தற்போதைய
முஸ்லிம்
சமூகத்தின்
திருமண விழாக்கள் தடம்
மாறிச்
செல்லத் தொடங்கியிருக்கிறது.
பெரும்பாலும்
பெற்றோரின்
பெருமையை
பறைசாட்டும்
வகையிலேயே
திருமண விழாக்கள் திட்டமிடப்படுகின்றன.
பெரும்
பெரும் பந்தல்கள் - அலங்காரங்கள் – போஸ்டர்கள் – விலை உயர்ந்த அழைப்பிதழ்கள். உணவுகளில் அதிகரித்து வருகிற வகையறாக்கள் - பாப்கார்னிலிருந்து
– பான் பீடா வரை பெருகி வருகிற அன்பளிப்புக்கள் என நமது முஸ்லிம் குடும்பத்தின் திருமணங்களின் முகம் மாறிவருகிறது.
செலபரேசன்
– கொண்டாட்டம் - அல்லது செலபரட்டீஸ்
கொண்டாட்ட்த்திற்குரியர்வர்கள் - எனும் சொற்பிரயோகம் நம்மை கிறக்கத்தில் ஆழ்த்திவருகிறது.
நடிகர்கள்
தொலைக்காட்சி
பிரபலங்கள்
திருமணங்களில்
கலந்து கொள்வது அல்லது அவர்களது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது என திருமணங்கள் திருவிழாக்களாக்களப்படுகின்றன,
ஆரம்ப
கட்ட்த்திலேயே
இவை சீர் செய்யப் பட வேண்டும்.
ஒரு
திருமணத்தின்
பிரதான நோக்கம் என்ன என்பதை நாம் பெரிதும் கவனிக்க அல்லது நினைவில் நிறுத்த தவறிவிடுகிறோம். அதனாலேயே திருமண வைபவங்கள் செலபரேசன்களாக மாறிவருகின்றன.
ஒரு
திருமணத்தின்
பிரதான நோக்கம்
மணமக்களின்
வாழ்க்கை
பரக்கத்தானதாக
இருக்க வேண்டும் என்பதே
அதனாலாலேயே பத்ரிகைகளில் மணமக்களை வாழ்த்த வருகை தருமாறு அழைக்கிறோம்
பாரக்கல்லாஹு
லக என்ற பெருமானாரின் வாழ்த்து அச்சிடப் படாத பத்ரிகைகளே
இப்போது
இல்லை என்று சொல்லிவிடலாம்.
திருமண
விழாக்கள்
ஆர்ப்பாட்டமாக
அமைந்து மணவாழ்கையில் பர்கத் இல்லாமல் போய்விடுமானால் அந்த ஆடம்பரம் எத்தகைய
கேலிக்குரியது
?
இங்கிலாந்து
இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் நடந்த்து. ஆனால் அந்த திருமணம் எத்தகையை தோல்வியில் முடிந்த்து என்பதை உலகறியும்.
எனவே
திருமணங்களின்
போது கவனிக்கப் பட வேண்டியது ஒரு நாள் கூத்தல்ல. ஆயிர்மாண்டு பயிர்களின் செழிப்பான வாழ்கைதான் கவனிக்கப் பட வேண்டும்.
ஒரு
திருமண வைபவத்தில் நாம் செய்யும் காரியங்கள் மணமக்களின் வாழ்கையில் பரகத்திற்கு வழி வகுக்குமா ? என்று யோசித்துப் பார்ப்பதே புத்திசாலிகளான பெற்றோர்களின் கடமையாகும்.
நபிமொழித்திரட்டான
ஹாகிமில் ஒரு ஹதீஸ் வருகிறது.
فقال صلى الله عليه وسلم في الحديث الصحيح : أعظم النساء بركة أيسرهن مؤونة . وفي رواية : إن أعظم النكاح بركة أيسره مؤونة . رواه أحمد والحاكم
பெண்களில்
பாக்கியமானவர்கள் சாமாணிய மஹர் கேட்பவர்களே!
