மக்களிடையே சுதந்திரச் சிந்தனை அதிகரித்து இருக்கிறது.
தீய
ஆட்சியாளர்களை
எதிர்க்கும் சுதந்திர சிந்தனை அல்ல.
தீமைகளை
சகஜமாக செய்யும் சிந்தனை.
எந்த ஒரு குற்ற
உணர்வும் இல்லாமல், கூச்சப்படவும் செய்யாமல் தீமைகளை செய்கிற வழக்கம் அதிகரித்து விட்டது.
ஆபாசங்களை ரசிப்பது,
மது அருந்துவது, போதை வஸ்துக்களின் உபயோகம், ஆபாசமாக உடுத்துவதும், நடப்பதும் ஊழல்,
கள்ள தொடர்புகள், ஏமாற்றுதல் பொய் பேசுதல், அவதூறு சொல்லுதல், அதை பரப்புதல், வன்முறை
செய்தல், தற்பெருமை காட்டுதல், ஆடம்பரத்தை ரசித்தல் ஆகிய பல வழிகளில் ஒவ்வொன்றிலும்
நமது வாழ்கை முந்தயை காலத்தை விட அதிகமான குற்றங்கள் நிறைந்த்தாக ஆகியிருக்கிறது.
இதற்கு பிரதான
மூன்று காரணங்கள் உண்டு,
டெக்னிகள் டெவப்மெண்ட
-
தொழில் நுட்ப வளர்ச்சி நம்மை தீமைகளை இரகசியமாக செய்ய உதவுகிறது. செல்போன், பேஸ்புக் – இண்டெர்னெட் - இன்ஸாடா கிராம் போல பலவும்
இன்றைய நாகரீகத்தில்
ஆபாசமாக பேசியும், உடலை காட்டியும் பெண்கள் வெளியிடுகிற புகைப்படங்களும் வீடியோக்களும்
தான் டிரண்டிங்காக இருக்கின்றன, சிரம்மில்லாம் காசு வருகிறது என்பதற்காக தமது குடும்பத்து
பெண்களின் அழகுகளை கூட கடைச்சாரக்காக்கி வருகின்றனர் சிலர், (அல்லாஹ் பாதுகாப்பானாக)
பிரைவஸீ –
தனிமை
சிதந்திரம்– தனி
அறைகள், தனியான இடங்கள், கட்டுப்பாடுகளற்ற ஹோட்டல்கள் ரிஸார்ட்ஸுகள், மது போதை மற்ற உல்லாசங்கள், தீமைகளுக்கு திட்டமிடும் செயல்களுக்கு இது மிக உதவியாகி விட்டது.
வெளியூரில் படிக்கும்
இளம் ஆண்கள் பெண்கள், வெளியூர்களில் வேலைக்காக தங்கியிருக்கும் இளம் ஆண்கள் பெண்கள்,
ஆண் பெண் வேறுபாடின்றி பணியாற்றும் சூழல்கள் அங்கு தனிமைக்கு கிடைக்கும் வாய்ப்புகள்
கணக்கற்ற தீமைகளுக்கு காரணமாகிவிட்டன.
சேஷியல் ரெஸ்பான்ஸிபிட்டி - சமூக பொறுப்புணர்ச்சியில் தளர்வு.
தாய்
தந்தை குடும்பம் சமூகம் என்ற அம்சங்களுக்காக அச்சப்படும் போக்கு தேவையற்றதாகி விட்டது. ஊர் என்ன சொல்லுமொ என்று கவலைப்பட்த்தேவையில்லை இப்போது.
இந்தச்
சூழ்நிலை – நம்மில் இளைஞர்களை மட்டுமல்ல பெரியவர்களையும், ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் மிக சகஜமாக தீமைகளின் படுகுழியில் தள்ளிவிடுகின்றன.
நம்முடைய
தந்தையோ பாட்டனோ 70 ஆண்டுகளில் செய்த தீமைகளை விட நாமும் நமக்கு அடுத்த தலைமுறையும் செய்கிற தீமைகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது. குரூரமாகியும் வருகிறது.
அல்லாஹ்
பாதுகாப்பானாக!
பெருமானார்
(ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்த்தார்கள்
அபூதாவூதில்
கிதாபுஸ்ஸலாத்தில்
அத்தஹிய்யாத்தில்
ஓதும் துஆ க்களின் பட்டியலில் இதுவும் இருக்கிறது.
