மூஸா அலை அவர்களின் வாரிசு
இன்ஷா அல்லாஹ்
நாளை ஆஷுரா நாளாகும்.
ஆஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள். அது முஹர்ரம் 10 நாளை குறிக்கிறது.
•
قال القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة
والتعظيم، وهو في الأصل صفة لليلة العاشرة،
ஆஷீராவின்
சிறப்பு
மூஸா அலை அவர்களும்
யூதர்களும் செங்கடல் பிளந்து பாதுகாக்கப்பட்ட
நாள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى
الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ
صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ
فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ
بِصِيَامِهِ
மூஸா அலை அவர்களும் அவர்களது மக்களும் பிர்
அவ்னிடமிருந்து மிக ஆச்சரியமாக பாதுகாக்கப்பட்டார்கள். பிர் அவ்னும் அவனது பிரம்மாண்ட
படையினரும் மிக துச்சமாக அழிக்கப் பட்டார்கள் .
பைபிளில் யாத்திராகம்ம் என்ற அத்தியாயம் இந்த நிகழ்ச்சியை பேசுகிறது.
உலகின் மிக அதிசயமான நிகழ்வுகளில் ஒன்றாக இன்னும் சொல்வதானால் உலகின் மகா அதிசயமான நிகழ்வாக இந்நிகழ்வு பேசப்படுகிறது.
பல திரைப்படங்கள் இது பற்றி எடுக்கப்ப்பட்டுள்ளன. டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்ற திரைப்படம் அவற்றில் பிரபலமானதாகும்.
இவ்வாறு நடந்துள்ளது என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
செங்கடல் என்பது மிக ஆழமான கடலாகும். நீளமான எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடலாகும். .
எகிப்து முதல் எத்தியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது.
இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகழ் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இருந்ததுவந்தது.
ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இரண்டு கரைக்களிலும் கல் மலைகளாக இருந்தபோதும், ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இரு கரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை 'ரான் வையாத்' என்ற ஆய்வாளர் கண்டு பிடித்தார் ..
ஒரு கரை
சவுதியின் பக்கமும் மற்றொரு கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின்
பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று
அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும்
கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது ,
அதிசயிக்கத்தக்க பல தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் கூட்டத்தினரின் வண்டிகளின் சக்கரங்களும் , ஆயுத தளவாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் ஆகியன் அங்கே இருந்தன
எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரானைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.
இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்காக உருவாக்கினார்கள் என்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதில் இருந்த பழைய அராமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அதை சுலைமான அலை அவர்கள் கட்டியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் இதை சுலைமான் (அலை) அவர்கள் உருவாக்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிக்கம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .
இந்த நிகழ்வை ஆண்டு தோறும் நினைவு கூறும் வண்னம் பிரபலப்படுத்தியதில்
இஸ்லாத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு.
· وكان الزهري يقول: " رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت، ونص أحمد
على أنه يصام عاشوراء في السفر
· وقد ذكر بعض الفقهاء أن صيام عاشوراء ثلاث مراتب:
· 1ـ صوم التاسع والعاشر والحادي عشر.
2ـ صوم التاسع والعاشر.
3ـ صوم العاشر وحده.
(அதனால் இன்று வெள்ளிக்கிழமை
நோன்பு வைக்காதவர்கள் நாளையும் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும் நோன்பு வைத்துக்
கொள்ளலாம்.)
இது நமக்கு கற்றுத்தருகிற முக்கியமான ஒரு வழிகாட்டுதல் நல்ல காரியங்களுக்கான வாரிசுரிமை என்பது இரத்த பந்த்த்தினால் அல்ல்;
அது பற்றிய நம்பிக்க்கயினாலும் அது சார்ந்த செயல்பாடுகளினாலுமே
நிலை பெறுகிறது.
ஆஷூராவின் சிறப்புக்களைப்
பற்றிய ஹதீஸ்களில் ஒரு முக்கிய செய்தி இருக்கிறது.
பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறீனார்கள்.
قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ
வாரிசு யார் ?
ஒருவருக்கு யார் வாரிசாக முடியும் என்பதில் பல சமூகங்களிலும்
வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன இருக்கின்றன.
ஒருவருக்கு அவரை யுத்தத்தில் பாதுகாத்து நிற்கும் ஆண் மகன் அல்லது
சகோதரன் அல்லது சகோதரர்களின் பிள்ளைகே வாரிசாக முடியும் என்ற கருத்து ஜாஹிலிய்யா அரபுகளிடம்
இருந்தது.
குடும்பத்தின் தலை பிள்ளை தான் வாரிசாக முடியும் இந்து
சமூகங்களில் பொதுவாக இருக்கிறது.
மருமகன்கள் தான் வாரிசாக முடியும் என்ற மரபு கேரளாவில் சில சமூகங்களில் இருக்கிறது.
இது சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் . கொள்களைகளுக்கும் கோட்பாடுகளுக்கு இது
பொருந்தாது.
ஒருவரது கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அதை நம்பிக்கை கொண்டவர்களும் எடுத்து
நடப்பவர்களுமே வாரிசாக முடியும்.