சாமாணிய
என்பது ஆளாளுக்கு வேறு படும்.
இப்போது
மஹர் விசயத்தில் ஓரளவு கவனம் வந்திருக்கிறது. ஆனாலும் இது போதாது.
திருமணத்தை
நபி வழி என்கிறோம்.
அதில் பிரதானமான மஹர் தொகையில் நபியின் வழி முறை
என்ன என்பதை கவனிக்க மறுக்கிறோம்.
பெருமானார்
(ஸல்) அவர்கள் தனது மனைவியருக்கு கொடுத்த மஹரின் அளவு
عن أبي سلمة بن عبد الرحمن أنه قال سألت عائشة زوج النبي صلى الله عليه وسلم كم كان صداق رسول الله صلى الله
عليه وسلم قالت كان صداقه لأزواجه ثنتي عشرة أوقية ونشا قالت أتدري ما النش قال قلت لا قالت نصف أوقية فتلك
خمس مائة درهم فهذا صداق رسول الله صلى الله عليه وسلم لأزواجه
ஒரு
ஊக்கியா என்பது 40 திர்ஹம்
12
½ ஊக்கியா என்பது 500 திர்ஹம்.
ஒரு
திரஹம் என்பது 2.3 கிராம் வெள்ளி. 10 திர்ஹம் என்றால் 23 கிராம் வெள்ளியாகும்.
500
திர்ஹம் என்பது 1150 கிராம் வெள்ளியாகும்.
12 أوقية × 40 درهم = 480 درهم
480 درهم + 20 درهم (نصف أوقية) = 500 درهم
كما قالت رضي الله عنها (فتلك خمسمائة درهم)
كم يساوي الدرهم جراما من الفضة ؟
الدرهم = 2,3 جرام
درهم واحد يساوي جرامان وثلاثة من عشرة من الجرام.
كيف نحسب ؟
500 درهم × 2,3 جرام = 1150 جرام فضة
இன்றைய மார்க்கெட்
நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் என்று இருக்குமானால்
1150 கிராம்
வெள்ளியின் விலை 48.300 ரூபாய் ஆகும். அதாவது
சுமார் 50 ஆயிரம் ரூபாய்.
இதுவே நபி
(ஸல்) அவர்கள் தனது மனைவியருக்கு கொடுத்த மஹராகும்.
ஹனபி மத்ஹபின்
படி குறைந்த பட்ச மஹருக்கு 10 திர்ஹம் என்று அளவு இருக்கிறது. ஒரு காலத்தில் அதன் மதிப்பு
முன்னூற்றி பத்து ரூபாயாக இருந்தத்து அதனால்
இன்று வரை நம்மில் 310 ரூபாய் மஹர் எழுதுகிறவர்கள் உண்டு அது. அதையும் உடனே கொடுக்க மாட்டார்கள். தவணை சொல்லியே எழுதுவார்கள்.
மஹர் கொடுத்து விடுவதை துர்ச்சகுணமாக நினைக்கிற வழக்கம் கூட இருந்தது.
இஸ்லாமில்
மஹர் தொகை என்பது பெண் தீர்மாணிக்கிற ஒன்றாகும். தனக்கு இவ்வளவு மஹர் வேண்டும் என்று
கேட்கிற உரிமை மணப்பெண்ணுக்கு உண்டு.
அதில் அதிகபட்சம்
இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்ற எல்லை கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம்.
وَآتَيْتُمْ
إِحْدَاهُنَّ قِنطَارًا
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கிய இந்த உரிமை ஒரு கட்டத்தில் எல்லை கடந்து போய் பெண்கள் கேட்கிற மஹரை கொடுப்பது
ஆண்களுக்கு சிரமமகிவிட்டது.