للَّهُمَّ
أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ
السَّلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا
الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا،
وَأَبْصَارِنَا، وَقُلُوبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ
عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ
لِنِعْمِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ، قَابِلِينَ لَهَا، وَأَتِمِمْهَا عَلَيْنَا
أخرجه أبو داود، كتاب الصلاة، باب التشهد
தீமைகளிலிருந்து தப்பிக்கும்
முதல் ஆயுதமாக இந்த பிரார்த்தனையையே முன்னோர்கள் பலரும் குறீப்பிடுகிறார்கள்.
மனமாற
இந்தப் பிரார்த்தனையை செய்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்
இந்த முஹர்ரம் மாத்த்திலிருந்து நமது வாழ்வை நன்மைகள் நிறைந்த்தாகவும் தீமைகள் குறைந்த்தாகவும்
ஆக்கியருள்வானாக!
தீமைகள்
என்பதற்கு سيأت சய்யிஆத் என்ற சொல்லும் பாவங்கள் என்பதற்கு ذنوب தூனூப்
என்ற சொல்லும் அரபியில் பிரபலமாக உண்டும். இந்த ஆய்த்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வாசகம் فواحش பவாஹிஸ் என்பதாகும். அதன்
பொருள் அறுவருக்கத்தக்கவை என்று பொருள் .
ஒரு
பரிசுத்தமான வாழ்க்கையில் அருவருக்கத்தக்க அனைத்தையும் விட்டு நாம் விலகி நிற்கவேண்டும் என்பதை இந்த வார்த்தை நமக்கு சொல்லி தருகிறது. ஒருவேளை அது பாவம் என்ற பட்டியலில் இல்லாத்தாக கூட இருக்கலாம்.
ஒரு உதாரணத்திற்கு
முழங்கால் அளவு பெர்முடாஸ் போட்டு நடந்தால் அதில் பாவம் எதுவுமில்லை. ஆனால் நமது சமூக
மரபில் அது அறுவருக்கத்தக்கது. இது போன்ற அனைத்து காரியங்களிலிருந்தும் வெளிப்படையாகவும்
அந்தரங்கமாகவும் விலகி இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
அத்தகைய தொரு வாழ்விற்கு
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அருமையானவர்களே!
தீமைகளை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்,
இன்றைய
நவீன் மனப்போக்கு “அட இப்ப என்ன ஆகிடப் போகுது?” என்ற
எண்ணத்தில் ஏராளமாக
தவறுகளை செய்கிறது.
பாவங்களை
அப்படி அலட்சியப்படுத்தி விட முடியாது,
நிச்சயமாக
எந்த பாவமும் – அது சிறியதோ பெரியதோ – அதன் பின்விளைவுகளை ஏற்படுத்தாமல் போகாது.
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا
தீமை செய்வோர் தபிக்கவே முடியாது என குர் ஆன் எச்சரிக்கிறது
தல்பீஸ்
இபுலீஸில் இப்னு கய்யுமுல் ஜவ்ஸி ஒரு செய்தியை கூறுகிறார்கள்
ஒரு
ஹாபிழ் கெட்ட எண்ணத்தோடு பெண்களை பார்ப்பவராக இருந்தார்.
20 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு குர் ஆன் மறந்துவிட்ட்து.
இதை
தஃகீர் தாமதமாக கிடைக்கும் தண்டை என்கிறார்கள்.
பாவத்தின்
விளைவுகளை உடனடியாக கிடைக்காவிட்டாலும் பின்னால் எப்போதாகிலும் ஏற்பட்டு விட்டும்.
பாவம் செய்தவர்கள்
எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான். பூமி அவர்களை
விழுங்காமல் இருக்குமா ? அல்லது எதிர்பாராத ஆபத்துகள் அவர்களுக்கு ஏற்படாமல் போகுமா
என்றும் கேட்கிறான்.
أَفَأَمِنَ
الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَنْ يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ
يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَﰬ ﵞ سورة النحل
திருக்குர் ஆனின் மற்றொரு இட்த்தில் அடுக்கடுக்காக அல்லாஹ் கேள்வி
எழுப்புகிறான்.
