{يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنكُمْ خَافِيَةٌ} [الحاقة:
18]
வருடங்கள்
கடந்து போகின்றன. நமது வயது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அல்லாஹ் வழங்கும்
வாய்ப்பும் வசதிகளும் கூட பெருகி வழிகின்றன. முற்காலத்தில் வாழ்ந்த அரசர்களுக்கு கிடைக்காத
சவுகரியங்கள் இன்றைய சாமாணியர்களான நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. வசதியுடையவர்கள்
மிக மேலான சவுகரியங்களை அனுபவிக்கிறார்கள்.
ஏசி – கார்
– மருத்துவ வசதிகள் –தகவல் தொடர்பு பயன்கள் என பிரம்மாண்டமான நிஃமத்களை நாம் அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம்.
இந்த நமது
வாழ்வு நமக்காவது அல்லது பிறருக்காவது பயனுள்ளதாக இருந்த்தா என்ற கேள்வியை நாம் நம்மை
நோக்கி கேட்டேயாக வேண்டும்.
قال عمر بن الخطاب رضي الله عنه: "حاسبوا أنفسكم قبل أن تحاسبوا،
وزنوا أنفسكم قبل أن توزنوا، فإنه أهون عليكم في الحساب غداً أن تحاسبوا أنفسكم
اليوم، وتزينوا للعرض الأكبر
தனியாக
பேசிக் கொள்ளும் உமர் ரலி
عمر يحاسب نفسه قال أنس بن مالك: "دخل عمر بن
الخطاب رضي الله عنه حائطاً فسمعته يقول- وبيني وبينه جدار-: عمر بن الخطاب أمير
المؤمنين بخ! والله لتتقينَّ الله يا ابن الخطاب أو ليعذبنّك"
முன்னோடிகள்
தமது வாழ்நாளை கணக்கிட்டுப் பார்ப்பதில் மிகவு ம் அக்கறை செலுத்தினர்.
தவ்பா
பின் சும்மா (ரஹ்) தனது வாழ்நாளை எண்ணிக் கணக்கிட்டார்
21 ஆயிரம் நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு பாவம் என்றாலே 21 ஆயிரம் பாவங்களாயிற்றே என்று
புலம்பியபடியே மூர்ச்சையாக இறந்தார்.
وكان توبة بن الصمة محاسباً لنفسه، فحاسبها
يوماً فرأى أن عمره قد بلغ ستين سنة، فحسب أيامها، فإذا هي أحد وعشرون ألف يوم
وخمسمائة يوم، فصرخ، وقال: "يا ويلتا! ألقى الله بواحد وعشرين ألف ذنب! فكيف
وفي كل يوم عشرة آلاف ذنب؟"، ثم خرّ مغشياً عليه، فحرّكوه فإذا هو ميت،
فسمعوا قائلاً يقول: "يا لها من ركضة إلى الفردوس الأعلى".
இபுறாகீம் அத்தைய்மீ ரஹ் அவர்கள் , சொர்க்கத்தில் இருந்தால் அதில் கிடைக்கிற உணவு, பாணம், மற்ற இன்பங்கள் எப்படி இருக்கும் என்பதையும், நரகில் இருந்தால் அதில் கிடைக்கிற உணவு ,பாணம், மற்ற துயரங்கள் எப்படி இருக்கும் என்பதையும் அடிக்கடி எண்ணிப் பார்த்து தன் மனதை நோக்கி உனக்கு எப்படிப் பட்ட வாழ்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.
நாம் கடந்து
போன வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்.
இதுவரை கடந்து
போனது எப்படி இருந்த்து என்பது குறித்து கண்டிப்பான விசாரனை உண்டு.
குறைந்த
பட்சம் எதிர்கால வாழ்க்கை குறித்த தெளிவான தீர்க்கமான சிந்தனைக்கு வந்து விட வேண்டும்.
சால்ஜாப்புக்களில்
காலத்தை கடத்தி விடக் கூடாது.
பெரும் பாலும்
நாம் நன்மையான காரியங்களை செய்வதில் அல்லது முயற்சிப்பதில் சாதாரண காரணங்களைச் சொல்லி
தப்பித்து கொள்ள முயற்சிக்கிறோம்.
1.
வேலை அதிகம்
2.
போதிய வசதி இல்லை
3.
எனக்கு தெரியாமல் போச்சே !
இவை மூன்றும்
நாம் உபயோகப் படுத்தும் அற்பமான காரணங்களாகும்.
இந்தக் காரணங்களைச்
சொல்லி நாம் விட்டு விடும் நன்மைகள் எவ்வளவு
?
தள்ளிப் போடும்
காரியங்கள் எத்தனை ?