ஹழரத் உமர்
ரலி அவர்கள் இந்தப் போக்கின் விபரீதத்தை கணித்து அதிக பட்ச மஹருக்கு ஒரு எல்லை வகுத்து
விட நினைத்தார்கள். அதை சட்டமாக சொல்லாவிட்டாலும்
400 திர்ஹத்தை விட அதிகப்படியான மஹரை நான் கேள்விப்பட்டதில்லை என்றார்கள்
அபூயஃலா வின்
அறிவிப்பை மேற்கோள் காட்டி தப்ஸீர் இப்னு கஸீரில் வருகிறது.
عن مسروق
قال : ركب عمر بن الخطاب منبر رسول الله صلى الله عليه وسلم ثم قال : أيها الناس
ما إكثاركم في صداق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنما
الصَّدُقات فيما بينهم أربع مائة درهم فما دون ذلك ، ولو كان الإكثار في ذلك تقوى
عند الله أو كرامة لم تسبقوهم إليها فلا أعرفنَّ ما زاد رجل في صداق امرأة على
أربع مئة درهم ، قال : ثم نزل فاعترضته امرأة من قريش فقالت : يا أمير المؤمنين
نهيتَ النَّاس أن يزيدوا في مهر النساء على أربع مائة درهم ؟ قال : نعم ، فقالت :
أما سمعت ما أنزل الله في القرآن ؟ قال : وأي ذلك ؟ فقالت : أما سمعت الله يقول {
وآتيتُم إحداهنَّ قنطاراً } الآية ؟ قال : فقال : اللهمَّ غفراً ، كل النَّاس أفقه
من عمر ، ثم رجع فركب المنبر ، فقال : أيها الناس إني كنت نهيتكم أن تزيدوا النساء
في صدقاتهن على أربع مائة درهم ، فمن شاء أن يعطى من ماله ما أحب
ஒரு பெண் எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்கலாம்
என்றாலும் அவளை திருமணம் செய்ய விரும்பும் கணவனுக்கு அதிக சிரமம் தராத வகையில் மஹர்
கேட்பதே சிறப்பானது. அத்தகைய பெண்ணே பாக்கியமானவள் என்பதைத்தான் பெருமானார் (ஸல்)
أعظم النساء بركة أيسرهن مؤونة என்றார்கள்
.
இதில் சொல்லப்
பட்ட أيسرهن
என்ற சொல் கவனிக்கத் தக்கது.
أقلهن என்ற சொல்லுக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு.
أقلهن என்று சொல்லப்பட்டிருக்குமானால் குறைந்த அளவில் மஹர்
கேட்பதே சிறப்பானது என்று பொருள்படும்.
أيسرهن
என்ற வார்த்தையில் கணவனை
சிரமப்படுத்தாத வகையில் எனும் போது கணவனின் தகுதியை அனுசரித்து, அவன் கோடீஸ்வரவானக
இருந்தால் அதற்கேற்ற அளவு சாமாணியனாக இருந்தால் அதற்கேற்ற அளவு மஹர் தொகை கேட்பது அனுமதிக்கப்
படுகிறது.
ஒரு திருமணத்தை
பரக்கத்தாக்கி வைப்பதில் மஹருக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்நபி மொழி புலப்படுத்துகிறது,
எனவே ஒரு
இளைஞன் திருமணத்திற்கு திட்டமிடுகிற போது முதலில் மஹர் கொடுப்பதற்குரிய தகுதியை அவன்
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தார்
தங்களது ஆண்களை இதற்கேற்ற வகையில் தயார்ப்படுத்துவதும் சிறப்பாகும்.
நமது திருமண
அழைப்பிதழ்களில், நபி கூறிய திருமண துஆ என்று குறிப்பிட்டு , பாரக்கல்லாஹு லக வபாரக
அலைக்க வஜம அ பைனகுமா பில் கைர் என்று என்று அச்சிடுகிறோம்.
அந்த துஆ
யாருக்கு எப்போது சொல்லப் பட்டது தெரியுமா
?
அப்துர் ரஹ்மான்
பின் அவ்ப் ரலி அவர்களுக்கு பெருமானார் கூறிய துஆ வாகும் அது .
