப்பு
வழங்கப்படும் என்று கூற்கிறது.
ஹமாஸ் அமைப்பினர் யாருக்கு யார் மன்னிப்பு வழங்குவது என்று
முதல் விளைவை தெரிவித்துள்ளனர். இன்னும் ஹமாஸ் அமைப்பினரின் முழு பதிலும்
வரவில்லை.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
இந்த திட்டம் குறித்து வலுவான நேர்மையான திருத்தம் சொல்லக்
கூடிய ஒரு அரபுக் குரல் கூட வெளிப்பட வில்லை. எந்த ஒரு பெரிய இஸ்லாமிய நாட்டின்
தலைவரும் பாலஸ்தீன் மக்களின் எதார்த்தமான போராட்டக் குரலை முன்னெடுக்கவில்லை. பாலஸ்தீனத்தின்
மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் நட்த்திவருகிற அக்கிரமங்களை பற்றி ஒரு வார்த்தை
பேசவில்லை.
இந்த 20 அம்ச திட்டம் முழுவதும் இஸ்ரேலுக்கு சார்பானது.
முதல் கட்டமாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும்
முனைப்பில் இருக்கிற உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பக் கூடியது.
அடுத்துள்ள பல அம்சங்களும் நீண்ட கால பாலஸ்தீனர்களின் சுய
உரிமை போராட்டத்தை காயடிக்க கூடியது.
இந்த அநீதியான உடன்படிக்கை காஸா மக்களுக்கு இப்போதைக்கு இஸ்ரேலின்
அடாவடித்தனத்திலிருந்து தற்காலிக சுவாசத்தையாவது தரும் என்ற எண்ணத்திலேயே அரபு
நாடுகளும் மற்ற பல நாடுகளும் ஏற்கின்றன.
பாலஸ்தீன் மக்களின் கருத்து இதில் முடமாக்கப் பட்டுள்ளது,
குறைந்த பட்சம் பாலஸ்தீன அதிபர் முஹம்ம்து அப்பாஸ் கூட இதில் இணைக்கப்படவில்லி.
இது குறித்த்து வாய் திறந்து தெளிவாக பேச ஒரு முஸ்லிம் தலை கூட
இல்லை என்பதே இப்போதைக்கு பெரிய சோகமாகும்.
இந்த சூழ்நிலையில் தான் கெள்துல் அஃழம் முஹித்தீன் அப்துல்
காதிர் ஜீலானி அவர்களின் நினைவு நாளை இன்று நாம் அனுசரித்து கொண்டிருக்கிறோம்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தோன்றிய காலத்தில்
இஸ்லாமிய உலகு இன்றைக்கு இருப்பது போல பலவீனப் பட்டிருந்தது.
ஏன் இதை விட மோசமாக இருந்த்து என்று கூட சொல்ல்லாம்
ஏனெனில் மூஸ்லிம்களுக்கு ஒரு கலீபா ஒருந்தார். அப்பாஸீய
கலீபா .
ஆனால் அவர் முஸ்லிம்களின் நிலப்பகுதியை காப்பாற்றும்
சக்தியற்றவராக இருந்தார்.
கிருத்துவ சிலுவை யுத்தக் காரர்கள் பைத்துல் முகத்தைஸ
மட்டுமல்ல சிரியாவை வரை உண்டான ஏராளமான முஸ்லிம்களின் நிலத்தை கைப்பற்றி ஆட்சி
செய்து கொண்டிருந்தனர்.
பாலஸ்தீனம் 90 வருடமாக சிலுவை யுத்தக் காரர்களின் பிடியில்
இருந்தது.
இதை மீட்பதற்கான திட்டங்களோ சிந்தனையோ கூட முஸ்லிம்
ஆட்சியாளர்களிடம் இருந்த்தாக தெரியவில்லை.
அந்த சிந்தனையை முதன் முதலில் விதைத்தவர் முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி ரஹி அவர்களாவார்.