அதானாலேயே பொதுவுடமை சித்தாந்த்தை உலகிற்கு வழங்கிய இங்கிலாந்து நாட்டுக் காரரான
கார்ல் மார்க்ஸின் வாரிசாக ரஷ்யாவைச் சார்ந்த ஜோஸப் ஸ்டாலின் கருதப்படுகிறார்.
நமது நாட்டில் காந்தியடிகளின் வாரிசுகளாக அவரது கொள்கைப் படி வாழ்ந்த ஏராளமான சேவாதள
தொண்டர்கள் கருதப்பட்டார்கள்.
நம்ம ஊர் வழக்கில் காந்தி கணக்கு என்று ஒரு வழக்கு உண்டு. சாப்பிட்டு விட்டு காசு
கொடுக்காமல் செல்வதை இவ்வாறு குறிப்பிடுவார்கள். சுதந்திர போராட்ட்ட காலத்தில் சுதந்திர
போராளிகள் பலருக்கும் உணவங்களில் இலவசமாக உணவு கொடுப்பார்கள். அதை இலவசம் என்று சொல்வதற்கு
பதிலாக காந்தி கண்க்கு என்று குறிப்பிடுவார்கள்.
எந்த ஒரு சமூகத்திலும் ஒரு மனிதரின் கொள்கையை பின்பற்றுகிறவர்களே அவரது வாரிசுகள்
என்பதற்கான ஒரு எளிமையான அடையாளம் இது.
அந்த அடிப்படையில் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நாமே மூஸாவின் உண்மையான வாரிசுகள்
என்ற கருத்தில்
فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ
என்றார்கள்.
இதில் நமக்கு மிக
முக்கியமான ஒரு வழிகாட்டுதல் இருக்கிறது.
நாம் நமது வாரிசுரிமை
குறித்து சிந்திக்க வேண்டும்.
நமது வாரிசுகள்
நமது சொத்துக்களுக்கு மட்டுமே வாரிசுகளாக இருக்கிறார்களா ? அல்லது எல்லா வகையிலும்
வாரிசுகளாக இருக்கிறார்களாக - குறிப்பாக நம்பிக்கைகள் – நற்செயல்கலில் வாரிசுகளாக இருக்கிறார்கள்
என்பதை சிந்திக்க வேண்டும்.
அதாவது நமது சந்ததிகள்
நம்மை போலவே இருக்கிறார்களா என்பதை யோசிக்க வேண்டும். –
உருவாக்க வேண்டும்.
–
உருவாக வேண்டும்
என்று ஆசைப்பட வேண்டும்
எந்த மனிதருக்கு
இந்த கவலை இருக்கிறதோ அவர் தான் சிறந்த தலை முறைக்கு சொந்தக்கார்ர் – அதாவது சிறந்த
வாரிசுகளுக்கு சொந்தக் காரர் ஆவார்.
நபிமார்களிடம்
இந்த கவலையும் சிந்தனையும் இருந்த்தாக திருக்குர் ஆன் காட்டுகிறது.
அவர்களது பிள்ளைகள் கூறிய பதிலை கவனியுங்கள்.
நாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று சிம்பிளாக சொல்லி விட வில்லை. எங்களது
பாரம்பரிய பெருமையை இதில் நிலை நாட்டுவோம் என்கிற தொனியில் பதிலளித்தார்கள்.
நபி நூஹ் அலை அவர்கள் மன்றாடினார்கள்.
இறைவா எனது வாரிசுகளை பாதுகாப்பேன் என்றாயே ! எனது மகன் இப்படி அழிந்து விட்டானே
என்றார்கள். அல்லாஹ அருமையாக கூறினான் அவனது உனது வாரிசு அல்ல.
وَنَادَىٰ نُوحٌ رَّبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ (45)
قَالَ يَا نُوحُ
إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ
சொத்துக்
மட்டும் அல்லாமல் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் வாரிசுகளாக உருவாக்க வேண்டும்.
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ
أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا (43) أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ
يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا (44
பெற்றோர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்கள், தலைவர்கள், ஞானிகள். சமூகப் போராளிகள்
வியாபாரிகள் என ஒவ்வொரு பிரிவினரும்
தமது வாரிசுகள் குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களை தரமானவர்களாக ஆக்குவதற்கு
முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
ஆக்கப்பூர்வமான தகவல் அல்ஹம்துலில்லாஹ் என்றாலும் ஒரு சந்தேகம் அகழ்வாராய்ச்சி மூலமே கண்டுபிடிக்கபட முடியாமல் இருந்த ஓர் இடத்தை ரான் வையாத் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்றால் ஃபிர்அவ்ன் உடல் அருங்காட்சியகத்தில் எப்படி வந்தது யார் கண்டெடுத்ததார் எப்போது கண்டுபிடித்தார் எங்கே கண்டுபிடித்தார் கண்டுபிடித்த இடம் ஏன் பதிவிட படாமல் போனது....
ReplyDeleteபாஷா அல்லாஹ்.புதியசிந்தனை புதிய கோணம்.அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
ReplyDelete