எந்த சந்தர்ப்பத்தில்
பெருமானாரின் உள்ளத்திலிருந்து இத்தகைய மன நிறைவான துஆ வெளிப்பட்டது தெரியுமா ?
மக்காவின் செல்வந்தரான அப்துர் ரஹமான் பின் அவ்ப்
(ரலி ) ஹிஜ்ரத்திற்கு புறப்பட்ட போது மக்கா வாசிகள் அவரது அனைத்து சொத்துக்களையும்
பறித்த்துக் கொண்டு விட்டனர். ஏழையாக மதீனாவிற்கு வந்து சேர்ந்தார்கள். மதீனாவில் அவரை
ஸஃது பின் ரபீஆ ரலி அவர்களுக்கு சகோதரராக பெருமானார் (ஸல்) அவர்களை அவரை இணைத்து விட்டார்கள்.
ولمّا قدم النبي للمدينة، آخى بين المهاجرين والأنصار، فآخى بين عبد الرحمن بن عوف وسعد بن الربيع فعرض عليه سعد أن يناصفه أهله وماله فقال: «إني أكثر
الأنصار مالا فأقسم مالي نصفين ولي امرأتان فانظر أعجبهما إليك فسمها لي أطلقها
فإذا انقضت عدتها فتزوجها»، فقال عبد الرحمن: «بارك الله لك في أهلك ومالك، دلني
على السوق»،[ فدلوه
على سوق بني قينقاع، فربح شيئًا من أقط وسمن، وتزوج امرأة من الأنصار وجاء
بعد أيام وعليه أثر صفرة، فقال له النبي: «مهيم يا عبد الرحمن» يسأله عن أخباره،
فقال: «يا رسول الله تزوجت امرأة من الأنصار»، قال: «فما سقت فيها؟ (أي: ماذا كان
مهرها؟)» فقال: «وزن نواة من ذهب»،
ஏழையாக
மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) தனக்கு இலவசமாக கிடைத்தவற்றை மரியாதையாக மறுத்து விட்டு உழைத்துச் சம்பாதித்து கொஞ்ச நாளிலேயே ஒரு பேரீத்தம் பழக் கொட்டை அளவு தங்கத்தை மஹராக கொடுத்து திருமணம் செய்திருக்கிறார் என்பதை அறிந்த போது தான பெருமானார் (ஸல் ) அவர்கள் நெஞ்சம் நிறைந்த மகிச்சியோடு அவரை வாழ்த்தினார்கள். மட்டுமல்ல விருந்து கொடு என்றும் கேட்டார்கள்.
புகாரியில்
வருகிறது.
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب
قال بارك الله لك أولم ولو بشاة
பெருமானாரின்
இந்த துஆ வைப் பெற்ற பிறகு அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்களின் வாழ்கை பெரும் ஏற்றத்தை சந்தித்தது.
அதை அவரே
கூறுகிறார். இதன் பிறகு நான் ஒரு கல்லைப் புரட்டினாலும் அதனடியில் ஒரு தங்கக் காசோ
வெள்ளிக்காசோ கிடைத்தது.
فكان عبد الرحمن يقول: «فلقد رأيتُني ولو رفَعتُ حَجَرًا رجَوتُ أن أُصيبَ
تحته ذَهَبًا أو فِضّة.
அவருக்கு
கிடைத்த பரக்கத்தைப் பற்றி முஹம்மது பின் அபீஹர்மலா கூறுகிறார்.
عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ ، قَالَ : " تَرَكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَلْفَ بَعِيرٍ ، وَثَلاثَةَ آلافِ شَاةٍ بِالْبَقِيعِ ،
وَمِائَةَ فَرَسٍ ، وَكَانَ يَزْرَعُ بِالْجَرْفِ عَلَى عِشْرِينَ نَاضِحًا ، فَكَانَ
يُدْخِلُ قُوتَ أَهْلِهِ مِنْ ذَلِكَ لِسَنَتِهِ " .