அவரது வரலாற்றை படித்து பார்த்தால் பாலஸ்தீனத்தை மீட்கும் சிந்தனையை
அவர் மக்களின் இதயத்தில் விதைத்து தெரியும். குறிப்பாக சுமார் 800 பெண்களை அவர்
இதற்காக தயார் படுத்தி இருந்தார் என்று வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சொற்பொழிவின் ஒரு வாசகத்தை
கவனைத்துப் பாருங்கள்
அல்லாஹ்வை தவிர மற்றவற்றை அஞ்சுவதை
அவர் கண்டிப்பதை கவனித்துப் பாருங்கள். அவரது புரட்சி புரியும்,
يقول في أحد مجالسه «صارت الملوك لكثير من الخلق آلهة. قد صارت الدنيا
والغنى والعافية والحول والقوة آلهة، ويحكم جعلتم الفرع أصلاً، المرزوق رازقاً،
والمملوك مالكاً، الفقير غنياً، العاجز قويا والميت حياً.. إذا عَّظمت جبابرة
الدنيا وفراعينها وملوكها وأغنياءها ونسيت الله عز وجل ولم تعظِّمه، فحكمك حكم من
عبد الأصنام، تصيّر مَنْ عظّمتَ صنمَك
பெரும்பாலான மக்களுக்கு அரசர்கள் கடவுளாகிவிட்டனர். இந்த உலகமும் அதன் செல்வமும், ஆரோக்கியமும் காரணங்களும் கடவுளாகிவிட்டனர்.
இந்த உலகின் சர்வாதிகாரிகளையும் பணக்காரர்களையும் நீங்கள் மதித்து அல்லாஹ்வை மறந்து அவனை கண்ணியப்படுத்தாது செல்வீர்கள் எனில் நீங்களும் சிலை வணங்கிகள் தான்.
பக்தாதின் அப்பாஸீய் அரசர் முக்த்தீ பில்லாஹ் பொருத்தம்ற்ற ஒருவரை காழியாக நியமித்த்தை
பகிரங்கமாக கண்டித்தார். அரசர் அவரை மாற்றினார்
في عام 541ه /1146م ولّى الخليفة محمد المقتفي لأمر الله يحيى بن سعيد المعروف بابن المرجم القضاء.
ويذكر سبط ابن الجوزي أن الشيخ عبد القادر، اغتنم وجود الخليفة في المسجد وخاطبه من على المنبر قائلاً «وليت على المسلمين أظلم الظالمين وما جوابك غداً عند رب العالمين»، فعزل الخليفة القاضي المذكور
இது போன்ற நிகழ்வுகள் பல முறை ஏற்பட்ட்தாக வரலாறு
கூறுகிறது.
لقد تكررت هذه المواقف مع الوزراء والرؤساء
ஜீலாநி ராஹ அவர்களால் தூண்டப்பட்டவர் தான் எகிப்து நாட்டின் அரசராக இருந்த
சலாஹுத்தீன் அய்யூபி.
மத்திய கலீபாக்களின் அரசு வாளாவிருந்த போது மிகச்
சிறியபடையுடன் சலாஹுத்தீன் அய்யூபி சிலுவையுத்தக் கார்ரகளுக்கு எதிராக படை நடைத்தினார்,
அவர்களிடமிருந்த ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றினார்.
சலாஹுத்தீன் அய்யூபியின் போர்ப் படை தளப்தில் ஒருவராக
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் ஒரு மகன் அப்துல் அஜீஸு இருந்தார் என்றும் மற்றொரு மகன் மூஸா வும் படையில் இருநிதார் என்றும் வரலாறு கூறுகிறது.
இறுதியியில் அக்டோபர் 2, 1187
அன்று (இன்று அக்டோபர் 3) என்று பாலஸ்தீனத்தை
கைப்பற்றினார்.
ஜீலானி ரஹ் அவர்கள் மறைந்து 20 வருடங்களுக்குப்
பிறகு தான் ஹிஜ்ரி 581
ல் மிஃராஜுடைய நாளில் சலாஹுத்தீன் அய்யூபி பைத்துல்
முகத்தஸைக் கைப்பற்றினார்.
சுமார் 950 வருடங்களுக்கு முன்பு நடை பெற்றது போல முஸ்லிம்களின் வலிமைய
பறை சாற்றுகிற ஒரு தலைமை இப்போது முஸ்லிம்களுக்கு தேவைப் படுகிறது.
அந்த தலைமையை ஒரு அரசியல் தலைமை என்று பலரும்
நினைக்கிறார்கள்.
உண்மையில் இப்போது தேவைப்படுவது நமது குரல்களை
ஒன்றினைக்கிற ஒரு ஆன்மீக தலைமையாகும்.
சலாஹுத்தீன் அய்யூபிகளை உருவாக்கிய ஜீலானிகள்
தான் இப்போதைய நமது முதன்மை தேவையாகும்.
முஹ்யித்தீன் ஆண்டகையை அவரை போன்ற மகான்கள் இப்போதும் வெண்டும் என்று ஆசையில்
நாம் கொண்டாடுவோம்.
மாஷா அல்லாஹ் அருமை
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமை
ReplyDelete