أَفَأَمِنَ أَهْلُ الْقُرَى أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا
وَهُمْ نَائِمُونَ
أَوَ أَمِنَ أَهْلُ الْقُرَى أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ
يَلْعَبُونَ
أَفَأَمِنُواْ مَكْرَ اللَّهِ فَلاَ يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلاَّ
الْقَوْمُ الْخَاسِرُونَ
முப்தீ அஷ் ஷைக்
துல் பிகார் சாஹிப் தனது ஒரு அனுபவத்தைதிலிருந்து ஒரு செய்தியை
கூறுகிறார்..
“எங்களூரில் புத்திசுவாதீனமில்லாத ஒரு பெண் இருந்தார். அவரை சிறுவர்கள் கல்லால் அடிப்பார்கள். என்னுடைய தாய் என்னிடம் நீ அப்படி அடித்துவிடாதே என்று என்னிடம் கண்டிப்புடன் கூறியிருந்தார்.
நான்
பெரியவனான பிறகு அந்த அம்மாவின் வரலாற்றை கூறினார்.
“அவர்
மிக அழகான தாய். ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை அம்மாவின் மடியிலேயே வளர்ந்த்து. ஒரு முறை குழந்தையை வீட்டில் உட்கார வைத்து விட்டு வேலையாக வெளியே சென்ற போது குழந்தை வெளியே வந்தது. சலித்துக் கொண்டே குழந்தையை மீண்டும் வீட்டிற்குள் விட்டார். குழந்தை திரும்பவும் வெளியே வந்த்து. அம்மாவிற்கு கோபம் வந்த்து. அல்லாஹ் உனக்கு துக்கத்தை தர மாட்டானா ? உன்னை காலம் பூரா தூங்க வைக்க மாட்டானா என்று ஏசினாள்.
அதன்
விளைவு உடனே தெரியவில்லை. குழந்தை வளர்ந்தான். சிறந்த படிப்பாளி ஆனான். நல்ல வேலை கிடைத்தது. அவனுக்கு பெண் தருவதற்கு ஊரில் பலரும் போட்டி போட்டனர். கடைசியில் அந்த அம்மா ஒரு பெண்ணை முடிவு செய்தார். திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்தது. வீட்டை சுத்தப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. ஈரத்தரையில் கால் வைத்த மாப்பிள்ளை வழுக்கி விழுந்தான். தலையில் அடிபட்டு இறந்து போனான்.
அன்று
முதல் அந்த தாய் பைத்தியமாகி விட்டார் என்று அம்மா சொன்னார்.
முப்தி
ஷபீ சாஹிப் சொல்கிறார். அல்லாஹ் கனிய விடுகிறான். முற்றிலும் கனிந்த பிறகு பறித்துக் கொள்கிறான், இப்போது உனக்கு தெரிந்ததா நான் உனக்கு கொடுத்த அருளின் மகிமை என்று அல்லாஹ் கேட்கிறான்.
‘பாவங்களுக்கான தண்டனை இப்படியும் கிடைக்கும்.
இளமையில்
பாவம் செய்திருப்போம். அல்லாஹ் நமது முதுமையில் மனைவி யை நம்மை மதிக்காதவராக ஆக்கிவிடலாம்.
எவ்வளவு
பெரிய சோதனை அது.
சில குடும்பங்களில்
அம்மாவும் பிள்ளைகளும் தனியாகி
தந்தை இன்னொரு புறம் தனியாகிவிடுவதை பார்க்கிறோம் .
பாவத்தின்
சம்பளம் தான் அது.
தீமைகளுக்கான தண்டனையின் இன்னொரு
வழி, அல்லாஹ்வின் ரகசிய திட்டங்கள்:
யூத
ஆலிம் ஒருவர். ஒரு பாவத்தில் ஈடுபட்டார். பயப்படவும் செய்தார். ஒரு வருடம் கழித்து பிரார்த்தனை செய்தார். யா அல்லாஹ் ஒருவருடமாக நான் பாவம் செய்தேன், ஆனால் நீ என்னை இதுவரை பாதுகாத்தாய்
தண்டிக்கை வில்லை என்று அழுதார்.
அல்லாஹ்
அவருக்கு சொன்னான்.
நான்
என்ன தண்டனை கொடுத்தேன் என்று நீ அறிய வில்லை. உன் மனதில் பாவம் செய்ய நீ உறுதி எடுத்த அந்த நிமிடத்திலிருந்து தஹஜ்ஜுதில் தொழும் வாய்ப்பை உன்னிடமிருந்து நான் பறித்து விட்டேன். அது உனக்கு தெரியவில்லையா? என்று கேட்டான்.