அவரது
மரணத்திற்குப் பின் அவர் விட்டுச் சென்ற தங்கத்தை கோடாரியால் வெட்டிக் கொடுத்தவர்களின் கைகள் சோர்ந்து போய்விட்டன
ويروى أن ميراثه كان من ذهب يُقسَّم بالفؤوس حتى
مجلت يدي الرجال منه، وترك أربع نسوة، أخرجت كل امرأة من إرثها بثمانين ألفًا
அவருக்கு
நிறைய பணம் சேர்ந்த்து என்பதல்ல பரக்கத்.
அந்தப்
பணத்தை ஏராளமான நன்மையான காரியங்களுக்கு அவர் பயன்படுத்தினார் என்பதே பரக்கத்தாகும்.
وقد باع يومًا أرضا بأربعين ألف
دينار فرّقها جميعًا على أهله من بني زُهرة وأمهات المسلمين وفقراء المسلمين، ورُوى أنه أعتق ثلاثين ألف بيت
فكان طلحة بن عبد الله بن عوف يقول: كان أهل المدينة عيالًا على عبد الرحمن
بن عوف: ثلث يقرضهم ماله، وثلث يقضي دينهم، ويصل ثلثًا.» وحين وفاته أوصى بخمسين ألف دينار في سبيل الله،
فكان الرجل يعطى منها ألف دينار وأَوصى لمن بقي من أهل غزوة بدر، لكل رجل أَربعمائة دينار، وكانوا مائة، فأَخذوها،
وأَخذها عثمان فيمن أَخذ: وأَوصى بأَلف فرس في سبيل الله
கவனிக்கவும்.
இவை அனைத்தும் ஒரு மரியாதையான திருமணத்தின்
போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்கள் பெற்ற துஆ வின் பரகத்தாகும்.
திருமணத்தை
பரக்கத்தாக்கி கொள்ள நான் நினைத்தால் இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் .
திருமணத்தை பரக்கத்தாக்கி
கொள்ள இரண்டாவது ஒரு அம்சத்தை பெருமானார் (ஸல் ) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .
رواية : إن أعظم النكاح بركة أيسره مؤونة
இந்த இடத்திலும் பெருமானார்
(ஸல்) அவர்கள் செலவு குறைவான திருமணம் என்று சொல்ல வில்லை . செலவு இலகுவான திருமணம்
என்கிறார்கள்.
எனவே ஒரு பணக்காரர் பரம ஏழையைப் போல தனது குடும்பத்தின் திருமணத்தை
வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒவ்வொருவரும் அவரவருடைய
சவுகரியத்திற்கு ஏற்ற வகையில் சிரமம் இல்லாமல் திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதி உண்டு.
கவனிக்க வேண்டிய் அம்சம்
என்ன வெனில் அவரவரவது தரத்திற்கு அந்த திருமணம்
சாமாணியமானதாக இருக்க வேண்டும்.
“இவர் நினைத்திருந்தால் இன்னும் பெரிசா செய்யலாம். ஆனால்
சாமாணியமா முடித்துக் கொண்டார்” என்று ஊரார் போசுவது தான் அய்ஸருசா முஃனதன் என்பதாகும்.
இவர் யார் என்று காட்டிவிட்டார் என்று மக்கள் பேசிக் கொள்வதல்ல
அல்லது இவர் அதிகமாக
ஆடம்பரம் செய்து விட்டார் என்று மக்கள் பேசிக் கொள்வதல்ல
முகேஷ் அம்பானி வீட்டுத்
திருமணம் ஊருக்கேல்லாம் தெரிந்த்து. பெரிய பெரிய நடிகள் அவரது வீட்டில் விருந்து பரிமாறினார்கள்
என்பது பெரிய செய்தியாயிற்று.
கிட்டத்தட்ட அதே நேரத்தில்
இந்தியாவில் அவருக்கு நிகரான செல்வந்தரான அஜீம் பிரேம்ஜியின் மகனது திருமணமும் நடந்த்து.
வெளியுலகில் எந்த பரபரப்பும் இல்லை.