குடும்பத்தின்
நன்மைகள் – சமுதாய கடமைகள் – ஏன் நமது வணக்கங்கள் – நமது முன்னேற்றத்திற்கான பணிகள்
என எத்தனை எத்தனை காரியங்களை இந்த அற்ப காரணங்களைச் சொல்லி தள்ளிப் போடுகிறோம். அல்லது
தவற விடுகிறோம். ?
(உதாரணங்களைச்
சேர்த்துக் கொள்ளவும்)
தொழாமல் –
ஓதாமல் –உதவாமல் - உணர்வு பெறாமல் நன்மைகளைச்
செய்யாமல் இருப்பதற்கு நாம் கூறும் இந்தக காரணங்கள்
உன்மையில் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் காரணங்களே அல்ல. நமது கற்பனைகளாகவே இருக்கும்.
அறிவாளிகள்
இத்தகைய காரணங்களுக்குள் ஒளிந்து கொள்ளக் கூடாது
வஹப் பின்
முனப்பிஹ் ரஹ் அவர்கள் தாவூத் அலை அவர்களது குடும்பத்தினரின் தத்துவங்கள் என்று குறிப்பிடுகிவற்றில்
முக்கியமானது இது
وَعَلَى الْعَاقِلِ أَنْ يَكُونَ عَالِمًا
بزَمَانِهِ ، مُمْسِكًا لِلِسَانِهِ ، مُقْبِلا عَلَى شَانِهِ " .
எவற்றை நாம்
அறிய வேண்டுமோ அவற்றை நாம் அறிந்தே இருக்க வேண்டும்.
எவற்றை எல்லாம்
நோக்கி நாம் முயற்சிக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் நாம் முயற்சித்தே ஆக வேண்டும்.
சப்பைக் காரணங்களுக்குள்
ஒளிந்து கொள்ளக் கூடாது.
உமய்யாக்கள்
சாம்ராஜ்ய சக்ரவர்திகளில் ஒருவர் வலீத் பின் அப்துல் மலிக்.
ஹிஜ்ரீ 86
லிருந்து 96 வரை அவர் அரசாண்டார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது ஒரு கோடியே 11 இலட்சம்
கிலோ மீட்டர் அவரது கட்டுப் பாட்டில் இருந்த்து.
அவரது தந்தையின்
ஏற்பாட்டில் மன்னராக ஆனார்.
ஆனால் ஆட்சுப்
பொறுப்பேற்ற பிற்கு தான் யார் என்பதை அவர் வரலாற்றிற்கு மிக அழுத்தமாகவே விட்டுச் சென்றார்.
உமர் ரலி
காலத்திலும் உஸ்மான் ரலி காலத்தோடு ம் நின்று போயிருந்த வெற்றிப் பாதையை மீண்டும் திறந்து
விட்டார்.
அவரது ஆட்சி
நிறைவடைந்த போது உமய்யாக்களின் சாம்ராஜ்யம் ஒரு கோடியோ 32 இலட்சம் கிலோமீட்டர்களுக்கு
விரிவடைந்திருந்தது.
அவரது காலத்தில்
நடை பெற்ற பெரு வெற்றிகள்
அவரது படைத்தளபது தாரிக் பின் ஜியாத் வெறும் 7000 பேருடன் சென்று
ஹிஜ்ரீ 92 ல் ஸ்பெயினைக் கைப்பற்றி ஐரோப்பாவில்
இஸ்லம் பரவக் காரணமானார்.
அவரது இன்னொரு
படைத்தளபதி குதைப்பது பின் முஸ்லிம் மத்திய ஆசியப் பகுதியான புகாரா – பல்க் – சமர்கண்ட
ஆகிய நகரங்களை தொடர்ந்து சீனா வின் எலை வரைச் சென்றார். சீன மன்ன்ன் முஸ்லிம்களிடம்
உடன்படிக்கை செய்து கொண்டதால் சீனாவை வெல்லவில்லை.
அவரது இன்னொரு
படைத்தளபதி முஹம்மது பின் காஸீம். வெறும் 6000 போர் வீர்ர்களோடு சிந்துப் பகுதியை வெற்றி
கொண்டார். சிந்து பலூசிஸ்தான் பஞ்சாம் ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈரானின் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ராஜா தாகிர் சென்னை தோற்கடித்தார்.
ஹிஜ்ரீ 94 ல் முல்தானை வெற்றி கொண்டார்; இன்றைய
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் முழுவதையும் வெற்றி கொண்டார் என்று சொன்னால் அது மிகையல்ல.
மன்னர் வலீது
அவருக்கு கிடைத்த 10 ஆண்டுகளில் நாட்டிற்கு
வெளியே கிடைக்கும் வெற்றிகளில் மட்டும் கவனம் செலுத்த வில்லை.
1.
டமாஸ்கஸீல் இருக்கும் உலகப் புகழ்பெற்ற உமய்யா பள்ளிவாசலை
அவர் கட்டினார்.