அந்த
ஆலிம் அதன் பிறகு வாழ்நாள் எல்லாம் அழுது கொண்டே தஹஜ்ஜுத் தொழுதார்.
பாவத்திற்காக
என்ன தண்டனை நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளாமலே கூட கிடைத்துக் கொண்டிருக்கும்.
1.
கிடைக்க வேண்டிய அளவு இலாபமோ மரியாதையோ கிடைக்காமல் போகலாம்.
2.
பிள்ளைகள் கட்டுப்படாமல் போகலாம்.
புழைல்
பின் இயாழ் ரஹி கூறுகிறார்கள்.
எனது தீமைகளுக்கான பதில் கிடைக்காமல் போகாது.
எனது தீமைகளால். எனது
மனைவி அல்லது எனது பிள்ளைகள் அல்லது வேலைக்கார்ர்கள் குறைந்த் பட்சம் எனது பிராணிகள் எனக்கு விசுவாசமாக இருப்பதில்ல
என்கிறார்கள்,
நாம் பயனிக்கும் வாகன்ங்களில் ஏற்படுகிற ஆப்த்துகள் கூட நமது தீமைகளின் விளைவாக
இருக்கலாம். அல்லாஹ் அதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறான் என்பதை நாம் அறிய முடியாது.
நான்
அல்லாஹ்வுடைய
பேச்சை
கேட்கவில்லை எனில் நமக்கு கீழ் இருப்பவர்கள் நமது பேச்சை கேட்பதில்லை
ஒன்று கவலை எனும்
நெருப்பில் அல்லது நரக
நெருப்பில்
தொழுகிற போது, ஏழைகளுக்கு உதவுகிற போது, பலவீனர்களுக்கு பாதுகாப்பாக நிற்கிற போது
அதில் ஒரு மன நிம்மதியும் கிடைக்கும் அதிலேயே மனம் லயித்துக் கிடக்கும், ஒரு வேலையை
முடிக்கிற போதே அடுத்த் வெலைக்கு தயாராகும். இப்படி நன்மைகளை செய்வதில் மனதுக்கு ஆர்வம்
ஏற்படாம்ல் போகுமானால் இதயம் கருத்து வருகிறது என்று பொருள்.
அதாவது நல்லவராக வாழ்வதற்கான உபதேசங்களை யாராவது சொல்ல ஆரம்பித்து விட்டால், நமக்கு
கோபம் வரும்.
,இந்த மூன்று இயல்புகள் இருந்தால் அது இதயம் கருத்துப் போய்விட்தன் அடையாளமாகும்.
நமது மகளிட
வெள்ப்படுமானால்
என்ன ஆகும். ?\
அல்லாமா இக்பாலின் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது பேரண்டு கொண்டவர், அதில் கரை போனவர் . அவர் எழுதுகிறார்
யா
அல்லாஹ்
தூ
கனி அஸ்ஹர் தோ ஆலம் , மன் ஃபகீர்
ரோஸே
மஹ்ஷர் குத்ரஹாயே மை பதீர்
அகர் பீனீ ஹிஸாபம்
நா குஸேர்
அஸ் நிகாஹே
முஸ்தபா பநிஹான் பக்
روز محشر عذرهاۓ مـن پذير
يا اگر بينى حسابم ناگـزيرـ
از نگاه مصطفى پنهـان بگ
பொருள்
"اللهم أنت الغني عن العالمين، وأنا فقير إليك، أرجو من عفوك أن تقبل معاذيري يوم القيامة، و إن كان لابد من محاسبتي، فأخفها عن نظر النبي محمد المصطف
இதற்காகவாவது
தீமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
فَلَمَّا نَسُوا
مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا
فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ (44)
எனவே நாம் நமது வாழ்வில் தீமைகள் குறித்து மிக எச்சரிக்கையாக இருப்போம்
அதன் விளைவு எப்படியாவது ஏற்பட்டே தீரும் – என்பதை நினைவில் வைப்போம்.
அல்லாஹ் பாவங்களை விட்டு விலகி நன்மைகளை செய்யும் வாழ்வை தேர்ந்தெடுக்க தவ்பீக் செய்வானாக!.
Masha allah
ReplyDeleteஅற்புதமான பதிவு
ReplyDeleteالحمد لله على كل حال
ReplyDelete