இன்று இந்தியாவில் மிகப்பெரிய
கொடையாளியாக அஜீம் பிரேம்ஜீ இருக்கிறார்.
மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்
கவனியுங்கள்.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறவர்கள்.
கொள்ளைக் கார்ர்களைப் போல செலவிடுகிறார்கள்.
பாடுபட்டுச் சம்பாதிக்கிறவர்கள்.
தொழிலாளியைப் போல செலவிடுகிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா அஜீம் பிரேம்ஜியின் மகனது திருமணத்தைப்
பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு
Super-quiet
wedding for Azim Premiji's son
இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்கார்ரான லக்ஷ்மி மிட்டல் தனது மகள் வனிஷாவின் திருமணத்த்திற்கு 250 கோடி ரூபாய் செலவழித்தார் என்பதை
ஒப்ப்பிட்டு பேசுகீற அந்தக் கட்டுரை அஜீம்
பிரேம்ஜியின் மகன் ரிஷாத்த்தின் திருமணம் ஒரு
வீட்டு நிகழ்வாக நடந்தேறியது என்கிறார்.
Rishad wed childhood sweetheart Aditi in a civil
ceremony in Mumbai .. and the wedding was a quiet, 'private, family
affair'
அந்தக் கட்டுரை
இப்படி முடிகிறது. ரிஷாத் திருமணம் செய்து கொண்டார் என்கிற ஒரு செய்தி மட்டுமே அதில்
வெளிப்பட்ட து
so quietly that nobody
knows anything about it, except that he did, indeed, get married
சமீபத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு
விருந்தினராக வந்திருந்தவர் மருத்த்துவர்களிடையே பணம் குறித்து சிந்தனையை எந்த அளவில்
இருக்க வேண்டும் என்று பேசுகிற போது முகேஷ அம்பானியின் மகளது திருமணத்தையும் அஜீம்
பிரேம்ஜியின் மகனுடைய திருமணத்தையும் ஒப்பிட்டுப் பேசி விட்டு நாம் அஜீம் பிரேம்ஜியை
போல வாழப் பழக வேண்டும் . முகேஷ அம்பானியைப் போல அல்ல என்றார்.
ஒரு திருமணம் ஒரு மனிதரை எந்த உயரத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறது
என்பதை கவனையுங்கள்.
எனவே திருமணங்களை எளிதானதாக ஆக்கிக் கொள்வது பரக்கத்தை பெற்றுத்தரக்கூடியது
என்பதை நாம் அழுத்தமாக கவனத்தில் வைக்க வேண்டும்.
பெற்றோரின் பெருமை ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதற்கு திருமணத்தை வாய்ப்பாக
பயன்படுத்திக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய பிள்ளைகளின் வாழ்கையோடு நாம் விளையாட வேண்டுமா ?
பரக்கத்தான் திருமணம் என்பது எளிமையானது என்ற பெருமானாரின் வார்த்தைகள்
நமது நினைவை விட்டு அகலக் கூடாது.
ஆடம்பரமான ஆர்ப்பாட்டமான அரங்குகள். திகட்ட திகட்ட வழங்கப்படும்
உணவுகள் அன்பளிப்புக்கள் அந்த நிமிடத்தில் நம்மை பற்றி மற்றவர்களை வாய்ப்பிளக்கச் செய்யலாம்.
ஆனால் ஆயிரம் காலத்துப் பயிருக்கு இது உதவாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு வகைகளில் பிரியாணி என்பதை தாண்டி சில்லி சிக்கன் என்பது வந்த்து.
பிறகு ஐஸ் கிரீம் வந்தது. ஐஸ்கிரீம் வழங்குவது
பணக்காரத்தனம் என்றிருந்த்து. இப்போது அது சாதாரணமாகி விட்டது. பணக்காரர்கள் இதற்கும்
மேல் யோசித்து யோசித்து தமது திருமணத்தை வித்தியாசப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
இது சமுதாயத்தின் மேல் ஒரு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்பதை
அவர்கள் உணர வில்லை.