2.
மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலை அழகு பட புணரமைத்தார்.
3.
பரந்த தேசத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியிலிருந்தும் ஹஜ்ஜுக்கு
செல்வோரின் வசதிக்காக ஹிஜாஸிற்கான பாதைகளை அமைத்தார்.
4.
இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக மருத்துவ மனைகளை அமைத்தார்.
5.
தொற்று வியாதிக்கார்ர்கள் மக்களோடு கலந்து விடாமல் தடுத்து
அவர்களுக்கென்று மானியம் வழங்கினார்.
6.
ஆச்சர்ரியத்திலும் ஆச்சரியம் பார்வையற்றவர்களுக்கு
ஒர் வழிகாட்டி ஏற்பாடு
செய்து கொடுத்தார்.
7.
ஊனமுற்றவர்களுக்கு உதவியாளர்களை ஏற்படுத்தினார். டமாஸ்கஸின்
பைத்துல் மாலில் இருந்து இவர்களுக்காக செலவிடப் பட்டது.
8.
தனது நாட்டிலுள்ள அநாதைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர்களுக்கு ஆசிரியர்களை நியமித்தார்.
9.
ஏழைகள் தங்குவதற்காக பெரும் விடுதிகளை கட்டினார்.
أول من أقام المستشفيات في الإسلام
وحجز المجذومين وأجرى
لهم الأرزاق،
وتعهد الأيتام وكفلهم ورتب المؤدبين،
وأقام بيوتا ومنازل لإقامة الغرباء.
(மன்னர் வலீதுக்குப்
பின் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று மக்கள் பிரதிநிதிகளாக வாழ்கிற ஆட்சியாளர்கள் – மக்களின்
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மக்களை ஆயிரம் ரூபாய கொடுத்து ஏமாற்று கிறார்கள்.)
இவ்வளவும்
செய்த மன்னரைப் பற்றி வரலாறு மேலும் தருகிற தகவலைப் பாருங்கள்
இத்தனைக்கும் மேலாக பேர்ர்ரசராக
இருந்த போதும் தீமையான பாவ காரியங்களைப் பற்றி தெரிந்தும் கூட வைத்திருக்கவில்லை
அல்லாஹ் குர் ஆனில் சொல்லி
யிருக்காவிட்டால் ஆண்கள் ஆண்களோடு உறவு கொள்வார்கள் எனபது எனக்கு தெரியாது என்றார்.
எவ்வளவு பரிசுத்தமான
வாழ்கை பாருங்கள்!’
இன்றூ நமக்கு
தீமைகளில் எதாவது ஒன்று நமக்கு தெரியாமல் இருக்கிறதா ?
வலீது நீண்ட காலம் வாழவில்லை. ஐம்பத்தி ஓன்றே வயதில் அவர்
வபாத்தானார். ஆனால் அதற்குள் தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி வரலாற்றில் தடம் பதித்து
விட்டார்.
வாழ்கை என்பது
மிகப் பெரும் வாய்ப்பு
அதை பயனபடுத்திக்
கொள்பவர்கள் எப்படி தானும் முன்னேறி சமுதாயத்தையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று
விடுகிறார்கள்.
இவருக்குப்
பின்னால் பொறுப்பேற்ற இவரது சகோதர்ர் சுலைமான் பின் அப்துல் மலிக் இரண்டு வருடங்கள்
தான் ஆட்சியில் இருந்தார். (ஹிஜ்ரீ 96-98) வெற்றிகள் எதையும் அவர் குவிக்க வில்லை.
பெரிய சாப்பாடுப் பிரியராக இருந்தார்.
ஒரே தடவையில்
40 கோழிகளைச் சாப்பிடுவார்
وكان من الأكلة، فقد روى الذهبي في سير أعلام النبلاء أنه أكل أربعين دجاجة في جلسة
ஆனால் அவரும்
மக்களால் பெரிதும் நேசிக்கப் பட்டார்.
காரணங்கள்
இரண்டு.
وكان من أعدل خلفاء بني أمية والمسلمين، واستخلف عمر بن عبد العزيز من بعده.
அவர் நீதியாக
நடந்து கொண்டார்.
தனக்குப்
பின் தகுதி வாய்ந்த ஒருவரை – உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களை ஆட்சியாளராக அறிவித்தார்.
மனிதர்கள்
நீண்ட பணிகளால் மட்டுமல்ல. தரமான பணிகளாலும் வரலாற்றில் நிலைக்கிறார்கள்.
நமக்கான மிகச்
சிறந்த பாடங்கள் இவை.
தமக்கு கிடைத்த
காலங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அற்ப காரணங்களைச்
சொல்லிக் கொண்டு அருமையான காரியங்களை ஆற்றுகிற வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
Ameen
ReplyDeleteMasha Allah
Nice bayan