செல்வந்தர்களின் ஒவ்வொரு செயலும் முன்னுதாராணமாக பார்க்கப் படும்
. இது போல நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தும்.
நடுத்தர மக்கள் கடன் வாங்கியாவது இப்படி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அதே நேரத்தில் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல்
திருமணத்தை நட்த்துவார்கள் எனில் அது அவர்களது பரக்கத்திற்கு காரணமாகும் என்பது மட்டுமல்ல.
சமுதாயத்திற்கு முன்னுதாராணமாகவும் அமையும்.
முஸ்லிம்களின் ஒரு புகழ் பெற்ற ஊரில் திருமண பத்ரிகையை அடிப்பது
பெருமைக்குரிய விசயமாக இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு
அதிக விலை கொடுத்து பத்ரிகை வாங்கினார்கள்.
திருமணத்தேதி இடம் இதை தெரிவிப்பதன்றி பத்ரிகையின் பணி வேறொன்றும் இல்லை. தேதி
முடிந்த பிறகு அது குப்பை கூடைக்கு செல்லக் கூடியது.
இந்த சூழலில் அந்த ஊரின் ஒரு பெரிய செல்வந்தரின் மகனுக்கு திருமண
ஏற்பாடுகள் நடந்தன. அவர் எப்படி பத்ரிகை அடிக்கப் போகிறார் என்பது பேச்சாக இருந்தது.
வாழ்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டிருந்த அந்த செல்வந்தர். மிகச்
சாதாரணமாக பத்ரிகை அடித்தார்.
அந்த ஊர்க்கார்ர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் செல்வந்தர் வீட்டு திருமணத்திற்குப் பிறகு எங்களது ஊரில்
திருமணத்தில் பத்ரிக்க்காக செலவிடும் தொகை குறைந்து விட்டது.
நபி (ஸல்_ அவர்கள் ஹிர்கல் மன்னருக்கு செய்தி அனுப்பிய போது நீ இஸ்லாமாகி
விடு உனக்கு இரு கூலிகள் கிடைக்கும் என்றார்கள்/
ஒன்று அவர் இஸ்லாமானதற்காக இன்னொன்று அவரை தொடர்ந்து அவரது மக்கள்
முஸ்லிம்களாகிவிடுவார்கள் அதற்காக.
முன்னுதாரனமாக நடந்து கொள்கிறவர்கள் அதிக மரியாதைக்குரியவர்கள்.
ஆடம்பரம் காட்டுகிறவர்களை விட.
பன்னூறு ஆண்டுகளை கடந்து இன்றும் பேசப்படுகிற ஒரு திருமணத்தை நினைவு
படுத்துகிறேன்.
ஸயீது பின் முஸைய்யப் ரஹ் . தாபிஃகளின் தலைவர். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி
பள்ளிவாசலில் ஆசிரியராக இருந்தார் . உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் அவரிடம் வந்து
கல்வி கற்றார்கள். அரசர்கள் அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்கள். நாட்டு மக்கள் ஸயீது
என்ன சொல்கிறார் என்பதை கவனிப்பார்கள்.
அவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய நினைத்தார். அந்தப் பெண்ணின்
அறிவும் ஆற்றலும் நாடறிந்த செய்தியாக இருந்தது.
இளவரசர்களுக்கு அவரது சம்ப்ந்தம் கோரப்பட்டது.
ஸயீது ரஹ் அவர்கள் ஒரு நாள் தனது வகுப்பறையில் வகுப்பு முடிந்த பிறகு
ஒரு மாணவரை அழைத்தார். எனது மகளை உனக்கு திருமணம் செய்து தர நினைக்கிறேன். உனக்கு சம்மதமா
என்று கேட்டு விட்டு பெற்றோரை அழைத்து வரச் சொன்னார்கள். நான் சம்மதித்தால் போதும் என்று அந்த கூறைஷி வாலிபர்
கூறினார். அப்போதே மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில்
வைத்து அந்த திருமணம் நடந்த்து. மாப்பிள்ளை
இப்னு அபீ வதாஆ கூறுகிறார். இரண்டு திர்ஹம்கள் தான் என்னால் மஹராக கொடுக்க முடிந்த்து.
வரலாறு அந்த திருமணத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகளை கடந்தும் நினைவில்
வைத்திருக்கிறது. அதை பெரும் திருமணம் என வாழ்த்துகிறது.
قصة زواج ابنة سعيد بن المسيب،قصة
عظيمة في تيسير الزواج
எனவே திருமணத்தில் தேவையற்ற சிரமம் எடுத்துக் கொள்கிற
– சாமானியத்திற்கு அதிகப்படியான எந்த செயலையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுவே மணமக்களின் பாக்கியமான வாழ்விற்கு காரணமாகும்.
இனி இதற்கடுத்து மார்க்கம் தடை செய்திருக்கிற காரியங்களுக்காக செலவு
செய்வது அல்லாஹ்வின் அதிருப்தியை பெற்று தந்து விடும்
பாட்டுக் கச்சேரிகள். பேண்டு வாத்தியங்கள். நடனங்கள் = ஏழைகளை ஒதுக்கி
வைக்கிற ஏற்பாடுகள் எதுவும் நமக்கு நன்மையை கொண்டு வராது.
شَرُّ الطَّعَامِ طَعَامُ الوَلِيمَةِ
، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الفُقَرَاءُ
தற்போது ஒரு பழக்கம் வேகமாக பரவி வருகிறது. மாப்பிள்ளை மீது அல்லது மணப் பெண்ணின் மீது காகிதக் கூல்களை ஸ்பிரே செய்வது அந்த நேரத்தில் ஓ ஓ வென்று கத்துவது. அதே போல் கேக் வெட்டி அதை முகத்தில் பூசுவது .
இளைஞர்கள் விளையாட்டுக்கு இப்படிச் செய்கிறார்கள் என்று இதை கண்டும்
காணாமல் விட்டதனால் அது இப்போது பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கும் ,அத்ற்கு மேல்
வடநாட்டவர்களின் ஹோலிப் பண்டிகை போல் சாயங்களை தூவிக் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து
விட்டது.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் மாப்பிள்ளையின்
மீது சாயம் தெளித்து அவரை சாயத்திலேயே குளிப்பாட்டி விட்டார்கள். அவரது முகம் ஆடைகள்
கருப்பாக்கி விடப்பட்டது.
என்ன இப்படி செய்து விட்டீர்களே என்று கேட்டால் எனது கல்யாணத்தில்
இவன் இப்படித்தான் செய்தான் என்று விளையாட்டுத்தனமாக பதில் சொன்னார்கள்.
பெண் வீட்டாருக்க்கு மாப்பிள்லையின் முகம் மற்றும் ஆடைகள் கருப்பாக்கப்
பட்ட்து மிகவு ம் வருத்த்தை வரவழைத்து விட்டது.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா இத்தகைய செயலில் ஈடுபட்ட இளைஞர்கள்
தாடி வைத்திருந்தார்கள்.
அப்படியானால் நமது நல்ல இளைஞர்களுக்கு மார்க்கம் இவற்றை அனுமதிக்கிறதா
இல்லையா என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் போய்விட்டது என்றல்லவா அர்த்தமாகிவிடும். ?
இளைஞர்கள் மகிழ்சிக்குரிய நிகழ்வுகளில் நிதானத்துடன் நடந்து கொள்ள
வேண்டும்.
அர்த்தமற்ற கூப்பாடுகளும் கூத்தாட்டங்களும் நமது திருமண வைபவத்தில்
தவிர்க்கப் பட வேண்டும்.
நமது திருமணம் பரக்கத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நமது திருமணங்களின்
இலட்சியமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
பயானை விரைவாக பதிவிட்டால் தான் பலன்
ReplyDelete